Thursday, July 14, 2016

அனைத்து கர்மவினைகளையும் அடியோடு நீக்கும் ஆடி மாத ஜபம்!

   
உலகில் பிறந்திருக்கும் நம் ஒவ்வொருவரும் கடந்து ஐந்து முற்பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் மொத்தத்தை அனுபவிக்கவே  வாழ்ந்து வருகின்றோம்;ஆனாலும்,இறை சக்தியானது மிகவும் கருணை மிக்கது;

ஒவ்வொரு நாளுமே நாம் நமது கர்மவினைகளில் இருந்து விலகிச் செல்ல பலவிதமான விதிவிலக்குகளை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றது;ஆமாம்! சாலை/தெருவில் நடந்து செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;யாராவது பசிக்குது? என்று கெஞ்சினால் அது உங்கள் கர்மவினைகளின் சுமையை குறைக்க வந்திருக்கும் தெய்வீக சுயபரிகாரமே! நீங்கள் அந்த ஆத்மாவின் பசியை நீக்கினால்,உங்கள் கர்மவினையின் ஒரு சிறுபகுதியை குறைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்;

அதே போல,தினமும் ஒரு பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தந்தாலும் உங்கள் கர்மவினையை குறைக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்;

ஒரு பாழடைந்த சிவாலயத்தில் முதன் முறையாக தீபம் ஏற்றுகின்றீர்கள் எனில்,அடுத்த பிறவியில் நாடாளும் யோகம் உங்களைத் தேடிவரும் என்று அர்த்தம்;சிலருக்கு இப்பிறவியிலேயே!

முழுமையான கர்மவினைகளை ஒரே பிறவியில் தீர்த்துவிட முடியாது;தனி ஆளாக போராடினால்!

தகுந்த குரு கிடைத்துவிட்டால்,ஒரே வருடத்தில் அல்லது ஒரே மாதத்தில் ஏன் ஒரே நாளில் கூட நமது கர்மவினைகளின் சுமையை ஒரே வீச்சில் கரைத்துவிடமுடியும்;நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அமைவது மிகவும் கடினமே!

ஒவ்வொரு ஆடிமாதமும் சூரியன்,ஆத்மாக்காரகனாகிய சந்திரனின் ராசியான கடகராசியைக் கடக்கின்றார்;ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியன்றுதான் மஹா கால பைரவப்பெருமானின் துணை சக்தியான வராகி(ஸம்ஸ்க்ருதத்தில் வாராகி) லலிதா பரமேஸ்வரியிடம் இருந்து உதயமானாள்;

வைஷ்ணவம் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கும் முன்பே உண்டானது சைவம்;

சைவம் தோன்றுவதற்கும் பல கோடி கல்பங்களுக்கும் முன்பே உருவானது தான் சாக்தம் எனப்படும் ஸ்ரீவித்யா வழிபாடு!

ஸ்ரீசக்கரம் என்ற வடிவில் பல கோடி சதுர கி.மீ.தூரத்திற்கு பிரபஞ்சத்தை காக்கும் பெண் சக்திகள் வசித்து அருளாட்சி புரிந்துவருகின்றன;லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தையும்,பிரம்மாண்டபுராணத்தையும் வாசித்தால் தான் இது பற்றிய முழு விபரமும் நம்மால் அறிய முடியும்;

யார் லலிதா சகஸ்ரநாமத்தை முறையாக ஜபிக்கும் ஆற்றலை பெறுகின்றார்களோ,அவர்கள் அடுத்த சில பிறவிகள் மட்டுமே இப்பூமியில் எடுப்பார்கள்;

வராகியில் மூன்று விதமான அம்சங்களும்,64 விதமான வடிவங்களும் இருக்கின்றன;

முதல் வராகி ஸ்ரீலலிதா பரமேஸ்வரியால் தோற்றுவிக்கப்பட்ட படைத்தலைவி! இந்த அன்னை தனித்து வாழும் சக்தி!

இரண்டாவது வராகி அருணாச்சலத்தில் அபிதகுஜலாம்பாளாக அண்ணாமலையின் துணை சக்தியாக(உண்ணாமுலையாக) அருள் பாலித்து வருகின்றாள்;அண்ணாமலையின் இன்னொரு பெயர் சதாசிவம் ஆகும்;

மூன்றாவது வராகி உன்மத்த பைரவரின் துணை சக்தி ஆவார்;
ஒவ்வொரு கிரகத்திற்கும் பிராண தேவதை இருக்கின்றார்கள்;சூரியனின் பிராணதேவதை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்+சொர்ணதாதேவி!
புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+வராகி!


இந்த சதுர்முகி வருடத்தில் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியானது 7.8.2016 ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இருக்கின்றது;

மனிதர்களாகிய நமக்குத் தான் பிறந்த நட்சத்திரம் பார்த்து அனைத்து சுபகாரியங்களையும் செயல்படுத்த வேண்டும்;ஆனால்,ஒரு மனிதன் இறந்துவிட்டால்,ஜன்ம நட்சத்திரம் செயலிழந்து போய்,இறந்த திதிதான் செயல்படுகின்றது;அதனால் தான் முன்னோர்கள் இறந்த திதி வரும் நாளில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து வருகின்றோம்;(இதன்மூலம்,ஒருவர் இறந்து விட்டால்,அவர் தெய்வசக்தியாகி விடுகின்றார் என்றுதான் அர்த்தம்)


இறை சக்திகளுக்கு ஜன்ம நட்சத்திரம் என்று கிடையாது;திதி மட்டுமே உண்டு;விநாயகப் பெருமானுக்கு சதுர்த்தி,முருகக் கடவுளுக்கு சஷ்டி;பைரவப் பெருமானுக்கு அஷ்டமி;வராகிக்கு பஞ்சமி!(சில அவதாரங்கள் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் உதயமானதற்குக் காரணம் ஜோதிடக் கலைக்கு மனிதர்கள் மதிப்பு தரவேண்டும் என்பதற்காகவே!!!)




அன்னை வராகியின் அருள் யாருக்கெல்லாம் கிட்டும்?

மனதால் ஒரு போதும் பிறருக்கு தீங்கு தர நினைக்காமல்,தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்து பிறரின் பொறாமையால் பாதிக்கப்பட்டிருந்தால்,அவர்களுக்கு ஓடோடி வரம் தருபவள் இந்த பிரபஞ்ச அன்னை!

ஆயிரக்கணக்கில் செலவு செய்து,லட்சக்கணக்கில் பூஜை செய்து அன்னை வராகியிடம் எவராலும் வரங்கள் வாங்க முடியாது;


வராகி பரணி என்ற வராகி மாலை என்ற வராகி அந்தாதியை வாசித்துப் பார்த்தால்,அன்னை வராகியை வழிபடுபவர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும்,அவர்களை எப்படி துவம்சம் செய்வாள் என்றுதான் பாடல்களே வரும்;

இதன் உள்ளார்த்தம் என்ன?

பொறாமை எண்ணம் ஒருவருக்கு வந்தால்,அவர்கள் பிறரின் முன்னேற்றத்தை தடுக்க எந்த ஒரு கேவலமான வழிமுறைக்கும் போகத் தயங்க மாட்டார்கள் என்றுதான் அர்த்தம்;அப்படிப்பட்ட இழிவான மனமானது ஒரு போதும் திருந்தவே திருந்தாது;அவர்களை சம்ஹாரம் செய்தால் மட்டுமே அடங்குவர் என்பதையே வராகி பரணியின் பாடல்கள் தெரிவிக்கின்றது;


நீங்கள் எப்பேர்ப்பட்ட மாந்திரீக பாதிப்பில் இருந்தாலும்,இந்த விரதத்தினை முறையாகவும்,முழுமையாகவும் கடைபிடிப்பதன் மூலமாக அந்த மாந்திரீக பாதிப்பில் இருந்து மீண்டு விடுவீர்கள்;

தன்னைச் சரணடையும் தனது பக்தனையும்,அவனது குடும்பத்தையும் பாதுகாக்க எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த மந்திரவாதியையும் ஒழித்து கட்டத்தயங்கமாட்டாள் அன்னை வராகி!


16.7.16 சனிக்கிழமையன்று ஆடி மாதம் துவங்கி,16.8.16 செவ்வாய்க்கிழமையன்று ஆடி மாதம் நிறைவடைகின்றது;மறுநாள் 17.8.16 அன்று ஆவணி மாதம் பிறக்கின்றது;ஆவணி மாத பவுர்ணமியும் வருகின்றது;


இந்த 33 நாட்களும் பிரம்மச்சார்ய விரதம் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வராகி பரணியை யார் ஒரு முறை ஜபிக்கின்றார்களோ,அவர்களுக்கு அடுத்த சில வாரங்களில் (சிலருக்கு இந்த 33 நாட்களுக்குள்ளாகவே) அனைத்து கஷ்டங்களும்,கர்மவினைகளும் தூள் தூளாகிவிடும்;


இந்த 33 நாட்களும் என்ன செய்ய வேண்டும்?


வராகி பரணியை 3 நாட்களுக்குள்(15/7/16 வெள்ளி முதல் 17.7.16க்குள்) ஒருமுறை கையால் எழுத வேண்டும்;அப்படி எழுதியதையே தினமும் ஜபிக்க வேண்டும்;


வீட்டில் அன்னை வராகியின் படத்தை பிரேம் போட்டு வைத்துக் கொண்டு தினமும் அன்னைக்கு செவ்வரளி மாலை அல்லது தாமரைப்பூ மாலை அணிவிக்க வேண்டும்;


பச்சைத் துண்டின் மீது அமர்ந்து கொள்ளவேண்டும்;(ஒருபோதும் இந்த பச்சைத் துண்டினை துவைக்கக் கூடாது;வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது)

ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபத்தையும்;இன்னொரு மண் விளக்கில் நெய் தீபத்தையும் ஏற்றி வைக்க வேண்டும்;தரமான வாசனை பத்தியையும் ஏற்றி ஓம் வடிவில் அன்னைக்கு ஆரத்தி காட்டி பத்தி ஸ்டாண்டில் வைக்க வேண்டும்;ஆரத்தி காட்டும் போது நமது கோரிக்கைகளை வேண்டிக் கொள்ள வேண்டும்;

தினமும் கொஞ்சம் பேரிச்சம்பழம்(கொட்டை நீக்கப்பட்டது),ஒரு மாதுளம் பழம்,ஒரு செவ்வாழைப்பழம்,கொஞ்சம் தேன் அல்லது ஜிலேபி மற்றும் ஆரஞ்சுப் பழம் அல்லது பூந்தி படையலாக வைக்க வேண்டும்;*

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா

என்று ஐந்து முறை வராகி சித்தரை நினைவு கூர்ந்து ஜபிக்க வேண்டும்;அதன் பிறகே,வராகி பரணியை வாசிக்க வேண்டும்;
இன்று இரவு சாத்திய செவ்வரளி மாலை/தாமரைப்பூ மாலையை மறு நாள் இரவில் அகற்றிவிடவேண்டும்;

இன்று இரவு அன்னை வராகிக்கு படையலிட்ட பழங்கள்,இனிப்புக்களை மறுநாள் இரவு (வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பு)வீட்டில் இருப்பவர்கள் அதை பிரசாதமாக பகிர்ந்து சாப்பிடவேண்டும்;(தனித்து வாழ்ந்து வருபவர்கள் இவைகளை இரவு உணவாக மட்டுமே கூட சாப்பிடலாம்;ரத்த உறவுகள் அல்லாதவருக்கு தரக் கூடாது)

*கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள் தினமும் செவ்வாழை அல்லது பேரீட்சை மட்டுமாவது படையல் வைக்க வேண்டும்;

பெண்களும் அன்னையை வழிபடலாம்;சில இயற்கை உபாதை நாட்களன்று மட்டும் விடுமுறை விட்டுவிட்டு தொடரலாம்;

தினமும் தூங்கி எழுவதற்கு முன்பு கனவில் சில காட்சிகள் தெரியும்;அதைக் கொண்டு தாங்கள் அன்னையின் மனதில் எந்த அளவிற்கு இடம்பிடித்துவிட்டீர்கள் என்பதை உணரலாம்;


எவ்வளவுக்கு எவ்வளவு ரகசியமாக இந்த விரதத்தை செயல்படுத்துகிறீர்களோ,அவ்வளவுக்கு அவ்வளவு விரைவான பலனைப் பெறலாம்;(உடன் பிறப்புகள்,நெருங்கிய நட்புகளிடம் தெரிவிக்க வேண்டாம்)


வெகுதூர நாடுகளில் இருப்பவர்களுக்கு படம் வைத்து வழிபடும் சந்தர்ப்பமோ அல்லது படையலை தினமும் வைத்து வழிபடும் ப்ராப்தமோ இராது;அவர்கள் தினமும் இரவு 10 மணிக்கு மேல்(அந்தந்த நாட்டின் இரவு 10 மணிக்கு மேல்) 12 மணிக்குள் ஒருமுறை வீட்டில் / தங்கும் இடத்தில் வராகி பரணியை ஒரு தீபம் வடக்கு நோக்கி வைத்து கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு ஜபித்தாலும் பலன் உண்டு;


தீபம் வைத்து வழிபடக் கூடிய சந்தர்ப்பமும் சில நாடுகளில் வாழ்பவர்களுக்கு கிடைக்காது;பரவாயில்லை;வராகி பரணியை ஜபித்தால் மட்டும் போதும்;

33 நாட்கள் வெற்றி கரமாக முடித்துவிட்டவர்கள் பல ஆண்டுகளாக இருந்து வந்த வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து மீண்டுவிடுவார்கள் என்பது வராகி சத்தியம்;

ஒரு மண்டலம் தொடர்ந்து பிரம்மச்சாரிய விரதம் இருக்க விரும்புவோர் 1.9.16 வியாழக்கிழமை வரை இந்த விரதத்தைத் தொடரலாம்;


இந்த நாட்களில் ஒருமுறையாவது அன்னை வராகி உங்களை தமது ஆலயத்திற்கு வரவழைத்து ஆசி தருவாள்;கடந்த பல நூற்றாண்டுகளாக பல லட்சம் அன்னை வராகியின் அன்பு மகன் களுக்கும்/மகள்களுக்கும் இப்படிப்பட்ட அரிய ஆசிகள் கிடைத்திருக்கின்றன;


இந்த விரதம் இருப்பவர்கள் தினமும் 108 முறை ஸ்ரீவாராஹி ஸகாயம் என்றும் எழுதலாம்;ஆனால்,கட்டாயம் இல்லை;


இந்த வழிமுறை இல்லறத்தாருக்கே உரியது;வராகி உபாசனை அல்ல;வராகி உபாசனை செய்வது துறவிகளுக்கே உரியது;



ஓம் அருணாச்சலாய நமஹ 

ஒரே நாளில் வரம் தரும் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவில்,சோழாபுரம்!!!


கலியுகத்தில் ராகுவின் உச்சம் ஆகும் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்;

இதனால்,நிம்மதியாக வாழ்ந்து வருபவர்களின் எண்ணிக்கையும்,ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தம்பதிகளின் எண்ணிக்கையும் படுவேகமாக குறைந்துவருகின்றது;


வேலை கிடைப்பதில்லை;கிடைத்தால் பிடிப்பதில்லை;பிடித்த வேலையாக இருந்தால் சம்பளம் போதவில்லை;

தொழில் செய்தால் எதிர்பார்க்கும் வருமானம் கிடைப்பதில்லை;

குடும்பத்தில் ஒற்றுமை இல்லை;

தினசரி செய்தித்தாளை வாசித்தாலே வீட்டைவிட்டு வெளியே செல்லவே பயமாகத் தான் இருக்கின்றது;

ஒவ்வொரு குடும்பமும் கடன் அல்லது நகைக்கடன் அல்லது நோய் அல்லது சொத்துத் தகராறு அல்லது மாந்திரீகப் பிரச்சினை அல்லது பொறாமை அல்லது குழப்பத்தில் ஆழ்ந்து யாருமே நிம்மதியாக வாழ்ந்துவருவதாகத் தெரியவில்லை;


இந்த சூழ்நிலையை மாற்றிட சித்தர் பெருமக்களை வழிபடுவதே சிறந்தது;

