Saturday, October 1, 2016

சாரதா நவராத்திரியில் அன்னை அரசாலையின் அருளைப் பெறும் வழிமுறை

பிரபஞ்ச அன்னை அரசாலை(மஹாவராகி)யின் அருளைப் பெற விரும்புவோர் இந்த நவராத்திரி நாட்களில்(2.10.16 ஞாயிற்றுக்கிழமை முதல் 11.10.16 செவ்வாய்க்கிழமை வரை) தினமும் இரவு நேரத்தில் பின் வரும் பாடலை மனதுக்குள் ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;

இங்கே தரப்பட்டிருக்கும் அன்னையின்படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்;12 இன்ச் நீளம், 8 இன்ச் அகலத்திற்கு படமாக எடுத்து,பிரேம் அல்லது லேமினேஷன் செய்து கொள்ளவும்;

அன்னையின் படத்துக்கு அருகில் மாதுளம் பழம் அல்லது செவ்வாழைப்பழம் ஒன்றை தினமும் படையலாக வைக்கவும்;மறு நாள் காலையில் இதை எடுத்து சாப்பிடலாம்;வீட்டில் உள்ளவர்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்;

அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு,பச்சைத் துண்டின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஒரு நெய் தீபம் வடக்கு நோக்கி ஏற்றி வைக்க வேண்டும்;இன்னொரு தீபத்தை இலுப்பை எண்ணெயால் ஏற்றி வைக்க வேண்டும்; இரு கைகளிலும் ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக் கொள்ள வேண்டும்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா என்று 9 முறை ஜபிக்க வேண்டும்;

பிறகு,பஞ்சமி,தண்டநாதா,சங்கேதா, சமேஸ்வரி,சமய சங்கேதா,வராகி,போத்ரிணி,சிவை,வார்த்தாளி, மஹாசேனா,ஆக்ஞாசக்ரேஸ்வரி,அரிக்நி என்ற 12 பெயர்களை முதல் 30 நிமிடங்கள் ஜபிக்க வேண்டும்;அதன் பிறகு,பின்வரும் பாடலை அடுத்த 30 நிமிடம் ஜபிக்க வேண்டும்;

ஐயும் கிலியும் எனத் தொண்டர்போற்ற அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

குறிப்பு:இந்த பக்கத்தில் வரும் அன்னை வராகி பற்றிய பதிவுகளை தொடர்ந்து வாசித்து அதன் படி பின்பற்றி வருபவர்கள் இந்த 10 நாட்கள் மட்டும் இந்தபதிவின் படி மட்டும் பின்பற்றலாம்;11 ஆம் நாளில் இருந்து மீண்டும் பழைய படி ஜபத்தினைத் தொடரலாம்;

Friday, September 30, 2016

மனிதர்களின் குணங்களும் அவைகளின் செயல்பாடுகளும்


ஒவ்வொரு மனிதனுக்கும் ரஜோ குணம்,தாமச குணம்,சாத்வீக குணம் என்று மூன்று விதமான குணங்கள் உண்டு;ரஜோ குணத்தில் வீரம்,கோபம்,சுறுசுறுப்பு,ஆற்றல் போன்றவை சுபாவங்களாக இருக்கின்றன;

தாமச குணத்தில் சோம்பேறித்தனம்,மந்த நிலை,அக்கறையின்மை,கவனமின்மை போன்ற உபயோகம் அற்றவை மனிதனை இயக்கிப் பாழ்படுத்துகின்றன;

சாத்வீக குணத்தில் கடவுள் பக்தி,சத்தியம் கூறுதல்,நல்ல எண்ணங்கள்,நற்காரியங்கள் போன்ற உத்தம சுபாவங்கள் மனிதனை தெய்வீக நிலைக்கு உயர்த்திட துணைபுரிகின்றன;

இந்த மூன்று குணங்களின் பல்வேறு விகிதாச்சாரங்களுடன் வாழ்பவனே ஒரு மனிதன் ஆவான்;இதனால் தான் அகரம்,உகரம்,மகரம் என்ற மூன்றுவிதமான ஓங்கார அட்சரங்கள் மனிதனுடைய மூன்று விதமான குணங்களைக் குறிப்பதால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு முறையில் ஓங்காரத்தை உச்சரிக்கின்றான்;

ரஜோ குணத்தை அதிகமாக உடையவன் ஓங்காரத்தை ஒருவிதமாகவும்;
தாமச குணத்தை அதிகமாகக் கொண்டவன் மற்றொரு முறையிலும்;
சாத்வீக குணத்தை அதிகமாக உடையவன் வேறொரு முறையிலும் இதனை உச்சரிக்கின்றார்கள்;
நன்றி:ஓங்கார மகிமை

ஓம் அருணாச்சலாய நமஹ

ஓம் அகத்தீசாய நமஹ

உங்கள் ஒவ்வொருவருடைய முழுக் கர்மவினைகளையும் ஒரே நாளில் தீர்க்கும் அரிய பவுர்ணமி வழிபாடு!!!



தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் எட்டுகோடி மனிதர்கள் ஒவ்வொருவருமே 100 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக,கோடீஸ்வரராக தமது வாழ்நாள் முழுவதும் வாழமுடியும்;

நமது பாரத தேசத்தில் வாழும் 130 கோடி மனிதர்கள் அனைவரும் தலா 100 கோடி ரூபாய் சொத்தினை தமது ஆயுள் முழுவதும் அனுபவிக்க முடியும்;

நாம் வாழ்ந்து வரும் பூமியில் 700 கோடி மனித ஜீவன்கள் வாழ்ந்து வருகின்றார்கள்;இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடிக்கு அதிபதியாக்கி இந்த பூமியையே குபேரப்பட்டணம் ஆக்கிவிடமுடியும்;

இருந்தும் கூட,ஏன் வறுமையும்,நோயும்,கடனும்,விரக்தியும் இந்த பூவுலகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிகின்றன?

ஏனெனில்,இந்த பூமியில் வாழ்ந்து வரும் 700 கோடி மனிதர்களில் 699 கோடிபேர்கள் தினமும் நினைப்பது என்னதெரியுமா?
நாம் எப்போதும் ஏழையாகத் தான் வாழவேண்டும்!(இப்படி வாழத்தான் பிறந்திருக்கின்றோம்) இதுதான் நமது தலைவிதி என்று நம்புவதுதான்!!

கடந்த ஐந்து முற்பிறவிகளில் நாம் செய்த பாவ மற்றும் புண்ணியச் செயல்களின் விளைவுகளை அனுபவிக்கவே பிறவி எடுத்துள்ளோம்;விதியை மதியால் வெல்லலாம் என்பது பொழுது போகாத பெருசுகள் வேலைவெட்டி இல்லாமல் சொன்ன வீண்வாதம் அல்ல;மன சக்தியை பக்தி மயமாக்கி,பக்தியின் மூலமாக ஒரே பிறவியில் அதுவும் இந்தப் பிறவியிலேயே அனைத்து முற்பிறப்பு கர்மாக்களையும் கரைத்துவிட்டு சுபிட்சமாக வாழ முடியும் என்பதற்கான உள்ளார்த்தம் தான் அது!!!

15.10.16 சனிக்கிழமைஅன்று நட்சத்திர மரங்களை சைவ ஆகமமுறைப்படி நட்டு சிவவழிபாடுசெய்ய வேண்டும்;இதன்மூலமாக இதுவரை நாம் செய்த அனைத்து கர்மவினைகளும் இதன் மூலமாக காணாமல் போய்வீடும்;(அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகளை முறைப்படி இந்த நாளில் நட திட்டமிட்டிருக்கின்றது மஹாவில்வம் பவுண்டேஷன்!)

15.10.16 சனிக்கிழமை அன்று காலை 8 மணிக்கு ராஜபாளையம் தாலுகா சோழாபுரம் கிராமம் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கொவிலுக்கு வந்துவிடவேண்டும்;இரவு 7 மணி வரை இங்கேயே இருக்க வேண்டும்;மதியம் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது;

வர விரும்புவோர் அவரவர்களது பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும் ஊர்,செல் எண் இவைகளை maghavilvam@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிவு செய்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்;


வழித்தடம்:வடக்கு தமிழ்நாட்டில் இருந்து:ராஜபாளையம் வந்து,அங்கிருந்து திருநெல்வேலி சாலையில் 8 வது கி.மீ,தொலைவில் சோழாபுரம் அமைந்திருக்கின்றது;

தெற்கு தமிழ்நாட்டில் இருந்து:சங்கரன் கோவில் நகரில் இருந்து ராஜபாளையம் சாலையில் முறம்பு என்ற கிராமத்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும்;அங்கிருந்து ஒரு கி.மீ.தொலைவில் ராஜபாளையம் சாலையில் பயணிக்க வேண்டும்;ஆட்டோ வசதிகள் முறம்பு கிராமத்தில் கிடைக்கின்றன;

ரயில் மார்க்கம்;சென்னை டூ செங்கோட்டை ரயிலில் ராஜபாளையம் வந்தடையவேண்டும்;பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சோழாபுரம் செல்லும் டவுண் பஸ்பயணம் வழியாக சோழாபுரம் வந்தடையலாம்;

விமான மார்க்கம்;மதுரை உள்நாட்டு விமான நிலையம்;திருச்சி சர்வதேச விமான நிலையம்;




Sunday, September 11, 2016

மங்களமான மண வாழ்க்கையைத் தரும் மஹாளய பவுர்ணமி 16.9.16 வெள்ளிக்கிழமை!!!


இயற்கையான முறையில் இறந்த நமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்ற காலம் தான் மஹாளய அமாவாசை! இது ஒவ்வொரு புரட்டாசி மாதமும் வரும்;ஒரே ஒரு புரட்டாசி அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணம்/சிரார்த்தம் கடந்த 12 ஆண்டுகளாக செய்யாமல் விடுபட்ட தர்ப்பணத்தை ஈடு செய்துவிடுகின்றது;

திருமணம் ஆனது முதல் (யாராவது ஒருவரது) ஆயுள் நிறைவடையும் வரையிலும் வாழ்க்கையின் அனைத்து சுகங்களிலும்,எல்லா துக்கங்களிலும் பங்கெடுக்கும் மனைவிக்கு நன்றி தெரிவிக்கும் பவுர்ணமிதான் இந்த மஹாளய பவுர்ணமி!!!கி.பி.1956 க்குப் பிறகு இப்போது 16.9.2016 வெள்ளிக்கிழமை அன்று வருகின்றது;ஆமாம்! 60 ஆண்டுகளுக்குப் பிறகு மஹாளய பவுர்ணமி வருகின்றது!!!

உலகத்தில் மனித இனம் இன்று வரையிலும் ஜீவித்திருப்பதற்குக் காரணம் சிவசக்தி ஐக்கியம் என்று அழைக்கப்படும் தம்பதியாக வாழ்ந்துவரும் மரபுதான்!(தனித்து வாழ்ந்து வரும் ஆண் அல்லது பெண்ணால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது;இவர்களது மரணத்திற்குப் பிறகு,பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாவார்கள்.இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத சூழ்நிலையால் இவர்களது மரணத்திற்குப் பிறகு பித்ரு தர்ப்பணம் செய்ய வம்சாவழி இராது;)
ஒவ்வொரு ஆணும் பிறப்பதற்கு முன்பே ஈசனின் கருணையால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்துவிடுகின்றான்;அதே போலத்தான் பெண்ணும்! (தேர்வு ஆனப் பின்னர் முதலில் பிறப்பது ஆண் தான்;பிறகே அவனது வாழ்க்கைத் துணை பிறக்கின்றாள்;பிறப்பதற்கு முன்பே,பெற்றோர்கள்,வாழ்க்கை,வாழ்க்கைத் துணை,புகழ்,சொத்துக்கள்,கவுரவம்,நட்பு வட்டம்,அவமாணாங்கள்  என்று அனைத்தையும் முடிவுசெய்து கொண்டு அதற்கு ஒவ்வொரு ஆணும் பெண்ணும் முழுச் சம்மதம் கொடுத்தப் பின்னரே இந்த கர்மபூமியில் தமது கர்மாக்களை அனுபவிக்க பிறவி எடுக்கின்றது=இதை தெரிவிப்பது அருணாச்சலேஸ்வரரின் அருளால் சித்தர் பெருமக்கள் சூசகமாகத் தெரிவிக்கின்றார்கள்;

வெகு அரிதாக மட்டுமே சிலர் மூன்று பிறவிகளையும் கடந்து நான்காவது பிறவியிலும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றார்கள்;லக்னத்துக்கு ஏழாமிடத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இருக்க ஒருவர் பிறந்தால்,அவருக்கு கடந்த மூன்று பிறவிகளாக யார் வாழ்க்கைத் துணையோ அவரே இப்பிறவியிலும் வாழ்க்கைத் துணையாக வருவார்;இப்படிப்பட்ட தம்பதிகளுக்கு இடையே சண்டை நடந்தாலும்,அன்பு மழை பொழிந்தாலும் அது இருவரின் பெற்றோர்கள்,உடன்பிறந்தவர்களுக்குக் கூட தெரியாது;ஒருபோதும் கணிக்க முடியாது;
பாரத நாடு இன்றும் உயிர்த்துடிப்போடு வாழ்ந்து வருவதற்குக் காரணம் இல்லத்தரசிகளின் விவரிக்க முடியாத தியாகம் மட்டுமே!
அரசியலில் பெரும் பொறுப்புகள்(பதவிகள் அல்ல) ஆண்களால் தான் அலங்கரிக்கப்படுகின்றன;அரசியலில் மட்டும் அல்ல;தொழில்துறையில்;சினிமாத்துறையில்;ஆன்மீகத்துறையில்;மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்,மாநில அரசுத் தலைமைச் செயலகங்களில்; பல நிறுவனங்களில் வேலை நேரம் முடிந்தப் பின்னரும் அங்கேயே வாரக்கணக்கில் தூங்கி மற்றும் தங்கி பணிபுரியும் ஆண்கள் இன்றும் இருக்கின்றார்கள்;(வாட்ச் மேன் மட்டும் அல்ல;ஆர்.அண்டு டி இன்சார்ஜ்கள்,ஷிப்ட் சூப்பர்வைசர்கள் மற்றும் பலர்)அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பது அவர்களுடைய மனைவிகள் தான்;

ஒரு கணவன் தேவையில்லாமல் தமது மனைவியை ஒரே ஒருமுறை கண்ணீர் சிந்த வைத்தான் என்றால்,அந்தக் கணவன் அனுபவிக்கும் தண்டனை என்ன தெரியுமா?
தொடர்ந்து ஐந்து நாட்கள் உண்ண உணவு கிடைக்காது;பணம்,அதிகாரம்,செல்வாக்கு,பிறந்த ஜாதகப்படி யோகம் இருந்தாலும் பட்டினியாகத் தான் கிடக்கவேண்டும்;
அதேபோல,மனைவியால் கொடுமைப்படுத்தப்படும் கணவன் மார்களும் நாடு நெடுக,அனைத்து ஜாதிகளிலும்,அனைத்து மாவட்டங்களிலும்,அனைத்து மதங்களிலும்,அனைத்து ஊர்களிலும் இன்றும் கூட வாழ்ந்து வருகின்றார்கள்;அது அவர்களது செய்த முற்பிறப்பு கர்மவினைகளால் மட்டுமே உருவானது;Cause and Effect என்பது இயற்பியல் விதி மட்டும் அல்ல;வாழ்க்கையை இயக்கும் சூட்சும இயந்திரமே இதுதான்;
இதுவரையிலும் தமக்குப் பக்கபலமாக இருந்து வந்த தமது மனைவிக்கு எப்படி நன்றி தெரிவிப்பது?
விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகாவில் சோழாபுரம் அமைந்திருக்கின்றது;ராஜபாளையம் டூ சங்கரன் கோவில் சாலையில் 8 வது கி.மீ.தொலைவில் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இந்த ஆலயத்தில் குழல்வாய்மொழி அம்பாள் சன்னதிக்கு அருகில் மஹாதேவசித்த குரு அவர்களின் ஜீவசமாதி அமைந்திருக்கின்றது;ராஜராஜசோழ மன்னனின் அரசாட்சி காலத்தில் சுமாராக இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஐக்கியமாகியிருக்கின்றார்;
16.9.2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணிக்குள் ஏதாவது ஒரு 30 நிமிடம் இங்கே இருக்க வேண்டும்;விக்கிரபாண்டீஸ்வரரையும்,குழல்வாய்மொழி அம்பாளையும் வழிபடவேண்டும்.பிறகு,மஹாதேவசித்தகுருவிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்;
இந்த நாளில் இந்த ஆலயத்திற்கு வருகை தந்தது முதல் புறப்படும் வரை தமது மனைவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இறைசக்திகளிடமும்,சித்தசக்தியிடமும் பின்வருமாறு வேண்டிக்கொள்வது அவசியம்;(இதன் மூலமாக மறுநாளில் இருந்தே வளமான மற்றும் நலமான வாழ்க்கை அமையும்;இதுவரை இருந்து வந்த வாழ்க்கை நெருக்கடிகள் அனைத்தும் தீர்க்கப்படும்)
“எனது மனைவியின் தியாகத்தால் தான் இன்றும் நான் எனது வேலை/தொழிலை நிம்மதியாகவும்,தங்குதடையின்றியும் பார்க்க முடிகின்றது;
அவளது பக்கபலத்திற்கு நான் தலைவணங்குகின்றேன்;
அவள் இன்னும் ஆழ்ந்த மன நிம்மதியோடும்,அளவற்ற ஆரோக்கியத்தோடும்,செல்வ வளத்தோடும் வாழ அருள்புரிவீராக”
இந்த பவுர்ணமிக்கு சோழாபுரம் வருபவர்கள் தம்பதியாக வந்து வழிபடுவதன் மூலமாக அவர்களது குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரருடைய அருளும்,மஹாதேவசித்தகுருவின் ஆசியுடன் அவரவர்களுடைய பித்ருக்களின் ஆசிகள் மழைபோல கிட்டும்;
வெகுகாலமாக திருமணத் தடையால் அவதிப்படும் பெண்கள்(குறிப்பாக ஆயில்யம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்) மற்றும் ஆண்கள் கலந்து கொள்வதால் விரைவில் தமது வாழ்க்கைத் துணையை அடைவார்கள்;
ஆலயத்திற்கு வரும் போது,இம்முறை தங்களால் எது முடியுமோ அதை மட்டும் வாங்கி வந்தால் போதுமானது;
குருவையும்,இறைவனையும் சந்திக்கச் செல்லும் போது வெறுங்கையோடு போகக் கூடாது என்பது தமிழ்ப் பண்பாட்டுவிதி!

