Thursday, March 3, 2011

தனியார் வங்கியில் உங்கள் பணம் உள்ளதா? .. உஷார்... சிட்டி பேங்க் 400 கோடி மோசடி




மிகப் பெரிய அளவிலான ஒரு வங்கி மோசடி ஹரியானா மாநிலம் குர்கான் இல் நடந்துள்ளது. அங்குள்ள சிட்டி பாங்க்கில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், வங்கிக் கணக்குகளிலிரு்து ரூ. 400 கோடியை தனது பெயருக்கு மாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.





மொத்தம் 20 கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அவர் இந்த மோசடியைச் செய்துள்ளார். இதுதொடர்பாக சிட்டி வங்கி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சிட்டி வங்கி செய்தித் தொடர்பாளர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், கர்கான் கிளையில் சில கணக்குகளில் முறைகேடாக பணம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து புகார் வந்ததும் நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். அதில்தான் இந்த நிதி மோசடி குறித்த விவரம் தெரிய வந்தது.



சிவராஜ் பாட்டீல் என்ற ஊழியர்தான் இதைச் செய்ததாக கண்டுபிடித்துள்ளோம். பல்வேறு வாடிக்கையாளர்களை அணுகி கவர்ச்சிகரமான திட்டங்கள் இருப்பதாக கூறி முதலீடு செய்ய வைத்து அந்தப் பணத்தையெல்லாம் இவர் சுருட்டியுள்ளார். அநத்ப் பணத்தை எடுத்து வேறு சில கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

இப்படியாக 20 வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை சுருட்டியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.



சிட்டி வங்கியின் அறிவிப்புகள் என்று கூறி மோசடியான திட்ட அறிவிப்புகளை இவரே அச்சிட்டு அதை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து முதலீடு செய்யத் தூண்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் செபியின் நோட்டீஸைப் போல போலியான ஒன்றையும் தயாரித்து இவர் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் கறந்துள்ளார்.

தற்போது இந்த வழக்கை குர்கான் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 420, 467, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது



thanks:http://www.livingextra.com/http://www.livingextra.com/









.

































.

























விமானத்தைக் கண்டுபிடித்த இந்து தால் படயே:மறுபதிவு

விமானத்தைக் கண்டுபிடித்த இந்து;திரு.தால் படயே,புனே,இந்துயா.


அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.



உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.

1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)



அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை?ஆதாரம்:vedic world heritage,volume VII



அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.



இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.

வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!!

Tuesday, March 1, 2011

தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தும் படம் சீடன்



ஏமாற்றமும்,பித்தலாட்டமும் நிறைந்த இந்தக் காலத்தில் தெய்வ நம்பிக்கை ஜெயிக்கும் என்பதை மென்மையாக வெளிப்படுத்தும் விதமாக சீடன் படத்தை இயக்கிய சுப்ரமணிய சிவா மற்றும் அதன் குழுவினரை ஆன்மீகக்கடல் வலைப்பூ பாராட்டுகிறது.
இந்து தர்மத்தை கொச்சைபடுத்தும் படமாக வெளிவந்துள்ள நடுநிசி நாய்கள் படத்தை இயக்கிய கவுதம் மேனனின் சீக்கு பிடித்த சிந்தனையை ஆன்மீகக்கடல் வன்மையாகக் கண்டிக்கிறது.(ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்பதை ஏசுநாதர் சொன்னதை வாசிக்கவில்லையா கவுதம் வாசுதேவ் மேனன்?)

உடல்நலம் பெற தண்ணீர் சிகிச்சை




மருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை!தினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றேகால் லிட்டர்(சுமார் ஆறு டம்ளர்கள்)அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது.



தலைவலி,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,கீல்வாதம்,மூட்டுவலி,சாதாரண பக்கவாதம்,ஊளைச்சதை,காதில் இரைச்சல்,இருதய வேகமான துடிப்பு,மயக்கம்,இருமல்,ஆஸ்துமா,சளி தொல்லை,மூளைக்காய்ச்சல்,கல்லீரல் சார்ந்த நோய்கள்,சிறுநீரகக் குழாய் நோய்கள்,பித்தக் கோளாறுகள்,வாயுக்கோளாறுகள்,வயிற்றுப்பொருமல்,இரத்தக் கடுப்பு,மூலம்,மலச்சிக்கல்,பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல்,ஒழுங்கற்ற மாதவிடாய்(இன்றைய மென் பானங்களை அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படுவது),அளவற்ற வெள்ளைப்படுதல்,கருப்பை புற்றுநோய்,மார்புப் புற்றுநோய்,தொண்டை சார்ந்த நோய்கள் இவை தீரும்.

எப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக்கொள்வது?

காலையில் எழுந்தவுடன்(பல் துலக்கும் முன்பாகவே) 1250 CC தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும்.இது சுமார் 6 தம்ளர் அளவாக இருக்கும்.1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக்கொள்வது நன்று.இதை நமது முன்னோர்கள் உஷா பானம் என்று பெயரிட்டுள்ளனர்.குடித்தபின்னர் முகம் கழுவிக்கொள்ளலாம்.

காலையில் இப்படி தண்ணீர் குடித்தப்பின்னர்,ஒரு மணிநேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ,பிஸ்கட்,பழங்கள்,தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.இது மிக முக்கியமான நடைமுறையாகும்.

காலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப்பின்னர்,படுக்கைக்குச் செல்லும் முன்பாக,நரம்புமண்டலத்தைத் தூண்டிவிடக்கூடிய பானங்கள்(மது மற்றும் போதை வஸ்துக்கள்)உணவுகளையோ எதையும் சாப்பிடக்கூடாது.இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.எனவே,இரவே பல்துலக்கிக் கொள்வது நன்று.தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கலாம் என சந்தேகப்பட்டால்,இரவே நீங்கள் காலையில் குடிக்க இருக்கும் 1.25 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்வது நல்லது.

ஒரே மூச்சாக 1.25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா?

சில நாட்கள் சிரமம் தான்.இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டுவிட்டும் குடிக்கலாம்.ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும்.அதுவும் நன்மைக்கே!

சரி! எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்?

சரியான முறையில்(மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது.தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூய நீரைக் குடிப்பதால்,குடலை வலுவாக்குகிறது.மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச்செய்கிறது.இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுவிட்டன.குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப்பொருட்களை ரசமாக்கி உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால்,தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது.இப்படி தினமும் புது ரத்தம் உற்பத்தியாவதால்,உடலில் அதுவரை இருந்துவந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும்.

நீண்ட ஆய்வுக்குப் பிறகு,பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

மலச்சிக்கல் ஒரே நாளில் குணமடைகிறது.

வயிற்றுப்பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது.

சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது.

இரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும்,புற்று நோய் நான்கு மாதங்களிலும்,க்ஷய ரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது.



இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:

மூட்டுவாதம்,வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை,மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும்,இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர்சிகிச்சையை செய்து வர வேண்டும்.ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்துவந்தால் போதுமானது.



மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும்.

படுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி,டீ,நொறுக்குத் தீனிகள் சாப்பிடக்கூடாது.

இதுவரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.

Monday, February 28, 2011

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் சக்தியை அறிய நேரில் வருக!!!





விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி ரோட்டுடன் இணைந்திருக்கும் முதலியார்பட்டித்தெருவில் நடுவில் அமைந்திருப்பது பத்திரகாளியம்மன் திருக்கோவில்.நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஓரத்தில் இருக்கும் புகைப்படம் இந்த பத்திரகாளியம்மாளின் புகைப்படமே.

ஒவ்வொரு வருடமும் வரும் சிவராத்திரியன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் (கரண்டி இல்லாமல்)வெறும் கையாலேயே அப்பம் சுட்டு எடுப்பார்.அப்படி எடுக்கப்பட்ட அப்பங்கள் பத்திரகாளியம்மாளுக்கு படைக்கப்பட்டு,அன்றிரவே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த பத்திரகாளியம்மாளின் சக்தியை,அருளாற்றலை வெளிப்படுத்தும் விதமாக இந்த அதிசய சம்பவம் சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

இந்த கோவிலுக்கு தினமும் வருபவர்களின் வாழ்க்கையில் தீராத பல பிரச்னைகள் தீருகின்றன.இந்த பத்திரகாளியம்மனின் அருளாற்றலை விவரிக்க ஒருதனி வலைப்பூவே நடத்திட முடியும்.(ஆன்மீகக்கடல் வலைப்பூவையே தினமும் பதிவுகள் செய்ய இயலவில்லை)



அப்படி பிரச்னை தீர்ந்தவர்களில் நானும் ஒருவன்.எனது பகுத்தறிவினால்,பலமுறை இந்த பத்திரகாளியின் சக்தியை உணர்ந்தவன்.8.8.2004 முதல் இன்றுவரையிலும் என்னை இயக்கிக் கொண்டிருப்பவள்;என்னை பாதுகாப்பவள்;எனக்கு மாபெரும் பிரச்னைகள் வந்த போதெல்லாம் எந்த வித அரசியல் செல்வாக்கும்,போலீஸ் செல்வாக்கும் பண செல்வாக்கும் இல்லாமலேயே என்னை அந்த பிரச்னைகளிலிருந்து காத்துவருபவள் இந்த பத்திரகாளியம்மன் மட்டுமே!

நீங்களும் ஒருமுறை எனது அம்மனை வந்து தரிசித்து,ஆசிர்வாதம் பெற்று,நிம்மதியாக வாழ்க!

2.3.2011 புதன் கிழமையன்று இந்த வருடம் சிவராத்திரி வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டித்தெருவிற்கு வருக!!!எனது அம்மா பத்திரகாளியன்னையின் அருளைப் பெறுக!!!

அங்கே என்னையும் சந்திக்கலாம்.

எப்போதெல்லாம் ஜபிக்கக் கூடாது?





பேருந்து,ரயில்,விமானப்பயணத்தின் போதும்,சைக்கிள்,மோட்டார் சைக்கிள் வாகனப்பயணத்தின்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.



தெருவில் நடந்துசெல்லும்போதும்,சாலையில் நடந்து செல்லும்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.அப்படி மீறி ஜபித்தால்,தடுமாறி கீழே விழுந்துவிடுவோம்.ஒருவேளை,வீம்புக்கென்று தொடர்ந்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,சில நாட்கள் கடந்தபின்னர்,விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.



பிரசவ மருத்துவமனை,பிணவறை,மற்ற எந்த மருத்துவமனையிலும்,சுத்தமில்லாத எந்த இடத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

வீட்டில் யாராவது அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அவர்கள் தூங்கும் அறையில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

குடும்பத்தோடு அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அன்றுமுதல் மூன்று நாட்களுக்கு அந்த வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

குடும்பத்தில் வயதானவர்கள் யாராவது இறந்துவிட்டால்,அந்த வீட்டில் குறைந்தது ஒரு மாதம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

துக்க வீடுகளுக்குச் சென்றால்,குறைந்தது ஐந்துநாட்கள் வரையிலும்,பிரசவம் ஆனவீடுகளுக்கு குழந்தை பிறந்த பத்துநாட்களுக்குள் சென்றால் ஐந்து நாட்கள் வரையிலும் சென்றவர் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.

வீட்டில்,வீடு போன்ற அமைப்பில்,எதாவது ஒரு சுத்தமான விரிப்பில் அமர்ந்து மன அமைதியோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த ஓம்சிவசிவஓம் ஜபித்து முடியும் வரையிலும் யாரிடமும் பேசாமலிருப்பது அவசியம்.செல்போனையும்,தொலைபேசியையும் சைலன் ட் மோடில் வைக்க வேண்டும்.இது கட்டாயம்.

ஓம்சிவசிவஓம்.

Friday, February 25, 2011

தமிழர்களின் புராதனக்கலைகளில் ஒன்று அவதானம்




அவதானம் என்றால் நினைவுத்திறன் என்று பெயர்.அஷ்டாவதானி என்றால் எட்டு விதமான விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பது என்று பெயர்.சோடேச அவதானி என்றால் ஒரே நேரத்தில் 16 விதமான விஷயங்களைக் கவனித்து பதிலை பின்னர் கூறுதல் என்று பொருள்.சதாவதானி,தசாவதானி என்றெல்லாம் நமது தாத்தாக்கள் இருந்திருக்கிறார்கள்.

தசாவதானி எனில் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களை கவனித்தல்

சதாவதானி எனில் ஒரே நேரத்தில் நூறு விஷயங்களை கவனித்தல்

சகஸ்ராவதானி எனில் ஒரே நேரத்தில் ஆயிரம் விஷயங்களைக் கவனித்தல்


நமது கூர்ந்த கவனிப்புத் திறனை வளர்க்க இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.ஒவ்வொரு ஞாயிறும் பயிற்சி இருக்கும்.

உதாரணமாக,திருக்குறளின் 1330 பாடல்களை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.அதன்பிறகு, கரும்பு என்ற சொல் எத்தனாவது பாடலில் இருக்கிறது என்பதை சொல்லும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

தமிழர்களின் புராதன நுண்கலைகளில் ஒன்று மீண்டும் தமிழ்நாடு முழுவதும் பரவ இந்த பதிவு வெளியிடப்படுகிறது.