Friday, October 16, 2015

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்;இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்;(இதுதான் நமது பாரதத்தின் பண்பாடு)


ஸ்ரீலஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய துக்க நிவாரண அஷ்டகம்


மங்கள ரூபிணி மதியணி சூலினி
   மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
   சங்கரி செளந்தரியே
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்
   கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                      1

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக்
   காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தாரிரொளி மதியொளி
   தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள்
   மாலைகள் சூடிடுவாள்
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                     2


சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச்
   சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
   பொருந்திட வந்தவளே
எங்குலம் தழைத்திட எழில்வடி வுடனே
   எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                     3


தணதண தந்தண தவிலொலி முழங்கிடத்
    தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர் ஒளி வீசிடக்
    கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப்
    பண்மணி நீ  வருவாய்
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாட்சி                   4


பஞ்சமி பைரவி பர்வத புத்ரி
   பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
   கொடுத்தநல் குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்
   சக்தியெனும் மாயே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                   5


எண்ணிய படி நீ யருளிட வருவாய்
   எங்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
   பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
   கவலைகள் தீர்ப்பவளே
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி  காமாட்சி                 6


இடர்தரும் தொல்லை இனிமேல் இல்லை
    யென்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச்
   சுகமதைத் தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
   பழவினை ஒட்டிடுவாய்
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                 7

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி
   ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
   ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
   ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
   துக்க நிவாரணி காமாட்சி                 8


தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் இந்த துக்க நிவாரண அஷ்டகத்தைப் பாட வேண்டும்;இப்படி 90 நாட்கள் பாடிவர நமது அனைத்து சோகங்களும் நம்மை விட்டு அகன்றுவிடும்;(அசைவம் இந்த நாட்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்);



இந்த 90 நாட்களும் இரவில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்தில்(பழமையான சிவாலயம் எனில்,அங்கே இருக்கும் அம்மன் சன்னதியில்) பாடி வர ஏழு தலைமுறையாக இருந்து வரும் சோகங்களும்,கர்மவினைகளும் தீர்ந்து,மன நிம்மதியும்,அன்னை பராசக்தியின் அருளும்,அவரவர்களின் குலதெய்வ ஆசியும் கிட்டும்;

Thursday, October 15, 2015

ஓம் சதுரகிரி சுந்தரமகாலிங்காய நமக

சதுரகிரிக்கு ஒரு அமாவாசைக்கு பயணம் செய்தால்,அன்றோடு முடிந்த ஒருமாதம் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் கரைந்துவிடும்;


சதுரகிரிக்கு ஒரு ஆடி அமாவாசைக்குப் பயணம் செய்தால்,அன்றோடு நிறைவடைந்த ஒரு வருடம் நாம் அறிந்தும்,அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் அழிந்துவிடும்;


ஓம் சதுரகிரி சுந்தரமகாலிங்காய நமக

புற்றுநோயில் இருந்து மீண்ட பொருளாதார முனைவர்

அமித் வைத்யா என்பவர் அமெரிக்காவில் பிறந்து,பொருளாதாரத்தில் பி.எச்.டி.,பெற்று 27 ஆம் வயதிலேயே பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டியவர்;கோடிகளைக் குவித்தவர்;

அவரது அப்பா இறந்த சில மாதங்களுக்குப் பிறகு,தற்செயலாக மருத்துவப் பரிசோதனை செய்தபோது,புற்றுநோய் அவருக்கு இருப்பது தெரிந்தது;

எனவே,நியூயார்க்கில் புகழ்பெற்ற மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டார்;அம்மாவுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு அவர் இறந்தார்;அதன் பிறகு மீண்டும் புற்றுநோய் குடலில் இருந்து நுரையீரல் வரை பரவியது;பெற்றோருக்கு ஒரே மகனாகிய அவருக்கு தனிமை வாட்டியது;மருந்து,மாத்திரைகளை உடல் தனிமையின் கொடுமையால் ஏற்க மறுத்தது;மருத்துவர்களும் சில மாதங்களில் இறந்துவிடுவாய் என்று அமித் வைத்யாவிடம் தெரிவித்தனர்;

இதனால் தனது பெற்றோர்களைப் பார்க்கப் போவதாக மனதைத்தேற்றிக் கொண்டு மரணத்தை எதிர்கொள்ளத் தயாரானார் அமித் வைத்யா;

இறப்பதற்கு முன்பு தனது உறவினர்களை சந்திக்க பாரதம் வந்தார்;உறவினர்களில் ஒருவர் குஜராத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம் பார்க்கிறார்கள் என்று வழிகாட்டினார்;இறப்பின் விளிம்பில் இருக்கும் அமித் வைத்யா குஜராத் சென்றார்;அங்கே யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை தரப்பட்டது;வெறும் வயிற்றில் நாட்டுப் பசுவின் பால்,தயிர்,நெய்,பசும் சாணம் மற்றும் கோமயம்(பசுவின் சிறுநீர்) அடங்கிய பஞ்சகவ்யம் தரப்பட்டது;


கீமோதெரபியில் அத்தனை சுவைகளையும் இழந்த அமித் வைத்யா அதை தினமும் அருந்தினார்;சில நாட்களில் பரவிக் கொண்டிருந்த புற்றுநோய் பரவாமல் இருப்பதை மருத்துவ அறிக்கை சொன்னது;இதனால்,தொடர்ந்து 40 நாட்கள் அங்கேயே தங்கி சிகிச்சையைத் தொடர்ந்தார்;ஒரு விவசாயியின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றார்;சில நாட்களில் புற்றுநோய் குறைந்திருப்பதை மருத்துவ அறிக்கைத் தெரிவிக்க,இவருக்கு ஆச்சரியம் தாளவில்லை;அதுவரை நடப்பதற்கே சிரமப்பட்டவர் நடக்கவும்,ஓடவும் ஆரம்பித்தார்;18 மாதங்களில் புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டு புதுப்பிறவி எடுத்தார்;


தான் பெற்ற இன்பம் பெறுக இப்பாரதம் என்பதற்கு ஏற்ப ஹீலிங் வைத்யா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் துவங்கி,புற்றுநோயாளிகளை குணப்படுத்தும் சேவையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்;




அறுபத்து நான்கு கலைகளில் மூன்று முக்கியமான வித்தைகள்


கேசார வித்தை = வானில் பறக்கும் வித்தை(மனித உடலுடன் மட்டும்)

பூசார வித்தை = எங்கும் நினைத்தபடி போய்த் தோன்றும் வித்தை

பாதாள வித்தை = பூமிக்குள் புக,வெளிப்பட வித்தை


தமிழர்கள் கண்டறிந்த ரகசிய வித்தைகளில் இவைகளும் உண்டு;

பாரதம்(இந்தியா) முழுவதும் தமிழ் பேசப்பட்ட காலத்தைக் கூறும் புற நானூற்றுப்பாடல்


வடா அது பனிபடு
நெடு வரை வடக்கும்
தெனா அது உருகெழு
குமரியின் தெற்கும்
குணா அது கரைபொரு
தொடுகடற் குணக்கும்
குடா அது தொன்று முதிர்
பெளவத்தின் குடக்கும்
புறநானூறு பாடல் எண்;614


விளக்கம்:வடக்கே பனிபடர்ந்த இமயமலை;

தெற்கே கடல் சூழ்ந்த குமரிமுனை;

குணதிசை எனப்படும் கிழக்குத் திசையிலும் கடல்;

குடதிசை எனப்படும் மேற்கேயும் மலைவளம் சார்ந்த கடல்பகுதியை எல்லைகளாகக் கொண்டது தமிழ்நாடு என்பது இதன் பொருள்;


Wednesday, October 14, 2015

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள்


கோதை பிறந்த ஊர்;கோவிந்தன் வாழும் ஊர்;சோதி மணி மாடம் தோன்றும் ஊர்;நீதி நெறி வழுவாதவர்கள் வாழும் ஊர்;என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றிய பெருமைப் பாடல்வரி!

தெற்கு எல்லையில் அருள்மிகு மடவார்வளாகம் ஆலயம் அமைந்திருக்கிறது;அருள்மிகு வைத்தியநாதசுவாமி+சிவகாமி அம்பாள் சமேதராக ஈசன் ஆட்சிபுரிந்து வருகிறார்;இந்த ஆலயத்தின் பெயரே இந்த ஊரின் பழைய பெயராக அமைந்திருக்கிறது;ஆமாம்! ஸ்ரீவில்லிபுத்தூரின் பழைய பெயர் புதுவை;இந்த ஆலயத்தின் பழைய பெயரும் புதுவைத்தலம் ஆகும்;

ஜீரத்தை நீக்கும் ஜீரத்தேவர் சன்னதி இங்கே இருக்கிறது;ஒவ்வொரு மனிதர்களின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயிக்கும் சனீஸ்வரன் இங்கே தனி சன்னதியில் அருள்பாலித்துவருகிறார்;வராகியின் அம்சமான விஷ்ணு துர்கை இங்கே அருள்பாலித்துவருகிறாள்;அனைத்துக் கடவுளர்களின் தலைமைக் கடவுளாக இருக்கும் மனோன்மணி அன்னை இங்கே மூலவராகிய வைத்தியநாதசுவாமியின் சன்னதியில் இருந்து அருள்பாலித்து வருகிறாள்;இந்த ஆலயத்தின் ஸ்தலவிருட்சம் வன்னி மரம்;இது சனிபகவானின் விருட்சம் ஆகும்;சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 10.30க்குள் இந்த விருட்சத்தை 8 முறை வலம் வந்து வணங்கினாலே சனியின் தாக்கம் பெருமளவு குறைந்துவிடும்;

மஹாலக்ஷ்மியின் அம்சமான கோதையை இந்த ஊரில் மட்டும் நாச்சியார் என்று அழைப்பர்;இவள் இங்கே அவதரித்ததால்,இங்கே பசுவளம் அதிகம்;அதுமட்டுமல்ல;பசுவின் பால் சுவை இந்த ஊரில் மட்டும் தனிப் பெரும் சுவையாக அமைந்திருக்கிறது;அந்தச் சுவையே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவாக பரிணமித்தது;1964 ஆம் ஆண்டு வரை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலகம் முழுக்க ஏற்றுமதி ஆகியிருக்கிறது;

அதன்பிறகு,அமெரிக்காமுதலான வல்லரசு நாடுகளின் நரித்தனத்தால்,பால்கோவா ஏற்றுமதியைத் தடை செய்துவிட்டனர்;இன்று வரை தடை செய்யாமல் இருந்திருந்தால்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவில் மட்டும் 1000 ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்;வீணாப் போன(உடலுக்குத் தீங்கு தரும்) பிஸ்ஸாவை விட,ஆரோக்கியம் தரும் பால்கோவா உலக மக்களால் அதிகம் விரும்பப்பட்டிருக்கும்;

புத்தகவாசிப்புக்காக சாகித்ய அகாடமிவிருது பெற்றவர்,சந்திக்கிணற்றுத்தெருவில் வசித்துவருகிறார்;
மாவட்டத் தலைநகரத்தில் தான் மாவட்ட நீதிமன்றவளாகம் அமைவது வழக்கம்;அந்த வழக்கத்தை மீறி,விருதுநகர் மாவட்ட நீதிமன்ற வளாகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி சாலையில் அமைக்கப்பட்டிருக்கிறது;சாம்பல் நிற அணில் சரணாலயம் அமைக்கப்பட்டிருப்பது இங்கே மட்டுமே! ஆமாம்! செண்பகத் தோப்புப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது;22 சமுதாயத்தவர்களுக்குக் குலதெய்வமான அழகர் கோவிலும் இங்கே அமைந்திருக்கிறது;

அருள்மிகு கைகாட்டிசுவாமிகள்,பொன்னாயிரசுவாமிகள்,பாம்புதின்னிசுவாமிகள்,வெள்ளையப்பசுவாமிகள் ஜீவசமாதிகள் சாலியர் தெருக்களில் அமைந்திருக்கின்றன;உலகத்திலேயே பனை ஆராய்ச்சி மையம் இங்கேதான் ஆரம்பிக்கப்பட்டது;வடகிழக்கு எல்லையில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் ஆலயம் மலைமீது அமைந்திருக்கின்றது;அதன் எதிர்ப்புறம் இருக்கும் மலைப்பகுதிக்குப்பின்புறம் சென்றால்,சித்தர்கள் அடிக்கடி வந்து செல்லும் நரிப்பாறை இருக்கிறது;இங்கிருந்து சதுரகிரிக்கு 1970 வரை குகை வழியாக பயணித்திருக்கின்றனர்;

சுடுகாட்டுடன் கூடிய ஜீவசமாதிகள் அமைந்திருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே! ஆமாம்! ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் பணியாரத் தோப்புக்கு எதிரே கண்மாய்க் கரை வழியாக சென்றால் சுடுகாடும்,அத்துடன் கூடிய மூவர் சமாதியும் இங்கே தான் அமைந்திருக்கின்றன;மாணிக்கம் சுவாமிகள்,முனியப்ப சுவாமிகள் மற்றும் ஒரு சுவாமிகள் ஜீவசமாதி அடைந்திருப்பது இங்கே மட்டுமே! ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி சாலியர் சமுதாயத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் 1970 வரை இந்த மகான் கள் வாழ்ந்து வந்து சிவநெறியைப் பரப்பியுள்ளனர்;

பணியாரத் தோப்பு பகுதியில் இருந்துதான் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குரிய கோபுரம் கட்ட ஆரம்பித்தனர்;இங்கிருந்து சாரம் வழியாக ஏறி கோபுர கட்டுமான வேலை நடைபெறும் இடத்திற்குச் சென்று ஒரு செங்கலைக் கொடுத்துவிட்டு வந்தால் ,சம்பளமாக ஒரு பணியாரம் வழங்கப்படும்;அது ஒருவேளை உணவுக்கு ஈடானது;

கோட்டாங்கரை,கோட்டைத்தலைவாசல் என்று இரு இடங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்றன;கோட்டாங்கரை வரை ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை அமைந்திருந்தன;புலித்தேவன் மன்னர் இந்த கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கினார்;அப்போது இருந்த முகமது சாகிப் என்ற ஜமீனும்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஜமீனும் ஆங்கிலேயனுக்கு ஆதரவாக இருந்ததால் இந்தக்கோட்டையை இடித்தார்;

தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாக விளங்குவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜகோபுரமே! 192 அடி உயரமாக இருக்கின்றது;முற்காலத்தில் 1960களில் கர்மவீரர் காமராஜர் இங்கிருந்து எம்.எல்.ஏ,ஆகித்தான் முதலமைச்சர் ஆனாராம்;