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ 

Friday, September 9, 2016

நமது பக்தி உணர்ச்சி மட்டுமே நம்மைப் பாதுகாக்கும்!



உங்கள் எதிர்காலத்தைத் துல்லியமாக அறிந்தால்,உங்கள் இன்றைய தினம் எப்படி இருக்கும்?

அருள்வாக்கு சொல்பவர்கள் உங்களுக்கு,உங்கள் எதிர்காலம் பற்றி என்ன சொல்கின்றார்களோ,அதே கருத்தைத் தான் திறமை மிக்க ஜோதிடரும் தமது ஜோதிட அனுபவத்தின் மூலமாகத் தெரிவிப்பார்;(என்ன எல்லாத் துறையிலும் போலிகள் அதிகரித்துவிட்டது போல,ஜோதிடத்துறையிலும் போலிகள் அதிகம் தான்;உண்மையான ஜோதிடரை அடையாளம் கண்டறிவது உங்கள் சொந்த பொறுப்பு)

ஜோதிடத்தின் மூலமாகவோ அல்லது அருள்வாக்கு மூலமாகவோ நாம் ஏமாந்திருக்கின்றோம் என்றால் அதுவும் நமது முற்பிறப்புகளின் கர்மவினைகளால் தான்;வேண்டும் என்றே யாரும் ஏமாறுவதில்லை;ஏமாற்றுவதில்லை;

ஜோதிடப்படி,யுத்தக் கிரகங்கள் என்று ஜோதிடக்கலை தெரிவிப்பது சனிக்கிரகத்தையும்,செவ்வாய்க்கிரகத்தையும் தான்;காற்றுக் கிரகமாக சனியையும்,நெருப்புக் கோளாக செவ்வாயையும் வர்ணிப்பது ஜோதிடக்கலையின் வழக்கம்;நவீன விஞ்ஞானமும் தமது ஆராய்ச்சிகளின் மூலமாக இதை உறுதிப்படுத்தியுள்ளது;

செவ்வாய் ஒரு ராசியை 45 நாட்களில் கடந்துவிடும்;சனியோ ஒரு ராசியை கடக்க 900 நாட்கள்=30 மாதங்கள்=இரண்டரை ஆண்டுகள் ஆகும்; 

நெருப்பும் காற்றும் இணைந்தால் என்ன நிகழும்?


தவிர,செவ்வாய் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வக்கிரம் ஆகும்;

தற்போது செவ்வாயின் வக்கிரம் 6 மாதங்கள் 19 நாட்கள் வரை இருந்துள்ளது(வழக்கமான 45 நாட்கள் இல்லாமல்);அதுவும் செவ்வாயின் இரண்டாவது சொந்த வீடான விருச்சிகராசியில்!

 ஏற்கனவே,அங்கே விதியின் நாயகனும்,நமது ஒவ்வொருவருடைய தொழில் அல்லது வேலையை நிர்ணயிப்பவருமான சனி விருச்சிகராசியில் தான் இருக்கின்றார்;இருவரும் ஒரே ராசியில் 26.2.2016 முதல் 9.9.2016 வெள்ளிக்கிழமை காலை 7.16 வரை இருந்துள்ளார்கள்;


நெருப்புகோளும்,காற்றுக்கோளும் ஒரே ராசியில் அதிக நாட்கள் தங்கியதால்,12 ராசிக்காரர்களும் படாத பாடு பட்டுள்ளார்கள்;விருச்சிகராசிக்காரர்களும்,துலாம் ராசிக்காரர்களும் அந்தோ பரிதாபம் என்ற சூழ்நிலைதான்;துலாம் ராசிக்காரர்கள் பலரது ஆயுள் இந்த காலகட்டத்தில் நிறைவடைந்திருக்கின்றது;நாடு நெடுக மட்டும் அல்ல;உலகம் முழுவதுமே கலவரம்,போர்,பூகம்பம்,புயலின் அதிரடித் தாக்குதல்,பெருத்த கனமழை,மக்கள் மனத்தில் போராட்ட மனப்பான்மை அதிகரித்துள்ளது இந்த காலகட்டத்தில் தான்!


