Thursday, August 2, 2018

கால பைரவரின் அருளைப் பெற ஓர் பொன்னான வாய்ப்பு!

கால பைரவர் பரணி நட்சத்திரத்தில் உதயமானார்!
கால பைரவர் அஷ்டமி திதியில் உதயமானார்;
அஷ்டமி திதியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்தே வருவது மிகவும் அபூர்வம்....
4.8.2018 சனிக்கிழமை அன்று காலை 11.50 முதல் 5.8.2018 ஞாயிறு காலை 7.02 வரை பரணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் சேர்ந்தே வருகின்றது;

கால பைரவரின் அருளைப் பெற இந்த நேரத்தில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கவும்;

முடிந்தால் இந்த நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் செல்வதால்,அண்ணாமலையாரின் அருளும்,கால பைரவரின் ஆசிகளும்,பைரவ சித்தர்களின் தரிசனமும் கிடைக்கும்;

கும்பகோணம் அருகில் இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று ஜபிக்கலாம்;இதுதான் பைரவ உலகத்திற்கும் நமது பூமிக்கும் இடையே இணைப்பு ஆன்மீகப் பாலமாக இருக்கின்றது;

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் பிறந்த பொன் பேத்தி அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் இருக்கும் பொற்றளி பைரவர் சன்னதியில் ஜபிக்கலாம்;இவர்தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவராக கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் உதயமானார்;

அட்டவீரட்டானங்கள் என்ற பைரவரின் எட்டு படைவீடுகளில் ஜபிக்கலாம்

(திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர்,
பண்ருட்டி அருகில் இருக்கும் திருவதிகை,
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இருக்கும் திருக்கண்டியூர் அருள்மிகு பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோவில்,
திருக்கடையூர் கால சம்ஹார மூர்த்தி மற்றும் திருக்கடையூர் மயானம்,
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ தொலைவில் அமைந்திருக்கும் வழுவூர் வீரட்டானம்
திருவாரூர் அருகில் இருக்கும் திருவிற்குடி வீரட்டேஸ்வரர்,
மயிலாடுதுறை அருகில் இருக்கும் செம்பொனார் கோவில் பகுதியைச் சேர்ந்த திருப்பரசலூர்
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணித்து பிறகு விசாரித்துச் சென்றால் வரும் குறுக்கை என்ற கொறுக்கை=இங்கே இந்த ஆலயத்திற்கு அருகில் ஒரு தென்னந்தோப்பில் மன்மதனை எரித்த சாம்பல் இன்றும் இருக்கின்றது)

தவிர,அவரவர்களுடைய ஜன்ம நட்சத்திர பைரவர் ஸ்தலங்கள்:-
அசுபதி = பேரூர் சிவாலாயத்தில் இருக்கும் ஞானபைரவர்

பரணி = காரைக்குடி திருப்பத்தூர் அருகில் அமைந்திருக்கும் கண்டரமாணிக்கம் சென்று பெரிச்சி கோவில்

கார்த்திகை = அண்ணாமலை உள்பிரகாரத்தில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்

ரோகிணி = திருக்கண்டியூர் பிரமசிரகண்டீஸ்வரர் கோவிலுக்குள் இருக்கும் வடுக பைரவர்

மிருகசீரிடம் = க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழி)

திருவாதிரை = திருவண்டார் கோவில் பைரவர்(விழுப்புரம் டூ பாண்டிச்சேரி சாலையில் கண்டமங்கலம்)

புனர்பூசம் = விஜயபைரவர்,பழனி(ரோப்கார் அருகில் இருக்கும் சாது சுவாமிகள் மடாலயம்)

பூசம் = யோக பைரவர்,ஸ்ரீவாஞ்சியம்

ஆயில்யம் = பாதாள பைரவர்,காளஹஸ்தி

மகம் = அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவில் பைரவர்,வேலூர்

பூரம் = பட்டீஸ்வர பைரவர்(கும்பகோணம் அருகில்)

