உங்கள் கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரங்கள்!
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில்
இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள்
இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம்
அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான்
அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல்
என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே! கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை
மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில்
அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில்
வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக
தீர்ந்துவிடும்;
மாரிமுத்து என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர
முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த
தொகையை மாரிமுத்துவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும்
கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு
பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில்
கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;
இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும்
இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;
மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய
நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;
சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில்
குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;அவர்கள் ஜோதிட ஆலோசனை பெற எமது வாட்ஸ்
அப்:9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்;(31
வருடமாக ஜோதிடம் பார்ப்பவர்)
சார்வரி & பிலவ வருட (2021 டூ 2022)
மைத்ர முகூர்த்தங்க்கள்
24.4.2021 சனி காலை & மாலை 6.20 முதல் 8.20; மதியம் & நள்ளிரவு
12.20 முதல் 2.20 வரை;
28.4.2021 புதன் இரவு 7.01 முதல் 9.01 வரை;
10.5.2021 திங்கள் அதிகாலை 4.14 முதல் காலை 6.14 வரை;
26.5.2021 புதன் மாலை 5.05 முதல் இரவு 7.05 வரை
6.6.2021 ஞாயிறு விடிகாலை 3 முதல் 5 வரை;
22.6.2021 செவ்வாய் மதியம் 2.10 முதல் மாலை 4.10 வரை;
3.7.2021 சனி இரவு 12.47 முதல் நள்ளிரவு 2.47 வரை;
20.7.2021 செவ்வாய் மதியம் 2.07 முதல் மாலை 4.07 வரை;
30.7.3032 வெள்ளி இரவு 11 முதல் நள்ளிரவு 1 வரை;
16.8.2021 திங்கள் மதியம் 12.01 முதல் 2.01 வரை;
27.8.2021 வெள்ளி இரவு 9.20 முதல் 11.20 வரை;
13.9.2021 திங்கள் காலை 10.16 முதல் 11.26 வரை;
23.9.2021 வியாழன் இரவு 8.24 முதல் 10.24 வரை;
10.10.2021 ஞாயிறு காலை 8.36 முதல் 10.36 வரை;
20.10.2021 புதன் மாலை 6.04 முதல் இரவு 8.04 வரை;
6.11.2021 சனி காலை 6.44 முதல் 8.44 வரை
17.11.2021 புதன் மாலை 4.03 முதல் 6.03 வரை;
4.12.2021 சனி விடிகாலை 5.14 முதல் 6.14 வரை;
14.12.2021 செவ்வாய் மதியம் 2.14 முதல் 4.14 வரை;
31.12.2021 வெள்ளி விடிகாலை 3.15 முதல் 5.15 வரை;
10.1.2022 திங்கள் மதியம் 1.10 முதல் 2.18 வரை;
11.1.2022 செவ்வாய் மதியம் 12.22 முதல் 2.22 வரை;
27.1.2022 வியாழன் காலை 11.40 முதல் மதியம் 1.40 வரை;
7.2.2022 திங்கள் காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை;
23.2.2022 புதன் நள்ளிரவு 1.10 முதல் 3.10 வரை;
6.3.2022 ஞாயிறு காலை 9.05 முதல் 11.05 வரை;
22.3.2022 செவ்வாய் இரவு 9.38 முதல் 10.45 வரை;
3.4.2022 ஞாயிறு காலை 6.47 முதல் 8.47 வரை;
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது
நன்று;குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால்
அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;
நிரந்தரமாக கடன் தீர வேண்டும் என்று விரும்புவோர் விழுப்புரம் அருகில்
அமைந்திருக்கும் அண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்று கிரிவலம் வர வேண்டும்.செவ்வாய்க்கிழமை
காலை சூரிய உதயத்தில் இருந்து புதன் கிழமை காலை சூரிய உதயம் ஆவதற்குள் கிரிவலம் செல்ல
வேண்டும்;ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் இவ்வாறு கிரிவலம் வருவதால் கடன் நிரந்தரமாக தீர்ந்துவிடும்;தொடர்ந்து
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செல்ல இயலாதவர்கள் மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை என்றும்
கூட செல்லலாம்;
ஓம் அகத்தீசாய நம;
ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;
No comments:
Post a Comment