Tuesday, April 9, 2019

ஆன்மீக உபன்யாசகர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் பேட்டி


ஆன்மீக உபன்யாசகர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் பேட்டி

கேள்வி:சி.ஏ,படித்த நீங்கள் முழு நேர இறை ஊழியர் ஆனது எப்படி?


பதில்:என்னுடைய அப்பா ஒரு உபன்யாசகர்;படித்தது சி.ஏ.வாக இருந்தாலும், நான் பிறந்தது முதல் பார்த்து வளர்ந்தது என் அப்பாவைத் தான்;எனவே,இறைபணி,உபன்யாசம் என்பதெல்லாம் எனக்குப் புதிதில்லை;என்னை சி ஏ படிக்க வைத்தாலும்,பரம்பரையாக உபன்யாசம் மற்றும் இறைபணியையும் எங்கள் குடும்பம் செய்து வருவது போல,நானும் செய்ய வேண்டும் என்று தான் என்னுடைய அப்பா விரும்பினார்;இதைப் புரிந்துகொண்டு தான் நானும் சி.ஏ,படித்தேன்;1991 ஆம் ஆண்டு என்னுடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு நான் முழு நேர உபன்யாசகராக ஆனேன்.என்னுடைய அப்பா உபன்யாசம் செய்த காலத்திலும்,ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை நானும் அவருடன் சேர்ந்து உபன்யாசம் செய்திருக்கிறேன்;

கேள்வி:உத்திராயண காலத்தில் இறப்பவர்கள் மோட்சம் அடைந்து பெருமாள் திருவடிகளுக்குச் சென்றுவிடுவார்கள்;இவர்களைத் திதி அன்று கூப்பிட்டால் எப்படி வருவார்கள்?


பதில்:உங்கள் கேள்வியின் பொருள், உத்திராயண காலத்தில் இறந்தால் மட்டுமே மோட்சம் கிடைக்கும் என்பது போல் இருக்கின்றது;ஆனால்,உண்மையில் யாராக இருந்தாலும் அவரவர் பாவ புண்ணியங்களின் படி மட்டுமே மோட்சத்தை அடைய முடியும்;இதில் ஆண்,பெண்,பிராமணர்கள்-மற்றவர்கள்,வயதானவர்கள்-குழந்தைகள்,பணம் படைத்தவர்கள்-இல்லாதவர்கள் என்ற எந்த வேறுபாடும் கிடையாது;

சாஸ்திரங்களின் படி,இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து,மோட்சம் வேண்டும் என்று கேட்டால்,அவர்கள் எப்படி இருக்கின்றார்களோ,அப்படியே மோட்சம் அடைவார்கள்;முக்தி அடைந்து சிவன் அல்லது பெருமாள் திருவடிகளைச் சேர்ந்தவர்கள்,நாம் கொடுக்கும் திதியின் பொழுது வரமாட்டார்கள்;உண்மையில் முக்தி அடைந்தவர்கள்,இறந்த நொடிப்பொழுதில் இறைவனடி சேர்ந்து விடுவார்கள்:

கேள்வி:அப்படியென்றால்,இறந்தவுடன் செய்யும் 13 நாள் காரியங்களை யாருக்காகச் செய்கின்றோம்?

பதில்:இறந்தவருடைய கர்மவினையினால் அவர் மோட்சம் அடைய முடியாத நிலை இருந்தால்,அவரை பித்ரு லோகத்தில் சேர்ப்பதற்கான காரியங்களைத் தான் இந்த 13 நாட்களும் செய்வோம்;அப்படியென்றால்,ஒருவர் கர்மவினையின்படி,மோட்சம் அடைந்துவிட்டால்,நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் வீண் தானா என்ற சந்தேகம் ஏற்படலாம்;நாம் செய்யும் காரியங்கள் எதுவுமே வீணாவதில்லை;

மோட்சம் அடைவதற்கான பலவழிகளை சாஸ்திரங்கள் கூறுகின்றன;அது போன்ற ஒரு வழிதான் இறந்தவர்களுக்கான காரியங்களைச் செய்வதும்.இது உங்கள் புண்ணியக் கணக்கில் சேரும்;இது போன்ற பித்ரு காரியங்கள் நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்வதற்கான முதல்படி;நம்முடைய பித்ருக்கள் அனைவருமே முக்தி அடைந்திருப்பார்கள்  என்று சொல்ல முடியாது;இங்கு,பித்ருக்கள் என்று நான் குறிப்பிடுவது,நம்முடைய முற்பிறவி தந்தையாகவோ,உடன் பிறந்தவர்களாகவோ இருக்கலாம்;இவர்கள் பித்ரு லோகத்தில் மோட்சத்திற்காக காத்திருப்பார்கள்:நாமும் திதி செய்து,பித்ரு லோகத்தில் இருக்கும் மோட்சம் அடையாத நமது மூதாதையர்களைத் தான் கூப்பிடுவோம்;திதி அன்று அவர்கள் தான் வருவார்கள்;

கேள்வி:பெருமாளையும் தெரியாமல்,சிவனையும் தெரியாமல் இந்த உலகத்தில் பிற மத மக்கள் நிறைய இருக்கின்றார்கள்;அவர்களில் நிறைய நல்லவர்களும் இருப்பார்கள்;அவர்கள் மோட்சம் போவார்களா,இல்லையா?

பதில்:சிவனையும் தெரியாது;பெருமாளையும் தெரியாது என்றால் கைலாசமோ,வைகுண்டமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை;ஒரு இடத்தைப் பற்றி தெரிந்தால் மட்டுமே அங்கு போக வேண்டும் என்று விரும்புவோம்;அந்த இடத்தை பற்றித் தெரியாதவர்கள்,அங்கு போக வேண்டும் என்று எப்படி கேட்பார்கள்? எனவே,வைகுண்டம்,கைலாசம் பற்றி தெரியாதவர்கள் மோட்சம் போவார்களா என்ற கேள்விக்கே இடம் இல்லை;

கேள்வி:இறந்தவர்களுக்கு காரியங்களைச் செய்ய வேண்டியது நமது கடமை என்று கூறுகின்றீர்கள்;இப்படி கர்மா செய்வதற்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரையிலும் கேட்கிறார்கள்;இவ்வளவு பணம் செலவழித்து கர்மா செய்ய முடியாதவர்களுக்கு என்ன வழி?

பதில்:அதிக பணம் செலவழித்து கர்மா செய்ய முடியாதவர்களுக்கு உதவும் வகையில்,சங்கர மடத்தில் குறைந்த செலவில் செய்வதற்கு அனுமதிக்கிறார்கள்:வேறு சில மடங்களிலும் உண்டு;ஆனால்,இப்போது இருக்கும் அளவைப் போல் 10 மடங்கு அளவிற்கு இந்த உதவிகள் நடந்தால் தான் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்;


முன்பு சிறிய பூஜைகளை நாமே செய்து கொள்ளும் அளவிற்கு,தேவையான சாஸ்திரங்களை தெரிந்து வைத்திருந்தோம்;ஆனால்,இன்றைக்கு எந்த ஒரு பூஜையாக இருந்தாலும்,வெளியில் இருந்து சாஸ்திரிகள் வந்து செய்து கொடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது;எனவே,அதிக பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது;இந்தத் துறைக்கு அதிக நபர்கள் வந்தால் கட்டணம் குறையலாம்;

இதுதவிர,வீட்டில் சிறிய அளவில் செய்ய வேண்டிய பூஜைகளை நாமே தெரிந்து கொள்ள வேண்டும்;பூணூல் போட்டுக் கொள்வது,லட்சுமி பூஜை,வரலட்சுமி விரதம்,விளக்கு பூஜை போன்ற சிறு,சிறு பூஜைகளை நாமே செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்;


கேள்வி:இன்றைய சமுதாயச் சூழலில் கணவன் இருக்கிறவர்கள்,கணவனை இழந்தவர்கள் என்ற வேறுபாடு தெரியாத,ஒரு பொதுவான தோற்றத்தில் தான் பெண்கள் இருக்கிறார்கள்;இதனால்,கோவில்களுக்குச் செல்லும் போது,அங்கு வித்தியாசம் பார்க்காமல்,தாம்பூலம் முதலான மங்கலப் பொருட்களைக் கொடுக்கிறார்கள்;கணவரை இழந்த பெண்கள் அவற்றை வாங்கிக் கொண்டால்,அதற்கான பாவம் ஏதும் அவர்களைச் சேருமா?

பதில்:கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் பூ,மஞ்சள் போன்ற பொருட்களை கண்டிப்பாக மறுக்க வேண்டிய அவசியமில்லை;இது போன்ற பொருட்கள் கோவில்களில் கொடுக்கப்படும் போது,அவை மங்களகரமான பொருட்கள் என்பதைத் தாண்டி,பவித்ரமான (சுத்தமான) பொருட்கள் என்றாகிவிடும்; கோவிலில் கொடுக்கப்படும் பவித்ரமான பொருட்களை கல்யாணம் ஆனவர்கள்,ஆகாதவர்கள்,கணவன் இருப்பவர்கள்,இல்லாதவர்கள் என்று எல்லோருமே வாங்கிக் கொள்ளலாம்; 

கணவன் இல்லாதவர்கள் கோவிலில் கொடுக்கப்படும் திருமாங்கல்யத்தைக் கூட வாங்கிக் கொள்ளலாம்;தவறில்லை;பவித்ரமான அந்த திருமாங்கல்யத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் யாருக்காவது கொடுக்கலாம்;கணவன் இல்லாதவர் என்று அடையாளம் தெரியாததினால் மங்கலப் பொருட்களைக் கொடுப்பதாகக் கூறுகின்றீர்கள்;கணவன் இல்லாதவர் என்று அடையாளம் தெரிந்தாலுமே கோவீலில் அவர்களுக்கு கொடுப்பதில் தவறில்லை;


சனாதன தர்மத்தையும்,சாஸ்திரத்தையும் நன்கு அறிந்தவர்கள் எவருமே கணவனை இழந்த பெண்களை ஒதுக்கி வைக்கமாட்டார்கள்;நம்முடைய தர்ம சாஸ்திரத்தின் படி ஆண்களில் சந்நியாசம் பெற்றவர்களுக்கு இணையானவர்கள் கணவனை இழந்த பெண்கள் எப்படி ஒரு சந்நியாசியைப் பார்த்தவுடன் நமஸ்காரம் செய்து மரியாதையாக அவரை நடத்துகிறோமோ,அதை போல கணவனை இழந்த பெண்களையும் பார்க்க வேண்டும் என்று சனாதன தர்மம் கூறுகிறது;


கேள்வி:ஆனால்,கணவனை இழந்த பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டில் இருந்ததே?


பதில்:சனாதன தர்மத்தில் இருக்கும் கோட்பாடுகள்,தனி மனித விருப்பத்திற்கு எதிரானவை என்ற தவறான புரிதல் இருக்கின்றது;கணவன் இறந்தவுடன் கட்டாயம் உடன்கட்டை ஏறும் வழக்கம் சனாதன தர்மத்தில் இல்லை;அது அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது;

சனாதன தர்மத்தில்,கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுவது கட்டாயம்  என்று இருந்திருந்தால்,ராமாயணத்தில் தசரத சக்கரவர்த்தி இறந்த பிறகு அவரது மூன்று மனைவிகளும் அவருடன் உடன் கட்டை ஏறி இருப்பார்கள்;கணவன் இறந்தவுடன் அவருடன் சேர்ந்து உடன் கட்டை ஏறினால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பிய பெண்கள் உடன் கட்டை ஏறினார்கள்;அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பமாகும்;நம்முடைய எல்லா  சாஸ்திர வழிமுறைகளும் தனி மனித விருப்பத்தைப் பொறுத்தே அமைந்திருக்கும்;

கேள்வி:பல்வேறு இடங்களில் உபன்யாசம் செய்யப் போகின்றீர்கள்;பல்வேறு மனிதர்களை சந்திக்கிறீர்கள்.உங்களையே மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்று எதைக் கூறுவீர்கள்?

பதில்:சாமான்யனின் உறுதியான பக்தி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒன்று;இறைவனிடம் சரணாகதி அடைந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது சாஸ்திர சம்பிரதாயங்களைப் படித்தவர்களுக்குத் தெரிய வாய்ப்பு உண்டு;

ஆனால்,இதைப் பற்றி எல்லாம் தெரியாமல் இன்றைக்கு பழனி,ஸ்ரீரங்கம்,திருச்செந்தூர்,திருப்பதி உள்பட பல கோவில்களில்,பெரிய வரிசையில் இறைவனைத் தரிசிப்பதற்காகப் பாமர மக்கள் நிற்கிறார்கள்;சாதாரண மனிதன் இரண்டு அல்லது மூன்று விநாடிகள் திருப்பதி பெருமாளைத் தரிசிப்பதற்கு,எட்டு மணி நேரம் வரிசையில் நிற்கிறான்;நேரம்,பணம்,போக்குவரத்துச்சிக்கல் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி,இப்படி கோவிலுக்கு விஜயம் செய்கிறான் அந்த சாமானியன்;

இப்படி ஒவ்வொரு ஜீவாத்மாவுடனும் அந்த பரமாத்மா வைத்துக் கொண்டு இருக்கும் தொடர்புதன்,இந்த உலகத்தில் மிகவும் ஆச்சரியமானது என்று நினைக்கின்றேன்;


கேள்வி:ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வைணவர்கள் மட்டுமே உயர்வாக நடத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது;இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்:ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வைணவர்கள் கைங்கர்யம் செய்வதும்,சிவன் கோவிலில் சைவர்கள் கைங்கர்யம் செய்வதும் வழக்கத்தில் இருக்கின்றது;ஸ்ரீரங்கம் கோவிலைப் பொறுத்தவரை ராமானுஜர் பத்து கொத்து பரிவாரம் என்று ஏற்படுத்தி இருக்கிறார்;

இதில் ஓடக்காரர்,தையல்காரர்,செருப்பு தைப்பவர்,பானை செய்பவர்,தெப்பம் கட்டுபவர்,வாத்தியம் வாசிப்பவர்,மருத்துவர்,பாசுரங்கள் பாடுபவர்,நெருப்பு பந்தம் பிடிப்பவர்,அர்ச்சகர் என்று பல்வேறு தரப்பினரும்  இருக்கிறார்கள்;இப்போதும் இந்தக் கோவிலில் மேலே சொன்ன அனைவருக்கும் முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது; 

இன்றைக்கும் பெருமாளுக்காக செருப்பு தைத்து எடுத்து வந்து சமர்ப்பித்துவிட்டு,ஆண்டு தோறும் மரியாதை பெற்றுக் கொள்கிறார்கள்;அவரவர் எந்த வர்க்கத்தில் பிறந்து தொண்டு செய்கிறார்களோ,அதில் இருந்தே மோட்சம் பெற முடியும்; அர்ச்சகராக பிறந்தால் மட்டுமே மோட்சம் என்பதெல்லாம் இல்லை; 

துப்புரவுப் பணியாளராக இருந்து மோட்சம் பெறுபவர்களும்  உண்டு;அர்ச்சகர்களாக இருந்தும் மோட்சம் பெறாமல் போனவர்களும்  உண்டு;இறைவனுக்கு முன்பு அனைவரும் சமமே!


கேள்வி: அப்படியானால்,மோட்சம் கிடைப்பதும் கிடைக்காததும் பகவான் கையில் மட்டுமே உள்ளது என்பது சரியா?

பதில்:மிகச் சரி;நாம் மோட்சம் பெறுவது அந்தப் பரமாத்மாவின் கையில் மட்டுமே உள்ளது;கிருஷ்ண லீலையில் கோகுலத்தில் மண்பாண்டம் மோட்சம் பெற்ற நிகழ்வு உண்டு;ஒரு முறை கண்ணனை கோபியர் ஒருவர் வெண்ணையைத் திருடித் தின்றதால் துரத்திக் கொண்டு வந்தார்;அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ததிபாண்டன் என்பவருடைய தயிர் மண்பாண்டத்தினுள் கண்ணன் ஒளிந்து கொண்டார்; கண்ணனைத் தேடி வந்த கோபிகையிடம் ததிபாண்டன், “கண்ணன் இங்கு இல்லை;கண்ணன் எங்குமே இல்லை” என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்;கோபிகை சென்ற பிறகு கண்ணன் தன்னை விடுவிக்கச் சொன்னபோது,ததி பாண்டன் தனக்கும்,ஒளிந்து கொள்ள இடம் கொடுத்த மண்பாண்டத்துக்கும் கண்ணன் மோட்சம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்;கண்ணனும் மோட்சம் அருளினார்; 

“தூணிலும் இருப்பான்;துரும்பிலும் இருப்பான்” என்று சொன்ன பிரகலாதனுக்கும் மோட்சம்!  “கண்ணன் இங்கு இல்லை;கண்ணன் எங்குமே இல்லை” என்று சொன்ன ததிபாண்டனுக்கும் மோட்சம்! எனவே,நம்முடைய பிறவிக்கு மோட்சம் என்பதை கண்ணன் ஒருவனால் மட்டுமே அளிக்க முடியும்;


கேள்வி: சனாதன தர்மம் பிறப்பால் மனிதனைப் பிரித்து வைத்திருப்பதாகத் திராவிட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன;உண்மையில் சனாதன தர்மம் பிறப்பால் மனிதர்களை பிரித்து வைத்திருக்கிறதா?


பதில்:நம்முடைய கைகளில் ஐந்து விரல்களும் ஒரே அளவில் இருந்தால்,நம்மால் எந்த வேலையையும் சரிவரச் செய்ய முடியாது;அதே போல,மனிதப் பிறப்பில் வேறுபாடு இல்லாமல் இருந்தால், உலகம் இயங்க முடியாது;200 ஆண்டுகளுக்கு முன்பு தேவைக்காக,மனிதப் பிறப்பில்  இருந்த வேறுபாடுகளை உயர்வு தாழ்வு என்று மாற்றி,இவர்களெல்லாம் கோவிலுக்குள் வரக் கூடாது என்று ஒரு சிலர் தவறாக நடந்து கொண்டார்கள்;மனிதப் பிறப்பில் வேறுபாடு இருக்கிறதே தவிர,உயர்வு தாழ்வு கிடையாது;சனாதன தர்மத்தின் படி,யாரும் கோவிலுக்கு போகலாம்;கடவுளை தரிசிக்கலாம்;


எங்கு யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது நியதிக்கு உட்பட்டது;சனாதன தர்மத்தில் சிலரை உயர்த்தியும்,சிலரை தாழ்த்தியும் நடத்துகிறார்கள் என்று சொல்கிறோம்; அரசாங்கம் நடத்தும் ரயில்வே துறையில் தட்கல்,ப்ரீமியம் தட்கல் என்று இருப்பது எதற்காக?பணம் இருப்பவனுக்கு மட்டுமே அவசரவேலை வருமா? அரசாங்கமே பணம் படைத்தவன்,பணம் இல்லாதவன் என்று ஏன் பிரிவினை ஏற்படுத்துகிறது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை;தங்களுடைய அரசியல் லாபத்திற்காக சனாதன தர்மத்தைப் பற்றி குறை கூறுகிறார்கள்:


ஒரு வேலைக்கு இந்த தகுதி இருந்தால் தான் சேர்த்துக் கொள்வேன் என்று கூறுவதை discrimination என்று எடுத்துக் கொள்ளக் கூடாது;ஏதாவது ஒரு filtration என்பது எல்லா இடத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது;
உண்மையில் வேதபாடசாலையில் வேதத்தைக் கற்றுக் கொள்ளத் தேர்வை எதிர்கொள்ளத் தான் வேண்டும்;தேர்வு அன்று அந்த மாணவன் சரியாக வேதத்தைச் சொல்லவில்லை என்று எந்த மாணவனையும் வேதபாடசாலை fail செய்வதில்லை;மறுநாள் வந்து வேதத்தைச் சரியாகச் சொல்லி அந்த மாணவனால் தேர்ச்சி பெற முடியும்;

இது போன்ற நடைமுறை,சனாதன தர்மத்தைத் தவிர,வேறு தேர்வு முறைகளில் இருக்கிறதா? கூறுங்கள்;எந்தத் தேர்வாக இருந்தாலும் 3 மணி நேரத்தில் சரியாகச் செய்யவில்லை என்றால்,அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது;அடுத்த ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ அந்த மாணவன் காத்திருப்பதைத் தவிர,வேறு வழியில்லை;


இந்த விதத்தில்,வேத பாடசாலையில் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை சிறந்தது இல்லையா? இது போல இந்த தர்மத்தில் உள்ள எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்;ஒரு சிலவற்றை ஒரு சிலர் சில காலம் தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட எதிர்வினையை நாம் இன்று அனுபவித்து வருகிறோம்;


நன்றி:துக்ளக்,பக்கங்கள் 29,31;வெளியீடு 13.3.2019

Thursday, April 4, 2019

மழை வளம் தரும் சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம்


உலகத்தில் தொழிற்புரட்சி துவங்கி 200 ஆண்டுகள் ஆகிவிட்டன;அதன் விளைவாக,இயற்கை வளங்களை படிப்படியாக அழிக்காமல் தாறுமாறாக அழிக்கத் துவங்கின ஜி 8 எனப்படும் வல்லரசு நாடுகள்! அதுவும் ஐ.நா.சபை,நேட்டோ,ஐரோப்பிய யூனியன் என்று அமைப்புகள் உருவானப் பின்னர்,தந்திரமாக சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழில்களை ஏழை நாடுகளில் துவங்க வைத்தன இந்த வல்லரசு நாடுகள்;ஏழைநாடுகளில் பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் இப்படிச் செய்து அவர்களது இயற்கை வளங்களையும்,மனித வளத்தையும் சீரழிக்கத் துவங்கி 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டன;


இந்த நயவஞ்சகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது நமது பாரத நாடுதான்;காரணம் தமது நாட்டை நேசிக்கும் பிரதமர்கள் இதுவரை நமக்குக் கிடைக்காமல் இருந்தது தான்;இயற்கை வளங்களை அழித்து,இயற்கைச் சமநிலையைக் கெடுத்து,இப்போது அதன் பின்விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
2010 வரை மே மாதம் மத்தியில் மட்டும் தான் அக்னி நட்சத்திர வெயிலை உணர்ந்தோம்;இப்போது பிப்ரவரியில் இருந்து ஆகஸ்டு வரை உணர்கின்றோம்;


மாநில அரசியல்வாதிகளும் சரி;தேசிய அரசியல்வாதிகளும் சரி;இது நமது நாடு;இது நமது மக்கள் என்ற சொரணையே இல்லாமல் அரசியல் செய்கின்றார்கள்;அடுத்த தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முற்காலத்தில் மன்னர்களும்,ஜமீன் தார்களும் வாழ்ந்தார்கள்;தற்போதைய அரசர்களும்,இளவரசர்களும் அடுத்த தேர்தலை மனதில் கொண்டே அரசியல் செய்துவருகின்றார்கள்;

தண்ணீரை விற்பதும் பாவம்;வாங்குவதும் பாவம்;இது இன்றைய இளைய சமுதாயத்திற்குத் தெரிகின்றதா?


1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரதம் முழுவதும் பேசப்படும் மொழியாக தமிழ் இருந்தது! இன்றைய பத்ரிநாத் ஆலயத்தின் பக்கவாட்டுச் சுவர்களை கூர்ந்து கவனித்தால் இது உண்மை என்று புரியும்;இன்றோ,இலுமுனாட்டிகளின் அடிமைகளும்,ஏஜெண்டுகளும் தமிழ் இனத்தை தமிழ் மொழி வாசிக்க விடாமல் தடுக்கும் விதமாக ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாடு முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்;


மேல்நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொத்தடிமையாக பணிபுரியவே பி.ஈ; பி.டெக். படிக்கின்றார்கள்;இதுவே இன்றைய சமுதாயத்திற்குப் புரியவில்லை;


தண்ணீர்ப் பஞ்சம் பிரச்சினை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்றது;இதைச் சரி செய்ய குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் ஆகும்;இதுபற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை;ஒரு ஜோதிடராகவும்,ஒரு ஆன்மீகத் தேடல் உள்ளவராகவும் உள்ள அடியேனுக்குத் தெரிந்த வழிமுறையை இங்கே தெரிவிப்பதில் பொறுப்பு கொள்கின்றோம்;

தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவருமாகிய அகத்திய மகரிஷியின் பேரருளாலும்,அண்ணாமலையாரின் ஆசிகளாலும் இந்தப் பதிகத்தை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்.


இந்தப் பதிகத்தை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில் வாசித்து வந்தால் மழைவளம் உருவாகும்;


குழுவாகச் சேர்ந்து உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் தினமும் ஒருமுறையாவது பாடிவருவதன் மூலமாக தண்ணீர்ப்பஞ்சம் மழைவளத்தின் மூலமாகத் தீரும்;அப்படித் தீருவதற்கு ஈசன் அருள்பாலிப்பார்;


சைவ சமயக்குரவர்களில் சுந்தர மூர்த்திசுவாமிகள் திருப்புன் கூர் என்ற ஊரில் இருக்கும் சிவலிங்கத்தை நோக்கி பாடிய பாடல் இது;


திருச்சிற்றம்பலம்

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத
  அவனைக் காப்பது காரணம் ஆக
வந்த காலன் தன் ஆருயிர் அதனை
  வவ்வினாய்க்குன் தன் வன்மை கண்டடியேன்
எந்தை நீ எனை நமன் தமர் நலியில்
  இவன் மற்றென் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.         1

வையகம் முற்றும் மாமழை மறந்து
  வயலில் நீர் இலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்க மற்றெங்களை என்ன
  ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
  பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           2

ஏத நன்னிலம் ஈர் அறு வேலி
  ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக்
  கோல வெண்மணல் சிவன் தன் மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த சண்டிக்குன்
  சடை மிசை மலர் அருள் செயக் கண்டு
பூதவாளி நின் பொன்னடி அடைந்தேன்
  பூம்பொழில் திருப்புன் கூர் உளானே.                 3

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
  நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி
  கண்ணப்பன் கணபுல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
  கொள்கை கொண்டு நின் குரைகழல் அடைந்தேன்
பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்
  பொய்கைசூழ் திருப்புன் கூர் உளானே.               4

கோல மால்வரை மத்தென நாட்டிக்
  கோள் அரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆல நஞ்சு கண்டு அவர் மிக இரிய
  அமரர்கட்கருள் புரிவது கருதி
நீலம் ஆர்கடல் விடம் தனை உண்டு
  கண்டத்தே வைத்த பித்த நீ செய்த
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           5

இயக்கர் கின்னரர் எமனொடு வருணன்
  இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல் புலி வானரம் நாகம்
  வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பொன்றின்றி நின் திருவடி அதனை
  அர்ச்சித்தார் பெறும் ஆரருள் கண்டு
திகைப் பொன்றின்றி நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           6

போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப்
  பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து
பார்த்தனுக்கன்று பாசுபதம் கொடுத்
  தருளினாய் பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழியும் புனல் கங்கை
  நங்கையாளை நின் சடை மிசைக் கரந்த
தீர்த்தனே நின் தன் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.           7


மூஎயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
  இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்றேவிய பின்னை
  ஒருவன் நீ கரி காடு அரங்காக
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ
  மணி முழா முழக்க அருள் செய்த
தேவ தேவ நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.            8

அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்
  தவ்வவர்க்காங்கே ஆர் அருள் புரிந்து
எரியு மாகடல் இலங்கையர் கோனைத்
  துலங்க மால்வரைக் கீழ் அடர்த்திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
  கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே.             9

கம்பமால் களிற்றின் உரியானைக்
  காமன் காய்ந்ததோர் கண் உடையானைச்
செம்பொனே ஒக்கும் திரு உருவானைச்
  செழும் பொழில் திருப்புன் கூர் உளானே
உம்பராளியை உமையவள் கோனை
  ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்
தன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தினோ
  டைந்தும் வல்லவர் அருவினை இலரே              10


திருச்சிற்றம்பலம்

ஒரு மாதம் வரை வருமானத்தை அதிகரிக்கும் தேய்பிறை அஷ்டமி பைரவ ஜபம்!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


விகாரி வருடம்,     சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 26.4.2019 வெள்ளிக்கிழமை மாலை 5.22 முதல் 27.4.2019 சனிக் கிழமை இரவு 7.07 வரை 

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

சனிக்கிழமை இராகு காலம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இருக்கின்றது.

 சனிக்கிழமை குளிகை காலம் காலை 6 மணி முதல் 7.30  மணி வரை அமைந்திருக்கின்றது.




இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: வைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 26.5.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.24 முதல் 27.5.2019 திங்கட்கிழமை காலை 11.23 வரை  இருக்கின்றது;

பேய்,பிசாசு பற்றிய உண்மைகளும்,அது பற்றிய திரைப்படங்களும்



உங்களைச் சுற்றிலுமே மிகப்பெரிய சூட்சும உலகம் எப்போதும் இயங்கி வருகின்றது;நீங்கள் தான் அதை உணருவதில்லை;அது பற்றிய முழு உண்மைகள் நமது இந்து தர்மத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள்,ரிஷிகள்,துறவிகள்,யோகிகளால் கண்டுபிடிக்கப்பட்டன;புத்த மதம்,ஜைன மதம் மூலமாக கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவியிருக்கின்றது;

முன்பு,1990 வரையிலும் 40 வாட்ஸ்,60 வாட்ஸ் குண்டு பல்புகளைப் பயன்படுத்தி வந்தோம்;அப்போது,நாடு முழுவதும் பேய்,பிசாசுகளின் தொல்லை வீட்டிலேயே இருந்திருக்கின்றது;சிறு தெய்வங்களான குல தெய்வம்,வீட்டு தெய்வம் போன்றவை வீடுகளுக்கு நேரடியாக வருகை தந்து,தமது வம்சாவழியினருக்கு வரங்களைக் கொடுத்திருக்கின்றன;

பாதரசத்தைக் கொண்டு எரியும் விளக்குகள் பரவலான பிறகு,பேய்,பிசாசுகள் தொல்லைகள் அறவே நின்றுவிட்டன;சிறு தெய்வங்களும் வருகை தருவது நின்றுவிட்டன;பாதரசம் என்பதை சித்த வைத்தியத்தில் சிவனின் விந்து என்றே குறிப்பிடப்படுகின்றது;அது இருக்கும் இடத்தில் எதிர்மறை சக்திகள் வர முடியாது;


மாநகரங்களில் வாடகை வீடுகளில் யாராவது தற்கொலை செய்தால்,அதை எவருக்கும் சொல்லாமல் இன்னொருவருக்கு வாடகைக்கு விடுவது சகஜம்;(லாட்ஜ்களிலும் சில அறைகளில் தற்கொலை அல்லது கொலை செய்வது வழக்கமாக இருக்கின்றது;இங்கேயும்)  புதியதாக வாடகைக்கு வருபவர்களில் பலவீனமான ஜாதகர் அல்லது ஜோதிடப்படி,கோட்சார ராகு,ஒருவரது ராசியைக் கடந்தால்,அவர்களை தற்கொலை செய்த ஆத்மா பிடித்துக்கொள்கின்றது;எப்போதும்,ஆணை பெண் ஆவியும்,பெண்ணை ஆண் ஆவியும் மட்டுமே பிடிக்கும்;
ஒருவரை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவிகள் எப்போதும் பிடிக்காது;(ராகவா லாரன்ஸ் படத்தில் காட்சி அமைத்தது டூப்)


ஆவி பிடித்தவர்களை அந்த ஆவி தற்கொலை செய்ய தூண்டும்;நிறைய்ய சாப்பிட வைக்கும்;நிறைய்ய உணவு பானங்களை அருந்த வைக்கும்;பூர்வ ஜன்ம புண்ணியமோ அல்லது தகுந்த சொந்தங்களோ இருந்தால் மட்டுமே ஆவியை விரட்டிட முடியும்;இல்லாவிட்டால்,ஆவியால் பிடிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபம் தான்;சிலருக்கு, அருள்வாக்கு சொல்வதும் நடக்கும்;(நேரடி அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறிந்தவை)


எங்கள் ஊருக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் டூரிஸ்ட் பாலம் என்று ஒன்று இருக்கின்றது;1976 வாக்கில் அங்கே முதன் முதலில் ஒரு டூரிஸ்ட் பஸ் விபத்திற்கு உள்ளானது;அப்போது முதல் இன்று 2019 வரை அந்த இடத்தை பல லட்சம் வாகனங்கள் கடந்து சென்று இருக்கின்றன;டூரிஸ்ட் வாகனம் செல்லும் போது மட்டுமே அங்கு இப்போது வரை விபத்துக்கள் உருவாகின்றன;

சாலைகளின் வளைவுகளில் அந்திமாலைப் பொழுதுகளில் (மாலை 6 முதல் 7 க்குள்) டூவீலரில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவது வழக்கம்;காவல் தெய்வங்களான முனீஸ்வரன்,கருப்பசாமி,இருளாயி,இசக்கி மற்றும் பல்வேறு சிறு தெய்வ சக்திகள் அந்த இடத்தை கடந்து செல்லும் போது,யார் டூவீலரில் செல்கின்றார்களோ அவர்களை தூக்கி எறிவது வழக்கம்;(நேரடி ஆதாரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;உலகம் முழுவதுமே இருக்கின்றன;ஆவிகள் உலகம் என்ற மாத இதழை வாங்கி படியுங்கள்)


எப்போது மெக்காலே கல்வித்திட்டமும்,ஆங்கில வழிப் பள்ளிகளும் பரவலானதோ அப்போதே இந்த மாதிரியான விஷயங்களை யாரும் நம்புவதில்லை;தனக்கு பேய் பிடிக்கும் வரை;

இரவு 10 மணிக்குப் பிறகு,சுடுகாட்டுப் பாதை வழியாக தனி மனிதனாக பயணிப்பது தவறு;அதே போல,சுடுகாடு,முனியாண்டி கோவில்,ஆக்ரோஷமான பெண் தெய்வங்கள் கிராமப்பகுதிகளில் நிறைய இருக்கின்றன;இந்த ஆலயங்களின் அருகில் ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபாடாமல் இருப்பது அவசியம்;இல்லாவிட்டால்,திடீர் மனக் கோளாறு,திடீர் மரணம் வர வாய்ப்புகள் உண்டு; இந்த திடீர் மனக் கோளாறினை நீக்கிட போதுமான மந்திரீகம் தெரிந்தவர்கள் இப்போது இல்லை;பெருமளவு குறைந்துவிட்டார்கள்!!!

தூங்கும் போதோ,சுடுகாட்டின் வழியாக வரும் போதோ,பேய் வீட்டினை கடக்கும் போதோ ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வருவது பாதுகாப்பு தரும்;அல்லது வாய்விட்டுப் பாடிக் கொண்டும் வரலாம்; கந்த சஷ்டிக்கவசம்,வராகி மாலை போன்றவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் ஜபிக்கலாம்;அல்லது எந்த ஒரு கடவுளின் பெயரையும் சொன்னாலோ அல்லது ஜபித்தாலோ கூட உடனே தீய சக்தியின் தாக்கம் அப்போது நெருங்காது;

ஐரா என்ற திரைப்படத்தை கிறிஸ்தவ நடிகை நயன்தாரா  நடித்திருக்கின்றார்;அதில்,ராசியே இல்லாத கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்திருக்கின்றார்;
சிலருக்கு எல்லாவிதமான சுகபோகங்களையும் அள்ளித் தரும் கடவுள்,சிலருக்கு எல்லாவிதமான சோகங்களை மட்டும் தருவதற்குக் காரணம் என்ன? அப்போது மட்டும் கடவுள் தூங்கிட்டாரா? என்று 2 வது நயன்தாரா நினைப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது;
 கடவுள் கணக்கு எப்போதும் தப்பாது;கச்சிதமாக இருக்கும்; இப்பிறவியில் பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் எல்லோரும் வெறுப்பதாக இருந்தால், அதற்கும் அவரது முற்பிறவி கர்மவினைகளே காரணமாக இருக்கும்;

மானுட வாழ்க்கை வாழும் போது,சாந்தமாக வாழ்ந்து,தற்கொலை அல்லது கொலைசெய்யப்படுபவர்கள் ஆவியான பின்னர்,யாரையும் பழி வாங்குவது இல்லை;வாழும் போது அடாவடியாக வாழ்ந்து,திடீரென செயற்கையான முறையில் இறந்தால் அவர்கள் ஆவியான பின்னர்,மிகுந்த அடாவடிகள் செய்வது வழக்கம்;

நமது பாரத நாட்டில் மட்டும் அல்ல;கீழ்த்திசை நாடுகளான மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா,தாய்லாந்து,வியட்னாம் மற்றும் மேல்திசை நாடுகளான இங்கிலாந்து,ப்ரான்ஸ்,அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளிலும் ஆவிகள் தொல்லை இன்று வரை தொடர்கின்றது;அந்த ஆவிகளுக்கு கதி மோட்சம் தரும் பூஜை,பரிகாரங்கள் நமது நாட்டில் மட்டுமே இருக்கின்றன;அதைச் செய்து அந்த ஆவிகளுக்கு விடுதலை தருவது மிகப் பெரிய புண்ணியம் ஆகும்;இது பற்றி நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்துள்ளார்கள்;

பக்திரீதியாக நம்மையும்,நமது குடும்பத்தாரையும் ஆவிகள்,பேய்கள் தாக்காமல் இருக்க வழிமுறையை உங்களுக்கு  வழங்குகின்றோம்;

1008 நாட்கள் ஏதாவது ஒரு தெய்வத்தின் மந்திரத்தை தினமும்  ஒரு மணி நேரம் வரை ஜபித்து இருந்தீர்கள் என்றால்,அந்த தெய்வத்தின் அருள் பாதுகாப்பு உங்களுடன் எல்லா இடத்துக்கும் வரும்;

அல்லது

108 சதுர்த்திகளுக்கு விநாயகருக்கு அபிஷேகம் அல்லது மந்திர ஜபம் அல்லது இரண்டையும் செய்து இருந்தீர்கள் என்றால்,விநாயகரின் அருள் பாதுகாப்பில் இப்பிறவி முழுவதும் இருப்பீர்கள்;

அல்லது

108 பஞ்சமிகளுக்கு வராகி  அல்லது அங்காளபரமேஸ்வரிக்கு அபிஷேகம்,ஆராதனை அல்லது ஒரு மணி நேரம் வரை மந்திர ஜபம் செய்து இருந்தீர்கள் என்றால்,இப்பிறவி முழுவதும் அந்த உக்கிரப் பெண் தெய்வத்தின் அருள் பாதுகாப்பு உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்;

அல்லது

108 சஷ்டிகளுக்கு முருக கடவுளையும்

அல்லது 

108 அஷ்டமிகளுக்கு பைரவர் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரையும்

அல்லது

108 திருவாதிரை நாட்களுக்கு முனீஸ்வரருக்கும்

அல்லது

108 தசமிகளுக்கு துர்கை அல்லது  உங்களுக்கு விருப்பமான உக்கிரமான அம்பாள் ஒரு தெய்வத்தையும்

அல்லது

108 ப்ரதோஷங்களுக்கு சரபேஸ்வரரையும்

அல்லது


108 அமாவாசைகளுக்கு சிவலிங்கம் ஒன்றையும் இவ்வாறு மந்திர ஜபம் , பூஜை செய்து அருளைப் பெறலாம்;


ஒவ்வொரு திதிக்கும் ஒரு திதி நித்யா தேவிகள் இருக்கின்றார்கள்;நீங்கள் பிறந்த திதிக்கு உரிய திதி நித்யா தேவியை அறிந்து,அந்த அன்னையின் அருளைப் பெறும் முறைகளை அறிந்து 108 திதிகளுக்கு விரதம் +பூஜை+மந்திர ஜபம்+அன்னதானம் செய்தால்,அவளின் அருளைப் பெறலாம்;வேண்டியது ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களில் உண்மையானவர்களை அடையாளம் கண்டு அவர்களோடு நட்பினைப் பெற்றிருக்க வேண்டும்;

முயன்று பாருங்கள்;வளமோடு வாழுங்கள்!!!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Wednesday, March 27, 2019

அனைத்துப் பிறவிகளின் கர்மவினைகளையும் தீர்க்கும் அண்ணாமலை கிரிவலம்!!!


இன்று நாம் மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து வருகிறோம்;
நமது முற்பிறவிகளைப் பற்றி நாம் அறிவதில்லை;அறிய முயன்றாலும்,10,000 பேர்களில் ஒருவருக்குத் தான் சரியான முற்பிறவி ரகசியங்கள் கிடைக்கின்றன;

இந்நிலையில் ஒரு சிவரகசியம் அடியேனுக்கு சித்தர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்டிருக்கின்றது;அதை அனுபவபூர்வமாக உணர்ந்தப் பின்னரே,தங்களிடம் பகிர்கிறோம்;அப்படிப் பகிர்ந்து கொள்வதை எமது கடமையாக எண்ணுகின்றோம்;

84,00,000 உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன;இவைகளில் பெரும்பாலானவைகளின் ஆயுள் ஒரு நாள் அல்லது சில வாரங்கள் தான்;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் பிறந்து,பிறந்து இறந்தப் பின்னரே இறுதியாக மனிதப் பிறப்பு நமக்குக் கிட்டியிருக்கின்றது;
மனிதப் பிறவியாக பிறந்தப் பின்னர்,சுமாராக 2,00,000 முறை திரும்பத் திரும்ப மனிதப் பிறப்பு எடுத்துள்ளோம்;
3000 மனிதப் பிறவிகளில் நமக்கு ஒரு சரியான குரு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கியப் பின்னரே 3001 வது பிறவியில் தகுந்த குரு நமக்கு அமைவார்;என்பது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியப் பெருமான் தெரிவிக்கும் சித்தரகசியம் ஆகும்;
ஒரு வருடத்தில் ஒரு நாள் வரும்;அந்த நாளில் குறிப்பிட்ட நேரம் வரும்;அந்த நேரம் குறைந்தது 4 மணி நேரம் வரை இருக்கும்;அதிக பட்சம் 24 மணி நேரம் வரை இருக்கும்;
இந்த நாளில்,இந்த நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,இதுவரை நாம் மனிதப் பிறவி எடுத்தது முதல் இன்று வரையிலும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு கர்மவினைகளை(பாவம்) சேர்த்தோமே? அத்தனையும் கரைந்து காணாமல் போய்விடும்;


2.4.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.51 முதல் நள்ளிரவு 1.36 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; நள்ளிரவு 1.37 முதல் 3.4.2019 புதன்கிழமை காலை 11.46 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் (கும்பம் & மீனம்) பிறந்தவர்களும்


16.4.2019 செவ்வாய்க்கிழமை இரவு 11.50 முதல் 17.4.2019 புதன் கிழமை இரவு 9.06 வரையிலான நேரத்தில் உத்திரம் (சிம்மராசி & கன்னி ராசி) பிறந்தவர்களும்

1.5.2019 புதன் கிழமை நள்ளிரவு(வியாழன் விடிகாலை) 2.41 முதல் 2.5.2019 வியாழக்கிழமை மதியம் 1.30 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில்(மீனம் ராசி) பிறந்தவர்களும்;

2.5.2019 வியாழக்கிழமை மதியம் 1.31 முதல் நள்ளிரவு 3.59 க்குள் இருக்கும் நேரத்தில் ரேவதி  நட்சத்திரத்தில்(மீனம் ராசி) பிறந்தவர்களும்

16.5.2019 வியாழக்கிழமை காலை 9.53 முதல் 17.5.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.16 வரை சித்திரை நட்சத்திரத்தில் (கன்னி ராசி & துலாம் ராசி  ) பிறந்தவர்களும்

17.5.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.17 முதல் காலை 6.03 க்குள் இருக்கும் நேரத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் (சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் செல்ல முடியுமா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்)

31.5.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.59 முதல் இரவு 12.10க்குள் மேஷ ராசி,அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

இரவு 12.11 முதல் 1.6.2019 சனிக்கிழமை அன்று மாலை 5.18 க்குள் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

14.6.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.41 முதல் 15.6.2019 சனிக்கிழமை காலை 11.13 வரையிலான நேரத்திற்குள் விசாகம் நட்சத்திரத்தில் (துலாம் ராசி & விருச்சிக ராசி) பிறந்தவர்களும்;காலை 11.14 முதல் மதியம் 3.37 க்குள்  அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்


30.6.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.53  முதல் காலை 9.14 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷ ராசி & ரிஷப ராசி) பிறந்தவர்களும்;

காலை 9.15 முதல் 1.7.2019 திங்கட்கிழமை அதிகாலை 4.11 வரை ரோகிணி நட்சத்திரத்தில் (ரிஷப ராசி)பிறந்தவர்களும் ;

13.7.2019 சனிக்கிழமை பின்னிரவு(ஞாயிறுவிடிகாலை) 2.35 முதல் 14.7.2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.32 க்குள் இருக்கும் நேரத்தில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; இரவு 7.33 முதல் பின்னிரவு (திங்கள் விடிகாலை) 2.27 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

29.7.2019 திங்கட்கிழமை மதியம் 2.42 முதல் மாலை 4.42 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் (ரிஷப ராசி & மிதுன ராசி) பிறந்தவர்களும், மாலை 4.43 முதல் 30.7.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 1.13 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

12.8.2019 திங்கட்கிழமை மாலை 2.24 முதல் 13.9.2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.13 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

13.8.2019  செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.14 முதல் மதியம் 3.14 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் (தனுசு ராசி & மகர ராசி) பிறந்தவர்களும்

27.8.2019 செவ்வாய்க்கிழமை இரவு 11.24 முதல் 28.8.2019 புதன் கிழமை இரவு 9.20க்குள் வரும் நேரத்தில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

11.9.2019 புதன் கிழமை அதிகாலை 4.39 முதல் மாலை 4.20 வரை திருவோணம் என்ற சிராவணம் என்ற ஓணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

மாலை 4.21 முதல் 12.9.2019 வியாழக்கிழமை காலை 6 மணி வரை அவிட்டம் நட்சத்திரத்தில் (மகரம் ராசி & கும்பம் ராசி) பிறந்தவர்களும்;

26.9.2019 வியாழக்கிழமை காலை 7.52 முதல் நள்ளிரவு 2.37 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

10.10.2019 வியாழக்கிழமை இரவு 9.16 முதல் 11.10.2019 வெள்ளிக்கிழமை விடிகாலை 4.14 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களூம்;

11.10.2019 வெள்ளிக்கிழமை விடிகாலை 4.15 முதல் இரவு 11.19 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் (கும்ப ராசி & மீன ராசி) பிறந்தவர்களும்;

25.10.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.38 முதல் 26.10.2019 சனிக்கிழமை காலை 7.21 வரை உத்திரம் நட்சத்திரத்தில் (சிம்ம ராசி & கன்னி ராசி) பிறந்தவர்களும்; காலை 7.21 முதல் மதியம் 2.18 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

9.11.2019 சனிக்கிழமை மதியம் 4.22 முதல் 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.18 வரை ரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர்களும்;

23.11.2019 சனிக்கிழமை பின்னிரவு (ஞாயிற்றுக்கிழமை விடிகாலை) 2.28 முதல் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.22 வரை சித்திரை நட்சத்திரத்தில் (கன்னி ராசி & துலாம் ராசி) பிறந்தவர்களும்; மதியம் 12.23 முதல் இரவு 12.28 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

9.12.2019 திங்கட்கிழமை காலை 9.45 முதல் 10.12.2019 செவ்வாய்க்கிழமை விடிகாலை 5.29 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; விடிகாலை 5.30 முதல் காலை 10.46 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷ ராசி & ரிஷப ராசி) பிறந்தவர்களும்;

23.12.2019 திங்கட்கிழமை மதியம் 1.46 முதல்  மாலை  6.04 வரை விசாகம் நட்சத்திரத்தில் (துலாம் ராசி & விருச்சிக ராசி) பிறந்தவர்களும்; மாலை 6.05 முதல் 24.12.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 12.23 வரையிலான நேரத்திற்குள் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

7.1.2020 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2.41 முதல் 8.1.2020 புதன் கிழமை மதியம் 2.50 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 2.51 முதல் நள்ளிரவு 2.40 வரை மிருக சீரிடம் நட்சத்திரத்தில் (ரிஷப ராசி & மிதுன ராசி) பிறந்தவர்களும்;

21.1.2020 செவ்வாய் நள்ளிரவு 2.46 முதல் 22.1.2020 புதன் கிழமை நள்ளிரவு 1.36 வரையிலான நேரத்திற்குள் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

6.2.2020 வியாழக்கிழமை  மாலை 5.24 முதல் இரவு 10.50 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;இரவு 10.51 முதல் 7.2.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.21 வரையிலான நேரத்திற்குள் புனர்பூசம் நட்சத்திரத்தில் (மிதுன ராசி & கடக ராசி) பிறந்தவர்களும்;

20.2.2020 வியாழக்கிழமை மாலை 5.38 முதல் 21.2.2020 வெள்ளிக்கிழமை காலை 10.14 வரையிலான நேரத்திற்குள் உத்ராடம் நட்சத்திரத்தில் (தனுசு ராசி & மகர ராசி) பிறந்தவர்களும்; காலை 10.15 முதல் மாலை 6.14 வரை ஓணம் என்ற சிராவணம் என்ற திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

8.3.2020 சனிக்கிழமை விடிகாலை 4.30  முதல் 9.3.2020 ஞாயிற்றுக்கிழமை விடிகாலை 3.56 வரையிலான நேரத்திற்குள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

21.3.2020 சனிக்கிழமை காலை 9.52 முதல் இரவு 9.04 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் (மகரம் ராசி & கும்பம் ராசி ) பிறந்தவர்களும்; இரவு 9.05 முதல் 22.3.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.23 வரையிலான நேரத்திற்குள் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

5.4.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.49 முதல் 6.4.2020 திங்கட்கிழமை காலை 9.49 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; காலை 9.50 முதல் மதியம் 1.33 வரையிலான நேரத்திற்குள் உத்திரம் நட்சத்திரத்தில் (சிம்மராசி & கன்னி ராசி) பிறந்தவர்களும்




கண்டிப்பாக அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;
இதில் குறிப்பிடப்படாத நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அடுத்த தமிழ் வருடப் பிறப்பு வரை காத்திருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்;


அண்ணாமலையாரின் அருளைப் பெற இதுவும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்! பயன்படுத்தி அருளோடும்,வளமோடும் வாழ்க!!!

ஓம் ரீங் அகத்தீசா! அகத்தீசா!!
ஓம் ரீங் அருணாச்சலா அருணாச்சலா!!!