சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வடக்கு நோக்கியவாறு இருபத்தேழு நட்சத்திரங்களும் சிவலிங்க வடிவில் அமைந்திருக்கின்றன;தெற்கு நோக்கி அரிய பைரவர் அருள்பாலிக்கிறார்.பல சித்தர்கள்,மகான்கள் ஒவ்வொரு யுகத்திலும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்;சில மகான்கள் இங்கேயே சிவசமாதி(ஜீவ சமாதி) ஆகியிருக்கின்றனர் என்பதும் தெரிகிறது.தற்போதும் பல மகான்கள்,சித்தர்கள் சாதாரண மனித வடிவில் இங்கே வந்து வழிபாடு செய்வதாக இங்கே வசிப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கர்மவினைகளாலோ,பிறரின் சூழ்ச்சியாலோ பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்காக ஒரு எளிய சுயபரிகாரத்தை வழங்கியிருக்கிறார்.வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் இந்த சுயபரிகாரம் கைகொடுக்கும்.
இந்த சுயபரிகாரத்தைச் செய்ய விரும்புவோர்,கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும்;நமது பிறந்த நட்சத்திர நாள் மாதம் ஒரு முறை/இருமுறை வரும்;மாதம் ஒரு நாள் வீதம் ஏழு மாதத்திற்கு விடாமல் செய்து முடிக்க வேண்டும்.இவ்வாறு பின்பற்றினால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும்.
நமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளை நமக்கு அறிமுகமான ஜோதிடரிடம் ஒரு வருடத்திற்கு எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.ஒரு தமிழ் மாதத்திற்கு ஒருமுறை நமது பிறந்த நட்சத்திரம் வரும்;சில மாதங்களில் இரண்டு முறை வரும்.அதற்கு மேல் வராது.நமது நட்சத்திரம் வரும் நாளானது ஒரு முழு நாளில் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது.அதாவது பூராடம் நட்சத்திரம் நமது பிறந்த நட்சத்திரம் எனில்,இன்று காலையில் இருந்து நாளை காலை வரை இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது;இன்று மதியம் ஆரம்பித்து,நாளை மதியம் வரை இருக்கும்;அல்லது இன்று மாலை ஆரம்பித்து நாளை மாலை வரை இருக்கலாம்.
எப்படி இருந்தாலும்,நமது நட்சத்திரம் இருக்கும் நாளில்,நமக்கு வசதியான நேரத்தில் சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு பால்,ஐந்து முகருத்ராட்சம் ஒன்று(வசதியிருந்தால் ஒன்றுக்கும் மேல்) கொண்டு சென்று நட்சத்திர லிங்கம் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.அங்கே இருக்கும் பூசாரியிடம் பாலைக் கொடுத்து நமது நட்சத்திர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்.பூசாரிக்கு மனதார நம்மால் முடிந்த தட்சிணையைத் தர வேண்டும்;(குறைந்தது ரூ.51/-)அபிஷேகம் செய்யும் போது அந்த லிங்கத்தின் மேல் நாம் கொண்டு வந்திருக்கும் ருத்ராட்சத்தை வைக்க வேண்டும்;(பூசாரியிடம் சொல்லியும் அந்த பாலுடன் சேர்த்து அபிஷேகம் செய்ய வைக்கலாம்)அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்.அபிஷேகம் முடிந்தப் பின்னர்,நமது நட்சத்திர லிங்கத்திற்கு எதிராக அமர்ந்து நூற்றி எட்டு முறை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.பிறகு,நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.(வேறு எந்தக் கோவிலுக்கும் போகக் கூடாது)
இவ்வாறு தொடர்ந்து மாதம் ஒரு ஜன்ம நட்சத்திர நாள் வீதம் ஏழு மாதங்கள் விடாமல்(சகுனத் தடையில் சிக்காமல் இருப்பது மிகவும் அவசியம்!) வழிபாடு செய்ய வேண்டும்.செய்து முடித்த நூறு நாட்களுக்குள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு சந்தர்ப்பம் அமையும்.வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லாதவர்களுக்கும் முன்னேற்றம் கிட்ட ஆரம்பிக்கும்.
நாம் வாழும் கலியுகத்தில் பொறாமை யார் படுவார்கள் என்று எவருக்குமே தெரியாது;எனவே,இந்த வழிபாட்டை தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி,அவர்களையும் அழைத்துச் சென்று அவர்களையும் செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.நீங்கள் மட்டும் செய்யுங்கள்.இவ்வாறு வழிபாடு செய்வதை பரம ரகசியமாக செய்து முடித்துவிடுங்கள்;செய்து முடித்தப் பின்னரும்,எவரிடமும் சொல்லாதீர்கள்;நீங்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேறுங்கள்;
மேலும்,இந்த ஆலயத்தில் புனர்நிர்மாண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;நம்மால் ஆன பொருள் உதவி,பண உதவி,உழவாரப்பணி செய்வது மிகவும் அவசியம்.
ஓம்சிவசிவஓம்
Hello Sir,
ReplyDeleteIam Joined in your Blog Already, it was Intersting before Now a days you People are Giving More Pressure to others By Saying Stop Of NON- VEG Thats People Wish why you are forcing others .
you are saying that If you want to worship God which you recommending you have to leave NON- Veg Saying Indirectly this means.Even iam also hindu.
Now a days Some brahmin also Eating NON- Veg, But People Still Going to same temple which you recoomending,Non- veg People also worshiping same God they leaving luxiarry life, Only Veg eating People also Suffering .this means All Veg Eating people Getting More Bless than Non-Veg ?if yes means Can you give exmaples.
if we dont eat NON- veg then Only God will bless us ah?
if we eat NON-VEG God wont Bless us ah?
GOd is same to all, they will see other Pure heart and Love. Not their what they are eating veg or Non-veg .If you are not eating means leave it,Dont Pressure others by saying Compulsary Leave non-veg.
People leave non-veg automatically if you teaching and Coaching about god is well and good thats is said to be Well Original Guru.
you should not suppose to say others to leave Non-veg,They sholud have to change by your Speech ,Not By Forcing.iam not hurting you but psychologically forcing of people will refuce some times hindusim,because they are not able woship that particular God which you are telling because for that we have to stop NON-VEG then only God will bless you ,like that your saying ,SO please Dont try to force any one.
Thank you
Mnaivannan
மணிவண்ணன் தம்பி,உங்களால் உங்கள் நாக்கு ருசியைக் கட்டுப்படுத்தமுடியவில்லையா?எமது பதிவுகளை "வாசித்து மட்டும்" போய்க் கொண்டே இருங்கள்;காய்ச்சல் எனில் குளிக்காமல் இருந்துதான் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.எனது குருவிடம் கெஞ்சி கேட்டு நமது இந்து சகோதரர்களின் நலன்களுக்காக சுலபமான பரிகாரங்களை கேட்டு எழுதுகிறேன்.அசைவத்தை கைவிட முடியவில்லை எனில்,ஆன்மீகக்கடல் வாசிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்;தினமும் மூன்று வேளை அசைவம் சாப்பிடுங்கள்;யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை;கடவுள் என்னவெல்லாம் நினைப்பார் என்பதை நீ நினைப்பதைவிட எங்களுக்குத் தெரியும்.
ReplyDeleteஐயா மணிவண்ணா,தங்களின் அறிவுத்திறனை மெச்சுகிறோம்.எமது அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டீர்கள்.இனிமேல் இந்தியா முழுவதும் சைவ உணவு என்பது நீர்,காற்று,நெருப்பு என்று அறிவிக்கச் சொல்லிவிடுவோம்.////தம்பி,மேல்நாட்டு ஆராய்ச்சிகள் எதுவும்முழுமையானது அல்ல;முறையானதும் அல்ல;மேல்நாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு வந்தவைகளில் வெறும் அரை சதவீதம் மட்டுமே மனித நேயத்தையும்,மனித நலத்தையும் பேணுகின்றன.மற்ற அனைத்தும் குப்பைகளே!!!
ReplyDelete