Saturday, September 1, 2018

பைரவ வழிபாட்டின் நன்மைகள்!!!


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் அந்த ஆதிசிவனின் பெயரால் ஆட்சி செய்து வருபவர் கால தேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான் ஆவார்;


ஈசன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;ஆனால்,தேவைப்படும் போது தன்னுடைய சக்தியின் ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;அப்படி வெளிப்பட்டதுதான் பைரவ சக்தி;

ஈசன் வாழும் இடம் திருக்கையிலாயம் என்பது போல,மஹா கால பைரவப் பெருமான் வாழ்ந்து வருவது பைரவ உலகம் ஆகும்;எட்டுவிதமான பைரவ உலகங்கள் இருக்கின்றன;ஒவ்வொரு பைரவ உலகத்திற்கும் ஒவ்வொரு பைரவ பெருமான் தலைவராக இருந்தபடி ஆட்சி செய்து வருகின்றார்கள்;


மனிதனாக வாழ்ந்து வரும் நாம் ஒவ்வொருவரும் தினமும் செய்யும் செயல்களை எட்டுவிதமான ‘கர்மா’க்களுக்குள் அடக்கிவிடலாம்;இந்த எட்டுவிதமான கர்மாக்கள் மூலமாக எட்டுவிதமான பாவச் செயல் அல்லது புண்ணியச் செயலைச் செய்துவிடலாம்;எட்டுவிதமான பாவச் செயல் செய்தால்,64 விதமான தண்டனைகளும்,எட்டுவிதமான புண்ணியச் செயல் செய்தால் 64 விதமான பூர்வ புண்ணியங்களும் உண்டாகின்றன;

 நமது பாவ புண்ணிய நடவடிக்கைகளை நவக்கிரகங்கள் மூலமாக கண்காணித்து,நமது மறுபிறவியை நிர்ணயிப்பதுதான் எட்டுவிதமான பைரவசக்திகளின் கடமை!!!


அதனால் தான் எட்டுவிதமான பைரவர்கள் ஒவ்வொருவரும் தலா எட்டு எட்டாக பிரிந்து 64 விதமான பைரவர்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள்:64 விதமான பைரவ வழிபாடுகள் சமண மதம்,புத்த மதம்,ஜைன மதம் என்று அனைத்துவிதமான மதங்களிலும் இன்றுவரையிலும் வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றன;சில ஆராய்ச்சியாளர்கள் பைரவர்கள் 64 அவதாரங்கள் மட்டும் அல்ல;108 பைரவர்கள் உண்டு என்றும்,சிலர் 1008 பைரவர்கள் உண்டு என்றும் கூறுகின்றார்கள்;


தமிழ்நாட்டில் பைரவர்களின் வீரதீரச் செயல்கள் எட்டு இடங்களில் வெவ்வேறு யுகங்களில் நிகழ்ந்துள்ளன;அவைகளை அட்டவீரட்ட திருத்தலங்கள் என்று அழைக்கின்றோம்;இந்த அட்டவீரட்ட திருத்தலங்களுக்கு ஒரே ஒருமுறை சென்று வருபவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்குள் அவர்களுடைய முற்பிறப்பு ரகசியங்கள் தேடிவரும் என்பது அனுபவத்தில் கிடைத்த உண்மை;
1.திருக்கண்டியூர் (தஞ்சாவூர் அருகில்)
2.திருக்கோவிலூர்
3.திருக்கடையூர் & திருக்கடையூர் மயானம்
4.திருவதிகை (பண்ருட்டி அருகில்)
5.திருப்பறசலூர்(மயிலாடுதுறை அருகில்)
6.வழுவூர்(மயிலாடுதுறை டூ திருவாரூர் சாலையில் 12 வது கி மீ தூரத்தில்)
7.கொறுக்கை என்ற குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ தூரம் பயணித்து பிறகு உள்ளடங்கிய கிராமப்புற சாலையில் செல்ல வேண்டும்)
8.திருவிற்குடி(திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில்)
9.சிதம்பரம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி
அட்ட வீரட்டானங்கள் என்று இவைகள் அழைக்கப்படுகின்றன;இவைகளின் புராண வரலாறு பற்றி ஒரு சிலர் மட்டுமே நூல்களாக எழுதியுள்ளார்கள்;பழைய புத்தகக் கடைகள் அல்லது 1980 க்கு முந்தைய வெளியீட்டு புத்தகங்களில் இதுபற்றி முழுவிபரங்கள் இருக்கின்றன;

பூமியில் பைரவ சித்தர்களில் ஒருவர் கூட ஜீவசமாதி ஆகவில்லை என்று தெரிகின்றது;பைரவப் பெருமானைச் சரணடைந்தவர்கள் தமது ஆயுள் முடிந்தவுடன் அவர்களது ஆன்மா பைரவ உலகத்தை நோக்கி பயணித்துவிடுகின்றது;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாக,காலத்தை நிர்ணயித்தவர் ஸ்ரீவாரதாரக சித்தர் என்ற பைரவ சித்தர் ஆவார்;இவரே,ஒரு நாள் என்பதை 16 முகூர்த்தம்(24 மணி நேரம்);ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள்,ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் என்று நிர்ணயம் செய்தார்;இவர் இன்றும் பைரவ உலகம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றார்;இவரை உபாசனை செய்து தான் ஆர்ய பட்டர் தமது ஜோதிட நூலையும்,பாஸ்கராச்சாரியார் தனது ஜோதிடம் சார்ந்த வானியல் நூலையும் இயற்றினார்;


நம் ஒவ்வொருவருடைய மனத்திலும் இருக்கும் துணிச்சல் உணர்ச்சியாக இருந்து கொண்டு நம்மை இயக்குபவர் மஹா கால பைரவப்பெருமான் தான்!!!