தமிழ்நாடு முழுவதுமே சித்தர் பெருமக்கள் ஆங்காங்கே ஜீவசமாதி ஆகி உள்ளார்கள்;
பூர்வபுண்ணியம் உள்ளவர்களுக்கே சித்தர் ஜீவசமாதிகளுக்குச் செல்லும் பாக்கியம் உண்டாகும்;போராடி முயற்சி  செய்தால் மற்றவர்களுக்கும் சித்தர் பெருமானின் அருளாசி கிடைக்கும்;
இன்றைய காலகட்டத்தில் உடனே ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்;

அப்படி உடனே அருளாசியை அள்ளித்தரும் சித்தர் பீடம் ஒன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகாவில் ஒரு கிராமத்து சிவாலயத்தினுள் அமைந்திருக்கின்றது;


போன பவுர்ணமி அன்று மாலை 4 மணிக்குச் சென்று இரவு 7 மணி அன்னதானம் வரை இந்த ஆலயத்தில் யாம் இருந்தோம்;மறுநாள் காலையில் இருந்து இந்த நொடி வரையிலும் எமக்கு பணக் கஷ்டம் தீர்ந்து எப்போதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கின்றது;தொழில் டல்லடித்தது போய்,ஓய்வே இல்லாத அளவுக்கு மூச்சு முட்டும் விதமாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம்;

அதே சித்தரிடம் மானசீகமாக வேண்டியதால் தான் இப்போது இந்த கட்டுரையை எழுதவே முடிந்திருக்கின்றது;

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்;

ராஜபாளயம் புது பேருந்து நிலையத்தில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்;சோழாபுரம் என்ற கிராமம் வரும்;

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முறம்பு வழியாகச் செல்லும் அனைத்து டவுண் பஸ்களும் சோழாபுரம் நிற்கும்;(இதற்கு அடுத்த ஸ்டாப் தான் முறம்பு)

ராஜபாளையத்திற்குத் தெற்கே இருந்து வருபவர்கள் சங்கரன் கோவிலுக்கு வருகை தந்து அங்கே இருந்து முறம்பு வர வேண்டும்;அங்கே இருந்து ஒரு கி.மீ.ராஜபாளையம் சாலையில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;


சாலையானது எஸ் வளைவாக திரும்பும்.அந்த திருப்பம் ஒரு ஆற்றுப் பாலமாக இருக்கின்றது;அந்த ஆற்றுப் பாலத்தில் இருந்து பார்த்தால் மேற்கே ஒரு கோபுரம் தெரியும்;ஒரு நிலை மட்டுமே கட்டப்பட்ட கோபுரம் அது;

இந்த ஆலயம் தான் அருள்மிகு விக்கிரபாண்டீஸ்வரர் + குழல்வாய் மொழி அம்மையார் திருக்கோவில்
எல்லா நாட்களும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கின்றது;

நீங்கள் ஒரு லிட்டர் பஞ்சதீப எண்ணெய்யும்,ஐந்து கிலோ பச்சரிசி அல்லது புழுங்கலரிசியும் வாங்கிக் கொண்டு 19.7.16 செவ்வாய்க்கிழமை மாலை சரியாக 4 மணிக்கு வந்து விடுங்கள்;சாயரட்சை பூஜையை தரிசித்துவிட்டு,அன்னதானத்தை சிறப்பித்துவிட்டு இரவு 7 மணிக்குப் புறப்படும் விதமாக திட்டமிட்டு வருவது அவசியம்;

எண்ணெயும்,அரிசியும் கூட வாங்க முடியாத அளவுக்கு கஷ்டமா? கவலை வேண்டாம்! இந்த சித்தர் பீடத்தைத் தரிசித்தால் போதும்;வாருங்கள் வரங்களை சித்தர் பெருமானிடம் பெறுங்கள்;

இங்கே அன்னை குழல்வாய்மொழி சன்னதியில் அருகில் இருக்கும் சித்தர் பீடம் சுமாராக 1000 ஆண்டுகள் பழமையானது;இந்த சித்தர் பீடத்தின் அருகில் அமர்ந்து உங்கள் கஷ்டங்களை முறையிடுங்கள்;

முறையிட்டு உங்களுக்கு என்னதேவை என்பதை வேண்டிக் கொள்ளுங்கள்;(புலம்பாதீர்கள்;பிறரின் அழிவுக்காக வேண்டுவது மாபெரும் தவறு;அவர்களை விடவும் இங்கே வந்த முதல் தடவையிலேயே நீங்கள் சக்திவாய்ந்தவராக மாறிவிடுவீர்கள்)

எப்படி சித்தர் பிரானிடம் வேண்ட வேண்டும் தெரியுமா?

எனது கடன் ரூ.5 லட்சம் தீரவேண்டும் என்று வேண்டுவதற்குப் பதிலாக,எனது கடன் ரூ.5 லட்சத்தைத் தீர்த்து வைத்தமைக்கு நன்றிகள்! என்று வேண்டிட வேண்டும்;

எங்கள் மகள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்ததால்,இதுவரை நல்ல வரன் அமையவே இல்லை;இனியாவது அமையுமா? என்று அரைகுறையாக அவநம்பிக்கையோடு  வேண்டக் கூடாது;

எனது மகளின் திருமணம் சிறப்பாக நடைபெற்றமைக்கு மிக்க நன்றிகள் சித்தர்பிரானே! என்று வேண்டிட வேண்டும்;

எனது தொழில் மீட்சி அடையவேண்டும்;வராக்கடன் வசூல் ஆகவேண்டும் என்று கெஞ்சக் கூடாது;

ஐயா! சித்தர் குருவே தங்கள் அருளால் எனது தொழில் அபாரமாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றது; உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!! என்று கோரிக்கையானது நிறைவேறியது போலவே வேண்டிக்கொள்ள வேண்டும்;

ஆடி பவுர்ணமியானது நமது இந்து தர்மத்தில் குருபவுர்ணமியாக  பல கோடி ஆண்டுகளாக கொண்டாடப்படுகின்றது;
இந்த நாளில் குருவிடம் சரணடைந்தவர்களுக்கு அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது அண்ணாமலையார் சொன்ன ஆன்மீக ரகசியம்!!!


மறுநாள் முதலே உங்கள் வாழ்க்கை ஸ்பீடாக இருக்கும்;வளமாக இருக்கும்;நலமாக இருக்கும்;அனைத்தும் பெற்று வளமோடும்,சீரோடும் சிறப்போடும் வாழ சித்தர் பெருமானின் அருள் பெற அழைக்கின்றோம்;



ஓம் ரீங் சிவசிவ

வராகி பரணி என்ற வராகி அந்தாதி என்ற வராகி மாலை



$ ஆடி மாதம் 16.7.16 சனிக்கிழமை அன்று துவங்குகின்றது;துவங்கி 16.8.16 செவ்வாய்க்கிழமை வரை 32 நாட்கள் இருக்கின்றது;இந்த 32 நாட்களும் பிரம்மச்சார்ய விரதம் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் இந்த வராகி பரணியை ஒருமுறை ஜபித்தாலே நமது அனைத்து கஷ்டங்களும்,கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;என்பது எமது வராகி குரு அவர்கள் எமக்கு அளித்த வார்த்தாளி உபதேசம் ஆகும்;


இந்தப் பாடலை ஒருமுறை உங்கள் கையால் எழுதிக் கொள்ளவும்;அப்படி எழுதியதையே ஜபிக்கவும்;

ஜபிக்கும் போது,தலைப்பினை வாசிக்க வேண்டியதில்லை;


ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே


26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

Tuesday, July 12, 2016

நம் ஒவ்வொருவராலும் இப்பிறவியிலேயே முக்தி அடையமுடியும்!


உங்களது வாழ்க்கை லட்சியம் எதுவாக இருந்தாலும்,அதை அடையத் தேவையான முதல் தகுதி: ஆத்மபலம்!

பணம் சம்பாதிக்கவோ
அல்லது

அதிகாரத்தைக் கைப்பற்றவோ
அல்லது

நமக்கு என்று செல்வாக்கினை உருவாக்கவோ
அல்லது

சுகபோகமாக வாழவோ
இங்கே நாம் பிறக்கவில்லை;ஆனால்,இதை பிறந்த ஏழு வயதிற்குள் மறந்துவிடுகின்றோம்;அதுதான் பிரச்சினை;அதுவும் சாதாரண பிரச்சினை அல்ல! ஜன்மாந்திர பிரச்சினை!!

அதென்ன ஜன்மாந்திரப் பிரச்சினை?

ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் பிறந்ததும் ,பிறப்புக்கான நோக்கத்தை அறியாமல் வேறு ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி திசை திரும்பிவிடுவதுதான் ஜன்மாந்திர பிரச்சினை!

சென்ற மூன்று யுகங்களில் நாம் ஒவ்வொருவரும் இதே பூமியில் வாழ்ந்திருக்கின்றோம்;அப்போது நாம் செய்த தவறுகளின் விளைவுகளை அனுபவிக்கவே இப்போது பிறந்து வாழ்ந்து வருகின்றோம்;

இருப்பினும் இதில் இருந்து மீள்வதற்கு ஒவ்வொரு ஆண்டும்,ஒவ்வொரு மாதமும் நமக்குரிய வாய்ப்பினை இறைசக்தி வழங்கிக்கொண்டே தான் இருக்கின்றது;

வெகு சிலர் மட்டுமே இதை சரியான விதத்தில் புரிந்து கொண்டு ஜன்மாந்திர நோக்கத்தை நோக்கி திரும்புகின்றோம்;

ஈசனைத் தவிர,அனைவருமே மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு சென்று கொண்டு இருப்பவர்களே!


நமது பாரதத்தில் இரட்டை ஆட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றது;

ஒரு கிராமத்தை வி.ஏ.ஒ,.நிர்வாகிக்கின்றார்;இவருக்கு இணையாக பஞ்சாயத்து கவுன்சிலர் என்ற மக்கள் பிரதிநிதியும் நிர்வாகம் செய்கின்றார்;


ஒரு நகரத்தை தாசில்தார் நிர்வாகம் செய்கின்றார்;இவருக்கு இணையான மக்கள் பிரதிநிதியான ச.ம.உ.(சட்டமன்ற உறுப்பினர்)வை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களே தேர்தல் மூலமாக தேர்வுசெய்கின்றனர்;


ஒரு மாவட்டத்தை மாவட்ட ஆட்சியாளர் நிர்வாகம் செய்யும் அதே சமயத்தில்,மாநில அரசாங்கத்தின் மந்திரியும் மக்கள் பிரதிநிதியாக நிர்வாகித்துவர,
ஒரு மாநிலத்தை ஆளுநர் நிர்வாகித்து வர,அதே மாநிலத்தை முதலமைச்சரும் நிர்வாகித்து வருகின்றார்;

ஒரு நாட்டை ஜனாதிபதி நிர்வாகித்துவருகின்றார்;இவருக்கு இணையான மக்கள் பிரதிநிதியாக பிரதமரும்,அவரது அமைச்சரவையும் நாட்டை நிர்வாகித்துவருகின்றார்கள்;
இதே போலத்தான்,ஆன்மீக உலகத்திலும்!


