Thursday, February 4, 2021

முற்பிறவி கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் அண்ணாமலை கிரிவல நாட்கள் 2021 முதல் 2022 வரை

 

முற்பிறவிகளின் கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் அண்ணாமலை கிரிவல நாட்கள்!!!  2021 டூ 2022

 

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே மனிதப் பிறவி எடுத்துள்ளார்கள்:முற்பிறவிகளின் கர்மவினைகளில் தீய கர்மவினைகளை ஏழரைச்சனி காலத்திலும்,அஷ்டமச்சனி காலத்திலும் அனுபவிக்க வேண்டும்;நல்ல கர்மவினைகளை மற்ற காலங்களிலும் அனுபவிக்க வேண்டும்;

இருப்பினும்,ஈசன் கருணை நிறைந்தவர்! கர்மவினைகளை அனுபவிக்காமலேயே அழிப்பதற்கு பல்வேறு விதமான புண்ணியச் செயல்களை சித்தர் பெருமக்கள் மூலமாக உபதேசம் செய்துள்ளார்;உழவாரப் பணி செய்தல்,அன்னதானம் செய்தல்,முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தல்,பாழடைந்த ஆலயங்களை சீரமைத்தல்,ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு மீண்டும் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்தல்,ஆன்மீகப் பிரச்சாரம் செய்தல்,ஆன்மீக நூல்கள் அச்சடித்து வினியோகம் செய்தல்,ஆன்மீக சொற்பொழிவுக்கு மக்களை திரட்டுதல்,மதமாற்றத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தல் அல்லது முயற்சி செய்பவர்களுக்கு பக்கபலமாக இருப்பது,தேச பக்தியுடன் கூடிய தெய்வ பக்தியை இன்றைய இளைய சமுதாயத்திற்கு போதிக்க பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் என்று பலன் தரும் செயல்களைச் செய்யலாம்;

ஒவ்வொருவருக்கும் தனி மனித ஆன்மீக கடமை,குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமை,சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமை,முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடமை என்று இருக்கின்றது;

 

அதில் மிகவும் முக்கியமானது தான் தனி மனித ஆன்மீகக் கடமை ஆகும்;தனது அனைத்து முற்பிறவிகளிலும் செய்த கர்மவினைகளை முழுமையாக கரைக்க குறிப்பிட்ட நாளில் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

நம்முடைய முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் நமக்கு இந்த பிறவியில் இருந்தால்,ஒரே ஒரு முறையாவது அண்ணாமலை கிரிவலம் செல்லும் பாக்கியம் நமக்கு கிட்டும்;விழுப்புரம் அருகில் அமைந்திருக்கும் அண்ணாமலை தான் உண்மையான அண்ணாமலை!

 

திரயோதசி திதியும் ஜன்ம நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கிரிவலம் செல்வதால்,நம்முடைய முற்பிறவி கர்மவினைகள் தீர்ந்துவிடும் என்பது சித்தர்களின் ஜோதிட உபதேசம்!

24.4.2021 சனி மாலை 4.18 முதல் நள்ளிரவு 2.01 வரை உத்திரம் (சிம்மம் & கன்னி ராசி) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

24.4.2021 சனி நள்ளிரவு 2.02 முதல் 25.4.2021 ஞாயிறு மதியம் 2.24 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

8.5.2021 சனி இரவு 7.58 முதல் 9.5.2021 ஞாயிறு இரவு 7.18 வரை ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

23.5.2021 ஞாயிறு இரவு 12.48 முதல் 24.5.2021 திங்கள் காலை 7.34 வரை சித்திரை (கன்னி & துலாம் ராசி) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

24.5.2021 திங்கள் காலை 7.35 முதல் இரவு 10.27 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

7.6.2021 திங்கள் காலை 11.13 முதல் 8.6.2021 செவ்வாய் காலை 7.32 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

8.6.2021 செவ்வாய் காலை 7.33 முதல் மதியம் 1.08 வரை கார்த்திகை(மேஷம் & ரிஷபம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

22.6.2021 செவ்வாய் காலை 8.02 முதல் மதியம் 12.37 வரை விசாகம் (துலாம் & விருச்சிகம் ராசிக்காரர்கள்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

22.6.2021 செவ்வாய் மதியம் 12.38 முதல் நள்ளிரவு 3.32 வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

6.7.2021 செவ்வாய் நள்ளிரவு 2.36 முதல் 7.7.2021 புதன் இரவு 7.55 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

7.7.2021 புதன் இரவு 7.56 முதல் நள்ளிரவு(மறுநாள் விடிகாலை) 4.26 வரை மிருகசீரிடம் (ரிஷபம் & மிதுனம் ராசிக்காரர்கள்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

21.7.2021 புதன் மதியம் 2.55 முதல் மாலை 5.37 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;மாலை 5.38 முதல் 22.7.2021 வியாழன் மதியம் 12.39 வரையிலான நேரத்திற்குள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

5.8.2021 வியாழன் மாலை 5.28 முதல் 6.8.2021 வெள்ளி காலை 7.36 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

6.8.2021 வெள்ளி காலை 7.37 முதல் மாலை 6.43 வரையிலான நேரத்திற்குள் புனர்பூசம் (மிதுனம் & கடகம் ராசிக்காரர்கள்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

19.8.2021 வியாழன் இரவு 10.57 முதல் 20.8.2021 வெள்ளி இரவு 8.41 வரையிலான நேரத்திற்குள் உத்ராடம் (தனுசு & மகரம் ராசிக்காரர்கள்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

4.9.2021 சனி காலை 7.36 முதல் மாலை 5.54 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்; மாலை 5.55 முதல் 5.9.2021 ஞாயிறு காலை 7.58 வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

18.9.2021 சனி காலை 7.42 முதல் 19.9.2021 ஞாயிறு விடிகாலை 4.44 வரை அவிட்டம் (மகரம் & கும்பம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

19.9.2021 ஞாயிறு விடிகாலை 4.45 முதல் காலை 6.50 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் (இரண்டு மணி நேரம் தான்!!!) அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

3.10.2021 ஞாயிறு இரவு 8.40 முதல் பின் இரவு 2.40 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

பின் இரவு 2.41 முதல் 4.10.2021 திங்கள் இரவு 8.04 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

17.10.2021 ஞாயிறு இரவு 7.26 முதல் 18.10.2021 திங்கள் மதியம் 12.52 வரை பூரட்டாதி (கும்பம் & மீனம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

18.10.2021 மதியம் 12.53 முதல் இரவு 7.24 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

2.11.2021 செவ்வாய் காலை 9.55 முதல் 3.11.2021 புதன் காலை 7.25 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

16.11.2021 செவ்வாய் காலை 10.15 முதல் இரவு 10.33 வரை ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

இரவு 10.34 முதல் 17.11.2021 புதன் காலை 11.17 வரை அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

 

1.12.2021 புதன் இரவு 8.13 முதல் 2.12.2021 வியாழன் மதியம் 2.37 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,மதியம் 2.38 முதல் மாலை 6.12 வரை விசாகம் (துலாம் & விருச்சிகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

15.12.2021 புதன் பின் இரவு 3.50 முதல் 16.12.2021 வியாழன் காலை 9.31 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 9.31 முதல் பின் இரவு 5.44 வரை கார்த்திகை (மேஷம் & ரிஷபம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

31.12.2021 வெள்ளி காலை 7.08 முதல் இரவு 7.36 வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 7.37 முதல் நள்ளிரவு 3.41 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

14.1.2022 வெள்ளி இரவு 11.26 முதல் 15.1.2022 சனி இரவு 12.10 வரை மிருகசீரிடம் (ரிஷபம் & மிதுனம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

29.1.2022 சனி மாலை 5.41 முதல் இரவு 12.26 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 12.27 முதல் 30.1.2022 ஞாயிறு மதியம் 3.26 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

13.2.2022 ஞாயிறு இரவு 7.03 முதல் 14.2.2022 திங்கள் மதியம் 12.12 வரை புனர்பூசம் (மிதுனம் & கடகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,மதியம் 12.13 முதல் இரவு 8.44 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

28.2.2022 திங்கள் விடிகாலை சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் சூரியம் உதயம் ஆவதற்குள் திரு ஓணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

15.3.2022 செவ்வாய் மதியம் 12.45 முதல் இரவு 11.10 வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 11.11 முதல் 16.3.2022 புதன் மதியம் 1.30 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

29.3.2022 செவ்வாய் மதியம் 2.58 முதல் 30.3.2022 புதன் காலை 11.04 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 11.05 முதல் மதியம் 1.42 வரை பூரட்டாதி (கும்பம் & மீனம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

14.4.2022 வியாழன் விடிகாலை 3.33 முதல் காலை 8.46 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 8.47 முதல் பின் இரவு 3.14 வரை உத்திரம் (சிம்மம் & கன்னி) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

 

இதில் உங்கள் நட்சத்திரம் மற்றும் ராசி வரவில்லையா? 14.4.2022 க்குப் பிறகு வர இருக்கும் சுபகிருது வருடத்தில் வரலாம்;

உங்கள் முன்னோர்களாகிய பித்ருக்கள் மற்றும் குலதெய்வத்தின் ஆசிகள் உங்களுக்கு மிகுதியாக இருந்தால் மட்டுமே இப்பிறவியில் ஒரே ஒரு முறையாவது அண்ணாமலை கிரிவலம் செல்ல முடியும் என்பதும் சித்தர் பெருமக்களின் உபதேசம் ஆகும்;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment