Friday, February 22, 2013

Ashta Bairavar - aaraglur - Remedy for all problems




Kasi is so famous for bairavar worship and ashta bairavar can be found and worshipped  in kasi as it is extremely beneficial. For south indian people, travelling to kasi is not that easy.For those who want to worship ashta bairavar in one place in south india, a temple serves as a boon.The temple is called kamanada eswarar temple.It is situated in Aaragalur , near thalaivasal in salem district of Tamilnadu.




Every ashtami after full moon special pooja is done at midnight in aaragalur.People worship ashtabairavar here for all problems to get easy remedy.




Ashta bairavars are
  1. unmattar
  2. ruruvar
  3. krodhanar
  4. kalasamharar
  5. sandar
  6. ajithangar
  7. beeshana bairavar
  8. kalabairavar 

http://www.tamilhindu.net/t1545-topic  - click for more details 

Remedies offered by Sri Bairavar




Bairavar is the controller of Navagragas and have the power of reducing the ill effects if one person offers proper prayers to lord bairavar during his bad periods.A list of remedies is given here for various problems.

1.to win in court case in your favour

  During pradosham, especially sani pradosham, after pradosha pooja is over one has to offer curd rice to sri kalabairavar and make an archana in his name.Then he has to distribute the curd rice to people who are in temple.The curd rice should be offered until the case is completed.

2.to remove obstacles to get married

During ragu period on friday's (10.30 am to 12.00pm) lord bairavar should be offered santhana kappu, punugu, lotus flower along with kesari, sarkarai pongal and should do archana in his name.The method should be followed up to 8 or 17 or 26 friday's,

3.to get reunion

During wednesday and friday's morning 6-7 or afternoon 2-3 or night 8-9 lord bairavar one should  offer vilva mala and archanai.This should be done upto reunion of separated couples.

4.to get lost assets

Before lord bairavar , 27 milagu should be tied in a small cloth and should be kept in agal vilaku(liitle pot used for worship). nalla ennai(an oil preferred for worship) should be poured in to agal vilaku  and archanai should be done on his/her name till the retrival of lost assets.

5.to get rich

During sunday's in ragu kalam(4.30 pm to 6.00 pm) bairvar should be offered ulundu vadai with poosanikai.Sri swarna agarshana bairavar moola mantra should be recited 330 times for 52 sundays.

Thursday, February 21, 2013

புண்ணியம் ஓசியில் கிடைக்குமா?





  ஒரு கோவில் அறிவிப்பு பலகையில்,  . .தேதி அன்னதானம்  நடைபெறும்.பக்தர்கள்,தங்களால் இயன்ற உதவியை பொருளாகவோ,பணமாகவோ செலுத்தி,அன்னதான நிகழ்ச்சி சிறப்புற ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.குறிப்பு:தயவு செய்து ரேஷன் அரிசியை அன்னதானத்திற்கு தர வேண்டாம்.


விசாரித்தபோது, “அன்னதானத்திற்கு உதவுவது,மிக புண்ணியமான,உன்னதமான விஷயம். ரேஷன் கடைகளில்  கிடைக்கும் அரிசி பெரும்பாலும் நல்ல தரத்துடனேயே உள்ளது.ஆனால்,விஷயம் அதுவல்ல;இப்போது அனைத்து கார்டுகளுக்கும் 20 கிலோ இலவச அரிசி கிடைக்கிறது.அன்னதானத்திற்குக் கொடுப்பது பெருமைக்காக என்று நினைத்து அந்த அரிசியை வாங்கி கோவிலில் கொடுத்துவிட்டு, ‘ஓசியில் அரிசி கிடைத்தது; இங்கு கொடுத்தால் ஓசியில் புண்ணியமும் கிடைச்சிடும்ல’ என்று சிரித்த ஒரு மேதாவியால் எழுந்த ஞானதோயத்தில் எழுதப்பட்டதுதான் இந்த அறிவிப்புப் பலகை”என்று விளக்கினார் கோவில் ஊழியர் ஒருவர்.


அன்னதானத்திற்கு அரிசி கொடுப்பவர்கள் கவனத்திற்கு:
நாம் உழைத்தப் பணத்தில் ஒரு ரூபாய் கொடுத்தாலும் போதும்.இப்படி ஓசியில் கிடைக்கும் புண்ணியம் வேண்டாம்.
இலவசமாகவோ,குறைந்த விலையிலோ ரேஷனில் கிடைக்கும் பொருட்கள் உங்களுக்குத் தேவைப்படவில்லை எனில்,சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் எழுதிக் கொடுத்து,உங்கள் குடும்ப அட்டையிலும் பதிவு செய்து கொள்ளுங்கள்.இது அரசின் பற்றாக்குறையையும் நிதிச்சுமையையும் பெருமளவு குறைக்கும்; சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் ஏற்படும் சிறு சிறு ஊழல்களையும் தடுக்கும்.    

ஆன்மீகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை;சிக்கனம் இல்லாமல் இந்து தர்மம் இல்லை; 


ஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 16, வெளியீடு 25.1.13
ஓம்சிவசிவஓம்

சனிப்பிரதோஷத்தன்று சிவாய நம ஜபிப்போம்;விரைவான சிவகடாட்சத்தைப் பெறுவோம்!!





22.2.13 மற்றும்  9.3.13 என இரண்டு சனிப்பிரதோஷ நாட்கள் அருகில் வர இருக்கின்றன.நம்மைப் படைத்த சக்தியை வழிபடுவது நமது கடமைகளில் ஒன்று.அதுவும் அவரது திருவிளையாடல்கள் நிகழ்ந்த நாள் அல்லது நட்சத்திரம் வரும் நாளில் வழிபட,நமது கடுமையான கஷ்டங்கள் நீங்கிவிடும் என்பது பல கோடி ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ள சிவவாக்கின்படி,ஒரு சனிப்பிரதோஷ தினத்தன்று நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தினமும் சிவாலயம் சென்று சிவவழிபாடு தரிசனம் செய்த புண்ணியம் கிட்டும்.ஏனெனில்,இந்தப் பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் ஒரு சனிக்கிழமையன்றுதான் நிகழ்ந்தது.


இந்த நன்னாளில் நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு மாலை நான்கு மணிக்குள் சென்று கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் மஞ்சள் துண்டு விரித்தவாறு நந்தி பகவானை தரிசிக்கும் விதமாக அமர்ந்து கொள்ள வேண்டும்;மாலை ஆறு மணி ஆகும் வரை மனதுக்குள் சிவாய நம ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்;இந்த சனிப்பிரதோஷ நாளில்,பிரதோஷ நேரத்தில் இவ்வாறு தொடர்ந்து சிவாய நம ஜபிப்பதற்கே பூர்வபுண்ணியம் வேண்டும்.

இதைச் செய்ய இயலாதவர்கள் தமது வீடு/அலுவலத்தில் அவரவர் இருக்கையில் அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;முடிந்தால் அண்ணாமலை போன்ற ஆலயங்களுக்கு சென்று ஜபிக்கலாம்;வெகுநாட்களாக தினமும் சிவாய நம ஜபித்து வருபவர்கள் இந்த நாளில் கோவிலுக்குச் செல்ல இயலாவிட்டால்,இந்த நேரத்தில் நமது இருப்பிடத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மானசீகமாக நாம் விரும்பும் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்;அங்கே நந்தியை மானசீகமாக தரிசித்தவாறே மனதுக்குள் சிவாய நம ஜபித்துவர வேண்டும்.இது எல்லோராலும் இயலாத காரியமே.இருப்பினும்,இவ்வாறு தொடர்ந்து பிரதோஷ நேரம் முழுவதும் ஜபித்தால் சிவதரிசனத்தோடு,நந்தி தரிசனமும் வேறுசில சித்தர்கள் தரிசனமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.                                மாலை ஆறு மணிக்கு மேல் கொஞ்சம் இளநீர் அல்லது தண்ணீர் அருந்தினால்,அது  வரை நாம் ஜபித்த சிவாய நம நமது உடலுக்குள் பதிவாகிவிடும் என்பதை நமது ஆன்மீககுரு தனது அனுபவத்தை போதித்திருக்கிறார்.
அண்ணாமலைக்குச் செல்வோர் சனிப்பிரதோஷம் நிறைவடைந்ததும்,கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு ஆகும்.


இதே சனிப்பிரதோஷ நேரத்தில் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் சிவாய நம ஜபிக்கலாம்.அந்த ஜீவசமாதியினுள் உறைந்திருக்கும் மகானின் அருட்பார்வை வெகு விரைவில் கிட்டும்.

சிவாய நம

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!

அறுகம்புல்லை 
உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க 
வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். 
இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான 
திருநீறாகும். 

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் 
கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. 
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து 
கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. 
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது.அந்தவகையில் 
உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் 
இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. 

இதைவிட மனித உடலிலே நெற்றி 
முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் 
வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை 
இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் 
அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். 

தனது உடலிலே சாம்பல் 
சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி 
இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் 
தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் 
மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில்நீர்த்தன்மையை உறிஞ்சவல்லதிருநீற்றை 
அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு 
அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் 
போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு 
மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது. 

இதைவிட இரு புருவங்களுக்கும் 
இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால்அந்த 
இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே 
மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் 
போன்றவைஇடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் 
வெப்பத்தைநீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் 
முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற 
நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் 
சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது. 

சந்தனம் 
இரு புருவங்களுக்கும் இடையில்இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் 
ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு 
ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான 
முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை 
நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் 
காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் 
உண்டு பார்த்தீர்களா! 

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள 
நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும்சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் 
மனதில்ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் 
செய்தால் மனஒருமைப்பாடுதோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் 
புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் 
இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

இந்த 
உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா 
வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். 
மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் 
வென்றது விளக்கம் மறைந்தது. 

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்: 
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தைஈர்த்துக் கொள்ளலாம். 
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். 
3.நெஞ்சுக்கூட்டின் 
மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, 
மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் 
பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் 
சூட்சுமம் அங்கு உள்ளது. மேலும் விபரமறிய:ஓஷோ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள் என்ற புத்தகத்தை வாசிக்கவும்.                                                                                                                         ஓம்சிவசிவஓம்

ஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்


அமிர்தசரஸ்:மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், நேற்று அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றார். நூற்றுக்கணக்கான இந்தியர்களை கொன்று குவித்த, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், தனது பயணத்தின் கடைசி நாளான நேற்று, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். கோவிலை சுற்றி பார்த்த பின், அருகில் உள்ள, ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்திற்கு சென்றார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பதிவேட்டில், "இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, பிரிட்டன் வரலாற்றில் மறக்க முடியாத தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது வெட்கத்திற்குரிய செயல். இந்த சம்பவம் மறக்க முடியாத ஒன்று. உலக அமைதிக்கு, பிரிட்டன் தொடர்ந்து பாடுபடும்' என, குறிப்பிட்டார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்று, 94 ஆண்டு முடிவடைந்த நிலையில், இங்கு வந்து பார்வையிட்ட, முதல் பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், 1997ம் ஆண்டு, இங்கு வந்து பார்வையிட்டார்.
ஆன்மீகக்கடலின் கருத்து:ஐயா டேவிட் கேமரூன் அவர்களே! மதரீதியான உணர்வுகளால் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு இஸ்லாமியர்களிடம் மதவெறியைத் தூண்டியதற்கு எப்போது மன்னிப்பு கேட்கப்போகிறீர்கள்?                                             அதே மதவெறியால் இந்தியாவை இரண்டு நாடுகளாக உடைத்து,இரு நாடுகளிடமும் ஆயுத வர்த்தகத்தைச் செய்து வரும் நீங்களும்,உங்கள் உலக வாரிசு அமெரிக்காவும் எப்போது அந்த வழக்கத்தைக் கைவிடப் போகிறீர்கள்?   இந்து தர்மத்தை நக்கல் செய்தும்,இழிவு படுத்தியும் கி.பி.1700 முதல் இன்று வரையிலும் உங்கள் பாதிரியார்கள் இந்தியா முழுக்க கிறிஸ்தவ மதமாற்றம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.அதற்கு எப்போது மன்னிப்புக்  கேட்கப்போகிறீர்கள்? செய்தி ஆதாரம்: தினமலர் 21.2.13

வெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்!!!


நேற்று 20.2.13 புதன் கிழமை;வழக்கம் போல எனது கடமைகளைச் செய்து கொண்டு இருக்கும் வேளையில் நமது ஆன்மீக குருவின் அலைபேசி அழைப்பினால் சுறுசுறுப்பானேன்.உடனே,வந்து சந்திக்கும்படி கூறினார்.அவரோடு,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அமைந்திருக்கும் அருள்நிறை பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றோம்.மாலை ஐந்து மணி இருக்கும்.சுமாராக ஒரு மணிநேரம் வரையிலும் அவரோடு பத்திரகாளியம்மனின் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தோம்.பிரார்த்தனையின் முடிவில்,வந்திருந்த எங்களுக்கு கோவில் பூசாரி காபி வழங்கினார்;சிறப்பு அர்ச்சனைகள் செய்தார்;பிரசாதம் வழங்கினார்;கோவிலின் வாசலை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவரின் சன்னதிக்கு நமது குரு வந்தார்;


சில நிமிடங்களில் அவர் ஒருவித உணர்ச்சிநிலையை எட்டினார்;அப்போது அவரது குரலில் மாற்றம் தெரிந்தது;உடன் இருந்தவரிடம் “உடனே,இரு நெய்தீபம் இங்கே ஏற்றுங்கள்.ஏற்றி உங்களது கோரிக்கையை வேண்டுங்கள்;உங்களது நியாயமான கோரிக்கை/ஏக்கம்/வேண்டுதல் எதுவாக இருந்தாலும் உடனே நிறைவேறும்.கூடவே,இந்தத் தெருவில் இருக்கும் அனைவரிடமும் இந்த செய்தியைச் சொல்லுங்கள்”என்றார்.கூடவே,வந்தவர் ஓடோடிச் சென்று இரண்டு நெய்தீபங்களைத் தயார் செய்து கொண்டுவந்தார்.நமது ஆன்மீக குரு தாம் கொண்டு வந்திருந்த டயமண்டு கல்கண்டுகளை ஸ்ரீகாலபைரவரின் பாதத்தில் வைத்தார்.அவர் வைப்பதற்கும்,நெய்தீபங்களைக் கொண்டு வந்தவர் அவைகளை ஏற்றுவதற்கும் நேரம் சரியாக இருந்தது.


உடனே,கோவில் பூசாரியிடமும் உடன் இருந்தவர்களிடமும் அந்த ஸ்ரீகால பைரவர் முகத்தை உற்றுநோக்கச் சொன்னார். செல்போனில் அந்த ஸ்ரீகால பைரவர் முகத்தை மட்டும் புகைப்படமாக எடுக்கச் சொன்னார்;அவரும் தனது செல்போனில் படமாக ‘க்ளிக்’கினார்;அவர் எடுத்த புகைப்படத்தை விரிவாக்கி காட்டினார்.அந்த ஸ்ரீகாலபைரவரின் போட்டோவில் கழுத்துக்கு அருகில் வெள்ளைக் கோடாக ஒரு சூலாயுதம் தெரிந்தது.


பூசாரியிடம் விடைபெற்றுவிட்டுப் புறப்பட்டோம்;திரும்பத் திரும்ப இந்த செய்தியை உடனே நமது வாசகர்கள்,வாசகிகள் அனைவருக்கும் சொல்லும்படி கூறிக்கொண்டே இருந்தார்;அந்த கணத்தில் அவருக்கு வந்த செல்போன் அழைப்புகள் அனைத்திற்கும் பின்வரும் தகவலை சொல்லிக் கொண்டே  இருந்தார்.


இன்று மாலை 6.37 முதல் 8.37 வரை தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஸ்ரீகால பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகளிலும் அவரது அருளாற்றல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.எனவே,நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்குச் செல்லுங்கள்;சென்று இரண்டு நெய்தீபங்களை ஏற்றுங்கள்;உடன்,கால் கிலோவுக்குக் குறையாமல் டயமண்டு கல்கண்டு வாங்கி அவரது பாதத்தில் வைத்து குறைந்தது பதினைந்து நிமிடங்களுக்கு உங்களது நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் வேண்டுங்கள்;பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர்,அந்த டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள்;மீதியை நீங்கள் வீட்டுக்குக்  கொண்டு செல்லுங்கள்;அடுத்த சில மணித்துளிகள்/நாட்கள்/வாரங்களில் உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும்;


முடிந்தால் இத்துடன் மரிக்கொழுந்து,செவ்வரளி,அவல்பாயாசத்துடன் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.
பிரார்த்தனை நிறைவடைந்ததும்,என்ன உணர்ந்தீர்கள்?என்பதை உடனே எமக்குத் தெரிவியுங்கள்


இந்த பைரவ ஆசியை அப்போதுமுதல் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் அவரும் நானும் சொல்லிக் கொண்டே இருந்தோம்.கூடவே,பயணித்தவாறு சுமார் நூறு கி.மீ தூரத்தைக் கடந்தோம்.சரியாக மணி இரவு 8.25! அவரது சொந்த கிராமத்தை வந்தடைந்தோம்.அங்கே இருக்கும் கோவிலில் ஸ்ரீகால பைரவருக்கு இதே போல நெய்தீபங்கள் இரண்டை ஏற்றி,டயமண்டு கல்கண்டை அவரது பாதத்தில் வைத்து,செவ்வரளி பூக்களை ஸ்ரீகால பைரவரின் மீது தூவினோம்.அடுத்த பதினேழு நிமிடங்கள் வரையிலும் ஸ்ரீகால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து பிரார்த்தனை செய்தோம்.அப்போது ஸ்ரீகாலபைரவரின் காட்சி கிட்டியது.நான் ஆச்சரியத்தில் மிரண்டே போனேன்;ஸ்தம்பித்து உணர்வுப்பெருக்கை எட்டினேன்.


இதே போல் தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு வழிபாடு செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பைரவ ஆசிகளும்,காட்சிகளும் கிட்டியதை அடுத்தடுத்து வந்த அலைபேசிப் பேச்சுகள் தெரிவித்தன.
அடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளிலும் இதே போல ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல் வெளிப்பட இருக்கிறது.அவை அனைத்தும்  ஒரு நாளுக்கு முன்னதாக ஆன்மீகக்கடலில் பதிவுகளாக வெளியிடப்படும்.


ஓம்சிவசிவஓம்