Monday, October 12, 2015

ஸ்ரீவித்யா உபாசனை என்றால் என்ன? அதை எப்படிச் செயல்படுத்துவது?


உபாசனை என்றால் தினமும் ஒரு குறிப்பிட்ட இறைசக்தியை,தகுந்த குருவின் ஆசியோடும்,வழிகாட்டுதலோடும்,கண்காணிப்போடும் பிரார்த்தனை அல்லது மந்திரஜபத்தின் மூலமாக தன் வசப்படுத்துவது!


இதனால் என்ன நமக்கு லாபம்?

போதுமப்பா இந்த மனிதப் பிறவி;என்று உள்ளம் நொந்து போனவர்களுக்கு பிறவிகளின் எண்ணிக்கையை குறைத்து,மறுபிறவியில்லாத முக்தியைத் தரும்;

அவரவர் ஜாதகப்படி இருக்கும் கர்மவினைகளைக் கண்டறிய வேண்டும்;அப்படிக் கண்டறிந்து,முறைப்படி உரிய நட்சத்திரம் நிற்கும் நாள் அல்லது திதியன்று வழிபாடு அல்லது சுயப் பரிகாரம் செய்ய வேண்டும்;இப்படி முறைப்படிச் செய்து நமது இப்பிறவியை பரிசுத்தமாக ஆக்கிடவேண்டும்;இதன் மூலமாக,நமது கர்மவினைகள்(கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது தேவையற்ற குடும்பக் குழப்பங்கள்) முழுமையாகவும்,நிரந்தரமாகவும் நீங்கிவிடும்;

அப்படி நீங்கினால் எது நமது வாழ்நாள் லட்சியமோ அதை அடுத்த சில ஆண்டுகளிலேயே அடைந்துவிடமுடியும்;கடந்த 27 வருட ஜோதிட வழிகாட்டுதல் மூலமாக பலரது வாழ்க்கை மலர்ந்திருக்கிறது;வறுமை/நோய்/கடன்/தீராத வழக்குகள் தீர்ந்திருக்கின்றன;அதன் பிறகு,அவர்கள்
வளமான,நலமான,நிம்மதியான வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்;



ஸ்ரீவித்யா உபாசனை செய்ய விரும்புவோர்,நேரில் சந்திக்கவும்;(முன் அனுமதி பெறவும்) கை.வீரமுனி ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990,9364231011

Wednesday, September 30, 2015

மகாளயபட்சம் ஆரம்பம் 28.9.15 முதல் 12.10.15 வரை


ஒவ்வொரு ஆண்டும் இறந்த முன்னோர்கள்,பித்ருக்களின் உலகில் இருந்து பூமிக்கு வருவது இந்த 15 நாட்கள் மட்டுமே! நமது வீட்டில் இருக்கும் நீர்நிலைகள் அல்லது வீட்டுக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் இவர்கள் இந்த 15 நாட்கள் வாசம் செய்வர்;இந்த 15 நாட்களில் ஒரே ஒரு நாளாவது நமது வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் எவராவது பித்ரு தர்ப்பணம் செய்யமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் காத்திருப்பர்;


நாம் தான் பணத்தின் பின்னால் ஒடும்போது எப்படி இதையெல்லாம் செய்வோம்?இந்த ஒரே ஒரு கடமையைச் செய்பவர்கள் ஒராண்டு வரை எந்தவித பணக்கஷ்டமும் இல்லாமல் வாழ்வார்கள்;எந்தவிதமான ஆபத்துக்களும் இவர்களை நெருங்காது;எந்தவிதமான கஷ்டங்களும் இவர்களை நெருங்கவே நெருங்காது;முன்னோர்களின் ஆசிக்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு;

அது எப்படி?

நாம் தினமும் வழிபட்டு வரும் கடவுளை விடவுமா?
ஆமாம்!


ராமயணகாலத்தில் ராமபிரான் வனவாசம் இருந்த போது, தனது தந்தையாகிய தசரத மஹாராஜாவுக்கு பித்ரு பூஜை செய்த இடங்கள் நிறைய உண்டு;அவற்றில் முக்கியமான இடங்கள் கும்பகோணம் மகாமகப் படித்துறையில் பைரவப் படித்துறையும்;அட்டவீரட்டானங்களில் முக்கியமான வீரட்டானம் என்று கருதப்படும் கொறுக்கை என்ற குறுக்கையும் ஆகும்;இவ்விடங்களில் பித்ரு தர்ப்பணம் செய்யும் போது,அதை ஏற்றிட தசமகாராஜாவே நேரில் வந்திருக்கிறார்;அவரை பார்க்க வெட்கப்பட்ட சீதா பர்ணசாலைக்குள் ஓடி ஒளிந்துகொண்டாளாம்;


அருட்சக்தி என்று பார்த்தால்,தெய்வத்தின் அருளைக் காட்டிலும் பித்ருக்களின் அருளே அதிக சக்தி வாய்ந்தது;ஏன் எனில்,ஒரு தெய்வத்தை வணங்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் அந்த தெய்வத்தின் அருள் பரவலாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது;ஆனால்,பித்ருக்களின் அருட்சக்தியோ தனக்கு கர்மா செய்யும் ஒரு குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது;ஆகவே,பித்ருக்களின் சக்தி அளவு அவர்களுக்கு அதிகமாகவே கிடைக்கிறது;

அதுமட்டுமா?

நாம் எந்தக்கோவிலுக்குச் சென்று என்ன பரிகாரம் செய்தாலும்,அதற்குரிய பலனை அந்தக் கடவுள் நேரடியாகத் தருவதில்லை;அப்படி ஒருவேளை தந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் ஆத்மபலம் நம்மிடம் இல்லை;அவை நமது பித்ருக்கள் மூலமாகவே நமக்குக் கிடைக்கிறது;குலதெய்வ வழிபாடும்,பித்ருக்கள் வழிபாடும் நமது இரு கண்கள்;இதை முறைப்படி யார் செய்கிறார்களோ அவர்களே சில ஆண்டுகளில் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிடுகிறார்கள்;

இன்று இருக்கும் மேல்நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களின் சி.ஈ.ஓ  க்கள் யார் தெரியுமா?
முற்பிறவிகளில் இந்தியாவில் பிறந்து குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் பித்ருக்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்தவர்களே!

ஒரு ஆண்டில்(ஒரு தமிழ் ஆண்டில் என்று எடுத்துக் கொள்ளவும்) ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை இந்தமூன்றில் ஏதாவது ஒரு அமாவாசையில் மட்டும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது அவசியம்;

ஒரே ஒரு புரட்டாசி அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால்,கடந்த 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலனைப் பெறலாம்;இந்த 15 நாட்களும் தாம்பத்தியத்தை நிறுத்தி வைப்பது அவசியம்;அது தொடர்பான எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது;பேசக்கூடாது;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;


Wednesday, September 23, 2015

மந்திரங்கள் என்றால் என்ன? அவைகளால் என்ன பயன்?


மனத்தை திறனாக்கும் எந்த ஒரு எழுத்தும் மந்திரம் எனப்படும் என்கிறார் திருமூலர்;
மந்திரம் என்பதற்கு வீடு என்று ஒரு அர்த்தமும் உண்டு;

நாம் உண்ணும் உணவு,70 நாட்களுக்குப் பிறகு,நமது உடலில் விந்து அணுவாக மாறுகிறது;18 வயது முதல் 70 வயது வரையிலும் ஒரு ஆணால் தனது வாழ்க்கைத் துணைக்கு தாம்பத்திய சுகத்தை,திருப்தியைத் தரமுடியும்;பழமையான ஆன்மீக நூல்கள் சொல்வது என்னவெனில்,மாதம் இருமுறை மட்டும் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் இது சாத்தியம் என்று விளக்கியுள்ளன;

ஆன்மீக ரகசியங்கள்,மந்திரங்கள்,இறைவழிபாட்டுமுறைகள் எல்லாமே 40,50,60 வயதுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டு,ஆன்மீகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதில்லை;இது மாபெரும் தவறு;ஏனெனில்,ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழி யோகக் கலையை ஐந்து வயதில் கற்க வேண்டும்;அப்படி கற்பதற்கு உடலை ஐந்து வயதிலேயே வளைத்துப் பழக்க வேண்டும்;

அதே சமயம்,யோகாசனம் செய்யும் போது மந்திரம் ஜபிக்க வேண்டும்; என்பது  சென்ற நூற்றாண்டுடன் மறைந்துவிட்ட மரபாக இருக்கிறது;ஆமாம்! ஒவ்வொரு யோகா செய்யும் போதும் அதற்குரிய கடவுளின் மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்;அப்போதுதான் அந்த யோகாசனம் உரிய தெய்வீக ஆற்றலை நமக்கு வழங்கும்;

இன்றைய வேகமான வாழ்க்கையில் யோகாவுக்கு அனைவரும் செல்கிறோம்;யோகாவை தினமும் எப்பாடு பட்டாவது செய்கிறோம்;ஆனால்,மந்திரங்கள் ஜெபியுங்கள் என்று எழுதினாலே,அவரை மந்திரவாதி என்று ஒதுக்குகிறோம்;

சமுதாய நலனுக்கு என்று உருவாக்கப்பட்டவையே அஷ்டகர்ம மந்திரங்கள்;இந்த மந்திரங்களுக்குள் இருந்து இவைகளுக்கு உயிராக இருப்பவர்களே அஷ்டபைரவப் பெருமான் கள்!

மனிதன் எந்த யுகத்திலும் செய்யும் செயல்களை எட்டுவிதங்களுக்குள் அடக்கிவிடலாம்;அந்த எட்டுவிதமான செயல்களை தடுத்து நிறுத்திட அல்லது ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்யவே அஷ்டகர்ம மந்திரங்கள் பயன்படுகின்றன;


இந்த எட்டுவிதமான செயல்கள் மூலமாக 64 விதமான பாவங்கள் அல்லது புண்ணியச் செயல்களை ஒவ்வொரு மனிதனாலும் செய்ய முடியும்;எனவேதான் அஷ்டபைரவர்கள் ஒவ்வொருவரும் எட்டு எட்டாக பிரிந்து 64 பைரவர்களாக உதயமானார்கள்;இந்த 64 பைரவர்களே,அஷ்ட கர்மாக்களால் செய்யப்படும் 64 வித பாவங்களுக்குத் தண்டனைகளை சூட்சுமமாக அடுத்தடுத்து வரும் பிறவிகளில் தருவர்;ஒருவேளை இந்த அஷ்ட கர்மாக்களைக்கொண்டு 64 விதமான புண்ணியச் செயல்களைச் செய்தால் அதற்கு உரிய யோகங்கள்,வரங்களையும் தருபவர்கள் இந்த 64 பைரவர்களே! அப்படி 64 வித பைரவர்கள் தரும் வரத்தை செயல்படுத்தும் சக்திகளே 64 வித வராகிகள்!


சிவபெருமான் அல்லது பைரவப் பெருமான் தமது பக்தர்களுக்கு வரங்களைத் தருவர்;எந்த ஒரு பெண் அல்லது ஆண் தொடர்ந்து தன்னை வழிபட்டு வருகிறார்களோ,அவர்களுக்கு தக்க நேரத்தில் வரம் தருவது இவர்களின் கடமை;அப்படி வரம் தரும்போது சில சமயம் முழுமையாகத் தராமல் போவதுண்டு;அந்த அரைகுறை வரத்தை முழுமைப்படுத்துவது சிவனின் துணை ஆதிபராசக்தி;பைரவப் பெருமானின் துணை வராகி;


நாம் பிறந்த ஜாதகத்தில்,சந்திரனுக்கு 2 ஆம் இடத்தில் ராகு நின்றாலோ,அல்லது 12 ஆம் இடத்தில் ராகு நின்றாலோ அதற்கு மஹா சக்தி யோகம் என்று பெயர்;இவர்களுக்கு அன்னை அரசாலையின் அருள் விரைவாக கிட்டும்;அதே போல,சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நின்று ஸர்ப்ப நட்சத்திரங்களில் நின்றாலும் அன்னை அரசாலையின் அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்று அர்த்தம்;


கும்ப லக்னமாகி,10 இடத்தில் ராகு இருக்கப் பிறந்தவர்களுக்கு அன்னை அரசாலை(வராகி)யின் அருள் சில மாதங்களுக்குள் கிட்டும்;ஏன் எனில்,இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்தான் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சர்;இவர் கொல்கொத்தா மாநகரத்தில் ஒரு காளிகோவிலில் பூசாரியாக வாழ்ந்து வந்தவர்;இவர் காளியிடம் தினமும் பேசுபவர்;

இதே அளவுக்கு காளியிடம் பேசும் திறன் உள்ளவர்கள் இன்றும் நம்முடைய தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்;ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பேசியது ஸ்ரீவராகிகாளியம்மன் என்ற தெய்வத்திடம் என்று கேள்விப்படும் போது பிரமித்துப் போகிறோம்;


ஓம் மகா கணபதி நமஹ என்பதும் ஒரு மந்திரமே!
வாழ்க வளமுடன்;வாழ்க வையகம் என்பதும் ஒரு பொதுநலம் தரும்,பூமி நலம் தரும் சர்வசக்தி வாய்ந்த மந்திரமே!
வாழ்க அறமுடன்;வளர்க அருளுடன் என்பதும் ஒரு ஆன்மீக மந்திரமே!
ஓம் சரவணபவசிவ ஓம் என்பதும் ஒரு வகை மந்திரமே!
ஓம் காளி ஜெய் காளி என்பதும் ஒரு வித மந்திரமே!
ஓம் வராகி சிவசக்தி ஒம் என்பதும் ஒரு வகை மந்திரமே!
ஓம் ஆம் ஹெளம் செள என்பது ஒரு சிவமகா மந்திரமே!
ஓம் என்பதும் ஒரு விதமுக்கியமான மந்திரமே!
ஆமென் என்பதும் ஒரு மந்திரமே!
ஆமீன் என்பதும் ஒரு மந்திரமே!
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் என்பது சைவ கூட்டுப்பிரார்த்தனை மந்திரமே!
ஓம் சிவசக்தி வராகி ஓம் என்பதும் ஒரு மந்திரமே!


எந்த மந்திரமாக இருந்தாலும்,1,00,000 முறை ஜபித்தப் பின்னரே அதற்கு உயிர் உண்டாகும்;ஆனால்,சில மந்திரங்கள் 1000 முறை ஜபித்ததும் அதற்கு உயிர் வந்துவிடும்;சில மந்திரங்களை ஒரே ஒரு முறை ஜபித்தாலே போதும்;அவைகள் உடனடியாக இயங்க ஆரம்பித்துவிடும்;



நமது நாடு மந்திரங்களின் தாய்நாடு;மந்திரங்களை முறையாக நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தினால்,நாம் பொருளாதாரத் தன்னிறைவை கண்டிப்பாக எட்டிவிடுவோம்;சில மாதங்களிலேயே! நாம் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிட்டால் நமது நாடும் உலக வல்லரசு தேசமாகிவிடும்;

அப்படி ஆகாமல் இருக்கவே நாத்திகம்,கம்யூனிசம்,ஜாதியிசம் போன்றவை திட்டமிட்டு பணிபுரிந்து(?!) வருகின்றன;இப்போதாவது விழித்துக்கொள்வோமா?

யோகம் நிறைந்த குழந்தைகள் பிறக்க


பகவத் கீதை,திருக்குறள்,விஷ்ணு சகஸ்ரநாம சாஸ்திரம்,லலிதா சகஸ்ரநாம சாஸ்திரம்,திருமந்திரம்,காளிதாசனின் உத்திரகாலாமிருதம்,ஜோதிட ராமாயாணம்,சீவகசிந்தாமணி,மணிமேகலை,குண்டலகேசி போன்ற நமது மரபுச்செல்வங்களை கற்க வேண்டிய வயது 50,60,70 அல்ல;

300 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மகனை படிக்க குருகுலத்திற்கு அனுப்புவர்;5 வயது முதல் 15 வயதுவரை குருகுலத்தில் தங்கி கல்வி பயில வேண்டும்;பாடத்திட்டம் 16 மொழிகள்(இந்தியாவின் பிரதான மொழிகள்),வில் வித்தை,ஜோதிடம்,சித்த மருத்துவம்,மூலிகைகளை இனம் காணுதல்,மந்திர ஜபம்,மந்திர பிரயோகம்,போர்க்கலையான தனுர்வேதம்,பிராணயாமம்,யோகக் கலையான பிராணயாமமும் 1008 யோகாசனங்களும்,சரக்கலை என்ற சுவாசக் கலை,கண்ணாடி தியானம்,கோவிலைக் கட்டும் ஆகமங்கள் போன்றவையே பாடத்திட்டங்களாக இருந்தன;ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி சமயத்தில் ஒரு பட்சகாலம் (15 நாட்கள்) மட்டுமே ஆண்டு விடுமுறையாக குருகுலத்தில் இருந்து வீட்டுக்கு வரலாம்;

15 வயது நிறைவடையும் போது அந்த இளைஞன் எப்படி இருப்பான் தெரியுமா? 

அரு.ராமனாதன் அவர்கள் எழுதிய வீரபாண்டியன் மனைவி என்ற வரலாற்று நாவல் மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கிறது;அதில் உள்ள கதாநாயகன் போலவே ஆளுமைத்திறன் உள்ளவனாக ஒவ்வொரு இந்துவும் உருவாகியிருப்பான்;

அல்லது 

சாண்டில்யன் எழுதிய விலைராணி என்ற நாவலை வாசித்துப் பாருங்கள்;யவனராணி என்ற நாவல் 3 பாகங்களாக வெளிவந்திருக்கின்றன;இவைகளில் இருக்கும் அரசனைப் போலவே ஒவ்வொரு இந்துவையும் குருகுலம் உருவாக்கியுள்ளனர்;

இவைகளை முதன்முதலில் அழித்தது இஸ்லாமியப் படையெடுப்பு; பாடலிபுத்ரத்தில் மட்டும் தான் பல்கலைக்கழகம் இருந்தது என்று எண்ண வேண்டாம்;இதோ நம்ம காஞ்சிபுரத்திலும்,இன்றைய சங்கரன் கோவிலிக்கும் கோவில்பட்டிக்கும் நடுவே இருக்கும் கழுகுமலையிலும் பல்கலைக்கழகங்கள் 12,000 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளன;


சுமாராக 1400 தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் மேலே உள்ள குருகுலக் கல்வியைப் பயின்றுள்ளனர்;அவைகள் இன்னும் நமது எலும்பு மஜ்ஜையில் புதைந்திருக்கிறது;ஏழாம் அறிவு திரைப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் போதி தர்மன் என்ற கதாபாத்திரம் பொய் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை; நாம் ஒவ்வொருவருமே போதி தர்மனின்,ராஜராஜ சோழனின்,சாணக்கியனின்,அவ்வையாரின்,ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின்,கிருஷ்ண பகவானின்,தர்மரின்,பீமரின்,அர்ஜீனரின்,சகாதேவனின் வாரிசுகளே!


இந்த எலும்பு மஜ்ஜையில் இருக்கும் முன்னோர்களின் திறமையை அழிக்கும் வேலையைத் தான் ஃபுளூரைடு கலந்த பற்பசைகள் செய்துவருகின்றன;நம்மை நமது அறிவை மழுங்கடிக்கும் வேலையை மேற்கு நாடுகள் செய்துவருகின்றன;அவைகளின் தற்போதைய வடிவமே பிட்காயின்,பியூச்சர் டிரேடிங்,கமாடிட்டி டிரேடிங்,ஆன்லைன்  ஷேர்மார்கெட்,செல்போன் தொழில் நுட்பம்,இணையத் தொழில் நுட்பம்,ஜீன்ஸ் தொடர்ந்து அணிவதன் மூலமாக ஆண்மையும் அழியும்;பெண்மையும் அழியும்;மினரல் ஹெ2ஓ நம்முடைய உடலின் நோய் எதிர்ப்புத் திறனை மழுங்கடிக்கும்;பாலியல்தளங்கள் நமது இளம் குழந்தைகளை ஆண்மையற்றவர்களாக,பெண்மையற்றவர்களாக மாற்றுகின்றன;மேலும்,தாம்பத்திய திருப்தியை கானல் நீராக்கி,காமப் பிசாசுகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றன;


இந்துக்கள் அதிகம் வாழ்ந்து வரும் நகரின் மின்சாரத்துறை தலைமை அதிகாரியாக வேற்று மதத்தைச் சேர்ந்தவர் இருந்தால்,வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி வாக்கிலும் மற்றும் இந்துக்களின் முக்கியத் திருவிழாக் காலங்களில் திருவிழா நேரத்திலும் மின் வெட்டை அமல்படுத்திவருகின்றனர்;இதன் பின்னணியில் இருப்பது அவர்களின் மதக் கண்ணோட்டமே!


இயற்கை உணவுக்குத் திரும்ப வேண்டும்;`18 வயது முதல் 40 வயது வரையிலும் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வரையிலாவது (காலை 30 நிமிடம்;இரவு 30 நிமிடம்) ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்து வரவேண்டும்;அப்படி செய்தால் மட்டும் சில ஆண்டுகளில் நாம் ஜபிக்கும் மந்திரஜபம் சில லட்சங்களை எட்டும்;அப்படி சில லட்சங்களை எட்டியப் பின்னர் திருமணம் செய்து,குழந்தைக்கு முயற்சி செய்தால் நிச்சயமாக ஆரோக்கியமும்,யோகமும் நிறைந்த குழந்தைகள் பிறக்கும்;


எனது தேசத்தின் சகோதர,சகோதரிகளே! எனது தமிழ்ச் சொந்தங்களே! நமது பண்பாட்டை நாம் தான் பாதுகாக்க வேண்டும்;நமது வாரிசுகளை சகல கலா வல்லவர்களாக நாம் தான் ஆன்மீகப் பயிற்சி,தேசபக்திப் பயிற்சி,ஜோதிடப் பயிற்சி,மனோதத்துவப் பயிற்சி,ஆழ்மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சி,இயற்கை உணவுகள் தயாரிக்கும் பயிற்சி என்று 15 வயது முதல் 25 வயது வரை ஒவ்வொரு ஆண்டு விடுமுறை சமயத்திலும் பயிற்சி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்;இது நமது கடமை;

இதற்குத் தேவையான பொருளாதார தன்னிறைவை எட்டிட எமது ஜோதிட,ஆன்மீக ஆலொசனைகளைப் பின்பற்றினால் போதும்,சில வாரங்கள் அல்லது சில மாதங்களில் பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிடுவீர்கள்:



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;

பொறாமை,திட்டு முறைப்பாடுகளை நீக்கும் மயில்தோகை விசிறி


மயில் தோகையால் விசிறி செய்து கைகளால் விசிறும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா,இலங்கை,மலேஷியா,சிங்கப்பூரில் இருந்துவந்தது;இப்போது மிகவும் அரிதிலும் அரிதாக மயில் தோகையால் செய்யப்படும் கைவிசிறிகள் பயன்படுத்தப்படுகிறது;


நமது திறமையை பயன்படுத்தும் சந்தர்ப்பம் வரும்போது,அதனால் சாதனைகளை நிகழ்த்துவது வழக்கம்;இந்தச் சாதனையை,வெற்றியை நம்முடைய உறவுகள்,அடிக்கடி பழகுபவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் நம்முடைய சுபாவம்;அப்படி பகிரிந்த உடனே அதை நமது நெருங்கிய நட்பு/உறவு வட்டத்தால் ஜீரணிக்க முடிவதில்லை;அதனால் தான் நமக்கு திடீர்,திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்படுகிறது;அல்லது நமது ரத்த உறவுகளுக்கு ஏற்படுகிறது;

இதில் இருந்து விடுபடவே நம்முடைய முன்னோர்கள் மயில் தோகையால் விசிறி வீட்டில் வைத்திருந்தனர்;


மீண்டும் நாம் இதைப் போல உருவாக்கி,பயன்படுத்துவோமா? 

பழமையான பொருட்கள் உள்ள வீடாக (உங்கள் வீடு)இருந்தால் தேடிப்பாருங்கள்;நிச்சயம் இருக்கும்;அதைக் கூட இப்போது நாம் பயன்படுத்தலாம்;

மனிதன் சமுதாயப் பிராணி என்ற நிலையில் இருந்து,சமுதாய அடிமை!




நாம் பேசுவதை சித்தார்த் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்ற டயலாக் தனி ஒருவன் என்ற திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது;இதே வேலையைத் தான் நமது செல்போன் பேச்சுக்கள் செய்கின்றன;பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக யாராவது மாநிலம் தழுவிய அளவில் விழிப்புணர்வை உருவாக்கினால்,அந்த பன்னாட்டு நிறுவனங்கள் உடனடியாக அந்த நபரை தொந்தரவோ,கொலை முயற்சியோ செய்வதில்லை;அந்த நபரின் செல் போன் பேச்சுக்களைத்தான் கண்காணிக்கின்றன;

இதுதான் முதலாளித்துவத்தின் கோரமுகம்;இதுதான் உலகமயமாக்கலின் உயிர்மூச்சு;இதுதான் தாராளமயமாக்கலின் சுபாவம்;ஆமாம்! நாம் ஒவ்வொருவருமே நவீன அடிமைகள்! 

நமது சிந்தனைகள்,பேச்சுக்கள்,எழுத்துக்கள்,செயல்பாடுகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன;அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டுவருகின்றன;இதோ இந்த இணையதளமும் அதற்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன;

Tuesday, September 22, 2015

ஒரே நேரத்தில் அண்ணாமலையார் அருளையும்,அன்னை அரசாலை அருளையும் அள்ளித் தரும் மந்திர ஜெபம்!!!


கலியுகத்தில் பிறந்திருக்கும் நாம்,நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்த நல்வினை,தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;இருப்பினும்,ஈசன் கருணை மிகுந்தவன்;மனிதனாகப் பிறந்திருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் திருந்திட பலமுறை சந்தர்ப்பம் அளித்துக் கொண்டே இருக்கிறான்;அதை முறையாகவும்,முழுமையாகவும் பயன்படுத்துபவர்கள் தமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறார்கள்;இப்பிறவியில் இனி வர இருக்கும் இம்சைகளில் இருந்து மீண்டு விடுகிறார்கள்;


கடன்,நோய்,எதிரிகள்,தொல்லை,அவச்சொற்களால் தினமும் நிம்மதியிழத்தல்,ஒழுக்கமாக வாழ்ந்துவரும் வேளையில் ஒழுங்கீனமானவராக பிறர் சித்தரிப்பதால் வரும் சோகம்,திருமணத் தடை,கல்வித்தடை,பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நல்லுறவு இன்மை,கணவன் மனைவி இடையே ஒற்றுமையின்மை/புரிதல் இன்மை,சந்தேகப்படுதல் முதலான எந்த ஒரு வாழ்வியல் சிக்கல்களையும் இந்த தினசரி மந்திர ஜபம் தீர்த்து வைக்கும்;


பலருக்கு பணம் போதுமான அளவில் வருமானமாகவோ,லாபமாகவோ கிடைக்காமல் இருக்கிறது;அதையும் தீர்த்து வைக்கும் இந்த மந்திர ஜபம்;


இந்த மந்திர ஜபத்தை ஜபிக்கத் தேவையான பொருட்கள்:

மஞ்சள் பட்டுத்துண்டு, மகாலட்சுமி விளக்கு புதியது,பஞ்சுத்திரி,செக்கில் ஆட்டிய இலுப்பை எண்ணெய்


இந்த மந்திரம் ஜபிக்கத் தேவையான தகுதிகள்:


18 வயது நிரம்பிய ஆண்,பெண் எவரும் ஜபிக்கலாம்;
எந்த ஜாதி,மதம்,மொழி,இனமாக இருந்தாலும் ஜபிக்கலாம்;
இந்த மந்திரம் தினமும் ஜபிக்க வேண்டிய நேரம்:
தினமும் காலை 4.30 முதல் 5 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் 9.30 வரையிலான நேரத்தில் ஏதாவது 15 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;


இந்த மந்திரத்தை ஜபிக்கும் முறை:

புதியதாக வாங்கிய மகாலட்சுமிவிளக்கை வடக்கு நோக்கி தீபம் எரியுமாறு வைக்கவேண்டும்;
மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து மகாலட்சுமி விளக்கில் இலுப்பை எண்ணெய் நிரப்பி,பஞ்சுத்திரியில் தீபம் ஏற்ற வேண்டும்;
பிறகு,கிழக்கு நோக்கி மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;அப்படி அமர்ந்திருக்கும் போது,உடலின் எந்தப்பகுதியும் தரையில் படக் கூடாது;அப்படிப்பட்டால்,மந்திர ஜபத்துக்கான பலன் நம்மை வந்து சேராமல் பூமிக்குள் போய்விடும்;

ஓம் அகத்தியர் முதலான 18 சித்தர் பெருமக்கள் போற்றி என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,
ஓம் மகா கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,
ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,
ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;
பிறகு, ஓம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஜபிக்கும் போது எண்ணக் கூடாது;


ஒரு அமாவாசையன்று இந்த ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;
அன்று முதல்தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும் ஜபித்து வரவேண்டும்;
இரண்டாவது அமாவாசை வரும் போது,ஜபநேரத்தை 30 நிமிடமாக உயர்த்துங்கள்;
மூன்றாவது அமாவாசை வரும் நாளில் இருந்து,ஜபநேரத்தை 45 நிடமாக அதிகப்படுத்துங்கள்;
நான்காவது அமாவாசையிலிருந்து தினமும் காலையில் 60 நிமிடமும்,இரவில் 60 நிமிடமும் ஜபித்து வரவும்;ஒரு நாளுக்கு ஒரு வேளைக்கு ஒரு மணி நேரம் வீதம்,இரண்டு மணி நேரம் வரை ஓம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபித்தாலே அவர்களுடைய அனைத்து லட்சியங்களும் படிப்படியாக நிறைவேறும்;

முக்கியமான உபதேசம் என்னவெனில்,இந்த ஜபத்தை ரகசியமாக,எவரிடமும் தெரிவிக்காமல் பின்பற்றிவருவது அவசியம்;இதனால்,நீங்கள் சர்வசக்தி வாய்ந்த,அதேசமயம் அடக்கமான மனிதராகவும் இருப்பீர்கள்;இந்த உலகத்திலேயே நிம்மதியாக இருப்பவர் நீங்கள் மட்டுமே!

இந்த முறைப்படி மூன்று ஆண்டுகள் வரை தினமும் ஒம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபித்துவந்தால்,இந்த உலகத்திலேயே அனைத்தும் உள்ளவர் நீங்கள் மட்டுமே!


வாழ்க பைரவ அறமுடன்:வளர்க வராகி அருளுடன்!!!