வெகு சில விருச்சிகராசிக்காரர்களும்,துலாம் ராசிக்காரர்களும் இந்த கிரகயுத்தத்தில் தப்பிவிட்டார்கள்;அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒராண்டு(26.2.2016க்கு முந்தைய ஓராண்டு) வரை தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்திருப்பார்கள்;

அல்லது தினமும் ஒரு மணி நேரம் சிவாலயத்தில் இருந்திருப்பார்கள்;

அல்லது தினமும் அன்னதானம் ஒருவருக்காவது செய்திருப்பார்கள்;


மேஷராசிக்கு அதிபதியான செவ்வாய்பகவான்,ராசிக்கு எட்டாம் இடத்தை அதிகமான காலம் கடந்ததால்,அவசரப்பட்டு விபத்திலும்,அடிதடியிலும்,தேவையற்ற வம்புவழக்கிலும் சிக்கிக் கொண்டு இன்றுவரையிலும் திண்டாடுபவர்கள் அதிகம்!!!


சனிக்கிரகத்திற்கு நவக்கிரகப்பதவி கொடுத்தவர் மஹாகாலபைரவப் பெருமான்! தினமும் 30 நிமிடத்திற்குக் குறையாமல் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபித்து வந்திருப்பவர்களும் ஆழ்ந்த நிம்மதியாக இருந்திருப்பார்கள்;

தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று எழுதி வந்திருப்பவர்களும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்திருப்பார்கள்;

தினமும் சிவாலயம் சென்று ஒரு மணி நேரம் கோவிலுக்குள் தேவாரப்பதிகங்கள் அல்லது ஓம் நமச்சிவாய என்று ஜபித்திருந்தால் அவர்களுக்கும் பெரிய அளவில் துயரம் இருந்திருக்காது;

தினமும் காரம்பசும்பாலை சிவப்பூஜைக்கு அன்பளிப்பாக கொடுத்தவர்களுக்கு ஆழ்ந்த மன நிம்மதி கிடைத்திருக்கும்;

தினமும் பசுவை வலம் வந்தவர்களுக்கும்,பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் கொடுத்தவர்களுக்கும் கசகசப்பு நெருங்கியிருக்காது;

இந்த ஆறரை மாதங்களில் மாதம் ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் வந்தவர்களுக்கு அவ்வளவாக பாதிப்பு வந்திருக்காது;

இந்த காலகட்டத்தில் வில்வக்கன்றுகளை சிவாலயத்தில் நட்டு தினமும் தண்ணீர் ஊற்றியவர்களை மனக்கஷ்டம் நெருங்கியிருக்காது;

இந்த காலகட்டத்தில் தினமும் அல்லது வாரம் ஒருமுறை குலதெய்வத்தை அதன் இடத்தில் சென்று வழிபட்டவர்களுக்கும் ஆழ்ந்த மன அமைதி கிட்டியிருக்கும்;

இந்த காலகட்டத்திற்கு முன்பும்,இப்போதும்,இனியும் தினமும் மஹாவராகி வழிபாடு அல்லது ஸ்ரீசக்கர தியானம் அல்லது ஸ்ரீசக்கர வழிபாடு அல்லது சித்தர் வழிபாடு அல்லது வாசியோகம் அல்லது தினமும் அன்னதானம் செய்தவர்களும் ஆழ்ந்த மன அமைதியை அடைந்திருப்பார்கள்!!!

செவ்வாயின் அதிதேவதையான முருக்கடவுளைச் சரணடைந்தவர்ளும் கந்தனின் அருளால் ஆழ்ந்த நிம்மதியோடு வாழ்ந்திருப்பார்கள்;

யாராலும் யாருடைய தலையெழுத்தையும் மாற்ற முடியாது;ஆனால்,நமது விடாமுயற்சியால்(தினமும் மந்திர ஜபம் அல்லது சிவாலயம் செல்லுதல் அல்லது மேலே கூறியவற்றில் ஏதாவது ஒன்று) தலைவிதியையும் மாற்றிவிட முடியும்;மன அமைதியோடு வாழவும் முடியும்;


