Wednesday, May 23, 2018

ஏன் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும்?


ஏன் எனில்,ஜோதிடமே ஆன்மீகத்தின் நுழைவு வாசல்!

உலகத்தில் இருந்து நிலாவுக்கு ராக்கெட்டில் பயணம் செய்து வெற்றிகரமாக திரும்பியவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங்;ஆல்ட்டிரின் குழுவினர்;அனுப்பி வைத்து அந்த புகழுக்கு காரணமாக இருந்தது அமெரிக்கா;

இவர்களைத் தவிர இன்னும் மூன்று குழுவினரை அமெரிக்கா நிலாவுக்கு அனுப்பிட பயிற்சி அளித்து தயார் செய்திருந்தார்கள்;

முதலாளித்துவ அமெரிக்காவுக்கு ஒரு தாகம் எப்போதும் உண்டு;ஒரு சவால் என்று வந்தால் ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்;

நிலாவுக்கு யார் முதலில் செல்வது என்ற போட்டி ரஷ்யாவுக்கும்,அமெரிக்காவுக்கும் 1960களில் இருந்தது;


எனவே,நிலாவுக்கு அனுப்ப இருக்கும் விண்வெளிவீரர்களின் பிறந்த குறிப்பினை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஜோதிட ஆலோசனை கேட்டார்கள்:இங்கேதரப்பட்ட ஜோதிட ஆலோசனையின் படியே ஆர்ம்ஸ்டிராங் குழுவினை தேர்வு செய்து அனுப்பி வைத்தார்கள்;

இன்றைய காலகட்டத்தில் நமது ஊரில் இருக்கும் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ப்யூன் முதல் நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் வரை அவரவர் ரேஞ்சுக்கு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையை கேட்ட பின்னரே முக்கிய முடிவுகள் எடுக்கின்றார்கள்;

இந்த சூழ்நிலை நமது பாரதநாட்டில் மட்டும் இருக்கின்றது என்று எண்ண வேண்டாம்;ஆசிய நாடுகளான ஸ்ரீலங்கா,மாலத்தீவு,மொரிஷியஸ்,சிங்கப்பூர்,மலேஷியா போன்ற நாடுகளில் வெளிப்படையாகவும்,உலகம் முழுவதும் படுரகசியமாகவும் உண்டு;

ஜோதிடத்தின் பிறப்பிடம் குமரிக்கண்டம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் சில தினசரி செய்தித்தாள் நிறுவனங்கள் தமது நிறுவனத்திற்கு முக்கிய பணியாளர்களான எடிட்டர்கள்,சப் எடிட்டர்களை ஜோதிடத்தின் அடிப்படையில் தான் தேர்வு செய்கின்றார்கள்;

உலக வல்லரசுகளில் முதன்மையான வல்லரசு அமெரிக்கா! அதன் முதுகெலும்பாக விளங்குவது அதன் உளவுத்துறை அமைப்புகள்;இந்த அமைப்புகள் தமது பணியாளர்களை தேர்வு செய்வதே அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் தான்;


ஐரோப்பாவில் இருக்கும் விமானம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டும் தனது தயாரிப்புகளை செய்யத் துவங்குவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாள் அன்று மட்டுமே!

நாத்திகத்தை கொள்கையாகக் கொண்டது கம்யூனிஸம்;உலகில் இன்று இருக்கும் ஒரே கம்யூனிஸ நாடு சீனா;சீனாவின் முக்கிய அரசு உயர் அமைப்பு அதன் மத்திய அமைச்சரவை;இது ஒவ்வொரு மாதமும் சீனாவின் சுதந்திர ஜாதகப்படி,அரசபட்சி நாள் அன்று மட்டுமே கூடி முக்கிய முடிவுகளை எடுத்துவருகின்றது;அதனால் தான்,உலக அரசியலில் சீனா இன்றும் வலுவான நாடாக ஐரோப்பாவுக்கும்,அமெரிக்காவுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றது;

அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் இருக்கும் தனியார் விண்வெளி ஏஜன்ஸிகள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் உலக ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைப்படியே விண்ணுக்கு செயற்கைக் கோள்களையும்,ராக்கெட்டுகளையும் அனுப்பி வருகின்றது;

அமெரிக்காவின் வேத ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் இணைய தளமுகவரி:https://acvaonline.org/

இங்கிலாந்தின் வேத ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் முகவரி:
http://www.bava.org/

உலக அரசியல் வரலாற்றில்,ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்த வெறும் ஒன்பது மாதங்களில் ஆளும் கட்சியாக மாறியது நமது இந்தியாவில் ஒரு மாநிலத்தில் தான்;அந்த கட்சியை ஆரம்பித்தவர் தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையை அப்படியே (அச்சுப்பிசகாமல்) பின்பற்றியதால் தான்! அது நமது தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் ஆகும்;


நார்ஸ்டிரட்டாமஸ் என்று ஒரு பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் வாழ்ந்தார்;அவரது ஜோதிடக் கணிப்புகள் நூற்றாண்டுகள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது;மிகவும் அதிகமான பிரதிகள் விற்பனை ஆன சில நூல்களில் இதுவும் ஒன்று;
இந்த நார்ஸ்டர்டாமஸீக்கு ஜோதிடத்தின் மூலமாக எதிர்காலத்தை(கி.பி.1500 களில் வாழ்ந்தவரால் கி.பி.2000,கி.பி.2100, கி.பி.2400,கி.பி.3000 வரை) துல்லியமாக கணிக்கும் ஆற்றல் எப்படி வந்தது?
அவர் மூன்று ஆண்டுகளாக நமது பாரத நாட்டுக்கு வந்து காசியில் தங்கி ஜோதிடம் பயின்றார் என்பதுதான் அந்த ஜோதிட ரகசியம்!

அந்த எதிர்காலத்தை அறியும் விஞ்ஞானக் கலையை வீட்டில் இருந்தபடியே கற்க விருப்பமா?

1989 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை ஜோதிடராகப் பணிபுரிந்து வருபவர் உங்களுக்கு ஜோதிடம் கற்றுத் தரக் காத்துக் கொண்டிருக்கிறார்;

உங்களையும் ஒரு தொழில்முறை ஜோதிடராக உருவாக்கிட,உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்;

ஜோதிடம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது:
1.அடிப்படை ஜோதிட பாடங்கள்
2.பிறந்த ஜாதகம் கணிக்கும் முறை(இதில் ருது ஜாதக கணிதமும் அடங்கும்)
3.ஜாதகப் பலன் சொல்லும் முறை(இதில் 100 விதமான வழிமுறைகள் இருக்கின்றன;சுலபமாகவும்,எளிமையாகவும் இருக்கும் வழிமுறைகளே நமக்குப் போதுமானது)

இவைகளுடன்,அவரது ஜோதிட அனுபவத்தொகுப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்;இதனால்,இவரது ஜோதிட அனுபவமும் உங்களுக்குக் கிட்டும்;

குரு தொட்டுக் காட்டாத வித்தை குருட்டுவித்தை என்பது பல நூற்றாண்டு அனுபவ மொழி!

சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார் என்பதும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் அனுபவ மொழி!

நீங்கள் தொழில்முறை ஜோதிடராக உருவாகும் வரை எமது பாடத்திட்டமும்,வழிகாட்டுதலும் தொடரும். . .

குருதட்சிணை உண்டு;

வயது வரம்பு:15 வயதும் அதற்கு மேலும்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்;

ஜோதிடப்பாடத்திட்டம்:தமிழ் மொழியில் அனுப்பப் படும்;
தமிழ்நாடு மாநிலத்தில் வசிப்பவர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளவேண்டும்;

தமிழ்நாடு தவிர்த்து தொலைதூர இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டில் இருந்து ஜோதிடம் பயில்பவர்களுக்கு ஜோதிடத்தின் குறிப்பிட்ட புரிதலைக் கடந்ததும்,உரிய நூல்கள் அனுப்பி வைக்கப்படும்;

விருப்பம் உள்ளவர்கள்;Like to Learn Astrology என்று எழுதி உங்கள் ஜாதகத்தை 9092116990 க்கு அனுப்புங்கள்;



         

இயற்கை நலவாழ்வு என்றால் என்ன?

நாம் உண்ணும் காய்கறிகள்,பழங்கள்,தண்ணீர் இவைகளைக் கொண்டே எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் மிகவும் பழைய உணவுமுறைக்கு இயற்கை நலவாழ்வு என்று பெயர்;

கம்யூட்டர் யுகம் போய்,ஃபேஸ்புக்,டுவிட்டர் யுகத்தில் இதெல்லாம் சாத்தியமா?

கம்யூட்டர் யுகத்திலும் நாம் வாய் வழியாகத்தான் சாப்பிட்டோம்;டுவிட்டர் யுகத்திலும் நாம் வாய் வழியாகத்தானே சாப்பிடுகிறோம்?

உண்ணும் உணவும்,உடுத்தும் ஆடைகளும் மாறியிருக்கலாமே தவிர வேறு என்ன மாறியிருக்கிறது? ஆண் கர்ப்பிணன் ஆகி குழந்தை பெறும் அளவுக்கா அறிவியல் முன்னேற்றமடைந்துவிட்டது?இல்லையே!

வாழ்க்கை வேகமானாலும் உணவை சீரணிக்கும் நமது உடல் அமைப்போ,ஜீரண மண்டலமோ இன்னும் மாறவில்லை;

தவறான உணவுப்பழக்கத்தாலோ அல்லது முறையற்ற உணவுப் பழக்கத்தாலோ தான் நோய்கள் உருவாகியிருக்கின்றன;இவைகளூக்குப் பின்னால் சர்வதேச உணவு அரசியலும் நிழலாக இயங்குகிறது;

இதில் இருந்து மீள்வதற்கு பின்வரும் இடங்களில் இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம்கள் நடைபெற இருக்கின்றன;அவைகளில் உங்களுக்கு அருகில் இருக்கும் முகாம்களில் கலந்து கொள்வதன் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்;

1.அரவிந்த் ஆஸ்ரமம்,140,முடங்கியார் சாலை 4 வது கி.மீ,ராஜபாளையம்;முதல் நாள் மாலையே வந்து சேரவேண்டும்;கட்டணம் இல்லை;சில பொருட்கள் மட்டும் ஆஸ்ரம வாசலில் வாங்கிட ரூ.250/-தேவைப்படும்;
முன் பதிவு அவசியம்; 91 4563 233308

2.இயற்கை மருத்துவ சந்தியா வித்யாலயம்,முருக பவனம்,திண்டுக்கல்;செல்:9842836928
ஞாயிறு மாலை 5 மணிக்கு

3.ஆயர்பாடி இயற்கை மருத்துவமனை,அம்மாபாளையம்,திருப்பூர் இயற்கை மருத்துவ முகாம்;நபருக்கு ரூ.1000/-
அலைபேசி:9345442687,9965042543

ஒவ்வொரு வாரமும் வெள்ளி,சனி,ஞாயிறு தோறும்;

நன்றி:இயற்கை மருத்துவம் மாத இதழ்;நவம்பர் 2015


இப்பிறவி முழுவதும் மாந்திரீகத்தால் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் கணபதி மந்திர ஜபம்!!!


கடந்த பல நூற்றாண்டுகளாக நமது பாரத தேசம் வலிமை மிக்க தேசமாகவும்,உலக நாடுகளுக்கு உணவு ஊட்டும் தாய் நாடாகவும் இருந்து வந்தது;

மந்திரங்களை நாடு முழுக்க தினமும் 14 மணி நேரம் ஜபித்து வந்ததும்,நாட்டு மக்கள்தொகையில் 85% பேர்கள் தினமும் அன்னை மஹாவராகி வழிபாடு செய்து வந்ததுமே இதற்குக் காரணம்!


வியாபாரம் வந்த இங்கிலாந்து கிறிஸ்தவ வியாபாரிகள் இந்த நாட்டின் செல்வச் செழிப்பில் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்;பிச்சைக்காரர்களே கிடையாது;வீட்டிற்கு கதவும் கிடையாது;பூட்டும் கிடையாது;குடிக்க தண்ணீர் தருவதில்லை;மாறாக மோர் முதலான பானகங்கள் தான் தந்தனர்;


ஆன்மீகத்தின் அடிப்படையில் 20,00,000 ஆண்டுகளாக இயங்கி வந்த பாரதம்,இங்கிலாந்து கிறிஸ்தவர்களின் பிடியில் சிக்கத் துவங்கியதும்,இந்த நாட்டின்,நாட்டுப் பண்பாட்டின் முதுகெலும்பாகிய கோவில்,பசு இனம்,விவசாயம்,பெண்கள் இவைகளை அழிக்கவும்,இழிவுபடுத்தவும் திட்டமிட்டு 300 ஆண்டுகளாக செயல்பட்டனர்;அதன் பின்விளைவுகளை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம்;

கூடவே,தேசத்தின் பண்பாட்டு மரியாதையைத் தெரிந்தவர்களைக் கொல்வது,கிறிஸ்தவம்,ஆங்கிலம் இவைகளைப் பரப்புவது போன்ற நயவஞ்சகவேலைகளில் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு செயல்பட்டனர்;இது இன்றும் தொடர்கின்றது. . .தமிழ் உணர்வாளர்கள் என்ற முகமூடி அணிந்து கொண்டு......

நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல் எப்படியெல்லாம் கடந்த 300 ஆண்டுகளில் நமது இந்துப் பாரம்பரியத்தில் இருந்து இந்துக்களாகிய நம்மைப் பிரித்தார்கள்? என்பதை விரிவாக எழுதியிருக்கின்றனர்;

இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் நிம்மதியில்லாமல் இருப்பதற்குக் காரணம்,நமது முன்னோர்கள் நமக்கு உபதேசம் செய்தவைகளை பின்பற்றுகிறோம்;ஆனால்,முழுமையாக பின்பற்றுவதில்லை;அதனால் தான் அரசியலில் குழப்பம்;தொழில் துறையில் குழப்பம்;ஆன்மீகத்துறையிலும் குழப்பம்;தினசரி வாழ்க்கையிலும் குழப்பம்,குடும்ப அமைப்பில் குழப்பம்;


இந்த குழப்பத்தின் ஊடாக நன்றாக நம்மிடம் இருந்து வருமானம் பார்ப்பவர்கள் யார் தெரியுமா?
பன்னாட்டு நிறுவனங்களே!

இன்றைக்கு நாட்டுமக்கள் தொகையில் 0.05% பேர்கள் தான் நமது பாரதமாதாவாகிய மஹாவராகியை தினமும் வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர்;இதனாலும்,உலகின் மிக நீண்டகாலமாக வல்லரசு நாடாக இருந்த நமது பாரத்தை சுண்டைக்காய் நாடுகளும்,வெறும் 1000 பேர்கள் கொண்ட ரவுடிக்கூட்டமெல்லாம் தீவிரவாதிகள் என்ற முகமூடி அணிந்து கொண்டு நமது நாட்டை மிரட்டுகின்றன;


தனிமனிதர்களின் நிலை உயர்ந்தால் தான்,அந்த நாட்டின் நிலை உயரும் என்பது சுவாமி விவேகானந்தரின் கூற்று;அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் வலிமைமிக்கவர்களாக மாற வேண்டும்;ஆன்மீகத்தில் வலிமை என்பது மாந்திரீகத்தால் சிறிதும் பாதிக்கப்படாமல் இருப்பதுதான்;


மாந்திரீகம் என்பது அஷ்டகர்மாக்களின் தொகுப்பு;இதில் இருந்து இப்பிறவி முழுவதும் சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது அஷ்ட கணபதி மந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கை வரை ஜபித்து நிறைவு செய்வதுதான்;


இனி எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்தாலும்,அத்தனை மனிதப் பிறவிகளிலும் அஷ்டகர்மாக்களின் தாக்குதல் சிறிதும் இன்றி வாழ விரும்பினால்,நமது குழந்தையை அதன் 10 வது வயதில் இருந்து இந்த அஷ்ட கணபதி மந்திரத்தை ஜபிக்க வைக்க வேண்டும்;


மாந்திரீகத்தில் மிகவும் உச்சகட்டமான கெடுதியைச் செய்யக் கூடியது காஷ்மோரா! இன்றைய ஒடிசா,மத்தியப்பிரதேசம்,அசாம் மாநிலங்களில் இருக்கும் வனப்பகுதிகளில் மட்டும் இதை செய்துதரும் ஆட்கள் இருக்கின்றார்கள்;அதனால் கூட இந்த அஷ்டகணபதி மந்திரம் சித்தி பெற்றவர்களுக்கு தீங்கு தர முடியாது;


குறளி,ஜின்,மோகினி,குட்டிச்சாத்தான் என்று ஒரு மிகப்பெரிய சூட்சும சக்திகளைக் கொண்ட சூட்சும உலகத்தில் இருந்து எதையாவது ஒன்று அல்லது இரண்டை வைத்துக் கொண்டு தான் இன்று பலர்,பிறருக்கு தீங்குகள் செய்து கொண்டிருக்கின்றனர்;

யார் தொடர்ந்து 48 நாட்கள் பழமையான சிவாலயம் அல்லது அம்மன் ஆலயம் சென்று வருகிறார்களோ அவர்களுக்கு இந்த பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை;($ 48 நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து தினமும் சிவாலயம்/அம்மன் ஆலயம் செல்ல வேண்டும்)


ஆதி கணபதி
மகா கணபதி
நடன கணபதி
சக்தி கணபதி
பால கணபதி
உச்சிட்ட கணபதி
உக்கிர கணபதி
மூல கணபதி

என்ற எட்டு விநாயக சக்திகளுக்கும் மூலமந்திரம் ஒன்றே ஒன்றுதான்;சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்கு ஈசனின் ஆணைப்படி கொண்டு வந்தவருமான அகத்திய மகரிஷி நமக்காக இதை உபதேசித்திருக்கின்றார்;

12 மாதங்களில் இந்த அஷ்ட கணபதி சித்தியாகிவிடும்;நாமும் இனி சர்வசக்தி வாய்ந்தவராகி விடுவோம்;

முறைப்படி குரு உபதேசம் மூலமாக இந்த அஷ்ட கணபதி மந்திர உபதேசம் பெற உங்கள் பிறந்த ஜாதகத்துடன் எம்மை(வாட்ஸ் அப்:9092116990) நேரில் சந்திக்கவும்;ஆண்,பெண்,குழந்தை,சிறுவர்,சிறுமி என்று எவரும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;

எங்கே எப்படி ஜபிக்க வேண்டும்?என்ற விபரங்களும் மற்றும் உங்களுடைய ஆன்மீகத் தேடல்களுக்கான விடைகள் இங்கே கிடைக்கின்றன;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

அல்சரும் அன்னதானமும்



யார் கடந்த மூன்று பிறவிகளில் ஒரே ஒருமுறை கூட அன்னதானம் செய்யவில்லையோ,அவர்களே இப்பிறவியில் அல்சரால் அவதிப்படுகின்றனர்;இது பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஆன்மீக உண்மை;


அன்னதானத்தை உள்ளூர் சிவாலயத்தில் அமாவாசை தோறும் செய்யலாம்;

அன்னதானத்தை சனிக்கிழமைகளில் செய்யலாம்;இதன் மூலமாக சனியின் தாக்கம் பெருமளவு குறையும்;

அன்னதானத்தை தினமும் சிவாலயத்தில் வாசலில் செய்வது சிறப்பு;

அன்னதானத்தை நாம் பிறந்த தமிழ் மாதத்தில்,பிறந்த நட்சத்திரத்தன்று அண்ணாமலையில் செய்வதன் மூலமாக நமது கர்மவினைகளை பாதியாக்கிவிடும் சுலப வழியாகும்;

அன்னதானத்தை, ‘பசி’ என்று யார் எங்கே கேட்டாலும் உடனே செய்வது கோடி மடங்கு புண்ணியத்தைத் தரும்;

அன்னதானத்தை சொந்த ஊரில் தினமும் செய்யலாம்;அல்லது இப்போது வசிக்கும் ஊரிலும் தினமும் செய்யலாம்;(அவரவர் பொருளாதார வசதி,பூர்வபுண்ணியத்தைப் பொறுத்தது)

அன்னதானம் செய்தால் அதன் பிறகு அல்சர் வராது;ஒருவேளை வந்தால்,அதற்கு வேறு ஏதோ ஒரு ஜோதிட/ஆன்மீகக் காரணம் இருக்கும்;

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அன்னதானத்தால் மட்டுமே நமது கர்மவினைகளை ஈஸியாகக் கரைக்க முடியும்;

அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாளில் அன்னதானம் செய்தால் அதற்கு மிஞ்சிய புண்ணியம் இந்த உலகத்தில் கிடையவே கிடையாது;

ஒரு ஆலயத்தில் அல்லது ஜீவசமாதியில் 1000 பேர்களுக்கும் மேலானவர்களுக்கு நாம் அன்னதானம் செய்வதாக வைத்துக்ககொள்வோம்;1001 வது மனிதராக நமது முன்னோர்களில் யாராவது ஒருவர் சித்தராகவோ,துறவியாகவோ,ரிஷியாகவோ,ஞானியாகவோ இருந்திருப்பார்கள்;அவர் அங்கே வந்து அந்த அன்னதானத்தில் கலந்து கொள்வார்;இதன் மூலமாக நமது கர்மவினைகளை ஏற்றுக் கொள்வார்;

யார் ஒருவர் ஒரே பிறவியில் 30,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்கின்றார்களோ,அவருக்கு இந்த உலகில் பேசும் அனைத்து மொழிகளும் தானாகவே பேசும் ஆற்றல் உருவாகிவிடும்;அதுவும் தேவைப்படும் போது மட்டுமே வெளிப்படும்;எல்லா நேரங்களிலும் அந்த அருளாற்றல் இருக்கும் என்று எண்ணக் கூடாது;

சில விதிமுறைகளை கண்டிப்பாக அன்னதானம் செய்பவர்கள் பின்பற்றியே ஆக வேண்டும்;

1.ஒருபோதும் கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்யக் கூடாது;

2.ஒரு போதும் நள்ளிரவில் (அகால நேர) அன்னதானம் செய்யக் கூடாது;

3.ஒரு போதும் அசைவ உணவுகளை அன்னதானம் செய்யக் கூடாது;

4.ஒரு போதும் விளம்பரப்படுத்தி அன்னதானம் செய்யக் கூடாது;(இன்றைய காலகட்டத்தில் இதை நடைமுறைப்படுத்துவது கடினமே)

5.நண்பர்கள்,உறவினர்களுக்கு வீடு/ஹோட்டலில் உணவு வாங்கித்தருவது அன்னதானம் ஆகாது;

6.வீடு வாசல் இல்லாத அனாதைகளுக்கு இலவசமாக தரும் உணவுக்கு அன்னதானம் என்று பெயர்;

7.அன்னதானத்தை மனப்பூர்வமாக செய்ய வேண்டும்;இந்தப் பிறவியில் நம்மைப் படைத்த ஈசன் நம் மூலமாக இந்த தெய்வீக செயலைச் செய்கின்றான் என்றே எண்ண வேண்டும்;

8.அன்னதானம் செய்ய விரும்பி,அதற்கு சந்தர்ப்பமே அமையாத சூழ்நிலையில் வாழ்ந்து வருபவர்கள்,தமது குலதெய்வம் கோவிலில் சுவாமிக்கு படையல் (தளுவை) செய்ய மாதம் தோறும் அரிசி வாங்கித் தரலாம்;

இந்த தெய்வீக ரகசியங்களை நமக்கு அருளியவர் இடியாப்ப சித்தர் ஆவார்;அவரது சீடரும்,நமது சூட்சும சத்குருவுமாகிய வெங்கடராம சுவாமிகளுக்கு இக்கணத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்;


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

அரிய சிவலிங்க வழிபாடு!


பலா மரத்தின் வடக்கு வேர் கொண்டு சிவலிங்கம் செய்ய வேண்டும்;

இந்த சிவலிங்கத்தைக் கொண்டு பகலில் தினமும் பூஜை செய்ய வேண்டும்;
தொடர்ந்து 12 ஆண்டுகள் செய்து வர,சிவகணமாகும் வழிமுறை நம்மைத் தேடி வரும்;

2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பலாமரசிவலிங்கம் செய்யும் முறை உலகம் முழுக்கவும் இந்த அரிய சிவலிங்க வழிபாடு மனிதர்களால் பின்பற்றப்பட்டு வந்தது;

1000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நமது பாரத நாடு முழுவதும் (காஷ்மீர் முதல் குமரிக்கண்டம் வரை;குஜராத் முதல் இன்றைய தாய்லாந்து வரை) இந்த அரிய சிவலிங்க வழிபாடு பரவியிருந்தது;

தற்போது கேரளமாநிலத்தில் வெகு சிலரால் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகின்றது;


சிவமந்திர ஜபம் + அண்ணாமலை கிரிவலம் + அன்னதானம்+ ருத்ராட்ச தானம் = முக்திக்கு ஒரு சுலபவழியாக சித்தர் பெருமக்கள் உபதேசித்துள்ளனர்;

16,000 கோடி சிவ மந்திரங்கள் உள்ளன;ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை;

உதாரணமாக, 28 கோடி முறை சிவாய நம என்று ஜபித்துவிட்டு,செம்பைப்பார்த்தால்,அது தங்கமாக மாறிவிடும்;




சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உருவாகும்;யாரெல்லாம் கடந்த ஐந்து முற்பிறவிகளில் ஜபித்தார்களோ,அவர்களே இப்பிறவியில் கைராசி டாக்டர்களாக வாழ்ந்து வருகின்றனர்;


சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,ஈசனே குருவாக அமைவார்;அப்படிப் பட்டவர்களே இன்று பழமையான சிவாலயத்தில் சிவாச்சாரியார்களாக இருக்கின்றனர்;


சில சிவமந்திரங்களை தொடர்ந்து(சில பல பிறவிகளாக) ஜபித்து வந்ததால்,தமது 18 வயது முதல் வாழ்நாளின் கடைசி நாள் வரை அரசாங்கத்தில் மிகப் பெரிய பதவி(தலைமைச் செயலகத்தில் சாதாரண பதவியில் பணி சேர்ந்து,துறைச் செயலாளர் ஆன பின்னர்,பணி ஓய்வு வயதை அடைகின்றனர்)யில் பணிபுரிந்து வருகின்றனர்;


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்;



ஓம் அருணாச்சலாய நமஹ

Monday, May 21, 2018

அதிவேகமாக செல்வ வளம் தரும் ஸ்ரீசொர்ண வாராஹி வழிபாடு!


உலகின் குருவாக நமது பாரத நாடு இருந்து வருகின்றது;வெகு விரைவில் உலகின் வழிகாட்டியாகவும்,முதன்மை வல்லரசு நாடாகவும் மாற இருக்கின்றது;

நாம் ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியில் பெரும் செல்வ வளம் அடைய தடையாக இருப்பது மூன்று:
1.குலதெய்வ வழிபாட்டினை அடிக்கடி செய்யாமல் இருப்பது
2.நமது ஜனன ஜாதகப்படி நமது கர்மவினைகளை அழிக்கும் வழிமுறையை கண்டறியாமல் இருப்பது;ஒருவேளை கண்டறிந்தாலும் அதை(உரிய பரிகாரங்கள்) செயல்படுத்தாமல் இருப்பது;
3.அண்ணாமலையில் துவாதசி திதி அன்று அன்னதானம் செய்யாமல் இருப்பது;

இவைகளில் ஏதாவது ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்ட குறைகள் இருப்பவர்கள் காலம் பூராவும் பண பற்றாக்குறையால் அவதிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்;

நமது கர்மவினைகளை முழுமையாக அழிக்கும் தெய்வீக சக்திகள்;1.மஹாகால பைரவப் பெருமான்
       2.மஹாவராகி
       3.ஸ்ரீசரபேஸ்வரர்
       4.இவர்கள் மூவரையும் தோற்றுவித்த அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையார்

இவர்களில் ஒருவர் அல்லது இருவரை தினமும் ஜபித்து வருவதன் மூலமாக மூன்றே ஆண்டுகளில் நமது கர்மச்சுமைகள் நீங்கி வளமோடும்,நலமோடும் வாழ முடியும்;அப்படி வாழ்ந்து வருபவர்கள் இன்றும் நமது ஊரில் ஒரு சிலர் இருக்கின்றார்கள்;


ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை மஹா கால பைரவரையோ அல்லது மஹாவராகியையோ ஜபித்து வருவதன் மூலமாக இப்பிறவியில் அதிக கஷ்டங்கள்,சோதனைகள்,துயரங்கள்,சோகங்கள் இல்லாமல் வாழ முடியும்;அந்த மூன்று ஆண்டுகளும் அசைவம்,மது,போதைப் பொருட்களை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும்;


இங்கே செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண வராகி வழிபாட்டினை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;அன்னை ஸ்ரீ மஹாவராகியின் அருளாசியோடும்,அனுமதியோடும் இதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்;


செல்வ வளத்தை குறுகிய காலத்தில் அள்ளித் தரும் தெய்வீக சக்திகள் இருக்கின்றன;

ஹேரம்ப கணபதி,

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண கணபதி,

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்;

ஸ்ரீ சொர்ண துர்கை என்று ஏராளமான தெய்வீக சக்திகள் இருக்கின்றன;முறைப்படி குருவருளால் இந்த தெய்வீக சக்திகளில் ஒன்றை மட்டும் உபாசனை செய்து இப்பிறவி முழுவதும் செல்வச் செழிப்போடு வாழலாம்;


இந்த தெய்வீக சக்திகளை நமது இருப்பிடத்திற்கு கொண்டு வரும் பூஜை முறைகள் இன்றைய கால கட்டத்தில் புத்தகங்களிலும்,இணையத்திலும் பலரால் எழுதப்பட்டிருக்கின்றன;

எழுதியவர்களை நேரில் சந்தித்து முறைப்படி பூஜை முறைகளை அறிந்த பின்னர்,இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே பலன் தரும்;


ஸ்ரீ சொர்ண வராகியின் அருளால் பெரும் செல்வ வளம் உண்டாக;


ஒரு வாழை இலையில் பச்சரிசி ஒரு படி எடுத்து வாழை இலை முழுவதும் பரப்ப வேண்டும்;அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காய்கள் மூன்றினை(ஆறு முறிகள்) அதில் வைக்க வேண்டும்;முறிகளில் மஞ்சள்,குங்குமம் வைத்து அதில் சுத்தமான பசு நெய் ஊற்றவேண்டும்;(ஜெர்ஸிப்பசுவின் நெய்யையோ அல்லது எருமை நெய்யையோ ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது)
     தாமரை தண்டு திரியினால் தீபம் ஏற்ற வேண்டும்;சிகப்புத் தாமரை தண்டுத்திரியும்,வெள்ளைத் தாமரைத் தண்டுத் திரியும் கிடைக்கும்;எதுவாக இருந்தாலும் சரி;


இன்னொரு முறையும் உண்டு;அது என்னவெனில்,ஒரு வாழை இலையில் நெல் பரப்பி வைக்க வேண்டும்;நெல் ஒரு படி அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்;பரப்பி வைக்கப்பட்ட நெல் சமதளமாக பரப்பப் பட்டு இருக்க வேண்டும்;அதன் மீது,இன்னொரு வாழை இலையை விரித்து வைக்க வேண்டும்;சிறிய அல்லது மிகச் சிறிய வாழையிலையை பயன்படுத்தக் கூடாது;இரண்டாவது வாழை இலையின் மீது கோதுமையை ஒரு படி அளவுக்கு எடுத்து அதன் மீது பரப்பி சமதளமாக வைக்க வேண்டும்;


இரண்டாவது வாழை இலையின் ஓரங்களில் 27 மண் விளக்கால் ஆன தீபத்தை வைக்க வேண்டும்;அதில் தாமரை தண்டு திரியில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;ஒவ்வொரு மண் விளக்கு தீபத்தின் அருகிலும் ஒவ்வொரு சிகப்பு நிற மலர் ஒன்றை வைக்க வேண்டும்;சிகப்பு நிற மலர் காய்ந்து போயிருக்கக்கூடாது;புதிய மலரை மட்டும் வைக்க வேண்டும்;


 ஸ்ரீசொர்ண வராகி மந்திரம் ஒன்று உள்ளது;இணையத்திலும் இருக்கலாம்;அதை குருமுகமாக கேட்டு அறிந்து ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;புத்தகம்/இணையம் பார்த்து மனப்பாடம் செய்து முயற்சித்தவர்களுக்கு பலன் கிட்டவில்லை;


குரு அருள் இருந்தால்  தானே அன்னையின் அருள் கிட்டும்?


ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 4.30 முதல் 6 மணிக்குள் இவ்வழிபாட்டினை ஆரம்பிக்க வேண்டும்;இந்த 90 நிமிடங்களுக்குள் 108 முறை ஸ்ரீசொர்ண வராகி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

அன்று முதல் ஒன்பது வாரங்களுக்கு,அதாவது 63 நாட்களுக்கு உரிய தொடர் முயற்சி இது;

1வது ஞாயிறு காலை 4.30க்குத் துவங்கி மறு நாள் முதல் ஒவ்வொரு நாளும் காலையில் 6 மணி முதல் 7 மணிக்குள் 108 முறையும்;மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் 108 முறையும்,இரவு 8 மணி முதல் 9 மணி வரை 108 முறையும் ஸ்ரீ சொர்ண வராகி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

ஒவ்வொரு நாளும் இப்படி மூன்று வேளைகளும் 108 முறை வீதம் ஒன்பது வாரங்களுக்கு தொடர்ந்து ஜபித்து வர வேண்டும்;

1ம் ஞாயிறு அன்று செவ்வரளி மாலையையும்
2ம் ஞாயிறு அன்று எலுமிச்சம் பழ மாலையையும்(புள்ளிகள் இல்லாமலும்,கனியாததையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்)எலுமிச்சை பழங்களை ஊசியில் கோர்க்கக் கூடாது;
3ம் ஞாயிறு அன்று துளசி மாலையையும்
4ம் ஞாயிறு அன்று வில்வ மாலையையும்
5ம் ஞாயிறு அன்று வெற்றிலை மாலையையும்
6ம் ஞாயிறு அன்று மரிக்கொழுந்து மாலையையும்
7ம் ஞாயிறு அன்று சிகப்பு நிற ரோஜா மாலையையும்
8ம் ஞாயிறு சம்பங்கி மாலையையும்
9ம் ஞாயிறு விரலி மஞ்சள் மாலையையும் அணிவிக்க வேண்டும்;
ஞாயிறு அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் அணிவித்துவிட்டு,மறு நாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் மாலைகளை எடுத்துவிடவும் வேண்டும்;


அதே போல பின்வரும் வரிசைப்படி,ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நைவேத்தியம் படையல் இட வேண்டும்;

1ம் ஞாயிறு அன்று சர்க்கரைப் பொங்கலையும்
2ம் ஞாயிறு அன்று எலுமிச்சை சாதத்தையும்
3ம் ஞாயிறு அன்று வெண்பொங்கலையும்(இதில் பாசிப்பருப்பினை அதிகம் சேர்த்திருக்க வேண்டும்)
4ம் ஞாயிறு அன்று புளியோதரையையும்(மிளகு சேர்த்திருக்க வேண்டும்)
5ம் ஞாயிறு அன்று பனங்கிழங்கு சாதத்தையும்(அல்லது வேறு கிழங்குகளில் எதுவாகவும் இருக்கலாம்)
6ம் ஞாயிறு அன்று தயிர்ச் சாதத்தையும்
7ம் ஞாயிறு அன்று வெண் மொச்சை சுண்டலையும்
8ம் ஞாயிறு அன்று கருப்பு உளுந்து வடையையும்
9ம் ஞாயிறு அன்று சீனிக்கிழங்கு என்ற சர்க்கரை வள்ளிக்கிழங்கினை வேக வைத்து எடுக்க வேண்டும்;எடுத்த பின்னர் சுத்தமான(கலப்படம் இல்லாத) தேனை சேர்க்க வேண்டும்;

இரவு முழுவதும் படையல் இட்டுவிட்டு,மறுநாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் சாப்பிடவேண்டும்;

முற்பிறவிகளில் அன்னை மஹாவராகியை மட்டும் பூஜித்தவர்களுக்கு சிலபல அதிசயங்களை உணரலாம்;நைவேத்தியம் காணாமல் போயிருக்கும்;வெகு சிலருக்கு அன்னை மஹாவராகி கனவில் வந்து பேசுவாள்;


ஆன்மீக பூமியான நமது பாரத நாட்டில் பலவிதமான ரகசிய வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன;இன்றும் அரிதாக வெகு சிலரிடம் மட்டுமே இருக்கின்றன;



அன்னை மஹாவராகியின் திருவுள்ளம் யாருக்கு இருக்கின்றதோ,அவர்களுக்கு மட்டுமே இந்த செல்வ வளம் குவியும் முறை தேடி வரும்;

அன்னையின் கருணை இருந்தால் மட்டுமே இந்த வழிபாட்டுக்கு உரிய மந்திரம் கிடைக்கும்;

அன்னையின் ஆசிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஒன்பது வார முயற்சிகள் தங்கு தடையில்லாமல் ஜெயம் ஆகும்;

Wednesday, May 16, 2018

இந்துக்களின் பக்தியால் அழிந்துவரும் துஷ்டர்களின் உலகளாவிய ஆதிக்கம்!!!


உலகத்தில் வாழ்ந்து வரும் 700 கோடி மனிதர்களுக்கும் எதிரி இலுமுனாட்டிகள் மட்டுமே!

யார் இந்த இலுமுனாட்டிகள்?

400 ஆண்டுகளுக்கு முன்பு 12 பேர்கள் அமெரிக்காவில் ஒன்றாக பேசி முடிவு செய்தார்கள்;இந்த உலகத்தையும்,உலக மக்களையும் நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று;


அப்படி தமது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு மந்திரம்,தந்திரம்,மாந்திரீகம்,அரசியல் என்று எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தலாம் என்றும் தீர்மானித்தார்கள்;

உலகத்தில் மனிதர்கள் செய்யும் தொழில்களை 13 பெரும் பிரிவுகளாக பிரித்தார்கள்;இன்று உலகத்தில் இருக்கும் எல்லா வல்லரசு நாடுகளும்,எல்லா உளவு அமைப்புகளும்,எல்லா அரசாங்கங்களும் இவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இயங்கிவருகின்றன;உலக வல்லரசு அமெரிக்கா உள்பட!


இன்று இலுமுனாட்டிகளின் மொத்த ஜனத்தொகை 6000 பேர்கள் ஆகும்;இவர்கள் லண்டன் அருகில் இன்னர் சிட்டி என்ற ரகசிய நகரத்தில் இருந்து உலகை இயக்கி வருகின்றார்கள்;


மனிதர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகள் நமது இந்து தர்மத்தில் மட்டுமே இருக்கின்றன;
மனிதர்களை பணவெறி பிடித்தவர்களாகவும்,காமவெறி பிடித்தவர்களாகவும்,அதிகார வெறி பிடித்தவர்களாகவும் மாற்றும் போக்கினை உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு மாநிலத்திலும் பரப்பிக் கொண்டு இருப்பவர்கள் இந்த இலுமுனாட்டிகள்;


உண்மை,நேர்மை,விசுவாசம் போன்ற நற்குணங்களை பாரத தேசத்தில் இருந்து படிப்படியாக கடந்த 300 ஆண்டுகளாக இவர்கள் தான் அழித்துவருகின்றார்கள்;இருந்த போதிலும்,இன்றைய 2018 லும் கூட பணத்தாசைப் படாத மனிதர்கள் இன்றும் நமது நாட்டில் மட்டுமே பிறந்துவருகின்றார்கள்;பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் ஆண் அல்லது பெண் பணத்தாசை இல்லாமல் வாழ்ந்து வருவது சாதாரணம்;ஆனால், அடுத்த வேளை உணவுக்கு வேலை செய்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலையிலும் கூட எனது நாடு,எனது பண்பாடு,எனது மக்கள் என்ற தன்னலமற்ற தியாகிகள் தொடர்ந்து பிறப்பது நமது பாரத நாட்டில் மட்டுமே!


இதுதான் இலுமுனாட்டிகளுக்குப் பிடிக்கவில்லை;இலுமுனாட்டிகளின் பரிசோதனை தேசங்களாக சிங்கப்பூர்,ஹாங்காங்,துபாய் போன்றவைகள் இருந்து வருகின்றன;இங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் ஆன்மீகத் தேடல் உருவாகாது;சிங்கப்பூரில் பிறந்தவர்களுக்கு பாரத நாட்டின் பண்பாட்டின் ஆளுமை அவ்வளவு சுலபத்தில் பிடிக்காது;ஹாங்காங்கில் பிறந்தவர்களுக்கு சீனாவின் ஆன்மீக திறன் மீது எளிதாக நம்பிக்கை வராது;துபாய்யில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சவுதி அரேபியாவின் ஆன்மீகத் தேடல் மீது ஈர்ப்பு வராது;


இலுமுனாட்டிகளாக உருவானவர்கள் யூதர்கள்;200 ஆண்டுகளுக்கு முன்பு சில சீனர்களையும் இலுமுனாட்டிகள் தமது குழுவில் இணைத்துக் கொண்டார்கள்;இன்றைய கால கட்டத்தில் பலநாடுகளில்,பல அரசியல் குழப்பங்களுக்கு மறைமுகக் காரணம் இலுமுனாட்டிகளே;


உலகத்தின் அனைத்து நாடுகளின் அரசியல்,அரசாங்கம்,வர்த்தகம் என்று எல்லாத்துறைகளிலும் அமெரிக்காவின் தலையீடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கின்றது;அமெரிக்காவை மையமாகக் கொண்டே உலக அரசியல் இயங்கிவருகின்றது;அமெரிக்காவை வெள்ளை மாளிகை கட்டுப்படுத்துகின்றது;வெள்ளை மாளிகையை இஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்ட யூதர்களும்,இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியர்களும் கட்டுப்படுத்திவருகின்றார்கள்;

இவர்கள் இன்றைய ஒட்டு மொத்த உலகத்தையும் கட்டுப்படுத்த உதவியது பாரத நாட்டின் வேதங்கள்,உபநிஷத்துக்கள் மற்றும் கருமார்க்கங்கள் மட்டுமே;அடுத்தபடியாக செவ்விந்தியர்களின் மாந்திரீக முறைகளுமே;

சுமாராக 6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக வரைபடம் வேறுவிதமாக இருந்தது;ஆப்ரிக்கக் கண்டத்தில் இப்போது இருக்கும் சகாரா பாலைவனம்,சகாரா பெருங்கடலாக இருந்தது;அமெரிக்காவுக்கும்,ஐரோப்பாவுக்கும் இடையே ஒரு பெரிய கண்டம் இருந்தது;அதற்கு அட்லாண்டிக் கண்டம் என்றூ பெயர்;தொடர்ந்து நிகழ்ந்த பூகம்பங்களும்,சுனாமிகளும் உலக வரைபடத்தை மாற்றிவிட்டன;

சுமாராக 20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்றைய இலங்கைக்கு தெற்கு எல்லையில் இருந்து அண்டார்டிகாவரையிலும்,கிழக்கே ஆஸ்திரேலியாவில் இருந்து மேற்கே மடகாஸ்கர் தீவு வரையிலும் குமரிக்கண்டம் என்ற லெமூரியாக் கண்டம் இருந்தது;வெறும் 200 ஆண்டுகளுக்குள் உண்டான ஆறு சுனாமிகள் குமரிக் கண்டத்தை இந்து மஹாசமுத்திரமாக மாற்றிவிட்டன;


இன்றைய காலகட்டத்தில் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் சமுதாயத்தை ஆன்மீக பூமியாகத் திகழும் பாரதத்திலேயே உருவாக்கி வருவது இலுமுனாட்டிகளின் செயல்பாடுகள் தான்;இவர்களது கண்டுபடிப்புகளான இணையம்,செல்போன்,ஸ்மார்ட்போன் போன்றவைகளால் மக்களிடையே பக்தி குறைந்து பணவெறி அதிகரிக்கத்துவங்கி  இருக்கின்றது;


இருந்த போதிலும் இலுமுனாட்டிகள் பற்றி உலக அளவில் விழிப்புணர்ச்சியை முதன் முதலில் உருவாக்கியவர் ஒரு தமிழரே;அவர் தான் ஹீலர் பாஸ்கர்! ஆன்மீகத் தேடலில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியதும் அவருக்கு இந்த உலகம் முழுவதையும் கட்டுப்படுத்திவரும் மனிதர்கள் யார் என்பது தெரிந்தது;அவர் தனது இணையதளத்தில் உலக அரசியல் என்ற தலைப்பில் 6 மணி நேரம் பேசியிருக்கின்றார்;அதை முழுமையாக கேட்டால் நமக்கும் பயம் வரும்;அது தேவையற்ற பயம் என்பதை நாம் உணர்வதே இல்லை;


