Sunday, January 9, 2011

புலித்தமிழா

யிராயுதமாய்
வில்லோடு அம்பாய்
வீறுக்கொண்டுச் சென்று
வீரத்தை விதைத்து
சோழர் கொடியை
திக்கட்டும் பறக்கசெய்த
வெற்றிப்படையின் வேந்தனே...!

கரும்புலியாய் களத்திற்கு சென்றாய்
காலனிடம் கலந்துவிட்டாய்
எத்தனை காலம்கடந்தும் - என்
தமிழினம் காத்த கடவுளாய்
நான் உன்னை கண்டுகொண்டேயிருப்பேன்...!

கடற்புலியாய் கடலுக்குள்ளேயும் சென்று
கப்பலையே கவிழ்த்துவந்து
கயவனையும் கலங்கடித்தாய்...
மச்சவதாரமே உன் மரணத்திற்கு மரணமில்லை
அதை மறக்க எனக்கும் மனமில்லை...!

வான் புலியாய் வான்தேடி வட்டமிட்டாய்
போராளி இயக்கங்களின் பேரொளி பயணமாய்
முன்னோடி தமிழனென
வானோடி வானம்பாடிகளாய்
வலம்வந்து வான்புகழை
வையகத்தில் வெளிக் கொணர்ந்தாய்
தமிழனையே தலைநிமிர வைத்த
தமிழ்தாய் பெற்றெடுத்த தலைமகனே...!

ஓயாத அலைகளாய்
ஊருக்குள்ளும் பாருக்குள்ளும்
நம்தமிழ் புகழ்விதை தூவிய தூயவனே...
கார்த்திகை மாதத்தின் கலங்கரை விளக்கமே...
என் பூஜையறையின் கார்த்திகை பூவே...!

உறவாட வேண்டிய இடத்திலேயே
முகாமே சிறைச்சாலைப்போல்
மாறிப்போனதால்
மூச்சுக்குள் உன் ஞாபகம் வந்தபோதிலும்
முடங்கி கிடந்தே இரவல் வீட்டிற்குள்ளேயே
இறந்துகிடக்கிறோம் அனாதையாய்...!

போராட்டம் என்பதே
பொதுவான விசயமென்று போனபின்னே
எல்லா தோல்விகளையும்
தவிர்த்துவிட முடிவதில்லை...
ஏற்பட்ட தோல்விகளால்
ஒருபோதும் ஓரினம்கொண்ட லட்சியம்
தவிடுபொடி ஆகிவிட போவதுமில்லை...!

ஈழத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்
மண்ணோடு மடிந்துவிட
வெறும் எலும்பும் சதையுமான
வெற்றுடலில்லையே...
குருதியால் மண்ணில் குளித்து
நரம்புகளால் வேராகி
எலும்புகளால் கிளையாக
விருட்சமாய் நிச்சயம் வெளிவரும்
சுததந்திர ஈழத்தின்
விடுதலை காற்றை சுவாசிக்க...!

நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் - அன்று
தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்...!

நிழலும் வெளிச்சமாகும்போது
இருளைக்கூட தேடித்தான்
பார்க்க நேரிடும்...
எங்கள் வாழ்வும் நிஜமாய்
மாறும்வேலையில்
நிர்கதியான நிலைமாறி
நிம்மதியாய் நித்திரை கொள்வோம்...!

பகைவென்று
சுதந்திரகாற்றை சுவாசிக்க
சிறைவென்று சீற்றத்தோடு
பழிதீர்த்து நமக்கான வழிகாண
சபதமேற்போம் இந்நாளில்...!

உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுதந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா...!

                          - ச.இமலாதித்தன் 

Friday, January 7, 2011

எங்கெல்லாம் ஓம்சிவசிவஒம் ஜபிக்கலாம்?

இது மார்கழி மாதம் அல்லவா? வெகு விரைவில் நமக்கு ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தினால் நன்மைகள் கிடைக்க(நமது முற்பிறவி பாவங்கள் நீங்கிட) தினமும் அதிகாலை மணி 4.30 முதல் 6.00 மணி வரையிலும் நமது வீட்டின் மாடியில் ஜபித்துவரலாம்.(குளித்து தயாரானப்பின்னர்தான்)



நமது ஊரில் இருக்கும் மலைக்கோவில்களில்(அது பெருமாள் கோவிலாக இருந்தாலும்,முருகன் கோவிலாக இருந்தாலும்,ஆஞ்சநேயர் கோவிலாக இருந்தாலும்) உயரமான இடத்தைத் தேர்ந்தெடுத்து(முடிந்தால்தான்) அங்கே தினமும் காலை ஒரு முறை,மாலை ஒரு முறை வீதம் ஜபித்துவரலாம்.ஒரு முறைக்கு குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் வரை ,அதிகபட்சம் 1 மணிநேரம் வரையிலும் ஜபிப்பது நன்று.

அனுபவத்தில் ஒரு முறைக்கு 15 நிமிடம் வரைதான் ஜபிக்கவே முடிகிறது.ஒரே ஒரு நாள் மட்டுமே 60 நிமிடங்கள் வரையிலும் ஜபிக்க முடிந்தது.



இமயமலை முழுக்கவும் சாமியார்கள் இருப்பதற்குக் காரணமே இதுதான்.எவ்வளவு உயரத்தில் இருந்து மந்திர ஜபம் ஜபிக்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமக்கு மந்திர ஜபத்தின் புண்ணியம் பலனாகக் கிடைக்கும்.ஆக,மனத்தை ஒரு முகப்படுத்தி மனதிற்குள் ஒரு குறிப்பிட்ட ஒலியதிர்வினை உருவாக்கும்போது நமது தலைவிதியையே மாற்றிட நம் ஒவ்வொருவராலும் முடியும்.இதையெல்லாம் ஆராயாமல்,கடலுக்கடியிலும்,விண்வெளியிலும் ஆராய்ந்து நாம் என்னத்தைக் கண்டோம்?



ஆலமரத்தடியில் அதிகாலையில் அதுவும் மார்கழிமாதத்தின் வைகறைப்பொழுதில் ஓம்சிவசிவஒம் ஜபித்துவர,ஓவ்வொரு ஜபத்திற்கும் பல கோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியம் கிடைப்பது நிச்சயம்.



கிராமங்களிலும்,பால் பண்ணைகளிலும் பசுக்களைக் கட்டியிருக்கும் தொழுவத்தில் அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபித்தாலும் பல கோடி மடங்கு ஜபித்த பலன் கிடைக்கும்.



ஆனாலும்,நாம் நமது மனத்தினால்,ஒரு லட்சம் முறை விடாமல்(அப்பியாசப்படி அதாவது தினமும் ஓரிரு முறை என்று சில மாதங்களில்) ஜபித்து வந்தப்பின்னர்,நமது நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும்.



எனது நீண்டகால பால்ய நண்பர் எப்படி ஜபிக்கிறார் தெரியுமா?



அவரது மாட்டுக்கொட்டகையில் இந்த மார்கழிக்கடும் குளிரில், கழுத்தில்,புஜத்தில்,இடுப்பில்,உச்சந்தலையில் தலா ஒரு ருத்ராட்சம் அணிந்துகொண்டு,இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வைத்துக்கொண்டு, உடலெங்கும் திருநீறு பூசி,இடுப்பில் மஞ்சள் துண்டு மட்டும் அணிந்து,மஞ்சள் நிறவிரிப்பு விரித்து,குறைந்தது ஒரு மணிநேரம் வரை அதிகாலையில் ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்.



ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் அமாவாசையன்று சதுரகிரிக்குச் சென்று அங்கே தனிமையில் வனாந்திரத்தில் காலை ஒரு மணி நேரமும்,மாலை ஒரு மணிநேரமும் அங்கிருக்கும் ஆலமரத்தடியில்(மேலே கூறியது போல்) ஜபிக்கத் திட்டமிட்டுள்ளார்.

சரி! நமக்கும் இதுபோல் குடுப்பினை இருந்தால் சரி!! நாமும் இவரைப்போல் முயற்சிக்கலாமே!!!

எந்திரன் இயக்குநர் சங்கர் ஒரு பேட்டியில்:

பெரு நாட்டில் இருக்கிற எட்டாவது அதிசயமான மச்சுபிச்சுல கிளிமஞ்சாரோ பாடலை எடுத்தோம்.சம்பா நடனப்பள்ளியில் போய் அங்கு நடனமாடுபவர்களை வரவழைத்தோம்.இந்தப் பாடலை படப்பிடிப்பு செய்யும்போது,அந்த மலைல லைட் வைக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.அங்கே இருக்குற ஒவ்வொரு கல்லையும் அவங்க தெய்வமாக மதிக்கிறாங்க.

இந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்

இந்துக்கள் எண்பது சதவீதத்துக்கும் மேலாக வாழும் ஒரே நாடு நமது பாரதம் மட்டுமே.பாரத தேசத்தில் இந்து தர்மத்தைச் சிதைப்பதிலும்,இந்து விரோத சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்களில் சிலரே களத்தில் இருக்கின்றார்கள்.







விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இந்துவிரோத சக்திகள் இருந்தாலும்,இவர்களின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் வியாபித்துள்ளது.இந்த தீய சக்திகள் இந்து ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களின் செயல்களை செய்து வருகிறார்கள்.






தங்களின் அதிகார பலத்தாலும்,வெளி உலக பலத்தாலும் கருத்துக்களையே மாற்றியமைக்கக்கூடிய சூழிநிலையை உருவாக்குகிறார்கள்.






உலகில் வலிமைமிக்க சக்தியாக விளங்குவது ஊடகங்கள் எனப்படும் மீடியாக்கள்.இந்து விரோத சக்திகள்,தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டு காரியங்களைச் செயல்படுத்த மீடியாக்கள் மூலம் முனைகிறார்கள்.






வெளிப்பார்வைக்கு இவர்களின் போக்கு இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிந்தாலும்,அந்நிய சக்திகளின் ஊக்குவிப்பால் தங்களின் ஊடகங்கள்(மீடியாக்கள்) மூலமாக இந்து விரோத செய்திகளை அதிக அளவில் வெளியிடுகிறார்கள்.






அடிமைத்தனத்தின் உச்சமான ஆங்கில மோகத்தின் காரணமாக பாரத நாட்டில் பெருவாரியான மக்கள் ஆங்கில நாளிதழ்களில் வரும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.






பெருவாரியான ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் அல்லது அந்நிய கிறிஸ்தவ மிஷனரிகளின் கையில் இருக்கின்றன.






இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றம் செய்யவேண்டும்.இந்து ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தெளிவான கொள்கையின் அடிப்படையில் ஊடகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.






ஜனநாயகத்தின் நான்காவது தூண்,மூன்றாவது கண் என வர்ணிக்கப்படும் இதழ்கள் இரு சமுதாயத்திற்கு விரோதமான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தவறான செய்திகளாக இருப்பினும் சிறிதும் வெட்கம்,கூச்சமின்றியும்,எவ்வித சமுதாயக்கண்ணோட்டம் இல்லாமலும் செயல்படுகின்றன.






ஆங்கிலப்பத்திரிகை என்பது அறிவுஜீவிகளின் பத்திரிகை,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கலாம்.


ஆனால்,உலக நாடுகளுக்குப் பாரதத்தைப்பற்றியும்,பாரதத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் உணர்வுகளைப் பற்றியும் திசைதிருப்ப பெரும்பங்காற்றுவது ஆங்கிலப்பத்திரிகைகளே!!






அவை அப்படி செய்ய அதன் திரைமறைவு ரகசியங்களை ஆராய்வோம்:






தி ஹிந்து






125 ஆண்டுகள் பழமையான நாளிதழ் தி ஹிந்து.துவக்க காலங்களில் நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய இதழ்.






ஆனால்,தற்போது இந்து விரோத செய்திகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பதும்,இந்து விரோதசக்திகளுக்கு ஆதரவான கட்டுரைகள் அதிக அளவில் பிரசுரிப்பதும் தங்களின் தலையாய பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.


இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விஜில் என்னும் அமைப்பின் சார்பில் நடந்த ஒரு ஆய்வரங்கில் 1992 இல் அயோத்தியில் நடந்த சம்பவத்தைக் காட்டுமிராண்டியின் செயல்பாடு என வர்ணித்தார்.


இன்று இந்து பத்திரிகையின் முழு நிர்வாக அமைப்பு சுவிஸ் நாட்டின் ஜோஷ்வா சொசைட்டி என்னும் நிறுவனத்தின் பிடியில் இருக்கிறது.(Joshuna Society,Beme).






என்.ராமின் முதல் மனைவி ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த சூசன் என்பவர்.இவர் ஆக்ஸ்போர்டு பிரஸ் வெளியீட்டின் பொறுப்பாளர்.இவரது மகள் வித்யாராம் ஒரு பத்திரிகையாளர்.


என்.ராமின் இரண்டாவது மனைவி மரியம்.சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி.இவரின் தூண்டுதலின் பலனாகவே கிறிஸ்தவ அமைப்பிடம் இந்து பத்திரிகையின் நிர்வாக அமைப்பு மாறிவிட்டது.






எக்ஸ்பிரஸ் பத்திரிகை






தேசபக்தி கொண்ட ராம்நாத் கோயங்காவால் துவக்கப்பட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை.இந்துப்பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்திற்கும் ஊறு விளைவிக்காமல் பத்திரிகை நடத்தியவர்.அவசர காலத்தில் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்.






ஆனால்,இன்று,தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எனவும்,தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் எனவும் இரண்டாக பிரிந்துள்ளது.






இந்த இரண்டில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிக பங்குகளை வாங்கியது ஏசிடிஎஸ் கிறிஸ்டியன் மினிஸ்டர்ஸ் என்ற(ACTS Christian Ministers)கிறிஸ்தவ நிறுவனமாகும்.






இரண்டு பிரிவுகளில் இந்துக்களுக்கு ஆதரவாக இயங்கும் பத்திரிகை தற்போது மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாகும்.ஏனெனில்,இது கோயங்காவின் நேரடி வாரிசுகளின் கையில் இருக்கிறது.






டைம்ஸ் குருப் பத்திரிகைகள்


வடமாநிலங்களி அதிக அளவில் வெளிவரும் பத்திரிகை டைம்ஸ் குரூப்பின் பத்திரிகைகளாகும்.இந்த நிறுவனத்திலிருந்து வரும் பத்திரிகைகள் டைம்ஸ் ஆப் இந்தியா,மிட்டே,நவபாரத் டைம்ஸ்,ஸ்டார் டஸ்ட்,பெமினா,விஜய் டைம்ஸ்,விஜய் கர்நாடகா






இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பென்னட் கோல்மேன் என்ற நிறுவனமாகும்.(Bennet & Coleman).இந்த நிறுவனத்தின் 80% பங்குகள் உலக கிறிஸ்தவ கவுன்சில்(World Christian Council)வசம் உள்ளது.






காங்கிரஸ் தலைவியாக இருக்கும் இத்தாலிய கிறிஸ்தவரான சோனியா ஆண்டனி மீமொய்னோவின் நெருங்கிய உறவினரான,இத்தாலியைச் சேர்ந்த ரோபர்டோ மின் டோ(Roberto Mindo)வசம் 20% பங்குகள் உள்ளன.






ஏசியன் ஏஜ்,டெக்கான் கிரானிக்கல்






ஏசியன் ஏஜ்,டெக்கான் கிரானிக்கல் என்னும் இரண்டு ஆங்கிலப்பத்திரிகைகளும் சவுதி அரேபியாவின் நிறுவனத்தைச் சேர்ந்தவை.இந்த இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியர் எம்.ஜே.அக்பர்.இவர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 1989 முதல் 1991 வரை இருந்தவர்.






பல பத்திரிகைகளில் இந்துக்களுக்கு எதிராகவும்,இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.






அமெரிக்காவில் இருக்கும் திரு புருக்கிங்(The Brookings Institution,Washington) நிறுவனத்தில் இஸ்லாமிய உலகின் அமெரிக்கக் கொள்கை பற்றிய வகுப்பு எடுக்கும் பகுதி நேர ஆசிரியர்.






2006 ஆம் ஆண்டு மக்கா அல் முக்கரமா என்னும் இடத்தில் நடந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கான அமைப்பின் உறுப்பினர்(Member of the Forum of Islamic Scholors and Intellectual held in Makka-al-Mukaramma).இவரின் துணைவியார் மல்லிகா ஜோசப் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றுகிறார்.ஆகவே,இவர் எழுதும் எழுத்துக்கள் அனைத்தும் இந்துவிரோத கருத்துக்களாகவே இருக்கின்றன.நன்றி:பசுத்தாய்,பக்கம் 5,6.நவம்பர் 2010.

Thursday, January 6, 2011

நமது இந்துதர்மம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்






வேதங்களின் ஏதாவது ஒரு பகுதியை நான் படிக்கும்போது,தெய்வீகமான, இதுவரை அறிந்திராத ஒளி என்னுள் வெளிச்சம் தருவதை உணர்கிறேன்.வேதங்களின் ஒப்பற்ற போதனையில் பேதம் இல்லை.அது அனைத்து வயதினருக்கும், பிரதேசத்தினருக்கும்,நாட்டினருக்கும்,ஜாதிக்கும் உரியது.






அது பேரறிவை அடைவதற்கான பெருவழி.அந்த வழியில் செல்லும்போது,கோடைகால இரவில் நட்சத்திரங்கள் ஒளிரும் வானவெளியின் கீழ் இருப்பதைப் போல் உணர்கிறேன்.


ஹென்றி டேவிட் தோரா(1817 டூ 1862)அமெரிக்காவின் புகழ்பெற்ற தத்துவ அறிஞர்,எழுத்தாளர்,சமூக விமர்சகர்.










இந்த உலகின் மிகப்பெரிய நம்பிக்கைகளுள்,பிரபஞ்சக் கோட்பாட்டோடு பொருந்தி வரக்கூடிய காலக்கணக்கைக் கொண்டிருக்கும் ஒரே மதமும் அதுவே(இந்து மதம்)






கார்ல் சகன் (1934 டூ 1996) புகழ்பெற்ற நவீன வானியற்பியலாளர்.










பண்டைய காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் மூலமாக இறைவன்,அனைத்து புனித நூல்களையும் இந்துக்களுக்கு அளித்துள்ளான்.






பிரம்மா அந்த ரிஷிகளில் முதன்மையானவர்.படிப்படியான ஆய்வுகளுக்குப்பின் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.






ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும்,பிரம்மாவின் மிகச்சிறந்த அறிவுநூல்களாகும்.






முகமது தாரா ஷீ கோ(1627 டூ 1658)


ஷாஜஹானின் மூத்த மகன்

உண்மைகள் நிர்வாணமானவை;அது யாருக்கும் பிடிக்காது








டெல்லி ஜீம்மா மசூதி இமாம் மவுலானா அகமது புகாரியிடம், ஒரு பத்திரிகையின் நிருபர் முகமது அப்துல் வகீத் சிஷ்டி என்பவர்,






பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முந்தைய நில ஆவணங்களில் தசரத மன்னரின் பெயர் இருப்பது குறித்து இமாமின் நிலைப்பாடு என்ன?






என்று கேட்டார்.நிருபரின் இந்த கேள்வியைக் கண்டு கோபம் அடைந்த இமாம்புகாரி பாய்ந்துசென்று அவரைத் தாக்கினார்.


உடன் இமாமின் அடியாட்களும் நிருபரைக் கடுமையாகத் தாக்கினார்கள்.இந்தத் தாக்குதல் குறித்து நிருபர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.


நன்றி:தினத்தந்தி 15.10.2010
திருஅண்ணாமலை தீபத்திருக்கார்த்திகை விழாவிற்காக இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிவலோக ஆன்மீக ஆசிரமத்தைச் சேர்ந்த 80 பேர் நெய் காணிக்கையாக ரூ.5,25,000/-ஐ அளித்து அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளனர்.