Friday, November 16, 2018

அரிய பைரவ வழிபாடு!



உலகத்தில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் செல்வ வளத்தை அள்ளித் தருபவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;இவர் கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் பைரவ உலகத்தில் இருந்து ஈசனின் ஆணைப்படி பூமிக்கு (பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) வருகை தந்தார்;

இன்றைய அருள்மிகு பவானீஸ்வரர் திருக்கோவிலில் (பொன்பேத்தி,புதுக்கோட்டைக்கு அருகில்) அருள்பாலித்து வருகின்றார்;

தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முந்தைய முகூர்த்த நேரத்தில் (காலை 4.30 முதல் 6 மணிக்குள்)  சொர்ண பைரவ அஷ்டகத்தை 33 முறை ஜபித்து வருவதன் மூலமாக பெரும் செல்வச் செழிப்பை அடைய முடியும்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரின் மூல மந்திரத்தை 330 தடவை ஜபிப்பதன் மூலமாகவும் செல்வ வளத்தைப் பெற முடியும்;அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கு மட்டுமே செல்வ வளம் தேடி வரும்;கூடவே,ப்ரம்மச்சாரிய விரதம் இருப்பவர்களுக்கு ஆறு மடங்கு செல்வ வளம் வெகு சீக்கிரமே கிடைத்துவிடும்;


இந்துக்களின் ரகசிய வழிபாட்டுமுறைகளில் முக்கியமானது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு ஆகும்;இவரை தொடர்ந்து ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் ஜபித்து,செல்வ வளத்தைப் பெற்றவர்கள்,அதை நேர்மையான செயல்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும்;அப்படி இல்லாமல் அநீதியான செயல்களுக்குச் செலவிட்டால்,பைரவ சாபம் பீடிக்கும்;


ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரது அவதாரத்திற்கும் முன்பே தோன்றிய பைரவப் பெருமான் ஒருவர் இருக்கின்றார்;அவரது பெயர் ஸ்ரீவித்ருமா ஆகர்ஷண பைரவர்!
இவரது சன்னதி அருள்மிகு ஸ்ரீ சூரிய கோடீஸ்வர சுவாமி ஆலயத்தில் அமைந்திருக்கின்றது;


கடந்த ஓராண்டுவரை யார் அசைவம்,மது இரண்டையும் கைவிட்டு இருக்கின்றார்களோ,அவர்களுக்கு மட்டுமே இவரது அருள் கிட்டுகின்றது;

ஒவ்வொரு நாளும் வரும் குளிகை காலம் அல்லது மாலை 4.30 முதல் 6 மணிக்குள் இவரை பின்வரும் பொருட்களால் ஆன கலவையைக் கொண்டு காப்பு இட வேண்டும்;

(புனுகு,கோரோசனை,ஜவ்வாது,கஸ்தூரி,சந்தனம்)
இந்த பொருட்களில் ஒரிஜினலைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்;விலை மிகவும் அதிகம்;தாங்கள் வாங்கும் பொருட்கள் ஒரிஜினல் தானா என்பதை தகுந்த(அனுபவம் மிக்க) சித்த வைத்தியர் மூலமாக பரிசோதித்துக் கொள்ளவும்;அதன் பிறகு,இவைகளை ஒன்றாக்கி காப்பு இட வேண்டும்;இட்டு தொடர்ந்து 9 நாட்கள் பைரவரது மூலமந்திரத்தை 90 நிமிடங்கள் ஜபித்து வருக!

பைரவர் உபாசனை செய்து வருபவர்கள் தொடர்ந்து 64 நாட்கள் இப்படிச் செய்து வருவது நன்று;

பைரவப் பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் குறைந்தபட்சம் 9 நாட்கள் வரையிலும்,அதிகபட்சம் 18 நாட்களும் இப்படிச் செய்து நீடூழி வாழ்க!


இதன் மூலமாக பிறருக்கு தாம் செய்த தீங்குகளும்,அதனால் உண்டான கர்மவினைகளும் படிப்படியாக விலகிவிடும்;

திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர்களுக்காக மட்டுமே இந்த பைரவ வழிபாட்டினை தெரிவிக்கின்றோம்!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Thursday, November 15, 2018

கால பைரவரின் பிறந்த நாளைக்(30.11.2018 வெள்ளி) கொண்டாடுவோம்!!!



உலகம்,உயிர்கள்,ப்ரபஞ்சம் என்று அனைத்தையும் ஈஸ்வரனின் ஆணைப்படி,ஈசனின் பெயரால் நம்மை ஆட்சி புரிந்து வருபவர் மஹா கால பைரவப் பெருமான்!

கால தேவனாக இருப்பவர் இவரே! நவக்கிரகங்களின் தலைவரும் இவரே! 64 வித அவதாரங்களாக இவர் அவதரித்து,மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள்,பறவைகள்,விண் உலகத்தில் வாழ்ந்து வரும் தேவர்கள்,தேவ இனங்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,கந்தர்வர்கள் என்று அனைவரது வாழ்க்கையையும் சூட்சுமமாகத் தீர்மானிப்பது மஹாகால பைரவப் பெருமான் தான்!

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பல ஆயிரம் யுகங்களுக்கு முன்பு ஈசனின் படைப்பாக உருவானவர் தான் மஹாகால பைரவர்!

அப்படி உருவான நாள் தான் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ஆகும்;

இந்த விளம்பி வருடம்,கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி நாளானது 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று வர இருக்கின்றது;

29.11.2018 வியாழக்கிழமை அன்று இரவு 9.51 முதல் 30.11.2018 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.09 வரையிலான நேரம் வரை அஷ்டமி திதி அமைந்திருக்கின்றது;

கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;கி பி 2018 என்பது முழுமையற்ற,தெளிவில்லாத கிரிகோரியன் (கிறிஸ்தவ) காலண்டர் ஆகும்;இந்து தேசமான நமது பாரதத்தில் கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்ட தவறான காலண்டர் முறை தான் அது;


கடந்த 4 பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே இப்பிறவியில் அனுபவித்துக் கொன்டிருக்கின்றோம்;இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கின்றது;நம் ஒவ்வொருவருக்கும் பல ஆயிரக்கணக்கான முற்பிறவி கர்மவினைகளை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது;இதில்,இப்பிறவியில் செய்த,செய்து கொன்டிருக்கும்,செய்ய இருக்கும் கர்மவினைகளும் பாவங்களாகவும்,புண்ணியங்களாகவும் நமது ஆத்மாவில் சேர இருக்கின்றன;

யார் ஒரே பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்கின்றார்களோ,அவர்களுடைய அனைத்து முற்பிறவிகளின் கர்மாக்களும்,இப்பிறவி கர்மச்சுமைகளும் அழிக்கப்படுகின்றன;அவர்கள் இனி ஒரு போதும் இந்த பூமியில் பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை 

அல்லது

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ(மூலமந்திரம்) என்ற மந்திரத்தை 

அல்லது

ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோஹ் பைரவப் ப்ரசோதயாத் என்ற காயத்ரி மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜபிக்க வேண்டும்; 

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும்,அதிக பட்சம் 30 ஆண்டுகள் வரையிலும் ஜபித்து வருவதால்,கால பைரவப் பெருமானின் அருள் கிடைக்கும்;

அட்டவீரட்டானங்களுக்குச் செல்லும் பாக்கியம் கிட்டும்;


காசியில் இருக்கும் 64 பைரவர்களையும் நேரில் தரிசனம் செய்யும் பெரும் புண்ணியம் கிட்டும்;64 பைரவர் சன்னதிகளும் கங்கைக் கரையோரத்தில் அமைந்திருக்கின்றன;


உங்கள் வீட்டில் அல்லது உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் பைரவர் சன்னதியில் அல்லது பழமையான விஷ்ணு ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வார் சன்னதியில் பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;


கால பைரவப் பெருமானின் பிறந்த நாளான 30.11.2018 வெள்ளிக்கிழமை முழுவதும் பைரவ மந்திரம் ஜபிப்பதால்,பைரவரின் அருள் கிட்டும்;


பைரவ மந்திரம் ஜபிக்கத் தேவையான சுய கட்டுப்பாடுகள்;
1.அசைவம் ஒரு போதும் சாப்பிடக் கூடாது;முட்டைவகைகள்,புரோட்டாவும் அசைவமே!
2.மது ஒரு போதும் அருந்தக் கூடாது;
3.பைரவ ஜபம் ரகசிய வழிபாட்டு முறைகளில் ஒன்று;எனவே,பைரவ ஜபம் செய்து வருவதை எவ்வளவு நெருங்கிய நட்பு வட்டத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம்;வெளிப்படுத்தியதால்,பலருக்கு தொடர்ந்து பைரவ ஜபம் செய்ய முடியாமல் போய்விட்டது;


அட்ட வீரட்டானங்கள்:

முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,பைரவருக்கு எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இந்த எட்டு படை வீடுகளிலும் மூலவராக பைரவப் பெருமானே,சிவலிங்க வடிவில் இருக்கின்றார்;ஈசனும் பைரவரும் ஒருவரே! என்பதை இதன் மூலம் பைரவப் பெருமான் நமக்கு உணர்த்துகின்றார்;
1.திருக்கண்டியூர்
2.திருக்கோவிலூர்
3.வழுவூர்
4.திருப்பரசலூர்
5.திருக்கடவூர் & திருக்கடவூர் மயானம்
6.திருவிற்குடி
7.குறுக்கை
8.திருவதிகை
இந்த ஆலயங்களில் வசிப்பவர்கள் 30.11.2018 வெள்ளி அன்று ஒரு மணி நேரம் வரை பைரவ மந்திரம் ஜபிப்பது நன்று;


திரு அண்ணாமலையில் வசிப்பவர்கள் கால பைரவர் சன்னதியில் ஜபிக்கலாம் அல்லது இந்த திதி ஆரம்பித்த நேரம் முதல் முடியும் நேரம் வரை கிரிவலம் செல்லலாம்;அப்படி கிரிவலம் செல்லும் போது பைரவ மந்திரம் ஒன்றை ஜபிப்பது நன்று;

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்த குரு நம ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ



Sunday, October 7, 2018

உலகம் முழுவதும் பரவியிருக்கும் முருக கடவுள் வழிபாடு!



உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் படைத்தவர் உருவம் இல்லாத ஈசன்! அந்த ஈசன் சிவலிங்க வடிவில் உலகம் முழுவதும் அருள்பாலித்துவருகின்றார்;கலியுகம் உருவாகும் வரையில்,இன்றைக்கு 5119 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் 1000 கோடி சிவாலயங்கள் இருந்திருக்கின்றன;தற்போது,பாரத நாட்டில் மட்டும் 1 கோடி ஆலயங்களாக மிஞ்சி இருக்கின்றன;ஈசனின் முதல் படைப்பு தான் முருகக் கடவுள்!

ஈசனையும்,முருகனையும் மனிதனாகிய நாம் நேரடியாக தரிசிக்க வேண்டும் என்றால்,குறைந்த பட்சம் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;அப்படி விடாமுயற்சி செய்தால்,12 வது அல்லது 13 வது பிறவியில் சிவதரிசனம் அல்லது முருகக் கடவுள் தரிசனம் கிடைக்கலாம்;

ரெஜித்குமார் என்பவர் திருச்சூரில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றார்;இவருக்கு சிறுவயது முதல் முருக பக்தி அதிகம்;இவரது தாயும்,தந்தையும் இறந்த பின்னர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்;அதன் விளைவாக,நாத்திகவாதியாக மாறிவிட்டார்;அப்போதும்,அவரது தேடல் தொடர்ந்திருக்கின்றது;அதன் முடிவாக மீண்டும் முருக பக்தராகவும்,ஆராய்ச்சியாளராகவும் ஆகியிருக்கின்றார்;
பழனிமலைக்கு கேரள மக்கள் பல நூற்றாண்டுகளாக வருகை தந்து வழிபடுவது வழக்கம்;இது குமரிக்கண்டம் தோன்றியதில் இருந்து (சுமார் 50,00,000 ஆண்டுகள்) இன்றுவரை தொடருகின்றது;

2006 முதல் 2013 வரை திரு.ரெஜித்குமார் உலகம் முழுவதும் பயணித்திருக்கின்றார்;முருக கடவுள் வழிபாடு உலகில் எந்தெந்த நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதை அறியவே பயணம் செய்து ஆதாரங்களையும் வரலாற்றுப் பூர்வமாகவும்,தொல்லியல் சான்றுகள் மூலமாகவும் திரட்டிவிட்டார்;

குமரிக் கண்டம் என்ற லெமூரியக் கண்டத்தில் குமரக் கடவுள் என்ற முருகக்கடவுள் வழிபாடு உச்சத்தில் இருந்திருக்கின்றது;மனிதன் நாகரீகம் அடைந்து முதன் முதலில் வாழ்ந்த இடம் குறிஞ்சி!இங்கே வேட்டையாடுவதுதான் மனிதனின் ப்ரதான தொழில்! வேடர் குலப் பெண் வள்ளியை முருகக் கடவுள் திருமணம் செய்தார் என்று வாசித்திருக்கின்றோம்;இதுதான் முதல் ஆதாரம்;


பூடான் நாட்டில் டைகர் மலையானது,திபத் மதத்தின் முதல் மத குரு (ரிம்போச்சே) பத்ம சம்பவர் வாழ்ந்த இடம் ஆகும்;இங்கே முருகக் கடவுள் வழிபாடு இருந்திருப்பதை பத்ம சம்பவர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அறிய முடிகின்றது;
பாலித் தீவு இந்தோனோஷியாவில் ஒரு பகுதி ஆகும்;இங்கே புரா பெசாகி(PURA BESAKIH) 86 க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன;இங்கே,வாசுகி என்ற நாகம் முருகக் கடவுளை வழிபட்டது;இப்பகுதியில் காணப்படும் புராணக் கதை மூலமாக இதை உணரலாம்;


தாய்லாந்தில் பட்டாயா என்ற இடத்தில் தி ட்ரூத் (Sanctuary of Truth) ஆலயம் சென்ற போது,அங்கிருந்த பழமையான ஓவியத்தில் இருந்த திரு உருவம் முருகப் பெருமானின் ஆதி வடிவை ஒத்திருந்தது;இதை அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டி தெரிவித்தார்;

இங்கிலாந்தின் டிராகன் மலையின் மண்ணுக்கும்,இலங்கையின் கதிர்காம மண்ணும் ஒரே மாதிரியான மண் அமைப்பைக் கொண்டிருக்கின்றது;

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள நீல மலைத் தொடர்களில் (Blue Mountain) செய்த ஆய்வுகளின் முடிவாக குமரிக் கண்டத்தில் நடைபெற்ற பெரும் யுத்தத்தின் சான்றுகள் கிடைத்துள்ளன;குமரிக்கண்டத்து மக்கள் எப்போதும் வடக்கு நோக்கியே திருச்செந்தூர் முருகனை நினைத்து வழிபடுவது வழக்கம்;தினமும் காலையில் வடக்கு நோக்கி(இன்றைய கன்னியாக்குமரியில் இருந்து 2800 கி மீ வரை பரவியிருந்தது குமரிக்கண்டம்) கை எடுத்து கும்பிட்டுவிட்டே அன்றாடப் பணிகளைத் துவக்குவது வழக்கம்;குமரிக்கண்டத்தின் வடக்கு எல்லையில் உயரமான மலைப்பகுதியாக கெந்தமாதன பர்வதம் விளங்கியிருக்கின்றது;1600 களில் இது கடலில் மூழ்கியதால் தான் இன்றைய செந்திலாண்டவர் கோவிலை மூன்று சாதுக்கள் திருச்செந்தூரில் கோவிலாக கட்டினார்கள்;படகோட்டிகள் மூலமாக,திருச்செந்தூர் கோவிலுக்கு நேர் கிழக்காக 2.5 கி மீ பயணித்தால்,கடலுக்குள் மூழ்கி இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்றுச் சுவரின் மேல் பகுதியைத் தொட்டுக் கும்பிட முடியும்;


திருச்செந்தூரில் பஞ்சலிங்கத்தை வழிபட்டுவிட்டு,முருகக் கடவுள் அன்றைய போர்க்களத்தில் 2000 கி மீ தொலைவு வரை போரிட்டவாறே சென்று இன்றைய ஆஸ்திரேலியாவின் நீல மலைப்பகுதியில் சூரனை சம்ஹாரம் செய்திருக்கின்றார்;ஒரு ராணுவம் 2000 சதுர கி மீ பரப்பளவுக்கு பரவியிருந்து போரிட்டு இருந்தால் எத்தனை கோடி போர்வீரர்கள் அதில் பங்கெடுத்திருப்பார்கள்!!!


நீலமலையில் ஜெலோவின் கேவ்ஸ் எனப்படும் குகையில் முருகப் பெருமானின் திருப்பாதம்  பதிந்திருக்கும் இடத்தையும் தரிசிக்கலாம்;
தென் கொரியா,வடகொரியா,மலேசியா,சிங்கப்பூர் என தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் முருகக் கடவுளின் வழிபாடும் சித்தர் பெருமக்களின் நடமாட்டங்களும் இன்று வரை அதிகமாக இருக்கின்றன;


ஆதியில் குமரிக் கண்டத்தில் தோன்றிய குமரக்கடவுள் வழிபாடு,உலகம் எங்கும் மீண்டும் தழைத்தோங்க ஆரம்பிக்கும்;அப்போது,உலகில் சத்தியமும்,தர்மமும் ஓங்கி நிற்கும்;


லயன் மயூரா ராயல் கிங்டம் என்ற அமைப்பை இவர் நடத்தி வருகின்றார்;நன்றி:சக்தி விகடன்,பக்கங்கள் 78 டூ 81,வெளியீடு 9.10.2018 மற்றும் பல முருக பக்தர்கள் மற்றும் முருகக் கடவுள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் வெளியீடுகள்

வேலுண்டு;வினையில்லை;மயிலுண்டு;பயமில்லை;



ஒரு கோடி முறை முருகா,முருகா என்று இப்பிறவிக்குள் யார் ஜபிக்கின்றார்களோ அவர்களுக்கு முருக சித்தர் ஒருவரின் வழிகாட்டுதல் கிடைக்கத் துவங்கும்;

Tuesday, October 2, 2018

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,    புரட்டாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 2.10.2018 செவ்வாய்க்கிழமை

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

செவ்வாய்க்கிழமை குளிகை காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை இருக்கின்றது.

 செவ்வாய்க்கிழமை   இராகு காலம் மதியம் 3 முதல் மாலை 4.30 மணி வரை அமைந்திருக்கின்றது.



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி: 31.10.2018 புதன் மதியம் 12 மணி முதல் 1.11.2018 வியாழன் காலை 9.38 வரை

Sunday, September 16, 2018

அனைத்துப் பிறவிகளின் கர்மவினைகளையும் தீர்க்கும் அண்ணாமலை கிரிவலம்!!!


இன்று நாம் மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து வருகிறோம்;
நமது முற்பிறவிகளைப் பற்றி நாம் அறிவதில்லை;அறிய முயன்றாலும்,10,000 பேர்களில் ஒருவருக்குத் தான் சரியான முற்பிறவி ரகசியங்கள் கிடைக்கின்றன;

இந்நிலையில் ஒரு சிவரகசியம் அடியேனுக்கு சித்தர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்டிருக்கின்றது;அதை அனுபவபூர்வமாக உணர்ந்தப் பின்னரே,தங்களிடம் பகிர்கிறோம்;அப்படிப் பகிர்ந்து கொள்வதை எமது கடமையாக எண்ணுகின்றோம்;
84,00,000 உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன;இவைகளில் பெரும்பாலானவைகளின் ஆயுள் ஒரு நாள் அல்லது சில வாரங்கள் தான்;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் பிறந்து,பிறந்து இறந்தப் பின்னரே இறுதியாக மனிதப் பிறப்பு நமக்குக் கிட்டியிருக்கின்றது;
மனிதப் பிறவியாக பிறந்தப் பின்னர்,சுமாராக 2,00,000 முறை திரும்பத் திரும்ப மனிதப் பிறப்பு எடுத்துள்ளோம்;
3000 மனிதப் பிறவிகளில் நமக்கு ஒரு சரியான குரு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கியப் பின்னரே 3001 வது பிறவியில் தகுந்த குரு நமக்கு அமைவார்;என்பது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியப் பெருமான் தெரிவிக்கும் சித்தரகசியம் ஆகும்;
ஒரு வருடத்தில் ஒரு நாள் வரும்;அந்த நாளில் குறிப்பிட்ட நேரம் வரும்;அந்த நேரம் குறைந்தது 4 மணி நேரம் வரை இருக்கும்;அதிக பட்சம் 24 மணி நேரம் வரை இருக்கும்;
இந்த நாளில்,இந்த நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,இதுவரை நாம் மனிதப் பிறவி எடுத்தது முதல் இன்று வரையிலும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு கர்மவினைகளை(பாவம்) சேர்த்தோமே? அத்தனையும் கரைந்து காணாமல் போய்விடும்;
21.9.2018 வெள்ளிக்கிழமை காலை 4.31 முதல் மாலை 6.30க்குள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,
மாலை 6.31 முதல் 22.9.2018 சனிக்கிழமை இரவு 8.56 வரை அவிட்டம் நட்சத்திரத்தில்(மகரம் & கும்பம்) பிறந்தவர்களும்;
22.9.2018 சனிக்கிழமை இரவு 8.57 முதல் 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

6.10.2018 சனிக்கிழமை மாலை 4.34 முதல் 7.10.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.10 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

21.10.2018 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.11 முதல் 22.10.2018 திங்கட்கிழமை காலை 8.07 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 8.08 முதல் அன்று இரவு 10.13 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

5.11.2018 திங்கட்கிழமை விடிகாலை(ஞாயிறு நள்ளிரவு) 1.13 முதல் இரவு 9.10 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

20.11.2018 செவ்வாய்க்கிழமை மதியம் 1.16 முதல் மாலை 5.05 வரை ரேவதி நட்சத்தில் பிறந்தவர்களும்,மாலை 5.06 முதல் 21.11.2018 புதன்கிழமை மதியம் 1.20 வரை அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

4.12.2018 செவ்வாய்க்கிழமை மதியம் 1.22 முதல் 5.12.2018 புதன்கிழமை விடிகாலை(செவ்வாய் நள்ளிரவு) 4.13 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;
5.12.2018 புதன் விடிகாலை 4.14 முதல் மதியம் 12.47 வரை விசாகம் (துலாம் & விருச்சிகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

20.12.2018 வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இரவு 1.54 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷம் & ரிஷபம்) பிறந்தவர்களும்

3.1.2019 வியாழக்கிழமை விடிகாலை 4 மணி முதல் மதியம் 12.09 வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 12.10 முதல் 4.1.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.29 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

18.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 19.1.2019 சனிக்கிழமை காலை 8.14 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;காலை 8.15 முதல் மதியம் 3.16 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

1.2.2019 வெள்ளிக்கிழமை இரவு 9.04 முதல் இரவு 11.05 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 11.06 முதல் 2.2.2019 சனிக்கிழமை 10.31 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

17.2.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மதியம் 1.42 வரை புனர்பூசம் (மிதுனம் & கடகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 1.43 முதல் நள்ளிரவு 2.12 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

3.3.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 முதல் 4.3.2019 திங்கட்கிழமை மதியம் 1.10 மணிக்குள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 1.11 முதல் மாலை 5.30 வரை அவிட்டம் நட்சத்திரத்தில்(மகரம் & கும்பம்) பிறந்தவர்களும்;

18.3.2019 திங்கட்கிழமை மதியம் 2.23 முதல் மாலை 6.45க்குள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மாலை 6.46 முதல் 19.3.2019 செவ்வாய்க்கிழமை 12 மணி வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

2.4.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.51 முதல் நள்ளிரவு 1.36 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; நள்ளிரவு 1.37 முதல் 3.4.2019 புதன்கிழமை காலை 11.46 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் (கும்பம் & மீனம்) பிறந்தவர்களும் கண்டிப்பாக அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;
இதில் குறிப்பிடப்படாத நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அடுத்த தமிழ் வருடப் பிறப்பு வரை காத்திருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்;


அண்ணாமலையாரின் அருளைப் பெற இதுவும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்! பயன்படுத்தி அருளோடும்,வளமோடும் வாழ்க!!!

ஓம் ரீங் அகத்தீசா! அகத்தீசா!!
ஓம் ரீங் அருணாச்சலா அருணாச்சலா!!!

அகத்தீஸ்வரர் ஆலயங்களின் பட்டியல் 46


தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;


இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;

அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;

1. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.


10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.
11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;

17.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

18.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

19.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

20.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

21.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

22.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

23.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

24.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

25.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)


26.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)
27.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

28.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

29.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

30.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

31.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

32.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

33.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

34.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

35.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

36.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

37.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.

38.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,காலடிப்பேட்டை,திருவொற்றியூர் அருகில்,சென்னை;

39.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

40.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

41.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

42.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

44.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

45.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

108.அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.

முக்கியக் குறிப்பு:இவைகள் அனைத்தும் இணைய தளங்கள் மூலமாக மட்டுமே தேடப்பட்டவை;ஒரே ஆலயம் இரு பெயர்களில் அல்லது இரு ஊர்களின் பெயர்களில்(பழைய பெயர்,புதுப் பெயர்) இருக்கலாம்;இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்;உங்களுக்கு தெரிந்த அகத்தீஸ்வரர் ஆலயங்களின் முகவரிகளை தெரிவிக்கும் படி  தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்;



நமது சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் சித்தர்களின் தலைவர் அகத்தியர் மகரிஷி ஸ்தாபித்த சிவாலயங்களைத் தேட ஆரம்பித்திருக்கின்றோம்;


அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;
எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;
அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;
அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!
தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!

Saturday, September 1, 2018

ஜோதிட அறிவியல் மூலமாக தன்னை வளப்படுத்தி வரும் மேற்கு உலகம்!!!


உலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு சிறுசெயலுக்குப் பின்னாலும் நவக்கிரங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன;அதைப் பற்றிய அறிவியல் தான் ஜோதிடம்;இது தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன;

கைரேகை நிபுணர் சீரோ இந்தக் கலையை நமது நாட்டின் ஆன்மீக மையமான காசிக்கு வந்து கற்றுக் கொண்டு சென்றார்;

நூற்றாண்டுகள் என்ற நூலை ப்ரான்ஸ் நாட்டு தீர்க்கதரிசி நார்ஸ்டர்டாமஸ் கி.பி.1400 களில் எழுதினார்;அதில் கி.பி.3500 வரை இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை துல்லியமாக கணித்திருக்கின்றார் என்று வாய்பிளக்கின்றோம்;

அவர் ஜோதிடம் கற்றுக்கொள்வதற்காக 1400 களில் காசிக்கு வருகை தந்தார்;வருகை தந்து 3 ஆண்டுகள் கற்றுக் கொண்டார் என்பது மறைக்கப்பட்ட உண்மை;ஏன் மறைக்கப்பட்டது? இந்த உண்மைகள் தமிழ்நாட்டின் தினசரிகளில் வெளிவந்தால் இந்துக்களாகிய நமக்கு ஜோதிட நம்பிக்கை வந்துவிடும்;ஜோதிட நம்பிக்கை வந்துவிட்டால் இந்து மதம் வலுவடைந்துவிடும்;இந்து மதம் வலுவடைந்துவிட்டால், மதமாற்றம் செய்ய முடியாது;

1960 களில் நமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் 150 விமானங்கள் வாங்கிட முடிவு செய்தார்;அதற்காக உலகம் முழுவதும் இருக்கும் விமான தயாரிப்பு நிறுவனங்களின் விலைப்பட்டியலை பெற்றார்;ப்ரான்ஸ் நாட்டின் விமானங்களை வாங்கிட முடிவு செய்திருந்தார்;அப்போது,ஜெர்மனி நிறுவனம் தனது விளக்கப் புத்தகத்தில் ‘நாங்கள் எங்கள் தயாரிப்புகளை மூலம் நட்சத்திரம் இருக்கும் நாளில் தயார் செய்ய ஆரம்பிப்பது வழக்கம்’ என்று குறிப்பிட்டிருந்தது;உடனே,தனது முடிவினை மாற்றி ஜெர்மனி விமான நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்கினார்;

முதன் முதலாக நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் முன்பு,அமெரிக்க விண்வெளி அமைப்பு மூன்று பேர்கள் கொண்ட மூன்று குழுக்களை தயார் செய்தது;அவர்களின் பிறந்த குறிப்புகளை பாரத நாட்டுக்கு கொண்டு வந்து இங்கே ஜோதிட ஆலோசனை செய்த பிறகு,ஜோதிடர்களின் முடிவுப்படியே நிலாவுக்கு மனிதர்களை அனுப்பியது;செவ்வாயும் கேதுவும் இணைந்து அதை சுக்கிரன் பார்த்தால் அல்லது சேர்ந்திருந்தால் அவர்களுக்கு நூதனமான விண்வெளிப்பயணம் கைகூடும்;செவ்வாய் ஆட்சியாகி,கேது உச்சமாகி அந்த இடம் லக்னத்திற்கு ஒன்பதாம் இடமாக அமைய வேண்டும் என்பதுதான்  ஜோதிடவிதி ஆகும்;


120 ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய்யும் குருவும் ஒரு குறிப்பிட்ட உபயராசியில் குறிப்பிட்ட டிகிரியில் சேரும் போது பாதாள நகரம் கட்ட ஆரம்பிக்க வேண்டும்;அந்த நகரம் எப்பேர்ப்பட்ட பூகம்பத்தையும் தாங்கிக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்;இவைகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட ஓலைச்சுவடிகளில் இருப்பவை ஆகும்;

ஸ்டீவ் ஜாப் தனது வாழ்நாளில் 4 ஆண்டுகள் சைவத்தின் தலைநகரமும்,பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமும் ஆன திரு அண்ணாமலையில் வாழ்ந்தார்;தனது ஆயுளில் 1000 முறைக்கும் மேல் கிரிவலம் வந்தார்;அதன் பிறகே உலகம் புகழும் உன்னதமான நிறுவனத்தை துவக்கிட முடிந்தது;


நார்வே,ஸ்வீடன் போன்ற நாடுகளில் பல நிறுவனங்கள் துவங்கப் பட்டு 1000 ஆண்டுகள் ஆகின்றன;அது எப்படி ஒரு நிறுவனம் 100 ஆண்டுகளையும் கடந்து 1000 ஆண்டுகள் வரை இயங்குகின்றது;ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமும்,குறிப்பிட்ட திதியும் சேர்ந்து வரும் நாளில் துவக்கப்படும் அமைப்பு அல்லது நிறுவனம் காலம் கடந்து நிற்கும்;அப்படிப்பட்ட நாளும் திதியும் ஒருவருடத்தில்  ஒரு முறை அல்லது இருமுறை மட்டும் வரும்;17.9.2018 திங்கள் இரவு  9 மணியில் இருந்து 18.9.2018 செவ்வாய் காலை 11.04 வரை அப்படிப்பட்ட அமைப்பு வர இருக்கின்றது;

18.9.2018 செவ்வாய்க்கிழமை காலை 5 முதல் 6 மணிக்குள் ஒரு நிறுவனத்தின் பெயரை ஒரு சிலேட்டில் எழுதி அதன் அருகில் விநாயகர்சிலை  அல்லது படம் வைத்து,ஒரு குத்துவிளக்கு ஏற்றினால் நிறுவனம் துவக்கியதாக அர்த்தம்;



ஜோதிடத்தை இப்பிறவியில் இகழ்ந்து பேசினால்,பேசியவர் அடுத்த பிறவியில் மனிதப் பிறவி எடுத்தாலும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்க முடியாது;அதனால் தான்,நாத்திகத்தை ஆன்மீக தமிழகத்தில் விதைத்தார்கள் இந்த மேல்நாட்டு கிறிஸ்தவர்கள்:அதன் பிறகு ஆன்மீகத்தின்.இந்து தர்மத்தின் அடித்தளமான ஜோதிடத்தை இகழ்ந்தார்கள்;