Monday, February 22, 2010

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள்;நிம்மதியாக வாழுங்கள்


உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி

கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை,தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய்,திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.
பசுவுக்கு அகத்திக்கீரை ஒரு முறை வழங்கினாலே இந்தப்பிரச்னைகள் உடனே தீர்ந்துவிடும்.பசுவை
இன்று கிராமங்களில் பார்க்கலாம்.அல்லது பால் பண்ணைகள்,மாட்டுப் பண்ணைகள்,பசு மடங்கள்,பெரிய கோவில்களில் உள்ள பசு மடங்களில் இவ்வாறு அகத்திக்கீரையை வழங்கலாம்.அல்லது வாழைப்பழங்களையும் தானமாக வழங்கலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளேயே உட்பிரகாரத்தில் பசுமடம் அமைந்திருக்கிறது.அந்த பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரைக் கட்டு ஒன்று ரூ.10/-க்கு விற்பனை செய்கிறார்கள்.நாம் அதை வாங்கி உள்ளே இருக்கும் பசுக்களுக்கு வழங்குவது மாபெரும் புண்ணியம்.
திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ரமண மகரிஷியின் ஆசிரமத்திலும், அஷ்ட லிங்கங்களில் சில லிங்கங்களின் வாசல்களிலும் பசுக்களைக் காணலாம்.
சாதாரணமாக நமது ஊரில் தெருவில் இருக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வழங்கினாலே காம ரீதியான குற்றங்கள் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும்.பழமையான கோயில்களில் இதையே செய்தால் எவ்வளவு சிறப்பு!!!

யாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது?அதை எப்படி தேர்வு செய்வது?


சூரியக்கிரக ஆகர்ஷணசக்தி பூமிக்கு சிவப்பு நிறத்திலும், சந்திரக்கிரக ஆகர்ஷண சக்தி வெள்ளை நிறத்திலும், சுக்கிரக்கிரக ஆகர்ஷண சக்தி வெண்பட்டு நிறத்திலும்,செவ்வாய்க்கிரக ஆகர்ஷணசக்தி சிவப்பு நிறத்திலும், குரு கிரக ஆகர்ஷண சக்தி மஞ்சள் நிறத்திலும், புதன் கிரக ஆகர்ஷண சக்தி பச்சை நிறத்திலும், ராகு மற்றும் கேதுவின் ஆகர்ஷண சக்தி சாம்பல் நிறத்திலும் பூமிக்கு வருகின்றன.அதே போல், மேற்படி கிரகத்தின் நிறத்தில் இருக்கும் கற்களும்,கடல்பாசிகளும் கிரக சக்தியை ஈர்க்கும் என அறிந்து வகைப்படுத்தினர்.

இங்கே தான் குழப்பம் வருகிறது.ஒருவர் கும்ப லக்னம், மேஷ ராசி,ராகு மகா திசை நடக்கிறது என வைத்துக்கொள்ளுவோம்.
கும்ப லக்னம் சனியின் லக்னம், மேஷ ராசி செவ்வாயின் ராசி, ராகு மகா திசை 18 வருடங்கள்.இப்போது அந்த ஒருவர் எந்த விதமான ராசிக்கல்லைப் பயன்படுத்துவது?
கும்ப லக்னம் என்பதால், சனியின் கிரகத்தின் நீலக்கல்லைப் பயன்படுத்துவதா?
இல்லை
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்க்கிரகத்தின் பவளக்கல்லைப் பயன்படுத்துவதா?
இல்லை
ராகு மகாதிசையின் அதிபதி ராகு.ராகுவின்
கோமேதகத்தைப் பயன்படுத்துவதா?

இங்கே தான் ஒரு அனுபவமுள்ள ஜோதிடரின் ஆலோசனை தேவைப்படுகிறது.அந்த அனுபவமுள்ள ஜோதிடரும் நடுநிலையுள்ளவராக இருக்க வேண்டும்.
என்னிடம் மேலே கூறிய ஒருவர் நேரில் சந்தித்தார்.அவருக்கு கும்ப லக்னாதிபதியான சனி (ஜோதிடப்படி)கெடவில்லை;மேஷராசிப்படி ராசியதிபதி (ஜோதிடப்படி) நல்ல இடத்தில் அமையவில்லை;
ஆனால்,திசை அதிபதி நன்றாக இருக்கிறார்.அவருக்கு 2015 ஆம் ஆண்டுவரை, கோமேதகம் அணியும்படி ஆலோசனை கொடுத்தேன்.ஒரே வாரத்தில்,அவரது வாழ்க்கைப்பாதை மாறிப்போனது.இப்போது அவர் ரொம்ப பிஸியாகிவிட்டார்.
சிலர் நீலக்கல்,பவளக்கல்,கோமேதகம் மோதிரம் என அனைத்தையும் அணிகிறார்கள்.இதனால்,பலன்கள் ஏற்படுவது அபூர்வம்.
லக்னம்,லக்னாதிபதி,ராசி,ராசியாதிபதி,திசா புக்தி,கோசாரம் என கணக்கிட்டு சரியான ரத்தினக்கல்லைத் தேர்வு செய்ய வேண்டும்.

நவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்

மனித உடலின் நீர் மற்றும் மனம் சந்திரக்கிரகத்தின் ஆகர்ஷண சக்தியால் இயங்குகிறது.
மனித உடலின் விந்து(ஆணின் சக்தி), சுரோணிதம் (பெண்ணின் சக்தி) சுக்கிரக்கிரகத்தின் வெள்ளிக்கோளின் ஆகர்ஷண சக்தியால் இயங்குகிறது.
ரத்தம் மற்றும் ரத்த நாளங்கள் செவ்வாய்க்கிரகத்தின் ஆகர்ஷணசக்தியாலும்,எலும்புகளின் தாதுக்கள் சனிக்கிரகத்தின் ஆகர்ஷண சக்தியாலும்,விந்துவின் உயிர் அணு குருக்கிரகத்தின் கதிர்வீச்சாலும் இயங்குகிறது.

நரம்புமண்டலத்தின் அனைத்து நரம்புகளும் புதன் கிரகத்தின் ஆகர்ஷண சக்தியாலும், கண்களின் ஒளியும்,ஆத்ம சக்தியும் சூரியக்கிரகத்தின் ஆகர்ஷண சக்தியாலும் செயல்பட்டுவருகிறது.மனித உடலின் கழிவு மற்றும் கெட்ட நீர் ஆகியன ராகு மற்றும் கேது கிரகங்களின் ஆகர்ஷணசக்தியால் செயல்பட்டுவருகிறது.

நன்றி:பிரம்ம ஜோதிடம் மாத இதழ் பக்கம்4,செப்டம்பர் 2007

திருஅண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்

திருவாதிரை மண்டலமும் அண்ணாமலையும்

ஒருவர் திருஅண்ணாமலைக்கு வருவதும்,அவர் கிரிவலம் செல்வது அவரால் முடிவு செய்யப்படுவதில்லையாம்;பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவரது அல்லது அவளது முன்னோர்கள் மற்றும் பித்ருக்களால் பித்ரு உலகங்களில் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது.ஒவ்வொருவரின் அண்ணாமலை எனப்படும் அருணாச்சல யாத்திரையும் விண்ணுலக அருணாச்சல திருவாதிரையில்தான் திட்டமிட்டு முடிவாகிறது.

திருவாதிரை என்பது நட்சத்திரம் என்றுமட்டுமே நாம் அறிந்திருக்கிறோம்.அருணாச்சல திருவாதிரை என்பது ஒவ்வொரு விநாடியும் அண்ணாமலையில் நிகழ்வதை விவரித்துக்காட்டும் நட்சத்திர மண்டலமாகும்.திரு அண்ணாமலையில் கிரிவலம் சென்றவர்கள்,செல்லுபவர்கள்,இனிமேல் செல்ல இருப்பவர்களின் கிரிவலப்பயணத்தை விநாடிதோறும் திரைப்படம்போல் விவரிப்பதே அருணாச்சல திருவாதிரை ஆகும்.
ஒருவர் கிரிவலம் நிறைவடைந்ததும் “அருணாச்சல திருவாதிரை மங்களம்” என்ற விஷேசமான மங்களத்துதியை ஓதி மூலவரின் வாசலுக்கு நேரில் நெடுஞ்சாண்கிடையாகத்தரையில் வீழ்ந்து வணங்குவர்.

இதுதவிர, திருவாதிரை நட்சத்திரம் நின்ற நாட்கள் அல்லது நாளன்று கிரிவலம் செல்லுவது,கிரிவலப் பயணத்தின் போது செய்யும் தர்மங்களுக்கு பல கோடி மடங்கு பலன் உண்டு என்பது சிவனாகிய அண்ணாமலை ரகசியமே!

ஒருவர் ஒரே ஒரு முறை திரு அண்ணாமலையில் குருபக்தியுடன்,மனப்பூர்வமாக கிரிவலம் சென்றால் அவருடன் நிறைவுபெறும் 64 தலைமுறையினருக்கு அதன் புண்ணியப்பலன்கள் சென்றடையும் என்பது அருணாச்சலரின் வாக்கு.

திருஅண்ணாமலையில் கிரிவலம் பவுர்ணமி,அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கானவர்கள் செல்லுகிறார்கள்.அப்போதுதான் கிரிவலம் செல்லவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.அந்த நாட்களில் கிரிவலம் செல்லும்போது நம்மோடு சூட்சுமமாக (ரகசியமாக) பல சித்தர்களும் கிரிவலம் செல்லுகிறார்கள்.அதனால்,அந்த சித்தர்களில் ஒருவர் அல்லது சிலரின் அருட்பார்வை நம்மீது படுவதற்கு வாய்ப்பு உண்டு.
கூட்ட நெரிசலை வெறுப்பவர்கள்,ஒரு தியானமாக,ஒரு தவமாக கிரிவலம் செல்ல விரும்பும் அன்பர்கள் எந்த நாளிலும்,எந்த நட்சத்திரத்திலும்,எந்தக் கிழமையிலும் கிரிவலம் செல்லலாம்.அப்படிச்சென்றாலும் கிரிவலம் சென்ற புண்ணியம் நமக்கும் நமது முந்தைய 64 தலைமுறை முன்னோர்களுக்கும் கிடைக்கும்.மூன்று கோடி தடவை திருக்கார்த்திகை தீபத்திருநாட்களில் மட்டும் கிரிவலம் சென்ற சித்தர்கள் இருக்கிறார்கள்.நாமெல்லாம் எம்மாத்திரம்?
நன்றி:அகஸ்திய விஜயம்,டிசம்பர் 2009

Saturday, February 20, 2010

நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை


ணம் நிறைய்ய்ய சேர ஒரு ஆன்மீக வழி

உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை,மஞ்சள்,குங்குமம்,மல்லிகை,தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்க வேண்டும்.மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்தால்,நமது பணம்நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும்; நம்மிடம் சேரும்.பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.

நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.

இதன்மூலம்,நமது பணம் மது,காமம்,புகை,ஆடம்பரம், கேளிக்கை போன்ற வீண் விரையமாகாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
நன்றி: அகஸ்திய விஜயம்,பக்கம் 38,டிசம்பர் 2009.

Friday, February 19, 2010

கிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினால். . .


கிர்லிக் கேமிராவின் மகிமைகள்

சோவியத் யூனியன் வல்லரசாக இருந்தபோது கம்யூனிஸக்கொள்கை அதன் முகமாக இருந்துவந்தது.அப்போது,மனிதனின் சக்தியே மகத்தான சக்தி என்பதை நிரூபிக்கும் விதமாக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதில் ஒன்றுதான் மன சக்தியைப் பயன்படுத்துதல்.

ஒரு ஜீனியஸ் தனது மூளையின் சக்தியில் 1 % மட்டுமே பயன்படுத்துகிறான் என்பதை சோவியத் கம்யூனிஸ்டுகளின் ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவித்தன.ஒரு மனிதன் தனது முழு மனசக்தியைப் பயன்படுத்தினால், ஒரே வருடத்தில் 12 பட்டங்களை (டிகிரி) முடிக்க முடியும்.40 வெவ்வேறு மொழிகளை கற்று அந்தந்த வட்டார மொழிக்காரர்களைப்போல பேசமுடியும்.ஆனால், தேவையற்ற கவலை,அர்த்தமற்ற பயம் போன்றவற்றால் தனது மனசக்தியின் தன்மையை உணருவதில்லை.
இந்த மனசக்தியைப் பயன்படுத்துவதன் உச்சமாக அவர்கள் கண்டுபிடித்ததுதான் கிர்லிக் கேமிரா.இந்த கேமிரா ஒன்றின் விலை சுமார் ரூ.40 லட்சமாகும்.இந்தக்கேமிராவின் மூலம் எடுக்கப்படும் புகைப்படம் ஒன்றின் விலை ரூ.5000/-ஆகும்.

இந்த கிர்லிக் கேமிராவின் மூலமாக ஒரு மனிதனின் முகத்தை காலையில் எடுத்தால் அவனது தலையைச் சுற்றிலும் ஆரஞ்சு நிற ஒளிவட்டம் தெரியும்.அந்த மனிதனின் சுறுசுறுப்பான மனநிலையைத் தெரிவிக்கிறது.மதியம் வயலட் நிறம் தெரியும்.சுறுசுறுப்பின் உச்சத்தை அது காட்டுகிறது.மாலையில் ஒரு மனிதனின் முகத்தை புகைப்படம் எடுத்தால் அடர்ந்த கறுப்பு நிறம் தெரியும்.இது அந்த மனிதனின் அசதியைக் காட்டுகிறது.
இந்த கிர்லிக் கேமிராவினால்,இந்தியாவில் புத்த பகவான் தியானம் செய்த கயாவில் உள்ள போதி மரத்தை ஒரு புகைப்படம் எடுத்தனர்.அந்த புகைப்படத்தில் ஒரு துறவி தியானம் செய்வது போன்ற அவுட் லைன் தெரிந்தது.

எனது ஆலோசனை என்ன வெனில், இன்று பல செயற்கைக்கோள்கள் பூமியை 24 மணி நேரமும் சுற்றிவந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கின்றன.இந்த செயற்கைக்கோள்களின் கேமிராக்களுடன் இந்த கிர்லிக் கேமிராக்களை இணைத்து பூமியில் மெக்கா, ஜெருசலம், சதுரகிரி, அண்ணாமலை,இமயமலை, திருக்கையிலாயத்தை ஒரு வருடம் முழுக்க புகைப்படம் எடுத்தால், இந்த சம்பவம் மனித வரலாற்றில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கி விடும் என்பது சந்தேகமே இல்லை;
மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு கிர்லியன் கேமிராவால் எடுக்கப்பட்ட ரெய்கி சக்தியைக் காட்டும் புகைப்படம்

உலக வரலாற்றை மாற்றும் உளவு நிறுவனங்கள்

உளவு நிறுவனங்கள்
December 29, 2005 at 9:57 pm
உளவு நிறுவனங்களின் கதைகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது.

பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள்.

இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியின் பொழுது இஸ்ரேலிய அத்லட்டிக் வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலின் மொசாட், இதற்கு காரணமானவர்களை உலகின் பல மூலைகளில் இருந்தவர்களை தேடிச் சென்று கொன்று தீர்த்த கதை ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களை விட மிக சுவாரசியமானது. ஆனால் இந் நிகழ்வு உளவு நிறுவனங்களின் கோர முகத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. இதற்கு அந் நாட்டின் பிரதமர் போன்ற தலைவர்களும் ஆதரவு கொடுத்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.

உலகின் அனைத்து உளவு நிறுவனங்களுமே நாசகார செயல்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள். நமக்கு பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தெரியும். காஷ்மீர் தொடங்கி கன்யாகுமரி வரை பாக்கிஸ்தானின் உளவாளிகள் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். காஷ்மீர், பஞ்சாப், அசாம், ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா என்று இவர்கள் இல்லாத இடமே இல்லை. பாக்கிஸ்தானின் உளவாளிகளில் முஸ்லீம்களை விட இந்துக்கள் மற்றும் பிறர் தான் அதிகம். ஆண்கள் மட்டும் தான் உளவாளிகள் என்பது கிடையாது. பெண்களும் உண்டு. உளவாளியாக இருப்பவர்களுக்கு பணம் கொட்டி கொடுக்கப்படும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு சர்வசக்தி படைத்த ஒரு அதிகார மையம். பாக்கிஸ்தானின் அரசுக்கோ, இராணுவத்திற்கோ கூட கட்டுப்படாமல் ஒரு நிழல் அரசாங்கம் போலவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம். தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்க முக்கிய காரணமே ஐ.எஸ்.ஐ தான். அது போல பஞ்சாப், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு தீவிரவாதிகளையும் நுழைத்தது ஐ.எஸ்.ஐ தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் நடக்கும் பல குண்டுவெடிப்புகளுக்கு பிண்ணணியில் இருப்பதும் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் தான். இது தவிர இந்திய இராணுவ இரகசியங்களைப் பெறுவது, தொழில்நுட்பங்களை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து திருடுவது போன்றவையும் இவர்களின் முக்கியமான வேலை.

அது போலவே நம்முடைய இந்திய உளவு அமைப்பான ராவும் பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலும் நுழைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போல ஒரு நிழல் அரசாங்கமாகவோ, சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாகவோ இல்லாமல் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் அதிகபட்ச அதிகாரத்துடனே ரா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரா உளவு அமைப்பை தொடங்கி அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் ராவின் அறிக்கைகளையே பெரும்பாலும் நம்பி இருந்தனர். இராணுவ அதிகாரிகளின் அறிவுரைகளை விட ராவின் அறிவுரைகளையே இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அதிகம் நம்பினர். இதனாலேயே இலங்கை விஷயத்தில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது என இந்தியப் பாதுகாப்பு படையின் பின்னடைவு குறித்து எழுதிய பல இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் – ரா சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இந்தியப் பிரதமர்களின் நம்பிக்கையை பெற்ற அமைப்பாக இருந்திருக்கிறது. தொடர்ந்து அதே நிலையிலேயே இருந்தும் வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் ராவின் பங்களிப்பு முக்கியமானது.

ரா அமைப்பு 1968ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது தொடங்கப்பட்டது. அப்போதைய ஐ.பி – Intelligence Bureau அதிகாரி. ஆர். என். காவ் ரா அமைப்பு தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். Research and Analysis Wing என்பதன் சுருக்கம் தான் RAW. ஆரம்ப காலங்களில் ரா அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய தூதரகங்களில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது பல இடங்களில் அவர்கள் பரவி இருக்கின்றனர். இந்திய மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருப்பது இவ்வாறான உளவு வேலைகளுக்கு வசதியாக இருக்கிறது. இவர்கள் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே உளவு வேலைகளையும் செய்வார்கள். ரா தொடங்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் அண்டை நாடுகளை இந்தியாவிடம் பணிய வைப்பது. இந்தியாவை இப் பிரதேசத்தின் வல்லரசாக, “பிரதேச பெரியண்ணண்” போல உருவாக்குவது தான் ராவின் முக்கிய குறிக்கோள். தெற்காசிய பிரந்தியத்தில் தான் வல்லரசாக வேண்டும், அதற்காக என்றால் பிற நாடுகள் இந்தியாவுடன் அணுசரணையாக இருக்க வேண்டும் என்பதாக இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைந்து இருந்தது.

தெற்காசியாவில் ராவின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ஆரம்ப காலத்தில் பாக்கிஸ்தான், சீனா இவற்றை குறி வைத்து தான் ரா செயல்பட தொடங்கியது. ஆரம்பத்தில் சுமார் 250 பேருடன் தொடங்கப்பட்ட ரா பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. ஒரு கட்டத்தில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட ரா உளவாளிகள் பாக்கிஸ்தானில் இருப்பதாக பாக்கிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது.

ராவின் வெற்றிகளில் முக்கியமானது பங்களாதேஷ் உருவானது தான். கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கிஸ்தானை பிளக்கும் ராவின் நோக்கத்திற்கு சரியான இடமாக இருந்தது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். “முக்தி பாகினி” என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது.

ராவின் மற்றொரு முக்கியமான வெற்றி, சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. 1973ல் சிக்கிம்மில் நடந்த உள்நாட்டு பிரச்சனையை பயன்படுத்தி சிக்கிமை ரா இந்தியாவுடன் இணைய வைத்தது. 1975ம் ஆண்டு, சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.

நேபாளம், பூட்டான், மாலத்தீவு போன்ற அனைத்து தெற்காசிய நாடுகளிலும் ராவின் செயல்பாடுகள் இருந்தது.

ராவின் தோல்விகளில் முக்கியமானது இலங்கை பிரச்சனை தான். ஆரம்ப காலங்களில் புலிகள் மற்றும் பிற போராளி குழுக்களுக்கு பயிற்சி அளித்தது தொடங்கி, இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அனைத்தும் ரா இந்தியப் பிரதமர்களுக்கு அளித்த அறிவுரையின் காரணமாகவே நிகழ்ந்தது.

ரா அமைப்பின் பல நடவடிக்கைகள் ரகசியமானவை. அதிகம் வெளிவருவதில்லை. அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தான் ராவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யுடன் ஒப்பிடும் பொழுது ரா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கிறது. பங்ளாதேஷ் உருவானது, சிக்கிம் விவகாரம், பூட்டான், மாலத்தீவு போன்ற நாடுகளை இந்தியாவின் மாநிலங்கள் போல பல விஷயங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க வைத்தது போன்றவை ராவின் வெற்றிகள். இலங்கையில் ராவின் நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கருணா விவகாரம் கூட இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் ராவின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம்.

ஆனால் பாக்கிஸ்தானால் இந்தியாவில் நாசவேலைகளையும், தீவிரவாதத்தையும் மட்டுமே வளர்க்க முடிந்தது, இந்தியாவை தூண்டாட முடியவில்லை.

இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் மற்றும் பிற உளவு நிறுவனங்கள் அனைத்துமே பிற நாடுகளில் நாச செயல்களை விளைவித்து அந் நாடுகளை சீர்குலைப்பதை முக்கியமான செயலாக செய்திருக்கின்றன. இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல,