Monday, December 24, 2018

மற்றவர்களை வெற்றி கொள்வது எப்படி?






(இந்தக்குறிப்புக்களை நான் கி.பி.1992 ஆம் வருடம் எனது கல்லூரி நாட்களில் எனது டைரியில் எழுதிவைத்தேன்.இந்த குறிப்புகள் எனது ஆளுமைத்திறனை உருவாக்கின)

அ)உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக்கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.

ஆ)வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.

இ)பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.செல்போனில் கவனமாக இருக்காதீர்கள்;(அவர்களை நீங்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்துவிடுவார்கள்)

ஈ)எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.

உ)குறைவாகப் பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்

ஊ)ஒருவரிடம் கேள்வி கேட்டப்பின் அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே விடை கூற முற்படாதீர்கள்.

எ)பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்க வேண்டாம்.பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்காதீர்கள்.

ஏ)ஒருவருக்கு ஓர் உதவியை செய்யும்முன், அதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், அதைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.(நட்பு வட்டம்,உறவு வட்டத்தில் மறுத்துப் பேசவும் பழகி கொள்ளுங்கள்)

ஐ)(உங்களிடம் பணிபுரிவர்களிடம்) முடிவு செய்தல், செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

ஒ)மற்றவரின் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.இதனால் அவர்களிடம் நீங்கள் நன்மதிப்பு பெற முடியும்.

ஓ)ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்.போலியான பாராட்டுக்களை வாரிவிடவேண்டாம்.

ஒள)தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஃ)உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்கள் கூட்டாளிகள்.(உங்கள் உலகமே அவர்கள்தான்)அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

க) உங்களுக்குத் தெரியாவிட்டால், உரியவரிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள்.தெரியும் என்ற நடிப்பு வேண்டாம்.

ங)தவறிழைத்தால் அதை ஒப்புக்கொள்ளத்தயங்காதீர்கள்! இதனால் மற்றவர்களுக்கு உங்களைப் பிடித்துப்போகும்.


ச)வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

டீன் ஏஜ்ஜில் இருக்கும் உங்கள் வாரிசு எக்ஸ்பர்ட் ஆகிட.....





எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே நமது இந்துதர்மம் உலகம் முழுவதும் பரவி இருந்தது.இன்றும் உலகின் பல நாடுகளில் சிவலிங்கங்கள்,விநாயகர் சிலைகள் பூமியைத் தோண்டும்போது கிடைத்துக் கொண்டே இருக்கின்றன;இதுவே நேரடி ஆதாரம் ஆகும்.இந்து தர்மத்தின் பெருமைகள் இன்று பள்ளி,கல்லூரி பாடத்திட்டங்களில் இல்லை;1964 முதல் 2018 வரை படிப்படியாக நமது பள்ளி,கல்லூரிப் பாடத்திட்டங்களில் இருந்து முழுமையாக நீக்கிவிட்டார்கள்;ஆனால், கிறிஸ்தவ  மேல்நாடுகளின் நாகரீகம்,அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய வரலாறு போன்றவை பாடத்திட்டத்தில் இருக்கின்றன;


ஒவ்வொரு கல்வியாண்டு முடிந்து,அடுத்த கல்வியாண்டு துவங்கும்போது பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன;இவ்வாறு வெளியானதும்,தமிழ்நாடு முழுவதும் சுமாராக பத்தாயிரம் மாணவ,மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர்;அதில் குறிப்பிட்ட சதவீதம் பேர்கள் தற்கொலை செய்து இறந்தும் போகின்றனர்.அவர்களை பெற்ற பெற்றோர்களும்,உடன் படித்தவர்களும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்;

இதற்கெல்லாம் ஒரே ஒரு காரணமே:
நமது முன்னோர்களின் சாதனைகள் பருவ வயதில் தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததிக்குத் தெரியாமல் போவதே!


நமது முன்னோர்கள்,உலகின் மூத்த இனத்தைச் சேர்ந்தவர்கள்;ஆம்! உலக வரலாற்றில் குரங்கிலிருந்து மனிதன் நாகரீகமடையத் துவங்கியது தமிழ்நாட்டில் தான்.

