Monday, December 24, 2018

அன்னை மஹாவராகியின் அருளைப் பெற

1970 ஆம் ஆண்டு வரையிலும் அந்த அன்னையார் தினமும் ஒன்பது மணி நேரம் ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்ற ஜபத்தை ஜபித்து வந்துள்ளார்கள்;

அப்படி ஜபிக்கும் காலம் வரை மட்டும் அல்ல;வாழ்நாள் முழுவதும் ஜீவகாருண்யம் என்ற சைவ உணவுப் பழக்கத்தில் வாழ்ந்து வந்திருந்தார்கள்;

                                                   
     1970 ஆம் ஆண்டில் அந்த         அன்னையின் 58 ஆம் வயதில் சிவப்பதம் அடைந்தார்கள்;அவர் சிவப்பதம் அடையும் போது,அவர் ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்று ஜபித்த ஜப எண்ணிக்கை சுமாராக 12,00,00,000 ஐத் தொட்டிருந்தது;

அதன் விளைவாக அவரது மகளுக்கு நாடி ஜோதிட ஓலைச்சுவடி ஒன்று கிடைத்தது;அதைக் கொண்டு அந்த அன்னையின் மகள் 1965 முதல் 1985 வரை நாடி ஜோதிட ஓலைச்சுவடி பல ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பார்த்து புகழ் பெற்றிருக்கிறார்;



இதற்கு மேல் இதைப் பற்றி விரிவாக எழுத எமக்கு அனுமதிக்கவில்லை;எமது ஞான குருவின் அனுமதி இவ்வளவுதான் கிடைத்தது;

ஒரு மாதம் வரை வருமானத்தை அதிகரிக்கும் ஒரு நாள் சொர்ண பைரவ மந்திர ஜபம்!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,    மார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 29.12.2018 சனிக்கிழமை

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

சனிக்கிழமை குளிகை காலம் காலை 6 முதல் 7.30 மணி வரை இருக்கின்றது.

 சனிக்கிழமை   இராகு காலம் காலை 9 முதல் 10.30 மணி வரை அமைந்திருக்கின்றது.



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 28.1.2019 திங்கட்கிழமை

கலியுகத்தை ஆட்சி செய்யும் ஸம்ஹார பைரவர்!!!






உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என அனைத்தையும் ஈசனின் சார்பாக நிர்வாகித்து வருபவர் ஈசனின் அவதாரமான கால பைரவர் ஆவார்;இவரது பெயரில் ஒரு    உலகம்  இருக்கின்றது;  அதற்கு பைரவ உலகம் என்று பெயர்;

தொடர்ந்து 12 பிறவிகள் மனித பிறப்பு எடுத்து அனைத்து பிறவிகளிலும் மஹாகால பைரவப் பெருமானை மட்டுமே பேசி,ஜபித்து,வழிபட்டு,விரதம் கொண்டு வாழ்ந்தால் பைரவ உலகத்தில் பைரவ சித்தர் என்ற புகழுடன் வாழும் வாய்ப்பு கிடைக்கும்;

ஜோதிடர்கள் தினமும் வழிபடவேண்டிய தெய்வம் மஹாகால பைரவர் ஆவார்;ஜோதிடர்கள் தினமும் ஒருமுறையாவது ஓம் ஸ்ரீவாரதாரக சித்தகுரு நம ஸ்வாஹா என்று ஜபிக்க வேண்டும்;இந்த பைரவ சித்தரின் அருளை ஒவ்வொரு ஜோதிடரும் பெறுவது அவசியம் ஆகும்;

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆர்ய பட்டரும்,வராக மிஹிரரும் இந்த ஸ்ரீவாரதாரக சித்தரை உபாசனை செய்து,இவரது அருளைப் பெற்றுத்தான் அழியாத புகழ் கொண்ட ஜோதிட நூல்களை இயற்றினார்கள்;


உபாசனை என்பது மிகவும் கடினமானது;விநாயகர் உபாசனை,முருகக் கடவுள் உபாசனை,சிவ உபாசனை,காளி உபாசனை,துர்கை உபாசனை,பைரவ உபாசனை,வராகி உபாசனை,வீரபத்திரர் உபாசனை என்று ஏராளமான உபாசனைகள் இருக்கின்றன;துர்கையில் ஒரு அவதாரம் இருக்கின்றது;அவளுக்கு 18,000 கைகள் உண்டு;தட்சிண காளி உபாசனை வெற்றி பெற வேண்டும் என்றால் 80,00,00,000 ஆண்டுகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;முருக தரிசனம் செய்ய வேண்டும் என்றால் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;12 வது ஜன்மத்தில் முருக தரிசனம் கிட்டும்;மதுரையில் இருந்து கன்னியாக்குமரி வரை பல ஆயிரக்கணக்கான துறவிகள் முருகக் கடவுளை தரிசனம் செய்துஅவரது அருளால் பல சித்துக்கள் புரிந்துள்ளார்கள்;பலரது கர்மவினைகளை (தீராத நோய்,கடன்) தீர்த்துள்ளார்கள்;மிக மிக எளியது விநாயகர் உபாசனை!

மிக மிகக் கடினமானது தான் பைரவ உபாசனை! அரை விநாடி அளவுக்கு கவனக் குறைவு ஏற்பட்டாலும் பைரவ கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதை உணர்ந்தமையால் தான் நமது கலியுகத்தில் ஷீர்டி சாய்பாபா,பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்,மாயம்மா போன்றவர்கள் பைரவ பக்தியை 40 ஆண்டுகள் வரை பின்பற்றினார்கள்;


பைரவரின் வாகனமாகிய நாய்களுக்கு தினமும் உணவு இடுவதன் மூலமாகவே பைரவரின் அருளைப் பெற முடியும்;யார் தொடர்ந்து 40 ஆண்டுகள் பைரவருக்கு (தெரு நாய்கள்) தினமும் உணவு தானம் செய்து வருகின்றார்களோ,அவர்களுக்கு பைரவரின் அருளும்,பைரவ சித்துக்களும் சுலபமாக கிடைக்கும்;


இதைச் செய்ய இயலாதவர்கள் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து 64 தேய்பிறை அஷ்டமிகளுக்கு சென்று வழிபடுவதன் மூலமாக அஷ்டமாசித்துக்களை பைரவரின் அருளால் பெற முடியும்;கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கிராமம் சோழபுரம்!

இங்கே இருக்கும் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயத்திற்கும் பைரவ உலகத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பம் ஆகும் நொடியில் இருந்து நிறைவடையும் விநாடி வரை பல சித்தர்கள் தமது சீடர்களோடு வருகை தந்து இங்கே சூட்சுமமாக வழிபாடு செய்து வருகின்றார்கள்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் ஈசனின் அருளால் மஹாகால பைரவர் உதயமானார்;
முதல் யுகமான கிருதயுகத்தில் ஒரு ஆண்டு என்பது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மூன்று ஆண்டுகளுக்குச் சமம்;முதல் யுகமான கிருதயுகத்தில் சனி ஒரு ராசியை கடக்க 12 ஆண்டுகள் வரை ஆகியிருக்கின்றது;


மஹாகால பைரவப் பெருமானின் அருளைப் பெற ஒரு அரிய நாள் அமைந்திருக்கின்றது;


விளம்பி வருடம்,மார்கழி மாதம்,14 ஆம் நாள் தேய்பிறை அஷ்டமி திதியும்,சனிக்கிழமையும் சேர்ந்தே வந்திருக்கின்றது;அன்றைய தேதி 29.12.2018
29.12.2018 சனிக்கிழமை காலை 8.45 முதல் 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.59 வரை தேய்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கின்றது;


பைரவரின் அருளைப் பெற விரும்புவோர் 29.12..2018 சனிக்கிழமை காலை 6 முதல் 7.30 மணிக்குள்  கால பைரவர் சன்னதியில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;


நாம் வாழ்ந்து வரும் இந்த நூற்றாண்டினை காலத்தின் மூலமாக நிர்வாகித்து வருபவர் ஸம்ஹார பைரவப் பெருமான் ஆவார்;இவரை தினமும் ஒரு மணி நேரம் வரை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வருவதன் மூலமாக தொல்லைகள் இல்லாத (நிம்மதியான) வாழ்க்கையை வாழ முடியும்;


வசதியும் சந்தர்ப்பமும் உள்ளவர்கள் இதே நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் செல்வது மிகவும் நன்று;ஒரே நேரத்தில் மஹா கால பைரவரின் அருளோடு,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;


மஹத்தான செல்வ வளத்தை பெற விரும்புவோர் புதுக்கோட்டை அருகில் இருக்கும் பொன்பேத்தி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்;இங்கே இருக்கும் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் கால பைரவராக அருள்பாலித்து வருபவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;
இவரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரத்தால் ஜபிக்க வேண்டும்;அல்லது துர்கை சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகத்தை ஜபித்தும் வழிபடலாம்;
மஹாவராகியை தினமும் ஜபித்து வருபவர்கள் மஹா கால பைரவரையும் ஜபிக்கலாம்;

ராகுக் கிரகத்தின் ப்ராண தேவதையாக இருப்பவர் ஸம்ஹார பைரவப் பெருமான் ஆவார்;இவரின் துணை சக்தியாக இருக்கும் அன்னை சண்டி!

சம்ஹார பைரவரின் காயத்ரி மந்திரம்:

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்

சண்டியின் காயத்ரி மந்திரம்:

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ சண்டி ப்ரசோதயாத்

குறிப்பு:சமஸ்க்ருத வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்கள்,தினமும் ஒரு மணி நேரம் வரை இந்த காயத்ரி மந்திரத்தை ஜபித்து வரலாம்;


மஹாகால பைரவரின் அருள் பெற்ற பைரவ சித்தர் ஸ்ரீவாரதார சித்தரின் அருளால் இக்கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்;       
                                     

கால நிர்ணயம் செய்யும் அருட்கடல்: பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர்!





உங்களை தாங்கமுடியாத கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள் விடாமல் துரத்துகின்றது என்றால் நீங்கள் ஏழரைச்சனியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்;
ஆமாம்!

கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்த தீவினைகளின் தொகுப்பினை இப்பிறவியில் ஏழரைச்சனி காலத்தில் தான் அனுபவிக்க வேண்டும்;


உங்களுக்கு ஏழரைச்சனி இல்லாத காலகட்டத்திலும்,உங்கள் ஜனன ஜாதகப்படி லக்னத்திற்கு பாதகம் தரும் திசைகள்(லக்னத்திற்கு 3 ஆம் இடத்தின் கிரக திசை,6 ஆம் இடத்தின் கிரக திசை,8 ஆம் இடத்தின் கிரக திசை,12 ஆம் இடத்தின் கிரக திசை அல்லது இந்த இடங்களிலும் நிற்கும் கிரகத்தின் திசை அல்லது இந்த இடங்களின் அதிபதிக்குரிய கிரகங்களுடன் சேர்ந்த கிரக திசைகள்) வந்தால் நீங்கள் வேதனை,கடன்,அரசாங்க கோபம்,அவமானம் போன்றவைகளை அடைய வேண்டும்;

பலருக்கு 40 முதல் 60 ஆண்டுகள் வரையிலும் துன்பங்களும்,துயரங்களும் துரத்திக் கொண்டே இருக்கின்றன;எத்தனையோ பரிகாரங்கள்,பூஜைகள்,யாகங்கள்,எந்திரங்கள்,தானங்கள் செய்து விடிவு கிட்டவில்லை என்றால் தாங்கள் முற்பிறவிகள் மூன்றில் அடாத செயல்கள் செய்துள்ளீர்கள் என்றுதான் அர்த்தம்;


விதிக்கப்பட்ட கர்மங்களுக்கு கட்டுப்பட்டவன் தான் மனிதன் என்பது பழமொழி;அதில் இருந்து மீண்டுவிட வழிமுறைகள் உண்டு;சரியான பரிகாரம் அல்லது ஆலயம் செல்லாதவரையிலும் அல்லது குறிப்பிட்ட காலம் வரை தினமும் மந்திர ஜபம் மற்றும் அன்னதானம் செய்யாதவரையிலும் துயரங்கள் துரத்திக் கொண்டே தான் இருக்கும்;

நம் ஒவ்வொருவரையும் நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நாம் பிறக்கும் போது வானில் நவக்கிரகங்களின் அமைவைப் பொறுத்து நாம் பிறவி எடுக்கின்றோம்;இந்த அமைவைத் தீர்மானிப்பது நமது முற்பிறவிகள் ஐந்தின் கர்மவினைகளின் தொகுப்புதான்!
நவக்கிரகங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது காலதேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான்!


பூமி முழுவதும் இருக்கும் அனைத்து கால பைரவப் பெருமான் சன்னதிகளுக்கும் சூட்சுமமாக தெய்வீக ஆற்றல் அருட்கடல்:(அருள்மிகு என்பதற்குப் பதிலாக அருட்கடல்)பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயம்,சோழாபுரம்,கும்பகோணம் தாலுகா ஆகும்;


கிர்லியன் கேமிராவை சோவியத் ரஷ்யா கண்டுபிடித்தது;இதன் விலை ரூ.40 லட்சம்.இதைக் கொண்டு ஒரு சிவாலயத்தை ஆராய்ந்தார்கள்:ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் இரவு ஆலயத்தை மூடும் வரை ஆராய்ந்ததில் ஆச்சரியமான அதிசயங்கள் வெளிப்பட்டன;


விண்வெளியில் இருந்து காஸ்மிக் கதிர்களுடன் கூடிய தெய்வீக சக்தியானது கோவில் கொடிமரம் வழியாக கோவிலுக்குள் அருவியாகப் பாய்கின்றது;கொடிமரத்தில் இருந்து கோவிலின் க்ஷேத்திரபாலர் என்று அழைக்கப்படும் காலபைரவப் பெருமானின் அறையில் நிரம்புகின்றது;அங்கிருந்து கோவிலில் உள்ள மூலவருக்கும்,அம்பாள் சன்னதிக்கும் ஒளிப்பாதையாகப் பயணிக்கின்றது;மூலவர் மற்றும் அம்பாள் சன்னதியில் இருந்து கோவில் முழுவதும் பரவுகின்றது;

ப்ரம்ம முகூர்த்த நேரத்திலும்,அந்தி மாலை நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்திலும் இந்த தெய்வீக ஆற்றலின் அளவு பலமடங்கு அதிகரிக்கின்றது;
விண்வெளியில் ஒரு டெலஸ்கோப்பில் இதே கிர்லியன் கேமிராவை வைத்து ஒட்டு மொத்த பாரத நாட்டையும்,ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் ஆராய்ந்தார்கள்;


உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து ஆலயங்களில் இருக்கும் மஹாகால பைரவப் பெருமானின் சன்னதிகளுக்கும் அதிகாலை 3 முதல் 4.30க்குள் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழாபுரம் ஆலயத்தில் இருந்து காஸ்மிக் கதிர்களுடன் கூடிய தெய்வீகப் பேராற்றல் பாய்கின்றது;

சுமார் 4 லட்சம் பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் சிலபல சர்வதேச அரசியல் மற்றும் ஆன்மீகக் காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை;இருந்த போதிலும் இதன் ப்ராஜக்ட்டில் இருந்த ஒரு தமிழ் விஞ்ஞானியால் நமக்கு சிறிது தெரிந்துள்ளது;


ப்ரபஞ்சத்தில் ஏதோவெகு தூரத்தில் இருந்து ஒரு ஒளிவெள்ளம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் இந்த ஆலயத்தின் மீது விழுகின்றது;(இந்த ஆலயத்தினை மையப்படுத்தி 14000 சதுர அடிகளுக்குப்பரவுகின்றது)

    இந்த ஒளிவெள்ளத்தில் அப்போது ஊடாக யாரெல்லாம் வருகின்றார்களோ,அவர்களின் ஆத்மக் கசடுகள் கரைகின்றன;ஆறு ஆண்டுகள் வரை யார் இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி நாளில் வருகின்றார்களோ,அவர்கள் முழு பரிசுத்தமடைகின்றார்கள்;சில பல தெய்வீக சக்திகளைப் பெறுகின்றார்கள்:

ஓம் சத்குரு ஸ்ரீவேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்
ஓம் இடியாப்ப சித்தர் நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Friday, December 14, 2018

செல்வ வளம் தரும் மார்கழி மாதம்!



விளம்பி வருடத்தின் மார்கழி மாதம் 16.12.2018 ஞாயிறு முதல் 14.1.2019 திங்கள் வரை அமைந்திருக்கின்றது;


இந்த மாதம் முழுவதும் யார் தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் அல்லது மஹாவிஷ்ணு ஆலயம் சென்று மந்திர ஜபம்.அன்னதானம்,அபிஷேகம்,அடிப்பிரதட்சணம்=இவைகளில் ஏதாவது ஒன்றைச் செய்கின்றீர்களோ அவர்களுக்கு இறை கடாட்சம் மொத்தமாக கிடைக்கின்றது;


மார்கழி முதல் ஆனி மாதம் வரை தேவ உலகங்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு பகல் பொழுது ஆகும்;அதில்,மார்கழி மாதமானது அதிகாலைப்  பொழுதாக அமைந்திருக்கின்றது;அப்படித்தான் கால தேவனாகிய கால பைரவப் பெருமான் அவர்களுடைய காலத்தை வடிவமைத்திருக்கின்றார்;


ஆண்கள் சொர்ண வராகி மந்திரத்தையும்

க்லீம் வராஹ முஹி;ஹ்ரீம் ஸித்திஸ்வ ரூபிணி
ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா

பெண்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரத்தையும் ஜபித்து வர வேண்டும்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ண பைரவ ப்ரசோதயாத்;

ஓம் த்ரிபுராயைச வித்மஹே
பைரவ்யைச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்;


மார்கழி 1 ஆம் நாள் முதல் மார்கழி 30 ஆம் நாள் வரையிலும் தினமும் காலை 4.30 முதல் 6 மணிக்குள் ஜபித்து வர வேண்டும்;எண்ணிக்கை கூடாது;கோவிலுக்குள் ஏதாவது ஒரு இடத்தில் ஜபித்து வர வருமானம் பெருகும்;வர வேண்டிய தொகை வர ஆரம்பிக்கும்;இது அவரவரின் ஜனன ஜாதகப்படி அமையும்;


வெளிமாநிலம்,வெளிநாடுகளில் வசிப்பவர்கள்,நடமாட முடியாத உடல் அமைப்பில் இருப்பவர்கள் வீட்டில் பூஜை அறையில் ஜபிக்கலாம்;


நதிக்கரையோரம் வாழ்ந்து வருபவர்கள் தினமும் காலையில் சூரிய உதயத்தின் போது,சூரிய உதயத்தை பார்த்தவாறு பின்வரும் வராகி மந்திரத்தை ஜபித்து வரலாம்;கழுத்தளவு தண்ணீரில் நதியில் நின்றவாறு குறைந்தது 30 நிமிடம் வரையிலும்,அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரையிலும் ஜபிக்கலாம்;


ஒரு போதும் அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருந்தால் மட்டுமே இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;இல்லாவிட்டால்,எதிர்விளைவு தான் உண்டாகும்;ஜாக்கிரதை!


ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் டஹ டஹ ஸ்வாஹா


வீட்டு குளியல் அறையில் ஒரு போதும் இம்மந்திரத்தை ஜபிக்க கூடாது;அதுவும் எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும்;

இவை அனைத்தும் ரகசிய ஜபமுறைகள் ஆகும்;எனவே,மிக ரகசியமாக ஜபித்து செல்வச் செழிப்பை அடைய வாழ்த்துக்கள்!!!



நமது தெய்வநம்பிக்கை எத்தனை சதவீதம்?



நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு தெய்வ நம்பிக்கை 2% தான் இருக்கின்றது;

கூட்டுப் பிரார்த்தனை,குழுவாக ஆலயம் செல்லுதல்,கோவிலுக்குள் தெய்வ காரியங்களில் ஈடுபடுவதால் ஒவ்வொருவருக்கும் 5% தெய்வ நம்பிக்கை உருவாகின்றது;

மேலே சொன்ன தெய்வகாரியங்களை ஒருங்கிணைப்பவர்களுக்கு 20% தெய்வ நம்பிக்கை இருக்கின்றது;

மகான்களுக்கு 99% தெய்வ நம்பிக்கை இருக்கின்றது;

1% அவநம்பிக்கை இருப்பதால் தான் அவர்களால் தானும்,தன்னைச் சுற்றி வாழ்பவர்கள் மத்தியிலும் தெய்வ நம்பிக்கையை உருவாக்கிட பலவிதங்களில் போராடுகின்றார்கள்;

100% தெய்வநம்பிக்கை ஒரு மகானுக்கு வந்துவிட்டால்,அக்கணமே அவரது உயிர் (அவரது ஆயுளுக்கு முன்பாகவே) பிரிந்துவிடும்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

இந்து பாரதத்தைச் சூறையாடிய கிறிஸ்தவ இங்கிலாந்து=பாகம் 1



வியாபாரம் செய்ய வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி,200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு நம் எல்லோருக்கும் தெரியும்;இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் கிறிஸ்தவ இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டிக் கொழுத்தது என்பதும் தெரிந்த கதை;

விலைமதிப்பு இல்லாத இந்திய கடவுள்களின் சிலைகள்,

கலைச் சிற்பங்கள்,அற்புதமான ஓவியங்கள்,புராதனச் சின்னங்கள்,

கோஹினூர் வைரம் முதலான அபூர்வ கற்கள்,அணிகலன்கள்,

திப்புச் சுல்தானின் வாள் உள்ளிட்ட பெருமைக்குரிய வரலாற்று அடையாளங்கள் 

கிறிஸ்தவ ஆங்கிலேய அரசாங்கத்தால் பட்டப்பகலில் கிறிஸ்தவ இங்கிலாந்துக்குக் கடத்தப்பட்டு,மகாராணியின் அரண்மனையையும் கோடீஸ்வர கிறிஸ்தவ பிரபுக்களின் அருங்காட்சியகங்களையும் அலங்கரிக்கின்றன என்ற செய்தியும் நாம் அறியாதது அல்ல;

ஈஸ்ட் இண்டியா கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் மூலமாகவும்,அதன் பிறகு அரசியல் அதிகாரத்தை அபகரித்து ஆட்சி என்ற பெயரிலும்,அந்த இரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ இங்கிலாந்து இங்கிருந்து கொள்ளையடித்துச் சென்ற மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

தெரிந்திருக்க வாய்ப்பில்லை;


முதன்முறையாக அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கி ஆண்டுக்கணக்கில் தகவல்களைத் திரட்டி தொகுத்திருக்கும் ஒரே நபர் உத்சா பட்நாயக்.பொருளாதார அறிஞரான உத்சாவுக்கு வரலாறு மீதும் ஆர்வம் அதிகம்;அவருடைய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை கொலம்பியா யுனிவர்சிட்டி வெளியிட்டிருக்கின்றது;


மொத்தம் 45 ட்ரில்லியன் யு எஸ் டாலர் மதிப்புக்கு நிகரான தொகையை இந்தியாவில் இருந்து சுரண்டி எடுத்திருக்கின்றது கிறிஸ்தவ இங்கிலாந்து அரசும்,அதன் முன்னோடி நிறுவனமான ஈஸ்ட் இண்டியா கம்பெனியும் என்று கணக்கு சொல்கின்றார் உத்சா.

ஒரு ட்ரில்லியன் என்பது பிரிட்டிஷ் அளவீடுகளின் படி 100 கோடி.இந்திய ரூபாய்க்கு மாற்றினால் 35 கோடியே கோடி வரும்;அதாவது 35 க்குப் பின்னால் 14 சைபர்கள் போடவேண்டும்;ஒப்பீடு வழியில் பார்த்தால்,பிரிட்டனின் நடப்பு ஆண்டு ஜிடிபி எனப்படும் ஒட்டு மொத்த உற்பத்தியே 3 ட்ரில்லியன் டாலர்களுக்கும் குறைவுதான் என்றால் சுரண்டலின் மதிப்பைப் பாருங்கள்;


சரி,என்றைக்கோ நடந்த கதை;அதற்கு என்ன இப்போது என்று சலிப்பு தட்டினால்,இன்றைய கால கட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்துவரும்  நாம் ஒவ்வொருவரும் அடிக்கடி பண நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு இந்த சுரண்டல்கள் தான் காரணம் என்பதை உணரவில்லை என்று தான் அர்த்தம்!!!


கூடவே,கடந்த 300 ஆண்டுகளில் கிறிஸ்தவ இங்கிலாந்து நமது ஆன்மீக தேசமான பாரத நாட்டிற்கு செய்த துரோகங்களின் வரலாற்றை அறிந்தால்,இந்த நாட்டில் ஒரே ஒரு கிறிஸ்தவன் கூட இருக்கக் கூடாது என்ற உத்வேகம் உங்களுக்குள் உண்டாகும்;

ஆதாரம்:தினமலர்,பக்கம் 5,தேதி 4.12.2018;மதுரைப் பதிப்பு