தினமும் பைரவ வழிபாடு செய்து வருபவர்களுக்கு குரு பக்தி உருவாகி,அது வலுவடைந்துவிடும்;உண்மையான குரு தேடி வருவார்;இன்றைய கலியுகத்தில்,ஒவ்வொரு மனிதனுக்கும் பணத்தாசை/பெண்ணாசை/மண்ணாசை என ஏதாவது ஒரு ஆசை அதிகரிக்கின்றது;இதனால்,பக்தியும்,கடவுள் மீதான அன்பும் குறைகின்றது;குருவைத் தேடும் எண்ணமே இருப்பதில்லை;இதை சரி செய்யும் ஒரே ஜபம் பைரவ ஜபம் மற்றும் பைரவ வழிபாடு மட்டுமே!!!


ஒவ்வொரு நாளும் சூரிய உதய நேரத்தின் முன்னும் பின்னும் இருக்கும் நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் எனப்படும்;உதாரணமாக,சித்திரை மாதம் 1 ஆம் நாளன்று சூரிய உதயம் காலை 5.45க்கு இருக்கும்;இந்த நாளில் பைரவ முகூர்த்தம் காலை 5.41க்கு துவங்கி காலை 5.49 வரை இருக்கின்றது;அதே சமயம்,ஆவணி மாதம் 1 ஆம் நாளன்று சூரிய உதயம் காலை 6 மணியாக இருக்கின்றது;அப்போது,பைரவ முகூர்த்தம் காலை 5.56 முதல் 6.04 வரை இருக்கின்றது;மார்கழி மாதம் 1 ஆம் நாளன்று சூரிய உதயம் காலை 6.45க்கு இருக்கின்றது;அந்த நாளில் பைரவ முகூர்த்தமானது காலை 6.41 முதல் காலை 6.49 வரை இருக்கின்றது;


எட்டு பைரவ உலகங்கள் இருக்கின்றன;ஒவ்வொரு உலகத்தையும் ஒவ்வொரு பைரவப் பெருமான்கள் ஆட்சி செய்வதாக கூறினோம் அல்லவா?இந்த எட்டு பைரவப் பெருமான்களும் பைரவ முகூர்த்தத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆட்சி புரிந்து வருகின்றார்கள்;அதன் மூலமாக இந்த பூமியின் ஒவ்வொரு நாளின் கர்மபரிபாலனத்தையும் அவர்களே ஆரம்பித்து வைக்கின்றார்கள்;


பைரவப் பெருமானை முழு முதற்கடவுளாக எண்ணி தினமும் அவரது அருளைப் பெற விரும்புவோர், ஒவ்வொரு நாளிலும் வரும் பைரவ முகூர்த்த நேரத்திலும்,ஒவ்வொரு நாளிலும் வரும் குளிகைக் காலத்திலும் 108 முறை அல்லது 1008 முறை “ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ” என்று ஜபித்து வர வேண்டும்; 3 ஆண்டுகளுக்குள் அடுத்த பைரவ வழிபாட்டு முறை தேடி வரும்;

பைரவ ஜபத்தின் போது ருத்ராட்ச மாலை அணிந்து ஜபிக்கலாம்;ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 உள்ள மாலை அணிந்து ஜபித்து வருவதன் மூலமாக ஓராண்டுக்குள் பைரவ அருள் கிட்டிவிடும்;


செல்வத்தின் தெய்வமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கின்றார்;இவர் தான் மஹாவிஷ்ணுவுக்கு செல்வத்தின் கடவுள் என்ற வரத்தை கொடுத்திருக்கின்றார்;இவரை உபாசனை செய்துதான் திருவிற்குடி என்ற அட்டவீரட்டானத்தில் சங்கு,சக்கரத்தை தனது ஆயுதமாக மஹாவிஷ்ணு பெற்றார்;


ராமாயண யுத்தத்தில் ஒரே நேரத்தில் தனது பத்து தலைகளை யார் வீழ்த்துகின்றார்களோ,அப்போதுதான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை ராவணன் பெற்றிருந்தான்;அதனால்,அகத்திய மகரிஷியின் உபதேசப்படி,அஷ்ட பைரவர்களில் ஒருவரை ஸ்ரீராமபிரான் உபாசனை செய்து,பைரவ பாணம் ஒன்றினை வரமாக பெற்றார்;அதன் பிறகுதான் ஸ்ரீராமனால்,சிவபக்தனாகிய ராவணனை வீழ்த்த முடிந்தது; இருடிகள் ராமாயணத்தில் மட்டுமே இருக்கும் ராமாயண மறை பொருள் இது;(இருடிகள் ராமாயணம் என்பது சித்தர் பெருமக்களால் எழுதப் பட்ட ராமாயணம் ஆகும்;சித்தர் பெருமக்கள் ராமாயண சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்து,அதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்துள்ளார்கள்)

எல்லா சிவாலயங்களிலும் ஷேத்திரபாலராக கால பைரவர் இன்றும் இருந்து வருகின்றார்;அதே போல,எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் ஷேத்திரபாலராக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் இருந்திருக்கின்றார்;இன்றைக்கு திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் இருக்கும் தாடிக்கொம்பு என்ற கிராமத்தில் இருக்கும் அருள் மிகு சவுந்தர ராஜப் பெருமாள் திருக்கோவிலில் மட்டுமே க்ஷேத்திரபாலராக அமைந்திருக்கின்றார்;