தமிழ்பேசும் மக்கள் இன்றைய சென்னையிலிருந்து தமிழ்நாடு முழுவதும்,இலங்கை முழுவதும்,இலங்கைக்கு தெற்கே இரண்டாயிரம் சதுர கி.மீ.தூரம் வரை பரவியிருந்த குமரிக்கண்டம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.எவ்வளவு காலம் தெரியுமா? சுமாராக இருபத்தைந்து லட்சம் ஆண்டுகளாக! உலகில் வேறு எந்த நிலப்பகுதியிலும் இவ்வளவு காலமாக மனித இனம் வாழ்ந்து வந்ததில்லை;


வானியல்,மருத்துவம்,யோகா,அரசியல்,அரசுநிர்வாகம்,தியானம்,          ஆரோக்கியம்,ஜோதிடம்,நீர் மேலாண்மை,சுற்றுச் சூழல்,அணுசக்தி,விண்வெளிப் பயணம்,கிரகங்களின் சுபாவங்கள்,மூலிகைகளின் மருத்துவ குணங்கள்,வேதியியல்,இயற்பியல்,விலங்கு மனோதத்துவம்,மக்களாட்சி என்று நமது தமிழ் முன்னோர்கள் சாதிக்காத துறைகளே இல்லை;ஒவ்வொரு துறையிலும் இவர்கள் கண்டுபிடித்த அளவுக்கு இன்னும் கிறிஸ்தவ  மேல்நாடுகள் கண்டறியவில்லை;


நமது முன்னோர்களின் சாதனைகள் பருவ வயதில் தெரிந்தால் தான் தன்னம்பிக்கை மனதில் உருவாகும்;தன்னம்பிக்கை உண்டானால் தான் தற்கொலை எண்ணம் தோன்றாது;ஒரு பாடத்தில் ஒரு மார்க்கில் தோல்வி,இரு மார்க்கில் தோல்வி என்பதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்ததேர்வில் ஜெயிக்க முயற்சிக்க ஆரம்பிப்பார்கள்;
ஆனால்,இன்று நடப்பது என்ன?


நமது பெற்றோர்கள் முட்டாள்கள்,நமது தாத்தா பாட்டி அப்பாவிகள்,நமது பரம்பரையே அறிவிலிகள் பரம்பரை என்பதை மெக்காலே கல்வித் திட்டத்தில் பயிலும் நமது குழந்தைகள் உணருகிறார்கள்;

ஆங்கில வழிக் கல்வி மூலமாக நமது தமிழ்ப் பண்பாட்டிலிருந்தும்,இந்துப்பண்பாட்டிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு    கிறிஸ்தவ மேல்நாட்டு நாகரீகமே உயர்ந்தது என்ற மாய நாகரீகம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வி பயின்றால் தான் தரமான கல்வி பயில்வதாக அர்த்தம் என்ற மாயை தமிழ்நாட்டின் மரபாகிவிட்டது;


இந்த மரபினை உருவாக்கியவர்கள் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்,ஆசிரியைகளே! இவர்கள் தமது குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பதைக்  கவனித்து கிராமத்து பெற்றோர்களும் தமது குழந்தைகளுக்கு டை,ஷீ,பெல்ட் கட்டி பள்ளிக்கு அனுப்பத் துவங்கி 35 ஆண்டுகள் ஓடிவிட்டன;உலக வரலாற்றில் தாய் மொழியே தெரியாமல் இரண்டு தலைமுறையினர் உருவாகிவிட்டனர்;



நமது முன்னோர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகள் என்பதை நான் மட்டும் உணர்ந்தால் போதுமா? ஒட்டு மொத்த நமது முன்னோர்களின் சாதனைகளையும் நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டால்,


1.தமிழ்நாட்டில் ஒருவர் கூட மதம் மாற மாட்டார்கள்.
2.தமிழ்நாட்டில் ஒருவர் கூட வறுமையில் வாட மாட்டார்கள்.
3.தமிழ்நாட்டில் ஒருவர் கூட நாத்திகத்தைப் பின்பற்ற மாட்டார்கள்.
4.தமிழ்நாட்டில் ஒருவர் கூட கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


5.தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் ஒருவர் கூட தற்கொலை முயற்சி கூட செய்ய மாட்டார்கள்.


6.தமிழ்நாட்டில் இந்து தர்மத்துக்கு எதிராக எந்த ஒரு அமைப்பும்,கட்சியும்,இயக்கமும் செயல்படாமல் போய்விடும்.


7.தமிழ்நாட்டில் ஒரு அரசியல்வாதிகூட கோவில் சொத்துக்களையும்,அரசாங்க சொத்துக்களையும் திருட/தனது பெயருக்கு மாற்றிட நினைக்க மாட்டார்கள்.


8.தமிழ்நாட்டின் சுயமரியாதையோடு அண்டை மாநிலங்கள் போட்டி போடாது;


9.உலகிற்கே வழிகாட்டும் நாடாக இந்தியா உயர்ந்துவிடும்.


10.இந்தியாவுக்கும்,தமிழ்நாட்டிற்கும்,இந்து தர்மத்துக்கும்,தமிழ் மொழிக்கும் எதிராக எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உருவாகாது.


11.ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் சுயச் சார்போடு செயல்படும்;கட்டைப் பஞ்சாயத்து,அரசியல் அராஜகம் இராது.


12.நோக்கு வர்மம்,சித்த மருத்துவம்,சிலம்பாட்டம்,கபடி,பாண்டி ஆட்டம்,வர்மக்கலை போன்றவைகளைக் கற்றுக் கொள்ள உலக நாடுகளில் இருந்து பல லட்சம் மாணவ,மாணவியர் தமிழ்நாட்டுக்கு வர ஆரம்பிப்பார்கள்;இந்த கலைகள் பி.டெக்கிற்குச் சமமாக நமது தமிழ்நாட்டுக் கல்லூரி,பல்கலைக் கழகங்களில் போதிக்கப்படும்.



எனக்கு நமது முன்னோர்களின் சாதனைகளை போதித்தது  இது போன்ற ஒரு ஆன்மீக அமைப்பு ஆகும்.இந்த அமைப்பு போலவே,மேலும் சில அமைப்புகளும் அடிக்கடி இளைஞர் பயிற்சி முகாம்,இளம்பெண்களுக்கான பயிற்சி முகாம்,சிறுவர்சிறுமியர் பயிற்சி முகாம்களை நடத்திவருகின்றன.

அவைகள் அனைத்திலும் அடிக்கடி நமது குழந்தைகள் கலந்து கொண்டால் அவர்கள் பள்ளிப்படிப்பில் இன்னும் அக்கறையோடும்,சிரத்தையோடும்,திறமையோடும் கவனம் செலுத்தி படிப்பிலும்,வாழ்க்கையிலும் சாதனைகள் படைப்பார்கள்;


பின்வரும் பயிற்சி முகாம்களில் ஏதாவது ஒன்றில் கலந்து கொள்வதன் மூலமாக நமது குழந்தைகளை(பள்ளி & கல்லூரியில் படிப்பவர்களும்,படிக்காதவர்களும்!) நமது இந்து தர்மத்தையும்,தமிழ்ப் பண்பாட்டையும் நோக்கித் திருப்பிவிட முடியும்.செய்வோமா?

ஆண்களுக்கு ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இறுதி வாரத்தில் ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் 7 நாட்கள் பண்புப் பயிற்சி முகாம்களை மாவட்ட அளவில் நடத்தி வருகின்றது;15 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்துச் சிறுவனையும் இங்கே அனுப்பி வைக்கலாம்;இந்த 7 நாட்களும் இந்த முகாமில் செல்போன் பேச அனுமதி கிடையாது;உங்கள் ஊரில் இருக்கும் பா.ஜ.க.வினரிடம் விசாரியுங்கள்;

பெண்களுக்கு ஒவ்வொரு டிசம்பர் மாதமும் ஏதாவது ஒரு வாரத்தில் ராஷ்டீரிய சேவிகா சமிதி என்ற அமைப்பு 5 நாட்கள் பண்புப் பயிற்சி முகாம் நடத்தி வருகின்றது;பெண் குழந்தைகளை சுலபத்தில் வெளியே அதுவும் தனியாக எங்கும் விடுவதில்லை;எனவே,ஒரு சில இடங்களில் 13 வயது நிரம்பிய இந்துச் சிறுமிகளுக்கு பண்புப் பயிற்சி முகாம்கள் நடத்துகின்றார்கள்;








நமது வாரிசுகளுக்கு இந்து தர்மத்தின் பெருமைகளை உணர்த்துவோம்!!!



7 வயதுக்குள் நமது குழந்தையை மாதம் ஒருநாள்(ஞாயிற்றுக்கிழமையே போதும்) நமது ஊரில் இருக்கும் பழமையான ஆலயத்துக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு பக்தி உணர்வு உருவாகும்;

13 வயது முதல் 25 வயது வரை நமது மகனையும்,மகளையும் பண்புப் பயிற்சி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்;ஆண் எனில்,15 வயது முதல் 25 வயதுக்குள்ளாகவும்,பெண் எனில் 13 வயது முதல் 21 வயதுக்குள்ளாகவும் இம்மாதிரியான முகாம்களுக்கு அனுப்பாவிட்டால்,அதன் பிறகு,அவர்களின் வாழ்க்கையில் உருப்படியான கேரக்டர்களை உருவாக்கிட முடியாமல் போய்விடும்;

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதி 7 நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பண்புப்பயிற்சி முகாம்கள் நடைபெற்றுவருகின்றன;அவைகளுக்கு அவசியம் நமது மகன் களை அனுப்ப வேண்டும்;

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ஏதாவது 5 நாட்கள் முகாம் இளம் இந்து பெண்களுக்கு பண்புப் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது;


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்,மே மாதத்தில் 15 நாட்கள் தமிழ்நாட்டில் இதே பண்புப்பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன;அவைகளுக்கும் நமது மகனை கண்டிப்பாக அனுப்ப வேண்டும்; அதே போல,பெண்களுக்கு என்று இருக்கும் முகாமுக்கு நமது மகளை அனுப்பி வைக்க வேண்டும்;

    இப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அனுப்பினால்,அதன் பிறகு,நமது மகன் நமது இந்து தர்மம் பற்றிய முழு அறிவைப் பெறும் கண்ணோட்டத்தைப் பெற்றுவிடுவான்;எதற்கெடுத்தாலும் பயப்படும் குணம் அவனை விட்டு ஓடிவிடும்;எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவனுக்கு கைகூடிவிடும்;மகளாக இருந்தால்,மூன்று தலைமுறை இந்துவிழிப்புணர்ச்சியை உருவாக்குகின்றீர்கள் என்று அர்த்தம்;

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பெண்களுக்கு மட்டும் 15 நாட்கள் பண்புப் பயிற்சி முகாம்கள் நடைபெற்றுவருகின்றது;என்ன கஷ்டம் வந்தாலும் சரி! எந்த தியாகம் செய்தாவது தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நமது மகள்கள் 13 வயது அடைந்தது முதல் 21 வயது வரை இந்த முகாம்களுக்கு அனுப்பியே ஆக வேண்டும்;


இந்த மூன்று ஆண்டுகள் வாழ்நாளில் முக்கிய தருணங்கள்;இந்த காலகட்டத்தில் இந்த பண்புப் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பிவிட்டால் போதும்;அதன் பிறகு,இந்த உலகில் சுயமாக சிந்திக்க,செயல்பட,எதையும் எதிர்கொள்ளும் இந்து உணர்வும்,தன்னம்பிக்கையும் கைகூடிவிடும்;

19 வயது முதல் 25 வயது வரை ஆளுமைத் திறன் மேம்பாடும்,ஆழ்மனதின் சக்தியைப் பயன்படுத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம்,சுதேசி விழிப்புணர்வுக்  கருத்தரங்கு,இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்கள் இவைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அனுப்ப வேண்டும்;

25 வயது முதல் வாழ்நாள் முழுவதும் நமது மகனும்,மகளும் சகலகலா வல்லியாகத் திகழுவார்கள்;அவர்களுக்குள் உருவாகும் இந்து உணர்வு இப்பிறவி முழுவதும் கூடவே வரும்;


பாரத் மாதா கீ ஜெய்!!!











இந்து என்ற உணர்வு இல்லாததால் நாம் படும் அவஸ்தைகள்....








1700 வரை முடிவடைந்த 24,000 ஆண்டுகள் வரையிலும் உலகின் பணக்கார நாடுகளாகவும்,வல்லரசு நாடுகளாகவும் இருந்தவை நமது பாரத தேசமும்,நமது பங்காளி சீனாவும் தான்;ஒவ்வொரு 300 ஆண்டுகள் வரையிலும் உலகின் முதல் பணக்கார நாடாகவும்,உலகின் முதல் வல்லரசு நாடாகவும் பாரதமாகிய நாமும்,இரண்டாவது பணக்கார நாடாகவும்,உலகின் இரண்டாவது வல்லரசு நாடாகவும் சீனாவும் இருந்திருக்கின்றன;அடுத்த 300 ஆண்டுகள் வரையிலும் சீனா முதலிடத்திலும்,பாரதமாகிய நாம் இரண்டாமிடத்திலும் இருந்துள்ளோம்;இந்த உண்மையை உலக பொருளாதார ஆவணங்களை ஆராய்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது;அந்த புத்தகத்தின் பெயர்;The Rising and Falling of Great Powers.

மீண்டும் சீனாவும்,பாரதம் என்று அழைக்கப்படும் இந்தியாவும் உலக வல்லரசாக ஆகிவிடக்கூடாது என்பதில் மேற்கு நாடுகள் பலவிதமான சதித்திட்டங்களை கடந்த 400 ஆண்டுகளாக செயல்படுத்திவந்துள்ளன;அவைகளில் முதன்மையானதுதான் மதமாற்றம்;

சீனா மறைமுக சர்வாதிகார நாடாக மாறிவிட்டதால்,அங்கே இலுமுனாட்டிகளால் கூட அவர்கள் நினைத்த எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது;

நமது நாட்டின் முதல் பிரதமராக ஒரு நாத்திகவாதியை ஆக்கியதில் பிரிட்டனின் நயவஞ்சசகம் ஜெயித்தது;இந்தியா பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரித்த பின்னரும்,சுமாராக 18 மாதங்கள் இரு நாட்டு ராணுவத்திற்கும் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார் தெரியுமா?

மவுண்ட்பேட்டன் தான்;உலக வரலாற்றில் மிகப் பெரிய துரோகத்தை நமது நாடு அப்போது சந்தித்தது;இரு நாட்டு ராணுவத்திற்கும் ராணுவ ஜெனரலாக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செய்த சதிகளை இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவருமே வாசித்தால் ரத்தம் கொதிக்கும்;

இந்த சதிகளைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் பெரும்பாலும் மறு பிரசுரம் ஆகவில்லை என்பதுதான் சோகம்;இதனால்,இவைகள் மாவட்ட நூலகங்களிலும்,பழைய புத்தகக் கடைகளிலும் மட்டுமே தேட முடியும்;தேடிப் பார்த்துப் வாசித்தால்,தேசபக்தியும் வளரும்;தன்னம்பிக்கையும் வளரும்;

1.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்=எழுதியவர் விநாயக தாமோதர சாவர்க்கர்;

2.தேசப்பிரிவினையின் சோக வரலாறு=ஹெ.வே.சேஷாத்திரி

3.வந்தார்கள்,வென்றார்கள்=மதன்(விகடன் பிரசுரம் வெளியீடு)

4.மறைந்திருக்கும் உண்மைகள்=ஓஷோ

5.நான் நேசிக்கும் இந்தியா=ஓஷோ

6.பாரத நாட்டின் விஞ்ஞானச் சாதனைகள்=சக்தி புத்தக நிலையம்(ஆங்கிலத்தில் 10 பாகங்களாக வெளிவந்துள்ளன;விலை ரூ.15,000/-தான்)

7.கோட்சேயின் வாக்குமூலம் =தமிழ் மொழிபெயர்ப்பு

8.வால்கா முதல் கங்கை வரை

9.நள்ளிரவில் சுதந்திரம்=அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியீடு

10.Lectures from Columbo to Almora=Swami Vivekananada(Sri Ramakrishna Mission ,Chennai)

11.சுவாமி விவேகானந்தரின் வாழ்கை வரலாறு=ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வெளியீடு,சென்னை

12.ஸ்ரீரங்கன் உலா

13.சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

14.குருஜியின் ஞான கங்கை 3 பாகங்கள்

15.வானம் வசப்படும்=பிரபஞ்சன் எழுதிய நாவல்

16.ஓம் சக்தியும், அணு சக்தியும்

17.திராவிடத்தால் வீழ்ந்தோம்?

18.ஆனந்தரங்கப்பிள்ளை டைரிக்குறிப்புகள்

19.இஸ்ரேலின் வீர உதயம்

20.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்=மறைக்கப்பட்ட தேசவிடுதலைப் போராட்டவீரரின் வாழ்க்கை வரலாறு

21.சாவர்க்கரின் கடிதங்கள்

22.இந்து மகாசபை தோன்றிய வரலாறு


23.உப்பு வேலி=(ஆங்கிலேயன் இந்தியாவில் செய்த சுரண்டலை ஒரு ஆங்கிலேயனே எழுதிய உண்மைக் கதை;பிப்ரவரி 2015 இல் தமிழில் வெளிவந்திருக்கிறது)

24.மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரலாறு


25.தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தமிழ் அடிமைகள்


26.நள்ளிரவில் சுதந்திரம்

27.வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறு

இன்று,130 கோடி பேர்களாக நாம் இந்தியர்களாக வாழ்ந்து வருகிறோம்;

இதில் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இந்தியாவை,இந்தியாவின் பாரம்பரியத்தை மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அதே சமயம்,பெரும்பாலான இந்துக்களுக்கு பக்தி உணர்வே இல்லாமல் செய்வதற்கு கடந்த 300 ஆண்டுகளில் பல கோடி ரூபாய்கள் நமது நாட்டுக்கு சட்டவிரோதமாக வந்து,அவைகள் நாத்திகப் பிரச்சாரமாக செலவாகியிருக்கின்றன;ஜாதிக்கட்சிகளை உருவாக்கவும்,வளர்க்கவும் செலவாகியிருக்கின்றன;

ஜனநாயகம்,மனித நேயம் என்ற முகமூடியில் இந்து தர்மத்தின் 20,00,000 ஆண்டுகால பெருமைகளை சீரழிக்க செலவாகிக் கொண்டே இருக்கின்றன;இவைகளை நாம் தட்டிக்கேட்காமைக்குக் காரணம்,90% இந்துக்குடும்பங்கள் தினசரி உழைத்தால் தான் ஒரு வேளை சோறாவது சாப்பிடமுடியும் என்ற அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டன;




கிறிஸ்தவர்கள் இந்தியா முழுக்க என்ன செய்கிறார்கள் தெரியுமா?
ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் கோடைகால இளைஞர்கள் முகாம்,கோடை கால இளம் பெண்கள் முகாம் என்று நடத்தி வருகின்றனர்;இதன் மூலமாக தமது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமது மதம் பற்றிய விழிப்புணர்வை டீன் ஏஜ்ஜிலேயே பதிய வைத்துவிடுகின்றனர்;

நாம் பக்தி உணர்வை உருவாக்கவே முயற்சி செய்வதில்லை;


1960களில் உருவான நாத்திகப் பிரச்சாரத்தினால் சிவனையும்,விஷ்ணுவையும் கடந்த 20,00,000 ஆண்டுகளாக சரணடைந்திருந்த நமது தமிழ் இனம் 1964 முதல் 2018 வரை கடவுளை நம்பாத கட்சியின் அடிமைகளாக இருக்கின்றனர்;

அவர்களோ,சரியான நேரத்தில் சரியான பரிகாரம்,பூஜை,முயக்கம் செய்து மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றனர்;நாத்திகவாதிகளையும்,கிரிப்டோ கிறிஸ்தவர்களையும் கோவில் அறங்காவலர்களாக ஆக்கி கோவில் சொத்துக்களையும்,உற்சவர்களையும் கொள்ளையடிக்க வைத்துவிட்டனர்;கோவில்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன;

கடந்த 300 ஆண்டுகளாக ஆங்கிலேயன் என்ற கிறிஸ்தவனும்,கடந்த 30 வருட நாத்திகப்பிரச்சாரமும் நமது இந்து தர்மத்தை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத்தியிருக்கின்றன என்பதை அறியாமல் நாம் தன்னம்பிக்கை பெற முடியாது;


இந்து என்ற உணர்வு பெறாததால் தான் பிரிட்டனால்,இந்தியாவை மத ரீதியாகப் பிரித்து பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிட முடிந்தது;1930 முதல் இந்துக்களுக்கும்,முஸ்லீம்களுக்கும் இடையே மத மோதலை உருவாக்கிட முடிந்தது;

சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி வராகி அன்னை வழிபாட்டையும்,வைஷ்ண சமயத்தைப் பின்பற்றுபவர்கள் தினசரி லக்ஷ்மீ நரசிம்மர் வழிபாட்டையும் பின்பற்றாமல் போனதுதான் இந்தியாவுக்கும்,இந்து தர்மத்துக்கும் எதிரான சக்திகள் இந்தியாவுக்குள் பேயாட்டம் ஆட ஆன்மீகக் காரணமாக இருக்கின்றன;

பெருகும் இந்துக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப,சைவ ஆதினங்கள்,வைஷ்ணவ சங்கோஷ்டிகள் தமது தினசரி பிரச்சாரத்தை விரிவுபடுத்தாமையும் ஒரு முக்கியக் காரணம்;

இந்து என்ற உணர்வு பெறாததால் தான்,இன்று இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழ்ந்து வரும் ஊரில் கிறிஸ்தவர்கள் பள்ளி,கல்லூரி நடத்தவும் முடிகிறது;அங்கே படிக்கும் இந்து மாணவ,மாணவிகளின் இந்து மரபுகளை மிரட்டித் தடுக்க முடிந்திருக்கிறது;(சபரி மலைக்கு மாலை போடுவதை தடுத்தல்,பொட்டு வைப்பதை நையாண்டி செய்தல்,பூ வைத்து வருவதை மிரட்டித் தடுத்தல்=ஓ! அன்பைப் போதிக்கும் ஏசு கிறிஸ்து இதைத்தான் செய்யச் சொன்னார் போலும்?)
நாமோ இதை ஒரு பிரச்சினையாக,அவமானமாக,கவுரவக் குறைச்சலாக எடுத்துக் கொள்கிறோமா?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆர்டர் கேட்டு தொழில்முறை பயணம் செல்லும் இந்துத்தொழிலதிபர்களை,கிறிஸ்தவத்திற்கு மாறினால் உங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் ஆர்டர் தருகிறேன் என்று கிறிஸ்தவ நாட்டு நிறுவனங்கள் தந்திரமாக மிரட்டுகின்றன;


அந்த 3 ஆண்டுகள் முடிந்ததும்,உங்கள் நிறுவனங்களில் கிறிஸ்தவர்களை மட்டும் வேலைக்கு அமர்த்தினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆர்டர் தருகிறேன் என்று அடுத்த கட்டமாக முன்னேறுகின்றன;


கடந்த 300 ஆண்டுகளாக நமது இந்து தர்மத்துக்கு எதிராக செய்த சதிகளில் மொத்த விளைவுகளால் நாம் இன்று ,நம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னாடி பேய் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்;


நாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள் எனது இந்து சகோதர,சகோதரிகளே. . .













ஓலைச்சுவடிகளில் இருந்து உதயமான ரேடாரில் சிக்காத விமானம்!!!


ரேடார் தத்துவம் என்ன? அதில் இருந்து புறப்படும் மின் காந்த அலைகள் குறிப்பிட்ட கி.மீ.தூரம் பரவும்;அந்த கி.மீ.தூரத்திற்குள் எந்த விமானம் பறந்தாலும்,அந்த மின் காந்த அலை அந்த விமானத்தின் மேல்பகுதியின் மீது பட்டு திரும்பும்;அப்படித் திரும்புவதைக் கொண்டே அந்த விமானம் எந்த ரகம்;எத்தனை கி.மீ.தொலைவில் பறக்கிறது? எத்தனை கி.மீ/மணி வேகத்தில் எந்தத் திசையில் பறக்கிறது என்பதை ரேடார் சொல்லிவிடும்;


ரேடாரில் சிக்காத விமானத்தை அமெரிக்கா மட்டும் வைத்திருக்கிறது;அது என்ன அமெரிக்காவின் சொந்த அறிவாற்றலில் உதயமானதா? நிச்சயமாக இல்லை;

ரேடாரில் சிக்காத விமானத்தின் மேல் பகுதியில்(வெளிப்புறத்தில்) ஒரு சிறப்பான ரசாயன பூச்சினை (special Chemical coating)பூசியுள்ளனர்;ரேடாரில் இருந்து புறப்படும் மின் காந்த அலைகளை அது உறிஞ்சிவிடும்;இதனால்,ரேடாரின் செயல்பாட்டுக்குள் வராது;இந்தத் தொழில் நுட்பத்தை பல பத்துஆண்டுகளாக வைமானிகா சாஸ்திரத்தினை ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்;


வைமானிகா சாஸ்திரம் போஜராஜா மஹாராஜா பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதிய இன்றைய ஏரோநாட்டிகல் ஸ்ட்ரக்சரிங்க் டெக்னாலஜி! இதன் ஒரு பிரதி இன்று அமெரிக்காவிடம் இருக்கிறது;

இது மட்டுமா இருக்கின்றது? 

பல ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை 1947க்கு முன்பாகவே சில கப்பல்களில் நமது நாட்டில் இருந்து அள்ளிச் சென்றது இங்கிலாந்து;அதைபின்னர் அமெரிக்காவுக்கு கொஞ்சமும்,ஜெர்மனிக்கு கொஞ்சமும் கொடுத்து கூட்டாக ஆராய்ச்சி செய்வதாகக் கேள்வி;














மாந்திரீகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு:மஹாவராகி ஜபம்!!!



உங்களுக்கு கனவில் மண்டை ஒடு,எலும்புகள்,சிந்திய ரத்தம்,மாமிசம் அடிக்கடி தென்படுகிறதா?

அல்லது

நீங்கள் உண்டு;உங்கள் வேலை உண்டு என்று இருந்தும் உங்கள் திறமையைப் புரிந்து கொண்ட பலர் பொறாமைப்படுகிறார்களா?

அல்லது

நிம்மதியாக வாழ முடியாமல் தவிக்கிறீர்களா?

அல்லது

பணியிடத்தில்/தொழிலில் உங்கள் உழைப்புக்குரிய அங்கீகாரம் உடன் பணிபுரிபவரால்/தொழில் போட்டியாளரால் தடுக்கப்படுகிறது என நம்புகிறீர்களா?

அல்லது

நீங்கள் எடுத்த காரியம் ஒவ்வொன்றும் தோல்வியில் முடிகிறதா? அப்படி தோல்வியில் முடிவதற்கு யாரோ உங்களுக்கு பில்லி,சூனியம் வைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?

இதிலிருந்து மீள ஏதாவது ஒரு பக்தி மார்க்கம் உண்டா? என்று ஏங்கியிருக்கிறீர்களா?

ஆம் எனில்,
நீங்கள் இன்று முதல் வழிபட வேண்டியது அன்னை வராஹியைத்தான்!

சக்தி வழிபாட்டில் சர்வசக்தி வாய்ந்ததும்,மிகவும் எளிமையானதுமாக இருப்பது வராகி வழிபாடுதான்;அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,மது அருந்துவதையும் கைவிட்டுவிட்டு அன்னை அரசாலையைச் சரணடையுங்கள்;அவள் உங்களை பில்லி,ஏவலில் இருந்து இப்பிறவி முழுவதும் காப்பாற்றுவாள்;

அரசாலை என்பது அன்னை வராகியின் 1008 பெயர்களில் ஒன்று;

தினமும் இரவுப் பொழுதில் 108 முறை ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்று எழுத வேண்டும் அல்லது ஒரு மணி நேரம் வரை ஜபித்து வர வேண்டும்;ஜபிக்க ஆரம்பித்த நாளில் இருந்து அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;

எழுத விரும்புவோர்,பச்சை நிற மையால் எழுத வேண்டும்;

இரவில் மட்டுமே எழுத வேண்டும்;

ஒரு நாளுக்கு குறைந்தது 108 எழுத வேண்டும்;

எழுத ஆரம்பித்த நேரத்தில் இருந்து 108 முறை எழுதி முடிக்கும் வரை போனில் பேசக் கூடாது;டிவி பார்க்கக் கூடாது;பாதியில் எழுந்து செல்லாமல் இருக்க வேண்டும்;

இப்படி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை தினமும் எழுத வேண்டும்;பெண்கள் மாத விலக்கு நாட்களில் எழுதக் கூடாது;





இரவு 7 மணி முதல் 9 மணி வரை உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் அம்பாள் சன்னதி இருக்கும் பகுதியில் அமர்ந்த நிலையில் ஜபித்தும் வரலாம்;அப்படி ஜபிக்கும் போது கொட்டாவி வந்தால்,உங்கள் உடலில் தங்கிருந்த தீய சக்திகள் வெளியேறுகின்றன என்று அர்த்தம்;

சிலருக்கு மித மிஞ்சிய காம இச்சை உணர்வு உருவாகும்;அதற்கு அர்த்தம் என்னவென்றால்,உங்களுடைய முற்பிறவி கர்மாக்கள் உங்களை விட்டு வெளியேற ஆரம்பித்திருக்கின்றன என்று தான் அர்த்தம்;தொடர்ந்து பல மாதங்கள் ஜபித்த பின்னர்,இந்த காம உணர்ச்சிகள் வெளியேறிவிடும்;பரிசுத்தமான மனிதராக தாங்கள் மாறிவிடுவீர்கள்;

ராம நாம கீர்த்தனைக்கு ஒரு ஆஸ்ரமம்!!!


ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது;

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது;முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;

இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம்;அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு செய்வது மட்டுமே!

அப்படி முன் பதிவு செய்தால்,இந்த ஆஸ்ரமத்தில் தங்கிட அறை கிடைக்கும்;உணவும் கிடைக்கும்;இலவசமாக! தனியாக செல்லலாம்;தம்பதியாகச் செல்லலாம்;நண்பர்களாகச் செல்லலாம்;
ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதமான ஏற்பாடு;

இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம்;1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால்,இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜப எண்ணிக்கை காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது;

இங்கே மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக,நமது நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே குணமாகிவிடும்;சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும்;அதுவும் சரியாகிவிடும்;ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்;

சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற முடியும்;கடந்த 10 மாதங்களில் செய்த ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு இது;

இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தவர் சமர்த்த ராமதாஸரின் வம்சாவழியைச் சேர்ந்தவர்;(சமர்த்த ராமதாஸர்,மகாராஷ்டிர மாநிலத்தில் தேசபக்தியைத் தூண்டிய வீரசிவாஜியின் குரு ஆவார்)இல்லத்துறவியாக இருந்த இவர்,இந்தியா முழுவதும் நடந்தே பயணித்தவர்;ராம நாம கீர்த்தனையை தனது தந்தையிடம் இருந்து பெற்றவர்;தனது வாழ்நாளில் சில கோடி தடவை ஜபித்தவர்; 

இவருக்கு நயன தீட்சை வழங்கிய குரு ரமணமகரிஷி;

இவருடைய சீடர்தான் விசிறிச்சாமியார் என்று அழைக்கப்படும் யோகிராம்சுரத்குமார் ஆவார்;



அந்த ராம நாம கீர்த்தனை:


ஓம் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா

இந்த ஆஸ்ரமம் அமைந்திருக்கும் இடம்;மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது;உலகம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்;

ஆனந்த ஆஸ்ரமம்,காஞ்சன்கோடு,கேரளா;

04672 209477 & 203036 (காலை 9 முதல் 1 வரை= தமிழில் விளக்கம் கிடைக்கும்)

தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா மாநிலங்களில் எல்லைப்பகுதியில் வடக்கு கேரளாவில் அமைந்திருக்கின்றது;