Thursday, January 3, 2019

தீராத கடன் தீர




மிகுந்த கடனால் அவதிப்படுபவர்கள்,எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் வறுமையில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பவர்கள்,வியாபாரத்தில் லாபமே பார்க்க முடியாமல் வியாபாரத்தை கைவிடமுடியாமல் இடியாப்பச்சிக்கலில் மாட்டியுள்ளவர்கள் பட்டீஸ்வரம் சிவாலயம் வரவேண்டும்;


இங்கே வருகை தந்து காராம்பசுவின் பாலைக் கறந்து அதன் இளஞ்சூடு ஆறும் முன்பாகவே இங்கே இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;

இதை மாசி மகம் ( 19.2.2019 செவ்வாய் காலை 10.31 முதல் 20.2.2019 புதன் காலை 8.53 வரை மகம் நட்சத்திரம் இருக்கின்றது ) அன்று செய்ய வேண்டும்;

இந்த வருடம் வரும் மாசி மகம் முதல் ஒவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திர நாளில் இப்படி அபிஷேகம் என்று அடுத்த வருடம் வரும் மாசி மகம் வரை செய்து வர வேண்டும்;

தொடர்ந்து இப்படி மாதம் ஒரு முறை மகம் நாளன்று அபிஷேகம் செய்து வர படிப்படியாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வழிகள் கிட்டும்;
ஓம் சத்குரு இடியாப்பசித்த குரு நம ஸ்வாஹா

கர்மவினைகளை கரைக்கும் தேய்பிறை சிவராத்திரி கிரிவலம் 2019 டூ 2020!!!


உலகத்தின் மையப்பகுதியாக இருக்கும் அண்ணாமலையில் நாம் வாழ்ந்து வரும் காலத்தில் பவுர்ணமி கிரிவலம் தான் பிரபலமாக இருக்கின்றது;பலர் பவுர்ணமி அன்று மட்டும் தான் கிரிவலம் செல்ல வேண்டும் என்று நம்புகின்றார்கள்;இது முழுத் தவறு;மறு பிறவி இல்லாத முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இப்பிறவிக்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதும்.முக்தி உறுதியாக கிட்டும்;இது அருணாச்சலேஸ்வரர் மீது சத்தியமான உண்மை;


உலக வரலாற்றில். . . இல்லையில்லை ப்ரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக கிரிவலம் சென்றது நம் அனைவருக்கும் தாயாகிய அன்னை பார்வதி தேவி;நம் அன்னைக்கு துணையாக கிரிவலம் சென்றது நம் அனைவருக்கும் குருவாக இருப்பவரும்,தமிழ் மொழியை பூமி முழுவதும்(தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;) பரப்பியவரும்,சித்தர்களின் தலைவரும்,ரிஷிகளின் தலைவருமாகிய அகத்தியர் ஆவார்;


எனவே,ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரியன்றும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டியது நமது கடமை ஆகும்;அவ்வாறு செல்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் நீங்கத் துவங்கும்;நமது முன்னோர்களாகிய பித்ருக்களில் ஒருவர் அல்லது ஒரு சிலர் கிரிவலம் வருவர்;அவர்களை கிரிவலத்தில் சந்திக்கும் பாக்கியம் கிட்டும்;நாம் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு சித்தரின் வம்சாவழியைச் சேர்ந்தவரே! எனவே,நமது முன்னோராகிய சித்தர் தரிசனம் கண்டிப்பாக நமக்கு கிட்டும்;

அவரவர் பூர்வ புண்ணியத்தைப் பொறுத்து 12 வது முறையோ அல்லது 36 வது முறையோ கிரிவலம் செல்லும் போது கிட்டும்;மிகுந்த பூர்வ புண்ணியம் செய்தவர்களுக்கு அன்னை பார்வதி தேவியின் தரிசனமும்,நமதுகுரு  அகத்திய மகரிஷியின் தரிசனமும் கிட்டும்;

பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் குறைந்து போனதால்,அடுத்த ஒருவருடத்திற்கு தேய்பிறை சிவராத்திரி நேரத்தை இங்கே குறிப்பிடுகின்றோம்;தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் சிவராத்திரி திதி என்பதை மறக்காதீர்கள்;

விளம்பி & விகாரி வருடத்தின் தேய்பிறை சிவராத்திரி நாட்கள்:

4.1.2019 வெள்ளி விடிகாலை 4.29 முதல் 5.1.2019 சனி விடிகாலை 5.28 வரை

2.2.2019 சனி இரவு 10.31 முதல் 3.2.2019 ஞாயிறு இரவு 12.20 வரை

4.3.2019 திங்கள் மாலை 5.30 முதல் 5.3.2019 செவ்வாய் இரவு 7.34 வரை (மஹாசிவராத்திரி)

3.4.2019 புதன் காலை 11.46 முதல் 4.4.2019 வியாழன் மதியம் 1.28 வரை


3.5.2019 வெள்ளி

1.6.2019 சனி மாலை 5.18 முதல் 2.6.2019 ஞாயிறு மாலை 5.06 வரை

30.6.2019 ஞாயிறு பின்னிரவு(திங்கள் விடிகாலை) 4.11 முதல் 1.7.2019 திங்கள் பின்னிரவு(செவ்வாய் விடிகாலை) 3.05 வரை

30.7.2019 செவ்வாய் மதியம் 1.13 முதல் 31.7.2019 புதன் காலை 11.23 வரை

28.8.2019 புதன் இரவு 9.20 முதல் 29.8.2019 வியாழன் இரவு 7.05 வரை

27.9.2019 வெள்ளி

26.10.2019 சனி மதியம் 2.18 முதல் 27.10.2019 ஞாயிறு மதியம் 12.04 வரை

24.11.2019 ஞாயிறு இரவு 12.28 முதல் 25.11.2019 திங்கள் இரவு 10.44 வரை(இது தான் குபேர கிரிவல நாள்!)

24.12.2019 செவ்வாய் மதியம் 12.23 முதல் 25.12.2019 புதன் காலை 11.24 வரை

23.1.2020 வியாழன்

21.2.2020 வெள்ளி மாலை 6.14 முதல் 22.2.2020 சனி இரவு 7.19 வரை(மஹாசிவராத்திரி)

22.3.2020 ஞாயிறு காலை 11.23 முதல் 23.3.2020 திங்கள் மதியம் 1.13 வரை


சென்ற நூற்றாண்டு வரை பெரும்பாலான சிவபக்தர்கள்,அருணாச்சல சித்தர்கள் இந்த திதி ஆரம்பிக்கும் போது கிரிவலம் துவங்குவார்கள்;திதி முடியும் போதுதான் கிரிவலத்தை நிறைவு செய்வார்கள்;


400 ஆண்டுகளாகத் தான் தற்போதைய கிரிவலப்பாதையை நாம் பயன்படுத்தி வருகின்றோம்;அதற்கு முன்பாக கிரிவலப்பாதையின் நீளம் 50 கி.மீட்டராக இருந்தது;1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரிவலப்பாதையின் நீளம் 1000 கி மீட்டர்களாக இருந்தது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ





Tuesday, January 1, 2019

வெகுவிரைவாக பசுவதையைத் தடை செய்யுங்கள்=உச்சநீதி மன்றம் உத்தரவு!!!



உலகத்தின் பூஜையறையாகவும்,உலகின் வழிகாட்டியாகவும் இருந்த நாடுதான் நமது பாரத தேசம்! கி.பி.1750 உடன் முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை உலகின் ஒரே வல்லரசு நாடாகவும்,செல்வ வளம் மிக்க நாடாகவும் இருந்தது நமது பாரதம் மட்டும் தான்;

இதற்கு உரிய காரணங்கள் நான்கே நான்கு மட்டுமே! கோவில்,பசு,விவசாயம்,பெண் இனம் இந்த நான்கின் ஆன்மீகப் பின்னணி அறிந்த இந்துக்களாகிய நமது முன்னோர்கள் உயர்ந்த மதிப்புடன் பராமரித்துவந்தார்கள்;

பாரதம் என்ற தேசத்தில் மட்டுமே பசு,கோவில்,பெண்,விவசாயம் இந்த நான்கும் போற்றப்பட்டும்;பாதுகாக்கப்பட்டும் வந்தது;800 ஆண்டு கால இஸ்லாமியப் படையெடுப்பின் போது கூட இவைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பும்,ஆபத்தும் ஏற்படவில்லை;வெறும் 300 ஆண்டுகளாக நம்மை ஆள்கின்றேன் என்ற பெயரில் சுரண்டிய கிறிஸ்தவ ஆங்கிலேயன் காலத்தில் உண்டான ஆபத்துக்களும்,சிக்கல்களும் இன்று வரை 1.1.2019 தீர்க்கப்படவில்லை;

கோமாதா என்ற பசுவின் காயத்ரி மந்திரம்:

ஓம் மாதா பாலாயை ச வித்மஹே
மந்த்ர தேவதா தேஹாயை ச தீமஹி
தந்நோ ஸ்ரீ கோதேவி ப்ரசோதயாத்

எப்பேர்ப்பட்ட தெய்வீக அம்சங்களுடன் பசு என்ற விலங்கு இருந்தால்,அதற்கு என்று காயத்ரி மந்திரத்தை நமது முன்னோர்களாகிய ரிஷிகள் உருவாக்கியிருப்பார்கள்?!?

குருகுலக் கல்வியும்,திண்ணைப் பள்ளிக்கூடங்களும் பசுவின் பெருமைகளை போதித்துவந்தன;இவைகளை நிர்மூலமாக்கினான் கிறிஸ்தவ ஆங்கிலேயன்;அந்த இடத்திற்கு திமிர் பிடித்த மனிதர்களை உருவாக்கும் மெக்காலே கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தான்;1875 இல் கொண்டு வந்த இந்த முட்டாள்த்தனமான கல்வித்திட்டத்தை மாற்றி,நமது பாரம்பரியத்தை போதிக்கும் கல்வித்திட்டத்தை இன்றுவரை கொண்டு வர வேண்டும் என்ற அக்கறை ஒரு போதும் காங்கிரஸ் அரசுகளுக்கு இருந்தது இல்லை;

கோமாதாவின் பெருமைகளை மீண்டும் இந்துக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் முன்பு,அதை முழுமையாக அழித்துவிட்டு,அழித்ததன் அடையாளம் தெரியாமல் இருக்கவே ஆன்மீகப் பின்னணி இல்லாத செயற்கைப் பசுவாகிய ஜெர்ஸிப்பசுவை கிறிஸ்தவ ஆங்கிலேயன் உருவாக்கி,இந்து விவசாயிகளுக்கு இலவசமாகவே தானம் செய்தான்;கிறிஸ்தவ ஆங்கிலேயன் என்ற முகமூடி அணிந்து கொண்டு இதைச் செயல்படுத்தியது இலுமுனாட்டிகள் என்பதையும் நினைவில் கொள்ளவும்;


கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம்;பசுக்களின் பெருமைகளை பூமியில் பரப்பிட சித்தர்கள் பலர் கலியுகத்தின் ஆரம்பத்தில் நமது பாரத தேசம் முழுவதும் வாழ்ந்துவந்தார்கள்;அவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வாழ்நாளின் முடிவில் ஆன்மீக பூமியான தமிழ்நாட்டுக்கு வருகை தந்து முக்தியை சுலபமாகத் தரும் அண்ணாமலையில் வாழ்ந்தார்கள்;பசும்பால் சித்தர்,பசு மடத்துக் கோனார்,பால் சோறு சித்தர் என்ற புனை பெயர்களில் விண்ணுலகில் இருந்து பாரத நாட்டிற்கு வருகை தந்து கோமாதா என்ற நாட்டுப் பசுக்களின் பெருமைகளைப் பரப்பினார்கள்;1900 வரையிலும் கூட ஒருவன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருகின்றான் என்பதை வைத்து அவனை சமுதாயம் மதிப்பதில்லை;எத்தனைப் பசுக்களைப் பராமரிக்கின்றான் என்பதைக் கொண்டே ஒருவனை செல்வந்தனாக மதித்தார்கள்;


தெரியாமல் ஒரு பசுவை   ஒருவன் மிதித்துவிட்டாலே,மிதித்தவனது அடுத்த 100 பிறவிகளில் வறுமையால் வாடவேண்டும்;ஏனென்றால்,ஒரே ஒரு பசுவின் உடல் முழுவதும் 300 விதமான தெய்வீக சக்திகள் குடிகொண்டிருக்கின்றன;இதை இன்றைய நவீன விஞ்ஞானம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க 1000 ஆண்டுகள் ஆகும்;

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆன்மீக பூமியான பாரத நாடு தனது ஆத்ம பலத்தை இழக்க வேண்டும் என்பதற்காக 1947 வரை சுமார் 276 பசுவதைக் கூடங்களை கிறிஸ்தவ ஆங்கிலேயன் உருவாக்கினான்;அது இன்று 30,000 பசுவதைக் கூடங்களாக விஸ்வரூபம் எடுத்து ஒரு நாளுக்கு 1,00,000 கோமாதாக்களைக் கொடூரமான முறையில் (24 மணி நேரமும்) கொன்று கொண்டு இருக்கின்றது;இந்துக்களாகிய நாம் கோமாதவின் தெய்வீகப் பெருமைகளைச் சிறிதும் உணராமல் இருப்பதால் தான் இவைகள் இன்றும் 1.1.2019 கூட இயங்கி வருகின்றன;


இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு கோமாதா என்ற பசுப்பாதுகாப்பில் நாட்டம் உடையோர் சிலர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்;அகில பாரதிய கோசேவக் சங்கம்,அகிம்சா சேனா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இதில் முனைப்பு காட்டின;அகில பாரதிய கோசேவக் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான ராஜீவ் பாய் எப்படியாவது பசுவதையை நாடு முழுவதும் நிறுத்த வேண்டும் என்ற தாகத்துடன் சட்டரீதியான போராட்டத்தில் இறங்கினார்;

125 கோடி இந்தியர்கள் பாரத தேசத்தில் வாழ்ந்து வந்தாலும் கிறிஸ்தவ ஆங்கிலேயனின் மெக்காலே கல்வித் திட்டத்தினால் கோமாதாவின் பெருமைகளை அறிந்தவர்கள் 0.000001% அளவுக்கு சுருங்கிவிட்டார்கள்;இன்றைய கால கட்டத்தில் பாரத நாடு முழுவதும் வாழும் இந்துக்கள் மட்டுமா தினசரி வருமான ஏற்றத்தாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்? இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும்,சீக்கியர்களும்,பவுத்தர்களும், சமணர்களும் தான் சிரமப்பட்டுவருகின்றார்கள்!!!இதற்குக் காரணம் பசுவை தினமும் வதைத்துக் கொல்வதுதான் காரணம்....