ஒரு ஊரில் ஒரு நல்ல காரியம் செய்ய முயலும் போது அதை நிறைவேற்ற விடாமல் நமது மனமே பல எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கும்;
சில ஊர்களில் எப்போதும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கக் கூட முடியாது;காரணம்,இம்மாதிரியான ஊர்களில் தீய ஆத்மாக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதுதான் காரணம்;
நல்ல எண்ணத்திற்கும் தீய எண்ணத்திற்கும் இடையிலான போராட்டம் இந்த பூமியைப் பொறுத்தவரையில் நிரந்தரமானது;

இந்த போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்?
நல்ல சக்தியுள்ள,நல்ல எண்ணமுள்ள,நல்லவனாக வாழ்ந்து வரும் மனித ஆத்மாக்கள் ஓளி உலகத்தை அடையும் வரை இந்த போராட்டம் தொடரும்;
இந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வர பின்வரும் அமைப்புடைய சிவாலயத்தில் பைரவ பூஜை,பைரவ யாகம்,பைரவ மந்திர ஜபம்,பைரவ யோகத்தை தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும்;


எல்லா சிவாலயங்களிலும் மூலவருக்கு பின்புறமாக லிங்கோத்பவர் சன்னதி அமைந்திருக்கும்;சில பல சிவாலயங்களில் லிங்கோத்பவர் சன்னதிக்குப் பதிலாக அர்த்த நாரீஸ்வரரோ அல்லது பிட்சாடனரோ சன்னதியாக அமைக்கப்பட்டிருக்கும்;இவ்வாறு இருக்கும் ஆலயங்களுக்கும் ஒளி உலகங்களுக்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு;இங்கே தொடர்ந்து செய்யப்படும் பைரவ பூஜை,பைரவ வழிபாடு,பைரவ ஜபம்,பைரவ தவம் எவ்வித தங்குதடையின்றி சுலபமாக நிறைவேறி,ஒளி உலகங்களின் உதவியால் உன்னதமான நிலையை பைரவ பூஜை/யாகம்/தவம்/ஜபம் செய்பவர்கள் அடைந்துவிடுவார்;


ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வந்து கொண்டே இருந்தால் நமது கஷ்டங்கள்,வேதனைகள்,சோகங்கள் காணாமல் போய்விடும்;108 அஷ்டமிகளுக்கு தொடர்ந்து இவ்வாறு கிரிவலம் வருவதன் மூலமாக பைரவ உலகத்தில் வாழ்ந்துவரும்  பைரவ சித்தர்களின் நேரடித் தொடர்பு கிடைத்துவிடும்;

குரு கிரகம் சுபராகி,சுப ஸ்தானத்தில் இருப்பவர்களால் கட்டப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் அவரே எழுந்தருளி செல்வ வளத்தை அனைத்து மக்களுக்கும் அள்ளித் தருவார்;


அட்டவீரட்டானங்களைக் கடந்தும் பலவிதமான சக்தி வாய்ந்த பைரவ ஆலயங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;அவைகளில் சென்றுமுறையாக வழிபட்டு வர நமது முற்பிறவி பைரவ உபாசனைகள் மீண்டும் தொடரும் சந்தர்ப்பம் வாய்க்கும்;

கோவில்களை வழிபடாமல் விட்டுவிடுதல்,12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் செய்யாமல் இருப்பது,கோவில் மூலவர் திருட்டு போனால் அதுபற்றி கவலைப்படாமல் வேறு ஒரு மூலவரை ஸ்தாபிப்பது(நாத்திகவாதிகள் செய்த பாவங்களில் முதன்மையானது இது),ஆகம விதிகளை மதிக்காமல் இஷ்டத்துக்கு பூஜைகள் செய்வது,கோவிலை திறப்பது மற்றும் பூட்டுவது போன்றவைகளால் தான் பைரவ சாபம் உண்டாகின்றது;
பைரவரை நம்பினோர் கைவிடப்படார்;


பைரவரை தொடர்ந்து வழிபடும் போது,வராகி வழிபாடு தானாகவே தேடி வரும்;


ஒருவரே ஒரே நாளில் பைரவ வழிபாட்டினை பகல் பொழுதிலும்,வராகி வழிபாட்டினை இரவுப் பொழுதிலும் செய்து வரலாம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!



கர்ம வினைகளை நிர்மூலமாக்கும் காலபைரவர் ஜபம்!!!



உங்கள் வாழ்நாள் முழுவதும் என்ன உங்களுக்கு என்ன நடக்கும் என்பதை இன்றைக்கே அறிந்து கொண்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்குமா?


உங்களுடைய வாழ்க்கையை நவக்கிரகங்கள் தீர்மானிக்கின்றன;நவக்கிரகங்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட ராசியில் நிற்கும் போது நீங்கள் பிறப்பது தற்செயலான நிகழ்வு அல்ல;சென்ற நான்கு பிறவிகளில் நீங்கள் என்ன என்ன பாவச் செயல்கள் மற்றும் புண்ணியச் செயல்கள் செய்தீர்களோ அதைப் பொறுத்தே இந்த மனிதப் பிறவி உங்களுக்கு அமைகின்றது;திறமையான மற்றும் அனுபவம் நிரம்பிய ஒரு ஜோதிடரால் உங்கள் ஜாதகத்தை பார்த்தே உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு என்னென்ன எப்போது எப்படி நிகழும்? என்பதை உங்களுக்குத் தெரிவிக்க முடியும்;


இன்றும் அப்படிப்பட்ட ஜோதிடர்கள் தமிழ்நாடு,ஸ்ரீலங்கா மற்றும் இந்தியா முழுவதும் இருக்கின்றார்கள்;அவர்களை நீங்கள் நேரடியாக சந்திக்கும் வரை உங்களது வாழ்க்கைப் பயணமானது இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்;


உங்களுடைய கர்மவினைகளின் சுமையில் போன 4 முற்பிறவிகளில் செய்தவைகளை மட்டுமே அனுபவிக்கப் பிறந்துள்ளீர்கள்;ஆனால்,நீங்கள் ஒவ்வொருவரும் இதுவரை குறைந்தது 3000 முறை மனிதப் பிறவி எடுத்துள்ளீர்கள்.அதிக பட்சமாக 2 லட்சம் முறை மனிதப் பிறவி எடுத்திருக்கலாம்;உங்களுடைய அனைத்து முற்பிறவிகளிலும் என்னென்ன பெயர்களில் வாழ்ந்தீர்கள் என்பதை சுகர் நாடி ஜோதிடத்தின் மூலமாக தெரிவிக்க முடியும்;


என்னென்ன பாவச் செயல்கள் அல்லது புண்ணியச் செயல்கள் செய்தீர்கள் என்பதை இன்னொரு நாடி ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்;

ஆனால்,ஒரு சிக்கல் என்னவென்றால் உண்மையான நாடி ஜோதிடம் சொல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டது;நீங்கள் ஒரிஜினல் நாடி ஜோதிடத்தைத் தேட ஆரம்பித்தால் குறைந்தது 12 முறையாவது ஏமாற வேண்டி இருக்கும்;


நவக்கிரகங்களை இயக்கிவருபவர் கால தேவன் என்ற கால பைரவர் ஆவார்;எல்லா சிவன் கோவில்களிலும் க்ஷேத்திர பாலராக இருக்கின்றார்;அவரின் அருளை பணம் கொடுத்து பெற முடியாது;தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி மூன்று ஆண்டுகள் வரை ஜபித்து வருவதன் மூலமாக கால பைரவரின் அருளைப் பெறலாம்;


15 வயது முதல் வாழ்நாள் முழுவதும் தினமும் ஒரு மணி நேரம் ஏதாவது ஒரு மந்திர ஜபம் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவருடைய= இந்துக்களாகிய ஒவ்வொருவருடைய கடமை ஆகும்;வைஷ்ணவத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வார்,வைஷ்ண்வ பைரவர் ஆவார்;புத்தம்,ஜைனம் போன்ற மதங்களிலும் இன்று வரையிலும் பைரவ ஜபம்,பைரவ யாகம்,பைரவ உபாசனை பின்பற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது;


ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ

இதுதான் கால பைரவரின் அருளைப் பெற உதவும் மந்திரம்;100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்து தர்மத்தில் 4 வித சமுதாயக் கட்டமைப்பு இருந்து வந்தது;குழந்தைப் பருவம்,ப்ரம்மச்சாரிய (வாலிபப் பருவம்),இல்லறப் பருவம்,துறவறப் பருவம் என்று இருந்தது; தற்போது இரண்டே இரண்டு பருவங்களே நமது இந்து சமுதாயத்தில் இருக்கின்றன;ஒன்று இல்லறப்பருவம்,மற்றது துறவறப்பருவம்;

1965 வரை பக்தியால் தமிழகம் சித்தர் பூமி என்ற பெருமிதத்தோடு இருந்தது;1965 முதல் 2018 வரை நாத்திகம் என்ற முகமூடி அணிந்து கொண்டு  மறைமுகமாக கிறிஸ்தவ மதமாற்றம் படுதீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது; 

முத்தமிழை வித்தவர் என்ற பட்டத்தைத் தனக்குத் தானே சூட்டிக் கொண்டு ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனவர்,இலுமுனாட்டிகளின் பல்வேறு செயல்திட்டங்களை தமிழ்நாட்டிற்குள் நடைமுறைப்படுத்திவிட்டார்;

1.இந்து தெய்வ நம்பிக்கையை சீர்குலைத்து,இறைவனுக்கு என்று வாழ்ந்து வந்தவர்களை தமது கட்சியின் விசுவாசிகளாக மாற்றினார்;
2.ஆங்கில வழிக் கல்வியை வணிகமயமாக்கியதன் மூலமாக தமிழ் வழிக் கல்வியை அழித்துவிட்டார்;இன்று தமிழ் வழியில் 10 ஆம் வகுப்பு வரை படிப்பது பிச்சைக்காரத்தனம் என்ற மனோபாவம் தமிழ்நாடு முழுவதும் பரவிவிட்டது;
3.கல்வித் திட்டங்களில் கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள்,நாத்திகவாதிகள்,கம்யூனிஸ்டுகள்
போன்றவர்களை நுழைத்து இந்து தர்மத்தின் புராதனமான படைப்புகள் அனைத்தையும் நீக்கினார்;
4.இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையினுள் நாத்திகவாதிகளையும், கிறிஸ்தவர்களையும் கோவில் ஈ ஓக்களாக ஆக்கி கோவில்களின் பரம்பரை பணியாளர்களை கோவிலை விட்டே ஓடச் செய்தார்;அதன் பிறகு சக்தி வாய்ந்த கோவில் விக்கிரகங்கள்(மூலவர் மற்றும் உற்சவர்கள்) அனைத்தையும் கடத்தி கொண்டு மேல்நாட்டினருக்கு விற்பனை செய்தார்;


இதனால்,பிரபலமான கோவில்களைத் தவிர பெரும்பாலான ஆலயங்கள் ஒரு வேளை பூஜை செய்யப்படாமல் தனது ஆத்ம பலத்தை இழந்து வருகின்றது;இது கடுமையான பைரவ சாபங்களை முத்தமிழை வித்தவருக்கும் அவரது சந்ததியினருக்கும் 20,000 பிறவிகள் வரை துரத்தி துரத்தி அடிக்கும்;அவர்களின் செல்வச் செழிப்பை நிர்மூலமாக்கிவிடும்;

கோவில்களில் முறைப்படி பூஜை செய்யாமல் அரசியல் திமிரைக் காட்டி தான் வந்த பின்னர் பூஜை செய்ய வைப்பது;

கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜை,அபிஷேகம்,ஆராதனைகளை தந்திரமாக நிறுத்துவது(ஒரே ஒரு கோவிலில் தீவிபத்து நிகழ்ந்தமைக்கு ஓட்டு மொத்தமாக எல்லாக் கோவில்களில் நெய்தீபம் ஏற்றாமல் தடுப்பது)

தெய்வநம்பிக்கை இல்லாதவர்களையும்,வேறு மதத்தைச் சேர்ந்தவர்களையும் அறநிலையத்துறை அறங்காவலர் ஆக்குவது;சிறப்பு விழாகுழுவுக்கு தலைவர் ஆக்குவது;

பல கோடி முறை அபிஷேகம் ஆராதனை கண்ட மூலவர்,உற்சவரை திருடி இலுமுனாட்டிகளுக்கு விற்பனை செய்வது;

கோவில் சொத்துக்களைத் திருடுவது;திருடுவதற்குத் துணை போவது;இவைகள் அனைத்தும் பைரவ சாபத்தை தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தந்துவிட்டது;

சரி,நாம் என்ன செய்ய?

26.1.2020 வரை தனுசு ராசியினர் கடுமையான கஷ்ட காலமான ஜன்மச்சனி காலத்தை அனுபவித்து வருகின்றார்கள்; அவர்கள் அது வரை அசைவம்,மது இரண்டையும் கண்டிப்பாக தவிர்த்துவிட்டு தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வர வேண்டும்;அல்லது எழுதி வர வேண்டும்;1008 முறை இயலாதவர்கள் 108 முறை கண்டிப்பாக ஜபித்து அல்லது எழுதி வர வேண்டும்;


26.1.2020 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மகர ராசியினருக்கு ஜன்மச்சனி வர இருக்கின்றது;26.1.2020 க்குள் செய்யும் சிறிய தவறுகளால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு படாத பாடு படப் போகின்றார்கள்;அவர்களும் தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வர வேண்டும் அல்லது எழுதி வர வேண்டும்;1008 முறை இயலாதவர்கள் 108 முறை கண்டிப்பாக ஜபித்து அல்லது எழுதி வர வேண்டும்;


சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவர் கால பைரவர்;சிவபெருமானின் முதன்மை அவதாரம் ஆவார்;பைரவ ஜபமும் சிவ ஜபத்தின் ஓர் அங்கமே!கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் முனீஸ்வரர் வழிபாடு என்பதும் தாந்த்ரீக சாஸ்திரப்படி பைரவ வழிபாடு தான் என்பதை அறிந்து கொள்ளவும்;

ஜோதிடர்கள்,அருள்வாக்கு சொல்பவர்கள்,எண் கணித நிபுணர்கள் அனைவரும் தினமும் ஜபிக்க வேண்டிய தெய்வம் மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;கால பைரவரும் மஹா கால பைரவரும் ஒருவரே!

சனியின் குருவாக இருக்கும் கால பைரவரை தினமும் ஜபித்து வந்தால் சனிபகவான் மகிழ்ச்சி அடைந்து தனது உக்கிரத்தை குறைத்துக் கொள்வார் என்பது சித்தர்கள் வாக்கு!

1995 முதல் நமது நாட்டிற்குள் உலக மயமாக்கல் என்ற முகமூடியை அணிந்துகொண்டு முதலாளித்துவம் புகுந்தது;இதனால்,இப்போது 2019 இல் எல்லோரும் பணத்தின் பின்னால் பேய் வேகத்தில் ஓட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது;செல்வத்தின் அதிபதியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபிக்கலாம்;


துர்கை சித்தர் ஐயா எழுதிய சொர்ண பைரவ அஷ்டகம் என்ற பாடலை தினமும் 27 முறை ஜபித்து வந்தால் நேர்மையான வழியில் வருமானம் அதிகரிக்கும்;தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் உங்கள் வீட்டின் பூஜை அறையில் இவ்வாறு ஜபித்து வந்தால் 1008 நாட்களுக்குப் பிறகு செல்வ வளம் மிக்க வாழ்க்கையைப் பெறுவீர்கள்;


குருவின் அருள் கிடைக்க வேண்டுமென்றால்,நாம் ஒவ்வொருவரும் இப்பிறவியில் மூன்று ஆண்டுகள் வரை தினமும் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,    ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 2.9.2018 ஞாயிறு மாலை 5.40 முதல் 3.9.2018 திங்கள் மதியம் 3.57 வரை இருக்கின்றது;

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

திங்கட்கிழமை குளிகை காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை இருக்கின்றது.

 ஞாயிற்றுக்கிழமை   இராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை அமைந்திருக்கின்றது.

திங்கட்கிழமை இராகு காலை காலை 7.30 முதல் 9 மணி வரை அமைந்திருக்கின்றது;


இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி: 2.10.2018 செவ்வாய்

இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;

எப்படி நமது ஆன்மீக பலத்தை இழக்கின்றோம்?


உலகத்தின் ஆதி மதம் இந்துமதம்;இந்து மதத்தின் அடிப்படை ஆதாரங்கள் ஆறு! இதையே ஷண்மதம் என்று அழைக்கின்றோம்.
        1.காணபத்தியம்
         2.கவுமாரம்
         3.சைவம்
         4.சைவம்
         5.வைஷ்ணவம்
         6.சாக்தம்(ஸ்ரீசக்ர உபாசனை இதில் அடங்கும்)

இதில் சைவம் மட்டும் 4 பெரும்பிரிவுகளைக் கொண்டது என்று திருமூலரின் திருமந்திரம் தெரிவிக்கின்றது;

1.சுத்த சைவம்
2.அசுத்த சைவம்
3.கடுஞ்சுத்த சைவம்
4.மார்க்க சைவம்

இந்த 4 சைவங்களையும் உள்பிரிவாக வகைப்படுத்தி இருக்கின்றார்கள்;

1.ஊர்த்த சைவம்
2.அனாதி சைவம்
3.ஆதி சைவம்
4.மகா சைவம்
5.பேத சைவம்
6.அபேத சைவம்
7.அந்தர சைவம்
8.குண சைவம்
9.நிர்குண சைவம்
10.அத்துவா சைவம்
11.யோக சைவம்
12.ஞான சைவம்
13.அணு சைவம்
14.கிரியா சைவம்
15.நாலுபாத சைவம்
16.சுத்த சைவம்

இன்றைய காலகட்டத்தில் இவைகளின் பெயர்களை மட்டுமே நம்மால் அறிந்து கொள்ள முடியும்;நீங்கள் யாராவது ஒரு சித்தர் பெருமானின் நேரடி சீடராக இருந்தால் தாங்கள் முற்பிறவிகளில் இதில் எந்த சைவத்தினை பின்பற்றினீர்கள் என்று அறிந்து கொள்ளலாம்;


விபூதி,ருத்ராட்சம்,சிவலிங்கம்,மந்திர ஜபம்,சிவனடியார் இந்த ஐந்தும் குறிப்பிட்ட நாள்/திதி/நட்சத்திரம்/ஓரையில் சேரும் போது இறை அருள் முழுமையாக கிடைத்துவிடுகின்றது;


இதை விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து கண்டறிந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன்,நமது ஆன்மீக பலத்தை சிதைக்க திட்டமிட்டான்;அந்த திட்டமும் 300 ஆண்டுகளில் 50% அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது;அடுத்த 100 ஆண்டுகளுக்குள் கி.பி.2118 க்குள் இந்துக்களாகிய நம் அனைவரது ஆத்ம பலத்தை,ஆன்மீக சக்தியை மொத்தமாக நிர்மூலமாக்கிட பல்வேறு செயல்திட்டங்களை நமது நாட்டில் செயல்படுத்தி வருகின்றான்;

நாம் ஒவ்வொருவரும் இது பற்றிய விழிப்புணர்ச்சியுடன் கவனமாக “வாழ்ந்து வந்தால்” இதை தவிர்க்க முடியும்;அல்லது இந்து குடியரசு நாடாக நமது பாரத நாட்டினை அறிவிக்க வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே நமது சனாதன தர்மத்தை இனிமேல் பாதுகாத்திட முடியும்;

காலையில் பல் துலக்கும் போது,ஒரு போதும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது;இனிப்பு சுவையுடைய பற்பசையை பயன்படுத்தும் போது அது மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது;அதில் கலந்துள்ள ஃப்ளூரைடு நமது ஆன்மீக எழுச்சியை உருவாக்கும் நமது பீனியல் கிளாண்டு என்ற புருவ மத்திக்குள் இருக்கும் சுரப்பியை அழித்துவிடுகின்றது;எனவே,காலையில் பற்பொடியை மட்டுமே பல் துலக்கிட பயன்படுத்த வேண்டும்;அது துவர்ப்பு அல்லது கசப்புச் சுவையுள்ளதாக மட்டுமே இருக்க வேண்டும்;இது மட்டுமே நமது ஆத்ம வலிமையைப் பாதுகாக்கும்;

இறுக்கமான ஜீன்ஸ்ஸை பெண்கள் அணிவதால்,அவர்களின் கர்ப்பப் பையின் ஆரோக்கியம் நாசமாகின்றது;

நடிகைகள் தொப்புள் தெரிய நடிப்பதால்,அவர்களுக்கு இப்பிறவி மற்றும் இனி வரும் பிறவிகளில் குழந்தையின்மை உண்டாகின்றது;எந்த பெண்ணாக இருந்தாலும் தனது கணவனைத் தவிர,தெரிந்தோ தெரியாமலோ ஒரு போதும் தனது தொப்புளைக் காட்டக் கூடாது;இந்த சித்தர் உபதேசத்திற்குப் பின்னால் ஒரு புராண கால சம்பவமும் உண்டு;அதை வெளிப்படையாக தெரிவிக்க குரு அனுமதி கிடைக்கவில்லை ;

குழந்தை பிறந்த பின்னர்,தாய்ப்பால் தராமல் இருப்பதால் உடலின் இளமையைப் பராமரிக்கும் ஹார்மோன்கள் வலிமை இழக்கின்றன;


கோவில்களில் கிடைக்கும் விபூதி,குங்குமம் போன்றவைகளை ஒருபோதும் விற்பனை செய்யக் கூடாது;விலைக்கு வாங்கக் கூடாது;அப்படிச் செய்தால் அதில் ஆழ்ந்த தெய்வ பக்தி இருக்காது;ஒவ்வொரு ஆலயத்தையும் விபூதி மற்றும் குங்குமம் தயாரிக்கும் மையமாக மாற்றிட வேண்டும்;இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கோவில்களை நிர்வாகிக்கும் வரை இது நடக்காது;(இன்றைய கால கட்டத்தில் கடைகளில் கிடைக்கும் விபூதியில் ஆன்ம பலத்தை அதிகரிக்கும் ஆன்மீகப் பொருட்கள் இல்லை)

விபூதி தயார் செய்ய,ஒவ்வொரு சிவாலயத்திலும் கோசாலை அமைக்க வேண்டும்;சிறு குற்றம் கூட இல்லாத அளவுக்கு அதைப் பராமரிக்கும் சிவ தொண்டர் படையை அமைக்க வேண்டும்;கோசாலை மற்றும் ஆலயத்தின் உள்ளே தவறு செய்தால் தீராத மற்றும் பரிகாரத்திற்கு உட்படாத சாபங்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும்;

1 கோடி தேவ ஆண்டுகள் சிவலோகத்தில் ஒருவர் வாழ்வதும்,ஒரே ஒருஇரவு  கோ(பசு)லோகத்தில் வாழ்வதற்குச் சமம் என்று சித்தர்பெருமக்கள் தெரிவித்துள்ளார்கள்;அதனால்,நமது கோசாலைகளில் நாட்டுப் பசுக்களை மட்டும் வளர்க்க வேண்டும்;ஒரு போதும்,செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட ஜெர்ஸிப்பசுவை வளர்க்கக் கூடாது;கோமாதாவின் பெருமைகளை மக்கள் அறிந்து கொள்ள கலியுகத்தின் ஆரம்பத்தில் பல சித்தர்கள் பூமிக்கு வருகை தந்தார்கள் என்று அறியும் போது ஆச்சரியமாக இருக்கின்றது;


முற்பிறவிகள் நான்கில் சிவாலயத்திற்குள் காமக்களியாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே இப்பிறவியில் மருந்தே இல்லாத காம நோய் வருகின்றது;


முற்பிறவிகளில் மித மிஞ்சிய சிற்றின்ப ஆசைகளால் காமவேட்டை ஆடியவர்களுக்கு இப்பிறவியில் வெண்குஷ்டம் வருகின்றது;தகுந்த இறைவழிபாடு,பரிகாரம்,மனம் திருந்துதல் செய்யாதபட்சத்தில் தொடர்ந்து ஆறு பிறவிகளுக்கு குஷ்ட நோய் தொடரும் என சித்தர்களின் உபதேசம் தெரிவிக்கின்றது;


பசுவின் உடலில் இருந்து வெளிவரும் சாணத்தை தாமரை இலையில் ஒரு குறிப்பிட்ட லக்னத்தில் பிடிக்க வேண்டும்;அதை நிர்ணயம் செய்ய அந்த கோசாலையில் நிரந்தரமான ஜோதிட வல்லுநர்கள் வேண்டும்;


சிவ தீட்சை பெற்றவர்களைக் கொண்டு முறையான விதத்தில் விபூதியை தயார் செய்ய வேண்டும்;பத்து சதுர கி மீ பரப்பளவில் இருக்கும் ஆலயங்களுக்கு ஒரு சிவாலய வளாகத்தில் தயாராகும் விபூதியை இலவசமாக(தானம்) தர வேண்டும்;


குங்குமம் தயார் செய்ய எலுமிச்சை தோட்டங்களை இயற்கை உரங்கள் போட்டு வளர்க்கவும்,பராமரிக்கவும் வேண்டும்;ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் முழுமையாகத் தெரிந்த சாக்தர்களைக் கொண்டு குங்குமத்தை தயார் செய்ய வேண்டும்;

விஸ்வாமித்திரர் மகரிஷியின் கோபத்தினால் உண்டானது பத்திராட்சம்;இது ருத்ராட்சத்திற்கு இணையாக மகரிஷி உருவாக்கியது;இதில் கிடைக்கும் ஒரு முக பத்ராட்சத்தை இணையத்தில் ஒரு முக ருத்ராட்சம் என்று விற்பனை செய்கின்றார்கள்;இது மாபெரும் சாபத்தை உருவாக்கிவருகின்றது;


கடுவன் பூனையின் உடலில் இருந்து வெளிப்படுவது தான் புனுகு ஆகும்;இது கடுவன் பூனையின் விந்தாக இருந்தாலும்,கடுவன் பூனையானது எப்போதும் சிவ நினைவுடன் இருக்கும்;புனுகினை சிவனுக்கு சட்டமாக அணிவிக்கலாம்;பைரவருக்கு அணிவிக்க பைரவரின் அருள் உடனடியாக கிடைக்கும்;நவக்கிரகங்களில் ராகு மற்றும் கேதுவுக்கும் அணிவிக்கலாம் என்பது சித்தர்கள் மட்டும் அறிந்த ரகசியம் ஆகும்;


கடைகளில் கிடைக்கும் புனுகு செயற்கையானது;அதனால் சிறிதும் இறை அனுபூதி கிடைக்காது;இன்றைய கால கட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வணிக நோக்கில் புனுகினை டன் கணக்கில் உற்பத்தி செய்ய முடியாது;கலியுகமாக இருப்பதால் கடுவன் பூனையை வளர்ப்பதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அனுமதி கிட்டாது;  சித்தர்களின் ஆசிகள் இருந்தால் ஒரே ஒரு முறை புனுகு நமக்கு கிடைக்கலாம்;ஒரு சில இடங்களில் புனுகு விற்பனை செய்யப்படுவதாக அறிகின்றோம்;ஒரு கிராம் புனுகின் விலை ரூ.2000/- க்கு விற்பனை செய்யப்படுகின்றதாம்;


கோரோசனை என்பது பசுவின் உடலில் இருந்து வெளிவரும் ஒரு அற்புத பொருள்;ஒரே ஒரு கிராம் கோரோசனை ஒரிஜினல் கிடைத்தால் அடுத்த 60 நாட்களில் நம் ஒவ்வொருவராலும் உண்மையான சிகப்பழகை அடைந்துவிட முடியும்;முழு இந்தியாவுக்கும் கோரோசனை சித்த வைத்தியர்களுக்கும்,மூலிகை ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவைப்படுகின்றது;இதுவும் ஒரு கிராம் ரு.5000/-க்கு மும்பையில் இருந்து மட்டுமே கிடைக்கின்றது;மும்பையில் இருந்து இந்தியா முழுவதற்கும் சப்ளையாகின்றது;


1985 வரையிலும் விறகு அடுப்பினை எல்லோரும் பயன்படுத்தி வந்தோம்;அடுப்புக் கரி கிடைத்தது;அதன் மூலமாக வாரம் ஒரு நாள் வீட்டில் சாம்பிராணி,குங்கிலியம் போன்றவைகளை நெருப்புத் தணல் வளர்த்து வீடு முழுக்க காட்டினோம்;பொறாமை எண்ணங்கள் சாம்பிராணி புகையில் வீட்டை விட்டு ஓடின;மண்ணெண்ணெய் அடுப்பு அறிமுகம் ஆனது;அப்புறம் கேஸ் அடுப்பு பரவலானது;போட்டி,பொறாமை எண்ணங்களால் பல கோடி இந்துக்களின் வீடுகள் இன்று நோயாலும்,கடனாலும்,தேவையற்ற சச்சரவுகளாலும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றன;


கோவில்களுக்கு சாம்பிராணி,குங்கிலியம் தானம் தரும் பழக்கமே நின்று போய்விட்டது;கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாரம் ஒரு முறை சிவாலயத்திற்கு குங்கிலியம் தானம் செய்து வர வேண்டும்;கறுப்பு குங்கிலியம்,சிகப்பு குங்கிலியம்,வெள்ளை குங்கிலியம் என்று எதை வேண்டுமானாலும் தானம் செய்யலாம்;குங்கிலிய தானம் தொடர்ந்து செய்து வருதன் மூலமாக எல்லா மனித ரகசியங்களும் தெரியும்;எம தூதுவர்களிடம் இருந்து விடுதலை பெறும் சக்தி கிடைக்கும்;பிறரையும் எமதூதர்களிடம் இருந்து மீட்கும் ஆற்றலையும் அருணாச்சலேஸ்வரர் வழங்குகின்றார்;


ஒரு ஊரில் மனிதர்கள் செய்த அனைத்து பாவங்களையும் அந்த ஊரில் இருக்கும் சிவலிங்கம் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்;குங்கிலிய தூபம் இடும் போது மட்டுமே ஈர்த்துக் கொள்ளும்;அவ்வாறு ஈர்த்து,புண்ணியத்தை நறுமணம் கமழும் வெண் புகையாக வெளிவிடுகின்றார்;


சிவனை முழு முதற்கடவுளாக நினைப்பவர்கள் தினமும் சிவாலயத்திற்கு குங்கிலியம் தானம் செய்ய வேண்டும்;அப்படி தொடர்ந்து செய்து வந்தால்,செய்பவரின் குருவின் வார்த்தையை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக குங்கிலியப் புகை இருக்கும்;குருவுடனே இருக்க வைத்து நமது பிறவியை அறுக்கும்;


தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் ,இரு உள்ளங்கைகளையும் பார்த்தவாறு “ஓம் உத்தாத லக மகரிஷிக்கு ஜெய்” என்று ஒன்பது முறை ஜபிக்க வேண்டும்;இப்படிச் செய்து வந்தால் மட்டுமே சிவனருள் நமக்கு கிட்டும்;சிவனருளைப் பெறுவதற்காக கடந்த பல கோடி ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி மனிதர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றார்கள்;


இவைகளை முறையாகவும்,அமைப்பு ரீதியாகவும்=இன்னும் சொல்லப்போனால் கார்ப்பரேட் ரீதியாகவும் செயல்படுத்தினால் மட்டுமே நமது சனாதன தர்மத்தை பாதுகாக்க முடியும்;
மதமாற்றம் ஒரு நுண்ணிய பயங்கரவாதம்; அது என்ன நுண்ணிய? நம்மால் உணர முடியாத என்று அர்த்தம்;


இமயம் முதல் இலங்கை வரையிலும்,குஜராத் முதல் மியான்மர் வரையிலும் பண்பாட்டினால் சனாதன தர்மத்தை மக்கள் பின்பற்றி வருகின்றார்கள்;இவர்கள் வேறு மதத்திற்கு மாறினால்,தமது ஆன்ம பலத்தை இழந்துவிடுகின்றார்கள்;



டைனோசரைப் பற்றி ஒரு உண்மையை இங்கே விவரிக்க வேண்டி இருக்கின்றது;ஒரு டைனோசரின் நீளம் ஒரு கி.மீ.அதன் வாலை ஒரு உயிரினம் கடித்தால்,அப்படி கடிபட்ட உணர்வு டைனோசரின் மூளைக்கு தகவலாகச் செல்ல ஐந்து மணி நேரம் ஆகுமாம்;அதனால் தான் டைனோசர் இனம் அழிந்ததாம்;மனிதனின் காலில் ஒரு எறும்பு கடித்தால் மறுவிநாடியே மனிதமூளைக்கு தகவல் சென்றுவிடுகின்றது;மனித நரம்புகள் மூலமாக விநாடிக்கு 256 கி.மீ. வேகத்தில் சென்றடைந்து விடுகின்றது;     அதே போல,கேரளாவில் 1600களில் முதன் முதலில் கிறிஸ்தவ மத மாற்றம் நிகழ்ந்த போது அதை காஷ்மீர் இந்துக்கள் அது ஒரு பெரும் ஆபத்து என்பதை உணரவில்லை;இப்போது 1.9.2018 இல் மதமாற்றத்தினால் உண்டான அழிவுகளை நாம் உணரத் துவங்கியிருக்கின்றோம்;