Tuesday, April 28, 2015

ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும்?



உலகம் உருவாகி 5 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாக நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன;மனிதன் நாகரீகமடையத்துவங்கி 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன;மனிதன் நாகரீகமடையத்துவங்கியதும் உலகில் தோன்றிய முதல் மொழி நம் தமிழ் மொழியே! உலகில் உருவான முதல் வழிபாடு சிவ வழிபாடே!எல்லாம் அவன் செயல் என்பது திரித்துவிடப்பட்ட பழமொழி! எல்லாம் சிவன் செயல் என்பதே பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழங்கும் நிஜமான பழமொழி!!

அணுவுக்குள்ளே நிலையான சக்தி,அசையும் சக்தி என்று இரண்டு சக்திகள் இருக்கின்றன;அதே போல சிவன் மட்டுமே நிலையான சக்தி;சிவனைத் தவிர அனைத்து கடவுள்களுமே ஒரு குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அசையும் சக்திகள்;திருமூலரின் திருமந்திரத்தில் இது தொடர்பாக விரிவான விளக்கங்கள் பல பாடல்களில் தெரிவித்துள்ளார்;தேவாரப்பதிகங்களிலும் சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளன;

மருது சகோதரர்கள் ஒரு குறிப்பிட்ட தேவாரப்பதிகம் தினமும் பாடி வந்தனர்;அந்த தேவாரப்பதிகம் பாடியதால் தான் சராசரி மனிதர்களாக இருந்த அவர்களால் மன்னராக முடிந்தது;
ராவணன் சிவவழிபாட்டை ருத்ராட்சம் அணிந்து தொடர்ந்ததால் தான் மரணமில்லாதப் பெருவாழ்வைப் பெற்றான்;மேலும் நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் இயக்கும் நவக்கிரகங்களையும் அடிமைப்படுத்த முடிந்தது;பிற்காலத்தில் பெண் பித்தால் அனைத்து சிவ அருளையும் இழந்தது புராண உண்மை;

முருகக் கடவுளால் வதம் செய்யப்பட்ட சூரபத்மன் சிவவழிபாடு செய்துதான் 1008 அண்டங்களையும் ஆளும் வரம் பெற்றான்;
இந்த உலகில் இதுவரை இருக்கும் அனைத்து மதங்களும் கூறும் உண்மை: “இறைவன் ஒருவனே”.அந்த இறைவனின் பெயர் ஆதிசிவன் என்று இந்துக்களும்,அல்லா என்று இஸ்லாமியர்களும்,பரமபிதா என்று கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர்; பெயர் வெவ்வேறாக இருந்தாலும்,இறைசக்தி ஒன்றே!!சிவனின் தூயத் தமிழ்ப் பெயர்: ஈசன்.(ஈஷா யோகாவை இந்தப் பெயரின் மூலமாகத்தான் வைத்திருப்பார்களோ?)

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் இயக்கும் மூல முதல் சக்தி மனோன்மணி என்ற ஆதி சக்தி! இவள் எட்டு வயது சிறுமி வடிவில் தோற்றமளிப்பவள்;இவளே தலைமைக் கடவுள்! இவளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ஐந்து விதமான ஈசன் கள்!!
இந்த சிறுமிவடிவ தெய்வத்தை வழிபடும் தகுதியை அடைய நாம் சித்தரானால் தான் முடியும்;

சித்தராக வேண்டுமானால் அண்ணாமலையை அடிக்கடி வலம் வர வேண்டும்;அண்ணாமலை கிரிவலத்திற்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு;

பூமியில் 84,00,000 விதமான உயிரினங்கள் வசிக்கின்றன;சில உயிர்களுக்கு ஆயுள் சில மணித்துளிகள்;சிலவற்றிற்கு சில நூறு ஆண்டுகள்;இந்த 84,00,000 பிறப்புகளில் பெரும்பாலானவற்றைக் கடந்தப் பின்னரே மனித ஜன்மம் எடுத்துள்ளோம்;கடந்த ஐந்து மனிதப்பிறவிகளில் நாம் செய்த நற்செயல்கள் மற்றும் தீயச் செயல்களின் தொகுப்பை அனுபவிக்கவே இந்த மனிதப்பிறப்பு எடுத்துள்ளோம்;இன்னும் பல நூறு மனிதப் பிறப்பு எடுக்கப் போகிறோம்;இதைத் தடுத்து அடுத்த சில பிறவிகளுக்குள் முக்தி அடைய நாம் செய்ய வேண்டியது அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்வதுதான்;

வெகுவிரைவில் முக்தி கிடைக்கவே விரும்புகிறோம்;ஆனால்,அது நடைமுறை சாத்தியம் இல்லை;

அதே போல இப்பிறவியோடு எனக்கு மனிதப் பிறவி போதும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்;அந்த அளவிற்கு நம்மில் பெரும்பாலானவர்கள் வேதனைகள்,கஷ்டங்கள்,துயரங்கள்,அவமானங்களை அனுபவித்ததன் விளைவாக இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேள்விப்படுகிறோம்;

எனவே,இனிமேல் பிறக்க இருக்கும் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அண்ணாமலை கிரிவலமே உயர்ந்தது;சிறந்தது;எளியது;

எப்போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்?

தமிழ் வருடப்பிறப்பு அன்று அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

தமிழ் மாதப்பிறப்பு தோறும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;(400 ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் நடைமுறையில் இருந்தது)

அவரவர் பிறந்த நட்சத்திர நாளன்று அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

அண்ணாமலையாரின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

ஈசனின் ஜன்ம நட்சத்திரம் என்று நாம் நம்பும் திருவாதிரை நட்சத்திர தினங்களில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

எப்போதெல்லாம் நமக்கு விடுப்பும்,பணமும் கிடைக்குமோ அப்போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

குபேரலிங்கம் கடந்ததும் அமைந்திருக்கும் இடுக்குப் பிள்ளையார் கோவிலின் இடுக்கு வழியாக ஒருமுறை சென்றால் ஒரு பிறவி குறையும் என்று சித்தர்களின் தலைவர் அகத்தியர் தெரிவித்திருக்கிறார்;அப்படிச் செல்லும் போது அண்ணாமலையை நோக்கி தலையை நுழைத்து இடுக்கினுள்ளே நுழைய வேண்டும்;அதுதான் முறை;

ஒம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை சொன்னால் 3,00,000 தடவை ஒம் நமச்சிவாய நமஹ சொன்னதற்குச் சமம் என்று அண்ணாமலையாரே தெரிவித்துள்ளார்;


அண்ணாமலைக்குப் புறப்படுவோமா?

No comments:

Post a Comment