ஒரு அரபு மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் ஜபித்து வந்தால் அது அப்பகுதி மக்களுக்கு மட்டுமே நன்மைகளை தரும்;
அதேசமயம்,ஒரு சமஸ்க்ருத மந்திரம் அல்லது தமிழ் மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் எழுதினாலோ அல்லது ஜபித்துவந்தலோ அது இந்த உலகம் முழுவதற்கும் நன்மைகளை தரத் துவங்கும்;ஜபிப்பவர்களுக்கும் நன்மைகளை தரத் துவங்கும்;உலகத்திலேயே மந்திர மொழியாக இருப்பது தமிழ் மொழிதான்;தமிழ்மொழியும் சமஸ்க்ருத மொழியும் ஒரே சமயத்தில் சித்தர்களால் இந்த உலகத்திற்கு கொண்டுவரப்பட்டவை;


தமிழ் மொழியை முருகக் கடவுளிடம் இருந்து பூமிக்கு கொண்டு வந்து மனிதர்களிடையே பரப்பியவர் அகத்தியர் ஆவார்;அதே போல,சமஸ்க்ருதத்தை பூமியில் பரப்பியவர் பாணினி ஆவார்;
தமிழ் மந்திர மொழி;சமஸ்க்ருதம் மந்திரங்களைக் கொண்ட மொழி;


நீங்கள் தினமும் 1200 முறை ஸ்ரீராமஜெயம் என்று எழுதினாலோ அல்லது ஜபித்துவந்தாலோ அம்மந்திரம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்;கூடவே,இந்த பூமியில் மனித குலத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களின் தீய செயல்பாடுகளை முடக்கிவிடும்;


நீங்கள் தினமும் ஓம் நமச்சிவாய என்றோ அல்லது சிவாய நம என்றோ தினமும் எழுதினாலோ ஜபித்தாலோ அந்த மந்திர ஜபம் உங்கள் குடும்ப நலனை பாதுகாக்கும்;கூடவே இந்த பூமியில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் சூட்சுமப் பாதுகாப்பை வழங்கும்;


இதை இலுமுனாட்டிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை;1700 களில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்களில் இலுமுனாட்டிகளும் இருந்தார்கள்;அவர்களின் பலவிதமான ஆராய்ச்சிகளால் பாரத நாடுதான் உலகின் ஆன்மீக பொக்கிஷம் என்பதை உணர்ந்தார்கள்:தமது உலகத்தை ஆட்சி செய்யும் லட்சியத்திற்கு குறுக்காக வர இருப்பது இந்தியர்கள் தான் என்பதையும் அப்போதே உணர்ந்தார்கள்:1947 இல் நாம் சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூர் சரபோஜி மஹால் நூலகத்தில் இருந்து பெரும்பாலான ஓலைச்சுவடிகளை இரண்டு கப்பல்கள் மூலம் எடுத்துச் சென்றர்கள்;யாருடைய அனுமதியையும் பெறாமலேயே!

அதில் இந்த உலகத்தினை வசப்படுத்தும் கலைகள் பற்றிய படைப்புகள் அனைத்தும் இருந்தன;கிபி 2100,கிபி 2200,கிபி 2300 என்று கிபி 3000,கிபி 10000 வரை இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை ஜோதிட ரீதியாக கணித்து வைத்திருப்பதைக் கண்டு மிரண்டு போனார்கள்:


இலுமுனாட்டிகளைப் பற்றி சிலபல தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன;சில திரைப்படங்கள் வெளிவர இலுமுனாட்டிகளும் காரணமாக இருந்துள்ளார்கள்:

ஏழாம் அறிவு

போகர்(ஓருமையில் பெயர் வைத்துள்ளார்கள் பாவிகள்)

தனி ஒருவன்(இலுமுனாட்டிகளைப் பற்றிய அப்பட்டமான திரைப்படம்)

திருட்டுப்பயலே 2

இரும்புத் திரை

எதிர்வரும் காலத்தில் இந்துக்கள் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடையாமல் இருக்க இதுவரை செய்துள்ள துரோகங்கள்:

1.ஃப்ளூரைடு கலந்த பற்பசைகள்:

இதை தினமும் பயன்படுத்தி பல் துலக்கி வந்தால்,நமது புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரம் அழிந்துவிடும்;அப்படி அழிந்துவிட்டால் ஆன்மீகத்தில் எக்காலமும் முன்னேற முடியாது;

 உதாரணமாக,1990 இல் பிறந்த ஒரு குழந்தை 1 ஆண்டுக்கு மேல் ஃப்ளூரைடு கலந்த பற்பசையை பயன்படுத்தினால்,அதன் பீனியல் க்ளான்டு செயலிழந்துவிடும்;அதற்கு 2010 முதல் 2020 க்குள் திருமணம் நடைபெறும்;அதற்கு பிறக்கும் குழந்தைக்கும் பீனியல் க்ளான்டு இராது;பீனியல் கிளான்டுக்கு ஆன்மீகப் பெயர் தான் ஆக்ஞாசக்கரம்;


ஆக்ஞா சக்கரத்தினை தூண்டும் தியான முறையை மன வளக் கலைமன்றம் போதித்து வருகின்றது;ஆக்ஞா சக்கரத்தை இயங்க வைத்துவிட்டால்,அவர்களை யாராலும் மாந்திரீக அடிமையாக்கிட முடியாது;


தீர்வு:கசப்பு அல்லது துவர்ப்புச் சுவை கொண்ட பல்பொடியை மட்டும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும்;காதி பவன்களில் கிடைக்கும்;


2.இங்கிலீஷ் மீடியம் பள்ளிகள்:


10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே ஒரு குழந்தையால் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியும்;
இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கின்றது என்ற முட்டாள்த் தனமான கருத்து தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது;


10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு பொறுமை ,தன்னடக்கம்,சமுதாய விழாக்களின் முக்கியத்துவம்,சகிப்புத்தன்மை,புரிந்து கொள்ளும் திறன், செய்த தவற்றினை ஒப்புக் கொள்ளும் சுபாவம் இருக்கும்;


10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வரை இங்கிலீஷ் மீடியம் படித்தவர்கள் க்ரிமினல் புத்தியோடு இருப்பார்கள்;செய்த தவற்றினை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்;மான,அவமானத்திற்கு சிறிதும் அஞ்சமாட்டார்கள்;ஹாலிவுட் அல்லது கிரிக்கெட் மீது அடிமையாக இருப்பார்கள்:வெள்ளைக்கார நாடுகள் மீது மட்டுமே மரியாதை இருக்கும்;


தீர்வு;10 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படிக்க வைப்பது; சுமாராக படித்தாலும் போதும்;


3.மதுப்பழக்கம்:


8 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை (13 வயது முதல் 23 வயது வரை) விளையாட்டுக்கு என்று ஆரம்பிக்கும் மதுப் பழக்கத்தினால் இன்று 30 வயதுக்கு உட்பட்ட விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது;எந்த அரசுக்கும் இதுபற்றிக் கவலை இல்லை;


தீர்வு:தேசபக்தியும்,தெய்வ பக்தியும் நிரம்பிய அரசாங்கம் தமிழ்நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும்;தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தால் மட்டுமே இதற்கு தீர்வு உண்டு;


4.ஆன்மீகக் கல்வி இன்மை

இதனால்,பிரதோஷம்,சிவராத்திரி,ஏகாதசி பற்றிய அடிப்படை ஞானம் கூட தமிழ் நாட்டின் எட்டு கோடி தமிழர்களிடம் இல்லாமல் போய்விட்டது;இது மதமாற்றுபவர்களுக்கு சுலபமாகப் போய்விட்டது;


சைவ ஆதீனங்கள்,வைஷ்ணவ சங்கோஷ்டிகள் மற்றும் கார்பரேட் இந்து அமைப்புகள் உலகம் முழுவதும் கிளைகளை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கும் எண்ணம் உள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்களே ஒழிய,நமது பாரத நாட்டில் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கிட ஆர்வமில்லாமல் இருக்கின்றார்கள்:பெயரளவுக்கு தான் பாரத நாட்டில் ஆன்மீக நிகழ்ச்சிகளை கடமைக்கு என்று நடத்திவருகின்றார்கள்:


தீர்வு:அடுத்த 100 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் தெருவுக்கு ஒரு ஆன்மீக சத்சங்கம் அமைத்து இந்து மத விழிப்புணர்ச்சியை அரசியல் கண்ணோட்டத்துடன் உருவாக்க வேண்டும்;
பள்ளி,கல்லூரிகளில் குருகுலக் கல்வியை கொண்டு வரவேண்டும்;மத மாற்றத்தை தீவிரவாதமாக அறிவிக்கவேண்டும்;


5.பசுவின் பெருமைகளை மறக்கடித்தல்

கோவில்,விவசாயம்,பெண்,பசு இந்த நான்கு அடிப்படைகளை பேணி பராமரித்தாலே போதும்;இந்து தர்மம் மீண்டும் மகோன்னத நிலைக்கு வந்துவிடும்;இன்றைய டிவி,சினிமா,விளம்பரங்கள் பெரும்பாலானவைகள் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்படுபவை;இவைகள் அனைத்தும் கோவில்,பெண்,பசு,விவசாயம் போன்றவைகளை இழிவுபடுத்தும் விதமாகவே உருவாக்கிவருகின்றார்கள்;

1960 முதல் 1990 வரை நாத்திகப்பிரச்சாரமும்,ஹிந்தி எதிர்ப்புப்பிரச்சாரமும் செய்து இந்து மதத்தை பலவீனப்படுத்தினார்கள்;இப்படி பிரச்சாரம் செய்ய சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மாதா மாதம் பணம் கொடுத்து வந்தன;

1960 முதல் 1980 வரை தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு சீர்குலைந்துவிடும் என்று  மருத்துவர்களால் நாடு முழுக்க  வதந்தி பரப்பினார்கள்;
1970 முதல் 1990 வரை குழலூதும் கண்ணன், உக்கிரமான காளி போட்டோக்களை வீட்டில் வைத்திருக்க கூடாது என்று வதந்தி பரப்பினார்கள்;இவைகள் வீட்டில் இருந்தால் மாந்திரீகம் செயல்படாது;

1990 முதல் 2010 வரை இறந்தவீடுகளில் கர்மகாரியம் செய்யும் போது கழுத்தில் ருத்ராடம் அணிந்திருக்கக் கூடாது என்ற வதந்தியை பரப்பினார்கள்;

2000 முதல் 2040 வரை புதிய புதிய மகான்களுடைய வழிபாட்டை உருவாக்கி,சைவம்,வைஷ்ணவம் இரண்டையும் பலவீனமடையச் செய்யும் வேலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன;

தீர்வு:நாட்டுப் பசுக்களின் எண்ணிக்கையை அடுத்த 50 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்க வேண்டும்;இலுமுனாட்டிகள் உருவாக்கிய ஜெர்ஸிப்பசுவை பாரத நாட்டில் இருந்து மொத்தமாக அழித்துவிட வேண்டும்;

6.உணவே நஞ்சு,நஞ்சே உணவு;

 மைதாவில் செய்யப்படும் உணவுகள் நமது ஜீரண மண்டலத்தை நாசமாக்கக் கூடியவை;பிஸ்ஸா,பர்கர் போன்றவைகளை ஒரு முறை கூட சாப்பிடாமல் இருப்பது அவசியம்;

நமது பாரம்பரிய ஆயுர்வேதம் உண்ணும் உணவைப்பற்றி கூறியிருப்பது என்ன?
எது நாக்குக்கு சுவையில்லாமல் இருக்கின்றதோ அது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்;
எது நாக்குக்கு சுவையை தருகின்றதோ,அது உடல் நலனை சீரழித்துவிடும்;


எனவே,சிறுதானிய உணவுகளை சாப்பிடப் பழக வேண்டும்;இயற்கை நல்வாழ்வு முகாம்களுக்கு அடிக்கடி சென்று ஆரோக்கிய விழிப்புணர்ச்சியைப் பெற வேண்டும்;
டிவியில் வரும் விளம்பரங்களை நம்பவேண்டாம்;டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை ஒரு போதும் சாப்பிட வேண்டாம்;குளிர்பானங்களை உருவாக்கியதே நம்மை நோயாளியாக மாற்றிடவே;


7.டெக்னாலஜியை அளவோடு பயன்படுத்துதல்

இணையம் உலகம் முழுவதும் இருந்த 61,000 நாகரீகங்களை சிதைத்துவிட்டது;எல்லோரது மனதிலும் இருக்கும் காம உணர்ச்சிகளை பேராசை மிக்கதாக மாற்றிவிட்டது;இதனால்,தான் காமக் குற்றங்கள் பெருகிக் கொண்டே செல்கின்றன;

தீர்வு:உக்கிர பெண் தெய்வ வழிபாட்டினை எல்லோரும் பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும்;மஹாவராகி,அங்காளபரமேஸ்வரி,மஹா காளி ஜபம் தினமும் செய்து வருவதன் மூலமாக எல்லோரும் மன அமைதி பெறலாம்;


8.பாரத பாரம்பரியத்தின் பெருமைகளை இந்தியர்கள் அறியாத விதமாக செய்தல்/தடுத்தல்

மெக்காலே கல்வித்திட்டம்,ஆங்கில வழிக்கல்வி,வெளிநாட்டில் உயர் கல்வி போன்றவைகளால் நமது பாரம்பரியத்தை அறியாத தலைமுறைகளை நாம் உருவாக்கி வருகின்றோம்;இதை அடியோடு மாற்றிட, உங்கள் குழந்தைகளை 13 வயது முதல் 23 வயதுவரை பண்புப் பயிற்சி முகாம்களுக்கு ஆண்டு தோறும் அனுப்பி வைக்க வேண்டும்;

அதுதான் நமது பாரம்பரியத்தின் பெருமைகளை உணர வைக்கும்;
இதைச் செய்யாத பட்சத்தில் லவ் ஜிகாத்,மதமாற்றம்,திடீர் தற்கொலை போன்றவைகளில் ஒன்றில் சிக்கி சின்னாபின்னமாகும் வாய்ப்புக்களே அதிகம்;


$ நிரந்தரத் தீர்வு:

ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரம் மஹாகால பைரவ ஜபம்(ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ)

அல்லது

மஹாவராஹி ஜபம்(ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ)

அல்லது

லக்ஷ்மி நரசிம்ம ஜபம் செய்து வர வேண்டும்;இப்படி மூன்று ஆண்டுகள் ஜபித்து வந்தாலே நிம்மதியான வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்கள் அடைந்துவிடுவார்கள்:


இந்த மூன்று ஆண்டுகள் மட்டும் மது,அசைவம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;

தர்மோ ரக்ஷித ரக்ஷிதஹ


தர்மத்தை நாம் காத்தால்,தர்மம் நம்மை காக்கும்;