இது மிகவும் முக்கியமான தேசிய பிரச்சினை என்பதால் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால் சரியாக இருக்காது;அரசியல் சாஸன அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று ராஜீவ் பாய் வற்புறுத்தினார்;மூன்று ஆண்டுகள் காலப் போராட்டத்திற்குப் பிறகு,உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதி தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது;கி.பி.2004 இல் துவங்கிய வாதம் கி.பி.2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை நீடித்தது;

கோமாதா என்ற பசுக்களைக் கொல்ல வேண்டும் என்று வாதிட்ட தரப்பினர் பொருளாதார ரீதியாக மிகுந்த வசதி படைத்தவர்கள்!!! அவர்கள் பிரபல வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தார்கள்;சோலி சாரப்ஜி (இவரது கட்டணம் ரூ.20,00,000/-);கபில்சிபில்(இவரது கட்டண ரூ.22,00,000/-)ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி(இவரது கட்டணம் ரூ.33,00,000/-)ஆகியோர் கசாப்புக் கடைக்காரர்கள் சார்பில் வாதிட்டார்கள்;

அதிக கட்டணம் வாங்கும் வழக்கறிஞரை அமர்த்த ராஜீவ் பாயிடம் பணம் இல்லை;எனவே,உங்களுக்காக நீதிமன்றமே வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து தரும் என்று தலைமை நீதிபதி கூறினார்;இதன் அடிப்படையில் வழக்கறிஞர் எம்.இ.எஸ்குரி அமர்த்தப்பட்டார்;

“கிழட்டுப் பசுவைப் பராமரிப்பது பொருளாதார ரீதியாக மிகுந்த சுமையை அளிக்கும்;மாறாக,பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை ஏற்றுமதி செய்தால் அன்னியச் செலாவணி ஈட்டலாம்;வறட்சி காரணமாக மகசூல் குறைந்துள்ளது;வைக்கோலோ அல்லது புல்லோ போதுமான அளவில் கிடைக்கவில்லை;எனவே,பட்டினியால் கால்நடைகள் சாவதைவிட அவற்றை(பெற்ற தாயைக் கொல்வது போல) வெட்டிக்கொன்று இறைச்சியை விற்பனை செய்தால் கணிசமான தொகையை ஈட்டலாம்;மக்களுக்கெ வாழ்க்கை நடத்த போதுமான இடவசதி இல்லை;கால்நடைகளை பராமரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்புடையது அல்ல;எனவே,செண்டிமென்ட் பார்க்காமல் பசுக்களைக் கொன்று குவிப்பதில் தவறில்லை;”என்று அபத்தமான வாதங்களை ராஜீவ் பாய் தனது ஆணித்தரமான வாதங்களால் தூள் தூளாக்கினார்;

ஒரு பசுவைக் கொன்றால் அதிகபட்சம் ரூ.10,000/-தான் கிடைக்கும்;ஆனால்,சாணம்,கோமியம் ஆகியவற்றை செம்மையான முறையில் பயன்படுத்தினால் பல கோடி ரூபாய்கள் வருமானம் ஈட்ட முடியும்;

பசு தினம் தோறும் 10 கிலோ சாணம் தருகின்றது; 3 கிலோ கோமியம் தருகின்றது; 1 கிலோ சாணத்தைப் பயன்படுத்தினால் 33 கிலோ இயற்கை உரம் தயாரிக்க முடியும்;இந்த ஆர்கானிக் உரத்திற்கு நல்ல வரவேற்பு நாடு முழுவதும் இருக்கின்றது;வருடம் தோறும் இதுபற்றிய விழிப்புணர்ச்சியால் இதன் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது;

1 கிலோ சாணத்தைப் பயன்படுத்தி எப்படி 33 கிலோ இயற்கை உரம் தயாரிக்க முடியும்? என்று ராஜீவ் பாயிடம் கேட்டார் நீதிபதி! 

இதை நிரூபித்துக் காட்டுகின்றேன் என்று ராஜீவ் பாய் கூறினார்;செயல் விளக்கத்தின் மூலம் ராஜீவ் பாய் நிரூபித்துக் காட்டியதைக் கண்டு நீதிபதி வியப்பில் மூழ்கிவிட்டார்;விஞ்ஞானிகளும் இதை ஆய்வு செய்து உறுதிபடுத்தினார்கள்;

ரசாயன உரங்களில் 2 அல்லது 3 நுண்ணூட்டச் சத்துக்கள் மட்டுமே உள்ளன;ஆனால்,சாணத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தில் மங்கனீஸ்,பாஸ்பேட்,கோபால்ட்,சிலிகான்,பொட்டாசியம்,
இரும்புச்சத்து,சுண்ணாம்புச்சத்து என 18 நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன;

எங்கள் கிராமத்துக்கு வாருங்கள்;எனது பெற்றோர் 15 ஆண்டுகளாக இந்த உரத்தைத் தயாரித்து வருகின்றார்கள்;இதை நேரில் காணுங்கள் என்று ராஜீவ் பாய் விடுத்த அழைப்பை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்;இயற்கை உரம் தயாரிப்பதன் மூலமாக கிராமீயப் பொருளாதாரம் மலர்ச்சி அடைகின்றது;பல மாநிலங்களில் இதன் மூலமாக சில நூறு கிராமங்கள் பொருளாதாரத் தன்னிறைவை எட்டியுள்ளன;

ஒரு கிலோ இயற்கை உரம்,சர்வதேச சந்தையில் ரூ.6/-க்கு விற்பனை செய்யப்படுகின்றது;365 நாட்களும் பசுவிடம் இருந்து சாணம் கிடைக்கின்றது;இதைக் கொண்டு தினம் தோறும் குறைந்த பட்சம் 300 கிலோ இயற்கை உரம் தயாரிக்க முடியும்;இந்தத்தயாரிப்பு மூலமாக வருடத்திற்குக் கிடைக்கும் தொகை ரூ.6,57,000/-இருபது ஆண்டுகள் கோமாதா என்ற பசுவின் மூலமாக கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.1,31,40,000/-இதனால்தான் சாணத்தில் செல்வத்தின் கடவுளாகிய திருமகள் வாசம் செய்வதாக இந்துக்கள் நம்புகின்றார்கள்;


இனி அடுத்தபடியாக கோமியத்தைப் பற்றி பார்ப்போம்;

ஒரு பசு தினம்தோறும் 2 அல்லது 2.5 லிட்டர் கோமியம் தருகின்றது;புற்றுநோய்,நீரழிவு,மூட்டுநோய்,சுவாசக் கோளாறு உள்ளிட்ட 50 நோய்களுக்கு கோமியத்தில் இருந்துதான் மருந்து தயாரிக்கின்றார்கள்;ஒரு லிட்டர் கோமியத்தின் விலை ரூ.500/-சர்வதேச சந்தையில் ஒரு லிட்டர் கோமியத்தின் விலை ரூ.1,500/-இதை திட்டமிட்டு சந்தைப்படுத்தினால்,தினம் தோறும் ரூ.3000/-கிடைக்கும்;ஒரு வருடத்திற்கு ரூ.10,00,000/-என்று கணக்கிட்டால்,இருபது ஆண்டுகளில் கோமியம் மூலமாக மட்டுமே ரூ.2,00,00,000/-கிடைக்கும்;சாணத்தில் இருந்து மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்ய முடியும்;

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எல் பி ஜியை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டுவதைப் போல சாணத்தில் இருந்து பெறப்படும் மீத்தேன் வாயுவை உபயோகித்து இருசக்கர வாகனங்களை மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களையும் இயக்க முடியும்;நீதிபதியின் அனுமதியுடன் அவரது கார் மீத்தேன் வாயுவைக் கொண்டு இயக்கப்பட்டது;இதனால்,புகை வெளிப்பாடு குறைந்துவிடும்;ஒலி மாசுவும் குறைந்துவிட்டது;பொருளாதார ரீதியாகவும் இது மிகுந்த ஆதாயம் அளிக்கக் கூடியது;

டீசலைப் பயன்படுத்தினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4 வரை ஆகின்றது;ஆனால்,மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தினால் 50 காசு மட்டுமே ஆகின்றது;மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தினால் பில்லியன் கணக்கில் பணத்தையும்,அன்னியச் செலாவணியையும் மிச்சப்படுத்த முடியும்;பாரத நாட்டில் 17 கோடி பசுக்களும்,மாடுகளும் உள்ளன;இவற்றின் மூலமாக பெறப்படும் சாணத்தில் இருந்து மீத்தேன் வாயுவை தயாரிப்பதை முடுக்கிவிட்டால்,அரபு நாடுகளிடம் எண்ணெய்க்காக கையேந்த வேண்டியதில்லை;அமெரிக்காவிடம் டாலருக்காக யாசகம் கேட்கவேண்டியதில்லை;பாரதத்தின் பொருளாதாரம் 1750 வரை இருந்தது போலவே மீண்டும் சுயச்சார்பு (தன்னிறைவு) பெற முடியும்;

இந்த வாதங்களை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டா உச்சநீதி மன்ற நீதிபதிகள்,கசாப்புக் கடைக்காரர்களை நோக்கி வேறு ஏதேனும் வாதத்தை முன் வைக்கின்றீர்களா? என்று கேட்டனர்;

அதற்கு அவர்கள், “மதரீதியாக பசுக்களையும்,மாடுகளையும் வெட்டலாம்;மத உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது” என்று கூறினார்கள்;

இதை முறியடிக்கவும் ராஜீவ்பாய் பல ஆதாரங்களைத் தொகுத்து அளித்தார்; “எல்லா முஸ்லீம்களுமே மாடுகளை வெட்ட வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது;முஸ்லீம்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே இன்னும் சொல்லப்போனால், குரேஷி என்ற உபபிரிவினர் மட்டுமே மாடுகளைக் கொல்வதில் தீவிரமாக உள்ளனர்;மாடுகளைக் கொல்வது இஸ்லாமுக்கு உடன்பாடானது என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை;திருக்குரானில் இதற்குச் சான்று கிடையாது;

பாரதத்தை ஆண்ட பல முஸ்லீம் மன்னர்கள் பசுவதைக்கு தடை விதித்து இருந்தார்கள்;முகலாய வம்சத்தின் முதல் மன்னரான பாபர்,பசுவதைக்குத் தடைவிதித்திருந்தார் என்பதற்கான சான்று அவரது சுயசரிதையான பாபர் நாமாவிலேயே உள்ளது;அவரது மகன் ஹூமாயூனும் இதையே பின்பற்றினார்;அடுத்தடுத்து வந்தவர்களும் இதே தடத்தில் பின்பற்றினார்கள்;இஸ்லாமிய வெறியர் என்று கூறப்படும் ஓளரங்கசீப் காலத்திலும் பசுவதைக்குத் தடை நீடித்தது;

தென்பாரதத்தை எடுத்துக் கொண்டால்,திப்புச்சுல்தானின் தந்தையாகிய ஹைதர் அலி மிகக் கடுமையான சட்டத்தை இயற்றியிருந்தார்;யாரேனும் பசுவைக் கொன்றால் அவரது தலையை வெட்டி எறிய வேண்டும் என்பதுதான் தண்டனை;திப்புச் சுல்தான் காலத்திலும் பசுவதைக்குத் தடை நீடித்தது;ஆனால்,தண்டனையை மென்மைப்படுத்திவிட்டார்;தலையை வெட்ட வேண்டாம்;கைகளை மட்டும் வெட்டினால் போதும் என்பது திப்புச் சுல்தான் காலத்து நிலவரம்;திருக்குரான்,ஹதீஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களைச் சமர்ப்பித்த ராஜீவ்பாய் எந்த இடத்திலும் பசுவதைக்கு ஆதரவான வாசகம் எதுவும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்;இன்னும் ஒரு படி மேலாக பேகம்பூர் முகமது சாகிப்,பசுவைக் கொன்றவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளதை ராஜீவ் பாய் சுட்டிக் காட்டியுள்ளார்;

இந்த எதிர்வாதங்களைக் கேட்டு கதிகலங்கிப் போன,கசாப்புக் கடைக்காரர்கள் எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டார்கள்;நீதிமன்றமும் இசைவு தந்தது.ஆனால்,அவர்களால் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை;


இதையடுத்து 26.10.2005 அன்று உச்சநீதி மன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது;இந்த 66 பக்க தீர்ப்பில் ‘கோமாதா என்ற பசு இனத்தை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை மட்டுமல்ல;மாநில அரசுகள்,யூனியன் பிரதேச அரசுகளும் நிறைவேற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது;

கோமாதா என்னும் பசுவை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களின் கடமை என்று தீர்ப்பளித்துள்ளது;

பொருளாதார ரீதியாகவும்

சுற்றுச்சூழல் ரீதியாகவும்

ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோமாதா என்ற பசுவை கண் எனக் காப்போம்;

பசுவளத்துறை என்ற தனி இலாகாவை மத்திய அரசும்,மாநில அரசுகளும்,யூனியன் பிரதேச அரசுகளும் உடனடியாக உருவாக்க வேண்டும்;

அவைகளை செம்மையான முறையில் இயங்க வைத்து,பொருளாதாரத்தை ஓங்க வைக்க வேண்டும் என்பது கோமாதா என்ற பசுவின் ஆர்வலர்களின் விருப்பமும்,கோரிக்கையும் ஆகும்;

ஆதாரம்:விஜயபாரதம்,பக்கங்கள்42 டூ 46;வெளியீடு 12.1.2018





ஜீவசமாதிகளுக்குள் இருக்கும் மஹான்களின் அருளைப் பெறும் நாட்கள்!!!



உலகம் முழுவதும் கர்ம பூமியாக இருந்தாலும்,அந்த கர்மவினைகளை முழுமையாகத் தீர்க்கக் கூடிய பரிகாரங்கள்,ஆலயங்கள்,அது பற்றிய விளக்கங்களைத் தரும் ஜோதிடர்கள்,ஆன்மீக பெருமக்கள் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டில் தான்;

இந்து வல்லரசு என்று அழைக்கப்படும் பாரத நாட்டின் அரசியல் தலைநகரமாக புது டெல்லி இருக்கின்றது;

பொருளாதாரத் தலைநகரமாக மும்பை இருக்கின்றது;

ஆன்மீகத் தலைநகரமாக சென்னையை அறிவிக்கும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது;



ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் தான் இன்றைய கலியுகத்தில் பித்தலாட்டமும்,ஏமாற்றுதலும் மிக அதிகமாகிவிட்டது;இப்படி ஏமாறுபவர்கள் இது நமது முன்வினையின் விளைவு என்று எண்ணுவதில்லை;மாறாக,தெய்வ நம்பிக்கையை இழந்துவிடுகின்றார்கள்;ஆன்மீக முயற்சிகளை கைவிட்டுவிடுகின்றார்கள்;

சீக்கிரம் தாம் செய்யும் பரிகாரங்கள்,கோவில் பயணங்கள்,அபிஷேகங்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்;தாம் விரும்பும் கால கட்டத்திற்குள் பலன் கிடைக்காத பட்சத்தில் ஆன்மீக முயற்சியில் தாம் ஏமாந்துவிட்டதாக நம்புகின்றார்கள்;

விரைவான பலன் ஆன்மீக முயற்சியில் வேண்டும் என்று விரும்புவோர் அண்ணாமலை கிரிவலம் மாதம் தோறும் (தேய்பிறை) சிவராத்திரியில் செல்ல வேண்டும்;

வீட்டில் உடனடியாக பலன் தரக் கூடிய தெய்வங்களான       ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் அல்லது ஸ்ரீ மஹாவராஹி அல்லது ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடுகள் அல்லது மந்திர ஜபத்தினை பின்பற்ற வேண்டும்;

கூடவே ஒரு வருடத்தில் குறிப்பிட்ட காலகட்டங்களில் உங்கள் ஊரில் இருக்கும் ஜீவசமாதிகளை வழிபட/ஜபிக்க/அன்னதானம் செய்ய வேண்டும்;

ஜோதிடப்படி,கோள்சாரப்படி,செவ்வாய்க்கிரகம் விருச்சிகராசியை 18 மாதங்களுக்கு ஒருமுறை கடக்கும்;அப்போது,செவ்வாய்க்கிரகம் கேட்டை நட்சத்திரத்தை கடக்கும் நாட்களில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஜீவசமாதிகளில் சித்திரான்னம் அல்லது ஏதாவது ஒரு சாதம் படையல் இட வேண்டும்;தாமரை மலர்களால் அல்லது மல்லிகை பூக்களால் அர்ச்சனையும்,அலங்காரமும் செய்ய வேண்டும்;ஏதாவது 30 நிமிடம் தியானம்  செய்ய வேண்டும்;அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபிக்க வேண்டும்;உடனடியான பலனைப்பெறலாம்;அசைவம்,மதுவைக் கைவிட்டவர்களுக்கு மட்டுமே பலன் கிட்டும் என்பதை மறக்காதீர்கள்;

அல்லது கேட்டை நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் கூடி வரும் நாட்களிலும் இப்படி வழிபட்டு மகான்கள்,சித்தர்களின் ஆசிகளை பெருமளவு பெற முடியும்;



26.3.2019 செவ்வாய்க்கிழமை காலை 11.48 முதல் 27.3.2019 புதன் விடிகாலை வரை;

23.4.2019 செவ்வாய்க்கிழமை;

18.2.2020 செவ்வாய்க்கிழமை காலை 8.44 வரை;

28.1.2020

4.2.2020


இவ்வாறு ஜீவசமாதிகள்,சித்தர் பீடங்கள்,மகான்கள் ஐக்கியமான இடங்களில் வழிபாடு செய்வதால்,நீண்ட காலக் கடன்கள் தீரும்;தீராத நோய்கள் குணமாகும்;புத்திர பாக்கியம் கிட்டும்;யாருக்கு என்ன ஏக்கமோ அந்த ஏக்கம் நியாயமான ஏக்கமாக இருந்தால் அது நிறைவேறும்;

அவ்வாறு நிறைவேறும் வரையிலும் இந்த நாட்கள் அனைத்திலும் ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் இடியாப்ப சித்த குரு நம ஸ்வாஹா


ஓம் அருணாச்சலாய நமஹ

கர்மவினைகளை கரைத்து சர்வ சுபிட்சம் தரும் துவாதசி அன்னதானம் 2019 டூ 2020!!!



நமது கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்கவே இங்கே,இந்த பூமியில் பிறவி எடுத்துள்ளோம்;ஆனாலும்,பரமேஸ்வரன் கருணை மிக்கவன்;திருந்த வேண்டும்;மனம் வருந்தவேண்டும் என்று தவியாய் தவிக்கும் உள்ளங்களுக்கு பரிகாரம்,வழிபாடு,ஜபம்,தானம்,பதிகம் பாடுதல்,வாசியோகம் போன்றவைகள் மூலமாக கர்மவினைகளை அனுபவிக்காமல் குறைத்து நிம்மதியாக வாழ வழிவகுத்துக் கொடுத்துள்ளான்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,காலத்தை வரையறுத்துத் தந்த பைரவ சித்தர் ஸ்ரீவாரதாரகர் சித்தருக்கு நன்றிகள் தெரிவித்துவிட்டு,துவாதசி திதியின் பெருமைகளை அறிந்து கொள்வோம்;இவர்தான் 12 ராசிகளையும்,27 நட்சத்திரங்களையும், 9 கிரகங்களையும் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை வரையறுத்துள்ளார்;

மஹா கால பைரவ உலகம் என்று ஒரு உலகம் இருக்கின்றது;இந்த உலகத்தில் வசித்துவரும் இவர் தான்,கால தேவனாகிய மஹா கால பைரவப் பெருமானின் அருளால் நமக்கு ஜோதிடத்தின் அடிப்படையான நட்சத்திரங்கள்,கிரகங்கள்,ராசிகளை பிரபஞ்ச வரலாற்றில் போதித்தார்;

இவர் வருடத்தின் சில குறிப்பிட்ட  அண்ணாமலை கிரிவலம் வருகின்றார்;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி நேரம் முழுவதும் அண்ணாமலை கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றார்; கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி நேரத்தில் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழாபுரம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரி ஆலயத்திற்குச் சென்று முறைப்படி பூஜைகள் செய்கின்றார்;எல்லா பைரவ சித்தர்களும் இம்முறைப்படி வழிபட்டு பைரவப் பெருமானின் அருட் கடாட்சத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்;

ஒவ்வொரு மாதமும் இரண்டு துவாதசி திதிகள் வருகின்றன;இந்துக் காலக் கணக்கின்படி,ஒரு சூரிய உதயத்தில் இருந்து அடுத்த சூரிய உதயம் வரை இருக்கும் கால அளவுதான் ஒரு நாள் ஆகும்;பெரும்பாலான துவாதசி திதிகள் ஒரு நாள் மதியம் துவங்கி மறு நாள் மதியம் அல்லது மாலை வரை வருவதால் அந்த திதி நாட்களை இங்கே குறிப்பிடவில்லை;முழுத் துவாதசி திதி வரும் நாட்களை மட்டுமே பஞ்சாங்கத்தின் துணை கொண்டு அண்ணாமலையாரின் ஆசிகளோடு இங்கே வெளியிடுகின்றோம்;


துவாதசி திதி அன்று அண்ணாமலையில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாகவும்;மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் அன்னதானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வேளையும் குறைந்தது 18 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அதன் பிறகு,இரவில் கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலத்தின் போது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர்,அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;


இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும்;கிரிவலப் பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்களும்,அனைத்து தெய்வங்களும் உறையும் பசுக்களும் இருக்கின்றன;அக்னிலிங்கம் வரை பசுக்கள் அதிகமாக தென்படுகின்றன;எனவே,கிரிவலம் புறப்படும் போது போதுமான அளவுக்கு அகத்திக்கீரைகள் மற்றும் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்;கிரிவலப்பாதையில் தென்படும் பசுக்களுக்கு அகத்திக்கீரைகளையும்,வாழைப்பழங்களையும் தானமாக தர வேண்டும்;நிறைய பிஸ்கட்கள்,பொறைகளை வாங்கிக் கொண்டு செல்வதால் கிரிவலப் பாதை தூரமான 14 கி மீ அளவுக்கு வழியில் தென்படும் பைரவ வாகனத்திற்கு தானம் செய்ய வேண்டும்;இதன் மூலமாக ஒரே சமயத்தில் பைரவரின் அருளும்,அருணாச்சலேஸ்வரின் ஆசிகளும் நமக்கு கிட்டும்;

பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;கிரிவலம் நிறைவு செய்யும் பூத நாராயணப் பெருமாள் சன்னதியின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசனம் செய்ய வேண்டும்;இந்த தரிசனத்தினால் நீண்டகாலமாக இருந்து வந்த மன உளைச்சல்கள் அடியோடு விலகிவிடும்;

அதன் பிறகு,ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்;மூலஸ்தானத்தை நெருங்கும் போது,(நடராஜர் சன்னதியை பார்க்கும் போது) இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும்;வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது;


அவரிடம் மனப்பூர்வமாக தாம் முந்தைய தினத்தற்கு துவாதசி அன்னதானம் செய்துவிட்டோம்;அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும்;அதன் பிறகே,மீண்டும் வரிசையில் இணைந்து அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகு,உண்ணாமுலையம்மன் என்ற அபிதகுஜலாம்பாளைத் தரிசிக்க வேண்டும்;பிறகு,நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும்;இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;அதன் பிறகு,கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு,மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும்;இத்துடன் அண்ணாமலை துவாதசி திதி அன்னதானமும்,கிரிவலமும் நிறைவடைகின்றது; இந்த வழிபாட்டுமுறையை நமக்கு போதித்த சத்குரு ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுக்கு நன்றிகளை இக்கணத்தில் தெரிவிப்பது நமது கடமை ஆகும்;இந்த சத்குருவானவர் சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய ஸ்ரீஅகத்தியர் அவர்களின் வம்சாவழியில் உதித்த நமது சத்குரு ஆவார்;


நாம் பிறந்த நாள் முதல் நமது வாழ்நாளின் இறுதி நாள் வரை காசியில் ஒரு கோடி மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ,அதை விடவும் அதிகமான புண்ணியம் முழுத் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கின்றது;

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்;


சிலருக்கு ராகுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;
இன்னும் சிலருக்கு கேதுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;இன்னும் சிலருக்கு ராகுவுடன் செவ்வாயும்,கேதுவுடன் சனியும் அல்லது ராகுவுடன் சனியும்,கேதுவுடன் செவ்வாயும் இணைந்திருக்கும்;இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இவர்களது முன்னோர்கள் வறட்டு கவுரவத்தினாலோ அல்லது சொத்துக்காகவோ அல்லது திமிரான செயல்பாடுகளாலோ பல ஆண்டுகளாக சண்டையிட்டுள்ளார்கள்;வீட்டுப் பெண்கள் இந்த சண்டை முடிவுக்கு வராதா? என்று பல நாட்களாக கதறி அழுதுள்ளார்கள் என்று அர்த்தம்;

இதைச் சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்;இரவில் அல்லது மதியம் கிரிவலம் கண்டிப்பாக செல்ல வேண்டும்;

இதைச் செய்ய விரும்பி,ஆனால் வருமானம் ஒத்துழைக்காதவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை மாதம் தோறும் குலதெய்வம் கோவிலுக்கு படையலிட அரிசி வாங்கித் தரவேண்டும்;


 விளம்பி & விகாரி வருடத்திற்கான முழுத் துவாதசி திதி நாட்கள்;



2.1.2019 புதன் 

1.2.2019 வெள்ளி

16.2.2019 சனி

16.4.2019 செவ்வாய்


1.5.2019 புதன்

29.6.2019 சனி

13.7.2019 சனி

27.8.2019 செவ்வாய்

10.9.2019 செவ்வாய்

10.10.2019 வியாழன்

23.11.2019 சனி

7.1.2020 சனி

21.1.2020 செவ்வாய்

7.3.2020 வெள்ளி



மேலே குறிப்பிட்டிருக்கும் கிரக அமைப்புகளில் பிறந்தவர்கள் மட்டும் தான் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;

முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இந்த நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்;தமது மகன்,மகள் மற்றும் அடுத்த 7 தலைமுறையினர் சீரும் சிறப்புமாகவும்,நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;



தமது சீவனுக்குள் இருக்கும் சிவனை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற தவிப்பில் வாழ்ந்து வருபவர்களும் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;

ஓம் அகத்தீசாய நமஹ


ஓம் அருணாச்சலாய நமஹ



உங்கள் கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம் நாட்கள் 2019 டூ 2020



உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே!

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;


அருணாச்சல குரு  என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை அருணாச்சல குருவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;


இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;


மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;


சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில் குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;அவர்கள் ஜோதிட ஆலோசனை பெற எமது வாட்ஸ் அப்:9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்;(30 வருடமாக ஜோதிடம் பார்ப்பவர்)


 விளம்பி வருட மைத்ர முகூர்த்தங்கள்;


12.1.18 வெள்ளி நள்ளிரவு 2.08 முதல் 4.08

25.1.18 வியாழன் காலை 11.20 முதல் மதியம் 1.20

8.2.18 வியாழன் இரவு 12.20 முதல் 2.20

20.2.18 செவ்வாய் காலை 9.24 முதல் 11.24

8.3.18 வியாழன் இரவு 10.28 முதல் 12.28

20.3.18 செவ்வாய் காலை 8.20 முதல் 10.20

4.4.18 புதன் இரவு 8.40 முதல் 10.40

15.4.2018 ஞாயிறு காலை 6.06 முதல் 8.06 வரை;

1.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.58 முதல் இரவு 8.58 வரை

14.5.2018 திங்கட்கிழமை அதிகாலை 3.54 முதல் 5.54 வரை(கடல் வாணிகம் மற்றும் ஏற்றுமதி செய்பவர்களுக்காகவும்,எப்போதும் பிஸியாக இருந்து தமது சொந்தத்தொழிலை நேசிப்பவர்களுக்காகவும் இந்த நேரம் கைகொடுக்கும்)



3.1.2019 வியாழன் அதிகாலை 5.12 முதல் காலை 7.12 வரை;

14.1.2019 திங்கள் மதியம் 12.30 முதல் 2.30 வரை;


2.2.2019 சனி காலை & இரவு 7.19 முதல் 9.19 வரை;
மதியம் & நள்ளிரவு 1.19 முதல் 3.19 வரை;

11.2.2019 திங்கள் காலை 10.35 முதல் மதியம் 12.35 வரை;

26.2.2019 செவ்வாய் இரவு 11.38 முதல் நள்ளிரவு 1.38 வரை;

10.3.2019 ஞாயிறு காலை 8.49 முதல் 10.49 வரை;

25.3.2019 திங்கள் இரவு 10.13 முதல் 12.13 வரை;

7.4.2019 ஞாயிறு காலை 6.43 முதல் 8.43 வரை;

விகாரி வருடத்தின் மைத்ர முகூர்த்த நாட்கள்:

21.4.2019 ஞாயிறு இரவு 8.28 முதல் 10.28 வரை;

4.5.2019 சனி காலை 6.48 முதல் 8.48 வரை;

19.5.2019 ஞாயிறு மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;

31.5.2019 வெள்ளி காலை 5.04 முதல் 7.04 வரை;

15.6.2019 சனி மாலை 4.49 முதல் 6.49 வரை;

13.7.2019 சனி மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;

25.7.2019 வியாழன் இரவு 12.30 முதல் நள்ளிரவு 2.30 வரை;

9.8.2019 வெள்ளி மதியம் 12.40 முதல் 2.40 வரை;

20.8.2019 செவ்வாய் இரவு 10.12 முதல் 12.12 வரை;

21.8.2019 புதன் இரவு 10.16 முதல் 10.45 வரை;(வெறும் 29 நிமிடங்கள் மட்டுமே)

5.9.2019 வியாழன் காலை 10.48 முதல் 12.48 வரை;

17.9.2019 செவ்வாய் இரவு 8.04 முதல் 10.04 வரை;

3.10.2019 வியாழன் காலை 9 முதல் 11 வரை;

14.10.2019 திங்கள் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;

30.10.2019 புதன் காலை 8.48 முதல் 10.48 வரை;

9.11.2019 சனி காலை 6.04 முதல் 6.36 வரை;

             மாலை 4.36 முதல் 6.36 வரை;
   
             காலை & இரவு 10.36 முதல் 12.36 வரை;

11.11.2019 திங்கள் மாலை 4.28 முதல் 6.28 வரை;

27.11.2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை;

8.12.2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை;

24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை;

4.1.2020 சனி மதியம் 1.10 முதல் 3.10 வரை;

1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை;

16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை;

28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை;

8.3.2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53 வரை;
            மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை;

14.3.2020 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;

21.3.2020 சனி காலை & இரவு 8.39 முதல் 10.39 வரை;
             மதியம் & நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை;

26.3.2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை;

27.3.2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை;

11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை; 





இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;

குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;

 ஓம் அகத்தீசாய நம;

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;



Tuesday, December 25, 2018

ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏன் ஜோதிட ஆலோசனை தேவை?




நம் கர்மவினைகளைத் தீர்க்கும் சக்தி (கலிகாலத்தில் மட்டும்) அன்னதானத்துக்கு உண்டு; அன்னதானத்தை எப்போதும்,எங்கேயும் செய்யலாம் என்ற பொதுவிதி இருந்தாலும்,நாம் குறைந்த காலத்தில் அதிகமான நற்பலன்களை அடையவே விரும்புகிறோம்;இதற்கு அருணாச்சல ஸ்தல புராணம் வழிகாட்டுகிறது.


நமது ஊரில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம்பேர்கள் வீதம் ஓராண்டுக்கு தினமும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ அதைவிட அதிகமான புண்ணியம்,காசியில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;

நாம் காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்கள் வீதம் ஒரு வருடம் முழுவதும் தினமும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விடவும் அதிகபுண்ணியம் நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில்  இருக்கும் திரு அண்ணாமலை(திருவண்ணாமலை)யில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நபருக்கு மூன்று வேளைகள் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

அதுவும்,துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் எப்பேர்ப்பட்ட புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?

சுமார் இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த உண்மை இது:நாம்  பிறந்தது முதல் இறக்கும் நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் ஒரு கோடி பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விடவும் அதிகப் புண்ணியம் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் ஒரே ஒருவருக்கு காலை,மதியம்,மாலை என்று மூன்று வேளைகளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

அது சரி! இந்த உண்மையைக் கண்டுபிடிக்க எதற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின?


துவாதசி திதி வரும் நாட்களின்  பட்டியலை ஒரே நாளில் பஞ்சாங்கத்தின் மூலமாக கண்டுபிடித்துவிடலாம்;ஒரு தமிழ் மாதத்தில்  இரண்டு முறை துவாதசி திதி வரும்;வளர்பிறை துவாதசி,தேய்பிறை துவாதசி.எனவே,ஒரு வருடத்துக்கு 24 துவாதசி திதிக்கள் வருகின்றன.

அடுத்து இவைகளில் ஒரு முழுநாளில் துவாதசி திதி என்பது வெறும் 12 முதல் 18 நாட்களே வருகின்றன;ஏன் அப்படி? இந்து தர்ம காலக் கணக்குப்படி, ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான கால கட்டமே ஒரு முழு நாள் ஆகும்.நாம் பின்பற்றும் காலண்டரும்,கணக்கும் கிறுஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டது;நள்ளிரவு மணி 12 ஆனதும் அடுத்த நாள் துவங்குவதாக மேல்நாடுகள் பின்பற்றுகின்றன;இது முழுத் தவறு.

அடுத்தபடியாக எப்போது துவாதசி திதி அன்னதானம் செய்வது?


காலையில் ஆறு மணி முதல் எட்டு மணிக்குள்ளும்;மதியம் பனிரெண்டு மணி முதல் இரண்டு மணிக்குள்ளும்;இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணிக்குள்ளும் அன்னதானம் செய்வது சிறப்பு.இதை உணர்ந்து கொள்ள சுமார் ஏழு முதல் ஒன்பது தடவை அண்ணாமலைக்குச் செல்ல வேண்டியிருந்தது;நான் ஒன்றும் செல்வ வளம் மிக்கவன் அல்ல;எனது சம்பளத்திலும்,வருமானத்திலும் சேமித்தேன்;சேமித்தப் பின்பு, துவாதசி வரும் நாளில் விடுமுறை எடுத்து,எதற்காக அண்ணாமலைக்குச் செல்கிறேன்? என்பதை எவரிடமும் சொல்லாமலும்,பயணிப்பதையே ரகசியமாக வைத்துக்கொண்டும் புறப்படுவது வழக்கம்.(காரணம்,கண் திருஷ்டியால் சில முறை அண்ணாமலைப்பயணம் ரத்தாகியிருக்கிறது).

 அண்ணாமலைக்கு  எனது ஊரிலிருந்து 400 கி.மீ.தூரம் பயணித்து,இரண்டு இரவுகளும்,ஒரு பகலும் அண்ணாமலையில் தங்கியிருந்து அன்னதானம் செய்து கண்டறிந்த உண்மை இது.சும்மா இல்லை;இந்த ஆராய்ச்சி செய்யும் போதெல்லாம் பஞ்சாங்கமும்,அடிப்படை ஜோதிட அறிவும்,ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனின் அருளாசியும் மட்டுமே துணையாக இருந்தன;

அண்ணாமலை ஸ்தல புராணத்தில் " துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால்,காசியில் நம் வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்த புண்ணியத்தை விட அதிக புண்ணியமும்,மறுபிறவியில்லாத முக்தியும் கிடைக்கும்" என்ற ஒருவரியே கை.வீரமுனியாகிய எம்மை இந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்யத் தூண்டியது;

இந்த ஆராய்ச்சியின் முடிவை மஹாவில்வம் வலைப்பூவில் விரிவாக சென்ற வருடங்களில் ஏதோ ஒரு பதிவில் எழுதியிருக்கிறோம்.ஆனால்,இந்த ஆன்மீகமும் ஜோதிடமும் கலந்த ஆராய்ச்சி செய்யும் போது மறுபிறவியில்லாத முக்தி கிடைக்குதோ இல்லையோ,வாழ்க்கையில் இருந்து வந்த அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது;ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த பலன்களைத் தொடர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் துவாதசி திதி வரும் நாட்களின் பட்டியலை மஹாவில்வம் வலைப்பூவில் வெளியிட்டு வருகிறோம்;கூடவே அதற்கான விளக்கத்தையும்!


ஆரம்பத்தில் இன்று மதியம் துவங்கி நாளை மதியம் வரை இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒருவருக்கு இன்று மதியமும்,இரவும் மட்டும் அன்னதானம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பியதுண்டு;ஊருக்குத்  திரும்பிய சில நாட்கள் / வாரங்களில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை;

அடுத்தகட்டமாக,இன்று மதியம் துவங்கி நாளை மதியம் வரை இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;இன்று மதியம்,இரவு;நாளை காலை என்று மூன்று வேளைகளுக்கும் ஒரு துறவி வீதம் அன்னதானம் செய்துவிட்டு  ஊருக்குப்புறப்பட்டோம்;பலன்கள் கிடைக்கவில்லை;



மூன்றாவதாக ஒரு நாள் பகல் முழுவதும் துவாதசி திதி இருக்கும் நாளைத் தேர்ந்தெடுத்து அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;மூன்று வேளையும் தலா 18 பேர்களுக்கு அன்னதானம் செய்தோம்;காலையில் 18 சாதுக்கள்,மதியம் 18 சாதுக்கள்;இரவு 18 சாதுக்கள் என்று அன்னதானம் செய்துவிட்டு,இரவில் கிரிவலம் சென்றுவிட்டு,ஊருக்குச் சென்றோம்.மறு நாளே சில பலன்களை உணர முடிந்தது.


நான்காவதாக மிகப் பெரிய அளவில் திட்டமிட்டோம்;சுமார் நூறுபேர்களுக்குத் தேவையான பணத்தை சம்பளத்திலும்,ஜோதிட தட்சிணைகளிலும் சேமித்தோம்;முழு துவாதசி திதி வரும் நாளுக்கு முதல் நாள் இரவே இங்கு வந்தோம்;மறு நாள் காலையிலும் இரவிலும் கிழக்குக் கோபுர வாசலில் சுமார் 27 பேர்களுக்கு(காலையில் ஒன்பது சாதுக்கள்,மதியம் ஒன்பது சாதுக்கள், இரவில் ஒன்பது சாதுக்கள்) அன்னதானம் செய்துவிட்டோம்;காலை ஒன்பது மணிக்கே நூறு பேர்களுக்கு உணவகத்தில் ஆர்டர் கொடுத்தோம்;உணவகங்களில் ஆர்டர் கொடுப்பது,டோக்கன் வாங்கிக் கொண்டு அந்த டோக்கன்களை சாதுக்களுக்கு விநியோகம் செய்வது அண்ணாமலையில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்றன என்பது ஆர்டர் கொடுக்கும் போது புரிந்து கொள்ள முடிந்தது;சரியாக மதியம் பனிரெண்டு மணியளவில் ஒரு டீசல் ஆட்டோவைப் பிடித்து,அதில் நூறு பேர்களுக்குரிய உணவுப் பொட்டலங்களை நிரப்பினோம்;கிரிவலப் பாதை முழுவதும் அன்னதானம் செய்து விட வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டோம்;அக்னி லிங்கத்தின் அருகிலேயே அனைத்து உணவுப்பொட்டலங்களையும் தானமாகக்  கொடுத்துவிட்டோம்.அப்போதுதான் ஒரு உண்மை உறைத்தது; அக்னி லிங்கத்தின் அருகில் ஏராளமான அன்னதான மடங்களும்,ஆஸ்ரமங்களும் இருக்கின்றன;எனவே,பெரும்பாலான சாதுக்கள் அக்னி லிங்கத்தின் அருகிலேயே முகாமிட்டிருக்கிறார்கள் என்பது!!!



நாம் ஒரே ஒரு துவாதசி திதியைத் தேர்ந்தெடுத்து,அண்ணாமலைக்கு வரத் திட்டமிடுகிறோம்;ஜோதிட அறிவினாலும்,அருணாச்சல ஸ்தல புராணத்தின் வழிகாட்டுதலாலும் அண்ணாமலைக்கு வருகை தந்து அன்னதானம் செய்கிறோம்;ஆனால்,ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகளும் அக்னி லிங்கத்தின் அருகில் இருக்கும் இந்த ஆஸ்ரமங்கள் அன்னதானத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றன;என்று எண்ணும்போது பொறாமை வந்தது;சில நாட்களிலேயே அந்த பொறாமையும் காணாமல் போனது; 


ஏனெனில்,குடும்பஸ்தராகிய நாம் எவ்வளவோ வேலைகளுக்கு நடுவில்,எத்தனையோ சிரமங்களுக்கும் மத்தியில் விடாப்பிடியாக நமது சொந்தப் பணத்தினை சேமித்து வைத்து,இங்கே வந்து அன்னதானம் செய்வதன் மூலமாக நாம்,நமது குழந்தைகள்,நமது பேரக் குழந்தைகள்,நமது பெற்றோர்கள்,நமது தாத்தா பாட்டிகள் என நமது பரம்பரைக்கே புண்ணியத்தைச் சேர்க்கிறோம் என்று நினைக்கையில் பொறாமை கரைந்து போனது;

ஐந்தாவதாக முழுமையாகவும்,முறையாகவும் திட்டமிட்டு இன்னொரு துவாதசி திதிக்கு அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;எம்மோடு நான்கு (ஜோதிட)வாடிக்கையாளர்கள் அப்போது வந்தார்கள்;காலையிலும்,மாலையிலும் கிழக்குக்கோபுர வாசலில் அன்னதானம் செய்தோம்;மதிய நேரத்தில் வழக்கம் போல ஒரு டீசல் ஆட்டோவைப் பிடித்து சுமார் 120 பேர்களுக்கான உணவுப்பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கிரிவலம் புறப்பட்டோம்;மன்னிக்கவும்,ஆட்டோவில் அன்னதான வலம் செய்யப் புறப்பட்டோம்;அக்னி லிங்கத்தைக் கடந்ததும்,அரசு கலைக்கல்லூரி இருக்கிறது;

அதற்கு கொஞ்சம் முன்பாகவே நிறுத்திக் கொண்டு எண்ணி ஒன்பதே ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்தோம்;பிறகு,ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் தலா ஒன்பது  பேர்களுக்கு அன்னதானம் செய்ய முடிந்தது;குபேர லிங்கத்திலும்,ஈசான லிங்கத்திலும் சுமார் அரை மணி நேரம் வரை காத்திருந்தோம்;எங்கள் ஏக்கம் அண்ணாமலையாருக்குத் தெரிந்தது போலும்!

 சில சாதுக்களை அரை மணி நேரம் கழித்தே தரிசிக்க முடிந்தது;இந்த பயணத்து முதல் நாள் கோயம்பத்தூருக்கு அருகில் இருந்து ஒரு  வாசகர் நீண்ட நேரம் பேசினார்;பேச்சுவாக்கில் ஈசான லிங்கத்தின் அருகில் சுமார் பதினாறு சித்தர்களின் ஜீவசமாதிகள்  இருப்பதாகவும்,அந்த பதினாறு பேர்களில் ஈராறு பேர்கள் பெண் சித்தர்கள் என்பதையும் தெரிவித்தார்;அங்கே அன்னதானம் செய்வது மிகவும் கடினம்.ஏனெனில்,எப்போதாவதுதான் நம்மால் அன்னதானம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.



ஐந்தாவதாக அண்ணாமலையில் துவாதசி திதியன்று அன்னதானம் செய்துவிட்டு,கிரிவலம் அன்று இரவு சென்றோம்;இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்;கிரிவலம் முடித்தப்பின்னரும்,அன்னதானம் செய்யலாம்;அன்னதானம் செய்தப் பின்னரும் கிரிவலம் செல்லலாம்;எந்தக்கட்டுப்பாடும்,விதிமுறைகளும் கிடையாது;துவாதசி திதி இருபத்து நான்கு மணி நேரம் இருக்கும்;அந்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் ஒரு முழு நாளில் மூன்று பொழுதுகள்(காலை,மதியம்,இரவு) வரும் விதமாக அமைய வேண்டும்;அவ்வளவு தான்.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவெனில்,அண்ணாமலையில் அன்னதானம் செய்வதை ஒரு பழக்கமாகவே தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கிறார்கள்;அதனால்,அன்னதானம் செய்வதற்காகவே ரூபாய் ஐந்துக்கும்,பத்துக்கும் உண்டக்கட்டிச் சாதமும் இங்கே கிடைக்கிறது;இதை பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதில்லை;எனவே,மனதார சிறந்த உணவையே அன்னதானமாகச் செய்ய வேண்டும்.



ஐந்தாவதாக அண்ணாமலையில் துவாதசி திதி அன்னதானம் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய சில வாரங்களில்,  சுமாராக ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த குடும்பப் பிரச்னை முடிவுக்கு வந்தது;

   மாதம் ரூ.இரண்டாயிரம் வருமானம் வந்தது;  துவாதசி திதி அன்னதானத்தை அண்ணாமலையில் முறையாகச் செய்தப் பிறகு, இப்போது வாரம் ஆயிரம் ரூபாய் வருமானம் வரத் துவங்கியது;நான் கடன் வாங்கியவர்களின் பட்டியல் ஒரு கட்டுக்குள் வரத் துவங்கியது;அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான் கடன்களை முழுமையாக அடைத்துவிட்டேன்;எனது நீண்டகால மன உளைச்சல்கள் காணாமல் போயிருந்தன;








நாம் வாழும் காலமோ கலிகாலம்;பணம் அல்லது அதிகாரம் அல்லது காமம் அல்லது அகங்காரம் இவைகளில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளே நம் ஒவ்வொருவரையும் இயக்கி வருகின்றன.இந்த இயக்கத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு,ஆன்மீகமயமான பாதுகாப்புடன் முடிந்தவரையிலும் நியாயமாக சம்பாதிக்கவே இந்த ஆன்மீக ஆராய்ச்சிக் கட்டுரையை தங்களுக்கு வழங்குகிறேன்.