Wednesday, July 6, 2011

மதுரை கள்ளழகர் கோவில் கும்பாபிஷேகம்

திருமாலிருஞ்சோலை என்றும், தென்திருப்பதி என்றும் போற்றி புகழப்படும் புண்ணியஸ்தலமானது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்பட்ட இக்கோவிலில் கடந்த 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.




பின்னர் அதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலாலய பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் ராஜகோபுரம், மூலவர் சன்னதி, தங்க விமானம், கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் உபசன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு அங்குள்ள கோபுரங்கள், சிலைகள் வர்ணம் பூசப்பட்டு முழு வீச்சில் பணிகள் முடிந்தது. பணிகள் நிறைவு பெற்றதையொட்டி அரசு உத்தரவின்பேரில் வருகிற 10-ந்தேதி அன்று மகா கும்பாபிஷேக விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.





6-ந்தேதி மாலை யாக சாலை பூஜைகள் தொடங்கு கிறது. 7, 8 ஆகிய நாட்களுக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. 10-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 9.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.



கள்ளழகர் கோவிலில் உள்ளா பள்ளியில் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து 20000 பேருக்கு அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.



விருந்துக்கு சேவை செய்யஅழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.







We need volunteers for feast service ,if you are interests please register with us.







Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai



C/o Chamundi Vivekanandan



Chamundi Supari



New 41 old 20/3 West Tower Street ,Madurai -625 001



Cell: 94424 08009,Shop: 0452-2345601



கழுகார் கேள்வி பதில்:ஜீனியர் விகடனிலிருந்து(10.7.11)




கே:நமக்குள்ளே பேசிக்கொள்வோம். . . இவ்வளவு பெரிய ஸ்பெக்ட்ரக் நடப்பது உண்மையிலேயே பிரதமருக்கும் சோனியாவுக்கும் தெரியாமலா இருக்கும்?

பதில்: உங்களது கேள்வியிலேயே ரகசியம் தேவை இல்லை.ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்ததுமே, “இவ்வளவு பெரிய விஷயத்தை தனிப்பட்ட ராசா மட்டும் செய்திருக்க முடியுமா?” என்று கருணாநிதியே கேட்டுவிட்டார்.பிரதமருக்குத் தெரிந்தே அனைத்தும் நடந்தன என்பதுதான் ஆ.ராசா வைக்கப்போகும் வாதம்.இந்த விவகாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு தலை,மறைக்கப்பட்டுள்ளது.சோனியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் நபரைக் கைவைத்தால்தான்,வழக்கு முழுமை அடையும் என்பதே டெல்லித் தகவல்!



(ஆன்மீகக்கடல் ஏன் சோனியாவை,சோனியாவின் நடவடிக்கைகளை கண்டிப்பதன் மர்மம் புரிந்திருக்குமே!)



கே:டீசல் விலையை உயர்த்தியும்கூட எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம்?



பதில்: பெட்ரோல்,டீசல் விற்பனை மூலம் கிடைக்கும் தொகை எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படுவது இல்லை.அவை வேறு துறைகளுக்கு ரகசியமாகத் திருப்பிவிடப்படுகின்றன.(ஆன்மீகக்கடலின் யூகம் அணு மின் உற்பத்தி?/ராணுவம்?/உளவுத்துறை?)



ஈரான் நாட்டுக்கு நாம் தரவேண்டிய பாக்கித்தொகையைத் தராமல் வைத்துள்ளோம் என்ற தகவல் இந்த வாரத்தில் கிடைத்துள்ளது.



சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது இந்தியா.கடந்த ஆறுமாதங்களாக அதற்கான பாக்கித் தொகையை இந்தியா தரவில்லை;இந்தப் பணத்தை உடனடியாகத் தரவில்லை எனில்,ஆகஸ்ட் மாதம் முதல் சப்ளையை நிறுத்தப்போவதாக ஈரான் சொல்கிறது.



இதை வைத்துப்பார்த்தால்,பெட்ரோல்,டீசலுக்காக நாம் தரும் தொகை எங்கே(சோனியாவின் சகோதரிகளுக்கு?) போகிறது?





கே: ‘நலத்திட்டங்கள் செய்தும் வெற்றி பெற முடியவில்லையே’ என்று மத்திய மந்திரி அழகிரி வருத்தப்பட்டு இருக்கிறாரே?



பதில்: நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்குத் தான் செய்ய வேண்டும் என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னால் நல்லது!

செல் போன் நோய்கள் தருமா?





நவீன விஞ்ஞான அற்புதங்களில் ஒன்று செல் போன் என்றழைக்கப்படும் அலை பேசி. ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருக்கும் மனிதரைத் தொடர்பு கொண்டு பேச முடிவது என்பது விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றமே. இங்கு இடைவெளிகள் பெரிய பிரச்னையே அல்ல. உலகத்தில் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் பேச முடியும், பயணம் செய்து கொண்டே பேச முடியும் என்பதெல்லாம் அவசரத் தேவைக்கு உடனடியாக பேச நினைப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் விஷயங்கள்.



ஏழை, செல்வந்தன் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று எல்லோரும் செல் போன் வைத்திருக்கிறார்கள் சிலர் சதா நேரமும் செல் போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்கள் கைகள் காதுகளில் ஒட்டிக் கொண்டு விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு இருக்கும். அந்த அளவு செல் போன் நம் தினசரி வாழ்க்கையில் நம்முடன் இணைந்த அம்சமாகி விட்டது.



இந்த நிலையில் செல் போன் சம்பந்தமாக உலகமெங்கும் நடந்து வரும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.



ஸ்வீடனைச் சேர்ந்த கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நரம்பியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஓல்லெ ஜோஜன்சன் (Dr. Olle Johansson) செல் போன் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். அதிகமாக செல் போனை உபயோகிப்பவர்கள் மூளை சம்பந்தமான நோய்கள், மரபணுக்களுக்கு சேதாரம், உறக்க சம்பந்தமான பிரச்னைகள், மனத்தை ஒருமைப் படுத்துதல் முடியாமை போன்றவற்றால் பாதிக்கப் படுகிறார்கள் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்.



கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மூளை விஞ்ஞானியான ரோஸ் அடே (Ross Adey)

செல் போனில் இருந்து வெளிப்படும் நுண்ணிய அலைகள் கேன்சர் உட்பட பல நோய்களை உருவாக்க வல்லது என்று கூறுகிறார்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 13 நாடுகளில் நடத்திய ஒரு ஆராய்ச்சி நீண்ட காலம் அதிகமாக செல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி நோய் வர அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளது.



ஸ்வீடனைச் சேர்ந்த லென்னார்ட் ஹார்டெல் (Lennart Hardell) என்ற பேராசிரியர் கதிரியக்க ஆராய்ச்சி தொண்டு நிறுவனம் லண்டன் ராயல் சொசைட்டியில் ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் 20 வயதுக்கு முன்பே செல் போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்களுக்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒருவித கான்சர் நோய் வர மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.



இஸ்ரேல் மற்றும் டென்மார்க் நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் கருத்தரித்த பெண்கள் அதிகமாக செல் போன் உபயோகிப்பது பிறக்கும் குழந்தைகளின் மரபணுக்களில் கோளாறை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.



பல் வேறு நாடுகளில் இப்படி செல் போன் உபயோகப்படுத்தும் போது வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் உருவாகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறப்பட்டதை மறுத்து அமெரிக்காவைச் சேர்ந்த செல் போன் கம்பெனிகள் 28 மில்லியன் டாலர்கள் செலவில் டாக்டர் ஜார்ஜ் கார்லோ (Dr George Carlo) என்ற விஞ்ஞானியிடம் முழுமையான ஒரு ஆராய்ச்சி செய்யுமாறு பணித்தனர். துவக்கத்தில் அந்த விஞ்ஞானியும் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறினாலும் தொடர்ந்த ஆராய்ச்சிகளில் செல் போனில் வெளிப்படும் கதிரியக்கத்தால் பல நோய்கள் வர வாய்ப்பு இருப்பதை ஒத்துக் கொண்டு அதைக் குறித்து ஒரு புத்தகமும் எழுதினார். தங்களுக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துகளை அந்த கம்பெனிகள் எதிர்த்து அவர் மீது அவதூறுப் பிரசாரத்தை மேற்கொண்டாலும் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு விஞ்ஞானியே வேறுபட்ட கருத்தை வெளியிட்டது ஒரு ஆணித்தரமான உண்மையாக பலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.



ஆனால் செல் போன் இன்றைய மனிதனின் அத்தியாவசியத் தேவையாகி விட்ட சூழ்நிலையில் அதை அறவே ஒதுக்கி விட முடியாத நிலையில் அனைவரும் இருக்கிறோம். அதே நேரத்தில் இந்த நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளும் நம்மை பயமுறுத்துவதாக இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. எனவே செல் போனைப் பயன்படுத்தவும் வேண்டும், நோய்களால் பாதிக்கப்படவும் கூடாது என்று நினைப்பவர்களுக்கு சில ஆலோசனைகள் –



1) செல் போனில் மணிக்கணக்கில் பேசுவதைக் கண்டிப்பாகத் தவிருங்கள். உங்கள் பேச்சு சுருக்கமாகவும், தேவையின் பொருட்டாகவுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நேரில் பார்க்கும் போது பேசுவது போல எல்லா முக்கியமல்லாத விஷயங்களையும் செல் போனில் பேசுவதைத் தவிர்க்கவும். குறைவான செலவு தான் ஆகிறது என்ற எண்ணத்தில் அதிகமாக நீண்ட காலம் பயன்படுத்தினால் பல மடங்கு செலவை மருத்துவத்திற்கு பிற்காலத்தில் செய்ய நேரிடும். அளவாகவும், சுருக்கமாகவும், தேவையுள்ள சமயத்தில் மட்டும் செல் போனைப் பயன்படுத்துவதே மிகுந்த பாதுகாப்பும் பயன்பாடும்.



2) குழந்தைகள் மற்றும் சிறு வயதினரை செல் போனை மிகுந்த அவசியமல்லாமல் உபயோகப் படுத்த விடாதீர்கள். அவர்கள் மண்டை ஓடு லேசாக இருப்பதால் அந்தக் கதிரியக்க பாதிப்புகள் அவர்கள் மூளையை ஆழமாக பாதிக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. எனவே அவர்கள் கையில் செல் போனைத் தராதீர்கள்.



3) செல் போனை பேண்ட் பாக்கெட்களிலோ, பெல்டுகளிலோ வைத்துக் கொள்ளும் இளைஞர்களின் விந்து எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மனித உடலில் கீழ் பகுதி மேல் பகுதியை விட அதிகமாக செல் போனின் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். எனவே அணைத்து வைக்காத செல் போனை அந்த இடங்களில் இளைஞர்கள் வைப்பதை தவிர்ப்பது நல்லது.



4) சிக்னல் குறைவாக இருக்கும் போது பேசுவது வலிமையாக கதிரியக்கம் வெளிப்படுவதால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே அந்த சமயங்களில் பேசுவதைத் தவிருங்கள்.



5) மூடிய வாகனங்களுக்கு உள்ளே இருந்து பேசும் போதும் இணைப்பை ஏற்படுத்த செல் போன்கள் அதிக சக்தியை செலவிட வேண்டியிருக்கும் என்பதால் கூடுமான வரை அதனைத் தவிர்ப்பது நல்லது.



6) நம் உடல் செல் போனின் கதிரியக்க சக்தியை எந்த அளவு உள்ளிழுத்துக் கொள்கிறது என்பதை அளவிட SAR என்ற அளவீடு செல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. புதிய செல் போன்களின் இயக்கக் குறிப்பேடுகளிலும், கம்பெனி இணைய தளங்களில் அந்த வகை செல் போன் கருவி குறித்த குறிப்புகளிலும் அந்த SAR அளவீட்டை இப்போது தர ஆரம்பித்திருக்கிறார்கள். குறைவான SAR அளவீடு உள்ள செல் போன் சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள்.



7) காது கேட்கும் சாதனம் அணிந்திருப்பவர்கள் செல் போனை பயன்படுத்துவது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது போல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு அறையினுள்ளும் செல் போன் உபயோகிப்பது அங்குள்ள நோயாளிகளின் உடல்நிலையை அதிகம் பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கர்ப்பவதிகளும் செல் போனை கூடுமான அளவு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.



8) முடிந்த சமயங்களில் எல்லாம் தரை வழி தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை தாருங்கள்.



அளவான, குறைந்த, புத்திசாலித்தனமான பயன்பாட்டால் மட்டுமே நாம் செல் போன் மூலம் நோய்களை நீக்கிய உண்மையான பயனை அடைய முடியும் என்பதை நாம் என்றும் நினைவில் வைத்திருப்பதுடன் இந்த உண்மையை நாம் அக்கறை வைத்திருக்கும் நபர்களுக்கும் அறிவுறுத்துவோமாக!

thanks:http://www.enganeshan.blogspot.com/
ரிக் வேதம் இருக்குமிடம்




உலகின் முதல் நூலான ரிக்வேதம் மிகவும் பழமையானது.இதன் ஓலைச்சுவடிகள் ஒரிசா மாநிலத்தில் உள்ள புனேயில் பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வுநிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.அங்கே உள்ள சுவடிகளில் (மொத்தம் 28,000) 30சுவடிகள் மிகச் சிறப்பானவை;மிகப் பழமையான,துல்லிய சுவடிகள் என்பதால்,இவற்றை ‘பாதுகாக்கப்பட்ட நூல்கள்’ வரிசையில் யுனஸ்கோ சேர்த்துள்ளது.



இந்தியாவுக்கு மட்டுமல்ல;உலகுக்கே பெருமை சேர்க்கக் கூடிய அறிவுப் பண்பாட்டு ஆதாரங்கள் இவை என யுனஸ்கோ தெரிவிக்கிறது.



இந்த செய்தி இணையம் வழியே பரவுவதன் மூலம்,உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்துதர்மத்தின் பெருமையை உணரலாம்.அதே சமயம் இணையம் ஒரு சர்வதேச உளவு அமைப்பு என அமெரிக்கா அறிவித்திருக்கிறது.சீனாவே ஒருபடி மேலே போய் ஆமாம் ஆமாம் என்று கூறாமலேயே தலாய்லாமா,இந்தியா,அமெரிக்கா போன்ற நாடுகள்,தலைவர்களின் ரகசியங்களை சீனாவிலிருந்து கொண்டே திருடிக்கொண்டே இருக்கிறது.நாம்?

Tuesday, July 5, 2011

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம்


நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.. உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:



அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா


உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

மீண்டும் சனியும் செவ்வாயும் பார்க்கும் நிலை



ஜோதிடப்படி,செவ்வாயானது நெருப்புக் கோளாகும்.சனியானது காற்றுக் கோளாகும்.காற்றும் நெருப்பும் சேர்ந்தால்?

30.11.2011 வரையிலும் கன்னிராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியில் ஜன்மச்சனியும்,கும்பராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனியும் நடைபெற்றுவருவதால்,அவதிப்படுவது அனைவரும் அறிந்ததே.இவர்களுக்கு 30.11.2011 வரையிலும் நிம்மதி என்பதே கிடையாது எனக் கூறலாம்.

இந்நிலையில் 24.7.2011ஞாயிறு முதல் 10.9.2011 சனிக்கிழமைவரையிலும் மிதுனராசிக்காரர்களும்,கன்னி ராசிக்காரர்களும்,கும்ப ராசிக்காரர்களும் சனி செவ்வாய் பார்வைகளால் ஏதாவது ஒரு தேவையில்லாத வம்புச்சண்டையில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது;அல்லது எதிர்பாராத விபத்தில் அல்லது புதிய குடும்பச்சண்டையில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

யார் தினமும் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய்வருகின்றார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும்.
யார் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு இராது.
யார் தினமும் ஏதாவது தியானமுறையைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
ஓம்சிவசிவஓம்

கோயம்புத்தூர் மக்கள் மரம் நடலாமே!!


உருவமில்லா இறைவன் ஆரண்ய ரூபியாக இருக்கிறான் என்று ஐதீகம் கூறுகிறது. எந்த மரத்தையும் அழித்து விடக் கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள், ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததெனும் கருத்தை உருவாக்கி மரங்களை கடவுளின் மறு உருவங்களாக வழிபட்டனர்.


வைணவ ஆச்சாரியர்கள், திருத்தலங்களில் வளர்கிற மரம், செடி, கொடிகளைக் கூட கடவுளின் அடியவர்களாக கருதினர்; "இறைவா ! திருவேங்கட மலையில் நான் ஒரு செண்பக மரமாக வேண்டும்' என்று குலசேகர ஆழ்வார் பெருமாளை வேண்டி நின்றதும் இதனால்தான்.சங்க இலக்கியங்களும் மரங்களை கடவுள்களின் பிம்பங்களாக வகைப்படுத்துகின்றன. புன்னை மரத்திலும், ஆலமரத்திலும் கடவுள் வாழ்வதாக அகநானூறும், நற்றிணையும் கூறுகின்றன. வேம்பு காளி தேவிக்குரியதாக போற்றப்படுகிறது.பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, குபேரன் ஆகியோருக்கு ஆலமரம்; ராமன், நாராயணன் ஆகியோருக்கு துளசி; சிவன், துர்கை, சூரியன் ஆகியோருக்கு வில்வமரம், கிருஷ்ணனுக்கு கடம்ப மரம்; கோவிந்தனுக்கு மாமரம்; வனதேவதைகளுக்கு அரசு, இந்திரனுக்கு அசோக மரம் உகந்ததாக அதர்வன வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்தான், வைணவ கோயில்களில் துளசியும், சிவன் கோயிலில் வில்வ இலைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பனம் பூ, அத்தி பூ, வேப்பம் பூ ஆகிய பூக்களை தங்களின் அரச அடையாளமாக பயன்படுத்தியதாகவும், "காவல் மரம்' வளர்த்து வணங்கியதாகவும் வரலாறு கூறுகிறது.அந்த மரத்திற்கு, மன்னனுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் முற்றங்களில் உள்ள தல விருட்சத்தை தொட்டு வணங்குவதும், வீட்டிலுள்ள துளசியை சுற்றி வணங்குவதும், அந்த தெய்வீக பண்பாட்டின் தொடர்ச்சியே.இன்றைக்கு இந்த புனித தன்மை வெறும் சம்பிரதாயமாகவும், சடங்காவும் பின்பற்றப்படுகிறதே ஒழிய மரங்களை போற்றி வளர்க்கும் எண்ணம் மறைந்து போனது.

மரங்களை புனிதமாக பார்த்தவர்களின் சந்ததி, இன்று அதை சந்தைப்பொருளாக பார்ப்பதால் இயற்கையின் அரண்களாக இருந்த மரங்கள், விறகாகவும் விற்பனைப் பொருளாகவும் மாறிப் போனது. நீர், நிலம், காற்று அனைத்தும் விஷமாகி போன இந்த விஞ்ஞான பூமியில், மரங்கள் மட்டுமே மாற்று மருந்து. கோடி மரங்களை வெட்டத் துணிந்த மனித குலம், ஒரு ஜோடி மரங்களைக் கூட நட தயாரில்லை என்கிற வருத்தத்தை பகிர்ந்து கொண்டோமே தவிர அதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், கோவையை பசுமையாக்க "ஒரு மரமாவது வளருங்கள் அல்லது ஒரு மரம் வளர்க்க உதவுங்கள்' என்கிற ஒற்றை கோரிக்கையோடு பசுமை பணியில் களமிறங்கியிருக்கிறது "பசும்புலரி' அமைப்பு.இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, ஒரு மரம் என்ன ஓராயிரம் மரங்களை வளர்க்க தயார், என்று பசும்பலரிக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார் செலக்கரிச்சல் வேலுச்சாமி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இந்த 76 வயது மனிதர், தன் பென்ஷன் பணம் முழுக்க மரங்களுக்காக செலவிடுகிறார். கடந்த 20 ஆண்டுகளாக மரம் நட்டு வளர்க்கும் பணி செய்து வரும் இவர், தனி ஆளாக 1000 மரக் கன்றுகளுக்கு மேல் நட்டு மரமாக்கியுள்ளார்.
இனி மரம் நட ஊரில் இடமில்லையே என்கிற கவலையோடு இருந்த இவர், இப்போது "பசும்புலரி'ன் உதவியோடு ஊரைச் சுற்றி மரக்கன்று நடும் பணியை துவக்கியுள்ளார். அவரை சந்தித்த போது ...


நான், பெற்ற தாயை விட அதிகம் நேசிப்பது இயற்கையைதான். ஆசிரியராக பணியாற்றியபோது, பாடத்துடன் சூழல் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் பற்றி அதிகம் சொல்லிக் கொடுப்பேன். பணியிலிருந்தபோது, மரம் நடுவதில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை; பணி ஓய்வுக்குப் பிறகு, கடந்த இருபதாண்டுகளாக மரம் வளர்ப்பதையே முழு நேர பணியாக செய்து வருகிறேன்.ஆரம்பத்தில் என் பணிகளை மக்கள் ஏளனமாக பார்த்தனர்; அதைப்பற்றி கவலைப்படாமல் பணியைத் தொடர்ந்தேன். பென்ஷன் பணத்தின் பெரும்பகுதியை, மரக்கன்றுகள் வாங்கவும், வேலிக்கான இரும்பு வலை வாங்கவும்தான் செலவு செய்துள்ளேன். இது வறட்சியான பகுதி என்பதால், தண்ணீர் கிடைப்பது சிரமம். அதனால் விவசாயக் கிணறுகளிலிருந்து சைக்கிள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி, இவற்றை உயிராக்கினேன். அதன் விளைவாகத்தான், செலக்கரிச்சல் இன்று 1000க்கும் மேற்பட்ட மரங்களோடு பசுமையாக தலை நிமிர்ந்து நிற்கிறது.தற்போது, மக்கள் என் லட்சியத்தை புரிந்து கொண்டதுடன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்கராஜன், பழனிக்கவுண்டர் உள்ளிட்டோர் என்னோடு இணைந்து பணியாற்றுகின்றனர்.

சிறுதுளியின் தலைவர் வனிதாமோகன் என்னை தொடர்பு கொண்டு, என் பணியைப் பாராட்டியபோது, அவரிடம் என் ""ஆயுளுக்குள் இன்னும் 1000 மரங்களையாவது நட்டு வளர்க்கும் ஆசை உள்ளது; நடத்தான் இங்கு இடம் இல்லை'' என்றேன். அதற்கு அவர் ""அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; உங்களை போன்றவர்களைத்தான் பசும்புலரி தேடிக்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாட்டை பசும்புலரி மூலம் செய்து தருகிறோம்; உங்கள் பணியை துவங்குங்கள்'' என்று உற்சாகப்படுத்தினார்.முதல் கட்டமாக, பசும்புலரி மூலம் 300 மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகளை தோண்டியுள்ளேன், என்றவர், "நான் பெற்று வளர்த்தது 3 மகள்களை; நட்டு வளர்த்ததோ 1000 மகன்களை; இந்த மரங்கள்தான் என் ஆண் பிள்ளைகள்; என் வாரிசுகள்' என்று உற்சாகமாகக் கூறினார் அந்த பசுமை நாயகன்.

அரசன் மரங்கள் : அரசனுக்குரிய கடமைகளை வரையறுக்கும் "சுக்கிர நீதி' என்னும் பழங்கால சட்ட நூல், அரசன் என்னனென்ன மரங்களை எங்கெங்கு நட்டு வளர்க்கவேண்டும் என விளக்குகிறது.அத்தி, அரசு, ஆல், புளி, மா, சந்தனம், எலுமிச்சை, வெண்கடம்பு, அசோகம், மகிழம், கடவிளம், சிந்தில் விளா, ராசாதனம், புன்னை, பூவரசு, செம்பகம் கடம்பு, கோகாமிரம், சரணம், மாதுளை, கரு, பிடகம், நாரத்தை, சிஞ்சபம், சிம்பு, இலந்தை, வேம்பு, பாலை, பேரீந்து, புன்பு, பேயந்தி, நெல்லி, தாமலம், சிம்பலம், மலையத்தி வெள்ளிக்கொடி, கமுகு, கொம்மபட்டி, தெங்கு, வாழை,மலைஅத்தி, தேக்கு, கொங்கு, பெருவாகை, வெளவுவம், தமாலம், ஆக்கா, வெட்டபாலை, வெள்வேல், மருது, புரசு, ஏழிலைப்பாலை, வன்னி, நந்தி, காஞ்சிரை, குமில், பங்கம்பாலை, திந்துகம், பீசகாரகம், கிடு, சே, சம்பாகம், இலுப்பை போன்ற நல்ல பழங்களையும், நறுமணம் தரும் மலர்களையும் தரக்கூடிய மரங்களை, கிராமங்களில், நகரங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்க வேண்டும் என்று "சுக்கிரநீதி' கூறுகிறது.

மரக்கன்று வேண்டுமா?கோவை நகரை "குளுகுளு' நகராக மாற்ற உங்களுக்கும் உள்ளுக்குள் ஆசை இருக்கலாம்; வெறும் விருப்பம் மட்டும், வெப்பத்தைக் குறைக்காது; பசும்புலரியில் நீங்களும் கை கோர்க்கலாம். உங்கள் வீட்டில் அல்லது அருகிலுள்ள பூங்காவில், ஏதாவது ஓரிடத்தில் ஒரே ஒரு மரக்கன்றை வைத்து வளர்க்க நீங்களும் இன்றே உறுதி எடுக்கலாம். இந்த மண்ணுக்கேற்ற மரத்தை வளர்க்க, நீங்கள் செய்ய வேண்டியது ஓர் அழைப்புதான். 
பசும்புலரியில் இணைந்து செயல்பட விரும்புவோர், மரக்கன்றுகளை இலவசமாக பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்; 0422 - 4241830, இணையதளம்: callcenter.www.greencoimbatore.com