நன்றி:தமிழ்த்தாமரை
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Friday, July 6, 2012
Thursday, July 5, 2012
மீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி!!!
மனித இனம் குரங்கிலிருந்து மனிதனாக பரிணமித்து 20,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன;ஆதியில் உலகம் முழுவதும் நமது இந்து தர்மமே பரவியிருந்தது.கடந்த 2000 ஆண்டுகளில் வேறு சில மதங்கள் உருவாகி இன்று போர்,யுத்தம்,கலவரம்,இனவெறி,பொறாமை என்ற பெயர்களாலும்,மூட நம்பிக்கைகளாலும் பல கோடி மக்களை கொன்றுகொண்டே இருக்கிறது.
வெகு விரைவில் இந்த கொடூர சூழ்நிலை மாறப்போகிறது.உலக மயமாக்கல் எனப்படும் உலக வர்த்தக அமைப்பினுள் ஊடுருவிய சி.ஐ.ஏ.,நவீன காலனியாதிக்கத்தை ஏற்படுத்தி இந்த உலகத்தில் இருக்கும் நாடுகளையே அமெரிக்க மயமாக்க திட்டமிட்டது;அதில் ஓரளவே வெற்றி பெற்றது;தொழிலாளித்துவம் எனப்படும் கம்யூனிஸம் சிதைந்து போவதற்கு 70 ஆண்டுகள் ஆயின;ஆமாம்! 1990களின்பிற்பாதியில் கம்யூனிஸ வல்லரசான சோவியத் ரஷ்யா அமெரிக்காவின் நரித்தனத்தால் சிதைக்கப்பட்டது; ஆனால், வரவுக்கு மீறிய செலவு,வெட்டி பந்தா போன்றவற்றால் வெறும் 20 ஆண்டுகளில் முதலாளித்துவத்தைப் பின்பற்றி வந்த நாடுகளான அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி,இத்தாலி,பிரான்ஸ் போன்றவைகள் வீழ்ச்சியடையத் துவங்கியிருக்கின்றன.இந்த வீழ்ச்சியைத் தாங்கி நிற்பது நமது பாரத அரசு மட்டுமே! சோவியத் வீழ்ச்சிக்குப்பிறகு அந்த இடத்தைப் பிடிக்க சீனா திட்டமிட்டு பணிபுரிந்தாலும் உலக அரசியலையும்,பொருளாதார மாற்றங்களையும் கூர்ந்து கவனிக்கத் தெரியாமல் தடுமாறுகிறது.எனவே,சீனாவும் ஒருபோதும் உலக வல்லரசாக மாற முடியாது.
அணு ஆயுதம்,நவீன ராணுவம்,திறமைவாய்ந்த ஒற்றர் அமைப்பு,மதம் சார்ந்த சர்வதேச அரசியல் பார்வை;பொறாமை பிடித்த குறுகிய முதலாளித்துவ கண்ணோட்டம் போன்றவைகள் இல்லாமலேயே இந்தியா தனது அன்பு,குடும்ப பாரம்பரியம்,விட்டுக்கொடுத்தல்,யோகாசனம்,ஆயுர்வேதம்,
ஜோதிடம்,வர்மசிகிச்சை,தியானம்,பிராணயாமம் போன்ற இந்து தர்மத்து ஆயுதங்களால் உலகை ஆளப்போகிறது.
அதற்கு இந்த படங்களே முதல் ஆரம்ப அடையாளங்கள் ஆகும்.இனி எத்தனை சி.ஐ.ஏக்கள் வந்தாலும்,எத்தனை சீன அரசியல் தந்திரங்கள் செய்தாலும் இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்
க்ருண் வந்து விஸ்வம் ஆர்யம்
(இந்து தர்மத்தைப் பரப்ப உலகம்முழுக்கவும் பயணிப்போம்!!!)
படங்கள்:யோகாசனம் செய்யும் அமெரிக்கர்கள்!!!
Wednesday, July 4, 2012
உங்களின் சிந்தனைக்கு!!!
நாம் நமது வேர்களாகிய சனாதன தர்மத்தை விட்டு எவ்வளவு தூரம் சென்றுவிட்டோம்?என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.இப்படி நம்மை சிந்திக்காமல் தடுக்க ஒரு பெரிய படையே நமது நாட்டில் பணி புரிந்து கொண்டிருக்கிறது.இந்து தர்மம் இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டுக்கொண்டு வருவதால் தான் நம் நாடு இன்னும் மதச்சார்பின்மை நாடாக இருக்கிறது.இந்த மதச்சார்பின்மை முகமூடியை அணிந்து கொண்டு காங்கிரஸ்,கம்யூனிஸ்டு,பகுத்தறிவாளர்கள் அடிக்கும் கொட்டத்தை உணர்ந்தால் இந்த நாடே கொந்தளித்துப்போய்விடும்.அப்படி அவர்கள் அடிக்கும் கொட்டத்தை ஒரு கட்டுரையில் விவரிக்க முடியாது என்பதுதான் சோகம்!!!
காஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா?
மதன் பதில்: கலவரங்களில் ஈடுபடும் கூட்டத்தினரை வைத்து ஒட்டு மொத்தமாக காஷ்மீர் மக்கள் என நாம் கருதி விட முடியாது.காஷ்மீர் மக்களின் இயல்பானகுணமே அமைதியாக வாழ்வது தான்.அதைத்தான் அவர்கள் விரும்பு கிறார்கள்.அந்த சூழ் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி தர முடியவில்லை யெனில், அது யாருடைய தவறு? .
பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைந்தால் என்ன விளைவுகள் ஏற்ப்படும் என்பது அங்குள்ள மக்களுக்கு தெரியும். தனி ‘தக்குனூண்டு’ நாடாகவும் அதால் இயங்கமுடியாது. பிரிவினை வாதிகளும் தேச விரோதிகளும் நமது இந்தியாவின் எந்த_மாநிலத்தில் தான் இல்லை? அதற்காக கலவரங்கள் நடைபெறும் பகுதிகளை யெல்லாம் தனி தனி சுதந்திர நாடுகளாக அறிவித்திட முடியுமா? நல் ல கதை !
முஸ்லீம்கள் பெரும்பான்மை யாக உள்ளார்கள் என்பது வாதமேஇல்லை.அவர்கள் இந்திய முஸ்லீம் கள் என்பதை நினைவில்_கொள்ளுங்கள். தவிர எப் போதிருந்து அங்கே முஸ்லீம்கள் பெரும்பான்மையானார்கள்?
பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைந்தால் என்ன விளைவுகள் ஏற்ப்படும் என்பது அங்குள்ள மக்களுக்கு தெரியும். தனி ‘தக்குனூண்டு’ நாடாகவும் அதால் இயங்கமுடியாது. பிரிவினை வாதிகளும் தேச விரோதிகளும் நமது இந்தியாவின் எந்த_மாநிலத்தில் தான் இல்லை? அதற்காக கலவரங்கள் நடைபெறும் பகுதிகளை யெல்லாம் தனி தனி சுதந்திர நாடுகளாக அறிவித்திட முடியுமா? நல் ல கதை !
முஸ்லீம்கள் பெரும்பான்மை யாக உள்ளார்கள் என்பது வாதமேஇல்லை.அவர்கள் இந்திய முஸ்லீம் கள் என்பதை நினைவில்_கொள்ளுங்கள். தவிர எப் போதிருந்து அங்கே முஸ்லீம்கள் பெரும்பான்மையானார்கள்?
காஷ்மீர் வரலாற்றை (ஊசிமுனையளவு தான்) பார்ப்போமே;
வேதகாலத்தில் அங்கு வசித்து வந்த காஷ்யப முனிவரின் பெயரிலிருந்து தான் “காஷ்மீர்” எனும் பெயரே வந்தது.அவர்_மூலம் விருத்தியான மக்களின்பெயர் (அங்கே மலைகளில் வாழ்ந்த ) காசிகள் என அழைக்கபட்டனர்.
தமிழ் நாட்டுக்கும் காஷ்மீருக்கும் ஒருகாலத்தில் நெருங்கிய மத ரீதியான தொடர்பிருந்தது. ‘சைவ சித்தாந்ததிணை ’ உருவாக்கிய திருமூலர் காஷ்மீரிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தார்.(சிலர் தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் சென்று, பிறகு ஆப்கானியர்களின் படையெடுப்பின் விளைவாக மீண்டும் தமிழகத்துக்கே வந்தார் என்கிறார்கள்). வேதங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, சாதி மதங்களை யெல்லாம் தூக்கி யெறிந்துவிட்டு, ‘அன்பு தான் மதம்; உடல் தான் அதற்கு கோவில்!’ எனும் தத்துவத்தை உருவாக்கியவர்கள் சைவ சித்தாந்திகள். இந்த தத்துவம் உருவானது காஷ்மீரில் தான். தமிழ் பக்தி மார்க்கத்தை காஷ்மீர் மக்கள் வரவேற்று ஏற்றுக்கொண்டார்கள்.
தமிழகத்தில் பிறந்து பிறகு புத்த மத தத்துவ ஞானியாக புகழ் பெற்ற நாகார்ஜீனர் இங்கிருந்து காஷ்மீருக்கு சென்று, கடைசி வரை அங்கேயே வசித்தார்.ஆக பக்தி, தந்தீரீக வழிபாடு, சைவம் இம் மூன்றும் தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்றது.
புகழ்பெற்ற சைவ தாந்திரிக மகான் அபிநவ குப்தர் காஷ்மீரை சேர்ந்தவரே.அவரது காலம் கி
1001 அராபியன் இரவுகள் கதையை எழுத தூண்டிய கதா சரித் சாகரா கதை தொகுப்பு காஷ்மீரில் உருவானதே.(இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நம்மூர் புத்தக கடைகளில் கிடைக்கிறது). காஷ்மீர் ராமாயணம்கூட உண்டு. யோக வசிஷ்ட மகா ராமாயணம் (வசிஷ்டர் மற்றும் ராமருக்கு இடையே நடை பெறும் நீண்ட உரையாடல்_மூலம் ராமாயணம்). இந் நூலை வாசிக்க சொல்லிகேட்டு பிரமித்து, அதை உடனே பாரசீகமொழியில் மொழி பெயர்க்க சொல்லி ஆணையிட்டவர் யார் தெரியுமா? முகலாய பேரரசர் அக்பர்!
அக்பருக்கு பிறகு நிலைமை மாற தொடங்கியது .வட மேற்கே இஸ்லாமிய நாடுகள் உருவான தாலும் காஷ்மீர் இந்தியாவின் எல்லை பகுதியாக இருந்ததினாலும் , அங்கே 12 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு விரும்பியும் விரும்பாமலும் இஸ்லாமிய மத மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. இந்தியாவுக்கு எதிராக தேசவிரோத சக்திகளை பாகிஸ்தான் தூண்டி விட்டு, இன்றைக்கும் காஷ்மீர் எனும் இந்தியாவின் அற்புத மான விரல்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. சொல்லுங்கள் காஷ்மீரை விட்டு கொடுத்து விடலாமா?
காஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா?, காஷ்மீர் வரலாறு விவகாரத்தில், காஷ்மீர் பிரச்சனைக்கு , காஷ்மீர் பிரச்சனை,
நன்றி: ஆனந்த விகட
இந்தியர்களின் ஆரோக்கியத்தைக்கெடுத்து,இந்திய பணத்தைக் கொள்ளையடிக்கும் சீனப் பொருட்கள்
உலகத்தையே இன்று சீனத் தயாரிப்புகள்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. சின்னக் குழந்தைகளுக்கான 5 ரூபாய் ப்ளாட்ஃபார பொம்மையில் ஆரம்பித்து தட்டுமுட்டு சாமான்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள் என்று நம்மூரில் எல்லாமே சைனா மயம்! கம்பெனி மொபைல்களை விட பத்து மடங்கு அதிக வசதியோடு வரும் சைனா மொபைல்கள் அதே கம்பெனி மொபைல்களுக்குப் பாதி விலையில் கிடைக்கின்றன. இந்த விலை வித்தியாசம்தான் அவர்களை உலகம்
முழுக்கப் பரவ வைத்திருக்கிறது. "விலையெல்லாம் ஓ.கே. ஆனால் தரம்?' என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கிறது. ஆம். விலையைக் குறைத்துத் தந்தால் போதும், தரம் பற்றிக் கவலை இல்லை' என்று நினைக்கும் சீனத் தயாரிப்புகளால் உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் உள்ளூர் சீன மக்களும் அடங்குவர்.
விளையாட்டுப் பொருளல்ல விஷப்பொருள்.. க்ளாடியா ஜுப்லெட் என்ற சீன நிறுவனம் தயாரித்த குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில் எல்லாம் அளவுக்கு அதிகமாக காரீயம் கலந்திருப்பது 2007இல் கண்டுபிடிக்கப் பட்டது. இது உடலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால், விற்பனைக்கு வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொண்டது அந்நிறுவனம்.
குழந்தைகளைக் கொல்லும் உணவு! சீனாவில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு வகைகளில் மெலமைன் என்ற நச்சுப் பொருள் இருப்பது 2008இல் தெரிய வந்தது. பல குழந்தைகளுக்கு இதனால் உடல்நிலை பாதிக்கப் பட்டது. 860 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. ஆறு குழந்தைகள் இறந்தனர். இதனால் இந்த நச்சு விஷயம் உலகிற்குத் தெரிய வந்தது..
எலக்ட்ரானிக் ஷாக் சீனாவில் தயாரிக்கப்படும் பல எலக்ட்ரானிக் சாதனங்களில் ஒயர்கள் சரிவர அமைக்கப்படுவ தில்லை. இதனால் இந்த சாதனங்கள் தீப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பல சீன எலக்ட்ரானிக் சாதனங்கள் வெளிநாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
பல் சுத்தமாகும் உடல் கெட்டுவிடும்.. சீனாவில் தயாரிக்கப்படும் பற்பசைகளில் டை எத்திலீன் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதிக்கும். மருந்தல்ல இது விஷம்! 2008இல் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஹெபாரின் என்ற மருந்து பலரின் உயிரைப் பறித்தது. 81 பேர் இறந்தனர். 700க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. வர்ணம் ஏற்படுத்தும் ரசாயனம்! சீனக் குழந்தைகளின் உடலில் காரீயம் மூலம் வரும் நச்சுப் பொருள் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. காரணம் சீனப் பொருட்களில் பூசப் பட்டிருக்கும் வண்ணங்களிலிருந்து காரீயம் உடலில் சேர்வது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் விஷயத்தில் உஷார்! பல வகை சீன சாக்லேட்கள், பால்பவுடர், சீன ரொட்டி ஆகியவற்றில் மெலமைன் என்ற நச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாய்கள் கூட தப்பவில்லை! சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட நாய்களுக்கான உணவு வகைகளில் நச்சுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 2007இல் இதனை உண்ட நாய்கள் பலவும் இறந்தன.
ஆபத்தான பயணம்! சீனாவில் தயாரிக்கப்படும் டயர்களில் சில பாதுகாப்புப் பட்டைகள் இல்லாதது 2007இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் டயர்களின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. வேகமாக வண்டி ஓடும்போது விபத்துகள் ஏற்படலாம்.
கழுத்தைச் சுத்தும் பாம்பு! சீனாவில் செய்யப்படும் அலங்கார நகைகளில் அதிக அளவில் காட்மியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுப் பொருள் தெரியாமல் வாயில் பட்டு கொஞ்சம் வயிற்றுக்குள் போனாலும், அது சிறுநீரகங்களையும், எலும்புகளையும் பாதிக்கும்.
ஆப்பிள் நல்லதா? சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் காய்ந்த ஆப்பிள்களில் புற்றுநோயை உருவாக்கும் நச்சு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலனாகும் காளான்! சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் காளன்களில் பூச்சி மருந்து அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதனாலேயே அதனைப் பல நாடுகள் தடை செய்துள்ளன.
கொள்ளை நோயைப் பரப்பும் வெள்ளை! சீனாவில் தயாரிக்கப்படும் சுவர்ப் பூச்சுகள் சல்ஃபர் வாயுக்கள் வெளியிடும் என்றும் அந்தச் சுவரிலே பொருத்தப்படும் ஒயர்களையும் பைப்களையும் பாதிக்கும் என்றும் கண்டறிந்துள்ளார்கள். இந்த சல்ஃபர் வாயுக்களால் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மின்சார விபத்துகளும் ஏற்படுகிறது.
இன்று தமிழ்நாட்டிலும் எல்லோரது வீட்டிலும் பல கிலோ அளவிற்கு சீனா பிளாஸ்டிக் குப்பைகள் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் ஆபத்தை அரசோ, அரசியல்வாதிகளோ, சுற்றுச்சூழல் துறையோ எவருமே உணரவில்லை! சீனப் பொருட்களைத் தடை செய்வதைப் பற்றியோ, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பூதாகாரப் பிரச்னைக்குக் கையாலாகாத மத்திய அரசும், ஆளும் கட்சிகளுமே காரணம்! இந்த ஆபத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாம் தான் பரப்ப வேண்டும். பரப்பினால் மட்டுமே தடுக்க முடியும். எனவே, எனது இந்திய சகோதர,சகோதரிகளே ,கம்யூனிஸ்டுகளை ஒதுக்கியதைப் போல சீனத் தயாரிப்புகளையும் புறக்கணிப்போம்;நமது இந்தியாவை உலகின் ஒரே வல்லரசாக்குவோம்!!! நன்றி:தமிழ்த்தாமரை
Tuesday, July 3, 2012
அறிவோம் ஸ்ரீதோஷம்
ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி? என்று நமது இந்து மன்னர் ஒருவர்,ஆங்கிலேயத் தளபதியிடம் கேட்டார்."அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களுடைய மொழி இலக்கியங்களைப் படிக்காமல் பார்த்துக்கொள்; அதுபோதும்" என்றான் அந்த ஆங்கிலேயத் தளபதி.
இந்த சம்பவம் கி.பி.1840 வாக்கில் நமது பாரத நாட்டில் நிகழ்ந்த ஒரு உன்னதமான அதே சமயம் நம் ஒவ்வொருவரின் சிந்தனையையும் தூண்டும் உரையாடல் ஆகும்.நாம் ஏன் ஜோதிடம்,வேதங்கள், சமஸ்க்ருதம், தேவாரம், திருவாசகம், திரு மந்திரம், திருப்பாவை, திருவெம்பாவை முதலான நம்முடைய சமய இலக்கியங்களை வாசிப்பது கூட இல்லை; இவைகளை இழிவுபடுத்தும் எந்த ஒரு செயலையும் நாம் ஏன் கண்டிப்பதில்லை?
ஏனெனில்,இவையெல்லாம் நமது முன்னோர்கள் உருவாக்கிய பக்தியைத் தூண்டும் இலக்கியங்கள் என்பது தெரிந்தும் கூட,இதன் உள்ளார்ந்த மதிப்பீட்டை நாமே உணரவில்லை; இந்து தர்மத்தின் ஆணிவேராக இருப்பவை: குடும்ப அமைப்பு, பெண்களை உயர்வாகவும், மரியாதையாகவும் போற்றுதல், பசு, கோவில் இவைகளை பாதுகாத்தல் ஆகும். மேற்கு நாடுகளின் கலாச்சாரம் பெண்களை காமப்பொருளாக பயன்படுத்துகிறது.(ஹாலிவுட் படங்கள் இதையே வலியுறுத்துகின்றன.ஹாலிவுட்டைக் காப்பியடிக்கும் இந்தியத் திரைப்படங்களும் இன்று அதையே திரைப்படக்காட்சிகளாக் வெளியிடுகின்றன);
வழிபாட்டை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கிறது (சர்ச்களில் தேர்தல் சமயத்தில் எல்லாக் கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்கின்றனர்); குடும்பம் என்பதை மேல்நாட்டு சிந்தனையே ஒரு ஒப்பந்தமாக நினைக்கிறது.(நம் நாட்டில் குடும்பம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர்; வாழையடி வாழையாக குடும்பம் என்ற மரபு உறுதியாக இருக்கும்; ஏழேழு ஜன்மத்துக்கும் கணவன் மனைவி என்ற பந்தம் தொடரும்); பணம் சம்பாதிக்க மானத்தைக் கூட விற்கலாம் என்பதும் மேல்நாட்டுப் பண்பாடு ஆகும்.
1995 முதல் இந்தியாவில் ஊடுருவிய உலகமயமாக்கல்,இந்த மேல்நாட்டுக் கலாச்சாரமே சிறந்தது என்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. இதன் விளைவு? உள்ளார்ந்த மற்றும் ஆத்மார்த்தமான பக்தியுடன் கோவிலுக்குச் செல்வோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.சினிமாவும், டிவியும், செல்போனும், இண்டர்நெட்டும் பெண் இனத்தின் மீதான மதிப்பைச் சீர்குலைத்துவிட்டன; நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிஜமான நட்பு, பாசம் என்பவை மறக்கடிக்கப்பட்டு நயவஞ்சகம் என்பதை கணவன் மனைவிக்குள்ளும்; அக்கா தம்பிக்குள்ளும்,அண்ணன் தங்கைக்குள்ளும் தன்முனைப்புப்போரை(ஈகோ)த் தூண்டிவிட்டது.இதனால் முறையற்ற உறவுகளே உண்மையான அன்பு என்பதை இந்தியப் பெண்களும் நம்பத்து வங்கிவிட்டனர்.எப்படிப் பணம் சம்பாதித்தால் என்ன? வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையை பெரும்பாலான குடும்பங்கள் ஏற்கும் சூழ்நிலையை உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவை குடும்பம்,பெண்,பசு,கோவில் இவைகள் மீதான மரியாதையையும்,பாதுகாப்பையும் சீரழித்துவிட்டன.இதைச் சரிசெய்யும் அரசாங்கமும் பொறுப்பாகச் செயல்படுவதில்லை;
இந்த சூழலில்,கொடூரமான பாவங்களுடன் பல மனிதர்கள் பிறந்துகொண்டிருக்கிறார்கள்.யாரையும் சுலபமாக சந்தேகப்படும் சுபாவம் சகஜமாகிவிட்டது. தனிமனித ஒழுக்கம் என்பது இன்று கானல் நீராகிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஸ்ரீதோஷம் எப்படி செயல்பட்டுவருகிறது என்பதை இங்கே கொஞ்சம் பார்ப்போம்:
10 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள், தெருவில் தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவனுடன் பேசிக்கொண்டே வந்திருக்கிறாள். அதைப்பார்த்த அந்த மகளின் அப்பா,அவள் வீட்டுக்கு வந்ததும்,அவளை சந்தேகப்பட்டு படுகேவலமாகத் திட்டியிருக்கிறார்.அப்படி ஆரம்பித்த திட்டு,சுமார் 20 வருடங்களாகத் தொடர, அந்த 10 வகுப்பு படிக்கும் மகளை மனநோயாளி அளவுக்கு மாற்றிவிட்டது;தனது மகள் எந்த ஒரு ஆணிடம் பேசினாலும் குற்றம்;என்ற அளவுக்கு அவளது ஆளுமையை தினம் தினம் சந்தேகம் என்னும் ஊசியால் குத்திக்கிழிக்க,அவளுக்கோ திருமணத்தின் மீதே வெறுப்பு வந்துவிட்டது.
அந்த அப்பா தனது மகள் மீது உண்டான சந்தேகத்தை அவளிடமே கேட்டு நிவர்த்தி செய்யாமல்,அவளைப் பற்றிக்கேவலமாகவும், இழிவாகவும் ஊரெல்லாம்,தெருவெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.விளைவு? அந்தக்குடும்பத்தில் அந்த 10 ஆம் வகுப்பு படித்த மகளுக்கு மட்டுமல்ல;அடுத்தடுத்து படித்துக்கொண்டிருந்த இரண்டு மகள்களுக்கும் இன்று வரை திருமணம் நடைபெற வில்லை ;இத்தனைக்கும் அந்த 10 வகுப்பு படித்த மகள் ஒழுக்கத்தின் முன் உதாரணமாகவே திகழ்ந்திருக்கிறாள். ஆனால்,அந்தக் குடும்பம் வாழும் தெரு என்ன நினைக்கிறது? பெத்த மகளைப் பற்றி அவளது அப்பாவே குறை சொல்லுகிறார்.இதில் உண்மையில்லாமல் இருக்குமா? என்று நினைக்கிறது. இது ஸ்ரீதோஷத்தின் அடையாளமாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை ஆகும்.
திருமணம் ஆகும் வரையிலும் தனது தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரியிடம் மட்டுமே முகம் பார்த்து நேருக்கு நேராகப் பேசுபவன் அந்த இளைஞன். பிற பெண்களிடம்(பெரியப்பா மற்றும் சித்தப்பா மகள்களிடமும் முகம் பார்த்துப் பேசுவதில்லை;அவ்வளவு கூச்சசுபாவம் உள்ளவன்) முகம் பார்த்துப் பேசத் தெரியாது.அப்பேர்ப்பட்ட இளைஞனுக்கு 25 வது வயதில் திருமணம் செய்து வைத்தனர்;அப்படி திருமணம் செய்து வைத்த நாள் முதல்,அவனைப் பெற்ற பெற்றோர்களே அவனது ஒழுக்கத்தைப் பற்றி தாறுமாறாக உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசி வருகிறார்கள்.ஓரிரு வருடங்களில் அந்த இளைஞனின் மனைவியே ,தனது மாமனார் மாமியாரின் பொய் பிரச்சாரத்தை நம்பி அவனை விட்டு நிரந்தரமாக பிரிந்து போய்விட்டாள். அப்படி போனப்பின்னர்,அந்த இளைஞனை வீட்டை விட்டே துரத்தி விட்டனர் அவனது பெற்றோர். இதுவும் ஸ்ரீதோஷத்தின் விளைவுக்கு உதாரணமாக இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை ஆகும்.
ஒரு தவறும் செய்யாமலேயே காமரீதியான அவமானங்களை யாரெல்லாம் அனுபவிக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஸ்ரீதோஷம் எனப்படும் பெண் சாபத்தினை அனுபவித்துவருகிறார்கள் என்று அர்த்தம். ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது அல்லது சுக்கிரனுடன் செவ்வாயும் சேர்ந்து இரு கிரகங்களுடனும் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால்,அவர்கள் ஸ்ரீதோஷத்துடன் பிறந்துள்ளார்கள் என்று அர்த்தம்.
ஒரு ஜாதகரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்து, அந்த ஜாதகருக்கு ராகு அல்லது கேது அல்லது சுக்கிர மஹாதிசை வந்தால், அவர்கள் இந்தபிறவியிலேயே ஸ்ரீதோஷத்தை நீக்க வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது என்று பொருள்.முடிந்தால் இந்த திசைகள் ஆரம்பிக்கும் முன்பே ஸ்ரீதோஷத்தை நீக்கிவிடுவது நல்லது.அவ்வாறு செய்யாவிடில் அவர்கள் சுயமரியாதையை இழந்துவிடும் சூழ்நிலை உருவாகிவிடும். இன்றைய நவீன உலகத்தில் கணிப்பொறி மற்றும் இணையதள சேவைகள்,செல்போன் சேவைகள் ராகு மற்றும் கேதுவின் காரகத்துவமாகி செயல்படுத்துகிறது. சுக்கிரனோ சுகம், காம சுகம், தாம்பத்தியம், சுவையான உணவுகள், எதிர்பாலினர்(ஆண் எனில் பெண்;பெண் எனில் ஆண்) , காதல் வயப்படுதல் போன்றவைகளுக்குக் காரகத்துவமாகியிருக்கிறார்.
முற்பிறவியில் ஆணாகப்பிறந்து மனம்போல வாழ்ந்து வந்து,தனது அன்பான மனைவியின் கற்பினை கேவலப்படுத்தியவர்களும்,பெண்ணாகப் பிறந்து தனது ஒழுக்கமான கணவனை எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்தவர்களுமே இந்த ஸ்ரீதோஷத்துடன் பிறக்கிறார்கள்.எனவே, இந்த அவமானத்தை அனுபவத்தவர்களுக்கே இதன் வேதனையும், மனவலியும் புரியும்.
ஸ்ரீதோஷம் இருக்கும் ஆண்கள் இதேபோல 24 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.
மயிலாடுதுறை,சீர்காழி, பூம்புகார் இந்த நகரங்கள் முக்கோணமாக அமைந்திருக்கின்றன.இந்த மூன்று நகரங்களுக்கு நடுவே மேலப்பெரும்பள்ளம் எனப்படும் மேலவலம்புரம் அமைந்திருக்கிறது.இதற்கு மிக அருகில் (3 கி.மீ) கேது ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலை ஒட்டி கடைகள் இல்லை;கோவிலின் ஸ்தலவிருட்சமாக பனைமரம் இருக்கிறது.கோவிலின் வாசலில் எரண்ட மகரிஷியின் ஜீவசமாதி இருக்கிறது.கோவிலுக்குள்ளே ஒரே சன்னதியில் காலபைரவரும்,சனீஸ்வரரும் இருக்கிறார்கள்.இவ்வாறு இருக்கும் கோவில்களில் சனிப்பிரீதி செய்தால்,சனியால் துன்பங்கள் வராது.(காலபைரவருக்கு சனிபகவான் கட்டுப்பட்டவர் என்று அர்த்தம்!) எனவே,நமது ஊரில் பரிகாரப் பொருட்களை வாங்கி வர வேண்டும்.இந்த 24 வெள்ளிக்கிழமைகளும் செல்ல இயலாதவர்கள் முதல் தடவை மட்டும் வெள்ளிக்கிழமை சென்று விட்டு,மீதி 23 தடவை ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லலாம்.இந்த 24 கிழமைகளும் சுயபரிகாரத்தை முடிக்கும் வரையிலும் எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது.அப்படி இருந்தால் மட்டுமே இந்த ஸ்ரீதோஷபரிகாரம் நம்மை பாதுகாக்கும்.
Monday, July 2, 2012
ஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்மீகப்பயிற்சி வகுப்பு
தீபலட்சுமி வழிபாட்டு முறையும் அதை பின்பற்றும் வழிமுறைகளும்!!!
கலியுகத்தில் யார் கோடீஸ்வரர்கள் தெரியுமா? தனது கல்வித்தகுதி,வேலை,கிடைக்கும் சம்பளம்,மனோபாவம் இவைகளுக்குத் தகுந்தாற்போல பொருத்தமான வாழ்க்கைத்துணை(ஆணுக்குப் பொருத்தமான மனைவி; பெண்ணுக்குப் பொருத்தமான கணவன்) அமைவதுதான் முதல்படி!
அடுத்து இந்த இருவருக்கும் கடன்,நோய்,எதிரி,குடும்பக்குழப்பங்கள் இல்லாமல் இருப்பது இரண்டாம் படி!!
மூன்றாவதாக விரும்பும் விதமான வீடு,சொத்துக்கள்,மழலைச்செல்வம்,ஆரோக்கியம் இவைகள் இருந்தால் மூன்றாவது மற்றும் இறுதிப்படி!!!
நான்காவது படி:நட்பு மற்றும் உறவினர்களின் உளப்பூர்வமான மரியாதை நமது குடும்பத்தின் மீது இருக்க வேண்டும்.
இந்த நான்கு படிகளும் நாம் வாழ்ந்துவரும் கலியுகத்தில் கிடைப்பது அரிதிலும் அரிதே ஆகும்.
இந்த குறைகளை நீக்கிட,பல சித்தர்கள்,மஹான்கள்,சிவனடியார்கள் போதித்த பல தெய்வீக ரகசியங்கள் தீபலட்சுமி வழிபாடாக மலரப்போகிறது.
பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட தெய்வீக ரகசியங்கள் இந்த தீபலட்சுமி வழிபாட்டுப் பயிற்சியின் மூலமாக உங்களுக்குக் கிடைக்க இருக்கிறது என்பது அனுபவ உண்மை!!!
தீபலட்சுமி வழிபாட்டுப்பயிற்சியில் தாங்கள் கற்ற தெய்வீக ரகசியங்களை தினமும் 15 நிமிடம் மட்டும் பின்பற்றுவதன் மூலமாக உங்களுக்கு பின்வரும் வரங்கள் ஓவ்வொன்றாகக் கிடைக்கும்:
1.நீண்டகாலமாக தடைபட்டிருந்த திருமணம் உடனே நடைபெறும்;தகுந்த கணவன் அமைவான்;
2.நீண்டகாலமாக கணவன் மனைவிக்குள் இருந்துவரும் மனக்கசப்புகள் அடியோடு நீங்கிவிடும்;நெருங்கிய அந்நியோன்னியம் உண்டாகும்.(என் வீட்டுக்காரர் திருந்துவாருன்னு கனவுல கூட நினைக்கல என்று 48 நாட்கள் பின்பற்றியப்பின்னர் சொல்வீர்கள்!!!)
3.பல பெண்களுக்கு குழந்தை கருவில் தங்காமல் கலைந்துவிடுகிறது;இதைச் சரி செய்ய பலர் ஏராளமான பணம் செலவழித்தும்,அந்தக் குறை நீங்காமல் தவிப்பவர்களுக்கு இந்த தீபலட்சுமி வழிபாடு ஆசியைத் தரும்;அதன் மூலமாக அவர்களுக்கு குழந்தை கருவில் தங்கும்;சுகப்பிரசவம் நிகழும்.
4.பல பெண்கள் தங்கள் குழந்தைகளுக்காகத்தான் எல்லா வேதனைகளையும் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்.அதே சமயம் அவர்களுக்கு அவர்கள் தினமும் வழிபடும் தெய்வ அருளால் மன உறுதி கிட்டிவருகிறது.அந்த தெய்வத்தை தரிசித்து,கலந்துரையாடும் பாக்கியம் இந்த தீபலட்சுமி வழிபாடு மூலமாகக் கிடைக்கும்.
5.சபலத்தாலோ,சந்தர்ப்ப சூழ்நிலையாலோ பல பெண்கள் மணமான பின்னரோ/மணம் ஆகும் முன்பாகவோ தனது ரத்த உறவுகளால் துரத்தப்பட்டிருக்கிறார்கள்.அப்படி துரத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சில லட்சம்பேர்கள் தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் தனித்து வாழ்ந்து வருகிறார்கள்.
என்னதான் ஓடி ஓடி சம்பாதித்து சொந்தக்காலில் நின்றாலும் அவர்களின் ஆழ்மனதில் தான் தனது குடும்பத்தாரின்(அம்மா,அப்பா,அண்ணன்,அக்கா,கணவன், மகன்,மகள்,பேரன்,பேத்தி)
பாசத்துக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை விரட்டியவர்கள் தன்னிடம் அன்பு காட்டிட மாட்டார்களா? என்று ஏங்குகிறார்கள்.அந்த ஏக்கம் இந்த தீபலட்சுமி வழிபாட்டைக் கற்று குறைந்தது 48 நாட்கள் பின்பற்றினால்,எப்பேர்ப்பட்ட பிரிந்த/சிதைந்த/சிதறிய குடும்பமும் இந்த தனித்து வாழும் பெண்களைத் தேடி வரும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளத் தகுதி: 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.
எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனுமதி உண்டு.
சமுதாயத்தில் எந்த விதமான சூழ்நிலையில் இருந்தாலும் அனுமதி சுலபமாகக் கிடைக்கும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள பின்வரும் மின் அஞ்சலுக்கு தங்களின் பிறந்த ஜாதக நகல்,போட்டோ,பிறந்த ஊர்,தற்போது வாழ்ந்து வரும் ஊர்,செல் எண் போன்றவைகளை அனுப்பி வைக்கவேண்டும்:aanmigakkadal@gmail.com
உங்கள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி:3.8.2012
தேர்ந்தெடுக்கப்படும் ஆன்மீகக்கடல் வாசகிகளுக்கு 4.8.2012 முதல் 10.8.2012 வரை மின் அஞ்சல் மூலமாகவும்,செல் எண் மூலமாகவும்,குறுந்தகவல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.இப்பயிற்சிக்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.பயிற்சி நேரம்: மூன்று மணி நேரம் மட்டுமே!
பயிற்சி நடைபெறும் இடம்: குற்றாலம்,நெல்லை மாவட்டம்
பயிற்சி நடைபெறும் நாள்:தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படும்.
ஓம்சிவசிவஓம்
Subscribe to:
Posts (Atom)