உத்திரம் = ஜடாமண்டல பைரவர்,அருள்மிகு ஆவுடையம்மன் சமேத அம்மநாதர் கோவில்,சேரன்மாதேவி,நெல்லை மாவட்டம்

அஸ்தம் = யோக பைரவர்,திருப்பத்தூர்

சித்திரை = அருள்மிகு கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜீனர் கோவிலில் இருக்கும் பைரவர்,தர்மபுரி

சுவாதி = திருவரங்குளம் (பொற்பனைக்கோட்டை) பைரவர்,வழி:புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் 6 வது கி மீ

விசாகம் =கோட்டை பைரவர்,திருமயம்(சாலையோரம் இருக்கும் ஆலயம்)

அனுஷம் = அருள்மிகு ஆபத்சகாயர் கோவில் பைரவர்,ஆடுதுறை

கேட்டை= அருள்மிகு ஆவுடைநாயகி சமேத தேசிகநாதர் கோவிலில் இருக்கும் கதாயுத பைரவர்,சூரக்குடி,பள்ளத்தூர்(காரைக்குடி)

மூலம் = ஆகாச பைரவர்,சட்டநாதர் கோவில்,சீர்காழி

பூராடம் = அவிநாசி கோவிலில் இருக்கும் இரண்டு பைரவர்கள்

உத்திராடம் = வடுக பைரவர்,அருள்மிகு பசுபதி நாதர் கோவில்,கரூர்

திருவோணம் = மார்த்தாண்ட பைரவர்,வைரவன்பட்டி

அவிட்டம் = அருள்மிகு பிரம்மபுரிஸ்வரர் கோவில்,சீர்காழியில் இருக்கும் அஷ்ட பைரவர்கள்

சதயம் = சர்ப்ப பைரவர்,சங்கரன் கோவில்

பூரட்டாதி = திருச்செங்கோடு தாலுகா,கொக்கராயன்பேட்டையில் இருக்கும் அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் கோவில் பைரவர்

உத்திரட்டாதி = ஓசை உடைய பைரவர்,சேங்கனூர்,கும்பகோணம் அருகில்

ரேவதி = கரூர் மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருக்கும் பஞ்சமுக பைரவர்

அல்லது

காலபைரவர் ஆட்சி புரியும் காசியில் 64 படித்துறைகள் இருக்கின்றன;அதில் ஏதாவது ஒரு படித்துறையில் கங்கையில் மூழ்கியவாறு ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஒரு மணி நேரமாவது ஜபிக்கலாம்;

அல்லது

காசியில் எட்டு பைரவர்களின் ஆலயங்கள் இருக்கின்றன;இங்கே ஏதாவது ஒரு இடத்தில் ஜபிக்கலாம்;

அல்லது

சூரியனின் ப்ராண தேவதை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்;இவர் சிதம்பரம் ஆலயத்தில் இருந்து அருள்பாலித்து வருகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;

சந்திரனின் ப்ராண தேவதை கபால பைரவர்;இவர் தென்காசிக்கு அருகில் இருக்கும் திருமலைக்கோவில் முருகன் கோவிலில் அருள்பாலித்து வருகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;

குருவின் ப்ராண தேவதை அசிதாங்க பைரவர்;இவர் ஆம்பூர் சிவாலயத்தில் அருள்புரிகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;

மற்ற கிரகங்களின் ப்ராண தேவதையாக இருக்கும் பைரவ ஆலயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;

அல்லது

உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவர் சன்னதி

அல்லது

இங்கே எங்கேயும் செல்ல இயலாதவர்கள் உங்கள் தெருவில் வசிக்கும் பைரவ வாகனத்திற்கு உணவு தானம்,பிஸ்கட் தானம் செய்யலாம்;

நம்முடைய கடுமையான கர்மவினைகளை கரைக்க ஓர் பொன்னான பைரவ வாய்ப்பு!!!

கால தேவன் என்ற கால பைரவரின் அருளைப் பெற!

கால தேவன் என்ற கால பைரவரின் அருளைப் பெற!

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என அனைத்தையும் ஈசனின் சார்பாக நிர்வாகித்து வருபவர் ஈசனின் அவதாரமான கால பைரவர் ஆவார்;இவரது பெயரில் ஒரு உலகம் இருக்கின்றது; அதற்கு பைரவ உலகம் என்று பெயர்;

தொடர்ந்து 12 பிறவிகள் மனித பிறப்பு எடுத்து அனைத்து பிறவிகளிலும் மஹாகால பைரவப் பெருமானை மட்டுமே பேசி,ஜபித்து,வழிபட்டு,விரதம் கொண்டு வாழ்ந்தால் பைரவ உலகத்தில் பைரவ சித்தர் என்ற புகழுடன் வாழும் வாய்ப்பு கிடைக்கும்;

ஜோதிடர்கள் தினமும் வழிபடவேண்டிய தெய்வம் மஹாகால பைரவர் ஆவார்;ஜோதிடர்கள் தினமும் ஒருமுறையாவது ஓம் ஸ்ரீவாரதாரக சித்தகுரு நம ஸ்வாஹா என்று ஜபிக்க வேண்டும்;இந்த பைரவ சித்தரின் அருளை ஒவ்வொரு ஜோதிடரும் பெறுவது அவசியம் ஆகும்;

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆர்ய பட்டரும்,வராக மிஹிரரும் இந்த ஸ்ரீவாரதாரக சித்தரை உபாசனை செய்து,இவரது அருளைப் பெற்றுத்தான் அழியாத புகழ் கொண்ட ஜோதிட நூல்களை இயற்றினார்கள்;

உபாசனை என்பது மிகவும் கடினமானது;விநாயகர் உபாசனை,முருகக் கடவுள் உபாசனை,சிவ உபாசனை,காளி உபாசனை,துர்கை உபாசனை,பைரவ உபாசனை,வராகி உபாசனை,வீரபத்திரர் உபாசனை என்று ஏராளமான உபாசனைகள் இருக்கின்றன;துர்கையில் ஒரு அவதாரம் இருக்கின்றது;அவளுக்கு 18,000 கைகள் உண்டு;தட்சிண காளி உபாசனை வெற்றி பெற வேண்டும் என்றால் 80,00,00,000 ஆண்டுகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;முருக தரிசனம் செய்ய வேண்டும் என்றால் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;12 வது ஜன்மத்தில் முருக தரிசனம் கிட்டும்;மதுரையில் இருந்து கன்னியாக்குமரி வரை பல ஆயிரக்கணக்கான துறவிகள் முருகக் கடவுளை தரிசனம் செய்துஅவரது அருளால் பல சித்துக்கள் புரிந்துள்ளார்கள்;பலரது கர்மவினைகளை (தீராத நோய்,கடன்) தீர்த்துள்ளார்கள்;மிக மிக எளியது விநாயகர் உபாசனை!

மிக மிகக் கடினமானது தான் பைரவ உபாசனை! அரை விநாடி அளவுக்கு கவனக் குறைவு ஏற்பட்டாலும் பைரவ கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதை உணர்ந்தமையால் தான் நமது கலியுகத்தில் ஷீர்டி சாய்பாபா,பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்,மாயம்மா போன்றவர்கள் பைரவ பக்தியை 40 ஆண்டுகள் வரை பின்பற்றினார்கள்;

பைரவரின் வாகனமாகிய நாய்களுக்கு தினமும் உணவு இடுவதன் மூலமாகவே பைரவரின் அருளைப் பெற முடியும்;யார் தொடர்ந்து 40 ஆண்டுகள் பைரவருக்கு (தெரு நாய்கள்) தினமும் உணவு தானம் செய்து வருகின்றார்களோ,அவர்களுக்கு பைரவரின் அருளும்,பைரவ சித்துக்களும் சுலபமாக கிடைக்கும்;

இதைச் செய்ய இயலாதவர்கள் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து 64 தேய்பிறை அஷ்டமிகளுக்கு சென்று வழிபடுவதன் மூலமாக அஷ்டமாசித்துக்களை பைரவரின் அருளால் பெற முடியும்;கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கிராமம் சோழபுரம்!

 இங்கே இருக்கும் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயத்திற்கும் பைரவ உலகத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பம் ஆகும் நொடியில் இருந்து நிறைவடையும் விநாடி வரை பல சித்தர்கள் தமது சீடர்களோடு வருகை தந்து இங்கே சூட்சுமமாக வழிபாடு செய்து வருகின்றார்கள்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் ஈசனின் அருளால் மஹாகால பைரவர் உதயமானார்;இன்றைய கலியுகத்தில் இந்த மூன்று கால சக்திகளும் கார்த்திகை மாதத்தில் வருவது அரிதிலும் அரிது;

முதல் யுகமான கிருதயுகத்தில் ஒரு ஆண்டு என்பது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மூன்று ஆண்டுகளுக்குச் சமம்;முதல் யுகமான கிருதயுகத்தில் சனி ஒரு ராசியை கடக்க 12 ஆண்டுகள் வரை ஆகியிருக்கின்றது;
மஹாகால பைரவப் பெருமானின் அருளைப் பெற ஒரு அரிய நாள் அமைந்திருக்கின்றது;

விளம்பி வருடம்,ஆடி மாதம்,19 ஆம் நாள் தேய்பிறை அஷ்டமி திதியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்தே வந்திருக்கின்றது;4.8.2018 சனிக்கிழமை காலை 8.04 முதல் மறுநாள் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.02 வரை தேய்பிறை அஷ்டமி திதியும்,4.8.2018 சனிக்கிழமை காலை 11.50 முதல் மறுநாள் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11.26 வரை பரணி நட்சத்திரமும் வர இருக்கின்றது;

பைரவரின் அருளைப் பெற விரும்புவோர் 4.8.2018 சனிக்கிழமை காலை 11.51 முதல் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் மட்டுமாவது கால பைரவர் சன்னதியில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;

வசதியும் சந்தர்ப்பமும் உள்ளவர்கள் இதே நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் செல்வது மிகவும் நன்று;ஒரே நேரத்தில் மஹா கால பைரவரின் அருளோடு,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;

மஹத்தான செல்வ வளத்தை பெற விரும்புவோர் புதுக்கோட்டை அருகில் இருக்கும் பொன்பேத்தி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்;இங்கே இருக்கும் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் கால பைரவராக அருள்பாலித்து வருபவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;

இவரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரத்தால் ஜபிக்க வேண்டும்;அல்லது துர்கை சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகத்தை ஜபித்தும் வழிபடலாம்;

மஹாவராகியை தினமும் ஜபித்து வருபவர்கள் மஹா கால பைரவரையும் ஜபிக்கலாம்;

மஹாகால பைரவரின் அருள் பெற்ற பைரவ சித்தர் ஸ்ரீவாரதார சித்தரின் அருளால் இக்கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்;

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!

ஓம் ஸ்ரீவாராதர சித்தர் குரு வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)

ஹேவிளம்பி வருடம்,    ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

4.8.2018 சனிக்கிழமை காலை 8.04 மணி முதல் 5.8.2018 ஞாயிறு காலை 7.02 வரை அமைந்திருக்கின்றது;

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

சனிக்கிழமை குளிகை காலம் காலை 6.00 முதல் 7.30 வரை அமைந்திருக்கின்றது;

 சனிக்கிழமை   இராகு காலம் காலை 9.00 முதல் 10.30 வரை அமைந்திருக்கின்றது.

இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;

(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6

15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)

18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.

அடுத்த தேய்பிறை அஷ்டமி: 2.9.2018 ஞாயிறு மாலை 5.40 முதல் 3.9.2018 திங்கள் மதியம் 3.57 வரை இருக்கின்றது;

இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;

அண்ணாமலை கிரிவல துதி

உலகத்தில் மிகவும் உன்னதமான பிறவி மனிதப் பிறவி;அந்த மனிதப் பிறவிகளில் மகத்தான பிறவி எடுத்தவர் ரமண மகரிஷி! 1879 ஆம் ஆண்டு,விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியல் நாதர் கோவில் இருக்கும் கிராமமான திருச்சுழி கிராமத்தில் திருச்சுழியல் நாதரின் கருணையால் பிறந்தவர் ரமண மகரிஷி!

நமக்கெல்லாம் தன்னலம் இல்லாத குரு அமைந்தாலே அது மாபெரும் அதிர்ஷ்டம்! பலர் போலி குருவிடம் ஏமாந்து,ஏமாந்து,ஆன்மீகத்தின் மீதே வெறுப்புற்று அற்புதமான மானுட வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள்;போலி குருவிடம் கிட்டிய அனுபவம் தான் உண்மையான குருவிடம் கொண்டு சேர்க்கும் என்று நினைப்பதில்லை;

நம்முடைய ஜன்ம நட்சத்திர சத்குரு அண்ணாமலையில் கடந்த 12,000 ஆண்டுகளாக நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்;ஆமாம்! நாம் ஒவ்வொருவருமே இந்த பூமியில் இப்போதுதான் முதன் முதலில் பிறந்திருக்கின்றோம் என்று (கிறிஸ்தவம் போதிப்பது போல) நினைக்கின்றோம்;இது மாபெரும் தவறு;நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் குறைந்தது 20,000 முறையும்,அதிகபட்சமாக 3,00,00,000 கோடி முறையும் பிறவிகள் எடுத்திருக்கின்றோம்;புண்ணியம் அதிகம் செய்தாலும் பிறவிகள் தொடரும்;பாவம் அதிகம் செய்தாலும் பிறவிகள் தொடரும்;பாவம்,புண்ணியம் இரண்டையும் 0 அளவுக்கு கொண்டு வரவேண்டும்;அதற்கு ஒரு எளிமையான வழி இருக்கின்றது;அதுதான் இந்த பிறவி முடிவதற்குள் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வருவது;

5 ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்குள் 1008 முறை அண்ணாமலையை கிரிவலம் வந்துவிட்டால், நமது ஜன்ம நட்சத்திர சத்குருவை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிட்டிவிடும்;அவர் நமது அனைத்து முற்பிறவி கர்மவினைகளையும் எரித்து சாம்பாலாக்கிவிடுவார்;நமக்கு இப்பிறவியோடு மறு பிறவி இல்லாத முக்தி கிட்டிவிடும்;

போன நான்கு பிறவிகளில் செய்த பாவம்+புண்ணியங்களின் விளைவுகளை அனுபவிக்க இந்த ஒரு மனிதப் பிறவி நமக்கு தரப்பட்டிருக்கின்றது;ஆக,இன்னும் எத்தனை பிறவிகள் எடுப்பது?

பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலைகிரிவலம் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றோம்;இது தவறு;எல்லா நாட்களிலும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;மிகச் சிறந்த கிரிவல நாள் தேய்பிறை சிவராத்திரி தான்!
அப்படி கிரிவலம் செல்லும் போது ஜபிக்க வேண்டிய துதி ஒன்று இருக்கின்றது;

நினைக்க அருணையது நீள்விசும்பு முத்திபர
பனித்த தரிசனமா பரமுத்தி தில்லையென
கனிந்த ஆரூரும் கருமுக்திப் பேராய
வனிதப் புவிகண்ட வரமுத்தி பூசுரமா
நனிபுலமே நானிலமே நஞ்சீய ராவரே

இந்த கிரிவலத் துதியை எப்போது கிரிவலம் சென்றாலும் ஜபிக்கலாம்;எல்லா நாட்களிலும் வீட்டில் பூஜை செய்யும் போதும் ஜபிக்கலாம்;

1950 ஆம் ஆண்டில் ரமண மகரிஷியின் உயிர் பிரிந்து ஒளியாகி அண்ணாமலைக்குள் புகுந்தது;தமது 12 ஆம் வயதில் அண்ணாமலைக்கு வருகை தந்த ரமண மகரிஷி அதன் பிறகு எக்காரணம் கொண்டும் அண்ணாமலையை விட்டு எங்குமே செல்லவில்லை;

ரமண மகரிஷிக்கு குருவாக இருந்து வழிகாட்டியவர் அண்ணாமலையார்! இந்த பெரும் பாக்கியம் கடந்த 5100 ஆண்டுகளாக எவருக்கும் கிட்டவில்லை;

ரமண மகரிஷி தமது வாழ்நாளில் 10,000 தடவைக்கும் மேலாக அண்ணாமலை கிரிவலம் வந்தவர்;சில சமயம் அவர் ஒருமுறை கிரிவலம் முடிக்க 108 நாட்கள் எடுத்துக் கொண்டார்;

ஒரு நாளுக்கு ஆறு முறை வீதம் 40 ஆண்டுகள் தினமும் கிரிவலம் வந்த மஹான்களும் அண்ணாமலையில் ஐக்கியமாகி இருக்கின்றார்கள்:

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

Tuesday, July 31, 2018

கால தேவன் என்ற கால பைரவரின் அருளைப் பெற!

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என அனைத்தையும் ஈசனின் சார்பாக நிர்வாகித்து வருபவர் ஈசனின் அவதாரமான கால பைரவர் ஆவார்;இவரது பெயரில் ஒரு    உலகம்  இருக்கின்றது;  அதற்கு பைரவ உலகம் என்று பெயர்;

தொடர்ந்து 12 பிறவிகள் மனித பிறப்பு எடுத்து அனைத்து பிறவிகளிலும் மஹாகால பைரவப் பெருமானை மட்டுமே பேசி,ஜபித்து,வழிபட்டு,விரதம் கொண்டு வாழ்ந்தால் பைரவ உலகத்தில் பைரவ சித்தர் என்ற புகழுடன் வாழும் வாய்ப்பு கிடைக்கும்;

ஜோதிடர்கள் தினமும் வழிபடவேண்டிய தெய்வம் மஹாகால பைரவர் ஆவார்;ஜோதிடர்கள் தினமும் ஒருமுறையாவது ஓம் ஸ்ரீவாரதாரக சித்தகுரு நம ஸ்வாஹா என்று ஜபிக்க வேண்டும்;இந்த பைரவ சித்தரின் அருளை ஒவ்வொரு ஜோதிடரும் பெறுவது அவசியம் ஆகும்;

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆர்ய பட்டரும்,வராக மிஹிரரும் இந்த ஸ்ரீவாரதாரக சித்தரை உபாசனை செய்து,இவரது அருளைப் பெற்றுத்தான் அழியாத புகழ் கொண்ட ஜோதிட நூல்களை இயற்றினார்கள்;

உபாசனை என்பது மிகவும் கடினமானது;விநாயகர் உபாசனை,முருகக் கடவுள் உபாசனை,சிவ உபாசனை,காளி உபாசனை,துர்கை உபாசனை,பைரவ உபாசனை,வராகி உபாசனை,வீரபத்திரர் உபாசனை என்று ஏராளமான உபாசனைகள் இருக்கின்றன;துர்கையில் ஒரு அவதாரம் இருக்கின்றது;அவளுக்கு 18,000 கைகள் உண்டு;தட்சிண காளி உபாசனை வெற்றி பெற வேண்டும் என்றால் 80,00,00,000 ஆண்டுகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;முருக தரிசனம் செய்ய வேண்டும் என்றால் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;12 வது ஜன்மத்தில் முருக தரிசனம் கிட்டும்;மதுரையில் இருந்து கன்னியாக்குமரி வரை பல ஆயிரக்கணக்கான துறவிகள் முருகக் கடவுளை தரிசனம் செய்துஅவரது அருளால் பல சித்துக்கள் புரிந்துள்ளார்கள்;பலரது கர்மவினைகளை (தீராத நோய்,கடன்) தீர்த்துள்ளார்கள்;மிக மிக எளியது விநாயகர் உபாசனை!

மிக மிகக் கடினமானது தான் பைரவ உபாசனை! அரை விநாடி அளவுக்கு கவனக் குறைவு ஏற்பட்டாலும் பைரவ கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதை உணர்ந்தமையால் தான் நமது கலியுகத்தில் ஷீர்டி சாய்பாபா,பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்,மாயம்மா போன்றவர்கள் பைரவ பக்தியை 40 ஆண்டுகள் வரை பின்பற்றினார்கள்;

பைரவரின் வாகனமாகிய நாய்களுக்கு தினமும் உணவு இடுவதன் மூலமாகவே பைரவரின் அருளைப் பெற முடியும்;யார் தொடர்ந்து 40 ஆண்டுகள் பைரவருக்கு (தெரு நாய்கள்) தினமும் உணவு தானம் செய்து வருகின்றார்களோ,அவர்களுக்கு பைரவரின் அருளும்,பைரவ சித்துக்களும் சுலபமாக கிடைக்கும்;

இதைச் செய்ய இயலாதவர்கள் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரர் கோவிலுக்கு தொடர்ந்து 64 தேய்பிறை அஷ்டமிகளுக்கு சென்று வழிபடுவதன் மூலமாக அஷ்டமாசித்துக்களை பைரவரின் அருளால் பெற முடியும்;கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கிராமம் சோழபுரம்! இங்கே இருக்கும் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயத்திற்கும் பைரவ உலகத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கின்றது;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பம் ஆகும் நொடியில் இருந்து நிறைவடையும் விநாடி வரை பல சித்தர்கள் தமது சீடர்களோடு வருகை தந்து இங்கே சூட்சுமமாக வழிபாடு செய்து வருகின்றார்கள்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் ஈசனின் அருளால் மஹாகால பைரவர் உதயமானார்;இன்றைய கலியுகத்தில் இந்த மூன்று கால சக்திகளும் கார்த்திகை மாதத்தில் வருவது அரிதிலும் அரிது;

முதல் யுகமான கிருதயுகத்தில் ஒரு ஆண்டு என்பது நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மூன்று ஆண்டுகளுக்குச் சமம்;முதல் யுகமான கிருதயுகத்தில் சனி ஒரு ராசியை கடக்க 12 ஆண்டுகள் வரை ஆகியிருக்கின்றது;
மஹாகால பைரவப் பெருமானின் அருளைப் பெற ஒரு அரிய நாள் அமைந்திருக்கின்றது;

விளம்பி வருடம்,ஆடி மாதம்,19 ஆம் நாள் தேய்பிறை அஷ்டமி திதியும்,பரணி  நட்சத்திரமும் சேர்ந்தே வந்திருக்கின்றது;4.8.2018 சனிக்கிழமை காலை 8.04 முதல் மறுநாள் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.02 வரை தேய்பிறை அஷ்டமி திதியும்,4.8.2018 சனிக்கிழமை காலை 11.50 முதல் மறுநாள் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11.26 வரை பரணி நட்சத்திரமும் வர இருக்கின்றது;

பைரவரின் அருளைப் பெற விரும்புவோர் 4.8.2018 சனிக்கிழமை காலை 11.51 முதல் 5.8.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் மட்டுமாவது கால பைரவர் சன்னதியில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;

வசதியும் சந்தர்ப்பமும் உள்ளவர்கள் இதே நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் செல்வது மிகவும் நன்று;ஒரே நேரத்தில் மஹா கால பைரவரின் அருளோடு,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;

மஹத்தான செல்வ வளத்தை பெற விரும்புவோர் புதுக்கோட்டை அருகில் இருக்கும் பொன்பேத்தி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்;இங்கே இருக்கும் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் கால பைரவராக அருள்பாலித்து வருபவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;

இவரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரத்தால் ஜபிக்க வேண்டும்;அல்லது துர்கை சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகத்தை ஜபித்தும் வழிபடலாம்;

மஹாவராகியை தினமும் ஜபித்து வருபவர்கள் மஹா கால பைரவரையும் ஜபிக்கலாம்;

மஹாகால பைரவரின் அருள் பெற்ற பைரவ சித்தர் ஸ்ரீவாரதார சித்தரின் அருளால் இக்கட்டுரையை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்;       

Sunday, July 15, 2018

பாரதத்தேசத்தின் எதிர்காலம் பற்றி விசிறிச் சாமியார் அவர்களின் கருத்துக்கள்

உத்திரப்பிரதேசமாநிலத்தில் பிறந்து,நமது அண்ணாமலையில் ஐக்கியமாகிவிட்டவர் விசிறிச்சாமியார் அவர்கள்;இவர் ஒருமுறை மட்டுமல்ல;பல முறை கேரளாவில் இருக்கும் ஆனந்த ஆஸ்ரமத்திற்குச் சென்றவர்;அங்கே ஆனந்த ஆஸ்ரமத்தை ஸ்தாபித்த ராமதாஸ் சுவாமிஜியை சந்தித்து ஆசி பெற முயன்றிருக்கிறார்;அவர்தான் இவரை பிச்சை எடு என்று ஆசி கூறியுள்ளார்;

அவரது வார்த்தைகளாலேயே விசிறிச்சாமியார் தன்னை பிச்சைக்காரன் என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்;அண்ணாமலையாரை அப்பா என்றே அழைத்துக் கொள்ளத் துவங்கினார்;

பாரத தேசம் என்பது எனது நாடு; எனது ‘அப்பா’வின்(அண்ணாமலையாரின்) பூமி;இப்பிச்சைக்காரனின் (விசிறிச்சாமியார்) இதயம்;புண்ணிய பூமி;வேத பூமி;இப்பிச்சைக்காரனின் விளையாட்டு மைதானம்;

நமது பாரததேசம் செழித்தோங்கி,அண்டசராசரத்திற்கு எல்லாம் வழிகாட்டும்;ஒவ்வொரு துறையிலும் பாரதம் பிற நாடுகளுக்குத் தலைமையேற்று நடத்தும்;அண்டம் முழுவதும் பாரதம் சொல்லுவதையே கேட்கும்;

எல்லாத்துறைகளிலும் மற்ற நாடுகளுக்குப் பாதையினை,நல்லப் பாதையினை பாரதம் காட்டும்;
அணு ஆயுதங்கள் போன்ற தீவினை ஆயுதங்களில் இருந்து நமது தாயகத்தை எனது ‘அப்பா’(அண்ணாமலையார்) காப்பாற்றுவார்;பாரதம் எந்தப் போரிலும் தாக்கப்படாதவாறு அவர் பார்த்துக் கொள்ளுவார்;பாரதத்தின் மேல் எந்த ஆபத்தும் வந்து தாக்காமல் அவர் பார்த்துக் கொள்ளுவார்;

உலகம் முழுவதற்கும் பாரதம் தலைமையேற்கும்;இந்துக்களின் சன்மார்க்கம் உலகெங்கும் பரவும்;இது விரைவில் நடக்கும்;

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்