Thursday, July 13, 2017

உணவில் பின்பற்றப்பட வேண்டிய ஆன்மீக விதிகள்




உலகம் எண்ணங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது;இதில் ஒவ்வொரு பொருளும்,படைப்பும் இருமுறை உருவாக்கப்பட்டுள்ளன;

ஆமாம்!

படைப்பாளியாக இருப்பவர் தமது சிந்தனையில் கற்பனை கொள்கின்றார்;அதன் பிறகு,அதை நேரடியாக வடிவமைக்கின்றார்;சிந்தனைக்கு அப்பேர்ப்பட்ட வலிமை உண்டு;


ஈசனே நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்றைத்தான்! நமது மனத்தை அவனிடம் கொடுத்துவிடவேண்டும் என்று விரும்புகின்றான்;இதையே சுலபமாக்கி,வேறு விதமாகவும் சொல்லலாம்;அதுதான் சரணாகதி தத்துவம்;


ஒரு அவமானம் உங்களுக்கு நிகழ்ந்தால் அதற்கு நீங்களோ,உங்கள் செயல்பாடுகளோ காரணம் அல்ல;இந்த அவமானம் மூலமாக உங்களுக்கு ‘பாடம் புகட்டும் வேலை’ நடைபெறுகின்றது;ஒரு புகழ் உங்களுக்கு கிட்டுகின்றது;அதன் மூலமாக உங்கள் மனத்தை பண்படுத்தும் வேலைதான் நடைபெறுகின்றது;


அப்பா அருணாச்சலா இதுதான் உனது ஆசை போலும் என்று அவமானப்பட்டதும் எண்ணினால் தாங்கள் உங்கள் மனத்தை அவனிடம் ஒப்படைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்;


அப்பா இந்த புகழ் உனக்கே அர்ப்பணம் என்று புகழ் தேடிவரும் போது நீங்கள் நினைத்தால்,உங்களை அந்த பரமேஸ்வரன் ஏற்றுக்கொண்டான் என்று அர்த்தம்;


இம்மாதிரியான சரணாகதி தத்துவத்தை உங்களுக்குள் உருவாகாமல் தடுக்கும் சக்தி நீங்கள் தினமும் உண்ணும் சில குறிப்பிட்ட சுவையுள்ள உணவுக்கு உண்டு;அதுதான் புளிப்புச் சுவை உள்ள உணவு!


புளிப்புச் சுவையானது உங்கள் விந்தை முறிக்கும் சக்தியுள்ளது;புளிய மரங்கள் உள்ள பகுதியில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகம் உற்பத்தியாகின்றது;புளிப்புச் சுவை உடலில் தொடர்ந்து சேர்ந்து கொண்டே வந்தால் அசிடிட்டி சேரத்துவங்கும்;


புளியை பெண்கள் அதிகம் தினமும் சேர்ப்பதால் தான் பொறாமையும்,அளவற்ற முன்கோபமும் உண்டாகின்றது;குடும்பத்தினுள் சகிப்புத்தன்மை குறைகின்றது;


புளிப்புச் சுவையை அதிகம் சேர்ப்பதற்குப் பதிலாக,கசப்புச் சுவையை அதிகம் சேர்க்க வேண்டும்; ‘வாய்க்கு இனிப்பு;வயிற்றுக்கு கசப்பு’ என்ற பழமொழியின் அர்த்தம் இதுதான்;

எது வாய்க்கு நன்றாக இல்லையோ,அது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தைத் தருகின்றது என்ற தத்துவமே தமிழ் மருத்துவத்தின் ஆணிவேர்க் கொள்கை ஆகும்;

புளியை அதிகம் சேர்க்கும் போது விரைவில் ரத்தம் சுண்டிவிடும்;இதனால்,இளவயதிலேயே முதுமைத் தோற்றம் வந்துவிடுகின்றது;காரத்தையும் அதிகம் சேர்க்காமல் அளவோடு சேர்க்க வேண்டும்;

மதிய உணவின் போது ஆறு சுவைகளும் அதில் இருந்தாலே வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ முடியும்;முழு ஆரோக்கியத்திற்குத் தேவையான சுவை மதிய உணவில் ஆறுசுவைகளாக இருக்கின்றன;

புளிய மரங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் கேடுகெட்டவர்களாக வாழ்ந்து தற்கொலை/கொலை செய்யப்பட்டவர்களின் ஆவிகள் அதிகம் இருக்கும்;

அது மனவலிமை குறைந்தவர்களிடமும்,ஜோதிடப்படி,அவரவர் ராசியை ராகு கிரகம் கடக்கும் போதும் உடலுக்குள் ஊடுருவி தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்;அல்லது உக்கிரமான குணமுள்ளவர்களாக மாற்றும் அல்லது காமவெறி பிடித்த மிருகமாக மாற்றிவிடும்;


1970 வரை வீட்டில் வாழ்ந்த அனைவரும் ப்ராணயாமம் செய்தார்கள்;அதனால்,தெரு முழுக்க காற்றில் சுத்தம் இருந்தது;இப்போது அப்படியா?


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment