Thursday, February 4, 2021

இப்பிறவியில் நிம்மதியையும்,இப்பிறவிக்குப்பிறகு முக்தியையும் தரும் துவாதசி அன்னதானம்!!!

 

கர்மவினைகளை கரைத்து சர்வ சுபிட்சம் தரும் துவாதசி அன்னதானம் (விகாரி & சார்வரி)


 

1.             

 

நமது கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்கவே இங்கே,இந்த பூமியில் பிறவி எடுத்துள்ளோம்;ஆனாலும்,பரமேஸ்வரன் கருணை மிக்கவன்;திருந்த வேண்டும்;மனம் வருந்தவேண்டும் என்று தவியாய் தவிக்கும் உள்ளங்களுக்கு பரிகாரம்,வழிபாடு,ஜபம்,தானம்,பதிகம் பாடுதல்,வாசியோகம் போன்றவைகள் மூலமாக கர்மவினைகளை அனுபவிக்காமல் குறைத்து நிம்மதியாக வாழ வழிவகுத்துக் கொடுத்துள்ளான்;

 

 

 

 

 

 

துவாதசி திதி அன்று அண்ணாமலையில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாகவும்;மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் அன்னதானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வேளையும் குறைந்தது 18 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அதன் பிறகு,இரவில் கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலத்தின் போது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர்,அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;

 

 

இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும்;கிரிவலப் பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்களும்,அனைத்து தெய்வங்களும் உறையும் பசுக்களும் இருக்கின்றன;அக்னிலிங்கம் வரை பசுக்கள் அதிகமாக தென்படுகின்றன;எனவே,கிரிவலம் புறப்படும் போது போதுமான அளவுக்கு அகத்திக்கீரைகள் மற்றும் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்;கிரிவலப்பாதையில் தென்படும் பசுக்களுக்கு அகத்திக்கீரைகளையும்,வாழைப்பழங்களையும் தானமாக தர வேண்டும்;நிறைய பிஸ்கட்கள்,பொறைகளை வாங்கிக் கொண்டு செல்வதால் கிரிவலப் பாதை தூரமான 14 கி மீ அளவுக்கு வழியில் தென்படும் பைரவ வாகனத்திற்கு தானம் செய்ய வேண்டும்;இதன் மூலமாக ஒரே சமயத்தில் பைரவரின் அருளும்,அருணாச்சலேஸ்வரின் ஆசிகளும் நமக்கு கிட்டும்;

 

பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;கிரிவலம் நிறைவு செய்யும் பூத நாராயணப் பெருமாள் சன்னதியின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசனம் செய்ய வேண்டும்;இந்த தரிசனத்தினால் நீண்டகாலமாக இருந்து வந்த மன உளைச்சல்கள் அடியோடு விலகிவிடும்;

 

அதன் பிறகு,ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்;மூலஸ்தானத்தை நெருங்கும் போது,(நடராஜர் சன்னதியை பார்க்கும் போது) இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும்;வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது;

 

 

அவரிடம் மனப்பூர்வமாக தாம் முந்தைய தினத்தற்கு துவாதசி அன்னதானம் செய்துவிட்டோம்;அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும்;அதன் பிறகே,மீண்டும் வரிசையில் இணைந்து அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகு,உண்ணாமுலையம்மன் என்ற அபிதகுஜலாம்பாளைத் தரிசிக்க வேண்டும்;பிறகு,நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும்;இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;அதன் பிறகு,கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு,மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும்;இத்துடன் அண்ணாமலை துவாதசி திதி அன்னதானமும்,கிரிவலமும் நிறைவடைகின்றது; 

 

 

நாம் பிறந்த நாள் முதல் நமது வாழ்நாளின் இறுதி நாள் வரை காசியில் ஒரு கோடி மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ,அதை விடவும் அதிகமான புண்ணியம் முழுத் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கின்றது;

 

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்;

 

 

சிலருக்கு ராகுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;

இன்னும் சிலருக்கு கேதுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;இன்னும் சிலருக்கு ராகுவுடன் செவ்வாயும்,கேதுவுடன் சனியும் அல்லது ராகுவுடன் சனியும்,கேதுவுடன் செவ்வாயும் இணைந்திருக்கும்;இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இவர்களது முன்னோர்கள் வறட்டு கவுரவத்தினாலோ அல்லது சொத்துக்காகவோ அல்லது திமிரான செயல்பாடுகளாலோ பல ஆண்டுகளாக சண்டையிட்டுள்ளார்கள்;வீட்டுப் பெண்கள் இந்த சண்டை முடிவுக்கு வராதா? என்று பல நாட்களாக கதறி அழுதுள்ளார்கள் என்று அர்த்தம்;

 

இதைச் சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்;இரவில் அல்லது மதியம் கிரிவலம் கண்டிப்பாக செல்ல வேண்டும்;

 

இதைச் செய்ய விரும்பி,ஆனால் வருமானம் ஒத்துழைக்காதவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை மாதம் தோறும் குலதெய்வம் கோவிலுக்கு படையலிட அரிசி வாங்கித் தரவேண்டும்;

 

 

   சார்வரி & பிலவ வருடத்திற்கான முழுத் துவாதசி திதி நாட்கள் பட்டியல்:-

 




8.2.2021
திங்கள்

25.3.2021
வியாழன்

8.4.2021
வியாழன் 

8.5.2021 சனி

23.5.2021 ஞாயிறு

6.7.2021 செவ்வாய்

19.8.2021 வியாழன்

3.10.2021 ஞாயிறு

17.10.2021 ஞாயிறு

1.12.2021 புதன்

15.12.2021 புதன்

14.1.2022 வெள்ளி

13.2.2022 ஞாயிறு

27.2.2022 ஞாயிறு

13.4.2022 புதன்

 



மேலே குறிப்பிட்டிருக்கும் கிரக அமைப்புகளில் பிறந்தவர்கள் மட்டும் தான் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;

 

முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இந்த நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்;தமது மகன்,மகள் மற்றும் அடுத்த 7 தலைமுறையினர் சீரும் சிறப்புமாகவும்,நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;

 

 

 

தமது சீவனுக்குள் இருக்கும் சிவனை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற தவிப்பில் வாழ்ந்து வருபவர்களும் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;

 

ஓம் அகத்தீசாய நமஹ

 

 

ஓம் அருணாச்சலாய நமஹ

 

 

No comments:

Post a Comment