சராசரி மனிதரை விடவும் கொஞ்சம் சக்தி வாய்ந்தவர் ஜோதிடர்களும்,அருள்வாக்கு சொல்பவர்களும்;


இவர்களை விடவும் கோவில் பூசாரிகள்,ஹரிபட்டாச்சாரியார்கள்,சிவாச்சாரியார்கள் உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்;இவர்களுக்கு இணையாக 10 ஆண்டுகள் தினமும் பசுவை பராமரிப்பவர்கள் புண்ணியம் சேர்க்கின்றார்கள்;

இவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களே ஜீவசமாதியில் இருப்பவர்கள்,ஜீவசமாதிக்கு முயற்சி செய்பவர்கள்;இவர்களுக்கு இணையாக 30 ஆண்டுகள் தினமும் பசுவைப் பராமரிப்பவர்கள் புண்ணியம் சேர்க்கின்றார்கள்;

இவர்களுக்கு அடுத்த நிலையில் சித்தர் பெருமக்கள் இருக்கின்றார்கள்;தொடர்ந்து மூன்று பிறவிகளாக,மூன்று ஜன்மங்கள் முழுவதும் பசுவுக்கு அனைத்து பராமரிப்பையும் தானே செய்பவர்கள் ஆவர்;

இங்கே இருந்து மேல் உலகத்தின் பதவிகள் ஆரம்பம் ஆகின்றன;

சித்தர்களுக்கு அடுத்த நிலையில் இருந்து போக உலகம் ஆரம்பமாகின்றது;

கந்தர்வர்கள்,தேவர்கள் இவர்களுடைய தலைவன் இந்திரன்;
இந்திரனுக்கு அடுத்த நிலையில் பிரம்மாவும்,பிரம்ம லோகமும்;
பிரம்மாவுக்கு அடுத்த நிலையில் விஷ்ணுவும்,விஷ்ணு உலகமும்;
விஷ்ணுவுக்கு அடுத்த நிலையில் ருத்ரனும்,ருத்ர உலகமும்;
ருத்ரனுக்கு அடுத்த நிலையில் 11 ஏகாதசருத்திரர்களும் அவர்களுடைய உலகமும்;
இவர்களுக்கு அடுத்த நிலையில் ஐந்து விதமான சிவம் என்ற தெய்வீக நிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன;இதில் ஐந்தாவது உயர்ந்த நிலையே அருணாச்சலம் என்ற அண்ணாமலையார் இருக்கின்றார்;இவரது துணை சக்தியே இரண்டாம் நிலை வராகி!


இவர்களுக்கும் மேலே ஆதிசிவம் இருக்கின்றார்;இவரது துணை சக்தியே ஸ்ரீகோமதி அம்பாள்;
இவர்களுக்கும் மேலே இருப்பதுதான் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான ஸ்ரீவாராஹி!
ஸ்ரீவாராஹியின் தலைமை சக்தி ஸ்ரீலலிதா பரமேஸ்வரி இருக்கின்றாள்;இவளுக்கு பல பெயர்கள் இருக்கின்றன;வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி!
இந்த பிரபஞ்ச அன்னைக்கும் மேலே யார் இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை;


மனித இனத்தில் பிறந்த நமக்கு சிந்திக்கும் திறன் இருப்பதால் தான்,இறைசக்தியான ஈசன்,நமது குருவை நாமே தேடிக் கண்டுபிடிக்கும்படி நமக்குச் சுதந்திரம் கொடுத்துள்ளார்;மனிதர்களைத் தவிர,மற்ற ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒரு குரு உண்டு;


இன்றைய கால கட்டத்தில் விசுவாசம் மிக்க சீடர்கள் எல்லா ஊர்களிலும்,அனைத்து கிராமங்களிலும் இருக்கின்றார்கள்;உண்மையான,தன்னலம் கருதாத,தனது சீடனின் எதிர்காலத்தை தனது மந்திர தந்திரத்தால் கண்டறிந்த பின்னர் பொறாமைப்படாத உத்தம குருதான் இல்லை;தேடியும் கிடைப்பதில்லை;கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது;


குரு இல்லாமல் ஆன்மீகத்தில் ஒரு இஞ்ச் கூட முன்னேற முடியாது;


அண்ணாமலை கிரிவலம் 108 முறை வந்தால்,நம்மை முழுமையான சீடனாகவே அருணாச்சலேஸ்வரர் ஏற்றுக் கொள்வார் என்பது எமது கடந்த பத்தாண்டு கால கிரிவலத்தின் மூலமாக பெற்ற அனுபவ உண்மை;

108 ஜன்ம நட்சத்திர நாட்களில் கிரிவலம் செல்லலாம்;

அல்லது

108 திருவாதிரை நாட்களில் கிரிவலம் செல்லலாம்;

அல்லது

108 கார்த்திகை நட்சத்திர நாட்களில் கிரிவலம் செல்லலாம்;

அல்லது

108 அமாவாசை இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

அல்லது

108 தேய்பிறை சிவராத்திரி நாட்களில் அண்ணாமலையை வலம் வரலாம்;

அல்லது

108 விசாக நட்சத்திர நாட்களில் அண்ணாமலையை கிரிவலமாக வரலாம்;

அல்லது

சித்தர்களின் தலைவரும்,தமிழினத்தின் தந்தையுமான அகத்தியமகரிஷி அவதாரம் ஆனது ஆயில்யம் நட்சத்திரத்தன்று!(சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டரும் இதே நட்சத்திரத்தில் தான் உதயமானார்!)

108 ஆயில்யம் நட்சத்திர நாட்களில் அருணாச்சலத்தை சுற்றி வரலாம்;


இப்படி செய்தாலே நமது ஆன்மீக குரு,அதுவும் உத்தமமான குரு நமக்கு அமைந்துவிடுவார் என்பது அண்ணாமலை சத்தியம்!


1008 முறை அருணாச்சலம் என்ற அண்ணாமலையை கிரிவலம் வந்துவிட்டால்,நமது ஜன்ம நட்சத்திர சற்குருவை நாம் அடையாளம் கண்டுவிடலாம்;அப்புறம்,இப்பிறவியிலும்,இனி வர இருக்கும் பிறவிகளிலும் நமக்கு நட்சத்திர சற்குருவின் வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டே இருக்கும்;


மறுபிறவியில்லாத முக்தி கிட்டிட பலவிதமான ஆன்மீக வழிமுறைகள் இருக்கின்றன;அவைகளில் ஒரு சில மட்டும் இங்கே:-

ஒரு நாளுக்கு ஒருமுறை வீதம் ஒருநாள் கூட விடாமல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்திற்கு மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சென்று வழிபாடு செய்தாலே முக்தி கிடைத்துவிடும்;என்பது சித்தர்களின் தலைவரும் நமது தமிழ்மொழியின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷியின் வாக்கு!


துவாதசி திதி வரும் நாளில் அண்ணாமலையில் காலையிலும்,மதியமும்,இரவிலும் அன்னதானம் செய்ய வேண்டும்;இப்படி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள்,அதிகபட்சம் 40 ஆண்டுகள் அன்னதானம் செய்தால் இப்பிறவியோடு முக்திக்கு வழிகிட்டிவிடும்;

குறைந்தது 5 ஆண்டுகள்,அதிகபட்சம் 24 ஆண்டுகள் வரை தினமும் பசுவுக்கு சேவை(குளிக்க வைத்தல்,உணவு அளித்தல்,பராமரித்தல்,பாதுகாத்தல்) செய்வதன் மூலமாகவும் முக்தியை அடைய முடியும்;

தனது வாழ்நாளில் ஒன்பது பாழடைந்த சிவாலயங்களை சீர்திருத்தி,மீண்டும் கும்பாபிஷேகம் செய்துவிட்டால்,முக்தி கிட்டிவிடும்;இந்த வேலைக்கான தலைமை ஒருங்கிணைப்பை மட்டுமே ஒருவர் செய்ய வேண்டும்;அனைத்தையும் தனது சொந்தப் பணத்தினால் செய்வதால் முழுப்பலன் கிட்டிவிடாது என்பதையும் நினைவிற்க் கொள்ளவும்;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ


Thursday, July 7, 2016

பூரண ஆரோக்கியம் & ஆயுள் தரும் விசாக நட்சத்திர அன்னதானம்!


உலகங்கள் பல இருந்தாலும்,நாம் வாழ்ந்து வரும் இந்த உலகமே கர்ம உலகம்(கருமலோகம்) ஆகும்;

ஆமாம்!

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான்;எதிர்கால விஞ்ஞானம் இதை கண்டுபிடிக்கும்;நமது முன்னோர்களாகிய சித்தர்களும்,மகான் களும் இதை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துவிட்டார்கள்;அந்த உலகங்களில் மனம்,பக்தி உணர்ச்சி,பாச உணர்ச்சி,துவேஷ உணர்ச்சி,பொறாமை உணர்ச்சி முதலான எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள்;ஏலியன் என்று நாம் சொன்னாலும்,அவைகள் நம்மை விடவும் அறிவில் முன்னேறிய ரோபாட்டுகள் என்றுதான் (நம்முடைய) கண்ணோட்டத்தில் கூறமுடியும்;


ஒரு கட்டுரையை வாசிப்பதாலோ அல்லது ஒரு கஷ்டத்தினாலோ மனதில் பக்தி உணர்ச்சி தோன்றிவிடாது;பல பிறவிகளாக முயன்றால்,1% பக்தி உணர்ச்சி இப்பிறவியில் உண்டாக வாய்ப்புகள் உருவாகும்;

வெறும் சுற்றுலாவைப் போல,அருணாச்சலம் என்ற அண்ணாமலையை கிரிவலம் வந்தாலே நமக்குள் சிறிது சிறிதாக பக்தி உணர்ச்சி உருவாகும்;

ஒருவருடத்தில்(சித்திரை முதல் பங்குனி வரைதான் ஒருவருடம்! ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை இருப்பது ஒருவருடம் அல்ல) சுமாராக 12 முறையாவது அண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால்,நிச்சயமாக பக்தி உணர்ச்சி உருவாக வாய்ப்புகள் அதிகம்;கலியுகத்தில் தான் மனிதர்கள் பணத்தின் மீதும்,அழகின் மீதும்,அதிகாரத்தின் மீதும் அளவற்ற ஆசை வைக்கின்றார்கள்;அதில் இருந்து “நான் யார்?” என்ற ஆத்மவிசாரம் உருவாகுபவர்களுக்கு அண்ணாமலை கிரிவலம் தான் சிறந்த தூண்டுதல்!


100 வயது ஆயுள் என்று சொன்னாலும்,பெரும்பாலானவர்கள் 60 வயது,70 வயது,80 வயதிலேயே ஆயுள் முடிந்துவிடுகின்றது;நடுவயதைக் கடந்தாலே நம்மில் பெரும்பாலானவர்கள் கடன் அல்லது நோய் அல்லது பூர்வீகச் சொத்து சார்ந்த பிரச்சினை அல்லது வாரிசுகளின் குடும்ப வாழ்க்கைக் குழப்பம் இவற்றால் மனமொடிந்து போகின்றோம்;அதே சமயம்,20 வயது,30 வயதுகளில் கடவுள் தானே? 50 வயது,60 வயதில் கும்பிட்டுக் கொள்ளலாம்;என்ற மிதப்பில் பேசுபவர்களே அதிகம்;அவர்களே ஏழரைச்சனி,பாதகாதிபதி திசை வரும்போது கடவுளிடம் சரணாகதி அடையவும் செய்கின்றார்கள்;இவையெல்லாம் பக்தியின் ஆரம்பக் கட்டங்களே!


எமது ஞான குருவும் ஜன்மாந்திரகுருவாகிய ஸ்ரீஅகத்தியமகரிஷியின் போதனைப்படி,விசாகம் நட்சத்திரம் வரும் நாட்களில் மலை முருகன் ஆலயம் அல்லது ஜீவசமாதிகளில் அன்னதானம் செய்து வரவேண்டும்;தொடர்ந்து ஒரு வருடம் வரை அன்னதானம் செய்து வந்தால்,வாழ்க்கையின் இறுதிக் காலம் நோய் அவதியில்லாமல் வாழ்க்கையை கழிக்க முடியும்;அதுவும் தாமரை இலையின் பின்புறம் அன்னதானம் செய்வது மிகவும் அவசியம்;இந்த அன்னதானத்தைப் பெறுபவர்களும் இதே புண்ணியத்தைப் பெறுவார்கள்;

உலகமயமாக்கலினால் வாரம் தோறும் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது;அதே சமயம்,வருடம் ஒருமுறை தான் சம்பளம் அதிகரிக்கின்றது;இப்படிப் பட்ட சூழ்நிலையில் மனப்பூர்வமாகச் செய்யும் அன்னதானத்திற்கு எப்போதுமே பலன் உண்டு;


தாமரை இலையின் பின்புறம் அன்னம் வைத்து அன்னதானம் செய்யும் போது,இந்த அன்னதானத்தை பெறுபவர்கள்,இந்த தாமரை இலையைத் தொட்டு வாங்கும் கணத்தில் மனதுக்குள் “ஓம் அகத்தீசாய நமஹ” என்றும் “ஓம் அண்ணாமலையே போற்றி” என்றும் ஜபிக்க வேண்டும்;

இவ்வருடத்தில் வரும் விசாக நட்சத்திர நாட்கள் பட்டியலையும் தங்களுக்கு வழங்குகின்றோம்;

14.7.16 வியாழன் காலை 8.05 முதல் 15.7.16 வெள்ளி காலை 10.33 வரை
10.8.16 புதன் மதியம் 3.16 முதல் 11.8.16 வியாழன் மாலை 5.42 வரை
7.9.16 புதன்
4.10.16 செவ்வாய்
31.10.16 திங்கள் மதியம் 12.26 முதல் 1.11.16 செவ்வாய் மதியம் 2.58 வரை
28.11.16 திங்கள்
25.12.16 ஞாயிறு
21.1.17 சனி காலை 9.40 முதல் 22.1.17 ஞாயிறு மதியம் 12.12 வரை
18.2.17 சனி
17.3.17 வியாழன்
13.4.17 வியாழன்

இந்து தர்மக்கணக்கின் படி,ஒரு சூரிய உதயத்தில் இருந்து அடுத்த சூரிய உதயம் வரை தான் ஒரு நாள் என்று மதிப்பிடப்படுகின்றது;கிறிஸ்தவக் கணக்கின்படி(ஆங்கிலேயன் இந்தியாவைக் கொள்ளையடித்து அவனது முட்டாள்த்தனங்களை நம்மிடம் திணித்தப் பின்னர்,நள்ளிரவு 12 மணியோடு அடுத்த நாளின் துவக்கம் என்று நம்புகின்றோம்;இது தவறு;முறையற்றது)
விசாகம் நட்சத்திரம் முழு நாளில் இருப்பது ஒரு சில நாட்களில் மட்டுமே!

விசாகம் நட்சத்திரம் நிற்கும் நாளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாகவும்,மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 8 மணி முதல் 9 மணிக்குள்ளாகவும் விசாக நட்சத்திர அன்னதானம் செய்ய வேண்டும்;பல நாட்களில் மதியம் அல்லது மாலையில் தான் விசாகம் நட்சத்திரம் தோன்றுகின்றது;

உதாரணமாக,10.8.16 புதன் கிழமையன்று மதியம் 3.16க்கு விசாகம் நட்சத்திரம் உதயம் ஆகின்றது;எனவே,இந்த நாளில் இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும்,மறுநாள் 11.8.16 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்;மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலும் அன்னதானம் செய்ய வேண்டும்;


அவரவரின் பொருளாதாரச் சூழ்நிலையைப் பொறுத்து ஒருவேளைக்கு எத்தனை பேர்களுக்கு வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம்;ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்தும் செலவுகளைச் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டும் அன்னதானம் செய்யலாம்;

அன்னதானம் செய்யவும்;ஆரோக்கியமான இறுதி நாட்களாக வாழ்க!

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