தகவல் தொழில்நுட்பமோ அல்லது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையோ அல்லது மிதமிஞ்சிய அரசியல் செல்வாக்கோ அல்லது தனக்குத் தெரிந்த மாந்திரீக சக்தியோ ஒருபோதும் நம்மை காப்பாற்றாது;

நமது தினசரி மந்திர ஜபம் மட்டுமே நம்மை பாதுகாக்கும்;கடந்த 20,00,000 ஆண்டுகளில் பல கோடி சிவனடியார்கள் இதை வாழ்ந்து நிரூபித்துள்ளார்கள்;

முறையான வழிபாட்டை அறிய ஒருமுறை நேரில் எம்மை உங்கள் ஜாதகத்துடன் சந்திக்கவும்;கை.அருணமுனி என்ற கை.வீரமுனி. . .வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் 9092116990 அல்லது 9364231011 ஸ்ரீவில்லிபுத்தூர்,விருதுநகர் மாவட்டம்;


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ 

Thursday, September 8, 2016

தட்சிண சிதம்பரம் என்ற சிதம்பரேஸ்வரர் திருக்கோவில்,ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர்









உலகில் எந்த நாட்டிலும் பிறந்தவர்களுக்கும் முக்தி இப்பிறவியிலேயே கிட்டாது;

நமது பாரததேசம் என்ற கோவிலில் கருவறையாக இருக்கும் தமிழ்நாடு மாநிலத்தில் உதித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இப்பிறவியில் அல்லது அடுத்து வரும் ஒருசில பிறவிகளிலேயே முக்தி கிட்டிவிடும்;

ஏனெனில்,தமிழ் மொழியில் யாரெல்லாம் பள்ளிப்படிப்பை முடிக்கின்றார்களோ( +2 வரை) அவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி,சித்தர்பெருமக்களின் போதனைகள்,சிவபெருமானின் அருமை பெருமை,சைவத்தின் மகிமைகள்,சிவாலயங்களின் சூட்சுமங்கள் சுலபமாகப் புரியும்;முக்தியை நோக்கிய செயல்பாடுகள் வாழ்க்கையாக அமையும்;


மனிதர்களை இயக்குவது நவக்கிரகங்கள்;நவக்கிரகங்கள் நம் ஒவ்வொருவருடைய கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பாவம் மற்றும் புண்ணியச் செயல்களுக்கு ஏற்ப இப்பிறவியில் வேலை,தொழில்,யோகம்,வீடு,வாசல்,வாகனங்கள்,சுகம் போன்றவைகளையும்,அவமானம்,நோய்,கடன் போன்றவைகளையும் கலந்து கலந்து தருகின்றன;
இந்த நவக்கிரகங்களை சூட்சுமமாக இயக்குவது பஞ்சபூதங்கள்!


இந்த பஞ்சபூதங்களை ஈசனின் ஐந்து முகங்கள் கட்டுப்படுத்திவருகின்றன;இதை நினைவூட்டும் விதத்தில் தான் பஞ்சபூதத் திருத்தலங்களை சிவபக்தர்களாகிய மன்னர்கள் உருவாக்கினார்கள்;அவை காளஹஸ்தி,திரு அண்ணாமலை, திரு ஆனைக்கா(திருச்சிக்கு அருகில்),சிதம்பரம்,காஞ்சிபுரம்!

இதே போல தட்சிண(தெற்கு) பஞ்சபூதத் தலங்களை விக்கிரப்பாண்டிய மன்னன் தமது ஆட்சிக்காலத்தில் தெற்கு தமிழ்நாட்டில் சிற்றரசர்களுடன் கட்டினார்;அதில் தட்சிண சிதம்பரமாக விளங்குவது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுக்கா தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்நிறை சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும்;

சதுர்முகி வருடம்,வைகாசி மாதம் (மே,ஜீன் 2016) இந்த ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு குடமுழுக்கு (சமஸ்க்ருதத்தில் கும்பாபிஷேகம்) சிறப்போடு செய்யப்பட்டது;


