கால தேவன் என்பது மஹா கால பைரவரின் மறுபெயர் ஆகும்;
அஷ்டபைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த தெய்வீக சக்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண
ஆகர்ஷண பைரவப் பெருமான்!
எனவே,யார் இவைகளை(அசைவம்,மது,புகைப் பழக்கங்கள்) நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள்
மட்டுமே இந்த அஷ்டகத்தை தினமும் 33 முறை
பாடுவது நன்மை பயக்கும் விதமான பலனைத் தரும்;
இன்று முதல் ஏழாம் நாள் வரை தினமும் இந்த பாடலை ஒரு முறை ஜபிக்க வேண்டும்;
8 ஆம் நாளில் இருந்து 14 ஆம் நாள் வரை தினமும் ஏழு முறை ஜபித்து வர வேண்டும்;
15 ஆம் நாளில் இருந்து 21 ஆம் நாள் வரை தினமும் இந்தப் பாடலை 14 முறை
ஜபிக்க வேண்டும்;
22 ஆம் நாளில் இருந்து 28 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 21 முறை ஜபிக்க
வேண்டும்;
29 ஆம் நாளில் இருந்து 35 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 28 முறை ஜபிக்க
வேண்டும்;
36 ஆம் நாளில் இருந்து 1008 ஆம் நாள் வரை தினமும் இப்பாடலை 33 முறை ஜபிக்க
வேண்டும்;
இப்படி தொடர்ந்து ஜபித்து வரும் போது,90 வது நாளுக்குப் பிறகு 180 வது
நாளுக்குள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ உபாசகர்களில் ஒருவரை சந்திக்கும் பாக்கியம்
உங்களுக்கு உண்டாகும்;அவர் உங்களுக்கு முழுமையான வழிபாட்டுமுறையை போதிப்பார்;(இணையத்தில்
எந்த ஒரு தெய்வீக ரகசியமும் முழுமையாக வெளியிடப்படுவதில்லை)
ஒரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர்ந்து
கொள்ள வேண்டும்;ஒரு மண் விளக்கில் வடக்கு நோக்கி நெய்தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;சந்தன பத்திகள் மூன்றை
பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு செம்புக் கலயத்தில் சிறிது தண்ணீர் அல்லது இளநீர் நிரப்பி
வைக்க வேண்டும்;
தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தன மழை பெய்திடுவான்
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் யாவும் தனக்குள்ளே
வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தன மழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்.
ஜபித்து முடித்ததும்,செப்புக்கலயத்தில் இருக்கும் தண்ணீர்/இளநீரை அருந்த
வேண்டும்;இப்படி அருந்தினால்,இது வரை நாம் ஜபித்த இப்பாடல் நமது உடலுக்குள் பதிந்துவிடும்;
இப்படி
தொடர்ந்து பதிவாகி வந்தால்,நமது கர்மவினைகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானால்
சிறிது சிறிதாக அழிக்கப்படும்;அப்படி அழிக்கப்பட்ட உடனே நமது வருமானம் நேர்மையான முறையில்
அதிகரிக்கத் துவங்கும்;
ஜோதிடர்களாக இருப்பவர்கள் தாமும் செல்வந்தராகி,தம்மை நாடி வந்தவர்களையும்
செல்வந்தர்களாக மாற்றிட இப்பாடலை 7,00,000 முறை ஜபித்திருக்க வேண்டும்;
இம்முயற்சியில் ஈடுபடுபவர்கள் ஒரு தேய்பிறை அஷ்டமி நாளில் புதுக்கோட்டை
ஆவுடையார்கோவில் அருகில் அமைந்திருக்கும் பொன்பேத்தி ஸ்ரீபவானீஸ்வரர் சிவாலயத்திற்கு
செல்ல வேண்டும்;அன்று முழுவதும் அல்லது ராகு கால நேரம் முழுவதும் அல்லது குளிகை கால
நேரம் முழுவதும் இப்பாடலை ஜபிக்க வேண்டும்;இங்கேதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்
தோன்றினார்;
ஒவ்வொரு நாளும் இப்பாடலை ஜபித்து முடித்ததும்,இப்பாடலை ஈசனின் அருளால்
நமக்கு வழங்கிய உபாசனை குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கை சித்தர் அவர்களுக்கு ஆழ்ந்த நன்றிகளைத்
தெரிவிக்க வேண்டும்;
No comments:
Post a Comment