Thursday, August 6, 2009

ஆரியன் என்பது வடிகட்டின பொய்:விஞ்ஞான ஆதாரத்துடன்


உலகின் எல்லா நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானிகளையும் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு மீண்டும் ஒரு முறை, ‘ ஆரியர்கள் இந்திய உபகண்டத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள்’ என்ற சித்தாந்தத்தை, ‘அண்டப்புளுகு’ என்று கூறி ‘டமார்’ என்று போட்டு உடைத்திருக்கின்றனர்.

இங்கேயுள்ள தி.க. ஆசாமிகளும், தி.மு.க.வினரும், வெள்ளைக்காரர்கள் இட்டுக்கட்டிச் சொன்ன புளுகு மூட்டைத் தரித்திரமான மெசபடோமியோ, சுமேரியாவிருந்து ஆரியர் என்ற இனம் இந்திய உபகண்டத்தில் படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தது என்பதை தங்கள் அரசியல் பிழைப்புக்கு உதவும் என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள் அல்லவா?

அதைத்தான் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, இந்தியா முழுவதிலும் எல்லா இனத்து மக்களின் 12,200 டி.என்.ஏ.,சாம்பிள்களை எடுத்து துல்லியமாக ஆராய்ச்சி செய்து, எல்லா இந்தியர்களும் அவர்கள் கருப்போ, சிவப்போ, வெளுப்போ என்ன ஜாதியோ எதுவானாலும்(இந்தியாவில் 6000 ஜாதிகள் உள்ளன), ஒரே ஜீன் ஒரே பாரம்பரியத்தைச் சேர்ந்த இனம் என்று அடித்துச்சொல்லிவிட்டனர்.

இங்கேயுள்ள வெள்ளைத்தோல் பார்ப்பனர்கள், கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் புளுகிக் கொண்டு இருக்கப்போகிறார்களோ?

எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த டார்டு யுனிவர்சிட்டியின், ‘இன்ஸ்டிடியூட் ஆப் மாலிக்யூலர் பயாலஜி’ என்ற விஞ்ஞானத்துறையின் தலைமையில் பல நாட்டு மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கருத்து , ‘திராவிட இந்தியன், ஆரிய இந்தியன் என்று சொல்வதெல்லாம் விஞ்ஞானரீதியானது அல்ல. வெறும் கப்ஸா! இங்குள்ள எல்லா இந்தியர்களும் இங்கே 60,000 முதல் 70,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவிலிருந்து குடியேறிய மக்களின் சந்ததிகளே’ என்கிறார்.

இந்த விஞ்ஞானக்குழுவின் உறுப்பினரான டாக்டர் தியானேச்வர் சவுபே ‘இங்கேயுள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகள், உபஜாதிகள், இங்கேயே உற்பத்தியாகிப் பரவிய வியாதிகள்’ என்கிறார்.இவர்கள் ஆராய்ச்சி, மரபியல் விஞ்ஞான ரீதியானது.

‘ஆரியன்’ என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு, கிட்டத்தட்ட , ‘ஜென் டில்மேன்’ என்பதே அர்த்தம்.

திராவிடம் என்பது டெக்கான் என்ற தட்சிணப்பீடபூமி என்றும், ஒரு பிரதேசத்தைக்குறிப்பது என்றும் மொழியியல் வல்லுநர்கள் கரடியாகக் கத்தி ஓய்ந்துவிட்டனர்.

இவர்கள் போற்றும் வெள்ளைத்தோல், ஐரோப்பிய விஞ்ஞானிகளே, ‘ஆரியர் படையெடுப்பு என்பதெல்லாம், ஆதாரமில்லாத கப்ஸா’ என்று சொல்லிவிட்டனர்.

இந்த கட்டுரை திரு.எஸ்.அனந்தராமன்,அண்ணாநகர்,சென்னை யிலிருந்து தினமலர் தினசரியின் இது உங்கள் இடம் பகுதியில் வெளிவந்தது. வருடம் 2009.

HOW WILL BECOME RICH .EACH AND EVERY MAN?BY HINDU SPIRITUAL ROOT

எல்லோரும் செல்வந்தர் ஆவது எப்படி?

தனி மனிதரின் நிலை உயர்த்தப்பட்டால், அம்மனிதன் பணிபுரியும் நிறுவனத்தின் நிலை உயரும்.
இவ்வாறு நிறுவனங்களின் நிலை உயர்த்தப்பட்டால், நிறுவனங்களின் தாய்நாடு உயரும்.இது சுவாமி விவேகானந்தர் சொன்னது.
தனி மனிதன் செல்வந்தனாக உயர இங்கே யாம் அறிந்த வழிமுறைகளைக் கூற உள்ளோம்.

1.குபேர காயத்ரி மந்திரம் தினமும் ஜபிக்கவும்.

2.லட்சுமி குபேர வழிபாடு வீட்டில் அல்லது அலுவலகத்தில்(உங்கள் நிறுவனமாக இருந்தால்) மாதம் ஒரு வெள்ளியன்று செய்யவும்.(எப்படிச் செய்வது எனக் கேட்கிறீர்களா? இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவின் பழைய தலைப்புக்களில் லட்சுமிபூஜை செய்வது எப்படி? என்பதைத் தேடவும்)

3.காஞ்சிபுரத்தில் குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது.

4.நாகப்பட்டிணத்தின் மையப்பகுதியில் குமரன் கோவிலில் குபேரனுக்கு தனி சன்னதி இருக்கிறது.

5.வீட்டில் குபேரன் படம் வைத்தும் வழிபடலாம்.


அ) தொழிலில் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருப்பவர்களும், தொழில் தொடங்க இருப்பவரும் மேலே கூறியுள்ள குபேரன் கோவிலுக்கு வந்து சிறந்த முறையில் லட்டு நிவேதனம், பிரார்த்தனை அர்ச்சனை செய்து கொண்டு செல்வது அவசியம்.

ஆ) பூச நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடிய நாட்களில் (25.3.2009 காலை மணி 6.50 முதல் அன்று முழுக்க.22.4.2010 மதியம் 1.10வரை) குபேரன் சன்னதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் பூரணமாகச் செய்து சுவர்ணார்ச்சனை 108 அல்லது 1008 கணக்கில் செய்து வரவும்.

இ)செல்வ நிலை தாழாமலிருக்கவும்(சிலரது ஜாதகத்தில் 7 வருடம் அல்லது 22 வருடம் பல கோடிக்கு அதிபதியாக இருப்பர்.திடீரென பரம ஏழையாகிவிடுவர்), திடீர் தன வரவுக்கும் பவுர்ணமி தோறும் குபேரனுக்கு மூல மந்திர அர்ச்சனை செய்து வழிபடலாம்.

ஈ) வணிகம் நன்றாக விருத்தி அடையவேண்டுமெனில் வெள்ளிக்கிழமைகளில் நல்ல நேரத்தில்(காலை 10 முதல் 10.25க்குள்) குபேரனுக்கு பால் அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்களால் குபேரனை அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.

உ) உடனடியாக பிரார்த்தனை நிறைவேற நெய்தீபம்

ஊ)குடியிருப்புகள், தெருக்கள், கோவில்களில் குபேரனுக்கு தனி சன்னதியை உருவாக்குங்கள்.அல்லது ஊர் தோறும் குபேரனுக்கு என்று தனி கோவில் கட்டுங்கள்.
ஏற்றி வரவும்.

ASTROLOGICAL TIPS FOR GET FORTUNEFULCHILD BIRTH

யோகங்கள் நிறைந்த குழந்தைகள் பிறக்க ஜோதிட ஆலோசனை

கணபதியை வணங்கி, எனது அன்னை பத்திரகாளியின் ஆசியோடு இந்த வலைப்பூவை வரைகிறேன்.
2010 2011 2012 இந்த மூன்று வருடங்களிலும் இந்த பூமியை ஆளப்போகும் குழந்தைகள் பிறக்கவுள்ளன.அப்படிப்பிறக்கப்போகும் குழந்தையின் பெற்றோராக நீங்கள் இருக்க விருப்பமா?

சுமார் ஒரு வார கால ஆய்வுக்குப்பிறகு இந்தப்பட்டியலை உங்களுக்கு அறிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி!!!



பின்வரும் நாட்களில் தம்பதியர் உறவு கொண்டால் யோகமும் ஆரோக்கியமும் நிறைந்த குழந்தைகள் பிறப்பார்கள்.அப்படிப் பிறப்பதற்கு கீழ்க்காணும் சில விதிமுறைகளை உரிய தம்பதிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

1.உறவு துவங்கும் முன் அரை மணி நேரமாவது உங்கள் இஷ்ட அல்லது குல தெய்வத்தினை வழிபட வேண்டும்.

2.உறவு கொள்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பும் உறவு கொண்ட 1 மணி நேரத்துக்குப் பின்பும் தான் உணவு உட்கொள்ள வேண்டும்.(இல்லாவிட்டால் பிறக்கும் குழந்தைகள் அலியாகவோ, ஐம்புலன்களில் ஏதாவது ஒரு குறைபாட்டுடனோ பிறக்கலாம்)

3.பதற்றப்படாமல், நிதானமாக நீண்ட நேரம் உறவு கொள்ளவேண்டும்.அதாவது, தம்பதியினரின் உடலும் மனமும் முழு மகிழ்ச்சியோடு உறவு கொள்ள வேண்டும்.

4. தம்பதியின் மாதவிலக்குக்கு முந்தைய 5 நாள் மற்றும் பிந்தைய 5 நாள் மிக நன்று.

5.இரவு 11 மணி முதல் விடிகாலை 5.30 க்குள் குழந்தைக்காக உறவு கொள்ள ஏற்ற நேரமாகும்.

6.ஒருபோதும் மொட்டைமாடி, வெட்ட வெளிப்பகுதியில் உறவு கொள்ளக்கூடாது.

7.மது, போதைப்பொருட்கள், பான் மசாலா, மாமிசம் சாப்பிட்டு இருக்கக்கூடாது.

மிகச் சிறந்த நாட்கள்:மிகச்சிறந்த குழந்தைக்காக

• 25.8.2009 செவ்வாய்
31.8.2009 திங்கள்

1.9.2009 செவ்வாய்
4.9.2009 வெள்ளி(பவுர்ணமி)
20.9.2009 ஞாயிறு
21.9.2009 திங்கள்
22.9.2009 செவ்வாய்
25.9.2009 வெள்ளி

1.10.2009 வியாழன்
18.10.2009 ஞாயிறு
27.10.2009 செவ்வாய்
28.10.2009 புதன்
30.10.2009 வெள்ளி
31.10.2009 சனி

1.11.2009 ஞாயிறு
17.11.2009 செவ்வாய்
19.11.2009 வியாழன்
21.11.2009 சனி
22.11.2009 ஞாயிறு
24.11.2009 செவ்வாய்
27.11.2009 சனி
29.11.2009 ஞாயிறு

ஏன் தினமும் பக்திப்பாடல் பாடவேண்டும்?

அறிவே சக்தி; வலிமையே வாழ்க்கை.

சிறு வயதில் கந்த சஷ்டிக் கவசம், கந்தரலாங்காரம்,பெரியபுராணம் முதலான ஆன்மீகப்பாடல்களை தினமும் பாடுவதை நமது முந்தைய தலைமுறை வரை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தனர்.ஏன்?

யாருக்கெல்லாம் அபார நினைவாற்றல் இருக்கிறதோ அவருக்கு ஒரு போதும் தற்கொலை எண்ணம் வராது என்பதை நவீன மனோதத்துவம் ஆய்வு முடிவாக சொல்லியிருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்யும் விதம்

கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்யும் விதம்


புரட்சி, சோசியலிசம், சம தர்மம் என்ற வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.ஆமாம் இருந்தவர்கள் தான்.இருப்பவர்கள் அல்ல.

புரட்டு, சந்தர்ப்பவாதம், பண தர்மம் என மாறி விட்ட கம்யூனிஸ்டுகளால் இந்தியா குட்டிச்சுவராகப் போனது.இன்று அவர்களே குட்டிச்சுவராகிவிட்டனர்.

பஞ்சாப் மாவீரன் சுதந்திரப்போராட்ட தியாகி பகத்சிங்கை சுதந்திரப்போராட்டகாலத்தில் தேசத்துரோகி என அறிவித்தவர்கள் இந்த கம்யூனிஸ்டுகள்.

நமது பாரதத்தை சீனா படையெடுத்த போது கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது.ஒன்று சீனாவுக்கு ஆதரவாக மேற்கு வங்காளத்தில் பணவசூல் செய்தது.அப்படி பணவசூலின் போதே இந்த ரசீதை சீன ராணுவத்திடம் காட்டினால் உங்களைக் கொல்ல மாட்டார்கள் என அறிவித்தனர்.இந்த ஒரு சம்பவமே போதுமே இவர்கள் சீனாவின் உளவுப்பிரிவு என நிரூபிப்பதற்கு!!!

ஈரானில் மதவாத அரசைக் கவிழ்க்க உதவினர் கம்யூனிஸ்டுகள். அப்படி கம்யூனிஸ்டுகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் , ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?
கம்யூனிஸ்டுகளை அடியோடு கொன்றதுதான்.(இதை எந்த கம்யூனிஸ்டும் பொய் என நிரூபிக்கட்டும்.நான் ஆன்மீகக்கடல் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்).

தமிழ்நாட்டில் எப்படி கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்கிறார்கள் தெரியுமா?

கம்யூனிஸ்டு என்றாலே அரசு அதிகாரிகள் நடுங்குவது இன்று வரை உண்மை.இந்த மரியாதையை 1980 வரையிலான கம்யூனிஸ்டுத்தலைவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த செல்வாக்கை வைத்துக்கொண்டு, தாலுகா அலுவலகம், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகம் சென்று அடுத்த 6 மாதங்களில் எந்தெந்தப்பகுதிகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதிக்கு அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்போகிறது? என்பதை அறிந்து கொள்வார்கள்.

அதைக் கொண்டே அந்தந்தப் பகுதிகளில் போராட்டம்,ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.இது அப்பகுதி மக்களுக்குத் தெரியாது இல்லையா? அடுத்த 6 மாதத்தில் ‘இவர்கள் போராடியது போல’ திட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிடும்.
உடனே வெற்றி வெற்றி என கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வை மதவாதக்கட்சி என கத்தித் தீர்ப்பார்கள்.ஆனால், கேரளாவில் முஸ்லீம் லீக்குடன் கூட்டணி வைத்து ஆளுவார்கள்.அது மதவாதம் கிடையாதாம்.
கேரளாவில் பா.ஜ.க.வின் பிரபலமான தலைவர்களைக் கொல்லுவார்கள்.அதுதான் இவர்களுக்கு சோசியலிசமாம்.

மதம் ஒரு அபின் என்பர்.ஆனால் இன்று சோவியத் ரஷ்யாவில் இந்து தர்மம் பரவிக்கொண்டிருப்பதை காதில் கூட வாங்கமாட்டார்கள்.

கோர்ப்பசேவ், முன்னாள் சோவியத் அதிபர் சொன்ன வார்த்தைகள்:நாங்கள் ஆன்மீக ரீதியான தேசிய ஒருங்கிணைப்பை உருவாக்காததால் தான் இன்று பிரிந்து போய்விட்டோம்.
நீங்கள் ஆன்மீக ரீதியான ஒருங்கிணைப்பால் விரைவில் இந்த பூமியையே ஆளுவீர்கள்.

இந்தியாவில் 1960 வாக்கில் இந்துமதத்தை சித்தாந்தரீதியாக அழிப்பதற்காக புது டெல்லியில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.இதை உருவாக்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான்.கூடவே ஒரு காரியம் செய்தனர்.உங்களிடம் இருக்கும் பழமையான ஓலைச்சுவடிகளை ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகத்துக்குத் தாருங்கள்.அவற்றைக்கொண்டு நமது பெருமைகளை பரப்புவோம் என மக்களிடம் கம்யூனிஸ்டுகள் வேண்டினர்.
பொது மக்கள் பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வந்த புராதன இந்திய படைப்புகளைத் தந்தனர்.
அவற்றை கம்யூனிஸ்டுகள் எரித்தனர்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்த கம்யூனிஸ்டுகள் கடைசி வரை மன்மோகன் சிங்கின் அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கவில்லை.ஏன்? பதவி சுகத்தை துறக்கத்தயாராக இல்லை.விளைவு?
85 எம்.பிக்களாக இருந்த கம்யூனிஸ்டுகள் 25 ஆக குறைந்து கரைந்து போனார்கள்.விரைவில் இந்திய மியூசியங்களில் கம்யூனிஸ்டு கொள்கைகளைக் காணலாம்.
குறிப்பு:எப்படி இந்த கட்டுரை ஒரு நேர்த்தியாக இல்லையோ அதேபோல கம்யூனிஸ்டுகளும் நேர்த்தியாக இல்லை.
இன்று இந்தியாவில் 12 விதமான கம்யூனிஸ்டுகட்சிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன.
இதில் மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் நக்சலைட் ஆகும்.

Wednesday, August 5, 2009

ஜோதிடப் பட்டயப்படிப்பின் வரலாறு

ஜோதிடப்பட்டயப்(D.A.,)படிப்பின் வரலாறு
(Diplamo in Astrology)

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடத்தில் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தியது.ஆறுமாத பட்டயப்படிப்பு அது.இந்த படிப்பை அறிமுகப்படுத்திய உடனே மதுரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனேகமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் என நினைக்கிறேன்.கம்யூனிஸ்டுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பின் அடையாளமாக பெரியாரிலிருந்து பல்கலைக்கழகம்செல்லும் ஒரு நகரப் பேருந்தை(டவுண் பஸ்) எரித்தன!!!
இதைப் பார்த்து எத்தனை மக்கள் சிரித்திருப்பார்கள்.மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த மாநில அரசாங்கத்தின் மந்திரிகள் துர்கா பூஜைகளில் திருட்டுத்தனமாக இன்றும் கலந்துகொள்ளுகிறார்கள்.

(சிலரது பிறந்த ஜாதகத்தில் சனியுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் அவர் தெய்வநம்பிக்கையற்றவராகவும், தனது பிறந்த நாட்டின் புராதன சாஸ்திரங்களைக் கிண்டல் செய்பவராகவும் இருப்பார் என ஜோதிடம் சொல்லுகிறது)

அதே சமயம், ஜோதிடப்பட்டயப்படிப்பிற்கு முதல் பேட்ச் மாணவர்களின் எண்ணிக்கை 60,000.இத்தனைக்கும் இது அஞ்சல்வழிப்படிப்பாகும்.

இந்த வருடம் கி.பி.2009! மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடப் பட்டயப் படிப்பை நிறுத்திக்கொண்டது.
ஆனால்,இந்த பட்டயப்படிப்பு ஒரு ஆண்டுக்கு ரூ.20,00,000/-(இருபது லட்சம் ரூபாய்) வருமானம் பல்கலைக்கழகத்துக்குத் தந்துகொண்டு இருந்தது.ஆதாரம்: தினமலர்,பிப்ரவரி,2009.

அதே சமயம், தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் கற்பகம் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஜோதிடப் பட்டயப்படிப்பை அறிமுகம் செய்துள்ளன.இதில் சாஸ்திரா பட்டயம் முதல் முதுகலை வரை ஜோதிடவியல் பாடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே துவக்கிவிட்டது.

அமெரிக்காவில் வேத ஜோதிடம் (vedic astrology) என்ற பெயரில் நமது இந்து ஜோதிடக்கலையை பல பல்கலைக் கழகங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் அமெரிக்க வேத ஜோதிட சங்கம்(www.aava.com= American Association of Vedic Astrology),இங்கிலாந்தில் பிரிட்டன் வேத ஜோதிட சங்கம்(British Association of Vedic Astrology = www.bava.org) என அமைப்புக்கள் இயங்கிவருகின்றன.

கி.பி.2002 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.இங்கிலாந்து அரசு .400 கோடி பவுண்டுகள் செலவழித்து பல யாகங்களை லண்டன் மாநகரத்தில் செய்தது.(ஆதாரம் தினமலர் கி.பி.2002)
இங்கிலாந்து அரசு வேத ஜோதிடர்களைக் கொண்டு தனது நாட்டின் எதிர்காலத்தை கணிக்கச் சொன்னது. அந்த கணிப்பின் படி கி.பி.2012 முதல் 2015க்குள் இங்கிலாந்தின் பெரும் பகுதிகள் கடலுக்குள் மூழ்க இருப்பதைக் கண்டறிந்தது.

கடந்த நூற்றாண்டில் அது உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்தது.அப்போது அதன் நிர்வாகிகளும் இங்கிலாந்து ராணுவமும் பல மதத்தைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்களை இடித்தாலும், ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்தியதாலும், கற்பழித்ததாலும் இந்த சாபம் உருவானது.

இதை மாற்ற கேரள நம்பூதிரிகளைக் கொண்டு பல யாகங்களைச் செய்தது.
அன்பார்ந்த ஆன்மீகக்கடல் வாசகர்களே! இந்தச் செய்தி முழு நிஜம்.ஆதாரம் சேகரிக்குமளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது.நான் 1985 முதல் தினமும் தினமலர், தினத்தந்தி, சுதேச மித்திரன்(இப்போது இது வெளிவரவில்லை) வாசித்து வருகிறேன்.

அதே சமயம், இதுபோன்ற செய்திகளுக்கு இனி ஆதாரம் கிடைத்தால் குறிப்பிடவோ அல்லது புகைப்படநகலோ தருவது என முடிவு செய்துள்ளேன்.இதற்கான ஆதாரங்களை நூலகங்களில் தேடத்துவங்கியிருக்கிறேன்.
கிடைத்தவுடன் நிச்சயமாக குறிப்பிடுவேன்.

உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவும் ஒரு வலைப்பூ

உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவும் வலைப்பூ



தமிழ்நாடு மாநிலம் அளவில் உடல் ஊனமுற்றோர்கள் ஒருங்கிணைந்து ஒரு சங்கம் அமைத்துள்ளனர்.அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகள், அரசிடம் எப்படி உதவிகள் பெறுவது? என்பதைப் பற்றி தொகுத்து திருச்சியைச் சேர்ந்த திரு.வெங்கட் என்பவர் ஒரு வலைப்பூ துவக்கியுள்ளார். இந்த வலைப்பூ மாற்றுத்திறன் படைத்தோர்(உடல் ஊனமுற்றோர்)களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.
www.handicappedwelfare.blogspot.com