Showing posts with label திருவாதிரை. Show all posts
Showing posts with label திருவாதிரை. Show all posts

Saturday, September 8, 2012

நம்மை சிவ அம்சமான ருத்ரனாக்கும் திருவாதிரை கிரிவலம்!!!





மும்மூர்த்திகளான பிரம்மா எனப்படும் அயன்,திருமால் எனப்படும் விஷ்ணு,ருத்ரன் என்ற மூர்த்தி=இம்மூவரையும் நிர்வாகிப்பவர் பைரவப் பெருமான்.பைரவப் பெருமானை உருவாக்கியவர் சதாசிவன் எனப்படும் ஆதிசிவன்.இந்த சதாசிவனின் இருப்பிடமே திரு அண்ணாமலை ஆகும்.நாம் வாழும் பூமிக்கும் நவக்கிரகமண்டலங்களான சந்திரன்,செவ்வாய்,சுக்கிரன்,சனி,புதன்,சூரியன்,ராகு,கேது இவைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மையமே விழுப்புரம் அருகில் இருக்கும் அருணாச்சலம் எனப்படும் அண்ணாமலை ஆகும்.அருணாச்சலத்தின் அவதார நட்சத்திரமே திருவாதிரை ஆகும்.


திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் விதங்களே ஒரு லட்சத்து எட்டு விதங்களாக இருக்கின்றன.சிவராத்திரி கிரிவலம்,அமாவாசை கிரிவலம்,துவாதசி கிரிவலம்,பவுர்ணமி கிரிவலம்,அவரவர் ஜன்ம நட்சத்திர கிரிவலம்,அவரவர்ஜன்ம திதி கிரிவலம்,அங்கப்பிரதட்சண கிரிவலம்,அடிக்கொரு 1008 அருணாச்சல மந்திர ஜப கிரிவலம்(இதை ஒரு தடவை முடிக்க சில மாதங்கள் ஆகும்) என்று இருக்கின்றன.திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் கிரிவலம் செல்வது  சிறந்த அதே சமயம் தகுதி வாய்ந்த சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கிரிவலம் ஆகும்.



நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு யோகக்காரகன் என்று பெயர்;நமது உடலில் இருக்கும் பிறப்பு உறுப்பையும்,அதற்குள்ளே இருக்கும் விந்து,சுக்கிலம்,சுரோணிதம் போன்றவைகளையும் நிர்வாகித்து பாதுகாத்து வருவது ராகுபகவானே.இவரது சாரமுள்ள நட்சத்திரங்கள் திருவாதிரை,சுவாதி,சதயம் ஆகும்.இந்த மூன்று நட்ச்த்திரங்களில் பிறப்பவர்கள் இந்த கலியுகத்தில் அதிகம்.இவர்கள் அளவுக்கதிகமாக உணர்ச்சிவயப்படுபவர்களாக இருக்கிறார்கள்:ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து விதமான வேலைகளை செய்வதில் வல்லவர்கள்;அந்த நான்கு அல்லது ஐந்து விதமான வேலைகளையும் நுணுக்கமாகவும்,நேர்த்தியாகவும் செய்வதில் சமர்த்தர்கள்.குடும்பம்,நிறுவனம்,நட்பு வட்டம்,அரசியல் போன்றவைகளில் பெரும் குழப்பத்தை சில நிமிடங்களில் செய்யும் திறனும்,ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பெரும் குழப்பத்தை சில நிமிடங்களில் சீர்செய்யும் சாகதபுத்தியும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு.

தொடர்ந்து 108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்பவர்களுக்கு இப்பிறவியிலேயே அவர்கள் விரும்பும் எதையும் அருளுவார் அண்ணாமலையார்.ஒரு  நாளில் எந்த நேரத்தில் திருவாதிரை நட்சத்திரம் துவங்குகிறது என்பதை அறிந்து,அந்த நேரத்தில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் கிரிவலத்தைத்  துவக்க வேண்டும்;அவ்வாறு துவக்கும்போது மஞ்சள் நிற வேட்டி அணிந்திருக்க வேண்டும்;பெண்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருப்பது அவசியம் ஆகும்; இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்து  முக ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்; நமது உச்சந்தலையில் மூன்று மடல்களைக் கொண்ட வில்வ இலையை ஒட்டி வைத்து புறப்பட வேண்டும்.இரட்டைப்பிள்ளையாரை வழிபட்டப்பின்னர்,தேரடி முனீஸ்வரரை வழிபட்டுவிட்டு,கிழக்கு கோபுரவாசலுக்கு நேராக சாலையில் நின்று அண்ணாமலையாரை மனப்பூர்வமாக தியானித்து நமக்கு வேண்டியதை அங்கேயே கேட்டுவிட வேண்டும்;இதற்கு கிரிவல வேண்டுதல் என்று பெயர்.(இது பலருக்குத் தெரியாது)இப்படி இங்கேயே வேண்டுவதன் மூலமாக கிரிவலப்பாதையில் இருக்கும் ஒன்பது லிங்கங்களிடமும் வேண்டிவிட்டதாகவே அர்த்தமாகிறது என்று ஒரு சிவனடியார் சொன்னது ஆச்சரியமளித்தது.(கடந்த காலங்களில்-கிரிவலம் புறப்படும் போது- கிழக்கு கோபுர வாசலில் நின்று வேண்டியதுதான் இதுவரை நிறைவேறியிருக்கிறது.கிரிவலப்பயணத்தில் வேண்டியது நிறைவேற வில்லை;)பிறகு கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலப் பயணம் முழுவதுமே ஓம்சிவசிவஓம் என்று ஜபித்தவாறு செல்ல வேண்டும்;


14 கி.மீ.தூரமுள்ள கிரிவலப்பாதையினை கடக்க குறைந்தது நான்கு மணி நேரமும்,அதிகபட்சம் எட்டு மணிநேரமும் ஆகிறது.இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும்,விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறும் சென்றால் நமது ஜப எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது.இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திர ஜபத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை;





கிரிவலப்பயணத்தில் ஆங்காங்கே தண்ணீர் அல்லது இளநீர் மட்டும் அருந்திக்கொள்ளலாம்.(காபி,டீ,பால்,குளிர்பானங்கள் அருந்தக் கூடாது) இவ்வாறு தண்ணீர் அல்லது இளநீர் அருந்துவதால் அதுவரை நாம் ஜபித்த ஓம்சிவசிவஓம் மந்திரஜபமானது நமது உடலுக்குள் பதிவாகிவிடும்.அண்ணாமலையின்  கிரிவலப்பாதையில் ஜபித்த ஓம்சிவசிவஓம் மந்திர ஜபமானது உடனே நமது உடலுக்குள் பதிவானால் வெகுவிரைவில் சிவனது அம்சமான ருத்ரனாக மாற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.(தண்ணீர்,இளநீரைத்  தவிர வேறு எதை அருந்தினாலும்,எதை சாப்பிட்டாலும் மந்திரம் உடலுக்குள் பதியாமல் போய்விடும்;வீணாக எதைப்பேசினாலும் இதே கதிதான்)




இப்படி முதல்முறை மனக்கட்டுப்பாட்டுடன் கிரிவலம் வருவது மட்டும் சிரமமாக இருக்கும்;அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும்.அப்படி ஒரேஒரு முறை கிரிவலம் மவுனமாக ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறு நாளே நமது கடுமையான பிரச்னை ஒன்று தீர்ந்துவிடும்;அல்லது தீர்ந்துவிடக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பது அனுபவ உண்மை.கிரிவலம் முடிந்ததும்,கண்டிப்பாக மூலவரான அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும்.தரிசனம் செய்து விட்டப்பின்னர்,நேரடியாக நமது வீட்டுக்குச் செல்ல வேண்டும்;வேறு எந்த கோவிலுக்கும்,எவரது வீட்டுக்கும் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.



இந்த கிரிவலத்துக்குப் பயன்படுத்தும் மஞ்சள் நிற ஆடைகளை வேறு எப்போதும் பயன்படுத்தக் கூடாது;துவைக்கக் கூடாது;ருத்ராட்சங்களையும் இதே போலத்தான்! ஒவ்வொரு முறையும் வேறுவேறு வில்வதளங்களை பயன்படுத்த வேண்டும்.திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த கிரிவலம் மிகச் சுலபமாக கைகூடும்;தவிர,வேறு பலருக்கும் கைகூடும்.அந்த வேறு பலரில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பதை அறிய உங்களது  பிறந்த ஜாதகத்தை அனுப்பி விபரமறிந்து கொள்ளலாம்.அவ்வாறு அறிந்து கொள்ள விரும்புவோர்,மின் அஞ்சலில் subject இல் திருவாதிரை கிரிவலம் செல்லும் தகுதி அல்லது thiruvathirai girivalam என்று டைப் செய்து அனுப்பவும்


இப்படி குறைந்தது 27 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அதிகபட்சமாக 108 திருவாதிரை நட்சத்திரநாட்களுக்கு கிரிவலம் வந்தால் நாம் சிவகணமாக மாறிவிடுவோம்;அல்லது ருத்ரனாக உயர்ந்து விடுவோம்;ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 13 திருவாதிரை நட்த்திரம் தான் வரும்;108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு மொத்தம் ஒன்பது வருடங்கள் தேவைப்படுகின்றன.இது ஒரு மிக பிரம்மாண்டமான ஆன்மீகமுயற்சி! களத்தில் இறங்குவோமா?


இந்த நந்தன வருடத்தின் திருவாதிரை நாட்களின் பட்டியல்:



10.09.2012 திங்கள்(திங்களும் திருவாதைரையும் ஒன்றாக வருவது மிக அபூர்வமான தினமாகும்)


7.10.2012 ஞாயிறு காலை 6.08 மணி முதல் 8.10.2012 திங்கள் காலை 8.14 மணி வரை


3.11.2012 சனி மதியம் 1.14 மணி முதல் 4.11.2012 ஞாயிறு மதியம் 3.24 மணி வரை(இரண்டு சூரியோதயங்களுக்குள் ஒரு நட்சத்திரம் வந்தால் அது முழுமை பெற்ற நட்சத்திரம் ஆகும்;இது உடைந்த நட்சத்திரம் ஆகும்.முழுப்பலன் பெற இந்த நட்சத்திரநாளைப் பயன்படுத்த நம்மால் இயலாது)


30.11.2012  வெள்ளி மாலை 5.19 மணி முதல் 1.12.2012 சனி இரவு 10.34 மணி வரை


27.12.2012 வியாழன் நள்ளிரவு மணி 3.24 முதல் 28.12.2012 வெள்ளி நள்ளிரவு மணி 5.45 வரை(மார்கழி மாதத்து பவுர்ணமி)

24.1.2013 வியாழன் காலை மணி 10.36 முதல் 25.1.2013 வெள்ளி மதியம் மணி 12.59 வரை

20.2.2013 புதன் மாலை மணி 5.52 முதல் 21.2.2013 வியாழன் இரவு மணி 8.18 வரை

19.3.2013 செவ்வாய் நள்ளிரவு மணி 1.11 முதல் 20.3.2013 புதன் நள்ளிரவு மணி 3.39 வரை


மீதி திருவாதிரை நட்சத்திர நாட்கள் விபரம் டிசம்பர் 2012 முடியும்போது வெளியிடப்படும்.இந்த பெருமுயற்சியைச் செய்ய விரும்புவோர் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்;முறையற்ற உறவு இருந்தால் அதை தலைமுழுக வேண்டும்.இவை இரண்டும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.இல்லாவிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும்.ஜாக்கிரதை!!!




ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

Wednesday, June 23, 2010

கோடிமடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை கிரிவலம்

விக்ருதி வருடத்தின் திருவாதிரை நட்சத்திர நாட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்த நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் மற்ற நாட்களில் கிரிவலம் செல்லுவதால் கிடைக்கும் புண்ணியத்தை விட பலகோடிமடங்கு புண்ணியம் கிடைக்கும் என அருணாச்சலபுராணம் தெரிவிக்கிறது.
மேலும்,இந்த நாட்களில் கிரிவலம் செல்லும்போது செய்யும் அன்னதானம்,ஆடைதானம்,விளக்குதானம்,மந்திர ஜபம்,சொர்ண தானம்,தீப தானம்,மரக்கன்று நடுதல் போன்றவை பல கோடி மடங்குகள் நன்மையளிக்கும்.
எனவே, எனதருமை ஆன்மீகக் கடல் வாசகர்களே! நீங்கள் இந்த நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்லவும்;கிரிவலம் செல்லும்போதெ அன்னதானம் செய்து நீங்களும்,உங்கள் வாரிசுகளும்,உங்கள் முன்னோர்களும் வளமுடன் வாழ்க!!!

10.7.2010 சனி மாலை 5.56 முதல் 11.7.2010 ஞாயிறு மாலை 4.59 வரை

6.8.2010 வெள்ளி நள்ளிரவு 1.56 முதல் 7.8.2010 சனி நள்ளிரவு 1.01 வரை

3.9.2010 வெள்ளி காலை 9.48 முதல் 4.9.2010 சனி
காலை 9.00 வரை

30.9.2010 வியாழன் மாலை 5.36 முதல் 1.10.2010 வெள்ளி மாலை 4.53 வரை

27.10.2010 புதன் நள்ளிரவு 1.23 முதல் 28.10.2010 வியாழன் நள்ளிரவு 12.44 வரை

24.11.2010 புதன் காலை 9.08 முதல் 25.11.2010 வியாழன் காலை 8.35 வரை
21.12.2010 செவ்வாய் மாலை 4.47 முதல் 22.12.2010 புதன் மாலை 4.20 வரை

17.1.2011 திங்கள் நள்ளிரவு 12.35 முதல் 18.1.2011 செவ்வாய் நள்ளிரவு 12.13 வரை

14.2.2011 திங்கள் காலை 8.25 முதல் 15.2.2011 செவ்வாய் காலை 8.10 வரை

13.3.2011 ஞாயிறு மாலை 4.15 முதல் 14.3.2011 திங்கள் மாலை 4.06 வரை

9.4.2011 சனி நள்ளிரவு 12.09 முதல் 10.4.2011 நள்ளிரவு 12.07 வரை

Saturday, August 29, 2009

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம்)

மிருகசீரிடம் : ஒருவரைப் பார்த்த உடனே அவரது எண்ணம் என்ன? என்பதை கண்டறியும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களே! தாங்கள் கோபத்தைவிட்டுவிட்டால் அற்புதமனிதர்தான்.தங்கள் நட்சத்திரங்களில்தான் பெரும் செல்வந்தர்கள், பக்திமான்கள்,திறமையானவர்கள் பிறக்கிறார்கள்.

7.10.2009 முதல் 16.11.2009 வரை திடீர் பணவரவுகள், பதவி உயர்வு மற்றும் விரும்பிய இட மாற்றங்கள் கிடைக்கும்.குடும்பத்துக்கு ஆடம்பரப்பொருட்கள் வாங்கிக்குவிப்பீர்கள்.குடும்ப வைத்தியச்செலவு குறையும்.மூத்தோரால் ஆதாயம் உண்டு.
16.11.2009 முதல் 23.12.2009 வரை சுபச்செலவு உண்டு.சிலருக்கு ஈமச்சடங்குகள் செய்யும் சந்தர்ப்பம் அமையும்.(குடும்பத்தில் பெரியவர்கள் மறையலாம்).தவறான சகவாசத்தை ஒதுக்கி வைத்தால் தேவையற்ற வம்பு வழக்கு அண்டாது.வீட்டில் பிரச்னை செய்யாதீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை தொழில்மாறுதல் மற்றும் இடமாறுதல் உண்டு.சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும்.வாகனத்தில் செல்லும்போது மிகக்கவனம் அவசியம்.தொழில் ரீதியாக வாக்கு தராதீர்கள்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். தைரியம் கூடும். வாழ்க்கையில் மிக முக்கிய ஆனால் சிறு மாற்றம் உண்டாகும்.

திருவாதிரை : எவரிடமும் எளிதில் பழகும் குணமுடையவரே! 7.10.2009 முதல் 16.11.2009 வரை இதுவரை இருந்து வந்த பணப்பிரச்னைகள், குடும்பப்பிரச்னைகள் தீரும். தங்களது வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.மருத்துவ செலவு குறையும்.தாய் குடியிருக்கும் வீடு இவற்றால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை ஆன்மீகப்பயணங்கள் செல்வீர்கள். புதிய ரகசிய தொடர்புகள் ஏற்படும். வெளிநாட்டுப்பயணமுயற்சி வெற்றி பெறும். மூத்த சகோதரவர்க்கத்தால் லாபம் உண்டு.
23.12.2009 முதல் 13.3.2010 வரை கடன் தொல்லைகள் ஏற்படும். தொழில்துறையினருக்கு முடக்கம் நீங்கும்.வாழ்க்கைத் துணை பிரச்னை நீங்கும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை வார்த்தையில் நிதானம் தேவை.விஷ வண்டுகள் பயம் உண்டு. மனக்குழப்பம் ஏற்படும்.வாக்குறுதி தரக்கூடாது.சிறு பிரச்னைகளில் ஒதுங்கிக் கொள்ளவும்.வீரத்தைக் காட்டக் கூடாது.

புனர்பூசம் : மனதுக்குள் அனைத்தையும் பூட்டி வைத்துக் கொள்பவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை உடல்நலக்குறைவு ஏற்படும்.ரத்த அழுத்த நோய் பாதிப்பைத் தரும்.இளைய சகோதரத்தால் செலவு உண்டு.எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை தொழில் முன்னேற்றம் ஏற்படும்.அப்பா வழியில் உதவிகள் கிடைக்கும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை பூர்வீகசொத்தில் லாபமும், சிலருக்கு புத்திரப்பாக்கியமும் உண்டாகும்.தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகிவிடும். திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு உண்டாகும்.(லாட்டரி போல).
13.3.2010 முதல் 15.5.2010 வரை குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவீர்கள்.ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள்.கனவுத் தொல்லை உண்டு.பிதுர்காரியம் செய்வீர்கள்.