Sunday, August 23, 2015

தமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்வுப் புத்தகங்கள்


ஆ. செல்லபெருமாள்


தமிழகத்தின் அறிவுச் சூழலில் கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ்குடி
என்று தமக்குத் தாமே தமிழ்ப் பண்பாட்டைப் போற்றிப்
பெருமை பாராட்டிக் கொள்ளுகின்ற நிலையும், மிகப்
பழமையான மொழியைக் கொண்டிருப்பதாகப் பறை
சாற்றிக் கொள்ளும் நிலையும் ஒருபுறம் காணப்படுகிறது.
இதற்கு மாறாக தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்றே
நடைமுறையில் இல்லை. இலட்சியப் பண்பாடு என்ற
ஒன்றுதான் உண்டு என்று பிழைபடக் கூறும் சூழல்
மறுபுறமும் காணப்படுகிறது. இப்படி தமிழ்ப் பண்பாடு
குறித்த மிகைப்பட்ட மதிப்பீடும், தரக்குறைவான மதிப்பீடும்
இருப்பதற்கெல்லாம் காரணம்
தமிழக அறிவுச்சூழலில் மானிட-
வியல் இன்னும் அதற்குரிய
இடத்தைப் பெறாமையே ஆகும்.
இத்தகைய சூழலில் பண்பாட்-
டினைப் பற்றி ஆராயும்
அறிவியல் புலமான மானிடவியலின்
முக்கியத்துவம் எப்படிப்பட்
டது என்பதையும் தமிழர்-
கள்அவசியம் வாசிக்க வேண்-
டிய சில மானிடவியல் நூல்கள்
குறித்தும் இக்கட்டுரையில்
காண்போம்.
மானிடவியலைத் தமிழில்
அறிமுகப்படுத்தும் முயற்சி
கடந்த நூற்றாண்டின் இறுதி முதலாக மிகச் சிறப்பாக
இருக்கின்றது. 1952_ஆம் ஆண்டு அப்போதைய
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் சென்னைப்
பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பேராசிரியர்
கோபாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட
பண்பாட்டு மானிடவியல் என்ற நூலை வெளியிட்டது.
இந்நூல் தான் தமிழில் மானிடவியல் பற்றி வெளிவந்த
முதல் நூல். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1960_ஆம்
ஆண்டு உளவியல் மானிடவியலில் புகழ்பெற்ற ரூத்
பெனடிக்ட் அம்மையார் எழுதிய பண்பாட்டுக் கோலங்கள்
எனும் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டது. ஆனால்,
அதற்குப் பிறகு மேற்கூறப்பட்ட இரண்டு நூல்களைத்
தவிர்த்து இன்று வரை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
மானிடவியல் தொடர்பான நூல் எதனையும்
வெளியிடவில்லை. பட்டப் படிப்பிலோ அல்லது
முதுகலைப் படிப்பிலோ மானிடவியல் தமிழ் மொழியில்
தொடங்கப்படாததே இதற்குக் காரணமாகலாம்.
ஆங்கிலம் வழியாக மானிடவியல் கல்வி தமிழ்நாட்டில்
வேண்டிய அளவிற்கு இன்றளவும் தொடங்கப்படவில்லை
என்றே கூறலாம். தமிழ்நாட்டில் சென்னைப்
பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் 60 ஆண்டுகளாக
மானிடவியலுக்கு என்று ஒரு துறை இருந்துவருகிறதென்ற
போதிலும் 1976_ஆம் ஆண்டு முதற்கொண்டுதான் அது
ஒரு முழுமையான துறையாகச் செயல்பட்டு வருகின்றது.
அப்பொழுதிலிருந்துதான் முதுகலை மற்றும் முனைவர்
பட்ட ஆய்வுகள்தொடங்கப் பெற்றன. இத்துறையின்
மூலம் 1976_ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மூத்த
மானிடவியல் பேராசிரியரான முனைவர் நெ. சுப்பாரெட்டி
அவர்களின் சீரிய தலைமையில்
பலர் முறைப்படி பயிற்சி
பெற்றனர்.
தமிழக அரசு 1960_ஆம்
ஆண்டு வெளியிட்ட தமிழ்க்
கலைக் களஞ்சியத்தில்
ஏறத்தாழ இருபது
கட்டுரைகள்வெளிவந்தன.
இதற்கிடையில் அவ்வப்போது
சென்னை அருங்காட்சியகம்
தென்னிந்திய அளவில்
பழங்கால கற்கருவிகள்,
பழங்குடிகள்போன்ற சிறு
குறிப்பு நூல்களை தமிழில்
வெளியிட்டது. இதற்கிடையில்
தமிழ்த் தொல்லியல் மானிடவியல் குறித்த பல நூல்கள்
தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையின் மூலம்
வெளியிடப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்
மொழியியல் உயர் ஆய்வு மையத்தின் மூலமாக இனக்குழு
மொழியியல் (மொழியியல் மானிடவியல்) தொடர்பான
ஏராளமான ஆய்வுகள்வெளிவந்தன. அவை பெரும்பாலும்
தமிழ்நாட்டின் ஏராளமான பழங்குடிகள், சாதிகள்பற்றிய
கிளை மொழிகளையும், வாழ்வியலையும் எடுத்துக்காட்டும்
முறையில் அமைந்தன.
தமிழ்ப் பல்கலைக்கழகம் 1986_லிருந்து வெளியிட்ட
வாழ்வியல் களஞ்சியம் தொகுதிகள்தமிழில்
மானிடவியலின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக
அமைந்தன. வாழ்வியல் களஞ்சியத்தின் எல்லாத்
தொகுதிகளிலும் காணப்படும் மானிடவியல் சார்ந்த
கட்டுரைகள்அனைத்தும் பல அறிஞர்களால்
எழுதப்பட்டவை. அவை அனைத்தும் தனியே தொகுத்து
பதிப்பித்தால் அது தமிழில் மானிடவியலுக்குப் பெரும்
கொடையாக அமையும். தமிழ்ப் பல்கலைக்கழகம் எட்கர்
தர்ஸ்டன் 1909_ல் எழுதிய தென்னிந்திய குலங்களும்
குடிகளும் என்ற 7 தொகுதி நூலின் ஓரிரு தொகுதிகளை
மொழிபெயர்த்து வெளியிட்டது.
கல்வி நிறுவனங்கள்அல்லாத பல பதிப்பகங்களும்,
ஆய்விதழ்களும் தமிழில் மானிடவியலின் வளர்ச்சிக்குப்
பெரும் பங்காற்றி வருகின்றன. அவற்றுள்மணிவாசகர்
நூலகம் வெளியிட்டுள்ள சூ. சக்திவேல் (1983) மானிடவியல்
கலைச்சொல் அகராதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியிட்டுள்ள (1980) மந்திரம் சடங்குகள்(ஆ.
சிவசுப்பிரமணியன், 1988), வறுமையின் பின்னணி
(ட்ஜீர்ஃபெல்ட் & லிண்ட்பெர்க் 1990) போன்ற நூல்கள்,
பாரிவேல் பதிப்பகம் வெளியிட்ட ஸ்ட்ரக்சுரலிசம்
(தமிழவன்: 1981) போன்ற நூல்கள்குறிப்பிடத்தக்கவை.
மேலும் ஆய்விதழ்களில் ஆராய்ச்சி, தமிழ்க்கலை, நாட்டார்
வழக்காற்றியல், நாட்டுப்புறவியல், ஆய்வுக்கோவை, சமூக
விஞ்ஞானம் போன்றவை ஆற்றிய / ஆற்றிவரும் பணிகளும்
மிகுந்த சிறப்புடையவை.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின்,
1987_ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகின்ற
நாட்டார் வழக்காற்றியல் முதுகலைப் பட்டப் படிப்பிற்குச்
சமூகப் பண்பாட்டு மானிடவியல் எனும் ஒரு தாள்தமிழில்
பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், அக்கல்லூரியின் நாட்டார்
வழக்காற்றியல் ஆய்வு மைய வெளியீடுகளான தேவியின்
திருப்பணியாளர்கள், பண்பாட்டு வேர்களைத் தேடி போன்ற
வெளியீடுகள்தமிழ் மானிடவியலுக்கு முக்கியமான
வரவுகளாகும். மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட
பண்பாட்டு மானிடவியல் (1990), மற்றும் புதுச்சேரி
வல்லினம் பதிப்பகம் வெளியிட்ட மானிடவியல்
தொடர்பான சில நூல்களின் வருகையினால் தமிழில்
இன்றுவரை நிலவிவந்த அங்கொன்றும் இங்கொன்றுமான
மானிடவியலின் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு
ஒரு சீரான ஆழமான ஆய்விற்கு அடிப்படை
அமைக்கப்பட்டுள்ளது.
எல்லாக் காலத்திய எல்லா இடங்களிலுமான எல்லா
மனிதர்களின் அனைத்து அம்சங்களையும் பற்றிப்
படிக்கின்ற ஒரு அறிவுப் புலம் மானிடவியலாகும். உறவு
முறை, சமூக அமைப்பு, அரசியல், தொழில் நுட்பம்,
பொருளாதாரம், சமயம், மொழி, கலை, புராணவியல் என
மானிடவியல் ஆராய்கின்ற அம்சங்களின் பட்டியல் மிக
நீண்டது. சமூக அறிவியல்களிலேயே மானிடவியல் மட்டும்
தான் மனிதனின் உயிரியல் கூறுகளையும் (உடற்கூறு
மானிடவியல்) பண்பாட்டுக் கூறுகளையும், (பண்பாட்டு
மானிடவியல்) ஒருங்கிணைந்து படிக்கக் கூடியதாகும்.
மானிடவியலின் இரு அடிப்படைக் கேள்விகளாகப்
பின்வருவனவற்றைக் கூறலாம். ஒன்று பல்வேறுவிதமான
பண்பாட்டு முறைமைகள்எவ்வாறு செயல்படுகின்றன?
இரண்டு, தற்போது இருக்கின்ற பல்வகை பண்பாட்டு
முறைகள்எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கக் கூடும்? இந்த
இரண்டு விளக்கங்களில் காணப்படும் வேறுபாடுகளுக்குக்
காலம் மற்றும் தள ரீதியில் அழுத்தம்
கொடுக்கப்பட்டுள்ளதை உணர வேண்டும். உலகில்
இருக்கின்ற அனைத்துப் பண்பாடுகளும் ஒரேமாதிரி
இருக்கின்ற பட்சத்தில் மானிடவியல் என்ற புலத்திற்கே
தேவை இருக்காது என்று கூடச் சொல்லி விடலாம்.
வேறுபாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் அதே
அளவிற்கு, பண்பாடுகளின் ஒப்புடைமை கண்டறிவதிலும்
மானிடவியல் கவனம் செலுத்துகின்றது. உலகப்
பண்பாடுகளின் வேறுபாடுகள்பளிச்சென நம் கண்களுக்குப்
புலப்படுகின்றன. ஆனால் பண்பாடுகளின்
ஒப்புடைமைகளைக் கண்டறிய ஆழமான மானிடவியல்
ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட
ஆழமான ஆய்வுகளுக்கு வழிகோலும் விதமாக 1991_ஆம்
ஆண்டு பேராசிரியர் தே. லூர்துவின் முயற்சியால் நாட்டார்
வழக்காற்றியல் ஆய்விதழ் வெளியிட்ட மானிடவியல்
கோட்டுபாட்டுச் சிறப்பிதழ் விளங்குகின்றது. அந்தச்
சிறப்பிதழில் ஆ. செல்லபெருமாள்ஐந்து கட்டுரைகளைத்
தொகுத்துள்ளார். அவற்றுள்முதல் மூன்று
கட்டுரைகளான பண்பாட்டுப் படிமலர்ச்சி, பரவலியல்
கோட்பாடுகள், செயல்பாட்டியற் கொள்கை ஆகியவை
மானிடவியலின் கோட்பாட்டு வளர்ச்சி நிலைகளை
எடுத்துக்காட்டும் வகையில் ஒன்றன்பின் ஒன்றாக
வைக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு கட்டுரைகள்
முறையே தமிழரின் உறவுமுறை பற்றியும்,
மானிடவியலுக்கும், நாட்டார் வழக்காற்றியலுக்கும் உள்ள
தொடர்பினைப்பற்றியும் விளக்குகின்றன.
மானிடவியல் மனுக்குல வரலாற்றின் அறிவியலாக
உருவானது. மனுக்குலப் பண்பாட்டினை முழுதளாவிய
அμகுமுறையில் ஆராய்ந்தறிவதற்காகப் பல கோட்பாடுகள்
மானிடவியலர்களால் முன்வைக்கப்பட்டன. அந்தக்
கோட்பாடுகளில் இன்றியமையாத சிலவற்றை விளக்குவதும்
அவை எதிர்கொண்ட திறனாய்வுகளை முன்வைப்பதும்
அந்தத் தொகுப்பின் தலையாய நோக்கமாகும். பரந்து
விரிந்து கிடைக்கின்ற பல கோட்பாட்டு விளக்கங்களை
ஓரளவுக்குச் சுருக்கித் தர அத்தொகுப்பின்
கட்டுரையாளர்கள்முயன்றுள்ளனர்.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் தமிழில்
வெளிவந்துள்ள மானிடவியல் நூல்கள், ஆய்வுகள்
ஆகியவை எத்திறத்தன என்று பார்த்தோம். தமிழில்
வெளிவந்த மானிடவியல் நூல்களும், ஆய்வேடுகளும் தான்
குறைவே தவிர தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட
மானிடவியல் ஆய்வுகள்பல. ஆனால், அந்த ஆய்வுகள்
பெரும்பாலும் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான்
போன்ற மொழிகளிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின்
பல கிராமங்கள்மானிடவியல் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தமிழக
கிராமங்களின் சமூக அமைப்பு, அரசியல் பொருளாதார
மாற்றங்கள்நுண்நிலையில் விளக்கப்பட்டுள்ளன. தமிழகத்
தலைநகராகிய சென்னை அடைந்து வரும் நவீனத் தன்மை
குறித்த ஓர் ஆய்வு நூல் வந்துள்ளது. தமிழ்நாட்டில்
வசிக்கும் கிட்டத்தட்ட எல்லா பழங்குடிகளைப் பற்றியும்,
கணிசமான மக்கள்தொகையினைக் கொண்ட
பெரும்பாலான சாதிகளைப் பற்றியும், பல இனவரைவியல்
நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. தமிழக
மக்களிடையே நிலவிவரும் பன்முகத்தன்மை கொண்ட
கடவுளர், நம்பிக்கை, அமைப்பு, சமயம் போன்றவை குறித்து
வெளிவந்த நூல்களும் ஏராளம். தமிழகத்தில் வழங்கி வரும்
புதிய புத்தகம் பேசுது | ஏப்ரல் 2008 60 60
பல நிகழ்கலைகள்பற்றிய ஆய்வும் வெளிவந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் உலகளாவிய விதத்தில்
மானிடவியலர்களின் பெரும் கவனத்திற்குரிய உறவுமுறை
அமைப்புடையோராகத் தென்னிந்தியாவின் திராவிடர்கள்
ஆராயப்படுகின்றனர். தமிழகம் உள்ளிட்ட இவர்களின்
உறவுமுறை அமைப்பு திராவிட உறவுமுறை அமைப்பு
என்றே அழைக்கப்படும். தமிழ்நாட்டுச் சாதியினரிடையே
தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற மானிடவியலர்கள்பலரால்
உறவுமுறை ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆய்வு முடிவும் திராவிட உறவுமுறை
அமைப்பில் புதுப்புது பரிமாணங்களைக் கொடுத்து,
மொத்தத்தில் மானிடவியலில் இயங்கிவரும் இருபெரும்
உறவுமுறை கோட்பாடுகளான மணஉறவு மற்றும்
வழிமுறைக் கோட்பாடுகளுக்குப் புதிய பங்களிப்புகளை
வழங்கி வருகின்றன. ஐராவதி கார்வே, லூயி டியுமோ,
(பிரமலைக் கள்ளர்களைப் பற்றி ஆராய்ந்தவர்)
பிரண்டாபெக், (கொங்கு வேளாளர்களை ஆராய்ந்தவர்),
ட்ராட்மன் ஆகிய நால்வரும் தமிழகத்தின் சில
சாதியரிடையே மேற்கொண்ட உறவுமுறை ஆய்வுகளின்
முடிவுகளும் தமிழர்கள்வாசிக்க வேண்டிய தமிழர்தம்
ஆய்வு நூல்களாகும். டியுமோ, பிரண்டாபெக், ட்ராட்மன்
ஆகிய மூவரும் தமிழர் உறவு முறையில் மணஉறவுக்
கோட்பாட்டினை வலியுறுத்துபவராகவும், ட்ராட்மன்
வழிமுறைக் கோட்பாட்டினை வலியுறுத்துபவராகவும்
இருப்பதை அந்நூல்களைப் படிப்போர் அறிந்து
கொள்ளலாம். தமிழர்களிடையே வழங்கி வரும் உறவுச்
சொற்களை ஆராயும்போது அவை எவ்விதம் இருவகை
உறவுமுறைகள்இருப்பதை வெளிக்காட்டுகின்றன
என்பதையும் அந்நூல் ஆசிரியர்கள்விளக்குகின்றனர்.
தமிழில் 1998_ஆம் ஆண்டு சமூக மானிடவியல் என்ற
தலைப்பில் வெளிவந்த ஆ. செல்லபெருமாள்எழுதிய
அத்துறையின் முதல் நூலும் தமிழர்கள்வாசிக்க வேண்டிய
ஓர் ஆய்வு நூல். அந்நூல் மானிடவியலின் அனைத்துப்
பரப்புகளையும் வெளிக்காட்டிடவில்லை எனினும் அதன்
சில இன்றியமையாத பரிமாணங்களைக் கோட்பாட்டு
நிலையிலும், பயன்பாட்டு நிலையிலும் நிச்சயமாக
விளக்குகின்றது. அந்நூல் மானிடவியல் படிக்கும்
மாணவர்களுக்கும் மானிடவியல் தொடர்புடைய
ஆய்வுகளில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கும் பண்பாடு
குறித்து ஆழமாக ஆய்ந்தறிய விரும்புவோருக்கும்
உதவக்கூடிய ஒரு நூல்.
தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள நாட்டார்
வழக்காற்றியல் ஆய்வுகளிலும், மானிடவியல்
சார்புடையவை எவை, பிற துறை சார்புடையவை எவை
என சீர்தூக்கிப் பார்க்க திருவனந்தபுரம் தென்னிந்திய
மொழிகளின் நாட்டார் வழக்காற்றியல் கழகம் 2005_ல்
வெளியிட்ட தமிழக நாட்டார் வழக்காற்றியல் விளக்க
நூல்அடைவு உதவும்.
மானிடவியல் ஆய்வுப் புத்தகங்கள்நம்மிடையே பரவி
நிலவும் இன மையவாதப் போக்கையும், சாதி சமயப்
பூசல்களையும் களைவதற்கு உறுதுணையாக அமையும்.
பண்பாடுகளில் சிறந்தவை என்றோ, தாழ்ந்தவை என்றோ
எதனையும் சொல்ல இயலாது என்பதையும் அந்நூல்கள்
உணர்த்தும்.

புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....



புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்-மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சி-யாகவே ‘தமிழ்ப் பதிப்புலகம் 1800_2009’ என்னும் இம்மலர்....

தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்ட-துடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தக-மாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.
புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.
வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்-களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள்/பதிப்பாசிரியர்-களுக்குச் சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்-தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.
புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்-திற்கு இணையாக வெகுசனத் தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன.
தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்-களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதி-லுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.
இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் பதிப்புலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்ட-தாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடர-வேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.

Saturday, August 22, 2015

மூன்று நூற்றாண்டுகளாக பொருளாதார முற்றுகையில் இந்தியா!


இந்தத் தலைப்பில் பத்து வால்யூம் கொண்ட புத்தகங்கள் எழுதலாம்;அந்த அளவிற்கு நமது நாட்டை ஆண்டவர்கள் தொலை நோக்கு இல்லாமல் இருந்தமையால் இன்று நமது சம்பளம் வெட்டியான செலவுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறது;

சில வாரங்களுக்கு முன்பு,மேகி நூடுல்ஸை நமது அரசாங்கம் இந்தியாவில் எங்கும் விற்பனை செய்யக் கூடாது என்று தடை செய்தது;தடை செய்தமைக்கான காரணங்கள் நியாயமானவை;அதற்குப் பதிலடியாக அமெரிக்காவில் இந்தியாவின் நிறுவனமான ஹால்டிராம்ஸைத் தடை செய்தனர் அமெரிக்க அரசு அமைப்பினர்;காரணம் உலக வல்லரசு என்ற அகங்காரம் மட்டுமே! இதே மாதிரியான சம்பவம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்றிருந்தால்?


இந்த சம்பவத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில்,பொருளாதாரம் சார்ந்த ஆர்வமும்,அது சார்ந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் மட்டுமே கடந்த 300 ஆண்டுகளாக நாம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை புரிந்து கொள்ள முடியும்;

மேகி நூடுல்ஸ் சம்பவத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் அப்படியே நூல் பிடித்தவாறு 1980,1940,1910,1850,1810 என்று பழைய சம்பவங்களை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம்;

கி.பி.1700 களில் சீனப்பெருஞ்சுவரை விடவும் நீளமான வேலி ஒன்றை பிரிட்டனின் கிழக்கத்தியக் கம்பெனியினர் இந்தியாவின் குறுக்காக அமைத்தனர்;அது இன்றைய ஆப்கனிஸ்தானில் இருந்து ஒரிசா மாநிலம் வரை நீண்டிருந்தது;இதன் மூலமாக உப்புக்கு வரி 400% போட்டு இந்தியர்களை திட்டமிட்டு சாகடித்தனர்;செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கி சில லட்சம் இந்தியர்களைக் கொன்றனர்;இது தொடர்பாக சமீபத்தில் உப்புவேலி என்ற புத்தகமே வெளிவந்திருக்கிறது;

இதை முழுமையாக வாசித்தால் நாம் எவ்வளவு செல்வச் செழிப்போடு வாழ்ந்தோம்;எப்படி நம்மை பிரிட்டன் கொள்ளையடித்தது? எப்படி உலக பொருளாதார வல்லரசு என்ற நிலையில் இருந்து பரம ஏழை நாடாக மாறினோம் என்பதை உணர முடியும்;

1750கள் வரையிலும் உலக மொத்த உற்பத்தியில் 25% இந்தியாவின் பங்களிப்பாக இருந்தது;இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட போர்ச்செலவை இங்கிலாந்து,அப்போதைய அடிமை இந்தியாவின் மீது திணித்து,வரி வசூல் என்ற பெயரில் கசக்கிப் பிழிந்ததுடன்,இந்தியாவின் உலக பொருளாதாரப் பங்களிப்பை 2% அளவுக்கு குறைத்தப்பின்னரே(சக்கையாக்கியப் பின்னரே) இந்தியாவுக்கு சுதந்திரம் 1947 இல் தந்தது;Source:The Rising and Falling of Great Powers


டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் நெய்பவர்களின் கை விரல்களை ஆங்கிலேயன் வெட்டினான்;ஏன்? அந்த மஸ்லீம் துணிகள் மிகவும் தரம் வாய்ந்தவை;விலையோ மிகவும் குறைவு;அந்த துணிகளுக்கான உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்தினால் தான் தனது விசைத்தறி துணிகளை உலகம் எங்கும் விற்பனை செய்ய முடியும்;

டாக்கா நகர் மஸ்லீம் துணியில் செய்யப்பட்ட ஒரு 16 முழச் சேலையை ஒரு பெண் உடுத்தினால்,அவள் ஆடை உடுத்தியது போலவே இருக்காதாம்;அவ்வளவு மெல்லியதாக அந்தக் காலத்தில் நெய்திருக்கிறார்கள்;மேலும் அந்த சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைத்துவிடலாமாம்;(சரி கொஞ்சம் பெரிய தீப்பெட்டி என்றே வைத்துக் கொள்வோமே)


தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்டு,கேரளாவில் பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட போர்க்கலை களரி!அதன் தலைமை ஆசானை சுட்டுக் கொன்றது பிரிட்டிஷ் அரசு;இவரது பயிற்சியால் எங்கே தனது இந்திய ஆட்சிக்கு பங்கம் வந்துவிடுமோ? என்ற பயம் தான் காரணம்;களரியை முழுமையாக கற்றவரால் ஒரே நேரத்தில் (சில நிமிடங்களில்) 300 பேர்களைக் கொல்ல முடியும்;


ரைட் சகோதரர்கள் தான் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நாம் பாடத்தில் படித்திருக்கிறோம்;அது வடிகட்டின பொய்; தால் படயே என்பவர் புனே நகருக்கு அருகில் தனது கண்டுபிடிப்பான விமானத்தை முதன் முதலில் பறக்கச் செய்தார்;அதுவும் பொதுமக்கள் முன்னிலையில்! ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையில் இருந்து சிலஅடிகள் உயரத்தில் தான் பறந்தது;அதுவும் சில அடிகள் தூரம் தான் பறந்தது;ஆனால்,தால் படயே கண்டுபிடித்தவிமானம்  தரையில் இருந்து 10,000 அடி உயரத்தில்சில  கி.மீ.தூரத்துக்குப் பறந்தது;இந்தச் செய்தியை அன்றைய தினசரிகளில் வராமல் பார்த்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு;இந்தச் சம்பவத்திற்குப் பின்னர்,தால் படயேவையும்,அவரது கண்டுபிடிப்பையும் பிரிட்டிஷார் கடத்திச் சென்றுவிட்டனர்;ஆதாரம்;Vedic World Heritage;Volume XXVI


வாஸ்கோடகாமா தானாகவே ஐரோப்பாவுக்கு கடல்வழி கண்டுபிடித்ததாக வரலாறு எழுதப்பட்டு,நம்மால் படிக்கப்பட்டு வருகிறது;தென் ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையில் பல மாதங்களாக தவித்துக் கொண்டிருந்த வாஸ்கோடகாமாவுக்கு வழிகாட்டியது கேரளாவைச் சேர்ந்த ஒரு கப்பல் வியாபாரி என்பது மறைக்கப்பட்ட உண்மை வரலாறு;

1970களில் கஞ்சித்தொட்டிக் காலம் வந்தது;அக்காலத்தில் இந்தியா நெடுகவுமே பலருக்கு தொழில் இல்லை;வருமானம் இல்லை;அரசாங்கத்தின் மகத்தான திட்டங்கள் மக்களை வந்து சேரத் தாமதம் ஆயின;இந்த சூழ்நிலையில் அமெரிக்கா நமக்கு இலவசமாகவே கோதுமை அனுப்பியது;அப்போது இந்தியாவில் அறிமுகமானது புரோட்டா;கூடவே தண்ணீர் வளத்தைக் கெடுக்கும் கருவேல மரங்களுக்கான விதைகளையும் அமெரிக்கா தான் அனுப்பிய கோதுமையுடன் தந்திரமாக அனுப்பியது;


அந்த கருவேல மரங்கள் இன்று தமிழ் நாட்டின் நீர்வளத்தை சீரழித்துவிட்டன;இப்போதுதான் இதுபற்றிய விழிப்புணர்வு நம்மிடையே உருவாகத் துவங்கியிருக்கிறது;

எப்படியெல்லாம் இந்தியர்களாகிய நமது தனித்தன்மைகள்,திறமைகளை படிப்படியாகவும்,சிறுகச் சிறுகவும் திட்டமிட்டு அழித்தான் ஆங்கிலேயன் என்பதை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டுள்ளனர் நியூ செஞ்சுரி பிரசுரத்தினர்;அந்த புத்தகத்தின்பெயர்: நள்ளிரவில் சுதந்திரம்;இதை வாசித்தீர்கள் எனில்,இந்தியாவில் பிரிட்டனின் ஐந்தாம் படையே இருக்காது;

ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதி தர்மரைப்பற்றியும்,அவருக்கு நோக்கு வர்மம் நன்றாகத் தெரியும்;என்பதையும் விவரித்து காட்சிப்படுத்தியிருந்தனர்;அதைப் பார்த்து நாம் ஆ வென வாய்பிளந்திருந்தோம்;அதைவிடவும் பல அற்புதமான மன திறமைகள் நமது தமிழ்நாட்டில் இன்றும் இருக்கின்றன;ஆனால்,ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் சில பத்து பேர்களிடம் மட்டுமே இருக்கின்றன என்று மதிப்பிடலாம்;


1990களில் அமெரிக்க கணினி நிறுவனங்கள் சூப்பர்க் கம்ப்யூட்டரை வடிவமைத்து வர்த்தக நோக்கில் விற்பனை செய்யத் துவங்கின;அதன் தயாரிப்புச் செலவு ரூ.100 கோடிகள்;அதை விடவும் 4000 மடங்கு செயல்திறனில் அதிகமாக இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டரை இந்தியா வடிவமைத்தது;இதன் தயாரிப்புச் செலவு வெறும் ரூ.1கோடி மட்டுமே!இந்த சூழ்நிலையும்,பொக்ரான் அணுகுண்டு வெடிப்பினால் அமெரிக்கா,நம் மீது செய்த பொருளாதாரத் தடைக்காலத்தில் செய்த சாதனை;எவனாவது 100 கோடிக்கு சைக்கிள் வாங்குவானா? இல்லை 1 கோடிக்கு பல்ஸார் வாங்குவானா? பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் சண்டை போட்டன;இப்படி பல விஷயங்களில் நம்மை உலக நாடுகள் இழிவு படுத்தும் போதெல்லாம் நமது ஆக்கபூர்வமான படைப்பாற்றல் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது;

மின் அஞ்சலை வடிவமைத்தவர் ராஜபாளைம் ஒன்றியம்,முகவூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர்;இவரே எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தார்; 21.8.2015 அன்று தினமலரில் வந்த செய்திப்படி, மேல்நாட்டவர்கள் நம்மை அவர்களின் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் வைத்து அழகு பார்ப்பார்கள்;ஆனால்,புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினால்,(புதியதாக ஏதாவது கண்டுபிடித்தால்) அதை அவர்களால் தாங்க முடியாது; மேல் நாட்டினராகிய தாங்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்ற மமதை அவர்களுக்கு உண்டு;என்று கூறியிருக்கிறார்;

இனிமேல் சொத்து என்பதை அறிவால் மட்டுமே உருவாக்க முடியும்;செல்வத்தைப் பெருக்குவதற்காக ஒருவர் தேட வேண்டிய மூலதனம் தனி மனித அறிவுத்திறன் தான்! என்பதை ஒரு இந்தியச் சாதனையாளர் தனது அனுபவத்தின் அடிப்படையில் தெரிவித்திருக்கிறார்;

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

உலக சமயங்களுக்கெல்லாம் தாய் சைவமே!


உலக நாகரீகங்களை ஒப்பாய்வு செய்த சர்.ஜான் மார்ஷல் கூறியுள்ளது:

உலகில் முதலில் தோன்றிய நாடு தமிழ்நாடு;

உலகில் முதலில் நாகரீகமடைந்த இனம் தமிழ் இனம்;

உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி;

உலகில் முதலில் தோன்றிய சமயம் சைவமே!!

ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் அண்ணாமலையே போற்றி


தகுந்த வேலை கிடைக்க


தனது மகன்/ளுக்கு பட்டப்படிப்பு,பொறியியல் படிப்பு படித்தும் தகுந்த வேலை கிடைக்காமலிப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா?

முற்பிறவிகளில் சரியான உணவு,ஊதியம் அளிக்காமல் வேலை வாங்கி இருந்தாலும்; நல்ல வேலை கிடைத்தாலும் கிடைத்த சம்பளத்திற்கு ஏற்ற அளவுக்கு வேலை பார்க்காமல் இருப்பதும் கர்மவினைகளாகி இப்பிறவியில் வேலையின்மையாகியிருக்கிறது;

இதைச் சரி செய்து,படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க ஸ்ரீஅங்காளி அந்தாதியை தினமும் வீட்டு பூஜை அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து,வடக்கு நோக்கி தீபம் ஏற்றி பின்வரும் பாடலை மூன்று முறை பாடவும்;அல்லது ஜபிக்கவும்;வேலை கிடைக்கும் வரை(பட்டதாரியின் தாய் அல்லது தாய்க்குச் சமமானவர்கள்) ஜபிக்கலாம்;

பெற்றோர் இல்லாதவர்கள் தாமே பாடலாம்;பெற்றோர்கள் இல்லாத பட்டதாரி இளைஞர்கள்,இளம்பெண்கள் முடிந்தவரையிலும் அருகில் இருக்கும் அம்மன் சன்னதிகளில் மனதுக்குள் கிழக்கு நோக்கி அமர்ந்து இரவு 8 முதல் 9 மணிக்குள் முதல் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஜபிக்கலாம்;

தொலைதூரதேசங்கள்,தொலைதூர மாநிலங்களில் வசிப்பவர்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் அந்தந்த நாட்டின் இரவு மணி 8 முதல் 9 மணிக்குள் ஜபிக்கலாம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!




அண்ணாமலை பற்றிய ரகசியங்கள் அறிய


அகஸ்திய விஜயம் என்ற மாத இதழில் அண்ணாமலை,மிக மிக பழமையான சிவாலயங்கள்,விஷ்ணு ஆலயங்கள் பற்றி அகத்தியரின் ஒலைச்சுவடியில் இருந்து எடுத்து வெளியிட்டு வருகின்றனர்;

பழைய வெளியீடுகளும்,பல ஆன்மீகச் சாதனங்களும்(பத்தி,ருத்ராட்சம்,தர்ப்பைப்பாய்,சாம்பிராணி,தூபங்கள்) விலைக்கு தரமானது மட்டும் கிடைக்கும்;

அகஸ்திய விஜயம் ஆண்டுச் சந்தா ரூ.240/=
திருமணம் முதலான சுபகாரியங்களுக்கு இந்த இதழை ஆண்டுச் சந்தாவாக அனுப்பிவைக்கலாம்;

ஸ்ரீ அகஸ்திய விஜய கேந்த்ராலயா
சேம்பர் எண்;7,sagas complex , P.B.No:6303
4,ஸ்ரீகபாலீஸ்வரர் தெற்கு மாடவீதி,மயிலாப்பூர்,சென்னை-4

போன்:044 24957276

சிவ ரகசியங்களில் ஒன்று


திருஞான சம்பந்தர் காலத்தில் அவருடன் பயணித்து,அவர் பாடும் பாடல்கள் அனைத்தையும் ஓலைச்சுவடியில் எழுதியவர் “சம்பந்த சரணாலயர்” என்பவர் ஆவார்;

இவரது பாடல்களை யாழில் வாசித்து வந்தவர் “நீலகண்ட யாழ்ப்பாணர்”

பதிகப் பெருவழியை= திருமுறைப்பதிகங்களைப்பாராயணம் செய்வதன் மூலமாகவே பிறவாத நிலையை அடையும் எளிய வழியை நமக்கு அளித்தவர் திருஞான சம்பந்தர் ஆவார்;


ஓம் அருணாச்சலாய நமஹ