Friday, January 22, 2016

இப்பிறவி முழுவதும் மாந்திரீகத்தால் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் கணபதி மந்திர ஜபம்!!!


கடந்த பல நூற்றாண்டுகளாக நமது பாரத தேசம் வலிமை மிக்க தேசமாகவும்,உலக நாடுகளுக்கு உணவு ஊட்டும் தாய் நாடாகவும் இருந்து வந்தது;

மந்திரங்களை நாடு முழுக்க தினமும் 14 மணி நேரம் ஜபித்து வந்ததும்,நாட்டு மக்கள்தொகையில் 85% பேர்கள் தினமும் அன்னை அரசாலை(வராகி) வழிபாடு செய்து வந்ததுமே இதற்குக் காரணம்!

வியாபாரம் வந்த இங்கிலாந்து கிறிஸ்தவ வியாபாரிகள் இந்த நாட்டின் செல்வச் செழிப்பில் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்;பிச்சைக்காரர்களே கிடையாது;வீட்டிற்கு கதவும் கிடையாது;பூட்டும் கிடையாது;குடிக்க தண்ணீர் தருவதில்லை;மாறாக மோர் முதலான பானகங்கள் தான் தந்தனர்;

ஆன்மீகத்தின் அடிப்படையில் 20,00,000 ஆண்டுகளாக இயங்கி வந்த பாரதம்,இங்கிலாந்து கிறிஸ்தவர்களின் பிடியில் சிக்கத் துவங்கியதும்,இந்த நாட்டின்,நாட்டுப் பண்பாட்டின் முதுகெலும்பாகிய கோவில்,பசு இனம்,விவசாயம்,பெண்கள் இவைகளை அழிக்கவும்,இழிவுபடுத்தவும் திட்டமிட்டு 300 ஆண்டுகளாக செயல்பட்டனர்;அதன் பின்விளைவுகளை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம்;கூடவே,தேசத்தின் பண்பாட்டு மரியாதையைத் தெரிந்தவர்களைக் கொல்வது,கிறிஸ்தவம்,ஆங்கிலம் இவைகளைப் பரப்புவது போன்ற நயவஞ்சகவேலைகளில் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்பட்டனர்;நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல் எப்படியெல்லாம் கடந்த 300 ஆண்டுகளில் நமது இந்துப் பாரம்பரியத்தில் இருந்து இந்துக்களாகிய நம்மைப் பிரித்தார்கள்? என்பதை விரிவாக எழுதியிருக்கின்றனர்;

இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் நிம்மதியில்லாமல் இருப்பதற்குக் காரணம்,நமது முன்னோர்கள் நமக்கு உபதேசம் செய்தவைகளை பின்பற்றுகிறோம்;ஆனால்,முழுமையாக பின்பற்றுவதில்லை;அதனால் தான் அரசியலில் குழப்பம்;தொழில் துறையில் குழப்பம்;ஆன்மீகத்துறையிலும் குழப்பம்;தினசரி வாழ்க்கையிலும் குழப்பம்,குடும்ப அமைப்பில் குழப்பம்;

இந்த குழப்பத்தின் ஊடாக நன்றாக நம்மிடம் இருந்து வருமானம் பார்ப்பவர்கள் யார் தெரியுமா?
பன்னாட்டு நிறுவனங்களே!

இன்றைக்கு நாட்டுமக்கள் தொகையில் 0.05% பேர்கள் தான் நமது பாரதமாதாவாகிய அரசாலை(வராகி)யை தினமும் வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர்;இதனாலும்,உலகின் மிக நீண்டகாலமாக வல்லரசு நாடாக இருந்த நமது பாரத்தை சுண்டைக்காய் நாடுகளும்,வெறும் 1000 பேர்கள் கொண்ட ரவுடிக்கூட்டமெல்லாம் தீவிரவாதிகள் என்ற முகமூடி அணிந்து கொண்டு நமது நாட்டை மிரட்டுகின்றன;

தனிமனிதர்களின் நிலை உயர்ந்தால் தான்,அந்த நாட்டின் நிலை உயரும் என்பது சுவாமி விவேகானந்தரின் கூற்று;அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் வலிமைமிக்கவர்களாக மாற வேண்டும்;ஆன்மீகத்தில் வலிமை என்பது மாந்திரீகத்தால் சிறிதும் பாதிக்கப்படாமல் இருப்பதுதான்;

மாந்திரீகம் என்பது அஷ்டகர்மாக்களின் தொகுப்பு;இதில் இருந்து இப்பிறவி முழுவதும் சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது அஷ்ட கணபதி மந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை ஜபித்து நிறைவு செய்வதுதான்;

இனி எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்தாலும்,அத்தனை மனிதப் பிறவிகளிலும் அஷ்டகர்மாக்களின் தாக்குதல் சிறிதும் இன்றி வாழ விரும்பினால்,நமது குழந்தையை அதன் 10 வது வயதில் இருந்து இந்த அஷ்ட கணபதி மந்திரத்தை ஜபிக்க வைக்க வேண்டும்;

மாந்திரீகத்தில் மிகவும் உச்சகட்டமான கெடுதியைச் செய்யக் கூடியது காஷ்மோரா! இன்றைய ஒடிசா,மத்தியப்பிரதேசம்,அசாம் மாநிலங்களில் இருக்கும் வனப்பகுதிகளில் மட்டும் இதை செய்துதரும் ஆட்கள் இருக்கின்றார்கள்;அதனால் கூட இந்த அஷ்டகணபதி மந்திரம் சித்தி பெற்றவர்களுக்கு தீங்கு தர முடியாது;

குறளி,ஜின்,மோகினி,குட்டிச்சாத்தான் என்று ஒரு மிகப்பெரிய சூட்சும சக்திகளைக் கொண்ட சூட்சும உலகத்தில் இருந்து எதையாவது ஒன்று அல்லது இரண்டை வைத்துக் கொண்டு தான் இன்று பலர்,பிறருக்கு தீங்குகள் செய்து கொண்டிருக்கின்றனர்;யார் தொடர்ந்து 48 நாட்கள் பழமையான சிவாலயம் அல்லது அம்மன் ஆலயம் சென்று வருகிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை;

ஆதி கணபதி
மகா கணபதி
நடன கணபதி
சக்தி கணபதி
பால கணபதி
உச்சிட்ட கணபதி
உக்கிர கணபதி
மூல கணபதி
என்ற எட்டு விநாயக சக்திகளுக்கும் மூலமந்திரம் ஒன்றே ஒன்றுதான்;சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்கு ஈசனின் ஆணைப்படி கொண்டு வந்தவருமான அகத்திய மகரிஷி நமக்காக இதை உபதேசித்திருக்கின்றார்;

12 மாதங்களில் இந்த அஷ்ட கணபதி சித்தியாகிவிடும்;நாமும் இனி சர்வசக்தி வாய்ந்தவராகி விடுவோம்;

முறைப்படி குரு உபதேசம் மூலமாக இந்த அஷ்ட கணபதி மந்திர உபதேசம் பெற உங்கள் பிறந்த ஜாதகத்துடன் எம்மை(கை.வீரமுனி. . .9092116990 / 9364231011=ஸ்ரீவில்லிபுத்தூர்) நேரில் சந்திக்கவும்;ஆண்,பெண்,குழந்தை,சிறுவர்,சிறுமி என்று எவரும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;

எங்கே எப்படி ஜபிக்க வேண்டும்?என்ற விபரங்களும் மற்றும் உங்களுடைய ஆன்மீகத் தேடல்களுக்கான விடைகள் இங்கே கிடைக்கின்றன;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

ஈசனின் பெயரின் பெயர்க்காரணங்களும்


ஒரு உருவம்,ஓர் நாமம் இல்லாத இறைவனை ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு நாம் அர்ச்சிக்கின்றோம்;ஆராதிக்கின்றோம்;

ஆனால்,ஒவ்வொரு நாமத்திற்கும் ஆழ்ந்த கருத்துக்கள் உண்டு;
ஆனால்,அதைப் பற்றி நாம் யோசிப்பதே கிடையாது;

 திருப்பாற்கடலைக் கடையும் போது ஆலகால விஷம் வந்தது;ஈசனைத் தவிர யாரும் அதை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை;அண்ட சராசரங்கள் அனைத்தின் நலனுக்காக ஈசன் அந்த ஆலகால விஷத்தை உண்டான்;இந்தத் தியாகத்திற்கு ஈடு இணை ஏதும் கிடையாது;அதன் காரணமாகவே “தியாகராஜன்” என்று போற்றப்படுகின்றான்;

நம்மிலும் எத்தனையோ பேர்கள் தியாகராஜன் என்ற பெயரை வைத்துக் கொண்டு இருக்கின்றோம்;ஆனால்,மற்றவர்களுக்காக வாழ்வில் இதுவரை எதைத் தியாகம் செய்திருக்கின்றோம்?

கருணையின் எல்லை!
என்றுமே அணுகமுடியாத எல்லை கடந்த துணிவு!!
அத்தனையும் கடந்த நிலையில் உண்மைக்காகவே கடுமையாக விரதம் இருந்து,வந்த வேதனைகள் எல்லாவற்றையும் கழித்தவன் அண்ணாந்திருக்கும் அண்ணாமலையான்!!!
இதனால் தான் ஈசனுக்கு “அண்ணாமலையான்” என்று பெயர் வைத்தார்கள்;ஏனென்றால்,கருணையின் எல்லை;அணுகமுடியாத எளிமை;ஆனால்,அணுக முடியும்;

இதுதான் தெய்வீகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதுமை;ஆனால், அணுக முடியும் என்பதை யாரால் தான் புரிந்து கொள்ள முடியும்!

நமக்கு வைத்த பெயருக்குத் தகுந்தாற்போல வாழவில்லை என்றால்,நாம் அந்த இறைநாமத்தை அவமதிப்பதாகத்தான் கருதப்படும்;ஆகவே,முடிந்த மட்டும் நாம் வைத்துள்ள பெயர்களுக்குத் தகுந்தவாறு வாழ்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்;

நன்றி:எங்கும் சிவன்;எதிலும் சிவன்;பக்கங்கள் 22,23

ஓம் அருணாச்சலாய நமஹ

ஈசனை அடையும் வழிமுறைகள் எத்தனை?


ஈசனை அடையும் வழிமுறைகள் நான்கு!

1.பக்தியோகம்
2.ஞானயோகம்
3.கர்ம யோகம்
4.ராஜ யோகம்
இந்த நான்கு மார்க்கங்களில் எது ஒரு மனிதனுக்குக் கைகூடும் என்பது அந்த மனிதனின் பிறந்த ஜாதகத்தை வைத்தே கண்டறிய முடியும்;

சிலருக்கு குறிப்பிட்ட வருடங்கள் வரை மட்டுமே அருள் வாக்கு சொல்லும் ஆற்றல் இருக்கும்;அதையும் ஜோதிடத்தின் மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்;

வாஸ்து,சாமுத்ரிகா லட்சணம்,எண் கணிதம்,சரக்கலை,பஞ்சபட்சி சாஸ்திரம்,அருள்வாக்கு,சித்த மருத்துவம்,மூலிகைகளைக் கண்டறிதல்,மந்திரங்களை அறிதல்,ஜபித்தல் மற்றும் உபதேசித்தல் போன்றவை அனைத்துமே ஜோதிடத்தின் ஒரு அங்கமாக கலியுகத்துக்கு முந்தைய யுகம் வரை இருந்தன;இப்போது இவை ஒவ்வொன்றும் தனித் தனி கலைகளாகி விட்டன;

பக்தி மார்க்கமே நாம் வாழ்ந்து வரும் கலியுகத்திற்கு பொருத்தமானது;சராசரி மனிதர்கள் கோடிக்கணக்கானவர்களுக்கு ஜோதிடம் ஆன்மீகத்தின் நுழைவு வாசல்,முக்திக்கு இட்டுச்செல்லும் டார்ச் லைட் என்றே தெரியவில்லை;

பக்தி மார்க்கத்தில் தான் மந்திர ஜபம்,வீட்டிலேயே வழிபடுதல்,கோவிலில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட கடவுளை வழிபடுதல் போன்றவை வருகின்றன;தீமிதித்தல்,மாலையிட்டு விரதம் இருந்து பாதயாத்திரை சென்று இறை தரிசனம் செய்தல் இவைகள் எல்லாம் பக்தி மார்க்கத்தில் வரும்;

ஞான மார்க்கத்தில் தியானம்,யோகம்,யோகாசனம் போன்றவைகள் வரும்;இந்த மார்க்கம் இப்போது நலிவடைந்து வருகின்றது;
கர்ம யோகம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியவில்லை;நமக்கு 18 வயது ஆனதில் இருந்து நமது இறுதி நாள் வரையிலும் எந்த ஒரு புகழ் கிடைத்தாலும் அதனால் பெருமைப் படக்கூடாது;எந்த ஒரு அவமானம் கிட்டினாலும் அதனால் வருத்தப்படக் கூடாது;எல்லாம் ஈசன் செயல்;என்றோ அல்லது எல்லாம் அன்னை அரசாலை(வராகி) செயல் என்று ஒப்படைத்துவிட்டு நமது அடுத்த கடமையைச் செய்யச் சென்றுவிட வேண்டும்;சுருக்கமாக சரணாகதி தத்துவம்!

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைய இதைவிட குறுக்கு வழி வேறு எதுவும் இல்லை;இதையே இணையம் வழியாக யாம் பரப்புகிறோம்;நேரில் சந்திப்பவர்களுக்குப் போதிக்கிறோம்;

ராஜயோகம் இதுவும் நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே கைகூடும்;

தினசரி மந்திரம் ஜபித்தல்
அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்லுதல்
துவாதசி நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்தல்
நமது ஜன்ம நட்சத்திர நாட்களில் குறிப்பிட்ட சிவாலயத்தில் அன்னதானம் செய்தல் மற்றும் அங்கே உறைந்திருக்கும் ஈசனுக்கு அபிஷேகம் செய்தல்
குறிப்பிட்ட விருட்சங்களை வளர்த்தல்
இவைகள் மட்டுமே நம்மை முக்திக்கு இட்டுச் செல்லும்;

யாராலும் எவரது தலையெழுத்தையும் மாற்றிவிட முடியாது;ஆனால்,அப்படி மாற்றிட அவர்களுடைய பிறந்த ஜாதகம் கைகொடுக்கும்;
நமது விதியை மாற்றிட நாம் தான் கொஞ்சம் கஷ்டப்படவேண்டும்;நாம் தான் குறிப்பிட்ட கடவுளை குறிப்பிட்ட வருடங்கள் அல்லது ஜன்மங்களுக்கு வழிபட வேண்டும்;

நமது ஜாதகம் என்பது என்ன தெரியுமா?
கடந்த ஐந்து மனிதப் பிறவிகளில் நாம் செய்த பாவ மற்றும் புண்ணியச் செயல்களின் தொகுப்பு!!!

அதில் இருக்கும் பாவ வினைகள் நம்மைத் தாக்கும் முன்பே கண்டறிந்து அதில் இருந்து மீள எப்படி எந்த ஈசனைச் சரணடைய வேண்டும் என்பதை விளக்கும் தெய்வீகக் கலையே ஜோதிடம்;

இந்த பிரபஞ்சத்தின இயக்குவது மஹா கால பைரவப் பெருமான்!
அவரது மூச்சுக்காற்றே பஞ்சாங்கம்!
அவரை தினமும் தொழ வேண்டியது ஜோதிடர்களின் கடமை!!

அவரது துணைவியாக இருந்து அவரையே இயக்கும் அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவதே நமது பிறவிகளின் நோக்கம்!!!

அதனால் தான் ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்;
உங்கள் விதியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று தங்களிடம் வேண்டுகிறோம்;

இப்படிக்கு

கை.வீரமுனி. . . ஸ்ரீவில்லிபுத்தூர். 27 வருட ஜோதிட ஆசிரியர்;ஜோதிட எழுத்தாளர்,கலையுலக ஜோதிடர் 9092116990   9364231011

சிவ மந்திர ஜபமே அனைத்து கடவுள்களின் அருளாற்றலைத் தரும்!

சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை; என்பது பெரியோர்கள் கூற்று;

நம் ஒவ்வொருவருமே எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ,அப்போதெல்லாம் சிவநாமம் சொல்ல வேண்டும்;

ஒவ்வொரு வீட்டிலும் சிவன் நாமமானது சதாசர்வகாலமும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்;இந்த சிவ ஒலி இல்லாவிட்டால்,எந்த தேவதைகளும் வந்து அனுக்கிரகம் செய்ய மாட்டார்கள்:

தானாய் ஆகும் எந் தனித்திருந்த நாயகன்,எத்தேவரை வணங்குவோராய் இருந்தாலும்,நாரணன்,முருகன்,ஆதிபிரம்மன் என்று பல சக்தியுடன் தான் சேர்த்தே,வித்தகமாய் பேசுகின்ற விதவிதமாய் காளி,எல்லைக்காளிகள் என்றே,உள்ளது உள்ள வண்ணமாய் அடுத்து இருக்கின்ற காலையிலே கிராம தேவதை,வைப்புதேவதை,வைத்திய தேவதை,சின்னக் கருப்பு,மாடக்கருப்பு, காடன் மாடன்,கூடன்,எனகாலன்,சின்ன வாதகன்,மாத வாதகன்,அத்த வாதகன்,சூலி காகனன்,சின்ன கானகன்,வான கானகன் என்று தேவதைகளை அழைத்தாலும் யார் அழைத்தாலும், அன்னவர் இல்லத்தில் “சிவசிவ” என்று கூறினால்,அவர் அனைவரையும் வணங்கிய பலன் வந்து சேருமே!

எனவே,ஒவ்வொருவர் வீட்டிலும் ‘சிவசிவ’ என்று இடைவிடாமல் சொல்லிக் கொண்டு இருங்கள்;சிவநாமத்தை எங்கும் ஒலிக்க வைப்பதுதான் அடியார்களுடைய தலையாய கடமை;

நன்றி:நெஞ்சில் நிறைந்தவன் சிவனே! பக்கம் 23,24


Wednesday, January 20, 2016

பாண்டிய மன்னனுடைய குலதெய்வம் மூவரைவென்றான் மரிக்கொழுந்தீஸ்வரர்+மரகதவல்லியம்மாள்!


விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருப்பது மூவரைவென்றான் கிராமம்! இங்கே மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஆலயமே அருள்மிகு மரகதவல்லியம்மை சமேத மரிக்கொழுந்தீஸ்வரர்!

பாண்டிய மன்னனுக்கு பல ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்தது;தொடர்ந்து இந்த ஆலயத்திற்கு வருகை தந்து சிவராத்திரி பூஜை,பிரதோஷ பூஜை,அமாவாசை பூஜை செய்தமையால் பாண்டியமன்னனுக்கு அம்பிகையின் அம்சமான மீனாட்சியம்மனே மகளாகப் பிறந்திருக்கிறாள்;

வத்ராயிருப்பு,அழகாபுரி,குன்னூர்,கிருஷ்ணன்கோவில் கிராமங்கள் வழியாக இந்த ஆலயத்தை வந்தடையலாம்;ஒவ்வொரு பவுர்ணமிக்கும் இங்கே கிரிவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது;

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு மடவார்வளாகம் திருக்கோவிலுக்கு உட்பட்ட துணைக் கோவில்களில் ஒன்றாக இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது;

அன்னை அரசாலை(வராகி)யின் ஒரு அவதாரமே மதுரை மீனாட்சி என்பது நம்மில் பலரால் மறந்துவிட்ட உண்மையாகும்;எனவே,அன்னை அரசாலை(வராகி)யின் அருளைப் பெற விரும்புவோர் அவரவர் ஜன்ம நட்சத்திர தினத்தன்று இங்கே வருகை தந்து ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் ஓம் வராகி சிவசக்தி ஒம் என்ற மந்திரத்தை ஜபிப்பது அவசியம்;

பால்,வில்வம்,தேன்,விபூதி,இளநீர்,குங்குமம் இவைகளை இந்த ஆலயத்திற்கு அபிஷேக அன்பளிப்பாகத் தருவதன் மூலமாக புத்திர தோஷத்தை சரி செய்ய முடியும்;

குழந்தை இல்லாதவர்கள் தொடர்ந்து 16 திங்கட்கிழமை அல்லது 16 பிரதோஷம் அல்லது 16 அமாவாசை அல்லது 16 சிவராத்திரி அல்லது 16 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு இங்கே வருகை தந்து ஒரு முகூர்த்த நேரம் தங்குவதன் மூலமாக(தங்கி ஓம் வராகி சிவசக்தி ஓம் என்ற மந்திரம் ஜபிக்க வேண்டும்;)மழலைச் செல்வம் பெறுவார்கள்;

தொடர்ந்து 16 முறை என்பது இன்றைய சிக்கலான கால கட்டத்தில் வருவது சிரமம் தான்;விட்டு விட்டாவது 16 முறை வந்துவிடவேண்டும்;

விரைவானப் பலன் பெற விரும்புவோர் 16 நாட்கள் தினமும் வந்தும் வழிபடலாம்;வசதியுள்ளவர்கள் அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கித் தரலாம்;வசதியற்றவர்கள் இந்த ஆலயத்தை தினமும் சுத்தப்படுத்துவது போதுமானது;

ஓம் வராகி சிவசக்தி ஓம் என்பது 121 ஆண்டுகளாக மறக்கப்பட்ட சிவமந்திரங்களில் ஒன்று;

ஒருவேளை இதை ஜபிக்க விருப்பமில்லாதவர்கள் பின்வரும் சிவமந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;

ஓம் ரீங் மரிக்கொழுந்தீஸா;மரிக்கொழுந்தீஸா
அல்லது
ஓம் ரீங் சிவ சிவ
அல்லது
ஓம் ரீங் சதாசிவ சதாசிவ
அல்லது
ஓம் அருணாச்சலாய நமஹ
அல்லது
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
அல்லது
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீரீம் நமசிவாய பிரம்மனே நமஹ

சிறுகுறிப்பு:ஒரு சிவனை வழிபட ஏன் இத்தனை சிவமந்திரங்கள் கொடுத்துள்ளோம்?

மனிதர்கள் ஒவ்வொருவருவரும் ஏதாவது ஒரு பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் பிறந்துள்ளனர்;அவர்களை அந்த பஞ்சபூத தத்துவமே இயக்குகிறது;அவர்களுக்கு ஏதுவான மந்திரங்களையே இங்கே கொடுத்திருக்கிறோம்;இதில் உங்களுக்கு பிடித்தமான சிவமந்திரம் ஏதாவது ஒன்றுதான் இருக்கும்;அதை மட்டும் ஜபித்தால் போதும்;

சிலர் மண் தத்துவத்தில் பிறந்து அதன் படி வாழ்ந்துவருகின்றனர்;
சிலர் நெருப்பு தத்துவத்தில் பிறந்துள்ளனர்;
சிலர் நீர் தத்துவத்தில் வாழ்ந்து வருகின்றனர்;
சிலரது வாழ்க்கையை இயக்குவது காற்று தத்துவமே!
சிலரை இயக்குவது ஆகாய தத்துவமே!(ஆகாய தத்துவத்தில் 10 கோடி பேர்களில் ஒருவரே பிறக்கின்றனர்;)


மந்திரங்களை முறையாக ஜபிப்பது எப்படி?



முதலில் உடல் கட்டு மந்திரம் ஜபித்து,நமது மந்திரஜபத்தை எவரும் திருடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;(இணையத்தில் தேடினால் உடல் கட்டு மந்திரங்கள் பல கிடைக்கும்;இங்கேதான் குரு உபதேசம் தேவைப்படுகிறது!எனவே,நேரில் வந்து எம்மை ஒருமுறை சந்திக்கவும்;கை.வீரமுனி. . .9092116990,9364231011 @ ஸ்ரீவில்லிபுத்தூர்)

பிறகு,ஜன்ம நட்சத்திரத்தை இயக்கும் சித்தரின் ஆசியைப் பெற வேண்டும்;
பிறகு,குலதெய்வத்தின் ஆசியைப் பெற வேண்டும்;
பிறகு,நாம் விரும்பும் கடவுளின் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

எந்த மந்திரமாக இருந்தாலும்,இந்த முறைப்படிதான் ஜபிக்க வேண்டும்;

