Friday, October 7, 2011

destroying BULD-Up USA,$, and ARROGENT WEAPON GLOBAL POLITICS

Inspiration of aanmigakkadal birth

சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்





உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக 1.கொழுத்த சரீரம் உருவாகாது. 2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது.




இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியம் தொடர்வதால் வாழ்நாளும் நீடிக்கிறது. பிறநோய்கள் இருந்தாலும் எளிதில் அவற்றைக் குணப்படுத்தலாம்.



ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் என்பவர் தனது ஆய்வின் முலம் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்.



சரி. சீனர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள்?



பால் சேர்க்காத கிரீன் டீ யை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர்.



சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர்.



காலையில் முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர். இதுவே காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும்.



மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர்.



இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது.



கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்.








thanks: our reader

பதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்!


பதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்!குலதெய்வ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள். இதற்குப் பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை நாடியில் கூறியுள்ளனர். அந்த வகையில், அகத்தியர், ‘‘சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா & பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதிச் சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே’’ என்கிறார்.

பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோயில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார். ‘‘அஞ்சருவிச் சலத்தருகு யடுத்தே வரகலூராம் & காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டைச் செங்கனூராம் முழு மண்டலமே. தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே’’ என்கிறார்.

இப்பாடலின் பொருள்: குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள். காரைக்குடியில் பைரவர். சோழ புரத்தில் பைரவச்சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர். திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி. திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர். அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.

வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.

‘‘கடக மஸ்தமன பொழுததனிலே சுங்கனிருக்க பைரவனை & விக்ரமனை & சட்டமுனியை கை தொழுதக்கால் ஏவலுஞ்சுன்யமும் விலக காணீரே & பெருஞ்செல்வஞ் சேரப்பாரீரே & தீராப் பிணி மடிய நிற்பீரே & மடிந்தார் தமக்காற்று திதிபிண்ட தோஷமுமொருசேர நீங்கி நீடு வாழ்வீரே யல்லால் நீத்தார் தாமுந் நல்லாசி யீவாரே’’ என்கிறார்.
பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது. செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.‘‘போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும். ஆபரணமொடு பேரானந்தமுஞ் சேருமப் பானு வஸ்தமனப்போது பாயஸன்னம் நாட் பண்டத்து படைப்போர்க்கே’’ நன்றிகள்:தினகரன் 12.8.11 மற்றும் நமது ஆன்மீகக்கடல் வாசகர்








Tuesday, October 4, 2011

காட்டுக்குள் ஓர் அதிசயம்! _








இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ
 மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம்.

 சிங்கராஜ வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும்
 பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும்
 தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
 இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம்
 என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது
 பயணம் ஆரம்பமானது.

 'ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. கங்கொடை என்கிற இடத்த தாண்டி
 காட்டு வழியா போகனும். யானை உருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் அடையாளம்'
 என்றார் ஊர் பெரியவர் ஒருவர்.

 யானை உருக்கொண்ட ஆல மரம் என்றதும் எமது எதிர்பார்ப்பு அதிகமானது.
 நகரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் தூரப் பயணம். சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை
 கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். காட்டுவழியே கால்நடையாகச் செல்லும்போது
 கவனமாக செல்லும்படியும் குரங்குகளின் அட்டகாசம் அதிகம் என்றும் கங்கொடையில்
 கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளாகள் கூறினார்கள்.

 உயர்ந்த மலை. அதிகாலைப் பொழுதில் சில்லென்ற காற்றோடு பனி படர்ந்து உள்ளத்தையும்
 நனைக்கிறது. காட்டுக்குள் கரடுமுரடான பாதையில் வெகுதூரம் நடந்த பின்னர்
 தெரிகிறது அந்த ஆலமரம்.
 ஆம்! அந்தப் பெரியவர் சொன்ன ஆலமரமாகத் தான் இருக்கும் என ஊகித்துக்கொண்டோம்.
 ஆனாலும் அந்த இடத்திற்குச் செல்வதற்கு பாதை இருக்கவில்லை. பாதை எங்கே எனத் தேடியபோதுதான் மலைப்பாறைக்கு உச்சியில் சிறியதாய் ஓர் ஆலமரம் இருப்பதும்
ஓங்கியுயர்ந்த தென்னைமரத்தோடு கீழே கடவுள் சிலைகள் இருப்பதற்கான அடையாளம்
 இருப்பதையும் கண்டோம்.
 கோயிலுக்கு செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் பழைமையை
 எடுத்துக்காட்டின.
 பாதையை அமைத்துக்கொண்டு செல்வோம் என உறுதிகொண்டு ஆலமரத்தை நோக்கிய எமது நடையை
 ஆரம்பித்தோம்.

 என்ன அதிசம்? ஆலமரத்தின் ஒரு கிளை யானைத் தந்தத்தைப் போலவே காட்சியளிக்கிறது.
 மற்றொரு கிளையும் அவ்வாறுதான். யானையின் கண்களைப் போலவே இயற்கை படைப்பின்
 அடையாளங்கள் விளங்கின.

 பரந்த உலகில் எல்லைகளற்ற அதிசயங்களோடும் அழகோடும் மனித சக்திக்கு
 அப்பாற்பட்டிருக்கும் இயற்கையில் இப்படியும் ஒரு பரிமாணம் இருக்கிறதா என
 வியப்புச் சிந்தனை துளிர்ந்தது.
 அங்கிருந்து சாதாரண தூரத்தில் தான் அந்தக் கோயில் இருந்தது. எனினும்
 முட்செடிகளுக்குள்ளே நடக்கவேண்டிய கட்டாயம்.

 சரி ஆகட்டும் என எண்ணிக்கொண்டு கோயிலை நோக்கி சென்றோம். முற்றுமுழுதாக
 பரந்ததொரு பாறையின் மீதிருக்கிறது கோயில். மிக மிக பழைமையான படிக்கட்டுகள்
 உடைந்த நிலையில் எம்மை வரவேற்றன. பாதணிகளை அகற்றிக்கொண்டு நாம் மேலே சென்றபோது,
 தூரத்தே தெரிந்த மலைகள் அனைத்தும் மிக அருகில் தெரிவது போலிருந்தது.
 மென்மையான காற்று அமைதி கலந்து வீசியது. அது ஆழ்மனதின் மையங்களை
 தொட்டுச்செல்வதாய் ஓர் உணர்வு. கவனிப்பாரன்றி பாழடைந்த நிலைமையில் மிகச்சிறிய
 இலிங்கச் சிலையோடு இன்னும் சில இந்துத் தெய்வச் சிலைகள் இருந்தன.
 யாரோ பற்றவைத்துவிட்டுப்போன ஊதுவர்த்தியும் சில காட்டுப்பூக்களும் வாசனை
 வழங்கிக்கொண்டிருந்தன.
 நாமும் கடவுளை வணங்கிவிட்டு இந்த ஆலயம் பற்றி மேலதிக தகவல்களை யாரிடம் பெறலாம்
 என எண்ணிக்கொண்டிருந்தவேளை தூரத்தே ஒரு பெரியவர் களைப்போடு
 நடந்துவந்துகொண்டிருந்தார்.

 'என்னோட பெயர் தேவராஜ். வயசு 68ஆகிறது. நான் சின்னவயசில இருந்து இங்கதான்
 இருக்கேன். காட்டுப் பக்கத்தில தான் என்னோட வீடு இருக்குது. 1800
 வருஷத்திலிருந்து இந்தக் கோயில் இருக்கிறதா எங்க தாத்தா சொல்லுவாரு.
 நல்ல சக்தியுள்ள கோயிலுங்க. இப்போ யாருமே கவனிக்கிறதில்ல. கங்கொடையில உள்ள
 சின்னப் பிள்ளைங்க இங்க வந்து விளையாடுவாங்க. அந்த ஆல மரத்த பார்த்தீங்களா? அத
 பார்த்தாலே உங்களுக்கு இந்தக் கோயிலோட அதிசயம் விளங்கியிருக்கும்.
 காட்டுக்குள்ள ஆறு ஒன்னு இருக்குது. அதுக்கு மூலிகை ஆறு னு பெயர். சிங்கராஜ
 காட்டுக்குள்ள மூலிகை கலந்து வருது. அதுதான் இந்தக் கோயிலோட தீர்த்தம். இன்னும்
 ஒரு கிலோ மீற்றர் நடந்திங்கன்னா அதையும் பார்த்து குளிச்சிட்டு வரலாம். நோய்
 தீர்க்கக் கூடிய ஆறு அது' .

Saturday, October 1, 2011

குமுதம் ஜோதிடம் (7.10.11)கேள்வி பதில் பகுதியிலிருந்து






கேள்வி: ‘வெள்ளிமணி’ காலத்திலிருந்து தங்களின் எழுத்துக்களின் ஈர்ப்பில் மனதைக் கொடுத்தவன் நான்.இந்தியாவின் ஜாதகத்தைப் பற்றி பல விளக்கங்களை அவ்வப்போது கூறிவருகிறீர்கள்.அவை உண்மையாக இருப்பதையும் பார்த்து வருகிறோம்.



ஆனால்,நமது அண்டை நாடான பாகிஸ்தானின் ஜாதகம் பற்றியும் தாங்கள் அவ்வப்போது எழுதி வரவேண்டும்.ஏனெனில்,அந்த நாட்டில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நம் நாட்டைப் பாதிக்கின்றன.மேலும் நம் நாட்டை எதிரியாகக் கருதிச் செயல்பட்டுவருகிறது பாகிஸ்தான்.



ஆதலால்,ஏதோ ஒரு வகையில் பாகிஸ்தானின் ஜாதகத்திற்கும்,நம் நாட்டிற்கும் தொடர்பு உள்ளது தெரிகிறதல்லவா! ஆதலால்தான்,அந்நாட்டின் ஜாதகத்தைப் பற்றியும் கூற வேண்டுகிறோம்.



பதில்: தாங்கள் கூறியிருப்பவை அனைத்தும் முற்றிலும் உண்மையே! பாகிஸ்தான் ஜாதக கிரகநிலைகளுக்கும்,இந்திய நாட்டிற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.



கொலையிலும்,கொள்ளையிலும்,கற்பழிப்பிலும் தோன்றியது பாகிஸ்தான்.இந்தியா பிளவுபடுத்தப்பட்டபோது,பாகிஸ்தான் பகுதியில் இந்துக்கள் கொடூரமான முறைகளில் கொல்லப்பட்டதை ‘நியூயார்க் டைம்ஸ்’ ‘லண்டன் டைம்ஸ்’ போன்ற உலகப் பிரசித்திபெற்ற பத்திரிகைகள் விவரமாக வெளியிட்டிருந்தன.



தாங்கள் அனைவரும்,ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் தான்.பல வழிகளிலும் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான் என்பதை மறந்து இந்துக்களைக் கொன்று குவித்தனர் பாகிஸ்தானியர்கள்.பல பாகிஸ்தானியர்களின் வீடுகளில் ஏராளமான இந்துப்பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு,கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு,பின்னர் படுகொலை செய்யப்பட்டனர்.கணக்கற்ற பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு,பாகிஸ்தானியர்களுக்குப் பலவந்தமாக திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.பல பாகிஸ்தானியர்களுக்கு இதனால் பல ‘மனைவிகள்’ ஏற்பட்டனர்.இவை அனைத்தையும் மேலை நாட்டுப்பத்திரிகைகள் குறிப்பிட்டுக் கூறியுள்ளன.



எவ்விதம் தனிப்பட்ட மனிதர்களுக்கு ‘பாவம்’

‘புண்ணியம்’ என்ற தர்மநெறி முறைகள் உள்ளனவோ,அதே தர்மநெறிமுறைகள் நாடுகளுக்கும் உண்டு.நாட்டை அரசாளுபவர்களுக்கும் உண்டு.



நிரபராதிகளான இந்துக்களை அன்று கொன்று குவித்த பாவம்தான்,இன்று பாகிஸ்தானியர்களை,பாகிஸ்தானியர்களே கொன்று வருகின்றனர்.பல்லாயிரக்கணக்கான இந்துப் பெண்கள் அன்று கதறி,அவர்கள் நெஞ்சில் பெருகிய கண்ணீர்தான் இன்று பாகிஸ்தான் மக்களை சுட்டெரிக்கிறது.



1990 ஆம் ஆண்டில் ‘தினமணி தீபாவளி மலரில்’ “21 ஆம் நூற்றாண்டில் உலகம்’ என்ற தலைப்பில் பாகிஸ்தான் ஜாதகப்படி, அந்த நாட்டில் உள்நாட்டுக்கலவரங்கள் ஏற்படும் என்பதையும்,பாகிஸ்தானின் ஒரு பகுதி சீனாவின் ஆதிக்கத்திலும்,ஒரு பகுதி ஆப்கானிஸ்தானின் ஆதிக்கத்திலும் சென்றுவிடும் என்பதையும்,எஞ்சிய குறுகிய பகுதி மட்டும்தான் பாகிஸ்தானாக இருக்கும் என்பதையும் நாங்கள் எழுதியுள்ளதை வாசக அன்பர்களுக்கு நினைவூட்டுகிறோம்.



என்று பாகிஸ்தான் தனது தவறை உணர்ந்து,நேர்மை,தர்மம் எனும் பாதையில் திரும்புகிறதோ,அன்றுதான் அதற்கும் அதன் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.





இந்தியாவை அழித்தால்தான் தான் வாழமுடியும் என்று இனியும் செயல்பட்டால்,அந்நாடு அடியோடு அழிந்துவிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை.இவ்விதம் பாகிஸ்தான் விதியுடன் விளையாடுகிறதே என்பதை நினைத்துத்தான்,நாங்கள் அந்நாட்டின் ஜாதகத்தைப் பற்றி விமரிசிப்பதில்லை.

தங்கள் கடிதங்களுக்கு மீண்டும் நன்றி!



ஆன்மீகக்கடலின் கருத்து:மதம் என்ற போர்வையில் பாகிஸ்தான் செய்த அட்டூழியங்களை ,இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி,கம்யூனிஸ்டுகள்,ஜாதிக்கட்சிகள் வாய் திறக்காது.(இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் நகரங்கள்,மாவட்டங்களில் இதே கொடூரங்கள் 1947 முதல் இன்று வரை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.உதாரணங்கள்:தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் காயல்பட்டிணம்,கேரளாவில் மலப்புரம் மாவட்டம்,கோயம்புத்தூரில் இருக்கும் கோட்டைமேடுபகுதி. . .)ஏனெனில்,இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே கட்சிக்கு ஓட்டு போட்டு வருகின்றனர்.எனவே,இந்தக்கட்சிகளுக்கு இந்திய நலன் முக்கியமில்லை;சிறுபான்மையினர் ஓட்டுக்களும் அதன்மூலமாக அதிகாரமும்,அதனால் கொள்ளையடிப்பது மட்டுமே முக்கியம்.



இதன் உச்சகட்டமாகத்தான் நேற்று(30.9.11) காஷ்மீர் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்திருக்கின்றனர்.இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கி,பிடிபட்டு,இந்திய நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவனுக்கு,ஆதரவாகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றனர்.இதை விடக் கேவலம் எதுவும் உண்டா?



இந்துக்களை ஒருங்கிணைக்கவிடாமல் தடுக்கவே ஜாதிக்கட்சிகள் ஆரம்பிக்கவும்,வளர்க்கவும் இஸ்லாமிய,கிறிஸ்தவ அமைப்புக்கள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துக்கொண்டே இருக்கின்றன.இதில் அமெரிக்கா,இங்கிலாந்து,பாகிஸ்தான்,சவுதி நாட்டின் உளவு அமைப்புகளின் சித்துவேலைகளும் உண்டு.இதை காங்கிரஸ் தடுக்கக் கூட செய்யாது.இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் உளவுத்துறையின் பைல்களில் தூங்கிக்கொண்டிருக்கும் அல்லது செத்துக்கொண்டிருக்கும்?!