அதற்கு முன்பு வரையிலும்,இப்பகுதி மக்கள் இந்த ஆலயத்தின் பகுதிகளில் விளையாடுவதும்,தூங்குவதும்,சீட்டாடுவதுமாக இருந்து வந்துள்ளார்கள்;புனர்நிர்மாணம் செய்யத் துவங்கிய கால கட்டத்தில்,பவுர்ணமி நாட்களில் உச்சிப் பொழுதான பகல் 12 மணி வாக்கில் மூலவர் இருக்கும் பகுதியில் உள்ள நந்தி உயிர்பெற்று எழுந்து,வலம் வந்திருக்கின்றார்;அந்த நந்தி(காளை வாகனம்)யின் மீது ஈசனும்,அம்பிகையும் அமர்ந்த நிலையில்,பஞ்சவாத்தியங்கள் முழங்க,துந்துபி ஒலி பரவ,சங்கு ஒலி கேட்க, வலம் வருவதை அப்பகுதி கிராம மக்கள் பலர் பலமுறை தரிசித்துள்ளார்கள்;அதன் பிறகு,கோவில் பகுதியில் தூங்குபவர்களும்,சீட்டாடுபவர்களும் விளையாட்டு எண்ணத்துடன் வருவதைக்கைவிட்டு விட்டார்கள்;கோவிலின் புனிதத்தை உணர்ந்து முறைப்படி வழிபடத் துவங்கிவிட்டார்கள்;

திருவாடுதுறை ஆதினத்தின் முதல் ஆதினமாகிய நமச்சிவாய குருமூர்த்தி சுவாமிகளின் சுதை சிற்பம் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது;

தட்சிண சிதம்பரம் இதுதான் என்பதற்கு பலவிதமான ஆதாரங்கள் இருக்கின்றன;உலகத்தின் மையப் புள்ளி சிதம்பரம் தான் என்பதை மேல்நாட்டு புவியியல் ஆராய்ச்சியாளார்கள் பல கோடீ ரூபாய்கள் செலவழித்து கண்டறிந்துள்ளார்கள்;

அதே போல ஒருங்கிணைந்த தமிழ் உலகத்தின் (இன்றைய தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா) மையப் புள்ளியாக இந்த ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் மூலவர் இருக்கின்றது என்பது சிவசத்தியம் ஆகும்;(இன்றைய தமிழ்நாடு மாநிலத்தின் மையப்பகுதியாக இருப்பது திருச்சி என்பது நம்மில் பலருக்கும் தெரியும்)

இன்று,சதுர்முகி வருடம்,ஆவணி மாதம் 23 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று இங்கே திருக்கல்யாணம் நடைபெற்றது;யார் திருக்கல்யாணம் வைபவத்தில் கலந்து கொள்கின்றார்களோ,அவர்களுக்கு அப்பிறவியே இறுதிப்பிறவியாகும்;ஆமாம்! முக்தி கிட்டிட விரும்புவோருக்கு மட்டுமே திருக்கல்யாணம் வைபத்தை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும்;

யார் 108 சிவாலயங்களில் திருக்கல்யாண வைபவம் நிகழ்த்திட பாடுபடுகின்றார்களோ அவர்கள் சிவகணம் ஆகும் தகுதியைப்  பெறுவார்கள்;

தற்போது ராஜகோபுரம் கட்டும் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன;

ஆலயத்தில் நடராஜர் அம்பிகையுடன் அருள்பாலித்து வருகின்றார்;பஞ்ச லிங்கங்கள்,விஷ்ணு துர்கை,மஹா கால பைரவப் பெருமான் என்று சிவாலயத்திற்கு உரிய அனைத்து தெய்வசக்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உயிர்த்துடிப்போடு கோவில் சிவகடாட்சத்தால் அருள்மழை பரவிக்கொண்டே இருக்கின்றது;சிதம்பரம் நடராஜரைத் தரிசித்தால் என்ன புண்ணியம் கிட்டுமோ,சிதம்பரம் சென்று வந்தால் என்னவிதமான புண்ணியப் பலன் கிடைக்குமோ,அதே புண்ணியப் பலன் இந்த ஆலயம் வந்து வழிபடுபவர்களுக்குக் கிட்டும்;


முற்காலத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட ரதத்தில் சிவசக்தி வலம் வந்துள்ளார்கள்;அதனாலேயே இந்த கிராமத்திற்கு தெற்கு வெண்கல நல்லூர் என்று பெயர் இருந்தது;இப்போது,தெற்கு வெங்காநல்லூர் என்று மருவி விட்டது;


வழி:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வரவேண்டும்;அங்கிருந்து தென்காசி செல்லும் சாலையில் இளந்தோப்பு அரசு மருத்துவமனைக்கு சற்று முன்பாகவே தெற்கு நோக்கி ஒரு சாலை செல்லும்;அந்த சாலை வழியாக சுமார் 7 கி.மீ.தூரம் பயணித்தால் தெற்கு வெங்காநல்லூரைச் சென்றடையலாம்;

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மினி பஸ் வசதி இருக்கின்றது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ


Saturday, September 3, 2016

எஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்

டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.
இது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.
ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.
தனி ஒரு மனிதன் நினைத்தால் கூட மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.