உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து கடவுள்களையும் நிர்வாகித்து வருபவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த வடிவமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆவார்.கடுமையான கர்மவினைகள் இருப்பவர்கள் நிம்மதியாக தூங்கியே பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகியிருக்கும்; அல்லது மனதார சிரித்தே பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகியிருக்கும்;அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஆயிரத்து எட்டு போற்றி ஒரு பைரவ வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
நம்மில் பலர் நமக்கு விருப்பமான சித்தரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறோம்;ஆன்மீக முயற்சிகளும் எடுக்கிறோம்;நாம் விரும்பும் சித்தரை தரிசனம் செய்தாலும்,அவரிடம் சீடராகச் சேர்ந்தாலும் அவர் நமக்கு போதிப்பது ஸ்ரீகால பைரவர் வழிபாடுதான்.பெரும்பாலான சித்தர்கள் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதன் மூலமாகவே அஷ்டக் கர்மாக்களிலும் பரிபூரணமான தேர்ச்சியை எட்டினார்கள்;நம்மைப் போன்ற சாதாரண மக்களும் நேரடியாகவே ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நாமும் சித்தர் ஆகமுடியும்.கடந்த கால யுகங்களில் ஏராளமானவர்கள் இவ்வாறு சராசரி மனித நிலையிலிருந்து நேரடியாகவே சித்தர் நிலையை எட்டியுள்ளனர்.அவ்வாறு எட்டுவதற்கு ஸ்ரீகால பைரவர் வழிபாடு ஒன்றே போதுமானது!
எனவே,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்;சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும்,நலமோடும் வாழ்வோம்!!!
ஓம் கால பைரவனே போற்றி
ஓம் லோகவல்லபனே போற்றி ஓம் காளிநாயகனே போற்றி
ஓம் காளிப்பிரியனே போற்றி
ஓம் வெள்ளி உடையோனே போற்றி
ஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் தீர்த்தராசனே போற்றி
ஓம் புனிதமானவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
ஓம் தனம் தருபவனே போற்றி 10
ஓம் நதிகளின் புண்ணியனே போற்றி
ஓம் புகழ் உடையோரே போற்றி
ஓம் செல்வமே போற்றி
ஓம் பவ்யப்ரியனே போற்றி
ஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி
ஓம் பரமாத்மா ஆனவனே போற்றி
ஓம் மல்லப்ரியனே போற்றி
ஓம் மனுவே போற்றி
ஓம் ரம்ய மூர்த்தியே போற்றி
ஓம் வனங்களின் தலைவனே போற்றி 20
ஓம் சித்தாந்த வல்லபனே போற்றி
ஓம் சதியின் கேசவனே போற்றி
ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
ஓம் எங்கள் நாயகனே போற்றி
ஓம் வீரனே போற்றி
ஓம் காளிநாதனே போற்றி
ஓம் சிறந்த புருசனானவனே போற்றி
ஓம் யோகத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி
ஓம் நாகராசனே போற்றி 30
ஓம் தினகரனே போற்றி
ஓம் தயையே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் சர்வமும் ஆனவனே போற்றி
ஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி
ஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி
ஓம் பூதவிநாசகனே போற்றி
ஓம் வடிவே போற்றி
ஓம் மந்தரனே போற்றி
ஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி 40
ஓம் அமரப்பிரபுவே போற்றி
ஓம் விருப்பங்களின் தலைவா போற்றி
ஓம் பிரஜாபதியே போற்றி
ஓம் சிந்துநதித் தலைவனே போற்றி
ஓம் சூர்யபதியே போற்றி
ஓம் ஆராதிப்பவனே போற்றி
ஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி
ஓம் தைத்யேஸ்வரனே போற்றி
ஓம் காளிகாதனே போற்றி
ஓம் கோரநாதனே போற்றி 50
ஓம் தலைச்சடை உடையோய் போற்றி
ஓம் இயக்கத்தின் காரணனே போற்றி
ஓம் மகா தபசியே போற்றி
ஓம் ஒளிச்சுடரே போற்றி
ஓம் தயை உடையாய் போற்றி
ஓம் தனேஸ்வரனே போற்றி
ஓம் நதிகளின் தலைவனே போற்றி
ஓம் அன்பின் இருப்பிடமே போற்றி
ஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூதபதியே போற்றி 60
ஓம் தர்மத்தின் தலைவனே போற்றி
ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் மல்லகாய போற்றி
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் மகா வீர்யனே போற்றி
ஓம் வனப்பிரபுவே போற்றி
ஓம் சிந்தையே போற்றி
ஓம் ரவிக்கதிரே போற்றி
ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி 70
ஓம் திவாகரனே போற்றி
ஓம் காளி நந்தவர்ணனே போற்றி
ஓம் கனாந்தகனே போற்றி
ஓம் தரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் பரணிக்கு அதிபதியே போற்றி
ஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி
ஓம் சூரியனே போற்றி
ஓம் செல்வக் கோடானே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் மந்திரவடிவானவனே போற்றி 80
ஓம் பரம் பொருளே போற்றி
ஓம் பலம் உடையவனே போற்றி
ஓம் பூத நாயகனே போற்றி
ஓம் மேதாப் பிரியனே போற்றி
ஓம் மந்திரத் தலைவனே போற்றி
ஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி
ஓம் யாமம் ஆனவனே போற்றி
ஓம் இலக்குமீதரனே போற்றி
ஓம் உக்கிரமானவனே போற்றி
ஓம் சுராதீசனே போற்றி 90
ஓம் சேவாப் பிரியனே போற்றி
ஓம் சாகரனே போற்றி
ஓம் நாதப்பிரியனே போற்றி
ஓம் வீரவந்தியனே போற்றி
ஓம் காளியின் தலைவனே போற்றி
ஓம் கனமூர்த்தியே போற்றி
ஓம் சனகனே போற்றி
ஓம் யாக புருசனே போற்றி
ஓம் திடமானவனே போற்றி
ஓம் தீட்சாகரனே போற்றி 100
ஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி
ஓம் தீரத்தலைவனே போற்றி
ஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி
ஓம் பார்வதி நாதனே போற்றி
ஓம் பலபத்ரனே போற்றி
ஓம் பூதேசனே போற்றி
ஓம் மோகனனே போற்றி
ஓம் மந்திரமே போற்றி
ஓம் கைமாலை அணிந்தவனே போற்றி
ஓம் சகலமும் அருள்பவனே போற்றி 110
ஓம் சப்த வடிவமே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் குதிரை தலைவனே போற்றி
ஓம் சேவிக்கப்படுபவனே போற்றி
ஓம் இனிய பேச்சுடையவனே போற்றி
ஓம் பீதி அகற்றுபவனே போற்றி
ஓம் தேவ முதல்வனே போற்றி
ஓம் காளியின் தனமே போற்றி
ஓம் என்றும் இருப்பவனே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி 120
ஓம் காப்பவனே போற்றி
ஓம் காரியத்தின் தலைவனே போற்றி
ஓம் திவாகரனே போற்றி
ஓம் அறக்கடவுளே போற்றி
ஓம் பூமிக்கரசே போற்றி
ஓம் காசிக்குத் தலைவனே போற்றி
ஓம் பார்வதீ ரமணனே போற்றி
ஓம் காலதேசம் கடந்தவனே போற்றி
ஓம் முக்குண உருவே போற்றி
ஓம் மூவுலகிற்கரசே போற்றி 130
ஓம் மேதாவியே போற்றி
ஓம் மாலதீ நாயகா போற்றி
ஓம் உமை ஒரு பாகமே போற்றி
ஓம் செல்வ நாயகனே போற்றி
ஓம் சாதனனே போற்றி
ஓம் இனிமையின் உருவே போற்றி
ஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி
ஓம் அகர முதலானவனே போற்றி
ஓம் பைரவனே போற்றி
ஓம் பலிப்ரியனே போற்றி 140
ஓம் காளி இதய ஞானமே போற்றி
ஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி
ஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் காப்புடையாய் போற்றி
ஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி
ஓம் பகலோனே போற்றி
ஓம் செல்வம் அருள்பவனே போற்றி
ஓம் தீரருக்கு இறைவனே போற்றி
ஓம் நதீஸ்வரனே போற்றி
ஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி 150
ஓம் பலம் தருபவனே போற்றி
ஓம் ஆதியானவனே போற்றி
ஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி
ஓம் மந்தர நாயகனே போற்றி
ஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி
ஓம் மாயை ஆனவனே போற்றி
ஓம் நாவின் சுவையே போற்றி
ஓம் கோரியது கொடுப்பவனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி 160
ஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி
ஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி
ஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி
ஓம் நான்முகன் தலைவனே போற்றி
ஓம் சராசரம் உடையவனே போற்றி
ஓம் மக்களின் தலைவனே போற்றி
ஓம் இதயநாதனே போற்றி
ஓம் தாவரம் ஆனவனே போற்றி
ஓம் தவத் தெய்வமே போற்றி
ஓம் செல்வ ஒளியோனே போற்றி 170
ஓம் பூமிநாதனே போற்றி
ஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் வணக்கத்திற்குரியவனே போற்றி
ஓம் ஒலியின் ஓசையே போற்றி
ஓம் உயர்வுகள் தருபவனே போற்றி
ஓம் மானம் உடையாய் போற்றி
ஓம் கோள்களின் தலைவா போற்றி
ஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி
ஓம் மேன்மைக்குரியவனே போற்றி 180
ஓம் திறமைசாலியே போற்றி
ஓம் காங்கேயன் தந்தையே போற்றி
ஓம் நிறைவினைத் தருபவனே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
ஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி
ஓம் அற்புத உருவே போற்றி
ஓம் வழி நடத்துபவனே போற்றி
ஓம் அழகிய வடிவானவனே போற்றி
ஓம் ஆனந்தச் சிலையே போற்றி
ஓம் அடியாந்த காவலனே போற்றி 190
ஓம் மகா நாதனே போற்றி
ஓம் யமி தேவனே போற்றி
ஓம் ஓங்கியவனே போற்றி
ஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் சதி நாதனே போற்றி
ஓம் நிம்மதி அருள்பவனே போற்றி
ஓம் உன்னத தெய்வமே போற்றி
ஓம் காளிகா ரமணனே போற்றி
ஓம் கண முதல்வனே போற்றி 200
ஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி
ஓம் தல சோதியே போற்றி
ஓம் செல்வ ராசனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் பாண்டவனே போற்றி
ஓம் பூதங்கள் உடையவனே போற்றி
ஓம் தக்கன தருபவனே போற்றி
ஓம் தருமத்தின் தலைவனே போற்றி
ஓம் மகேசனே போற்றி
ஓம் மனம் அருள்பவனே போற்றி 210
ஓம் மானிடர்த்தலைவனே போற்றி
ஓம் வெற்றியின் ஈசனே போற்றி
ஓம் பாராட்டுக்குரியவனே போற்றி
ஓம் திவ்யம் ஆனவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி
ஓம் கொற்றக் குடையோனே போற்றி
ஓம் நீதி பூசிப்பவனே போற்றி
ஓம் வீரத்தலைவனே போற்றி
ஓம் நாகர் இறைவனே போற்றி
ஓம் உலகினைக் காப்பவனே போற்றி 220
ஓம் மோகமானவனே போற்றி
ஓம் மந்தரனே போற்றி
ஓம் மல்லனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உயிரினும் உயிரே போற்றி
ஓம் வன வடிவானவனே போற்றி
ஓம் கருணையின் கடலே போற்றி
ஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி
ஓம் உடமைகள் தருபவனே போற்றி
ஓம் தேவர்களின் தலைவனே போற்றி 230
ஓம் குரூரனே போற்றி
ஓம் ஆனந்தம் தருபவனே போற்றி
ஓம் ஆசைகள் அற்றவனே போற்றி
ஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி
ஓம் வில்லிபுத்தூரானே போற்றி
ஓம் தாமிரமே போற்றி
ஓம் குணமெனும் குன்றே போற்றி
ஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி
ஓம் செல்வம் உடையாய் போற்றி
ஓம் விண்ணவர் தலைவனே போற்றி 240
ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
ஓம் நாகராசனே போற்றி
ஓம் பீம சேனனே போற்றி
ஓம் சற்குணனே போற்றி
ஓம் அனைத்துமானவனே போற்றி
ஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி
ஓம் கண்களின் ஒளியே போற்றி
ஓம் கனக மாமணியே போற்றி
ஓம் அன்பருக்கு அன்பே போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி 250
ஓம் செல்வத்தின் நிதியே போற்றி
ஓம் தத்துவத் தலைவனே போற்றி
ஓம் குருநாதனே போற்றி
ஓம் ஈசானனே போற்றி
ஓம் காமத்தை வென்றவனே போற்றி
ஓம் பழங்களை ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றி அடைந்தவனே போற்றி
ஓம் வெற்றியின் காரணனே போற்றி
ஓம் ஓங்கார உருவே போற்றி
ஓம் மனத்தை வென்றவனே போற்றி 260
ஓம் பூவடிவானவனே போற்றி
ஓம் ஸ்ரீமானே போற்றி
ஓம் தலைவனே போற்றி
ஓம் முதலோனே போற்றி
ஓம் நாகத் தலைவனே போற்றி
ஓம் பயங்கர வடிவானவனே போற்றி
ஓம் மஞ்சலாயனே போற்றி
ஓம் மேதாவியே போற்றி
ஓம் மோட்சம் காப்பவனே போற்றி
ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி 270
ஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி 270
ஓம் ராமனே போற்றி
ஓம் வேணுப்பிரியனே போற்றி
ஓம் சித்தரில் உள்ளவனே போற்றி
ஓம் திருமாளிகைத் தேவனே போற்றி
ஓம் சச்சித்தனே போற்றி
ஓம் சூரர்களின் தலைவனே போற்றி
ஓம் பூதங்களின் தலைவனே போற்றி ஓம் வெற்றிச் செல்வனே போற்றி
ஓம் விசிஷ்டனனே போற்றி
ஓம் ஞானமே போற்றி 280
ஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி
ஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி
ஓம் டங்க நாயகனே போற்றி
ஓம் சமநிலை ஆனவனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் செல்வத்தரசே போற்றி
ஓம் பூமியைக் காப்பவனே போற்றி
ஓம் பார்த்தனனைக் காத்தவனே போற்றி
ஓம் கோவிலைக் காப்பவனே போற்றி
ஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி 290
ஓம் தியானத்தின் தலைவா போற்றி
ஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி
ஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி
ஓம் முழு முதற் பொருளே போற்றி
ஓம் வேள்விப் பொருளே போற்றி
ஓம் வாம வல்லபனே போற்றி
ஓம் சகல கலா வல்லபனே போற்றி
ஓம் அன்பின் ஊற்றே போற்றி
ஓம் ஏழைகளின் துணையே போற்றி
ஓம் இரக்கமிக்கோனே போற்றி 300
ஓம் கம்பீரமானவனே போற்றி
ஓம் ஓளிப்பிழம்பே போற்றி
ஓம் குமாரனே போற்றி
ஓம் விருத்தனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் உயிர்களின் நாதனே போற்றி
ஓம் வேள்வித் தலைவனே போற்றி
ஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி
ஓம் தலத்தின் தலைவனே போற்றி
ஓம் தனஞ்சயனே போற்றி 310
ஓம் உலகப் பிரியனே போற்றி
ஓம் பழம் பொருளே போற்றி
ஓம் ஆண்களின் தலைவனே போற்றி
ஓம் பலிப்பிரபுவே போற்றி
ஓம் மகத்தானவனே போற்றி
ஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி
ஓம் மதுரனே போற்றி
ஓம் மூல முதல் ஆனவனே போற்றி
ஓம் வேள்வியின் இறைவா போற்றி
ஓம் வளங்களின் தலைவா போற்றி 320
ஓம் குளிர்ச்சியே போற்றி
ஓம் வீரத் தலைவா போற்றி
ஓம் காக்கப் பிறந்தவனே போற்றி
ஓம் ஞான மயமே போற்றி
ஓம் சித்த ராசனே போற்றி
ஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் கடலரசனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் பனிமலை அரசே போற்றி 330
ஓம் இமயத்தரசே போற்றி
ஓம் எங்களின் சிந்தையே போற்றி
ஓம் மோக மூர்த்தியே போற்றி
ஓம் மானம் காப்பவனே போற்றி
ஓம் மனோகரனே போற்றி
ஓம் சய சய ஒளியே போற்றி
ஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி
ஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி
ஓம் திருவடி முதலே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி 340
ஓம் செல்வப்ரியனே போற்றி
ஓம் பூ அழகனே போற்றி
ஓம் எங்கும் நிற்பவனே போற்றி
ஓம் உயிர்களின் உயிரே போற்றி
ஓம் முக்கட் சுடரே போற்றி
ஓம் தூய சித்தமே போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் மகாபலம் உடையவனே போற்றி
ஓம் தெய்வக் கடலே போற்றி
ஓம் பேரொளியின் பேரொளியே போற்றி 350
ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
ஓம் பாலனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் கபாலனே போற்றி
ஓம் கொற்றக் கொடையோனே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
ஓம் டங்கேசனே போற்றி
ஓம் நிலையான ஞானமே போற்றி
ஓம் மலர்களின் மனமே போற்றி
ஓம் செல்வம் தருபவனே போற்றி 360
ஓம் பூமியின் கேள்வனே போற்றி
ஓம் ஆத்ம நாதனே போற்றி
ஓம் பக்திக்குரியவனே போற்றி
ஓம் பலிராசனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் மகேஸ்வரனே போற்றி
ஓம் மங்கள நாதனே போற்றி
ஓம் பிச்சை ஏற்றவனே போற்றி ஓம் பிரபஞ்ச ஆத்மாவே போற்றி
ஓம் இந்திரனுக்கு அரனே போற்றி 370
ஓம் மீன் பிடித்தவனே போற்றி
ஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி
ஓம் தீரம் உடையவனே போற்றி
ஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி
ஓம் ஒளிவீசுபவனே போற்றி
ஓம் கேடகப் பிரியனே போற்றி
ஓம் வீரியனே போற்றி
ஓம் மலையைக் காத்தவனே போற்றி
ஓம் சீறும் சிவனே போற்றி
ஓம் கணங்களின் தலைவனே போற்றி 380
ஓம் குணங்களின் தலைவா போற்றி
ஓம் கணங்கள் உடையவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி
ஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி
ஓம் பூத நாயகனே போற்றி
ஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி
ஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி
ஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி
ஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி 390
ஓம் ஞான வடிவமே போற்றி
ஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி
ஓம் வெற்றியின் செல்வமே போற்றி
ஓம் குடைநிழல் போன்றோனே போற்றி
ஓம் கள்ளமில்லாதவனே போற்றி
ஓம் புலன்களை வென்றவனே போற்றி
ஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி
ஓம் வேத மயிலே போற்றி
ஒம் வீரத்தின் தலைவனே போற்றி
ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி 400
ஓம் வெற்றியின் வீரனே போற்றி
ஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி
ஓம் டகார வடிவமே போற்றி
ஓம் வினாயக ராசனே போற்றி
ஓம் விரதம் ஏற்பவனே போற்றி
ஓம் வில்லாளனே போற்றி
ஓம் ஊற்றமுடையவனே போற்றி
ஓம் நிலையான ராசியே போற்றி
ஓம் காமோதரனே போற்றி
ஓம் அருளும் அப்பனே போற்றி 410
ஓம் நிலையான ஆதாரமே போற்றி
ஓம் நிரந்தரனே போற்றி
ஓம் உடுக்கை உடையவனே போற்றி
ஓம் வசுபதியே போற்றி
ஓம் அமைதிவடிவே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி
ஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி
ஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி
ஓம் எங்கும் இயங்குபவனே போற்றி 420
ஓம் செல்வனே போற்றி
ஓம் அக்னி தேவனே போற்றி
ஓம் தூயோனே போற்றி
ஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி
ஓம் தலப்பிரபுவே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் அக்னியே போற்றி
ஓம் தலப்புதல்வனே போற்றி
ஓம் ஆதிக்கு இறைவனே போற்றி
ஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி 430
ஓம் தலத்தின் நாயகனே போற்றி
ஓம் நீண்ட தோளனே போற்றி
ஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி
ஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் எங்கும் பரந்தவனே போற்றி
ஓம் பாரதனே போற்றி
ஓம் மானிடரைக் காப்பவனே போற்றி
ஓம் எல்லாம் உடையவனே போற்றி
ஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி 440
ஓம் மண்ணின் நாயகனே போற்றி
ஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி
ஓம் நாரதனே போற்றி
ஓம் நிலம் தருபவனே போற்றி
ஓம் பால் குணனே போற்றி
ஓம் மலை அரசன் மனமே போற்றி
ஓம் பாஞ்சாலமே போற்றி
ஓம் பலத்துக்கரசே போற்றி
ஓம் பல் குணனே போற்றி
ஓம் தவ வலி கொண்டவனே போற்றி 450
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் பாம்பை உடையவனே போற்றி
ஓம் புருவங்களின் ஈசனே போற்றி
ஓம் புகழ ஓங்கியவனே போற்றி
ஓம் பாலகனே போற்றி
ஓம் மலையின் அரசே போற்றி
ஓம் பலியே போற்றி
ஓம் பாம்பரசனே போற்றி
ஓம் பலிநாதனே போற்றி
ஓம் எங்களின் அன்பனே போற்றி 460
ஓம் எங்களைக் காப்பவனே போற்றி
ஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி
ஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி
ஓம் எங்களின் அரனே போற்றி
ஓம் மகரிசியே போற்றி
ஓம் எங்களின் பெருமானே போற்றி
ஓம் வேத முடிவே போற்றி
ஓம் பீமனே போற்றி
ஓம் மனத்துக்கரசே போற்றி
ஓம் வள்ளலே போற்றி 470
ஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி
ஓம் பலம் தருபவனே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் மகரனே போற்றி
ஓம் மகாதேவனே போற்றி
ஓம் மாணிக்கமே போற்றி
ஓம் மெளனியே போற்றி
ஓம் மணிரஞ்சிதமே போற்றி
ஓம் மகீதரனே போற்றி
ஓம் மணி ரம்மியனே போற்றி 480
ஓம் மனுப் பிரியனே போற்றி
ஓம் மகீப் பிரியனே போற்றி
ஓம் மணி மண்டலமே போற்றி
ஓம் மனு ராசனே போற்றி
ஓம் மந்திரத் தலைவனே போற்றி
ஓம் மந்திரம் அருள்பவனே போற்றி
ஓம் மகீ பாலனே போற்றி
ஓம் மகீசாநனே போற்றி
ஓம் மூலப் பொருளே போற்றி
ஓம் மாணிக்க ஒளியே போற்றி 490
ஓம் முக்தனே போற்றி
ஓம் ரமாநாதனே போற்றி
ஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி
ஓம் ஆதாரமே போற்றி
ஓம் எல்லாம் ஆனவனே போற்றி
ஓம் மூலப் பொருளே போற்றி
ஓம் முகுந்தனே போற்றி
ஓம் மணி கூடனனே போற்றி
ஓம் மணிப் பிரியனே போற்றி
ஓம் ரமாபதியே போற்றி 500
ஓம் பரஞான வடிவே போற்றி
ஓம் ரமா காந்தனே போற்றி
ஓம் தவ வலிவுடையோனே போற்றி ஓம் வணங்கப்படுபவனே போற்றி ஓம் ரமா தீசனே போற்றி
ஓம் நான்மறை முதல்வா போற்றி
ஓம் வனத்தில் உள்ளவனே போற்றி
ஓம் எங்களின் நினைவே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் எங்களின் துணைவா போற்றி 510
ஓம் வனங்களில் உலவுபவனே போற்றி
ஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி
ஓம் ராம வல்லபனே போற்றி
ஓம் குளிரின் சுகமே போற்றி
ஓம் வன நாயகனே போற்றி
ஓம் சித்தி கரனே போற்றி
ஓம் சித்தனே போற்றி
ஓம் சீலம் உடையவனே போற்றி
ஓம் அமுதமே போற்றி
ஓம் சனி பகவானே போற்றி 520
ஓம் நண்பனே போற்றி
ஓம் அருள்பவனே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் சத்பதியே போற்றி
ஓம் சதாசிவனே போற்றி
ஓம் சீலனே போற்றி
ஓம் குணாதரனே போற்றி
ஓம் சதியின் ஆத்மாவே போற்றி
ஓம் நெறியே போற்றி 530
ஓம் எண்ணமே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் வேதியே போற்றி
ஓம் தேவர்களின் இறைவா போற்றி
ஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி
ஓம் கருமுகில் கண்ணனே போற்றி
ஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி
ஓம் தாமரைத் தடாகமே போற்றி
ஓம் சதீஸ்வரனே போற்றி 540
ஓம் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி
ஓம் சூரசேனனே போற்றி
ஓம் அமுதக் கடலே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் கோவே போற்றி
ஓம் எந்தாய் போற்றி
ஓம் சூரியனைக் காப்பவனே போற்றி
ஓம் அப்பனே போற்றி
ஓம் அரசனே போற்றி 550
ஓம் காபாலியே போற்றி
ஓம் மலையில் வாழ்பவனே போற்றி
ஓம் கமல நாதனே போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் தர்க்கமே போற்றி
ஓம் பெரும்பிணி மருந்தே போற்றி
ஓம் மன்னனே போற்றி
ஓம் மகத அரசனே போற்றி
ஓம் நதி நாயகனே போற்றி
ஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி 560
ஓம் மலர் போன்றவனே போற்றி
ஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் சிவசூரியனே போற்றி
ஓம் சோதிப் பரனே போற்றி
ஓம் சய சய போற்றி
ஓம் புதுமையோனே போற்றி 570
ஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி
ஓம் எவர்க்கும் அரசனே போற்றி
ஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி
ஓம் தர்கவல்லபனே போற்றி
ஓம் புதனுக்கு அரசே போற்றி
ஓம் இலக்குமயோனே போற்றி
ஓம் வாசல் காப்போனே போற்றி
ஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி
ஓம் நற்குணம் உடையவனே போற்றி
ஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி 580
ஓம் குரு பைரவனே போற்றி
ஓம் தேவர்களின் வாழ்வே போற்றி
ஓம் எங்களின் சிந்தையே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் பொன்மேனியனே போற்றி
ஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி
ஓம் நிழலே போற்றி
ஓம் கால தேவனே போற்றி
ஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி
ஓம் முகிலே போற்றி 590
ஓம் தேவே போற்றி
ஓம் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பாவம் அறுப்பவனே போற்றி
ஓம் புதன் ஆவியே போற்றி
ஓம் மனத்துக்கு அன்பனே போற்றி
ஓம் தேவியின் புதல்வனே போற்றி
ஓம் எரி ஊட்டுபவனே போற்றி
ஓம் யாவும் ஆனவனே போற்றி
ஓம் மாம்பூ உடையோனே போற்றி
ஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி 600
ஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி
ஓம் நீங்கா இறைவனே போற்றி
ஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி
ஓம் மான் ஏந்தியவனே போற்றி
ஓம் கண்மணியே போற்றி
ஓம் சிந்தை புகுந்தவனே போற்றி
ஓம் புனிதனே போற்றி
ஓம் கபால மாலை சூடியவனே போற்றி
ஓம் மலை அரசனே போற்றி
ஓம் கமலா காந்த வல்லபனே போற்றி 610
ஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி
ஓம் விதர்க்கமே போற்றி
ஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் இலக்குவனனே போற்றி
ஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி
ஓம் நந்திப்பிரியனே போற்றி
ஓம் குணங்களின் சிறப்பே போற்றி
ஓம் மாலதீ மலரே போற்றி
ஓம் பைரவ ஈசனே போற்றி
ஓம் தேவர்களின் சுடரே போற்றி 620
ஓம் கனலே போற்றி
ஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி
ஓம் கடயோக வல்லவனே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் திசைகளில் உள்ளவனே போற்றி
ஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி
ஓம் அரசருக்கு அரசனே போற்றி
ஓம் குண்டலீசனே போற்றி 630
ஓம் தர்க்கசித்தனே போற்றி
ஓம் புத சித்தனே போற்றி
ஓம் இலக்கின் கட்டமே போற்றி
ஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி
ஓம் ஆற்றங்கரையோனே போற்றி
ஓம் கேவலனே போற்றி
ஓம் மாம் பூ மணத்தோனே போற்றி
ஓம் சிவனே போற்றி
ஓம் அமுதம் அருளியவனே போற்றி
ஓம் கரும்பின் இனிப்பே போற்றி 640
ஓம் கலப்பை உடையோனே போற்றி
ஓம் பொன்னாபரணத்தானே போற்றி
ஓம் கூத்தனே போற்றி
ஓம் சிந்தையே போற்றி
ஓம் கடலின் முத்தே போற்றி
ஓம் திகம்பரனே போற்றி
ஓம் நகப்பிரியனே போற்றி
ஓம் இடாகினி நாயகனே போற்றி
ஓம் மகாகாரனனே போற்றி
ஓம் சுடர் மிகு விளக்கே போற்றி 650
ஓம் புத்தியே போற்றி
ஓம் புத்தொளியோனே போற்றி
ஓம் மறைபொருளே போற்றி
ஓம் தாபங்களை போக்குபவனே போற்றி
ஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி
ஓம் மாமர வாசனனே போற்றி
ஓம் ஸ்ரீபைரவனே போற்றி
ஓம் அமுத அன்பனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி
ஓம் நஞ்சுண்டவனே போற்றி 660
ஓம் மேருமலையோனே போற்றி
ஓம் நன்மை செய்வோனே போற்றி
ஓம் குறைவில்லாதவனே போற்றி
ஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி
ஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி
ஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி
ஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி
ஓம் மகாராசனே போற்றி
ஓம் காலனை வென்றவனே போற்றி
ஓம் புதன் அன்பனே போற்றி 670
ஓம் அவதாரம் செய்பவனே போற்றி
ஓம் தேவியின் தொண்டனே போற்றி
ஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி
ஓம் அடியவர்களின் அமுதமே போற்றி
ஓம் மாமர வல்லபனே போற்றி
ஓம் எட்டுத்திசை காவலனே போற்றி
ஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி
ஓம் தத்துவனே போற்றி
ஓம் நடராசனே போற்றி
ஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி 680
ஓம் பார்வதியின் பாகனே போற்றி
ஓம் எங்களின் கதியே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் திசைகளைக் காப்பவனே போற்றி
ஓம் பூதப்படையோனே போற்றி
ஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி
ஓம் மகமாலை அணிந்தவனே போற்றி
ஓம் சடையாய் போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் பொருளே போற்றி 690
ஓம் தேவனே போற்றி
ஓம் சூரியனே போற்றி
ஓம் தாரகனே போற்றி
ஓம் கருப்பஞ்சாறே போற்றி
ஓம் தேவி புத்ரனே போற்றி
ஓம் அமுத இனியவா போற்றி
ஒம் மணியே போற்றி
ஓம் நஞ்சுண்டோனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் சதுரா போற்றி 700
ஓம் அருமருந்தே போற்றி
ஓம் காலக் கடவுளே போற்றி
ஓம் ஆனந்தமே போற்றி
ஓம் சூளாமணியே போற்றி
ஓம் ஞானவிளக்கே போற்றி
ஓம் வித்தின் வித்தே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சோமனே போற்றி
ஓம் மூவுலகாமணியே போற்றி
ஓம் கூர்வாள்படையோய் போற்றி 710
ஓம் தாப அக்னியே போற்றி
ஓம் கம்பீரமானவனே போற்றி
ஓம் மாம்பழ அழகனே போற்றி
ஓம் பைரவியின் துணையே போற்றி
ஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி
ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி
ஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி
ஓம் அன்னவடிவே போற்றி
ஓம் தேசவிளக்கே போற்றி
ஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி 720
ஓம் நலம் செய்பவனே போற்றி
ஓம் செஞ்சடையோனே போற்றி
ஓம் கபாலபாணியே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் செம்பொன் மேனியனே போற்றி
ஓம் சோமநாயகனே போற்றி
ஓம் வாட்படை கொண்டாய் போற்றி
ஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி
ஓம் கெளரவனே போற்றி 730
ஓம் மேன்மை ஆனவனே போற்றி
ஓம் நன்மையறிவாய் போற்றி
ஓம் மாமிசப்ரியனே போற்றி
ஓம் ஹரிநாதனே போற்றி
ஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி
ஓம் அரன் வடிவே போற்றி
ஓம் மாணிக்க ஒளியோனே போற்றி
ஓம் ஈசான திசையோனே போற்றி
ஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி
ஓம் காபாலியே போற்றி 740
ஓம் தேவரறியாத தேவனே போற்றி
ஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி
ஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி
ஓம் தர்க்கப் பிரியனே போற்றி
ஓம் புத நாதனே போற்றி
ஓம் எதிலும் உள்ளவனே போற்றி
ஓம் மரிகிதனே போற்றி
ஓம் நந்திகேச்வரனே போற்றி
ஓம் குணோபேதனே போற்றி
ஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி 750
ஓம் அஷ்ட பைரவனே போற்றி
ஓம் மலையில் உள்ளவனே போற்றி
ஓம் சம்காரம் செய்பவனே போற்றி
ஓம் புன்சிரிப்பே போற்றி
ஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி
ஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் பொறுமைக்கரசே போற்றி
ஓம் மாயோனே போற்றி
ஓம் உர்வாங்கனே போற்றி 760
ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் நாமங்கள் உடையவனே போற்றி
ஓம் வறுமையை நீக்குபவனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் அதிரூபனே போற்றி
ஓம் மரீசியே போற்றி
ஓம் ஆனந்தமே போற்றி
ஓம் குருப்ரியனே போற்றி
ஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி
ஓம் கணங்களை உடையவனே போற்றி 770
ஓம் வார்சடை விரும்பியே போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் உலகேழும் ஆனவனே போற்றி
ஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி
ஓம் அன்ன நடையோனே போற்றி
ஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி
ஓம் பொறுத்தருள்பவனே போற்றி
ஓம் காலபுருசனே போற்றி
ஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி
ஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி 780
ஓம் இடாகினி இதயமே போற்றி
ஓம் அம்பிகா வல்லவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி
ஓம் சுக்ரனே போற்றி
ஓம் கோமுகனே போற்றி
ஓம் கோமுகனே போற்றி
ஓம் வேள்விப்பொருளே போற்றி
ஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி
ஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி 790
ஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி
ஓம் மலர்தூவ நின்றவனே போற்றி
ஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி
ஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி
ஓம் பொறுமையின் வடிவே போற்றி
ஓம் கருணைப் பார்வையனே போற்றி
ஓம் அம்பேசனனே போற்றி
ஓம் இடாகினி பாகனே போற்றி 800
ஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி
ஓம் மங்கலமே போற்றி
ஓம் கோலாடைக் குழகரே போற்றி
ஓம் நரர்களின் தேவனே போற்றி
ஓம் தேவியின் பிராணனே போற்றி
ஓம் கோபவர்த்தனே போற்றி
ஓம் சகதீசனே போற்றி
ஓம் ஒலியின் கம்பீரமே போற்றி
ஓம் மதுபாயனே போற்றி
ஓம் பொன்னே போற்றி 810
ஓம் அரக்கனை அழித்தவனே போற்றி
ஓம் பூதத் தலைவனே போற்றி
ஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி
ஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி
ஓம் நொடியை அருள்பவனே போற்றி
ஓம் பொறுமையின் கலையே போற்றி
ஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி
ஓம் கபால கவசவிரும்பியே போற்றி
ஓம் சித்தனே போற்றி
ஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி 820
ஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி
ஓம் சோமப் பிரபையே போற்றி
ஓம் நாற்களை படைப்பவனே போற்றி
ஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி
ஓம் ஞானப் பெருங்கடலே போற்றி
ஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி
ஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி
ஓம் மதுப்பிரியனே போற்றி
ஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி
ஓம் அழித்தல் தொழிலோனே போற்றி 830
ஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி
ஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி
ஓம் செந்நிறத்தோனே போற்றி
ஓம் உலகச் சுடரே போற்றி
ஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி
ஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி
ஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி
ஓம் நாமங்கள் ஆனவனே போற்றி
ஓம் பொறுமையே போற்றி 840
ஓம் புதாகரனே போற்றி
ஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி
ஓம் தேவேந்திரனே போற்றி
ஓம் நந்தனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் காரணனே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி 850
ஓம் லயம் செய்பவனே போற்றி
ஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி
ஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி
ஓம் நீலமே போற்றி
ஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி
ஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி
ஓம் மர்மங்களை உடையவனே போற்றி
ஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி
ஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி
ஓம் பெளத்த காமனனே போற்றி 860
ஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி
ஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி
ஓம் குணசிந்தனே போற்றி
ஓம் ஞானமூர்த்தியே போற்றி
ஓம் தவவலிமை உடையோய் போற்றி
ஓம் பல்லுயிர் என்றவனே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் தென்னவன் செல்வமே போற்றி
ஓம் அன்ன ஒளியோனே போற்றி
ஓம் உலகத் தலைவனே போற்றி 870
ஓம் பொறுமை உடையவனே போற்றி
ஓம் நீலமணி ஒளியோனே போற்றி
ஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி
ஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி
ஓம் தீண்டுதற்கரியாய் போற்றி
ஓம் திசை மலைகளே போற்றி
ஓம் ஏக நாயகனே போற்றி
ஓம் காமனே போற்றி
ஓம் மாருதியே போற்றி
ஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி 880
ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி
ஓம் கோளரக்கர் தலைவனே போற்றி
ஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி
ஓம் நலம் செய்பவனே போற்றி
ஓம் காலங் கடந்தவனே போற்றி
ஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி
ஓம் மூலத்து முதலே போற்றி
ஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி
ஓம் பொறுமை மனமே போற்றி 890
ஓம் சூலக்கரத்தோனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் கனகச் சுடரே போற்றி
ஓம் திசைகளின் அரசனே போற்றி
ஓம் புதனுக்கு அதிபதியே போற்றி
ஓம் காமத்தை வெல்பவனே போற்றி
ஓம் வடமாலைப் பிரியனே போற்றி
ஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி
ஓம் குணரம்மியனே போற்றி
ஓம் உலகத்து போகப் பொருளே போற்றி 900
ஓம் கணங்களின் அரசே போற்றி
ஓம் நஞ்சுண்டவனே போற்றி
ஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி
ஓம் ஆனந்த வடிவானவனே போற்றி
ஓம் முழு முதல் வித்தே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி
ஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி
ஓம் நீலமணி அணிந்தவனே போற்றி
ஓம் யானை வாகன அழகனே போற்றி
ஓம் பெரிய நாயகனே போற்றி 910
ஓம் பொன்னை அளிப்பவனே போற்றி
ஓம் திக்குகளின் தலைவனே போற்றி
ஓம் விமானம் ஆள்பவனே போற்றி
ஓம் ஆத்ம நாதனே போற்றி
ஓம் தமிழின் அழகே போற்றி
ஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி
ஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி
ஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி
ஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி
ஓம் சக்கரத்து அரசே போற்றி 920
ஓம் பழச்சுவை அமுதே போற்றி
ஓம் பொருள்தரும் பொன்னே போற்றி
ஓம் அன்னத்தின் அன்பனே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் மேன்மைக்கு அரசே போற்றி
ஓம் வள்ளலே போற்றி ஓம் வாழ்க்கையை இயக்குபவனே போற்றி ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி
ஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி
ஓம் பேச வைப்பவனே போற்றி 930
ஓம் மங்கலாகரனே போற்றி
ஓம் மனவடிவே போற்றி
ஓம் குருவாகி நின்றவனே போற்றி ஓம் உளம் நின்ற கொழுந்தே போற்றி
ஓம் மணாளா போற்றி
ஓம் அன்பரசு வாழ்வே போற்றி
ஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி
ஓம் அறக்கடவுளே போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி 940
ஓம் அதிபதியே போற்றி
ஓம் நிழல்தரு மரமே போற்றி
ஓம் பாடுவோரின் பாடலே போற்றி
ஓம் விரிசடையோனே போற்றி
ஓம் பரமசிவனே போற்றி
ஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி
ஓம் பல்லூளித் தலைவா போற்றி
ஓம் பித்தனே போற்றி
ஓம் பொறுமை வடிவே போற்றி
ஓம் உலக நலமே போற்றி 950
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் நொடிக் காலமே போற்றி
ஓம் உலகநாயகனே போற்றி
ஓம் நீலவாணனே போற்றி
ஓம் வாள் ஏந்தியவனே போற்றி
ஓம் பொறுமைக்கு அரசே போற்றி
ஓம் நீலமணி ஒலியோனே போற்றி
ஓம் மேன்மை அருள்பவனே போற்றி
ஓம் முத்துப்பல் உடையோனே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவனே போற்றி 960
ஓம் தாளாண்மை உடையவனே போற்றி
ஓம் நாக வல்லபனே போற்றி
ஓம் பற்பல உயிரோனே போற்றி
ஓம் வேல் ஏந்தியவனே போற்றி
ஓம் வசனப் பிரியனே போற்றி
ஓம் எங்களின் கோவே போற்றி
ஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி
ஓம் பொன்மலையோனே போற்றி
ஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி
ஓம் ஆவிவடிவே போற்றி 970
ஓம் எங்கும் உள்ளவனே போற்றி
ஓம் சோம சித்தனே போற்றி
ஓம் சோமேஸ்வரனே போற்றி
ஓம் நிமலா போற்றி
ஓம் காசியைக் காத்தவனே போற்றி
ஓம் நாகர்களின் இறைவனே போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் மகிழ்ச்சியே போற்றி
ஓம் வீரமுனீஸ்வரனே போற்றி 980
ஓம் குணமே போற்றி
ஓம் அன்பனே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் ஒலிக்கு இறைவா போற்றி
ஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஒலியின் இறைவனே போற்றி
ஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் பொய்யா புகழே போற்றி 990
ஓம் மரகத அதிபதியே போற்றி
ஓம் சிவலோக அதிபதியே போற்றி
ஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி
ஓம் ஆவி நாயகனே போற்றி
ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி
ஓம் அறந்த முடி நெறியே போற்றி
ஓம் வீர மார்த்தாண்டனே போற்றி
ஓம் எங்கள் பெருமானே போற்றி ஓம் மும்மூர்த்திகளின் இறைவா போற்றி
ஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி 1000
ஓம் இகபோகம் ஈவாய் போற்றி
ஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி
ஓம் அருள் தரும் அப்பனே போற்றி
ஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி
ஓம் அழியாச் செல்வம் போற்றி
ஓம் அமிர்த கரும்பே போற்றி
ஓம் காலமும் தேசமும் போற்றி
ஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி!!! 1008
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment