Thursday, September 15, 2011

அணுஆட்டம்:ஜீ.வி.தொடர்








பொதுமக்கள் பணத்தைத் திருடுவதைத் தவிர,பிற துறைகள் அனைத்திலும் இந்தியா பின் தங்கியேதான் இருக்கிறது.ஒரே நாளில்(செப் 7,2011) இந்தியத் தலைநகர் டெல்லியில் தீவிரவாதக் குண்டுவெடிப்பும்,4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் நிகழ்ந்திருக்கிறது.பாதுகாப்பின்மைக்கு இதைத் தவிர,வேறு உதாரணம் தேவையில்லை.



‘யாரிடம் சொல்லி அழ?’ என்று தலைப்பிட்ட 8.6.2011 தலையங்கத்தில் தினமணி நாளிதழ் சொல்லிற்று. ‘இந்தியாவின் அணு உலைக்கூடங்கள் பாதுகாப்பற்றவை என்பது மட்டுமல்ல;இவற்றுள் தீவிரவாதிகள் புகுந்து அணுஆயுதம் செய்வதற்கான மூலப்பொருள்களைத் திருடுவது,வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் எளிது.இதை மும்பைத்தாக்குதல் தொடர்பான அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.இவ்வளவு இருந்தும் இந்திய அரசு, ‘பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிசெய்துவிட்டால் போதுமானது.அணு உலைக்கலன்களால் பிரச்னை இருக்காது’ என்று சொல்கிறது எவ்வளவு பொறுப்பற்றத்தனம்?



நிலநடுக்கமும் ,தீவிரவாதக் குண்டுவெடிப்பும் நடந்து முடிந்த கையோடு,பகல் 12.30 மணிக்கு ‘அணு பாதுகாப்பு ஒழுங்காற்று அதிகாரச் சட்டம் 2011’ எனும் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.AERB எனும் அணு சக்தி ஒழுங்காற்றுவாரியத்திற்குப்பதிலாக இந்த புதிய அதிகார அமைப்புத் தோற்றுவிக்கப்படுகிறது.பழைய கள். . .புதிய மொந்தையில்!



பிரதமரும்,சுற்றுச்சூழல்,வெளிவிவகாரம்,நல்வாழ்வு,உள்துறை,அறிவியல்,தொழில்நுட்ப அமைச்சர்களும் அணுபாதுகாப்புக்குழு என்ற பெயரில் இயங்குவார்கள்.இதன் கீழே ஒழுங்காற்று அதிகார அமைப்பு இயங்கும்.இதன் உறுப்பினர்கள்,தலைவர் அனைவருமே அணு உலை,அணு சக்தி வல்லுநர்களாக இருப்பார்கள்.இந்த அமைப்பு திறந்தவெளித் தன்மை கொண்டு இயங்குமாம்.ஆனால்,முக்கியமான தகவல்களை யாருக்கும் தராதாம்.தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அமைப்பு தற்போது செய்து கொண்டு இருக்கும் தவறுகளையே மீண்டும் செய்யலாம்.



ஜீனியர் விகடன் பக்கம் 30,31,18.9.2011.



***அணு உலை அமைப்பதிலும்,பராமரிப்பதிலும் இந்தியா எப்படியெல்லாம் சொதப்பி வருகிறது என்பதை அறிய வாரம் இரு முறை வரும் ஜீனியர் விகடன் இதழில் வெளிவரும் அணு ஆட்டம் என்னும் தொடரைப் படியுங்கள்.



ஆன்மீகக் கடலின் கருத்து: இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கியவனுக்கே இன்னும் தூக்கு போடவில்லை.போட்டுவிட்டால் இந்திய முஸ்லீம்கள் காங்கிரஸீக்கு ஓட்டு போடமாட்டார்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிந்திக்கிறது.டூர் வருவது போல, பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்கு வந்து குண்டுகள் வைத்து நமது சகோதர சகோதரிகளைக் கொன்றுகொண்டே இருக்கிறார்கள்.இதையே ஒழுங்காகக் கட்டுப்படுத்த துப்பில்லை.சீரிஸான அணு உலையை இந்த அரசு எப்படி பாதுகாக்கும்?






சிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்?







ஜவஹர்லால்நேருவின் தங்கை க்ருஷ்ணா அதிசிங் அவரின் நூல் “நினைவு கசப்பல்ல”தில் படித்த நினைவு;தம்முடைய அண்ணனைக் காண சிறைக்குச் செல்கிறார்.அவருக்கு அளித்துள்ள பொருட்களை கவனிக்கும்போது கண்ணீர் வடிக்கிறார்.இரண்டே இரண்டு சோபாக்கள்,ஒரே ஒரு கட்டில்,நாலே நாலு நாற்காலிகள் போன்றவை!



விநாயக தாமோதர சாவர்க்கரின் கை,கால்களில் மாடுமாதிரி இரும்புச்சங்கிலிகளை மாட்டி செக்கிழுத்து தேங்காய் எண்ணெயை எடுக்க நாள்தோறும் 10 மணி நேரம் இழுத்தார்.சரியான உணவின்றி ‘க்ஷயரோக’பிடித்தவர் மாதிரி,விடுதலைக்கு வழியின்றி,பேசக்கூட மனித சகவாசமின்றி ; ஈ,கொசுக்கடிகளை அந்தமானின் சுட்டெரிக்கும் வெயிலில் சிறை அனுபவித்தவர்.



இந்தியாவுக்கு விடுதலை வந்தது1947 இல் நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தது 1948 இல்.

பி.ஏ.ஆனர்ஸ் மொழிபத்திரிகை படிப்பு முடியும் வரை(1956 இல்)வரை கன்னடம்,ஆங்கிலம் பாடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு,அல்லது மோதிலால் நேருவின் தியாக வாழ்க்கை அல்லது கமலா நேருவின் லட்சிய வாழ்நாள் இப்படி நேருக்குடுமத்தைப் பற்றி பாடங்கள் இல்லாத வருடங்களில்லை;

பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களிலும் எல்லா மாணவ மாணவியரின் மனதில் நேரு கதைகளை திணிக்கும் இம்சை தொடர்ந்து நடத்தினர்.இதை தலையில் நிரப்பிவிட்டால் அதைக் கற்று நாட்டில் ஆசிரியராவர்கள்,பேராசிரியர்கள் செய்திகல் மூலம் ஹரிகதையைப் போல நேருவின் மகிமையைப் பற்றி வருங்கால இந்தியர்களுக்கு விதைக்கிறார்கள்.



சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் தியாகங்களை அறியும் வாய்ப்பு(இதே போல நமது வ.உ.சி.அவர்களின் வாழ்க்கை மற்றும் எத்தனையோ தேசபக்தர்களின் ரத்த வாழ்க்கையை விவரிப்பதில்லை) எதிர்கால இந்தியர்களூக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ் திறமையாக வே செயல்படுகிறது.



எஸ்.எட்.பைரப்பா விஜயகர்நாடகா 17.9.2004. ஆதாரம்:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்149.














இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”








‘காந்தி கொலையில் சாவர்க்கரின் கைவரிசை உண்டு’ என்று பாடும் பாட்டு புதிதல்ல;இதில் சாவர்க்கருக்கு சம்பந்தம் கிடையாதென்று நீதிமன்றமே விடுதலை செய்தது.காங்கிரஸ் ஏஜண்டுகளாக வாழும் சில புத்திசாலிகள் நம்பமுடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் கல் எறிந்து தேசபக்தியை காட்டினர்.சாவர்க்கரின் தம்பி நாராயணராவ் கல்வீச்சில் கடுமையாகத் தாக்கப்பட்டார்.அன்றைக்கு சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ‘இந்த கொலையில் சாவர்க்கரின் பங்கு இல்லை’ என்று நேருவிடம் கூறினார்.இருந்தும் நேரு கேட்கவில்லை;1948 மார்ச் 11 ஆம் தேதி ஒரு குற்றவாளி ஆக்கப்பட்டார்.வழக்கறிஞர் போபட் அவர்களுக்கு விவரம் கிடைத்தது.வீரசாவர்க்கர் நிரபராதி என்று தனி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.மேல்முறையீட்டு முயற்சியை தைரியமில்லாமல் கைவிட்டார் ஜவஹர்லால் நேரு.



நாட்டின் முதல் குடியரசு நாளின் கொண்டாட்டத்திற்கு சாவர்க்கருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று நேரு நினைக்கவே இல்லை.பிரிட்டிஷ் அரசாங்கம் வசப்படுத்திக் கொண்ட சாவர்க்கரின் வீட்டை அவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றுகூட தோன்றவில்லை;ஆனால்,இதே நேரு 1950 ஏப்ரல் 4 இல் பாகிஸ்தான் தலைவர் லியாகத் அலி நம் நாட்டிற்கு வந்தபோது சாவர்க்கரை ‘சட்ட ஒழுங்கு’பிரச்னையைக் காரணம் காட்டி கைது செய்ய மறக்க வில்லை;



சாவர்க்கரின் நண்பர்கள் கவுரவபூர்ணமாக ‘ம்ருத்யுஞ்ச நாள்’ கொண்டாடியதை வானிலை ஒலிபரப்பு செய்யாமல் இருக்க நேரு தடுத்தார்.அந்தமான் செல்லூலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட அறையை தரைமட்டமாக்கிட முயன்றார்.நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.கணேசவரின் எதிர்ப்பினார் கைவிட்டார் நேரு.சாவர்க்கரின் வாழ்நாளின் கடைசி நாட்களில்(இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும்) சி,ஐ,டிக்கள் வேலை செய்தனர்.



கடைசியில் 1966 பிப்ரவர் 26 அன்று சாவர்க்கர் வீரமரணத்தைத் தழுவியபோது கூட சவப்பெட்டி(கன் கேரேஜ்) கிடைக்காமல் செய்தவர் இந்த ஜவஹர்லால் நேரு.உடலைக் கொண்டு செல்ல கன் கேரேஜை ஏற்பாடு செய்தவர் சினிமா நடிகர் வி.சாந்தாராம் ஆவார்.சாவர்க்கரின் இறுதி ஊர்வலத்தில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை; நாடாளுமன்றத்தில் ‘கண்ணீர் அஞ்சலி’ செலுத்தக்கூட அனுமதியளிக்க வில்லை;உறுப்பினரல்லாதவர்கள்(எம்.பி.இல்லாதவர்கள்) நாடாளுமன்றத்தில் கண்ணீர் அஞ்சலி செய்ய அவசியமில்லை என்றார் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் உக்கும் சிங்.



ஆனால்,ரஷ்யாவின் அதிபர் ஸ்டாலின் மரணமடைந்தபோது,இந்தியப்பாராளுமன்றம் கண்ணீர் சிந்தியது.இப்போது சொல்லுங்கள் நேரு போன்றவர்களே இப்படி சிறு மனப்பான்மையில் ஊன்றி இருந்தபோது,அவர் குடும்பத்தின் வாலாக இருக்கும் மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் பேசியது தவறா?

‘விஸ்வேஸ்வரபட் நூற்றெட்டு பேச்சு’ பக்கத்தில் விஜயகர்நாடகா 16.9.2004.



நன்றி:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்148,எழுதியவர் பேராசிரியர் தச்சம்பட்டு திரு.கே.பழநி(கிரிவலப்பிரியன்) வெளியீடு:ராஷ்ட்ரீய சாகித்ய சங்கமம்,கேசவன்குடில்,தச்சம்பட்டு-606806.திருவண்ணாமலை மாவட்டம்.விலை ரூ.60/-










ஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:18.9.11



இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்?



!:ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!



“அஞ்சு வருஷம் எம்.எல்.ஏவா இருந்தார்.நல்லா சம்பாதிச்சார்” என்றுதானே நாமே சொல்கிறோம். ‘அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!

இந்தப்பொறுப்பு உணர்வு அற்றதன்மைதான் அனைத்துக்கும் காரணம். ‘ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள்.எனவே,அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!



ஆன்மீகக்கடலின் கருத்து:நாமே பிராடாக இருந்தால்,நம்மை ஆளும் நமது தலைவர்கள் யோக்கியமாகவா இருப்பார்கள்?



?:தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்?



!: அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!



?:கச்சத்தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.க்ருஷ்ணா கூறியிருப்பது குறித்து?



!:எஸ்.எம்.க்ருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்திருக்கலாம்.



ஆன்மீகக் கடலின் கருத்து: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது,இந்த அமைச்சர் கொந்தளித்ததும் எனக்கு மைல்டாக டவுட்டு வந்தது.இந்திய அமைச்சரவை எப்போதுமே பிரச்னையைக் கண்டு பயப்படுமே? எதுவுமே செய்யாதே? எப்படி இந்த அமைச்சர் மட்டும் இப்படி தன்மானத்தோடு வீறிட்டு எழுகிறார் என எனது வட நாட்டு நட்பு வட்டத்தில் விசாரித்துப் பார்த்தால்,உண்மை தெரிந்தது.

ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டும்,அடிவாங்கியும் தவித்த அனைத்து மாணவர்களும் வட இந்தியா மாணவர்களாம்.ஆக,வட இந்திய மீனவர்கள்,இலங்கைக் கடற்படையிடம் அடிவாங்கினால்தான் இந்த மந்திரிக்கு அறிவு வருமா?





?:முதல்வரைப் பாராட்டி சீமான்(சைமன் என்பது நிஜப்பெயர்) நடைபயணம் கிளம்பியதும்,பாராட்டு விழா நடத்தியதும் பற்றி?



!: மூன்று தமிழர்களை முழுமையாக மீட்டபிறகு ,நிச்சயமாகச் செய்யலாம்.காரியம் முடியாவிட்டால்,பின்னோக்கி நடக்க முடியாது.

சைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி?





பசுவின் சாணத்தை உருண்டையாகப்பிடித்து வெயிலில் 3 அல்லது 4 நாட்கள் உலர்த்த வேண்டும்;உலர்ந்த உருண்டைகளை மூடக்கூடிய அளவுக்கு நெல் உமியைக் குவித்து தீக்கனல் இட வேண்டும்.இதற்குப் பெயர்தான் புடம் போடுதல்!!!மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு அவை நன்றாக நீர்த்து இருக்கும்.உமியும்,சாணியும் சாம்பலாகி இருக்கும்.உமிச்சாம்பலை நீக்கிவிட்டு,நீறு இருக்கும் சாணி உருண்டைகளை எடுத்து துணியினால் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.இதுவே சைவ முறையிலான விபூதி அல்லது திருநீறு ஆகும்.



எந்தப் பொருளையும் நெருப்பிலிட்டுச் சுட்டால் கருமை நிறமாக மாறும்(சங்கு மட்டும் விதிவிலக்கு);ஆனால்,கருப்பு நிறமான சாணி/சாணம் உருண்டையை நெருப்பிலிட்டு எரித்தால் அது வெண்மை நிறமாக மாறிவிடுகிறது.



இந்தியா,தமிழ்நாடு,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கே.பி.எஸ்.செல்வக்குமார் என்பவர்27.1.2010 முதல் சைவமுறைப்படி(மேற்கூறிய முறைப்படி) விபூதி தயாரித்து,ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலுக்கு (மாதம் ஒன்றுக்கு 18 கிலோ)வழங்கி வருகிறார்.



இந்த சைவ விபூதியை நாமும் விலைக்கு வாங்கலாம்.ரூ.150/-செலுத்தினால்,(ஓராண்டுக்கு) மாதம் தோறும் விபூதி கூரியரில் பெற்றுக்கொள்ளலாம்.வெளிநாட்டு அன்பர்கள் இவரது செல் போனில் பேசி எவ்வளவு என்பதை உறுதி செய்துகொண்டு,பெற்றுக்கொள்ளலாம்.



K.P.S.செல்வக்குமார்,இந்து கலாச்சார விரிவாக்க மையம்,கே.பி.எஸ்.நகை மாளிகை,47,நேதாஜி ரோடு,ஸ்ரீவில்லிபுத்தூர்-626125.விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா.போன்:04563-261274. செல் எண்:94428 40524.











நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 7









எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது.





நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அந்த நேரத்தில் கிடைக்கின்ற திருப்தியே அலாதி என்றாலும் அப்படிக் கேட்டு விட்டு என்றென்றுமாய் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பகைத்துக் கொள்கிறோம் என்பதைப் பலரும் மறந்து விடுகிறோம்.





யாருமே குற்றமற்றவர்கள் அல்ல. எல்லோரும் ஏதாவது சில சமயங்களில் பலவீனர்களாகவே இருந்து விடுகிறோம். பலரும் ஒருசில விஷயங்களில் எப்போதுமே பலவீனர்களாகவே இருக்கிறோம். சிலவற்றை காலப் போக்கில் திருத்திக் கொள்கிறோம். சிலவற்றை காலம் கூட நம்மிடம் மாற்ற முடிவதில்லை. அப்படி இருக்கையில் கடுமையான கூர்மையான வார்த்தைகளால் சிலரின் சில குறைகளையும், குற்றங்களையும் சாடுவது சரியல்ல. யாரை அப்படிச் சாடுகிறோமோ அவர்களும் நம்மை அப்படியே சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது அந்த சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தியும் தரக் கூடும். “அன்று என்னைப் பெரிதாகக் கேட்டாயே நீ மட்டும் ஒழுங்கா?” என்கிற ரீதியில் அவர்கள் கேட்க, நாம் ஆத்திரப்பட விளைவாக ஒரு நீண்ட பகை உருவாகி விடுகிறது.





குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குற்றத்திற்காக ஒவ்வொருவரை நம் நாக்கால் பதம் பார்க்க ஆரம்பித்தால் பின் சுற்றம் என்பதே நம்மைச் சுற்றி இருக்காது. நாம் தனியராகி விடுவோம். சுற்றம் மட்டுமல்ல நண்பர்களும் நமக்கு மிஞ்ச மாட்டார்கள்.





இன்றைய குடும்பங்களில் விவாகரத்துகள் அதிகரிக்க மிக முக்கியக் காரணம் கட்டுப்படுத்தாத நாக்கு தான். உப்புசப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் கூர்மையான கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விடுவது தான். ஒருகாலத்தில் வேறு வழியில்லை என்று சேர்ந்திருந்தார்கள். பொறுமையாக இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை.





இன்றைய விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பினரும் சொல்கின்ற காரணங்களில் உண்மையான சித்திரவதை, பெரிய குறைபாடுகள் போன்ற காரணங்கள் குறைவு என்றும் பெரும்பாலான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை ஆகத்தான் இருக்கின்றன என்கிறார் ஒரு மூத்த வக்கீல். பள்ளி செல்லும் பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கான காரணங்கள் போலத் தான் அவை இருக்கின்றன என்கிறார். குடும்பம் இரண்டாய் பிரிகிற போது அந்தக் குழந்தைகள் நிலை பரிதாபகரமானது என்பது கூட கவனிக்கப்படுவதில்லை என்கிறார் அவர். பெரும்பாலான தம்பதிகள் கடைசியாகச் சொல்கிற காரணம் இது தானாம். “அந்த அளவு பேசி விட்ட பிறகு அந்த மனிதருடன்/மனுஷியுடன் இனியும் கூட வாழ்வது சாத்தியமில்லை”.





தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே



நாவினால் சுட்ட வடு.



என்கிறார் வள்ளுவர். நாவினால் சுட்ட வடுக்கள் ஆறுவதில்லை. நினைக்க நினைக்க காயங்கள் மேலும் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்பந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதில்லை, மறக்கப்படுவதுமில்லை.





ஒருவர் எத்தனையோ விஷயங்களில் நல்லவராக இருக்கக் கூடும். அவர் மற்றவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கவும் கூடும். ஆனால் கட்டுப்பாடில்லாமல் வார்த்தைகளால் மற்றவர்களை அவர் வேதனைப்படுத்துவாரேயானால் அத்தனை நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போகும். பேசிய அந்த கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.





இது குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் அமைதியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒருசில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக் கூட சுடுசொற்களால் பெரிய விஷயமாக்கிக் கொள்கிற எத்தனையோ உதாரணங்களை நம் தினசரி வாழ்க்கையில் காண முடியும்.





அதற்கென்று யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே போக வேண்டியதில்லை. நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத் தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகவே இருக்கின்றது. அது போன்ற சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். ஆனால் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். சொல்வது நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் அது அப்போது ஒத்துக் கொள்ளப்படாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் உணரப்படும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் சீக்கிரமாகவே மறக்கப்படும். ஆனால் வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருக்குமானால் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருக்குமானாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். நீண்ட பகைமை பிறந்து விடும்.





பல பேர் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையும் சேர்ந்து இழுப்பார்கள். “உங்கள் குடும்பத்திற்கே இந்த புத்தி அதிகம் இருக்கிறது” என்கிற விதத்தில் பேச்சிருக்கும். இது போதும் வெறுப்பின் ஜுவாலையைக் கிளப்ப. சிலர் தேவையில்லாத கடுமையான, குத்தலான அடைமொழிகளைச் சேர்ப்பார்கள். சொல்கின்ற சங்கதியை அந்த அடைமொழி அமுக்கி விடும். இப்படி நாவினால் சுடும் விதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.





சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் “ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா?” என்று இறங்கி வரக்கூடும். ஆனால் கேட்டு வேதனைப்பட்டவர்கள் அதில் சமாதானமாக முடிவது கஷ்டம் தான். கோபம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளைப் பேசாமலேயே இருப்பது தான் அறிவு.





எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவக்கூடிய நிலையில் இருக்கக் கூடும். அல்லது நம்மை பிரச்சினைக்குள்ளாக்க முடிந்த நிலையில் கூட இருக்கக் கூடும். அந்த நேரத்தில் நாம் பேசிய கடுமையான வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்கு நினைவு வரக்கூடுமானால் நமக்கு அவர்களால் பெரும் நஷ்டமே நேரக்கூடும்.





எனவே வார்த்தைகளால் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோற்றுப் போகாதீர்கள். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாகப் புத்தியைத் தீட்டுங்கள். குத்தல் பேச்சும், கிண்டல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியலாம். கூட இருப்பவர்களிடம் ’சபாஷ்’ கூடப் பெறலாம். ஆனால் அந்தப் பேச்சால் முக்கியமான மனிதர்களை இழந்து விட்டால், இடையே உள்ள அன்பு முறிந்து விட்டால் உண்மையில் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்காதீர்கள்.





மேலும் படிப்போம்.....





-என்.கணேசன்





நன்றி: வல்லமை













sasthira pantham