Showing posts with label gurusamy kovil. Show all posts
Showing posts with label gurusamy kovil. Show all posts

Tuesday, August 31, 2010

குருசாமி சமாதிகோவில்,ராஜபாளையம்

கடந்த 300 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் மையப்பகுதியான அம்பலபுளிபஜாரில் அமைந்துள்ளது குருசாமி சமாது எனப்படும் குருசாமி சமாதி கோவில்.சாலியர் எனப்படும் நெசவுத்தொழிலை குலத் தொழிலாகக் கொண்டிருக்கும் பிற்பட்ட ஜாதிமக்களின் குல தெய்வமாக குருசாமி தாத்தா இங்கே ஜீவ சமாதி ஆகியிருக்கிறார்.சுமார் 1000 சாலிய குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருக்கிறார்.ஆனி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று குருசாமி ஜீவசமாதி ஆனார்.

ராஜபாளையம்,சத்திரப்பட்டி,ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வாழும் சாலியர்களில் குரு என்ற பெயரை முதலிலோ அல்லது கடைசியிலோ தாங்கி இருப்பவர்கள் பெரும்பாலும் குருசாமி தாத்தாவை குல தெய்வமாகக் கொண்டவர்கள்.
உதாரணம்:ரமேஷ்குரு,குருதேவ்,குருநந்தினி,பழனிகுரு,குரு மகேஸ்வரன்,குருசாமி

ஒவ்வொரு தமிழ்மாதமும் கார்த்திகை அன்று இந்தக் கோவிலில் அன்னதானம் நடைபெறுகிறது.இந்தக் கோவிலின் நிர்வாகம் சாலியர் சமுதாயத்திற்குச் சொந்தமானது ஆகும்.

இந்த குருசாமி சமாதிக்கு ஒரு முறை வந்து வழிபட்டாலே மன நிம்மதி, செல்வ வளம் பெருகுகிறது என்பது அனுபவ உண்மை.

இந்த குருசாமி சமாதியின் ஸ்தல வரலாறு விரைவில் நமது ஆன்மீகக் கடலில் வலைப்பூவாக மலரும்.