Tuesday, April 12, 2016

ஹரிஜன வாழ்க்கைக்கு தம்மை அர்ப்பணித்த பிராமணர்கள்!!!


சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் 42 க்கும் மேற்பட்ட பிராமண,ஐயர்,ஐயங்கார் குடும்பங்கள் ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட வரலாற்றை ஒரு புத்தகமாகவே தொகுத்து வெளியிட்டுள்ளனர்:அந்த புத்தகத்தின் பெயர்;தலித்துகளும் பிராமணர்களும்;எழுதியவர்: கே.சி.லட்சுமி நாராயணன்,மூத்த பத்திரிகையாளர்
கோபிச்செட்டிப்பாளையம் ஜி.எஸ்.லட்சுமண ஐயரின் தந்தை சீனுவாச ஐயர் மகாத்மா காந்திஜியின் கட்டளைப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை தமது இல்லத்திற்கு அழைத்து உபசரித்ததால் சாதிவிலக்கத்திற்கு ஆளானார்;(1940களில்)


லட்சுமண ஐயர் காந்திஜியின் நினைவாக ஹரிஜனசேவா நிலையத்திற்கு ஐந்தரை ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்தவர்;லட்சுமண ஐயரின் சொத்தாக 300 ஏக்கர் இருந்தது;லட்சுமண ஐயரின் மனைவி லட்சுமி அம்மாள் தனது கணவரின் தீண்டாமை ஒழிப்பு பணிக்கு துணை நின்று கோபி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக எட்டு ஏக்கர் என்று தொடங்கி சமூக நன்மைக்காக தங்கள் நிலங்களைக் கொடுத்துவிட்டு,வெறும் 25 ஏக்கர் மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்ட பெருந்தகையாளர்;


தஞ்சைமாவட்டம் அம்மாப்பேட்டை வேங்கடராம ஐயர்,தீண்டாமை ஒழிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு,தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல மாணவர்கள் கல்வி கற்கவும்,வாழ்க்கையில் முன்னேறவும் உதவியவர்;இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்;இவரை காமராஜரும்,ராஜாஜியும் பாராட்டியுள்ளனர்;


இவரைப் போன்றே எஸ்.என்.சோமையாஜீலு என்ற பிராமணர் சாதிக் கொள்கைக்கு சாவு மணி அடிப்பதே எனது கொள்கை என்று முழங்கியவர்;மனிதரில் பிறப்பினால் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் இல்லை என்று அவர் தேசிய மேடைகளில் முழங்கியவர்;தீண்டத்தகாதவர்களையும் கோவிலுக்குள் விடவேண்டுமென்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலயப் பிரவேசப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர் சோமையாஜீலு,


அதே போல் என்.எஸ்.வரதாச்சாரியார்;பெருமளவு வருமானம் தரக்கூடிய வக்கீல் தொழிலை விட்டுவிட்டு,சபர்மதி ஆஸ்ரமத்தில் பத்து ஆண்டுகள் தங்கி,விடுதலை இயக்கத்திற்காகவும்,தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரவும் அவர் தன்னை தியாகம் செய்து கொண்டவர்;
பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் ஹரிஜன மக்களின் ஒப்பற்ற பெருந்தலைவர்;தனது இளவயதில் ரமாபாய் என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டவர்;அந்த அம்மையார் நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு,தனிமையில் வாழ்ந்தார்;


ஓய்வே இல்லாத பொதுப்பணிகளின் விளைவாக,நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,அங்கே டாக்டர் சாரதா என்பவர் துணையாக இருந்தார்.அவர் தனது 56 வது வயதில் இந்த டாக்டர் சாரதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.அந்த டாக்டர் சாரதாவும் பிராமண வகுப்பில் பிறந்தவர்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்;


தீண்டத்தகாதவர்கள் என்று அலட்சியமாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு கோவிலுக்குள் நுழைந்த இறைவனை கும்பிடும் உரிமையை 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே மகிழ்ச்சியுடன் வழங்கிய ராமானுஜர் ஹரிஜன பெருமக்களின் உண்மையான நண்பர்;


கோவிலுக்குள் ஹரிஜனங்கள் செல்லலாம் என்று சட்டம் இயற்றி,கோவில்களை அவர்களுக்காக திறந்துவிட்டவர் சி.பி.ராமசாமி ஐயர்.


தீண்டத்தகாதவர் என்று கூறப்பட்ட ஒருவருக்கு அன்றைய சென்னை மாகாணத்தில் முதன் முதலாக மந்திரி அளித்த ராஜாஜி ஹரிஜனங்களின் உண்மையான நண்பர்;


தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு சிறுவனைத் தத்தெடுத்து,வளர்த்து ஆளாக்கி,உருவாக்கினவரும் உணவு விடுதிக்குள்ளே தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது என்று இருந்த காலத்தில்,ஹரிஜன ஓட்டல் பிரவேசத்தை நிகழ்த்திக் காட்டியவருமான பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் ஹரிஜனங்களின் உண்மையான நண்பர்;


மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதன் முதலில் ஹரிஜன மக்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேச நிகழ்ச்சியை நடத்திக்காட்டியவர் மதுரை ஏ.வைத்திய நாத ஐயர்;இந்தச் சம்பவம் நிகழ்ந்து 80 ஆண்டுகள் ஆகின்றன;


திரைப்படங்களில்  ஹரிஜன மக்களுக்காக பாடல்கள் எழுதிய பாபநாசம் சிவன்,கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் ஹரிஜனங்களின் நண்பர்கள்;


தலித் என்பது அரபுச்சொல்லாகும்;ஹரிஜன் என்பது நமது மொழிச்சொல்லாகும்;தலித் என்ற வார்த்தையை திரும்பத் திரும்பப் பயன்படுத்தி தேசிய அளவில் பிரபலப்படுத்தி,ஹரிஜன் என்ற வார்த்தையையே நம்மிடம் இருந்து மறைத்த கம்யூனிஸ்டுகள் ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்கு இதைத் தவிர வேறு ஏதாவது செய்தார்களா?



நன்றி:வார்த்தாளி விஜயம்,பக்கம் 11,12,13;வெளியீடு பிப்ரவரி 2016

முழு யோகம் தரும் கேது காலம்!!!


ராகு காலம் நம் அனைவருக்கும் தெரியும்;ராகு காலத்தில் எந்த ஒரு சுபகாரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாது;அப்படி ஆரம்பித்தால்,அது வெற்றியைத் தராது;என்பது பல நூற்றாண்டுகளாக  நிரூபிக்கப்பட்ட ஜோதிட+ஆன்மீக உண்மை;


அதேசமயம்,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றால் அல்லது ராகுவுடன் ஒரு கிரகம் இணைந்திருந்து அந்தக் கிரகத்தில் திசை நடைபெற்றால் அல்லது ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை/சுவாதி/சதயம் நட்சத்திரங்களில் ஒரு கிரகம் நின்று திசை நடத்தினால் அவர்களுக்கு ராகு காலம் மிகுந்த யோகம் தரும் காலம் ஆகும்;(அனுபவம் பேசுகிறது);திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கும்;சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கும்;சதயம் நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் யோக காலமாகவே இருக்கிறது;


சிலருக்கு இராகு முதல் 9 ஆண்டுகள் கெடுதியையும்,அடுத்த 9 ஆண்டுகளில் நன்மையையும் தருவதும் உண்டு;
ராகு மஹாதிசை பலருக்கு கோடீஸ்வர யோகத்தைத் தருகின்றது;அப்படி மகத்தான செல்வ வளம் வரும் போது,ஒரு போதும் அந்த ராகு மஹாதிசை நடைபெறும் நபரின் பெயரில் சொத்துக்கள் வாங்கக் கூடாது;மீறினால்,ராகு மஹாதிசையின் இறுதி மூன்று ஆண்டுகளில் அனைத்தையும் இழக்க வைப்பார்;


ராகுவுக்கு நேர் எதிர்க் கிரகம் கேது;
ராகு தனது மஹாதிசை 18 வருடங்களில் முதல் பாதியான 9 ஆண்டுகளில்  யோகங்களை அள்ளிக் கொடுப்பார்;அடுத்த பாதியான 9 ஆண்டுகளில் அந்த யோகங்களை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கவும் செய்வார்;அதனால் தான் ராகு கொடுத்துக் கெடுப்பார் என்ற ஜோதிட அனுபவ உபதேசம் நமக்குக் கிடைத்திருக்கிறது;


கேது தனது மஹாதிசை 7 வருடங்களில் முதல் பாதியான மூன்றரை ஆண்டுகளில் அது இருக்கும் இடத்தைக் கெடுப்பார்;பைத்தியம்,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லை அல்லது அனாவசியமான உயிர் பயத்தைத் தருவார்;அடுத்த மூன்றரை ஆண்டுகளில் அதற்கு எதிரான சூழ்நிலையைத் தருவார்;அதாவது,சித்தர் தொடர்பு,கோவில் வழிபாடு,இறைசக்தியின் அருளைப் பெறுதல்,ஞானமார்க்க ஈடுபாடு போன்றவைகளில் கொண்டு போய்விடுவார்;சிலருக்கு இது மாறியும் நடைபெறும்;முதல் மூன்றரை ஆண்டுகளுக்கு ஞான மார்க்க ஈடுபாடு,சித்தர்த் தொடர்பு என்று இருக்க வைத்துவிட்டு,அடுத்த மூன்றரை ஆண்டுகளில் பைத்தியமான மனநிலை,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லையைத் தருவதும் உண்டு;ஜோதிட அனுபவத்தில் கண்டறிந்தது இது;


கிழமைகள் 7! ஆனால் கிரகங்களோ 9!!
ராகுவுக்கும்,கேதுவுக்கும் கிழமைகள் இல்லை;அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒரு முகூர்த்தநேரம் வரை(90 நிமிடங்கள்) ராகு காலம் செயல்படுகின்றது;இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஜோதிட ஞானம் உள்ளவர்கள்,எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய மாட்டார்கள்;எப்படி ராகு விஷமான கிரகமோ,அதே போல ராகு காலமும் விஷத்தன்மை நிரம்பிய நேரமாக செயல்படுகின்றது;இந்த உண்மையை இந்துக்களாகிய நாம் கடந்த 20,00,000 ஆண்டுகளாக அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்;வெறும் 2016 ஆண்டுகள் வயதுடைய கிறிஸ்தவத்தால் இதைப் புரிந்து கொள்ள முடியுமா?


ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை

திங்கட்கிழமை ராகு காலம் காலை 7.30 முதல் 9 மணி வரை

செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை

புதன்கிழமை ராகு காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை

வியாழக்கிழமை ராகு காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை

வெள்ளிக்கிழமை ராகு காலை காலை 10.30 முதல் 12 மணி வரை

சனிக்கிழமை ராகு காலம் காலை 9 முதல் 10.30 மணி வரை
இதே போல,கேது காலம் என்று ஒன்று உண்டு;



கேது காலமும் ஒரு முகூர்த்தகாலம் வரை செயல்பட்டு வருகின்றது;ராகு காலம் முழு விஷ காலமாக இருப்பதால்,கேது காலம் முழு யோகம் தரும் மற்றும் சுபக்காரியங்களுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது;

ஞாயிற்றுக்கிழமை கேது காலம் இரவு 10.30 முதல் 12 மணி வரை
திங்கட்கிழமை கேது காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை
செவ்வாய்க்கிழமை கேது காலம் இரவு 9 முதல் 10.30 மணி வரை
புதன்கிழமை கேது காலம் மாலை 6 முதல் 7.30 மணி வரை
வியாழக்கிழமை கேது காலம் இரவு 7.30 முதல் 9 மணி வரை
வெள்ளிக்கிழமை கேது காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை
சனிக்கிழமை கேது காலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை

கேது ஒரு சுபக்கிரகம் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது;உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய கேது காலத்தைப் பயன்படுத்துங்கள்;சகல வெற்றிகளையும் அடையுங்கள்;

ராகு காலம் பிரபலமாக இருப்பதைப் போல,கேதுகாலமும் பிரமடையும் என்பதை தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவரும்,சித்த மருத்துவத்தின் தலைமை மருத்துவருமாகிய அகத்தியமகரிஷி தெரிவித்திருக்கின்றார்;

ராகு காலத்தில் இருந்து சரியாக 6 மணி நேரம் அதிகப்படுத்தினால் வருவது கேது காலம் என்பதை உணருங்கள்;

கேது காலத்தைக் கணித்து எழுதியவர்:திரு.எஸ்.எம்.நெப்போலியன்,ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம்;


நன்றி:பக்கம் 59,60;ஞானசிந்தாமணி,தாரண ,ஆடி 2004

Friday, April 8, 2016

கடன் தொல்லைகள் விலகிட பாட வேண்டிய பதிகம்!!


வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம் உடைக்கார் அமண் தேரரை
எய்தி வாது செயத் திரு உள்ளமே
மை திகழ் தரு மாமணி கண்டனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

மறை வழக்கம் இலாத மாபாவிகள்
பறிதலைக் கையர் பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திரு உள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்த ஆழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாது செயத் திரு உள்ளமே
முறித்த வாள் மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அந்தணாளர் புரியும் அருமறை
சிந்த செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத் திரு உள்ளமே
வெந்த நீறதணியும் விகிர்தனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அழலதோம்பும் அரு மறையோர் திறம்
விழலதென்னும் அருகா திறத்திறம்
கழல் வாது செயத் திரு உள்ளமே
தழல் இலங்கு திரு உருச் சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையு எம் ஆதியே

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாது செயத் திரு உள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

நீலமேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியது ஓர்
கோல மேனியதாகிய குன்றமே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்று வாது செயத் திரு உள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

கூடல் ஆலவாய்க் கோனை விடை கொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே


திருச்சிற்றம்பலம்

Thursday, April 7, 2016

குடிப்பதில் இருந்து மீள உதவும் இயற்கை உணவுக் கலவை


தினசரி காலையில்  10 வில்வ இலை;ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை;ஒரு கைப்பிடி அளவு மல்லித்தழை,கூடவே சிகப்பரிசி கழுவிய தண்ணீர் ஒரு லிட்டர்=இவைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்;

இதை மனைவிமார்கள் தங்களுடைய குடிகார கணவர்களுக்கு, மன்னிக்கவும்; மாண்புமிகு குடி நோயாளிகளான அவர்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிடக்  கொடுக்கவும்;

குடிப்பழக்கம் தானாகவே சில வாரங்களில் நின்றுவிடும்;நன்றி: திரு.மாறன் ஜி அவர்களின் சிற்பி வாழ்வியல் மையம்,சிவகாசி (இங்கே மாதம் தோறும் நடத்தப்படும் இயற்கை உணவுகள் பயிற்சி முகாமில் கிடைத்த உணவுக்குறிப்பு)


நாம் ஒவ்வொருவரும் ஏன் அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைய வேண்டும்?


ஏன் எனில்,நாம் மனிதப் பிறவி எடுத்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன;திரும்பத் திரும்ப இந்த பூமியில் பிறந்து கொண்டே இருக்கிறோம்;ஒரு பிறவியில் அதிகமான புண்ணியம் செய்தால்,அடுத்த பிறவியில் வசதியான,ஜாலியான வாழ்க்கை அமைகிறது;செல்வச் செழிப்பு வரும் போது கூடவே செல்வச் செருக்கு(பணத்திமிர்)ம் வந்துவிடுகிறது.எனவே,கண்டதற்கெல்லாம் ஆசைப்படுகிறோம்;ஆசை நிறைவேறாத பட்சத்தில் நாம் செய்யும் மூர்க்கமான செயல்கள் நமது பிறவிகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்திவிடுகின்றன;

ஒரு நடிகையைப் பார்த்து மோகம் கொண்டால் அவளை அனுபவிப்பதற்காகவே இன்னும் ஒரு பிறவி எடுக்க வேண்டியிருக்கிறது.நம்மை நினைத்து யாராவது ஏங்கிவிட்டால் அவர்களுடன் வாழ்வதற்காகவே அந்த ஒருவருக்காக நாம் இன்னும் ஒரு பிறவி அதிகமாக எடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த பிறவிச்சுழலை அறுத்து ஒரு போதும் பிறக்காமல் இருக்க சிவ வழிபாடு,பைரவ வழிபாடு,வராகி வழிபாடு என்று மூன்றுவிதமான வழிபாடுகள் இருக்கின்றன;

இதில் தொடர்ந்து மூன்று பிறவிகளாக சித்தரின் சீடராக இருந்திருந்தால் இப்பிறவியில் பைரவரை வழிபடத் துவங்குவோம்;அல்லது கடந்த மூன்று பிறவி முழுவதும் சிவ வழிபாடு செய்திருந்தால் இப்பிறவியில் பைரவ வழிபாட்டு முறைகள் நம்மைத் தேடி வரும்;இந்த சித்த ரகசியத்தை நமக்குத் தெரிவித்திருப்பவர் சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் ஆவார்;

தொடர்ந்து மூன்று பிறவிகள் முழுவதும் பைரவப் பெருமானைச் சரணடைந்தப் பின்னரே நமக்கு அன்னை அரசாலை(வராகி) என்பவள் யார்? என்றே அறிய முடியும்;

ஆமாம்!
இப்பிரபஞ்சத்தில் சக்தி ரூபமாக இருப்பவளும்,நம்மை கதி மோட்சம் கொடுப்பவளுமாக இருப்பவளே அன்னை அரசாலை என்ற வராகி!!

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை தாலுகாவில் மங்கள மகா காளியம்மன் என்ற பெயரில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலித்து வருகிறாள்;

காஞ்சிபுரத்துக்கும் அரக்கோணத்துக்கும் நடுவே பள்ளூர் என்ற கிராமத்தில் அரசாலை என்ற பெயரில் அருளாட்சி புரிந்து வருகிறாள்;

தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோவிலில் ப்ருகத் வராகி என்ற பெயரில் உலகத்தை ஆண்டு வருகிறாள்;

மதுரையில் மீனாட்சியாக அருள்புரிந்து வருகிறாள்;

திருச்சி திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாக அரசாண்டு வருகிறாள்;

காசியில் அன்னபூரணியாகவும்,விசாலாட்சியாகவும் நிர்வகிப்பதோடு,64 படித்துறைகளில் 64 வித பைரவப் பெருமான் களோடு 64 வித வராகிகளாகவும் இப்பூமியை ஆண்டு வருகிறாள்;

பணம்,செல்வ வளம்,ஆடம்பரம்,பூஜைப் பொருட்கள் மூலமாக இந்த அன்னையின் அருட்பார்வையைப் பெற முடியாது;

நியாயமற்றவர்களை பாரபட்சமின்றி தண்டிப்பதோடு தன்னைச் சரணடைந்தவர்களை பாதுகாப்பதில் இவளுக்கு நிகர் இவள் மட்டுமே!!!

ஒருபோதும் பிறருக்குத் தீங்கு தராமல்,பிறரின் நயவஞ்சகத்தால் பாதிக்கப்பட்டு,பிறரின் பொறாமைச் செயல்களால் துன்பப்பட்டு வேதனைப்படுபவர்களுக்கு உடனடியாக வரமும்,பாதுகாப்பும் அருள்பவள் இந்த பிரபஞ்ச அன்னை!!!

84,00,000 உயிரினங்கள் இந்த பூமியில் இருக்கின்றன;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் ஒவ்வொருவரும் பிறவி எடுத்தப் பின்னரே,இந்த மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம்;என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

மனிதப் பிறவி எடுத்ததில் இருந்து நம் ஒவ்வொருவரையும் ப்ராரப்த கர்மா,சஞ்சித கர்மா,ஆகாம்ய கர்மா என்ற க்ரியமாண கர்மா என்று மூன்று கர்மாக்கள் தான் நம்மை இயக்குகின்றன.


அன்னை மங்கள மகா காளியம்மன் என்ற அரசாலை(வராகி)யைச் சரணடைந்தால் இந்த மூன்று கர்ம்மாக்களையும் ஒரே மூச்சுக்காற்றினால் வீசித் தள்ளிவிடுவாள்;


அப்படி வீசித் தள்ளிவிட்டால்,நமக்கு இனி ஒரு பிறவி இந்த பூமியிலும்,எந்த பூமியிலும் கிடையாது;(பல பிரபஞ்சங்கள் உள்ளன;பல பூமிகள் உள்ளன;பல மனித இனங்கள் இருக்கின்றன;நாம் வாழும் பூமியில் தான் கோவில்,ஆன்மீகம்,தியானம்,தவம் இருக்கின்றது;நாம் வாழ்ந்து வரும் பூமியிலும் நமது பாரத நாட்டில் மட்டுமே இவைகள் அனைத்தும் இருக்கின்றன)ஆமாம்! முக்தியைப் பெற்றுவிடுவோம்;


எப்படி அன்னை மங்கள மகா காளியம்மன் என்ற அரசாலை(வராகி)யைச் சரணடைவது?

எப்படி அவள் மனதில் இடம் பிடிக்கும் விதமாக வழிபாடு செய்வது?

அதற்கு முன்பு இந்த மூன்று கர்மாக்களின் சுபாவங்களைப் புரிந்து கொள்வோம்;அப்போதுதான் இந்த அன்னையின் கருணையை உணர்ந்து கொள்ள முடியும்;

1.சஞ்சித கர்மா(கூட்டுவினை):நமது பல முற்பிறவிகளில் செய்த செயல்களால் நாம் சேர்த்து வ்ஐத்த ஒட்டுமொத்த கூட்டு கர்ம பலன்!
இப்பிறவியில் நாம் அடையும் உடல்,தோற்றம்,குணங்கள்,மன எழுச்சி,திறமை,ஆர்வம்,விருப்பம் ஆகியவை சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும்;
நமக்கு ஏற்படும் பல பிறவிகளில் ஒரே மாதிரியான உடலும்,தோற்றமும்,திறமையும் அமைவதில்லை;இவை அனைத்தும் இறைசக்தியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

2.ப்ராரப்த கர்மா(விதி வினை அல்லது விதிப்பலன் வினை):
நமது நிகழ்கால பிறவிக்கு காரணமான கர்மபலன்!இது சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும்;இதனைத் தவிர்க்க இயலாது.பெருமளவிற்கு மாற்ற இயலாது.இந்த கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்;இதைத்தான் நாம் விதி என்கிறோம்.இதில் நற்பலன்,தீயபலன் ஆகியன அடங்கும்.
நமது நிகழ்கால பிறவியில் நாம் அனுபவிக்கும் சுகபோகங்களும்,செல்வச் செழிப்பும்,நமது வெற்றியும்,சாதனைகளும் முற்பிறவியின் நற்செயல்களால் ஏற்பட்டவை;

நமது நிகழ்கால பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பமும்,துயரமும்,தோல்வியும் முற்பிறவியின் தீயச் செயல்களால் ஏற்பட்டவை.இதனை ஒவ்வொருவரின் ஜாதகமும் துல்லியமாகக் காண்பிக்கும்.இப்பிறவியில் ப்ராரப்த கர்ம பலனை முழுவதுமாக அனுபவித்து முடிந்ததும்,மனிதனின் வாழ்க்கை முடிவடைந்து மரணம் ஏற்படுகிறது.

இங்கே தான் எமது  ஜோதிட ஆலோசனை உங்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதலாக மாறுகிறது;(இதற்கு எமது 27 வருட ஜோதிட மற்றும் ஆன்மீக அனுபவம் உங்களுக்கு துல்லியமாக வழிகாட்டுகிறது)

இதன் மூலமாக தாங்கள் எந்த கடவுளை எப்படிக் கும்பிட வேண்டும்?

எவ்வளவு காலம் வழிபட வேண்டும்?

ஏன் அப்படி அந்தக் கடவுளை கும்பிட வேண்டும்? அல்லது உபாசனை செய்ய வேண்டும்? என்ற சரியான ஆலோசனை கிடைக்கிறது.இவைகளை முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றுவதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கை லட்சியத்தை அடைய முடியும்;ஆன்மீக இலக்குகளைச் சென்றடைய முடியும்;பிறவிகளின் லட்சியத்தை/லட்சியங்களையும் அடைய வழிகாட்டிட முடியும்.


முழுமுதற் பரமகுரு முத்துவடுகநாதர் ,சிங்கம்புணரி


சிங்கம்புணரி என்ற சிற்றூரில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தவர் திரு.முத்துவடுகநாதர்;

இவர் திருநிறை பூவலத்தேவருக்கும்,திருவளர் குமராயி அம்மைக்கும் மகனாக அல்ல;மகானாக கி.பி.1736 இல் அவதரித்தார்;

மன்னர் பரம்பரையில் அவதரித்தமையால்,உறவுகளிடையே போட்டியும்,பொறாமையும் உருவானது;எனவே,இவரை இவரது தாயார் குமராயி அம்மாள் அவர்கள் இவரை சிங்கம்புணரிக்கு ஒரே நாளில் அழைத்துவந்துவிட்டார்;இங்கே கி.பி.1833 வரை வாழ்ந்தார்;

இவர் செய்த அற்புதங்களை எழுதத் துவங்கினால் 100 லட்சம் பக்கங்கள் காணாது;

இவர் இங்கே திருமணம் செய்து,இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர்;இவரது வழித்தோன்றல்கள் இன்றும் இவரது ஜீவசமாதிக்குப் பூஜை செய்து வருகின்றனர்;

மங்கள மகாகாளியம்மன் என்று அழைக்கப்படும் ஆதிவராகியின் உபாசகராக வாழ்ந்து வந்த இவரை தொடர்ந்து வழிபட்டால்,அன்னை ஆதி வராகி(அரசாலை)யின் அருள் நமக்குக் கிட்டும்;

ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இங்கே தங்கி நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்ளலாம்;தொடர்ந்து 6 பவுர்ணமிகள் கலந்து கொண்டால் நமது நீண்டகால மாந்திரீகச் சிக்கல்கள்,கண்திருஷ்டி தீர்ந்துவிடும்;

தொடர்ந்து 3 பௌர்ணமிக்கு இங்கே வந்து பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால்,அன்னையின் அருளுக்குரிய சரியான குரு நமக்குக் கிட்டுவார்;

இவரை இப்பகுதியில் வாத்தியார் அய்யா என்று அன்போடும்,பாசத்தோடும் அழைக்கின்றனர்;


படத்தில் இருக்கும் இந்தப் படத்தை நமது செல்போன் வால்பேப்பராக வைத்துக் கொள்வோமே!


திறமைக்கு அங்கீகாரமும்,உழைப்புக்கு ஏற்ற மரியாதையும் தரும் அன்னை ஆதிவராகி வழிபாடு!


1960களுக்குப் பிறகு,தமிழ்நாட்டில் அறிவாளிகளுக்கும்,உழைப்பாளிகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா? கிடைப்பது படிப்படியாக குறையத் துவங்கியது;

அப்படிக் கிடைத்திருந்தால்,அவருக்கு ஸ்ட்ராங்கான ரெக்கமண்டேஷன் அல்லது தனிப்பெரும் செல்வாக்கு இருந்தால் மட்டுமே கிடைக்கும்;

இன்றைக்கோ இன்னும் பலவிதமான லாபிகள் உருவாக்கி வைத்திருந்தால் மட்டுமே திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது;உழைப்புக்கு ஏற்ற மரியாதையும் கிடைக்கிறது;

1990களில் குறுக்கு வழிகளில் பதவிக்கு வந்தார்கள்;

2000 களில் குறுக்கு வழிகளில் பதவிக்கு வந்தவர்கள்,தன்னைச் சுற்றிலும் அதே போன்ற அணியை உருவாக்கினார்கள்;

2010களில் இருந்து குறுக்கு வழிகளில் வருபவர்களை மட்டுமே அதிகாரத்தில் அமர வைத்தார்கள்;இதனால்,உழைப்பவர்கள் உரிய அங்கீகாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்;

10 ஆண்டுகள் என்று இல்லை;20 ஆண்டுகள்,30 ஆண்டுகளாக உழைத்த உழைப்பிற்கு உரிய மரியாதை இல்லாமல் கடுமையான மன உளைச்சலில் வாழ்ந்து வருபவர்கள் மிக அதிகம்;

அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் குறைந்த பட்சம் ஒராண்டு வரை;அதிக பட்சம் மூன்று ஆண்டுகள் வரை தினமும் அன்னை ஆதிவராகி என்ற அரசாலை என்ற வாராகியை வழிபடவேண்டும்;

வழிபட ஆரம்பித்த மூன்றாம் நாளில் இருந்தே அன்னை ஆதி வராகியின் சூட்சுமப் பாதுகாப்பு கிட்ட ஆரம்பிக்கும்;90 நாட்களுக்குப் பிறகு,அடுத்துக் கெடுப்பவர்கள் விலகிச் செல்ல ஆரம்பிப்பார்கள்;180 ஆம் நாளில் இருந்து இதுவரை இருந்து வந்த துரோகச் சுவர்கள் தகர்ந்துவிடும்;300 ஆம் நாளில் இருந்து உழைப்புக்கும்,திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிட்டும்;


நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு கட்டுப்பாடுகள் தான்;
1.அசைவம் சாப்பிடக் கூடாது;
2.இந்த அன்னை ஆதிவராகி என்ற அரசாலை வழிபாட்டை பரமரகசியமாக தினமும் பின்பற்ற வேண்டும்;(அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்க விரும்புவோர் அலுவலகத்தில் இது தொடர்பான எந்த ஒரு விவாதமும் வைத்துக் கொள்ளக் கூடாது;வீட்டில்/குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்க விரும்புவோர் வீட்டில் ரகசியம் காத்து வழிபடவேண்டும்)

இந்த இரண்டு விதிமுறையையும் பின்பற்றிக் கொண்டு, அன்னை ஆதி வராகியின் 12 பெயர்களை தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

ஒரு மாதம் ஆன பின்னர்,காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் தினமும் ஜபிக்க வேண்டும்;

மூன்றாம் மாதம் துவங்குவதற்கு முன்பு எம்மை ஒரு முறை நேரில் சந்திப்பது அவசியம்;


காலையில் 6 மணிக்குள்ளும்,மாலை 6 மணிக்குப் பிறகு இரவு 11 மணிக்குள் வரும் நேரத்தில் ஜபிப்பது நன்று;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நீ


இவைகள் தான் அந்த 12 பெயர்கள்!