Friday, September 14, 2012

உங்கள் ஊரில் நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை!!!


இதை ஒரு பென் டிரைவ்வில் காப்பி செய்யவும்.உங்களால் முடிந்த அளவுக்கு   ஆயிரம் அல்லது அதற்கும் மேலாக அருகிலிருக்கும் அச்சகத்தில் அச்சடிக்கவும்;எதிர் வரும் சனிப்பிரதோஷத்தன்று(13.10.2012, 27.10.2012) உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் இந்த ஆயிரம்  பிரதிகளை விநியோகிக்கவும் அல்லது ஆன்மீகக்கடலுக்கு அனுப்பி வைக்கவும்;
ஒரு வேளை இந்த நோட்டீஸை காப்பி செய்ய முடியாத பட்சத்தில் WANTED SWARNA BAIRAVAR NOTICE COPY என்று  subject இல் குறிப்பிட்டு மின் அஞ்சல் அனுப்பவும்.அதில் உங்கள் முழு முகவரியைக்குறிப்பிடவும்.ஒரு வாரத்துக்குள் இந்த நோட்டீஸின் பிரதிகள் உங்கள் வீடு தேடி வரும்.

முயற்சி செய்வோமா?

ஓம்சிவசிவஓம்

சீர்காழி பைரவரின் பெருமை மிகு வரலாறு!!!




ஸ்ரீமஹாவிஷ்ணு,வாமன அவதாரம் எடுத்து மகாபலியை அடக்கினார்.அவர் வெற்றிபெற்றப் பின்னர் அகங்காரம் குறையாமல் பிரபஞ்சம் நடுங்கத் திரியலானார்;தேவாதிதேவர்களும்,முனிவர்களும் ருத்ரன் மூலமாக சதாசிவனிடம் முறையிட்டனர்;சதாசிவம் வடுகநாதராக அகங்காரம் கொண்டு திரிந்த திருமாலை மார்பில் அடித்து வீழ்த்தினார்;அப்படி வீழ்ந்த திருமால் பூமியில் வீழ்ந்தார்.(வடுகநாதர் என்றால் பைரவர் என்று பொருள்)

பிறகு இலக்குமிதேவியின் மாங்கல்யப்பிச்சைக்கு மனமிரங்கினார்;பூமியில் வீழ்ந்த திருமாலை உயிர்ப்பித்தார்.பின்பு,திருமாலின் அகங்காரமான தோலையும்,முதுகுத் தண்டையும் வடுகநாதர் என்ற பைரவர் எடுத்துக்கொண்டார்;திருமாலின் வாமன அவதாரத்தின் தோலை சட்டையாகவும்,எலும்பை கதையாகவும் கொண்டார்.அப்படி எடுத்துக் கொண்டதால்,வடுகநாதராகிய பைரவப்பெருமான் தண்டபாணி,சட்டநாதர்,சட்டைநாதர்,ஆபதுத்தோரணர் என பலவிதமான பெயர்களில் புகழப்பட்டார்;அவ்வாறு தோலை சட்டையாகவும்,எலும்பை கதையாகவும் அணிந்து கொண்ட இடமே நமது பூமியில்,நமது தமிழ்நாட்டில் இருக்கும் சீர்காழி!!! அவ்வாறு வாமன அவதாரத்தின் தோலை சட்டையாக அணிந்த போது,அது வடுகநாதர் என்ற பைரவரின் கால்முட்டிவரைதான் வந்ததாம்.ஏனெனில்,வாமன அவதாரம் எடுத்த திருமால்,ஓங்கி உலகளந்த உத்தமரல்லவா?

இந்தக்கோவிலில் தனிக்கட்டுமனையில் ஸ்ரீசட்டைநாதர் எழுந்தருளியுள்ளார்.சட்டைநாதருக்கு நாய் வாகனம் இல்லை;இரு மருங்கிலும் பூதகணங்கள் இருக்கின்றன.
சட்டைநாதர் வழிபாட்டின் தலைமையிடம் சீர்காழி.கட்டுமலையில் மேல் உள்ள சட்டைநாதர் திருமேனி,அத்திமரத்தால் செய்யப்பட்டதால்,இத்திருமேனிக்கு அபிஷேகங்கள் நடப்பதில்லை;அபிஷேகங்கள் நேர் கீழே உள்ள பலிபீடத்திற்கே நடக்கின்றன.வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூஜையில்,சிறப்பாக சட்டைநாதருக்கு புனுகு சட்டம் பூசப்படுகிறது.அடுத்த வெள்ளியன்று,இந்த புனுகுடன் விபூதி கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
மேலும் நவபாஷாணம் கலந்த சுதையிலான சட்டைநாதர், ஆகாசபைரவராக விமானத்தில் எழுந்தருளியுள்ளார்.இங்கு தெற்கு கோபுரத்தின் இடதுபக்கத்தில்,வடக்கு நோக்கிய வலம்புரி மண்டபம் இருக்கிறது.இது அஷ்டபைரவர்களின் தனிக்கோவிலாகும்.இங்கே அஷ்ட பைரவர்களும்,யோக நிலையில் காட்சியளித்துவருகிறார்கள்.வெள்ளிக்கிழமை மற்றும் அஷ்டமி நாட்களில் மிகச் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.இந்த அஷ்ட பைரவர் கோவிலில் உள்ள ஊஞ்சல்,முட்குறடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.இந்தக் கோவிலில் ஆண்கள் சட்டை அணியாமல் திறந்தமேனியாகவும்,பெண்கள் மலர்களை அணியாமலும் செல்ல வேண்டும்;இங்கு நெய்தீப ஆராதனை மட்டும் நடைபெற்றுவருகிறது.
சீர்காழியில்,இந்த திருக்கோவிலின் மேலரதவீதியில் (பைரவன் கோடியில்) மேற்கு நோக்கி பைரவருக்கு மற்றும் ஓர் தனிக்கோவில் இருக்கிறது.மாடவீதியின் தெற்குப்பகுதியில் கண்நாதர் கோவில் என்று பலிபீடமாக வழிபடப்பட்டுவருகிறது.
நன்றி:வைரவ விஜயம்,பக்கங்கள்45,46.
ஓம்சிவசிவஓம்


Thursday, September 13, 2012

உங்கள் ஊரில் நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை!!!




இந்த இரண்டையும் ஒரு பென் டிரைவ்வில் காப்பி செய்யவும்.உங்களால் முடிந்த அளவுக்கு இரண்டு பக்கமும் அச்சடிக்கும் விதமாக ஆயிரம் அல்லது அதற்கும் மேலாக அருகிலிருக்கும் அச்சகத்தில் அச்சடிக்கவும்;எதிர் வரும் சனிப்பிரதோஷத்தன்று(13.10.2012, 27.10.2012) உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் இந்த ஆயிரம்  பிரதிகளை விநியோகிக்கவும் அல்லது ஆன்மீகக்கடலுக்கு அனுப்பி வைக்கவும்;                                             ஒருவேளை உங்களுக்கு இந்த நோட்டீஸ்கள் சரியாக பதிவிறக்கம் ஆகவில்லையெனில்,WANTED BIT NOTICE COPY என்று subject இல் குறிப்பிட்டு மின் அஞ்சல் அனுப்பவும்.அந்த மின் அஞ்சலில் உங்களின் அஞ்சல்(தபால்)முகவரியை அனுப்பி வைக்கவும்.கூரியரில் இந்த பிரதிகள் சில ஒரு வாரத்துக்குள் அனுப்பி வைக்கப்படும்.


முயற்சி செய்வோமா?

ஓம்சிவசிவஓம்

நமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்!!!





தினசரி வாழ்க்கை இந்த கலியுகத்தில் நம் ஒவ்வொருவருக்குமே நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டே செல்கிறது.மந்திரத்தில் மாங்காயை வரவழைக்க முடியாது;ஆனால்,மனத்திறம் என்ற மந்திரத்தால் மாமரத்தையே வளர வைக்கமுடியும்;அந்த மாமரத்தில் ஏராளமான மாம்பழங்களை காய்க்க வைத்து,அவைகளை நாமே பறித்து சாப்பிட முடியும்.

எந்த ஒரு குறிப்பிட்ட கடவுளையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால்,அதற்குப் பெயர் உபாசனை என்று பெயர்.உபாசனையை முழுமையாக நிறைவேற்றினால்,நாம் விடாமல் வழிபடும் அந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்;அந்த தெய்வத்தை நேரில் சந்திக்கும் பாக்கியமும் கிடைக்கும்;நமது ஒட்டுமொத்த கர்மவினைகளும் அடியோடு தகர்ந்துவிடும்;உபாசை செய்வதற்கு நிறைய பூர்வபுண்ணியம் வேண்டும்;கோடியில் ஒரு மனிதருக்கே இப்படிப்பட்ட பூர்வபுண்ணியம் இருக்கும்.அந்த கோடியில் ஒருவருக்கே இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
உபாசனை செய்வதற்கு மூன்று விஷயங்கள் கைகொடுக்கும்;ஒன்று: மந்திரம் இரண்டு:யந்திரம் மூன்று: தந்திரம்
மந்திரம் என்றால்,ஒரு சொல்லை அல்லது சில வரிகளை திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லுதல்;அப்படி சொல்வதால் அது நமது உடலுக்குள்ளும்,மனதுக்குள்ளும் உருவேறுகிறது; “உரு ஏறத் திரு ஏறும்” என்பது திருமந்திரத்தை இயற்றிய திருமூலர் சித்தரின் வாக்கு!!!
எந்த ஒரு மந்திரத்தையும் உருவேற்றத் துவங்கிட ஒரு குறிப்பிட்ட காலம் தேவை;அதன்பிறகு ஒவ்வொருநாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விடாமல் உருவேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்;ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் அமாவாசை,பவுர்ணமி,கிரகணம்,ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் குறிப்பிட்ட நாளில் வரும் அமிர்த நேரத்தில் ஜபித்து வர வேண்டும்.இப்படி விடாப்பிடியாக சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் ஜபித்துவந்தால்,அந்த மந்திரமானது நமது உடலில் இருக்கும் 72,600 நாடிகளிலும்,21,400 சுவாசங்களிலும்,6000 சூட்சும மையங்களிலும் ஒருமுறை பதிய வேண்டும்;அதற்காகத் தான் ஒரு லட்சம் தடவை (ஓம்சிவசிவஓம்) மந்திரத்தை ஜபிக்கச் சொல்லி வலியுறுத்துகிறோம்;
மஞ்சள் துண்டின் மீது(வசதியிருந்தால் மஞ்சள் பட்டுத்துண்டு) அமர்ந்து ஜபிக்கும்போது மந்திரத்தின் சக்தி அந்த மஞ்சள் துண்டிலும் பதிவாகிக்கொண்டு வரும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்தவாறு ஜபித்துவந்தால்,நாம் ஜபித்துவருவதற்கான பலன் வெகு விரைவில் நம்மை வந்து சேரும்;இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சம் வைத்து ஜபித்தால்,அந்த ருத்ராட்சங்களிலும் மந்திர சக்தி பதிவாகிவரும்;தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலும்,ஒரே இடத்திலும் ஜபித்து வந்தால் அந்த இடமே மந்திர சக்தியை வசீகரிக்கும் புள்ளியாக மாறிவிடும்.இத்துடன் புருவ அஞ்சனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜபித்தால்,நாம் இந்த கலியுகத்தில் எந்த ஒரு எதிர்மறை சக்தியாலும் பாதிக்கப்பட மாட்டோம்;நமது தொழில் அல்லது வேலை சார்ந்த குழப்பங்களும் நம்மை ஒருபோதும் அண்டாது;நமது வருமான அளவு படிப்படியாக, ஆனால் உறுதியாக வளர்ந்துகொண்டே செல்லும்;நமது கடன்களை விரைவாக தீர்த்துவிடலாம்;நமது குடும்பத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிவிடலாம்;ஒரே ஒரு நிபந்தனை: இப்படி புருவ அஞ்சனத்தை நாம் பயன்படுத்தி வருவதை நமது நட்பு வட்டம்,உறவு வட்டம்,தொழில் வட்டம்,உடன் பணிபுரியும் வட்டம் இவர்களிடம் இதை பெருமையடிக்கக்கூடாது;ஏன் சிறிதுகூட காட்டிக்கொள்ளக் கூடாது;மீறிச் சொன்னால்,இதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது அல்லது வீணாகிவிடுகிறது.அந்த அளவுக்கு பிறரின் பொறாமை நமது உளறல்கள் மூலமாக நமது முன்னேற்றத்துக்கு உதவும் காரியங்களை தடுத்துவிடுகிறது;

புருவஅஞ்சனத்தைப் பற்றி கடந்த ஓராண்டாக ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்:
சென்னையில் இருக்கும் அவர் எனது ஜோதிட வாடிக்கையாளர்;ஒரு வருடத்துக்கு சுமார் ஐந்து முறையாவது ஜோதிடம் பார்ப்பவர்;சிறு குடும்பம்;இரண்டு குழந்தைகள்;மூத்தவன் ஏழாம் வகுப்பு,அடுத்தவள் மூன்றாம் வகுப்பு.ஒரு சிறுதொழில் கூடம் நடத்தி வருகிறார்;சுமார் ஒன்பது பேர்கள் அவரிடம் பணிபுரிந்து வருகிறார்கள்;கடந்த ஐந்து வருடங்களில் தொழிலில் போதிய வளர்ச்சி இல்லை;வரவுக்கும் செலவுக்கும்,குடும்பத்தை நடத்துவதற்கும் போதுமான அளவுக்கு அவரது சிறுதொழில் கூடம் செயல்பட்டுவந்தது;ஜாப் ஒர்க் எடுத்துச் செய்து வந்தார்;கடந்த ஓராண்டில் அவரது தொழிலில் போட்டி அதிகமானதாலும்,ஜாப் ஒர்க் அதிகமாக கிடைக்காததாலும்,பணியாளர்களின் எண்ணிக்கை மூன்றாகி,ஒன்றாகி,தொழில் கூடத்துக்கான வாடகை பாக்கி மூன்று மாதங்களாக நீண்டுவிட்டன.ஆனால்,ஒரு வருடத்துக்கு முன்பே இதை இவரது ஜாதகப்படி கணித்து,அதை நிவர்த்தி செய்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவைத் தந்து,வழிபாடு செய்ய நேரடியாகச் சென்று சொல்லிக்கொடுத்தோம்;பிறகு,தொடர்ந்து சில மாதங்கள் இவர்கள் விடாமல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்து வருகிறார்களா? என்பதை கண்காணித்தும் வந்தோம்;ஆனால்,இவர்கள் வீட்டில் அந்த சில மாதங்களுக்குப்பிறகு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு தொடர்ந்து நடைபெறவில்லை;


இதை கவனித்து வந்த இடத்துக்கு உரிமைப்பட்ட முதலாளி, இவரிடம் “மூன்று மாத வாடகையை கொடுத்துவிட்டு,உனது தொழில் கூடத்தைத் திறந்து கொள்” என்று திட்டிவிட்டு,தொழில் கூடத்தினை பூட்டு போட்டு பூட்டிவிட்டு, இவரது சாவியை பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்; இவர் சுமார் ஒரு மாதம் வரையிலும் அவரிடம் தினமும் கெஞ்சியும் அவர் மசியவில்லை;அந்த ஒரு மாதமும் அடமானம் வைத்து,குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்;(நகையைத்  தான்!)இந்த சூழ்நிலையில் எம்மிடம் வந்தார்.

அவரிடம் அசைவம் ஒரு போதும் இனி சாப்பிடக் கூடாது என்று உறுதிமொழி கேட்டேன்;அதற்கு ஒப்புக்கொண்டார்;ஏனெனில்,இந்த புருவ அஞ்சனமானது சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே சிறப்பாக செயல்படும்;அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அவ்வளவாக செயல்பட வில்லை;மது பானம் அருந்துபவர்களுக்கு சிறிதும் செயல்பட வில்லை;புருவ அஞ்சனத்தை வாங்கிக்  கொண்டு சென்றார்.
பதினைந்தாம் நாளில் போன் செய்தார்;அவரது தொழில் கூடத்தினை வாடகைக்கு விட்டிருக்கும் முதலாளியானவர் இவரைத் தேடி வந்தார்: “சாவியைக் கொடுங்க;சாவியைக் கொடுங்கன்னு சொன்னியே! இந்தத் தொழிலை வைத்துதான் குடும்பம் நடத்துறேன்னு சொன்னியாப்பா? இந்த சாவி!! நீ மூணு மாதத்து வாடகையைத் தர வேண்டாம்;ஒரு மாதத்து வாடகையைக் கொடு;அது போதும்;அதுவும் உடனே தர வேண்டாம்; ஒரு  மாதம் கழிச்சு கொடு;அது போதும்.என்னால ஒரு குடும்பம் நடுத்தெருவுக்கு வர வேண்டாம்” என்று உருக்கமாகப் பேசிவிட்டு, கொஞ்சம் பணத்தையும் வட்டியில்லாமல் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.இதை அவர் சொல்லும்போதே அவரது குரலில் நன்றியுணர்ச்சி தெரிந்தது;
அவர் மேலும் சொன்னது;இதுவரை கடந்த பத்து வருடத்தில் அந்த இடத்துக்காரர் யாரிடமும் இப்படி இரக்கப்பட்டதே இல்லை;பணம்,பணம்னு பணக்கொள்கையோடுதான் இருப்பார்;அவர் போனப்பின்னரும் என்னால் இதை நம்பமுடியவில்லை;என்றார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

அவர் நமது வாசகர்!ஒரு மில்லில் ஒப்பந்தப்பணிகளுக்கு ஆட்களை திரட்டி அனுப்புவது அவரது பணி;பலமுறை நிர்வாகம் சொன்ன சம்பளத்தை,சொன்ன தேதியில் தராது;தாம் அனுப்பும் வேலையாட்களை சமாளிப்பதே இவருக்கு பெரும்பாடு ஆகிவிட்டது;தனது கமிஷன் தொகையினையும் சேர்த்து தான் அனுப்பும் பணியாளர்களுக்கு தான் சொன்ன சம்பளத்தை கொடுத்து,மாதக் கடைசியில் திண்டாடுவதும்;கடன் வாங்குவதும் இவரது சுபாவமாகிவிட்டது; மில்லில் சொன்ன சம்பளத்தை இவர்  கேட்டால் சாமர்த்தியமாக இவரை சமாளித்து வந்திருக்கின்றார்கள்;அதையும் மீறி நிர்வாகத்திடம் சண்டை போட்டால்,இவரை மிரட்டவும்,இவரது ஒப்பந்தத்தையே கேன்சல் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியிருக்கின்றனர்;இதெல்லாம் ஒரு பிழைப்பா? என்று வேறு வேறு மில்களுக்கு தனது ஆட்களை மாற்றி மாற்றி அனுப்பியிருக்கிறார்;சில மாதங்களில் அவர்களும் இதே போல மாறிவிட,இவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்.இந்த சூழ்நிலையில் தான் இவரை புருவ அஞ்சனம் சென்றடைந்தது;


இத்தனைக்கும் இவர் தினமும் ஓரு மணி நேரம் வீதம் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருபவர்!!!நேர்மையாக இனிமேல் வாழவே முடியாதோ? என்ற முடிவுக்கு வந்தவுடனே புருவ நெய்யை வைத்தவாறு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்;ஜபிக்க ஆரம்பித்த மூன்றாம் நாளிலிருந்து இவரது புருவத்தில் சில நொடிகள் லேசான அரிப்பு(செயல்பட ஆரம்பித்தமைக்கான அடையாளம்!!!) ஏற்பட்டிருக்கிறது.அன்று முதல் இவரது ஒப்பந்தப்பணிகளுக்கு ஆட்கள் அனுப்புவதில் இவர் என்ன விரும்புகிறாரோ,அது மட்டுமே நிகழ ஆரம்பித்திருக்கிறது;மில் நிர்வாகம் சரியான தேதியில் சம்பளம் தர ஆரம்பித்தது;இவரது பணியாட்கள் இவரை மரியாதையோடு பேசவும்,பழகவும் ஆரம்பித்தார்கள்;இவரது பேச்சுக்கு மறு பேச்சின்றி ஒத்துழைக்க ஆரம்பிக்க,இவரது வருமானம் இப்போது இவரது கடன்களை அடைக்கக் காரணமாகிவிட்டது.பொதுவாக நேர்மையை தனது குணமாக வைத்திருப்பவர்கள்,இதை நம்பாமல் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்;சகலவிதமான பிராடுத்தனமும் செய்பவர்கள் வசதியாக வாழ்பவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்;எமது இருபது வருட ஜோதிட வாழ்க்கை இதை எமக்கு புரிய வைத்திருக்கிறது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

அந்த அம்மாவுக்கு மூன்று குழந்தைகள்;கோவில்,ஆன்மீக விஷயங்களுக்கு மட்டும் இவரது கணவர்,போதுமான வெரிபிக்கேஷனுக்குப் பிறகு,எங்கேயும் அனுப்புவது தனது மனைவியை அனுப்புவது வழக்கம்;இந்த அம்மாவும் கடந்த ஏழு வருடங்களாக எம்மிடம் ஜோதிடம் பார்த்து அதன்படி பின்பற்றிவருபவர்;இவரது ஒரே ஒரு குறையை எம்மால் தீர்க்க இயலாமல் இருந்தது;கூட்டுக்குடும்பமான இந்த அம்மா,தனது மாமனார்,மாமியாரையும் பராமரித்து வருகிறார்;இவரது கணவருக்கு இரண்டு அண்ணன்களும்,ஒரு அக்காவும்,ஒரு தங்கையும் இருப்பதால்,அடிக்கடி பிற மகன் மற்றும் மகள் வீடுகளுக்கு இவரது மாமனாரும்,மாமியாரும் செல்வது வழக்கம்.அப்படிச் சென்றால்,இந்த அம்மாவின் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்;ஏனெனில்,இவருக்கு வாய்ந்த கணவன்,மாமனார்,மாமியார் எல்லோரும் நல்லவர்கள்;சுயமரியாதையோடு இவரை நடத்தி வருபவர்;ஆனால்,இவரது மாமனாரும்,மாமியாரும் வெளியூர் போய்விட்டால்,திரும்பி வர சில மாதங்களாவது ஆகும்.அந்த சில மாதங்களில் இவரை இவரது கணவர்(தனித்திருக்கும் போது) கெட்ட வார்த்தைகளால் திட்டுவது உண்டு.இது இவருக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும்,பிறகு பழகிப்போனது;இருந்தாலும்,இவரது மாமனார்,மாமியாரிடம் இதைச் சொல்ல முடியவில்லை;சொன்னாலும் அவர்கள் இதை நம்பப்போவதில்லை;இவரது கணவரின் பிறந்த ஜாதகமும் இதை உறுதிப்படுத்தியது;

ஒவ்வொரு முறையும் இவர் ஜாதகம் பார்க்க வரும்போதும் இவரை ஆறுதல் படுத்தி அனுப்புவது எமக்கு அயர்ச்சியைத் தந்தது;இருப்பினும்,அது எமது கடமையல்லவா?இப்போது இந்த அம்மா தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறார்.இந்த ஜபமானது,இவரது மாமனார்,மாமியாரை வெளியூர் அடிக்கடி செல்லவிடாமல் தடுத்து வைத்தது;



இந்த சூழலில் புருவ அஞ்சனத்தை வாங்கினார்;அது இவரது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் ஆகர்ஷணத்தை அதிகப்படுத்தியது;அடுத்த சில நாட்களில் இந்த அம்மாவின் வாழ்க்கையில் நடக்கவிருப்பதை இவருக்கு கனவு மூலமாக உணர்த்தியது;ஆனால்,எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சக்தியை எட்டிட இவர் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதை இவரது பிறந்த ஜாதகம் உணர்த்தியது;புருவ அஞ்சனத்தைப் பயன்படுத்தத் துவங்கிய சில வாரங்களில் இவரது கணவர் இவரை திட்டுவது நின்றுபோனது;இவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை;ஏதோ எம்மால் முடிந்த மக்கள் சேவையை புருவ அஞ்சனத்தின் மூலமாகவும் செய்ய முடிகிறதே! இந்த வாய்ப்பை எமக்கு அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவருக்கும்,அண்ணாமலையாருக்கும் கூகுள் நன்றிகள்!!!

ஓம்சிவசிவஓம்

Tuesday, September 11, 2012

ஐயப்பனே குலதெய்வமாக இருக்கும் சுந்தரபாண்டியம் பெரிய கோவில்!!!










சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சதுரகிரிக்கு பால்குடம் கொண்டு சென்றுள்ளார்கள்.அப்போது (இன்றைய விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,தாலுகா,சுந்தரபாண்டியம் கிராமம் அருகே இருக்கும் ஊத்தங்கல் பொட்டல் என்ற இடத்தில்)ஒரே ஒரு பால்குடம் மட்டும் கீழே விழுந்திருக்கிறது.அப்படி விழுந்தமைக்கான காரணமானது அடுத்த சில வருடங்களில் தெரிந்திருக்கிறது.ஆமாம்,அந்த இடத்தில் ஐயப்பன் விக்கிரகம் ஒன்று புதைந்திருக்கிறது.அக்கால வழக்கப்படி,அந்தப் பகுதியை ஆண்டுவந்த பாண்டியமன்னரிடம் இதைத் தெரிவித்துள்ளனர்.முதல்நாள் இரவில் பாண்டிய மன்னருக்கும் இது தொடர்பான கனவு தெரிந்திருக்கிறது.



ஐயப்பனின் ஆசைப்படி சுந்தரபாண்டியம் அருகில் இருக்கும் கண்மாயை ஒட்டி அவரை பிரதிஷ்டை செய்தார் பாண்டிய மன்னர்.பிற்காலத்தில் வந்த சுந்தரபாண்டியன் என்ற மன்னரும் இந்த கோவிலுக்கு மானியமாக பல கிராமங்களையும்,விவசாயநிலபுலன்களையும் தானமாக கொடுத்து கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்தியுள்ளார்.ஐயப்பனின் ஆசைப்படி,மண்பாண்டம் செய்பவர்களே பூசை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.பிராமணர் உள்ளிட்ட பனிரெண்டு சமுதாயத்தவர்களின் குலதெய்வமாக இருந்து அருள்பாலித்து வருகிறார் ஐயப்பன்.இந்த கோவிலில்  இவரது பெயர் அருள்நிறை வைகுண்டமூர்த்தி ஐயனார்! இவர் பூரணம் மற்றும் பொற்கொடியாள் சமேதமாக காட்சியளித்து அருள்பாலித்துவருகிறார்.


இவருடன் அருள்மிகு மான்பூண்டி கருப்பசாமி,        அருள்மிகு லாடதவசி என்ற லாடசன்னாசி,           அருள்மிகு பேச்சியம்மாள்,                         அருள்மிகு சப்தகன்னி,                            அருள்மிகு ராக்காச்சியம்மன்,                       அருள்மிகு பொன்மாடசாமி,                        அருள்மிகு பொன்மாடத்தி,                         அருள்மிகு சப்பாணிக் கருப்பசாமி,                  அருள்மிகு சுடலைமாடன்                         அருள்மிகு சுடலைமாடத்தி,                        அருள்மிகு பொன்வேட்டைஐயனார்,
,அருள்மிகுபத்திரகாளி,                            அருள்மிகு உத்திரகாளி,                           அருள்மிகு கழுவடி முத்தையா,                     அருள்மிகு கருப்பசாமி,
அருள்மிகு காலபைரவர் சன்னதிகளோடு முழுமுதற்கடவுள் விநாயர்,அவரது சகோதரர் முருகக்கடவுள் வள்ளிதெய்வானையோடு இருந்து அருள்பாலித்துவருகிறார்கள்.பல ஆண்டுகளாக பால்குடம் எடுத்து வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.சிவராத்திரிக்கு மறுநாள்  இரவு இங்கே நடைபெறும் ஊட்டுப்பறை நிகழ்ச்சி அபூர்வமானது ஆகும்.சுவாமிக்குப்படையல் போட்டு,அந்த படையல் சாதத்தை உருண்டையாக உருட்டி,இந்தக் கோவிலின் எதிரே இருக்கும் புளியமரத்தின் மேலே வீசுவார்கள்;ஒரு பருக்கைகூட கீழே விழாது;இந்த தெய்வீக சம்பவம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவருகிறது.இதன்மூலமாக இந்தக் கோவில் அருளாற்றலை உணர்ந்துகொள்ளலாம்;இந்தக் கோவிலின் ஸ்தலவிருட்சம் புளியமரம் ஆகும்.இந்தக் கோவிலிலைச் சுற்றி எட்டுக் காளியம்மன்கள் இருப்பதாகவும்,அவர்களே இந்தக்  கோவிலை பாதுகாப்பதாகவும் நம்பிக்கை;





மதுரை டூ செங்கோட்டை சாலையில் க்ருஷ்ணன் கோவில் என்ற சிற்றூரில் இறங்க வேண்டும்;இங்கிருந்து வத்ராப் செல்லும் நகரப்பேருந்து(டவுண் பஸ்) மூலமாக பயணித்தால் சுந்தரபாண்டியம் விலக்கு என்ற நிறுத்ததில் இறங்க வேண்டும்.இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு வடக்கு நோக்கி பயணித்தால் சுந்தரபாண்டியம் கிராமம் வரும்.(சுந்தரபாண்டியத்துக்கு மணிக்கொருமுறை பேருந்து வசதி உண்டு)இங்கிருந்து இன்னும் ஒரு கி.மீ.தூரம் வடக்கே பயணித்தால் பெரிய கோவிலை அடையலாம்.ஆட்டோ வசதிகள் க்ருஷ்ணன்கோவிலில் இருந்தும்,சுந்தரபாண்டியத்திலிருந்தும் கிடைக்கின்றன.



ஏராளமான பெரும்புள்ளிகள்,பிரபலமான டாக்டர்கள்,அரசியல்வாதிகள்,என் ஜினியர்கள்,அரசு  ஊழியர்கள்,சட்ட அறிஞர்கள்,தொழிலதிபர்களுக்கு இந்த பெரியகோவில் குலதெய்வமாக இருக்கிறது.மாமுண்டி,வைகுண்டமூர்த்தி போன்ற பெயர்களைக் கொண்டவர்களின் பூர்வீகக் கோவில் இதுதான்.பல வம்சாவழியினர் சில தலைமுறைகளாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து போனதால்,பலருக்கு இந்த பெரியகோவில் தான் குலதெய்வம் என்பது தெரியவில்லை;இந்த பெரிய கோவில் சைவம் மற்றும் வைஷ்ணவ ஒருங்கிணைப்பாக இருக்கிறது.


படங்களில் இருப்பது பெரியகோவிலில் முறையான அனுமதியோடு எடுக்கப்பட்டவை!!! குதிரையில் செல்லும் இந்த புகைப்படத்தை பலர் தமது தொழில் நிலையத்தில் வைத்து தினமும் வழிபட்டு வருவதன் மூலமாக தொழிலில் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பது நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.



ஓம்சிவசிவஓம்
ஓம்ஹரிஹரிஓம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் சிவாலயம்





சித்தர்களின் தலைவரான அகத்தியர் இந்த சிவலிங்கத்தை நிறுவியதாக செவி வழிச்செய்திகள் சொல்கின்றன.ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசிக்குச் செல்லும் சாலையில் நக்கமங்கலம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து தெற்கே செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ.தூரம் சென்றதும் அம்மச்சிய்ம்மன் கோவில் இருக்கிறது.(இதோ புதியதாக கட்டிக்கொண்டிருக்கும் ஆலயம்)அந்த ஆலயத்தின் பின்பக்கமாக செல்லும் வயல்வெளிப் பாதையில் ஒரு கி.மீ.தூரம் சென்றால் இந்த சிவாலயத்தை அடையலாம்.மிகவும் சக்தி வாய்ந்தவராக உணர்ந்ததால் உங்களுக்கு இவரை அறிமுகப்படுத்துகிறோம்.ஓம்சிவசிவஓம்

சென்னைவாசிகளுக்கு (ஒருநாள்) யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை