Monday, January 26, 2009

வாலை பூஜை செய்யுங்கள்:ஆதிபராசக்தி அருள் பெறுங்கள்


ஸ்ரீஇராமபிரானின் முன்னோர்கள் 8 தலைமுறையாக துர்கா வழிபாடு செய்துவந்ததால்தான் அந்த பரந்தாமன் 9 ஆம் தலைமுறையில் சூரிய குலத்தில் ஸ்ரீராமனாக அவதரித்தார்.
கலிகாலத்தில் அம்மன் வழிபாடு மட்டுமே நிம்மதியுடன் கூடிய செல்வ வளம் தரும்.அதிலும் அம்மன் என்பதை இங்கு விளக்க விரும்புகிறேன்.
மனிதர்களை இயக்குவது நவக்கிரகங்கள்!
நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள்!!
பஞ்சபூதங்களை இயக்குவது பிரம்மா-விஷ்ணு-சிவன் முதலான மும்மூர்த்திகள்!!
மும்மூர்த்திகள் என்பதும் பதவியே!!
மும்மூர்த்திகளை இயக்குவது ஆதிபராசக்தி எனப்படும் ஆதிபரபிரம்மசக்தி!!!
ஆதிபரபிரம்மசக்தியின் சிறுமி வடிவமே வாலை ஆகும்.
அவளை சிறுமியாக வழிபடும் முறைக்கு வாலை பூஜை என்று பெயர்..


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு மனிதன் சொல்லிக்கொடுத்து இன்னொரு மனிதன் நேரில் கற்றால் மட்டுமே புரியும் கலைகள் ஆறு ஆகும்.சுயமாக முயன்றால் தோல்வி அல்லது மரணம் அல்லது அவமானம் உண்டாகும்.
அவை தியானம்,சக்திபூஜை,ஜோதிடம்,மாந்திரீகம்,ஓவியம்,மொழி கற்பது(அது சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி,ஸ்போக்கன் இங்கிலீஷாக இருந்தாலும் சரி).
அமாவசை தினத்தில் வாலைபூஜையை தொடங்கவேண்டும்.
பராசக்தியை வாலைதெய்வம் என உண்ர்ந்து இயம நியமங்களுடன் தினசரி ஒரு முகூர்த்த நேரம்(90 நிமிடம்)வணங்கி வர வேண்டும்.ஒரு பலகை ஆசனத்தில் அமர்ந்து நம் இரு காதுகளையும் பஞ்சால் அடைத்துக்கொண்டு கண்களை மூடி “ஓம்” என்று எவ்வளவு சத்தமாக வாய்மூடி சொல்ல முடியுமோ அவ்வளவு நீண்ட நேரம் உள்ளுக்குள்ளேயே உச்சரித்து வரவேண்டும்.
இம்மாதிரி 108 முறை செய்ய வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு தினமும்,இரண்டு வருடம் வரை செய்து வந்தால் வாலையின் அருள் கிடைக்கும்.
ஓம் என்ற அட்சரம் தானுண்டு,அதற்குள்
ஊமையெழுத்தும் இருக்குதடி நாமிந்த
எழுத்தை அறிந்து கொண்டோம்,
வினை நாடி விளையாடி கும்மியடி வாலைப் பெண்ணே
-கொங்கண சித்தர்

No comments:

Post a Comment