Thursday, December 30, 2010

Arrogent USA-2:thanks to tamil webdunia

இதனால் இப்போது அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் போன் போட்டு, "விக்கிலீக்ஸ்" தகவல்களை பொருட்படுத்தாதீர்கள். நாம் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம் என்று தாஜா செய்து வருகிறார்!







இந்த அளவுக்கு நிலைமை சந்தி சிரித்த பிறகும், அமெரிக்க அரசுக்கும் அந்நாட்டவர்களுக்கும் தங்களை பற்றிய ஆணவம் என்னவோ கடுகளவும் குறைந்தபாடில்லை என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.






'யு.எஸ்.ஏ டுடே' ( USA Today) என்ற அமைப்பு கடந்த 10 முதல் 12 ஆம் தேதி வரை அமெரிக்கர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் - அதாவது 62 விழுக்காட்டினர் - அமெரிக்காவும், அமெரிக்கர்களும் "விதிவிலக்கானவர்கள்" என்று கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.






" மற்ற உலக நாடுகளிலிருந்து அமெரிக்கா வேறுபட்ட மகத்தான நாடு.அதன் கடந்த கால வரலாறு மற்றும் அரசியலமைப்பு சாசனம் போன்றவற்றினால் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் குணாதிசயம் மாறுபட்ட ஒன்று" என 73 விழுக்காட்டினர் கருத்து கூறியுள்ளனர். இதில் குடியரசு கட்சியை சேர்ந்த 91 விழுக்காட்டினர் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.






அதேப்போன்று அதிபர் பராக் ஒபாமாவும் "அமெரிக்கா விதிவிலக்கான நாடு" என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதாக 58 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.






ஆனால் முந்தைய அதிபர்களான ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர்களிடத்தில் இருந்ததை விட, ஒபாமாவிடம் இந்த எண்ணம் சற்று குறைச்சலாகத்தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.






அதே சமயம் அமெரிக்கா, தனது சாதுரிய நடவடிக்கை மூலம் பெற்ற "உயர் அந்தஸ்து நிலை" யை இழக்கத் தொடங்கியிருப்பதாக ( விக்கிலீக்ஸ் போன்றவற்றால்...) பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.






மேலும் உலக விவகாரங்களுக்கு தலைமையேற்று நடத்திச் செல்லும் "சிறப்பு பொறுப்பு" அமெரிக்காவுக்கு உள்ளதாக 66 விழுக்காட்டினர் கூறியுள்ளனராம்.






ஹூம்...! தும்முவதை கூட அமெரிக்காவிடம் கேட்டுவிட்டு செய்யும் பல உலக தலைவர்கள் ( நம் நாடும் சேர்த்துதான்!) இருக்கும் வரை அமெரிக்கர்களின் இந்த ஆணவம் அத்தனை இலேசில் அடங்காதுதான் போல!

arrogent USA-1

உலக போலீஸ்காரனாக தன்னைக் காட்டிக் கொண்டு சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த அமெரிக்காவின் ஆணவத்திற்கு "விக்கிலீக்ஸ்" இணையதளம் கொடுத்த மரண அடியிலிருந்து இன்னமும் அந்த நாடு மீளாதபோதிலும், அந்நாட்டவர்களின் ஆணவம் இன்னும் குறையவில்லை என்பது கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.







" உலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நாங்கள் உளவு பார்த்து அவர்களை எங்களது கட்டளைக்கு ஏற்ப ஆட்டுவிப்போம்.ஆனால் எங்களை யாரும், எந்த நாடும் கேள்வி கேட்க கூடாது அல்லது கேட்கவும் முடியாது. அதேப்போன்று எங்களது அரசு நடவடிக்கைகளையும் யாராலும் சரியாக உளவு பார்க்க முடியாது...!" என்றெல்லாம் ஏக திமிர்த்தனத்துடனும், சண்டித்தனத்துடனும் கடந்த காலங்களில் அமெரிக்க அதிகார தலைமையில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, அந்நாட்டு மக்களுமே பேசி வந்தனர்.






மனித உரிமைகள், போர்க்குற்றம் போன்றவை குறித்து அடுத்த நாடுகளை கண்டித்து வந்த அமெரிக்கா, தங்கள் நாட்டிற்கு அது பொருந்தாது; தாங்கள் விதிவிலக்கானவர்கள் என்பது போன்றே நடந்து வந்தது.






அதற்கு சமீபத்திய உதாரணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க படையினர் புரிந்த அட்டூழியங்கள்!குறிப்பாக ஈராக்கில் பொதுமக்கள் என்று நன்கு தெரிந்தும், அவர்கள் மீது குண்டு வீசி கொன்றதும், அரசியல் கைதிகளாக பிடிபட்ட சதாம் உசேன் ஆதரவாளர்களை சிறையில் கொடூரமாக சித்ரவதை செய்ததும் உலகறிந்த உண்மை!






அதேப்போன்று அணு ஆயுத விவகாரத்திலும் தங்களுக்கு ஒரு நியாயம், மற்றநாடுகளுக்கு ஒரு நியாயம் என்றே அமெரிக்க தலைவர்களும், அதன் அரசு அதிகாரிகளும் பேசி வந்தனர்.






இந்நிலையில்தான் அமெரிக்காவின் இந்த ஆணவத்திற்கும், திமிருக்கும் சம்மட்டி அடி கொடுப்பதுபோல், பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு அரசு தலைமைக்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டது "விக்கிலீக்ஸ்" !






ஒவ்வொரு நாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தலைவர்கள் பற்றிய நையாண்டி குறிப்புகளுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனுப்பிய தகவல்கள் விக்கிலீக்ஸில் வெளியானபோது, நடுவீதியில் ஆடையிழந்து அம்மணமாக நிற்பது போன்ற நிலைக்கு ஆளானது அமெரிக்கா!






தங்களைப் பற்றிய அமெரிக்காவின் மதிப்பீடு அல்லது எண்ணம் என்ன என்பது ஒவ்வொரு உலக நாடுகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் தற்போது தெரிந்துவிட்டதால், வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் அமெரிக்கா மீது கறுவிக்கொண்டுதான் உள்ளனர்.

Tuesday, December 28, 2010

பாரதம்:மறைக்கப்பட்ட பெருமைமிகு வரலாறு

எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே,நமது பாரதநாடு செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தது.அதற்கு அடையாளமாக,நமது நாட்டிற்கு வந்த வெளிநாட்டுப்பயணிகளான மார்க்கோபோலோ,யுவான் சுவாங் போன்றவர்களின் டைரிக்குறிப்பை எடுத்துப்படித்தாலே புரியும்.







இவர்களில் ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றார்.அங்கிருக்கும் ஒரு வீட்டின் வாசலில் நின்று கொண்டு குடிக்க தண்ணீர் கேட்கிறார்.அந்த வீட்டின் இல்லத்தரசி குடிக்க பானாக்கரம்(இனிப்பு கலந்த பானம்) கொண்டு வந்து தருகிறார்.இவரோ,தண்ணீர்தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார்.அந்த இல்லத்தரசியோ,வீட்டினுள் சென்று மோர் கொண்டு வந்து தருகிறார்.இவர் மீண்டும் தண்ணீர்தான் வேண்டும் என்கிறார்.அதற்கு அந்த இல்லத்தரசி, “ஆற்றில் ஓடுகிறதே,அங்கே போய் அருந்திக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார்.


பாரத தேசம் முழுவதும் அவர் சில ஆண்டுகள் சுற்றிப்பார்த்ததில்,எங்குமே வறுமை இல்லை;பிச்சைக்காரர்கள் இல்லை;பிச்சையெடுப்பவர்கள் சாதுக்கள்,துறவிகள் மட்டுமே.(தானம் தரும் எண்ணம் மறையக்கூடாது என்ற நோக்கத்திற்காக அவர்கள் பிச்சையெடுக்கின்றனர்).எந்த வீட்டிற்கும் கதவு கிடையாது.எனதனது பயண நூலில் எழுதியிருக்கிறார்.






போர்க்கலைப்படி,ஒரு படைவீரன் இன்னொரு படைவீரனிடம் மட்டுமே சண்டையிடவேண்டும்.ஒரு தளபதி இன்னொரு தளபதியிடம் மட்டுமே சண்டையிட வேண்டும்.எதிராளியிடம் எந்த ஆயுதமும் இல்லாவிட்டால்,அவனிடம் போரிடக்கூடாது.காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய உதயம் வரை மட்டுமே போரிட வேண்டும்.மதியம் சுமார் இரண்டு மணி நேரம் போர் இடைவேளை.போர் நடக்கும்போது,போரில் காயம் பட்டு வீழ்பவர்களை இரண்டு நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த முதலுதவி அணியினர் தூக்கிச் செல்லலாம்.யாரும் அவர்களை தாக்கக் கூடாது.(இந்த விதிகளை இன்றைய நாகரீக அரசாங்கங்கள் ஒன்றே ஒன்று மட்டும் பின்பற்றுகின்றனவா?)


ஒரு குழந்தையின் ஐந்து வயது முதல் 21 வயது வரையிலும் குருகுலத்தில் தங்கிப்படிக்க வேண்டும்.இந்த காலத்தில் ஒரு ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டும் தனது பெற்றோரின் வீட்டுக்குச் செல்லலாம்.ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் குழந்தைக்கும் வாள்பயிற்சி,பிராணயாமம்,சரக்கலை எனப்படும் மூச்சுக்கலை,ஜோதிடக்கலை,அர்த்த சாஸ்திரம் எனப்படும் அரசியல் கலை,ஆய கலைகள் 64,வேதங்களில் அதர்வண வேதம் தவிர்த்த அனைத்தும்,சாமுத்ரிகா லட்சணம்,16 வட்டார(இந்திய)மொழிகள்,சிலம்பம்,களரி முதலியன கற்பிக்கப்படும்(கி.பி.1900 வரையிலும் நமது தாத்தாவின் தாத்தா காலம் வரையிலும் நமது முன்னோர்கள் ஒவ்வொருவருமே 16 பாரத மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தனர்.).கிபி1000 வாக்கிலிருந்து இந்த நிலை மாறத்துவங்கியது.ஆம்!






இஸ்லாமியப் படையெடுப்பு அப்போதுதான் துவங்கியது.அதன்பிறகுதான் ஜாதி வேற்றுமைகள் இஸ்லாமிய அரசுகளால் கட்டாயமாக திணிக்கப்பட்டன.காரணம் அவர்களின் மத நூலான குர் ஆன் சொல்லும் புனிதக்கடமைகளில் இந்த உலகம் முழுவதையுமே இஸ்லாமாக மாற்ற வேண்டும்.இன்று இந்தியாவில் வாழும் அனைத்து இஸ்லாமிய ஜாதிகளும் இந்துஜாதிகளே.அவற்றில் பெரும்பாலும் வால்முனையில் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டவர்களே!






இதற்கான ஆதாரங்களை வந்தார்கள்,வென்றார்கள் என்ற நூலும் (எழுதியவர் ஆனந்த விகடனின் கார்டூனிஸ்ட் மதன்) மேலும் ஏராளமான ஆங்கில நூல்களும் விவரிக்கின்றன.






The Rising and Falling of Great Power என்ற நூலிலும் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.இதை யேல் பல்கலைக்கழக பொருளாதாரப்பேராசிரியர் உலகம் முழுவதும் பயணித்து,பல நாடுகளின் ரகசிய மற்றும் பொது ஆவணங்களை ஆராய்ந்து தொகுத்து எழுதியிருக்கிறார்.கி.பி.1800 வரை முடிந்த இருபது நூற்றாண்டுகள் வரையிலும் (2000 ஆண்டுகள் வரையிலும்) பாரதமும்,சீனாவும் மாறி மாறி உலக வல்லரசு நாடுகளாக இருந்தன.இவற்றின் உலக பொருளாதாரப் பங்களிப்பு தலா 25% முதல் 35% வரை மாறிமாறி இருந்தன.


அமெரிக்கா வல்லரசாக மாறியதை பா.ராகவன் என்பவர் டாலர் தேசம் என்ற பெயரில் குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக எழுதினார்.அது தற்போது புத்தகமாகவே வெளிவந்துவிட்டது.உலகில் ஏதாவது இரண்டு நாடுகளிடையே போரினைத் தூண்டி,இரண்டு நாடுகளுக்கும் ஆயுதங்களை விற்றே வல்லரசு நிலையை அடைந்தது.அப்படி வல்லரசு நிலையை எட்டிட 400 ஆண்டுகள் ஆனது.முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காலத்தில் போரில் ஈடுபட்ட நாடுகளுக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஆயுதத் தொழிற்சாலையாகவே அமெரிக்கா மாறியது.கொரியாப்போர்,வியட்நாம் போர்,வளைகுடா போர்,ஆப்கானிஸ்தான் போர் என வரலாற்றை கடந்த நூறு வருடமாக படித்துப்பார்த்தாலே உலக சகோதரிகளின் தாலிகளை அறுத்தே அமெரிக்காவின் கழுகுக்கொடி பட்டொளிவீசி ரத்த வாடை வீசுமளவுக்கு பறந்து வருகிறது.இதில்,பல ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவின் பெருமையை தூதூதூக்க்க்க்கி நிறுத்தும் விதமாக வெளியிடப்பட்டு வருகின்றன.இனி,இந்த பம்மாத்து வேலை எடுபடாது.






உலகின் மிகப்பெரிய அலுவலகம் எது தெரியுமா? அமெரிக்காவின் ராணுவத்தலைமையகம் பெண்டகன் தான்.அங்குதான் 26,000 பேர்கள் பணிபுரிகிறார்கள்.அமெரிக்காவின் அகங்காரத்தை நசுக்கிய பெருமை ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞரைச் சேரும்.அவர்தான் ஒசாமா பின் லேடன்.பெண்டகனையே ஒரு விமானம் தாக்கினால்!!!


அமெரிக்காவுக்கு எப்போதுமே மத வெறி உண்டு.உலகில் கத்தோலிக்க கிறிஸ்தவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அதன் கனவு.அதற்காக இஸ்லாமிய மதத்தை அழிக்க என்ன செய்யலாம் என்றெல்லாம் ஏகப்பட்ட திட்டங்கள் போட்டுக்கொண்டே வந்தது.இவ்வளவு இருந்தும் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவிடம் நல்ல நட்பு நாடாகவும் இருக்கிறது.என்ன ஒரு ஒற்றுமை!!!






நாம்,இங்கிலாந்திடம் அடிமைப்பட்டதிலிருந்தே நமது பெருமைகளை மறக்கடிக்க கத்தோலிக்க இங்கிலாந்து திட்டமிட்டது.இந்தியாவில் இங்கிலாந்து அழிவு வேலை பார்த்தது போல்,வேறு எந்த நாட்டிலும் வேலை பார்த்ததில்லை;இங்கிலாந்திலிருந்து குடியேறிவர்களால் உருவானதே அமெரிக்கா! அதனால்தான்,உலக அரங்கில்,ஐ,நா.சபையின் முக்கிய வாக்கெடுப்புக்களில் அமெரிக்கா என்ன செய்தாலும்,இங்கிலாந்து மறுப்பேயில்லாமல் ஏற்றுக்கொள்ளும்.இன்றைய நாள் படி (28.12.2010) ஒரு டாலருக்கு நிகரான நிஜமான ரூபாய் மதிப்பு ரூ.8/-மட்டுமே.இருந்தும் ஏன் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் ஒரு டாலரின் நிலை நிலைத்து நிற்கிறது.இந்தியாவில் அமெரிக்காவின் ஏவலாளர்கள் இந்திய நிதித்துறை,பங்குச்சந்தை,ஆட்சிபீடம்,எதிர்க்கட்சிகளின் முக்கியபதவிகளில் நிரம்பியிருக்கிறார்கள்.






இந்துதர்மத்தின் பெருமைகளை கி.பி.1940கள் வரையிலும் அறிந்து பிரமித்த இங்கிலாந்து ஆளும் வர்க்கம் நம்மிடையே வெறுப்பை,ஜாதி வேறுபாட்டை,பகைமையை,நிரந்தரப்பிரிவினையை உருவாக்கியது.அதில் ஒன்றுதான் நம்ம கருணாநிதி தாத்தா அடிக்கடி சொல்லும் ஆரியர் திராவிடர் என்ற பிரிவினை வார்த்தைகள்.சுதந்திரம் பற்றிய வரலாற்றை ஊன்றி நாம் படிக்கவே நமக்கு ஒரு வருடம் ஆகும்.அதை படித்துவிட்டாலே புரிந்துவிடும் இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல் எதிரி என்று!!!






நமது ஆன்மீகக்கடல் நெடுக எழுதப்பட்டுள்ள,எழுதப்படும் கட்டுரைகள் அனைத்துமே உலகின் தலைசிறந்த நாடு நம் பாரதம் தான் என்பதை உணர வைக்கும் விதமாக கிடைக்கும் ஆதாரங்கள்,செய்திகள் மட்டுமே.இதில் பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக வரும் செய்திகள் அனைத்துமே நூறு சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தவை.எனது மன்னிக்கவும் நமது பாரத நாட்டை விட,இந்த உலகில் வேறு எதுவும் உயர்ந்தது கிடையாது.இந்த உணர்வை நான் பெறுவதற்கு எனக்கு மூன்று ஆண்டுகள் ஆகின.அதே உணர்வை இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசிக்கும் நீங்கள் ஒவ்வொருவருமே அடைய வேண்டும்.


அதற்கு இங்கு கொடுக்கப்பட்டு வரும் புத்தகங்களை அடிக்கடி நீங்கள் வாசிக்க வேண்டும்;கருத்தரங்குகளுக்குச் சென்று அடிக்கடி கலந்து கொள்ள வேண்டும்.தரப்படும் முகவரிகளைத் தொடர்புகொண்டு உரிய வெளியீடுகளை வாங்கி வாசித்து சிந்திக்க வேண்டும்.தேசபக்தியுள்ள கிறிஸ்தவர்களும்,இஸ்லாமியர்களும் இன்றும் இந்த தேசத்தில் இருக்கின்றார்கள்.


ஆனால்,அரசு உயர் அதிகாரிகளும்,கொள்கைகள் வகுப்பவர்களும் நீண்டகால நோக்குடன் திட்டங்களைத் தீட்டுவதில்லை;தேசத்தின் நலனை விட அமெரிக்க நலனுடன் திட்டம் தீட்டுவது நிஜம்.


விரைவில் இது தொடர்பான முழுத்தகவல்களுடன்


இப்படிக்கு


ஆன்மீகக்கடல்

சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை












ஆனைகட்டி ஆஸ்ரமம்.


26 - 5 - 2010.






நீதியற்றதும் பிறப்படிப்படையிலானதுமான எவ்விதக் கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் வேதங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை. நமது தேசத்தின் பல பிராந்திய மொழிகளில் உள்ள வேதங்களல்லாத திருமுறைகளும் அனைத்து மானுடத்தின் ஒற்றுமையைப் போற்றிப்புகழும் வசனங்களைக் கொண்டுள்ளன. மத நம்பிக்கை, பால், இன்று சாதி என கருதப்படும் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படும் நியாயமும் நீதியுமற்ற பாரபட்சங்களை அவை மறுக்கின்றன. ஹிந்து பாரம்பரிய வணக்கமான கை கூப்பி கூறப்படும் ‘நமஸ்தே’ எனும் வணக்கம் சக மனிதரில் உறையும் ஈஸ்வரத்தன்மையை வணங்குவதே ஆகும். பிறப்படிப்படையிலான பாகுபாடு காட்டுதலும் தனி நபர்களையும் குடும்பங்களையும் கொடூரமாக நடத்துவதும் சமூக ஏற்புடையதாக ஹிந்து சமுதாயத்தில் ஏற்பட்டது பழமையான ஹிந்து (சுருதி) பிரமாணங்களுக்கும் தத்துவங்களுக்கும் எதிரானதாகும் தமது பழமையான தர்மத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்றெடுத்த பல மக்கள் இதன் விளைவாக ஆண்டாண்டு காலமாக துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இன்றைக்கு நமது அரசியல் நிர்ணயச் சட்டமும் பல நூற்றாண்டுகளாக ஞான ஒளி பெற்ற சமூக-ஆன்மிக அறிஞர்களும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக நிலைபாடுகள் எடுத்தும் போராடியும் வருகிறார்கள். என்ற போதிலும் இத்துன்பங்கள் நிலவுகின்றன. இத்துன்பங்களை போக்க அவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இத்துன்பங்களை உருவாக்கும் சூழலுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது முக்கியமானதாகும்.






கிராமக் குடியுறவுகளாக உருவான உறவுகள் ஒருவித பாதுகாப்புத் தன்மையை அளிப்பதாக அமைந்தன. இவ்வித உறவுகளாகத் தொடங்கிய விஷயங்கள் பல நூற்றாண்டுகளாக இவ்வித சமூகப் பாரபட்சங்களாக ஆழமாக நம் கிராமப்புறங்களில் வேரூன்றிவிட்டன. இதனை ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா நன்றாக உணர்ந்திருக்கிறது. இந்தப் பழக்கவழக்கங்களை முழுமையாக அகற்றுவது நேரமெடுக்கும் ஒரு விஷயமாகும் என்பதையும் ஆச்சாரிய சபா உணர்ந்திருக்கிறது. எனவே தீவிரமான முன்முனைப்பு கொண்ட தொடர்ச்சியான களப்பணியின் மூலமே பிறப்படிப்படையிலான நியாயமற்ற பாரபட்சங்கள் அகற்றப்பட முடியும் என ஆச்சாரிய சபா கருதுகிறது.






இந்த சமுதாய அடிப்படையிலான பிரச்சினைகளை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் குறையாகச் சொல்லி தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஆபிரகாமிய மதமாற்றப் பிரசாரகர்கள் ஈடுபடுவதையும் ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா உணர்ந்திருக்கிறது. இதில் மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால் நமது நாடு அந்நியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு நம் ஜனநாயகத்தில் நம் அரசியல் சக்திகள் சாதியத்தை தங்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ளன. நம் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் நிலவும் கல்வியின்மை, அடிப்படை கட்டமைப்புகளின்மை, வருமானமின்மை ஆகியவை (அரசியல் சுயநலமிகளால்) சுரண்டப்பட்டு வருகிறது.






ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா மானுட சுயமரியாதையையும் சமூக சமரசத்தையும் பேணி வளர்ப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. ஆச்சார்ய சபாவின் உறுப்பினர்கள் உட்பட இந்த தேசத்தின் ஹிந்து சமயத் தலைமையானது பிறப்படிப்படையிலான இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிராக முன்னணி முக்கிய செயல்பாடுகளை எடுக்க வேண்டுமென ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா கருதுகிறது. இதை அவர்கள் தங்கள் வரையறைக்குட்பட்ட மடங்களிலும் பீடங்களிலும் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் செய்ய வேண்டும். தங்கள் பிரவசனங்களில் செய்ய வேண்டும். மேலும் அறிவொளி கொண்ட ஹிந்து சமுதாய ஆர்வலர்கள் ஹிந்து சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட எளிய மக்களை சமூக-பொருளாதார வலிமை அளிக்கவும் கல்வி அளிக்கவும் மேலும் பல அமைப்புகளை ஏற்படுத்தி உழைக்க வேண்டும்.






- சுவாமி தயானந்த சரஸ்வதி


ஒருங்கிணைப்பாளர், ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா

நாத்திகவாதிகளின் சிந்தனைக்கு

ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.அதற்கு ஒரு நீதிபதி அவர்களை தலைமை தாங்கிட அழைத்திருந்தனர்.அந்தக் கூட்டம் கடவுள் இல்லையென்று கூறும் நாத்திகவாதிகளால் கூட்டப்பட்டிருந்த கூட்டம்.



அந்த நீதிபதி அவர்களோ,கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்.


அவர் தனது இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லிப் பேச ஆரம்பித்தார்.


உடனே,அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நாத்திகர்,


“நான் பார்க்காத எதையும் நம்ப மாட்டேன்” என்றார்.


அதற்கு அந்த ஆத்திக நம்பிக்கை கொண்ட நீதிபதி,


“அப்பா! உனது மூளை எனது கண்களுக்குத் தெரியவில்லை;அதற்காக அது இல்லை என நான் நம்புவது அழகா?” எனக் கேட்டார்.






நாத்திகத்தை தனது கொள்கைகளாகக் கொண்ட சகோதரர்கள் சிந்திக்கவே இந்த நிஜக்கதை.


நன்றி;இராமகிருஷ்ண விஜயம்,ஜனவரி,2011.

Monday, December 27, 2010

mistic chelvam address

மிஸ்டிக் செல்வம் அவர்களின் புத்தகங்கள் சென்னையில் இருக்கும் மிஸ்டிக் இந்தியா மிஷன் என்னும் அறக்கட்டளையிலும்,தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி அருகில் இருக்கும் முடிவைத்தானேந்தல் கிராமத்திலிருக்கும் மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஜீவசமாதியிலும் கிடைக்கும்.



மிஸ்டிக் இந்தியா மிஷனின் முகவரி நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவுக்குள் புதைந்திருக்கிறது.

Sunday, December 26, 2010

குழந்தையில்லாதவர்களுக்கு ஒரு சுலப மருத்துவம்






குழந்தையில்லாதவர்களுக்கு மாதவிடாய் ஆன ஐந்து தினங்களிலும் ஒரு வெள்ளைப்பூண்டு சிறிது வேப்பங்கொழுந்து ஒரு சிறிய விரலி மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் அரைத்து சாப்பிடச்சொல்வார்கள்.இப்படி சில மாதம் சாப்பிட்டு தீட்டு நின்று கர்ப்பம் தரித்துவிடும்.குழந்தை வேண்டுவோர் பாலமுருகன் அல்லது முருகக்கடவுளை வணங்கச்சொல்வார்.மேற்படி எளிய முறையில் மருந்து சாப்பிட்ட அனேகருக்கு குழந்தை பிறந்துள்ளது.நன்றி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளின் தொகுப்பான ஆன்மீகப்பயணம் பாகம் 1.பக்கம்53,54.