நம் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றும் ஆற்றல் நமது மந்திர ஜபம்,நாம் சில குறிப்பிட்ட ஆலயத்தில் குறிப்பிட்ட நாளில் செய்யும் அன்னதானம்,நாம் சிலருக்கு குறிப்பிட்ட கிழமையில் செய்யும் உதவி=இவைகளுக்கு மட்டுமே உண்டு;

பூமியில் பிறந்து மனிதராக வாழ்பவர்களுக்கு மட்டுமே தமது விதியை மாற்றியமைக்கும் சந்தர்ப்பங்கள் திரும்பத் திரும்பக் கிடைக்கின்றன;அதை முறையாகப் பயன்படுத்தி,நாம் விரும்பும் ஆன்மீக லட்சியத்தை அடைவதே நமது நோக்கம்;பலர் இதை நோக்கிச் சென்றாலும்,நயவஞ்சகத்தாலும்,விதிவசத்தாலும் திசைமாறிச் சென்றுவிடுகின்றனர்;

அதில் இருந்து மீள ஒரே வழி அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவதே!


வாழ்க பைரவ அறமுடன்:வளர்க வராகி அருளுடன்!!!

சிவமகான் வீரபிரம்மம் அவர்களின் ஆசியைப் பெற


இன்றைய ஆந்திரமாநிலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் வீரபிரம்மம்! இவர் ஒரு தலைசிறந்த சிவமகான் ஆவார்;கலியுகத்தில் என்னவெல்லாம் நடைபெறும் என்பதை இவர் அக்காலத்தில் ஒலைச்சுவடியில் எழுதி வைத்துள்ளார்;ஒலைச்சுவடித் தொகுதியில் இருந்து சிறு பகுதியை புத்தகமாக அவரது வழித்தோன்றல்கள் வெளியிட்டுள்ளனர்;அந்த புத்தகத்தின் பெயர்:கால ஞானம்!

கலியுகத்தில் கி.பி.2600 வரை என்னென்ன நடைபெறும்?என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்;அவரது எழுத்தின் முன்பாக நார்ஸ்டர்டாமஸ் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்;நார்ஸ்டர்டாமஸின்  நூற்றாண்டுகள் புத்தகத்தை விடவும் மிகவும் எளிமையாக,எல்லோருக்கும் புரியும் படியாக சிவமகான் வீரப்பிரம்மம் தனது சிவ அருளால் நமக்கு வழங்கியிருக்கிறார்;

நார்ஸ்டர்டாமஸை மேற்கு நாடுகள் தூக்கிவைத்துக் கொண்டு ஆட்டட்டும்;ஆனால்,எதிர்காலத்தில் நடைபெற இருப்பதை எழுத நார்ஸ்டர்டாமஸிற்கு துணை இருந்தது அவரது காசிப் பயணமே!

 கி.பி.1400களில் நார்ஸ்டர்டாமஸ் நமது நாட்டிற்கு வந்து மூன்று ஆண்டுகள் காசியில் தங்கி ஜோதிடம் கற்றுக் கொண்டார் என்பதை எவரும் சொல்வதில்லை;

ஆனால்,சிவமகான் வீரப்பிரம்மம் ஈசனிடம் பேசும் திறன் பெற்றவர்;அவர் ஈசனிடம் நினைக்கும் போதெல்லாம் உரையாடி கால ஞானத்தை எழுதியிருக்கிறார்;தமிழில் கற்பகம் புத்தகாலயம் இதை வெளியிட்டுள்ளது;

சிவனருள் கிட்டிட ஒரு அரிய சிவமந்திரத்தை சிவமகான் வீரபிரம்மம் அவர்கள் நமக்கு உபதேசித்துள்ளார்;
இதை 25,000 தடவை ஜபித்தாலே போதும்;

இந்த மந்திரத்தை நமக்கு உபதேசித்த சிவமகான் வீரபிரம்மத்தின் அருளும்,சூட்சும வழிகாட்டுதலும் நமக்கு கிட்டும்;

முயற்சி செய்வோமா?

ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீரீம் நமசிவாய பிரம்மனே நமஹ

ஒருநாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்,ஓராண்டு தினமும் ஜபித்துவந்தாலே நமது ஜப எண்ணிக்கை 25.000 ஐத் தொட்டுவிடும்;



வாழ்க பைரவ அறமுடன்:வளர்க வராகி அருளுடன்!!!