Thursday, December 17, 2015

உங்களது நீண்ட கால வழக்கு தீர ஒரு சுலப வழி


பல ஆண்டுகளாக உங்களுக்கு வழக்கு இருக்கின்றதா? 

உங்கள் பக்கம் நியாயம் இருந்தும்,வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் தவிக்கிறீர்களா?

ஆம் எனில்,அந்த வழக்கு சில வாரங்களில் முடிவுக்கு வர இந்த சிவரகசியத்தைப் பின்பற்றுங்கள்;

இந்த மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்லுங்கள்;

மார்கழி 30 நாட்களில் ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது முதன் முதலாக சிவதரிசனம் செய்துவிட்டாலே போதும்.அந்த ஈசனின் அருளால் அடுத்த சில வாரங்களில் வழக்கு முடிவுக்கு வந்து,தீர்ப்பின் நகலே வாங்கிவிடலாம்;

சிவாலயத்தில் இருக்கும் போது,ஒரு மணி நேரம் வரை       ஓம் வராகி சிவசக்தி ஓம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;சிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு சன்னதியின் முன்பாகவும் இந்த மந்திரத்தை 27 அல்லது 108 முறை ஜபிக்க வேண்டும்;

கடந்த பல நூற்றாண்டுகளாக நமது தமிழ்நாட்டில் இந்த வழிமுறை மூலம் நீதி நிலைநாட்டப் பட்டிருக்கின்றது;

பின் குறிப்பு:ரகசியமான இந்த சுயபரிகாரத்தை அப்பாவி மற்றும் நேர்மையாளர்களின் நலனுக்காவே வெளியிடுகிறோம்;எனவே,இதை பிறரிடம் தெரிவிக்காமல் மட்டுமே பின்பற்ற வேண்டும்;இல்லாவிடில்,பலன் கிடைக்காது;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்! 

Monday, December 7, 2015

இராகு மஹாதிசை என்ன செய்யும்?


கலியுகம் என்றாலே துன்ப யுகம் தான்;(மூளையின் ரத்த அணுக்களில் இருந்து சூரியனும்,கண்கள் மற்றும் நிணநீரில் இருந்து சந்திரனும்,ரத்தத்தில் இருந்து செவ்வாயும்,எலும்பு மண்டலத்தில் இருந்து சனியும்,நரம்பு மண்டலத்தில் இருந்து புதனும்,இதயத்தில் இருந்து குருவும்,சுக்கிலத்தில் இருந்து சுக்கிரனும்,)ராகு நமது ஜனன உறுப்புக்களில் இருந்து நம்மை இயக்குகிறது;கலியுகத்தில் நம்மில் பலருக்கு 100 பேர்களில் 85 பேர்களுக்கு ராகு மஹாதிசையோ அல்லது ராகு சாரதிசையோ அல்லது ராகுவுடன் சேர்ந்திருக்கும் மஹாதிசைகளில் ஒன்றோ நடைபெற்றுக்கொண்டிருக்கிறது;

எல்லோருக்கும் ராகு காலம் விஷகாலம்! எந்த ஒரு சுபகாரியத்தையும் ராகு காலத்தில் துவக்க மாட்டார்கள்;ஆனால்,ராகு திசை நடப்பில் உள்ளவர்கள்,திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரங்களில் ஒன்றில்(லக்னமாக இருந்தாலும்,லக்னாதிபதி இந்த நட்சத்திரங்களில் நின்றாலும்) பிறந்தவர்களுக்கு ராகு காலமே யோககாலம்;ராகு காலத்தில் துவக்கப்படும் எந்த ஒரு முக்கியகாரியமாக இருந்தாலும் சரி;எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் சரி;வெற்றியைத் தரும்;

ஆங்கில மருந்துகள்,மல்டி லெவல் மார்கெட்டிங்,கமிஷன் கிடைக்கும் தொழில்கள்,விதவை,மனைவியைப் பிரிந்து வாழும் கணவன்,மனைவியை இழந்து வாழும் கணவன்,செயற்கைக்கொள்,விமானம்,செல்போன்,குறுந்தகவல்,
வாட்ஸ் அப்,முகனூல்,டுவிட்டர்,சாட் ரூம்,முறையற்ற உறவு,பொருந்தாத உறவு போன்றவை அனைத்தும் ராகுவின் கட்டுப்பாட்டில் வருகின்றன;

ராகுமஹாதிசை ஒருவருக்கு இப்பிறவியில் நிகழ்கிறது எனில்,அவர் முற்பிறவிகளில் பாம்புக்கு கெடுதி செய்துள்ளார் என்றுதான் அர்த்தம்;லக்னம் மற்றும் 7 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்று திசை நடத்தினால்,அவர் முற்பிறவிகளில் பாம்புகளில் ஜோடியாக வாழ்ந்தவைகளில் ஒன்றை மட்டும் கொன்றிருக்கிறார் என்று அர்த்தம்;

லக்னத்திற்கு 2 மற்றும் 8 ஆம் இடங்களில் ராகு,கேதுக்கள் இருக்கப் பிறந்து,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால்,அவர் முற்பிறப்புகளில் ஜோடியாக வாழ்ந்துவந்த பாம்புகளின் புற்றினை இடித்துத் தரைமட்டமாக்கியவர் என்று அர்த்தம்;

லக்னத்திற்கு 3 மற்றும் 9 ஆம் இடங்களில் ராகு,கேதுக்கள் இருக்கப் பிறந்து,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால்,அவர் முற்பிறப்புகளில் வயதான நாகங்கள் மற்றும் நாகக் குஞ்சுகளைக் கொன்றிருக்கிறார் என்பதையே தெரிவிக்கிறது;இதனால்,இவர் பித்ரு தோஷத்தினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்று அர்த்தம்;இத்துடன் சனியும்,செவ்வாயும் சேர்ந்திருந்தால் பாம்புப் பிடிப்பவராக இருந்து,பாம்புகள் வசிப்பிடத்தை தகர்த்தவர் என்று அர்த்தம் கொள்க;

லக்னத்திற்கு 4 மற்றும் 10 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் இருக்கப் பிறந்து,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால்,அவர் முற்பிறவிகளில் நாகங்கள் இரைதேட வரும்போது அவைகளை முடமாக்கவோ அல்லது கொல்லவோ செய்தவர் என்று அர்த்தம்.ஜோதிடவிதிப்படி,10 இல் ஒரு பாவியாவது நின்று திசை நடத்தினால் அவன் கோடீஸ்வரன் ஆவான்;ஆனால்,நேர்மையற்ற மற்றும் இழிவான வழிமுறைகளில் ஆக வைக்கும் என்பதை ஜோதிடர்கள் தான் சூழ்நிலை அறிந்து தெரிவிக்கவேண்டும்;இவ்விடங்களில் குரு பார்க்க,ராகு மஹாதிசை நடைபெற்றால்,செய்த தவறுகள் மற்றும் நாகங்களுக்குக் கெடுதி செய்தததை முற்பிறவியிலேயே உணர்ந்து,மனம் திருந்தி வாழவே இப்பிறவி எடுத்துள்ளார் என்று அர்த்தமாகும்;

லக்னத்துக்கு 5 மற்றும் 11 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் நின்று திசை நடத்தினால்,பிறர் மனத்தைப் படிக்கும் ஆற்றலுடன் பிறந்தவர் என்று அர்த்தம்;அதேசமயம்,முற்பிறவிகளில் நாகங்களை குடும்பத்துடன் அழித்தவர் என்று அர்த்தம்;கடுமையான பித்ரு தோஷத்துடன் வாழ்ந்து வருபவர்;பிறருக்கு உதவி செய்து,தனது முன்னேற்றத்திற்கு வழிதெரியாமல் திண்டாடுபவர் என்றும் அர்த்தமாகும்;

லக்னத்துக்கு 6 மற்றும் 12 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் நின்று திசை நடத்தினால்,முற்பிறவிகளில் நாகங்களுக்கு நன்மை செய்தவர் என்று அர்த்தம்;இது மட்டுமே சர்ப்பத்தால் தோஷமடையாத ஜாதகர் என்று அர்த்தம்;

ராகு மஹாதிசை நிகழும் போது,மிதமிஞ்சிய சிற்றின்ப ஆசையை ராகு பகவான் தூண்டிவிடுவார்;அதில் இருந்து மீள,அசைவம் சாப்பிடுவதைத் தவிர்த்து,தினமும் ஓம் வராகி சிவசக்தி ஒம் என்ற மந்திரத்தை காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபித்து வருவது அவசியம்;பிரபஞ்ச அன்னை வராகியின் அருள் கிடைத்துவிட்டால் எந்த ஒரு நவக்கிரகத்தின் தீய பாதிப்பு நம்மை நெருங்காது;

ராகு மஹாதிசைக்குப் பிறகு குரு மஹாதிசையும்,கேது மஹாதிசைக்குப் பிறகு சுக்கிரமஹாதிசையும் வருவதைப் போல காலமானது நிர்ணயம் செய்திருக்கின்றது;இதை உணர்ந்தவர்கள் பிறப்பின் ரகசியம்,இறைசக்தியின் ரகசியம்,தமது வாழ்க்கையின் ரகசியத்தை தாமே கண்டுபிடித்துவிடுவார்கள்:


ஓம் வராகி சிவசக்தி ஒம்

மேதைகளையும்,தன்னம்பிக்கையையும் உருவாக்கும் புத்தகவாசிப்புப் பழக்கம்!


புத்தகவாசிப்பு என்பது இலக்கு இல்லாத நெடும்பயணம்! நமது வாழ்க்கையில் நமது தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் சக்தி திரைப்படத்தைவிடவும்,டிவி சீரியலை விடவும்,விளம்பரப் படங்களை விடவும் புத்தக வாசிப்புக்கு மட்டுமே உண்டு;

கடந்த 200 நூற்றாண்டுகளாக நூல்களை(காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு 200 ஆண்டுகள் தான் ஆகின்றன;அதற்கு முன்பு ஓலைச்சுவடிகள்) வாசித்து வந்தமையால் தான் நமது முன்னோர்கள் அளவற்ற தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருந்தனர்;

மற்றவர்களின் அனுபவங்கள் நமக்கு வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ள கைகொடுக்கின்றன;சுயமுன்னேற்றம்,தன் வரலாறு,வரலாற்றுப் புராணங்கள்,நாவல்கள்,க்ரைம் நாவல்கள்,பயண வரலாற்று நூல்கள்,அரசுகள் உருவான வரலாறும்,வீழ்ச்சியடைந்த விதங்களையும் நாவல்களாகவும்,கதைகளாகவும் எழுதியுள்ளனர்;

இன்றைக்கு திரைப்பட இயக்குநர்கள்,டிவி சீரியல் இயக்குநர்களில் யாரெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றார்களோ அவர்கள் அனைவருமே புத்தக வாசிப்பின் மூலமாகவே இந்த புகழை எட்டினர்;

12 வயதில் புத்தகவாசிப்புக்கு நமது குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்;உதாரணமாக,சுட்டி விகடன் வாரம் இருமுறை வெளிவரும் இதழ்! அதை தொடர்ந்து வாங்கிவந்து நமது குழந்தைகளுக்கு வாசிக்கப் பழக்கப்படுத்த வேண்டும்;
எப்போது பார்த்தாலும் டிவி பார்ப்பதையும்,செல்போனை நோண்டுவதையும் தடுத்து,எப்போது பார்த்தாலும் புத்தகம் வாசிப்பதைப் பழக்கப்படுத்திடவேண்டும்;

15 வயது முதல் 20 வயது வரை இருக்கும் மகனை அடிக்கடி ஆனந்த விகடன்,கலைமகள்,கல்கி,கல்கண்டு முதலிய பருவ இதழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்தவேண்டும்;புத்தகம் வாங்கிட வசதி இல்லாதவர்கள் அருகில் இருக்கும் அரசு நூலகத்திற்கு நமது மகனை அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்துக்கு அடிமைப்படுத்துவது அவசியம்;

மேதைத்தனம் என்பது ஒரே நாளில் வருவதில்லை;படிப்படியாக உருவாக்கப்படுவது!
போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் வெறும் டிப்ளமோ அல்லது டிகிரி அல்லது பி.ஈ., அல்லது பி,டெக்.,படித்தால் மட்டும் வேலை கிடைத்துவிடாது;

ஒருவேளை கிடைத்தாலும் அதைத் தக்க வைக்கும் சாமர்த்தியம் இல்லாவிடில்,லோக்கல் வேலைக்கு(படித்த படிப்பிற்கு சிறிதும் பொருந்தாத)த்தான் செல்ல வேண்டியிருக்கும்;இதை மாற்றிட நமது குழந்தையின் 12 வயது முதல் 21 வயது வரை படிப்படியாக படிப்பு மற்றும் பொது அறிவு சார்ந்த மேதையாக மாற்றிடவேண்டும்;

பயம் உள்ள மகனை அடிக்கடி கபடி விளையாட அனுப்புவதன் மூலம் துணிச்சல் உள்ளவனாக மாற்றிவிடலாம்;இந்தக் கருத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் யாராவது நிச்சயமாக மனோதத்துவ முனைவர் பட்டம் பெறுவர் என்பது உறுதி!

அப்பா அல்லது அம்மாவாக இருப்பவர்கள் தமது மகனை/ளை தமது நிராசைகளைத் திணித்து வளர்ப்பது மகத்தான முட்டாள்த்தனம்;ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும் போதே சில தனித்தன்மைகள் இருக்கும்;அதற்கு உரிய துறையில் வளர்த்தால் 30 வயதிற்குள் உலகச்சாதனைகள் புரிவது உறுதி;செமத்தியாக சம்பாதிக்கப் போவதும் நிச்சயம்;


மேற்கு நாட்டின் பழக்கத்துக்கு அடிமையாகும் அறிவாளித் தமிழினம். . .

அகோரப்பசியுடன் ஹோட்டலுக்குச் சென்றவுடன் சூப்பை ஆர்டர் செய்து,அதில் பெப்பரைப் போட்டு கொதிக்க கொதிக்க குடிக்கிறார்கள் வீரத்தமிழர்கள்!

இந்தப் பழக்கம் மேற்கத்திய நாடுகளின் குளிர்ப்பிரதேசங்களில்,இரவு நேரம் கடந்தும் வியாபாரம் பேசிக்கொண்டிருக்கும் போது பசியைத் தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது;

ஆனால்,நாம் ஏற்கனவே கொலைப்பசியில் இருக்கும் போது சூப்பைக் குடித்தால் கண்டிப்பாக கேஸ்டிக் அல்சர் உண்டு;
எது நமக்குத் தேவையான உணவு என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்;

எதெற்கெடுத்தாலும் மேற்கு நாடுகளின் பழக்க வழக்கங்களை(டிவி பார்த்தோ,ஹாலிவுட் படங்கள் பார்த்தோ) காப்பியடித்து நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது;


உடல் ஆரோக்கியம் பற்றிய அடிப்படையான உண்மைகள் இன்று டிவி விளம்பரங்களில் இல்லை;ஆரோக்கிய விழிப்புணர்வுக் கட்டுரைகளில் இல்லை;இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்களில் மட்டுமே இருக்கின்றன;வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு,இம்மாதிரியான முகாம்களில் கலந்து கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியம் பற்றிய முழு விழிப்புணர்வைப் பெற நம்மால் முடியும்;

இந்து என்ற உணர்வு இல்லாமையால் நாம் அனுபவிக்கும் அவஸ்தைகள்!!!


1700 வரை முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரையிலும் உலகின் பணக்கார நாடுகளாகவும்,வல்லரசு நாடுகளாகவும் இருந்தவை நமது பாரத தேசமும்,நமது பங்காளி சீனாவும் தான்;ஒவ்வொரு 300 ஆண்டுகள் வரையிலும் உலகின் முதல் பணக்கார நாடாகவும்,உலகின் முதல் வல்லரசு நாடாகவும் பாரதமாகிய நாமும்,இரண்டாவது பணக்கார நாடாகவும்,உலகின் இரண்டாவது வல்லரசு நாடாகவும் சீனாவும் இருந்திருக்கின்றன;அடுத்த 300 ஆண்டுகள் வரையிலும் சீனா முதலிடத்திலும்,பாரதமாகிய நாம் இரண்டாமிடத்திலும் இருந்துள்ளோம்;இந்த உண்மையை உலக பொருளாதார ஆவணங்களை ஆராய்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது;அந்த புத்தகத்தின் பெயர்;The Rising and Falling of Great Powers.

மீண்டும் சீனாவும்,பாரதம் என்று அழைக்கப்படும் இந்தியாவும் உலக வல்லரசாக ஆகிவிடக்கூடாது என்பதில் மேற்கு நாடுகள் பலவிதமான சதித்திட்டங்களை கடந்த 400 ஆண்டுகளாக செயல்படுத்திவந்துள்ளன;அவைகளில் ஒன்றுதான் மதமாற்றம்;

நமது நாட்டின் முதல் பிரதமராக ஒரு நாத்திகவாதியை ஆக்கியதில் பிரிட்டனின் நயவஞ்சசகம் ஜெயித்தது;இந்தியா பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரித்த பின்னரும்,சுமாராக 18 மாதங்கள் இரு நாட்டு ராணுவத்திற்கும் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார் தெரியுமா?

மவுண்ட்பேட்டன் தான்;உலக வரலாற்றில் மிகப் பெரிய துரோகத்தை நமது நாடு அப்போது சந்தித்தது;இரு நாட்டு ராணுவத்திற்கும் ராணுவ ஜெனரலாக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செய்த சதிகளை இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவருமே வாசித்தால் ரத்தம் கொதிக்கும்;

இந்த சதிகளைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலும் மறு பிரசுரம் ஆகவில்லை என்பதுதான் சோகம்;இதனால்,இவைகள் மாவட்ட நூலகங்களிலும்,பழைய புத்தகக் கடைகளிலும் மட்டுமே தேட முடியும்;தேடிப் பார்த்துப் வாசித்தால்,தேசபக்தியும் வளரும்;தன்னம்பிக்கையும் வளரும்;

1.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்=எழுதியவர் விநாயக தாமோதர சாவர்க்கர்;
2.தேசப்பிரிவினையின் சோக வரலாறு=ஹெ.வே.சேஷாத்திரி
3.வந்தார்கள்,வென்றார்கள்=மதன்(விகடன் பிரசுரம் வெளியீடு)
4.மறைந்திருக்கும் உண்மைகள்=ஓஷோ
5.நான் நேசிக்கும் இந்தியா=ஓஷோ
6.பாரத நாட்டின் விஞ்ஞானச் சாதனைகள்=சக்தி புத்தக நிலையம்(ஆங்கிலத்தில் 10 பாகங்களாக வெளிவந்துள்ளன;விலை ரூ.15,000/-தான்)
7.கோட்சேயின் வாக்குமூலம் =தமிழ் மொழிபெயர்ப்பு
8.வால்கா முதல் கங்கை வரை
9.நள்ளிரவில் சுதந்திரம்=அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியீடு
10.Lectures from Columbo to Almora=Swami Vivekananada(Sri Ramakrishna Mission ,Chennai)
11.சுவாமி விவேகானந்தரின் வாழ்கை வரலாறு=ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வெளியீடு,சென்னை
12.ஸ்ரீரங்கன் உலா
13.சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்
14.குருஜியின் ஞான கங்கை 3 பாகங்கள்
15.வானம் வசப்படும்=பிரபஞ்சன் எழுதிய நாவல்
16.ஓம் சக்தியும், அணு சக்தியும்
17.திராவிடத்தால் வீழ்ந்தோம்?
18.ஆனந்தரங்கப்பிள்ளை டைரிக்குறிப்புகள்
19.இஸ்ரேலின் வீர உதயம்
20.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்=மறைக்கப்பட்ட தேசவிடுதலைப் போராட்டவீரரின் வாழ்க்கை வரலாறு
21.சாவர்க்கரின் கடிதங்கள்
22.இந்து மகாசபை தோன்றிய வரலாறு
23.உப்பு வேலி=(ஆங்கிலேயன் இந்தியாவில் செய்த சுரண்டலை ஒரு ஆங்கிலேயனே எழுதிய உண்மைக் கதை;பிப்ரவரி 2015 இல் தமிழில் வெளிவந்திருக்கிறது)
24.மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரலாறு
25.தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தமிழ் அடிமைகள்
26.கலாபானி
27.வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு

இன்று,120 கோடி பேர்களாக நாம் இந்தியர்களாக வாழ்ந்து வருகிறோம்;இதில் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இந்தியாவை,இந்தியாவின் பாரம்பரியத்தை மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அதே சமயம்,பெரும்பாலான இந்துக்களுக்கு பக்தி உணர்வே இல்லாமல் செய்வதற்கு கடந்த 300 ஆண்டுகளில் பல கோடி ரூபாய்கள் நமது நாட்டுக்கு சட்டவிரோதமாக வந்து,அவைகள் நாத்திகப் பிரச்சாரமாக செலவாகியிருக்கின்றன;ஜாதிக்கட்சிகளை உருவாக்கவும்,வளர்க்கவும் செலவாகியிருக்கின்றன;ஜனநாயகம்,மனித நேயம் என்ற முகமூடியில் இந்து தர்மத்தின் 20,00,000 ஆண்டுகால பெருமைகளை சீரழிக்க செலவாகிக் கொண்டே இருக்கின்றன;இவைகளை நாம் தட்டிக்கேட்காமைக்குக் காரணம்,90% இந்துக்குடும்பங்கள் தினசரி உழைத்தால் தான் ஒரு வேளை சோறாவது சாப்பிடமுடியும் என்ற அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டன;

7 வயதுக்குள் நமது குழந்தையை மாதம் ஒருநாள்(ஞாயிற்றுக்கிழமையே போதும்) நமது ஊரில் இருக்கும் பழமையான ஆலயத்துக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு பக்தி உணர்வு உருவாகும்;

15 வயது முதல் 25 வயது வரை நமது மகனையும்,மகளையும் ஆன்மீக பயிற்சி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்;
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதி 7 நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பண்புப்பயிற்சி முகாம்கள் நடைபெற்றுவருகின்றன;அவைகளுக்கு அவசியம் நமது மகன் களை அனுப்ப வேண்டும்;

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்,மே மாதத்தில் 30 நாட்கள் தமிழ்நாட்டில் இதே பண்புப்பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன;அவைகளுக்கும் நமது மகன் களை கண்டிப்பாக அனுப்ப வேண்டும்;இப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அனுப்பினால்,அதன் பிறகு,நமது மகன் நமது இந்து தர்மம் பற்றிய முழு அறிவைப் பெறும் கண்ணோட்டத்தைப் பெற்றுவிடுவான்;எதற்கெடுத்தாலும் பயப்படும் குணம் அவனை விட்டு ஓடிவிடும்;எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவனுக்கு கைகூடிவிடும்;

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பெண்களுக்கு மட்டும் 21 நாட்கள் பண்புப் பயிற்சி முகாம்கள் நடைபெற்றுவருகின்றது;என்ன கஷ்டம் வந்தாலும் சரி! எந்த தியாகம் செய்தாவது தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நமது மகள்கள் 15 வயது அடைந்தது முதல் 18 வயது வரை இந்த முகாம்களுக்கு அனுப்பியே ஆக வேண்டும்;
இந்த மூன்று ஆண்டுகள் வாழ்நாளில் முக்கிய தருணங்கள்;இந்த காலகட்டத்தில் இந்த பண்புப் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பிவிட்டால் போதும்;அதன் பிறகு,இந்த உலகில் சுயமாக சிந்திக்க,செயல்பட,எதையும் எதிர்கொள்ளும் இந்து உணர்வும்,தன்னம்பிக்கையும் கைகூடிவிடும்;

19 வயது முதல் 25 வயது வரை ஆளுமைத் திறன் மேம்பாடும்,ஆழ்மனதின் சக்தியைப் பயன்படுத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம்,சுதேசி விழிப்புணர்வுக்  கருத்தரங்கு,இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்கள் இவைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அனுப்ப வேண்டும்;

25 வயது முதல் வாழ்நாள் முழுவதும் நமது மகனும்,மகளும் சகலகலா வல்லியாகத் திகழுவார்கள்;

இதை எடுத்துச் சொல்ல இன்று ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் யாராவது இருக்கிறார்களா?

10 ஆம் வகுப்பிற்குப் பிறகு, அதிக சம்பளம் கிடைக்கும் படிப்பிற்கு நமது மகனையும்,மகளையும் சேர்க்க பணத்தை வாரி இறைக்கிறோம்;யார் யாரையோ பிடித்து சிறந்த கல்லூரியில் சேர்க்கிறோம்;

ஆனால்,நமது மகன்,மகளின் ஆளுமைத் திறனை உருவாக்குவதில் அக்கறை காட்டுகிறோமா?
கிறிஸ்தவர்கள் இந்தியா முழுக்க என்ன செய்கிறார்கள் தெரியுமா?
ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் கோடைகால இளைஞர்கள் முகாம்,கோடை கால இளம் பெண்கள் முகாம் என்று நடத்தி வருகின்றனர்;இதன் மூலமாக தமது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமது மதம் பற்றிய விழிப்புணர்வை டீன் ஏஜ்ஜிலேயே பதிய வைத்துவிடுகின்றனர்;

நாம் பக்தி உணர்வை உருவாக்கவே முயற்சி செய்வதில்லை;
1960களில் உருவான நாத்திகப் பிரச்சாரத்தினால் சிவனையும்,விஷ்ணுவையும் கடந்த 20,00,000 ஆண்டுகளாக சரணடைந்திருந்த நமது தமிழ் இனம் இன்று கடவுளை நம்பாத கட்சியின் அடிமைகளாக இருக்கின்றனர்;அவர்களோ,சரியான நேரத்தில் சரியான பரிகாரம்,பூஜை,முயக்கம் செய்து மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர்;நாத்திகவாதிகளை கோவில் அறங்காவலர்களாக ஆக்கி கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்க வைத்துவிட்டனர்;கோவில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன;

கடந்த 300 ஆண்டுகளாக ஆங்கிலேயன் என்ற கிறிஸ்தவனும்,கடந்த 30 வருட நாத்திகப்பிரச்சாரமும் நமது இந்து தர்மத்தை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத்தியிருக்கின்றன என்பதை அறியாமல் நாம் தன்னம்பிக்கை பெற முடியாது;
இந்து என்ற உணர்வு பெறாததால் தான் பிரிட்டனால்,இந்தியாவை மத ரீதியாகப் பிரித்து பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிட முடிந்தது;1930 முதல் இந்துக்களுக்கும்,முஸ்லீம்களுக்கும் இடையே மத மோதலை உருவாக்கிட முடிந்தது;

சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி வராகி அன்னை வழிபாட்டையும்,வைஷ்ண சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி லக்ஷ்மீ நரசிம்மர் வழிபாட்டையும் பின்பற்றாமல் போனதுதான் இந்தியாவுக்கும்,இந்து தர்மத்துக்கும் எதிரான சக்திகள் இந்தியாவுக்குள் பேயாட்டம் ஆட ஆன்மீகக் காரணமாக இருக்கின்றன;

பெருகும் இந்துக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப,சைவ ஆதினங்கள்,வைஷ்ணவ சங்கோஷ்டிகள் தமது தினசரி பிரச்சாரத்தை விரிவுபடுத்தாமையும் ஒரு முக்கியக் காரணம்;

இந்து என்ற உணர்வு பெறாததால் தான்,இன்று இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழ்ந்து வரும் ஊரில் கிறிஸ்தவர்கள் பள்ளி,கல்லூரி நடத்தவும் முடிகிறது;அங்கே படிக்கும் இந்து மாணவ,மாணவிகளின் இந்து மரபுகளை மிரட்டித் தடுக்க முடிந்திருக்கிறது;(சபரி மலைக்கு மாலை போடுவதை தடுத்தல்,பொட்டு வைப்பதை நையாண்டி செய்தல்,பூ வைத்து வருவதை மிரட்டித் தடுத்தல்=ஓ! அன்பைப் போதிக்கும் ஏசு கிறிஸ்து இதைத்தான் செய்யச் சொன்னார் போலும்?)
நாமோ இதை ஒரு பிரச்சினையாக,அவமானமாக,கவுரவக் குறைச்சலாக எடுத்துக் கொள்கிறோமா?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆர்டர் கேட்டு தொழில்முறை பயணம் செல்லும் இந்துத்தொழிலதிபர்களை,கிறிஸ்தவத்திற்கு மாறினால் உங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் ஆர்டர் தருகிறேன் என்று கிறிஸ்தவ நாட்டு நிறுவனங்கள் தந்திரமாக மிரட்டுகின்றன;
அந்த 3 ஆண்டுகள் முடிந்ததும்,உங்கள் நிறுவனங்களில் கிறிஸ்தவர்களை மட்டும் வேலைக்கு அமர்த்தினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆர்டர் தருகிறேன் என்று அடுத்த கட்டமாக முன்னேறுகின்றன;
கடந்த 300 ஆண்டுகளாக நமது இந்து தர்மத்துக்கு எதிராக செய்த சதிகளில் மொத்த விளைவுகளால் நாம் இன்று ,நம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னாடி பேய் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்;


நாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள் எனது இந்து சகோதர,சகோதரிகளே. . .




தரித்திரத்தை நிரந்தரமாக அழிக்கும் அரசாலை(வராகி) மந்திரம்!!!!


நம்மில் பலருக்கு நிரந்தரமாக வேலை கிடைக்கின்றதா?(ஜன்மச்சனி நடைபெறும் போது நிரந்தரவேலை கிடைத்தால் அது மகத்தான அதிஷ்டமே!)

பலருக்கு தினமும் மூன்று வேளையும் சாப்பிடத் தேவையான அளவுக்கு வருமானம் வருகிறதா?(சுமாராக 75% பேர்களுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை)

நம்மில் எத்தனை பேர்கள் தினமும் ஒருமுறையாவது சிரிக்கிறோம்?

நம்மில் பலர் எத்தனை பேர்கள் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது தேவையற்ற இம்சைகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்? ஏதாவது ஒன்று நம்மைத் துரத்துகிறதா? இவை அனைத்தும் ஒவ்வொருவரின் கர்மவினைகளின் தொகுப்பே!

இதில் இருந்து மீள்வதற்கு இரண்டு சுயக் கட்டுப்பாட்டுடன் பின்வரும் மந்திரத்தை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் (காலையில் 30 நிமிடம்,இரவில் 30 நிமிடம்) வீதம் ஓராண்டு வரை ஜபித்துவர வேண்டும்;(வாய்விட்டுச் சொல்லக் கூடாது)

1.அசைவம் சாப்பிடவே கூடாது;
2.இந்த மந்திர ஜபத்தை பரமரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்;
3.10 வயதில் இருந்து 100 வயதுவரை யார் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;

இந்த ஒராண்டில் பெரும்பாலான நாட்களில் அருகில் இருக்கும் பழமையான சிவாலயம்,அம்மன் ஆலயம்,விஷ்ணு ஆலயத்தில் இந்த மந்திரத்தை ஜபிப்பது விரைவான பலன் தரும்;

தரித்திரம் என்பது வேலையின்மை,நிரந்தரவேலையின்மை,சீரான வருமானம் இல்லாமை,உறவினர்கள் மதியாமல் இருப்பது,எல்லோரும் தப்பாக நினைப்பது,பழகியவர்கள் ஏமாற்றிவிடுவது,பழகிய பின்னர் அவதூறாகப் பேசுவது,எப்போதும் கடனை அடைக்கவே உழைப்பது,எப்போதும் கொடுத்த கடனை வாங்க முடியாமல் தவிப்பது;அல்லது நமது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பல ஆண்டுகள் காக்க வைப்பது;

பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணை அல்லது மகன்/ள் ஏமாற்றிவிடுவது போன்றவைகள் ஆகும்;

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹிதேவியை நமஹ
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நமஹ
மமாத்ரே வாராஹி தேவி
மமதாரித்திரியம் த்வம்ஸய த்வம்ஸய


இப்படிக்கு எனது தமிழ்சகோதர,சகோதரிகள் அனைவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டி,சுகமாக வாழ வேண்டும் என்று விரும்பும் ஜோதிட மஹாமுனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990

ராகுகேதுப் பெயர்ச்சியும் அன்னை அரசாலை(வராகி) வழிபாடும்!


8.1.2016 அன்று கன்னிராசியில் இருந்து சிம்மராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார்;அதே நாளில் மீன ராசியில் இருக்கும் கேதுபகவான்,கும்பராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்;
இதனால் எந்த எந்த ராசிக்கு என்னென்ன பலன் கள் ஏற்பட இருக்கின்றன? என்பதை புத்தகங்களிலும்,வார இதழ்களிலும்,இணையத்திலும் எமது ஜோதிட உடன்பிறப்புகள் எழுதி குவித்துவருகிறார்கள்;அவைகளில் தங்களுக்கு விருப்பமானவைகளை தாங்களே வாசித்து அறிந்து கொள்ளுங்கள்;

நமது ஜாதகப்படி நாம் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சரி;நமது வாழ்க்கையில் வர இருக்கும் கஷ்டங்களையும்,அவமானங்களையும் பக்தியால் தடுத்து நிறுத்திவிடமுடியும்;

சிம்மத்திற்கு ராகு பெயர்ச்சி ஆகி,சிம்மத்தைக் கடக்க 18 மாதங்கள் எடுத்துக் கொள்வார்;அதேபோல,கும்பத்திற்கு கேது பெயர்ச்சி ஆகி ,கும்பத்தைக் கடக்க 18 மாதங்கள் எடுத்துக் கொள்வார்;

இதில் அதிகமான பாதிப்பு கடகராசிக்கும்,சிம்மராசிக்கும் அடுத்த 18 மாதங்களில்-1.5 ஆண்டுகளுக்கு (8.1.16 முதல்) ஏற்பட இருக்கின்றது;அது என்ன பாதிப்பு?

ராகு பகவானே நமது அவமானத்தை ஏற்படுத்தும் காரகத்துக் கிரகம்!
கண் இமைக்கும்  நேரத்திற்குள் அவமானத்தைத் தருவதில் ராகு பகவானை மிஞ்ச யாராலும் முடியாது;அதே போல,திடீர் என்று பெரிய புகழை அள்ளித் தருவதிலும் ராகுவுக்கு நிகர் ராகுவே!

கடகராசி(புனர்பூசம் 4 ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்கள்)யில் பிறந்தவர்கள் விளையாட்டாகப் பேசுவதை பிறர் இந்த 1.5 வருடத்தில் ஒருமுறையாவது தவறாக எடுத்துக் கொண்டு இவர்களை அவமானப்படுத்துவார்கள்;எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும்! மே 2016 குருப்பெயர்ச்சி ஆனப் பின்னரே இந்த சம்பவம் நிகழும்;

சிம்மராசி(மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம்) இந்த 1.5 வருடத்தில் ஒருமுறையாவது காவல் நிலையம் செல்லக் கூடிய சூழ்நிலை உருவாகும்;அல்லது மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பேய் பிடிக்கும் சூழ்நிலை உருவாகும்;மே 2016க்கு முன்பு உருவாக வாய்ப்புகள் அதிகம்;
இவையெல்லாம் அனுபவ ஜோதிடப் பலனே! இதில் இருந்து மீள ஒரே வழி:- ஒரு பக்தி மார்க்கம் உள்ளது;

அதுதான் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு,அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவதே!

இவரும் ப்ளாக் மெயில் பண்ணி,இப்படி அன்னை அரசாலை(வராகி) வழிபாட்டை பரப்புகிறாரோ? என்று எண்ண வேண்டாம்;அது எமது சுபாவம் அல்ல;நான் அப்படிப்பட்ட ஆளும் அல்ல;எமது எழுத்துக்களின் மீது மதிப்பு கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான் இந்த கட்டுரையை உங்களுக்கு வழங்குகிறோம்;

8.1.2016 முதல் 1.5 வருடங்களுக்கு சிம்மராசி,கடகராசிக்காரர்கள் செய்ய வேண்டியது என்ன?

(அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு)தினமும் உங்களுடைய இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்;அருகில் அம்மன் கோவில் இல்லாவிடில் பழமையான சிவாலயம் செல்ல வேண்டும்;

அங்கே அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

இருவேளையும் கோவிலுக்குச் செல்ல முடியாவிடில்,ஒருவேளையாவது(காலையாக இருந்தாலும் சரி;இரவாக இருந்தாலும் சரி;உங்கள் வசதிப்படி!)
சென்று மூலவர் சன்னதி முன்பாக 15 நிமிடமும்,அம்பாள் சன்னதி முன்பாக 15 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

அம்மன் கோவில் எனில்,அம்மன் சன்னதி முன்பாக அமர்ந்து கொண்டு அல்லது நின்று கொண்டு 30 நிமிடம் ஜபித்து வரவேண்டும்;

12 பெயர்களும் மனப்பாடம் ஆனப் பின்னர்,எப்போதும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்;(பேசும் நேரம் & தூங்கும் நேரம் தவிர)இது மட்டுமே வரவேண்டிய அவமானத்தில் இருந்து மீள வழி!


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

18 வயதைவிடக் குறைவான கடகராசி மற்றும் சிம்மராசிக்காரர்களும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;முறைப்படி தீட்சை வாங்கவேண்டிய அவசியம் இல்லை;வாய்விட்டு சொல்லக் கூடாது;மனதிற்குள் ஜபிக்கலாம்;


சிலருக்கு மனதுக்குள் ஜபிக்கும் திறன் இருக்காது;அவர்கள் தினமும்  ஓம் வராகி சிவசக்தி ஓம் என்ற மந்திரத்தை 108 முறை எழுதி வரலாம்.