Thursday, April 27, 2017

சிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு


விடிந்தும், விடியாத அந்த அதிகாலை வேளையிலே ஒரு சின்னஞ்சிறிய கடைமுன் கூட்டம் நிரம்பிவழிகிறது. கூட்டத்திற்கு காரணம் அங்கு வழங்கப்படும் இயற்கை உணவுகள்தான்.


சிவகாசி தபால்நிலையம் பக்கத்தில் உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தில் நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை ரசம், கத்தாழை சூப், அடுப்பில் வைக்காமல் உருவாக்கப்பட்ட பேரீச்சை அவல், பலவித பயறுவகைகள், நெல்லிக்காய் சாலட், வெந்தயக்களி, சின்ன வெங்காயம் போட்ட கம்மங்கூழ் என்று எப்போதோ, எங்கோயோ கேட்ட பழமையான பராம்பரியமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார் கடையின் உரிமையாளரும் இயற்கை ஆர்வலருமான சிவகாசி மாறன்ஜி.

நமது பழமையான உணவு என்பதை மறந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு நோய் நொடிகள், எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்நாளும் தொல்லை இல்லை என்று சொல்லும் மாறன்ஜி கடையில் வழங்கப்படும் பொருட்களின் விலையோ இரண்டு ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்குள் அடங்கிவிடும். ஒரு வரியில் சொல்வதானால் விலை குறைவு ஆரோக்கியம் அதிகம்.


நிலவேம்பு கஷாயம் குடித்தால் போதும் டெங்கு காய்ச்சல் பக்கத்திலேயே வராது, வந்தாலும் பயந்து ஒடிவிடும், இப்படி இங்குள்ள ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பின்னணியில் நிறைய ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன.

அடுப்பில் வைக்காமல் நூற்றுக்கணக்கான அறுசுவை உணவுகளை தயார் செய்யமுடியும், அதற்கு பெண்கள் முன்வர வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அடுப்பு பற்ற வைக்காமல் சமைத்தாலே நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவோ பலன்கள் உண்டு என்று சொல்லும் மாறன் இயற்கை உணவை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நிறையவே உழைத்து வருகிறார்.


இதை இளைஞர்கள் கையில் சேர்த்துவிட்டால் அது அற்புதமான ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுத்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இது தொடர்பாக பள்ளி, கல்லூரியில் பொருட்காட்சி நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார். 



இயற்கை உணவு பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அவரது போன் எண்:9367421787.

சுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திருக்கோவிலூர்!!!


சுக்கிர தோஷங்களை முழுமையாக நிவர்த்தி செய்யும் ஸ்தலம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோவில்!!!

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே வாகன வசதிகள்,புத்தம் புது ஆடை ஆபரணங்கள்,சுகமான திருமண வாழ்க்கை,சரசக்கலை  போன்றவை எந்தக் குறைவின்றியும் அமையும்.ஆனால்,கலியுகமான நாம் வாழும் காலத்தில் அப்படி எல்லோருக்கும் அமைந்திருக்கிறதா?


ஜோதிட விதிகளின் படி ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சமாகக் கூடாது;நீசமாகக்கூடாது;மறையக் கூடாது;சனி,செவ்வாய்,ராகு,கேது,சூரியன் போன்ற கிரகங்களோடு சேரக்கூடாது.அசுர குருவாகிய சுக்கிரன்,தேவகுருவாகிய வியாழன் என்ற குருவுடனும் சேராமல் இருக்க வேண்டும்.இன்னும் சில ஜோதிடவிதிகளும் உண்டு.


சுக்கிரன் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் உச்சமாகிறார்;அதே சுக்கிரன் கன்னி ராசியில் அஸ்தத்தில் நீசமாகிறார்.லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவரது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சுகக் குறைவு இருக்கவே செய்யும்.இப்படிப்பட்ட கிரகநிலையுடன் இருப்பவர்கள் படித்தபடிப்புக்கு ஏற்றாற்போல  நாகரீகமாக ஆடை அணியமாட்டார்.காதல் அரசியலில் சாணக்கியத்தனத்தோடு இருக்க மாட்டார்.ரொமான்ஸ் கலையில் இவர் எப்போதும் கத்துக்குட்டிதான்.இவரை காதலிக்க விரும்பும் எதிர்பாலினத்தின் ‘சிக்னல்’களை இவரால் புரிந்துகொள்ளவே முடியாது.(ஆனால்,தனது வாழ்க்கைத் துணையை தமது அன்புக்குப் பாத்திரமாக வைத்திருக்க வேண்டுமே?)

ஒருவரது பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்துக்கு 3,6,8,12 ஆம் இடங்களில் இருந்தால் அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களுக்கான பலன்களும் அடுத்த பிறவியில் தான் அனுபவிப்பார்;இதைப் புரிந்து கொண்டு ஏராளமான புண்ணியக் காரியங்களைச் செய்வோரும் உண்டு.அப்படிச் செய்வதன் மூலமாக அவரது குழந்தைகள் சகல சம்பத்துக்களுடன் வாழ்வார்கள்.அதே சமயம்,ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,2,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் அத்தனை புண்ணியங்களையும் இந்த ஜன்மத்திலேயே அனுபவிப்பார்.(பாவக்கிரகங்கள் சேராமலும்,பார்க்காமலும் இருந்தால் முழுமையாக அனுபவிக்கும் யோகங்கள் ஏற்படும்)

நூறு பேர்களின் பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் சராசரியாக   ஒன்பது பேர்களுக்கு மட்டுமே சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறது.சுக்கிரன் உடன் பாவக்கிரகங்கள் சேர்வதாலும்,அப்படிச் சேர்ந்து அவைகளின் திசாபுக்தி வருவதாலுமே நாட்டில் காமம் சார்ந்த வக்கிர சம்பவங்கள் நிகழ்கின்றன.அவர்களிலும் பாதிபேர்களுக்கு வேறுவிதமான தோஷங்கள் இருந்து,சுக்கிரனை செயலிழந்து போக வைக்கின்றன.அந்த தோஷங்களை நீக்கியப்பின்னரே,சுகமான வாழ்க்கை அமைகின்றது.நாத்திகம்,கம்யூனிஸம், பத்திரிகைப் பிரச்சாரங்களால் இந்து தர்மம் பற்றிய பெருமைகள் மறைக்கப்பட்டுவிட்டன;அல்லது அழிக்கப்பட்டுவிட்டன;எனவே, இவைகளை நம்புவோர் எண்ணிக்கை  நமது தமிழ்நாட்டில் மிகக் குறைவு.

சுக்கிரனது பலத்தை தேவையான அளவுக்கு அதிகரிக்க பல விதமான கோவில்கள் இருக்கின்றன.பல ஜோதிட வார இதழ்களிலும்,புத்தகங்களிலும் இது தொடர்பாக விளக்கங்களும்,புராணரீதியாக காரணங்களும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.அந்தக் கோவில்களின் சக்தியை விடவும்,முழுமையான சக்தி அட்டவீரட்ட ஸ்தலமாகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் நிரம்பியிருக்கிறது.ஏனெனில்,சுக்கிரபகவான் புனர் ஜன்மம் எடுத்தது இந்த திருக்கோவிலூரில்தான்! தாம் மறுவாழ்வு பெற்ற இந்த கோவிலில் தம்மை வழிபடுபவர்களுக்கு சகலவிதமான சுக்கிரதோஷங்களையும் நீக்கி,சுகம் நிறைந்த வாழ்க்கையை அளித்துவருகிறார்.

ஆட்டோ ஓட்டுபவர்கள்,வாடகை கார்கள்/வேன்கள் வைத்து தொழில் செய்பவர்கள்,உணவகம் நடத்துபவர்கள்,இனிப்புப் பதார்த்தங்கள் தயாரிப்போர்,இனிப்புக்கடைகள் வைத்திருப்போர்,பெண்கள் கல்வியகங்கள் வைத்திருப்போர்,கரும்புத்  தோட்டங்கள் வைத்திருப்போர்,சர்க்கரை ஆலை நடத்துவோர்,ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் விளைவிப்போர்,ஃபேன்ஸி ஸ்டோர்கள் நடத்துபவர்கள்,அழகு நிலையம் நடத்துபவர்கள்,அழகுக்கலைப் பயிற்சி மையங்கள் நடத்துபவர்களுக்காக பின்வரும் வழிபாட்டுமுறையை நமது ஆன்மீக குரு  வெளிப்படுத்தியிருக்கிறார்.


இந்த வழிபாட்டை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் வரை மட்டும் பின்பற்றுவதன் மூலமாக மேற்கூறிய தொழில் அல்லது அது தொடர்பான தொழில்களில் அனைத்து தடைகளும் நீங்கி,மகத்தான வளர்ச்சியை எட்டுவார்கள் என்பது சர்வநிச்சயம்.இந்த ஆறு வெள்ளிக்கிழமைகளில் கடைசி அல்லது முதல் வெள்ளிக்கிழமை மட்டும் விழுப்புரம் அருகில் இருக்கும் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்று பின்வரும் பொருட்களால் அங்கே இருக்கும் சுக்கிர பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அப்படி அபிஷேகம் செய்தபின்னர்,அந்த அபிஷேகத் தண்ணீர்க் கலவையை நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.அதில்,நாம் குளிக்க வேண்டும். ஆறு வெள்ளிக்கிழமைகளுக்கு மேல் செய்யக் கூடாது.


அதே சமயம்,கடைசி வெள்ளிக்கிழமையன்று இங்கே வழிபாடு செய்யும்போது,மூலவராகிய திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரருக்கும் அபிஷேகம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.(வசதியுள்ளவர்கள் அதே நாளில் இங்கே இருக்கும் ஸ்ரீகால பைரவருக்கும் தனியாக ஒரு அபிஷேகம் செய்யலாம்.இந்த கால பைரவரையும்,இந்த வீரட்டேஸ்வரரையும் கருவூர் சித்தரின் வழிகாட்டுதலின் படி ராஜராஜசோழ மன்னன் தொடர்ந்து வழிபட்டார்;அப்படி வழிபட்டதால்,சோழ சம்ராஜ்ஜியம் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விரிவடைந்தது;எவ்வ்வ்வ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியமாகத் தெரியுமா? வடக்கே சைபீரியாதான் எல்லை; தெற்கே அண்டார்டிக்கா எல்லை;மேற்கே ஆப்ரிக்கக்கண்டமும்,கிழக்கே நியூஸிலாந்தும் எல்லையாக மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்தது;இன்றும்,ஆஸ்திரேலியாவின் மேற்கு வனப்பகுதியில் தமிழ்ப்பேசும் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்;இவர்கள் ராஜராஜசோழ மன்னன் காலத்தில் ஆஸ்திரேலியாவை ஆள்வதற்காக நமது தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப் பட்டவர்கள்!!!)
மல்லிகைப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை மற்றும் போதுமான மல்லிகை உதிரிப்பூக்கள்,
விபூதி,மாப்பொடி,பால்,பன்னீர் இவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் சுக்கிர பகவானுக்கு நாம் வாங்கி வந்த மல்லிகைப் பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலையையும்,வெள்ளைப்பட்டுத் துண்டினையும் சார்த்த வேண்டும்.யாருக்கு சுக்கிர தோஷம் நீங்க வேண்டுமோ,அவர்கள் பெயர்,பிறந்த நட்சத்திரம் சொல்லி, மல்லிகை உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.இதன் மூலமாக சுக்கிரனால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் தீரும்.

சுக்கிரன் கன்னிராசியில் இருக்கப்பிறந்து,சுக்கிர திசை நடப்பில் இருப்பவர்களும்,சுக்கிர திசை இனிமேல் வர இருப்பவர்களும் இதே வழிபாட்டுமுறையை ஆறு பவுர்ணமி நாட்களுக்கு பின்பற்றிட சுக்கிரனது நீசத்தன்மை முழுமையாக நீங்கிவிடும்.
(படத்தில் இருப்பது திருக்கோவிலூர் இருக்கும் ஸ்ரீகாலபைரவர்!!! அட்ட வீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம் இந்த திருக்கோவிலூர்!!!)

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியார்!!!




சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, ஐந்து சகோதரர்கள்,தமது பாசம் மிக்க தங்கை நாச்சியாரை  ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்;திருமணம் செய்து வைத்த சில மாதங்களில் தனது சகோதரர்களை சந்திக்க,தனியே தனது கணவரது கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்கிறார்.வழியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சில கள்வர்கள் இந்த நாச்சியாரை தவறான எண்ணத்துடன் துரத்தியுள்ளனர்.
வெகுதூரம் ஓடி வந்த நாச்சியார்,திடீரென ஆவேசமாகி,நான் பத்தினி என்பது உண்மையானால்,பூமித்தாயே என்னை ஏற்றுக்கொள் என்று ஆக்ரோஷத்துடன் கத்த,உடனே பூமி பிளந்து அதற்குள் நாச்சியார் புதைந்துவிட்டார்.துரத்திவந்த கள்வர்கள் ஓடிப்போனார்கள்.

ஒரு நூற்றாண்டுக்குப்பின்னர்,அந்த இடமானது நடைபாதையாக மாறியது;ஒரு இளம்பெண் தமது பெற்றோருடன் வந்துகொண்டிருக்கும்போது,இந்த  இடத்தை நெருங்கியதும்,ஆக்ரோஷத்துடன் ஆட ஆரம்பித்திருக்கிறாள்.தான் இங்கே இருப்பதாகவும்,இனி இந்த கன்னியுடன் இருந்து அருள்வாக்கு சொல்ல இருப்பதாகவும் சொல்ல அன்றிலிருந்து இந்த இடம் கோவிலாகிவிட்டது.
அந்த கன்னிப்பெண் சுமார் 72 வருடங்களுக்கு அருள்வாக்கு சொல்ல,அந்த கன்னிப்ப்பெண்ணின் வாழ்க்கைக்குப் பிறகு,வேறு ஒரு பெண்மணி அடுத்த 30 வருடங்களுக்கு உத்தமி நாச்சியாரின் அருளால் பிறருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக,அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள்.அவளுக்குப்பின்னர்,ஒரு  இஸ்லாமியர் ஒருவர் சுமார் 45 வருடங்களாக அருள்வாக்கு சொல்லியிருக்கிறாள்.தற்போது ஒரு வயதான பெண்மணி அருள்வாக்கு சொல்லி வருகிறார்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்,(சில நேரங்களில் மாதாந்திர வெள்ளிக்கிழமைகள்)மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் அருள்வாக்கு  சொல்லிவருகிறாள்.
இந்த உத்தமி நாச்சியார்,ஸ்ரீவில்லிபுத்தூர் தபால்  அலுவலகத்திலிருந்து தாலுகா அலுவலகம்  செல்லும் வழியில்
அமைந்திருக்கிறது.அதிகமாக பிரபலமாகாத இந்தக்  கோவிலுக்கு மனம் வருந்தி நேர்மையாக வாழ விரும்புவோர் மட்டுமே செல்லமுடியும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை ஆகும்.ஒவ்வொரு வருடமும் இந்த உத்தமி நாச்சியாரின் சிலையானது பூமிக்கு மேலே உயர்ந்துகொண்டே வருகிறது என்பது ஒரு அதிசயம் ஆகும். 
இதே போல சில  உத்தமிநாச்சியார்களின் கோவில்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன.
எங்கள் ஊரில் இருக்கும் எனது அன்னை உத்தமி நாச்சியாரின் பெருமையை வெளிப்படுத்துவதில் யாம் பெருமை கொள்கிறோம்.

நாம் ஒவ்வொருவருமே தேசபக்தியும்,தெய்வபக்தியும் பெற வேண்டும்!!! ஏன் தெரியுமா?






தேச பக்தி இல்லாத தெய்வபக்தியால் தான் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டின் நிலப்பரப்பை இழந்தோம்;இந்த கருத்தின் அடிப்படையில் சுமார் 100 பி.எச்.டி.ஆய்வுப்பட்டம் முடிக்க முடியும்.அந்த அளவுக்கு நமது பாரத நாட்டின் வரலாறு பரந்துவிரிந்து இருக்கிறது; அதே சமயம் பல நாட்டு உளவுத்துறைகளின் நயவஞ்சகத்தினால் நமது இந்து தர்மத்தின் பெருமைகளும்,மரபுகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கி.பி.1000 வரையிலும் இந்துதர்மம் இன்றைய ஆசியக் கண்டம் முழுவதும் மற்றும் ஆஸ்திரேலியக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது;இன்றும் இந்தியாவைத்  தவிர ஆசியா மற்றும் ஆஸ்திரேலியக் கண்டத்துநாடுகளில் இதற்கான இந்துப்பண்பாட்டு மிச்ச சொச்சங்கள் இருக்கின்றன.இதில் பிரபலமான உதாரணமான கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் ஆலயத்தைச் சொல்லலாம்;ஒரேஒரு கேமிராவிற்குள் இந்த முழு ஆலயத்தின் முகப்பையும் இன்று கூட போட்டோ எடுக்க முடியவில்லையாம்;தவிர,தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்குப்போயிருக்கிறீர்களா? அது பிரம்மாண்டமான சிவாலயம் ஆகும்.சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலுக்குப் போயிருந்தீர்கள் எனில்,அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்தே அசந்து போய்விடுவீர்கள்.சிதம்பரம் நடராஜர் கோவிலின் வெளிப்பிரகாரத்தை ஒரே ஒரு முறை  நீங்கள் சுற்றி வருவதற்குள்ளாக உங்களது கால்கள் வலித்து,ஓரிருமுறையாவது நீங்கள் உட்கார்ந்து தான் சுற்றை முடிக்க முடியும்.

இலங்கைக்கும் தெற்கே இரண்டாயிரம் சதுர கி.மீ.தூரத்துக்கு குமரிக்கண்டம் இருந்திருக்கிறது.அங்கே  இன்றைய சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலை விட பத்து மடங்கு அதாவது சுமாராக ஐந்து சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு பிரம்ம்மாண்டமான சிவாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்று சில தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.அவை இன்றும் கடலுக்குள் மூழ்கியிருக்கின்றன.யாராவது வான் வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தால் உங்களது செயற்கைக்கோள்கள் மூலமாக போட்டோ எடுத்து அனுப்புங்கள்;அப்போது தெரியும்!!?


அதே அளவுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீகால பைரவரின் கோவில்களும் இருந்திருக்கின்றன;குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாக் கண்டம் வடக்கே இன்றைய இலங்கை முதல் தெற்கே அண்டார்டிகா வரையிலும் கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே தென் ஆப்ரிக்கா வரையிலும் பரவியிருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் திருவீழிசை என்னும் ஊரில் ஒரு பாறைவடிப்பு இருக்கிறது.என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் நோட்டுப்பக்கத்தின் தடிமன் எவ்வளவு இருக்கும்? இரண்டு மில்லி மீட்டர் இருக்குமா? அந்த அளவுக்கு பாறையை இளக்கி காகிதத் தடிமனுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.இன்று இருக்கும் எம்.டெக்.சிவில் என் ஜினியர்கள் யாராவது ஒரே ஒருவரால் இதே போல காகிதத் தடிமனுக்கு ஒரு பாறையை செதுக்க முடியுமா?

இன்றைய கர்நாடக மாநிலத்தில் பேலூர் ஹளபேடு சிற்பங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறோம்;அவையெல்லாம் எப்படி உலகப்புகழ் வாய்ந்தவை என்பதை பாடத்திட்டத்தில் சேர்க்கவே இல்லை;அங்கே ஆயிரம் கால் மண்டபம் ஒன்றுஇருக்கிறது.ஒவ்வொரு தூணின் அடிப்பகுதியும் தரையைத் தொடாமல் இரண்டு செண்டிமீட்டர்கள் மேலே நிற்கின்றன;அதே போல அந்தத் தூணின் மேல்பகுதியும் மேலே இருக்கும் விதானம் அல்லது தளத்தினைத் தொடாமல் (கீழே இருப்பதுபோலவே) இரண்டு செண்டிமீட்டர்கள் இடைவெளிவிட்டு நிற்கின்றன;இந்த இரண்டு செண்டி மீட்டர்கள் இடைவெளியில் ஒரு நோட்டின் காகிதத்தை அந்த தூணுக்கு அடியில் விட்டு எடுக்கலாம்;

நமது பாட்டானார்கள் அனைவருமே 400 வருட வல்லரசாகத் திகழும் அமெரிக்கனைவிடவும்,நமக்குச் சமமாக பொருளாதார வல்லரசாக இருக்கும் நம்ம பங்காளி சீனர்களை விடவும் மிகச் சிறந்த அறிவாளிகளே!அவர்கள் செய்திருக்கும் சாதனைகளை நாம் பாதுகாத்து,நமது அடுத்த தலைமுறைக்குப்போதித்தாலே போதும்;அவர்களின் சாதனையை நாம் முறியடித்ததாக அர்த்தம்.


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன். பெ.



இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம்  இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டிலிருந்து வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே     (திருமந்திரம்)

மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்  (திருவாசகம்)
என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும் ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம்  351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன்  என்று பொருள்.சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும் சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில் பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும் அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ் ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில் இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.



பாரதப்பெயர்கள் எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம் டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம் தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே  முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்.(பக்கங்கள் 354,355,356)



நாம் செய்ய வேண்டிய கடமை என்னதெரியுமா? நமது குழந்தைகளின் ஏழு வயதுக்குள் அடிக்கடி அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;குடும்பத்தோடு அழைத்துச் சென்று நமக்குத் தெரிந்த அந்த கோவில் வரலாறு,அந்த தெய்வத்தின் பெருமைகள்,வழிபாட்டு முறைகளைச் சொல்ல வேண்டும்;

வீட்டில் நாம் தினமும் சில நிமிடங்களாவது கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்;
பள்ளிப்படிப்பை முடிக்கும்போது,நமது குழந்தைகளுக்கு ஸ்ரீஇராமக்ருஷ்ண மிஷன்,சின்மயா மிஷன்,விவேகானந்த கேந்திரம்,ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம்,ராஷ்டீரிய சேவிகா சமிதி போன்ற ஆன்மீக மற்றும் தேசபக்த அமைப்புகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



பத்தாம் வகுப்பு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறைகள்,பனிரெண்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறை,டிகிரி அல்லது டிப்ளமோ செமஸ்டர் விடுமுறைகளில் அனுப்பி வைப்பதுடன் முடிந்தால் நாம் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது எதிர்கால சந்ததிக்கும் நமது இந்து தர்மத்தின் பெருமைகள் சென்றடையும்.

இதைப் பற்றி அறிந்துகொள்ளவே நூலகங்கள்,வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிடர்கள்,மந்திரவாதிகள்,          ஆன்மீகப்பேச்சாளர்கள்,ஜோதிட எழுத்தாளர்கள்,நாவல் எழுத்தாளர்கள் போன்றவர்களை சந்திக்க ஆரம்பித்தேன்;சில நேரங்களில் அரசியல்வாதிகளையும் சந்தித்திருக்கிறேன்.நான் கேட்கும் கேள்விகளுக்கு பொருத்தமில்லாத ஆனால் தந்திரமான பதில்களைத் தான் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் தந்தார்கள்;மற்றவர்களோ எனது நோக்கத்தை புரிந்து கொண்டபின்னரே முறையான அதேசமயம்  முழுமையான பதில்களையும்,விளக்கங்களையும் தந்தார்கள்.

நிறையப்படித்தால் தான் கொஞ்சம் எழுத முடியும் என்பது எழுத்தாளர்களுக்கான அரிச்சுவடி ஆகும்;எனவே,நிறைய்ய்ய்ய படிக்கத் துவங்கினேன்;



தெய்வபக்தி இல்லாத தேசபக்தி நமது நாட்டின் அண்டை நாடுகளுக்கும்,நம்மோடு பழகி நமது செல்வ வளம்,மனித வளம்,ஆற்றல் வளங்களை கைப்பற்றும் நாடுகளுக்கும் இருக்கின்றன.அதனால் தான் நாம் நவீன கொத்தடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்;இனியும் நாம் நம்முடைய இந்துதர்மத்தின் பெருமைகளை நமது அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டால்,இந்த நூற்றாண்டு முடிவதற்குள் நமது நாட்டின் நிலை மட்டுமல்ல;நமது அடுத்த தலைமுறையின் சூழ்நிலையும் அதோகதிதான்!!!
இந்த இரண்டு கருத்தின் அடிப்படையிலேயே உலக அரசியலே செயல்பட்டுவருகிறது.

நமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு!!!




“அனுபவத்தால் பராமரிக்கப்படும் அறிவே வாழ்க்கைச் சூழலில் வெற்றி பெறுகிறது” என்பது தத்துவ ஞானிகளின் பகிர்தலாகும்.அத்தகைய அறிவு தெளிவான சிந்தனையையும்,தன்னம்பிக்கையையும் தர வல்லது;மற்றும் (நமது)தேவையற்ற அச்சம்,(தினசரி)கவலைகளையும் களைய வல்லது"

மிகவும் அபாயகரமான ‘வலை’ க ‘வலை’யே..!ஏழையாக இருந்தாலும் சரி,செல்வந்தராக இருந்தாலும் சரி. . . அனைவருமே சிக்குகிற வலை க வலையாகும்.வளரும் நாடான இந்தியாவில் மட்டுமல்ல;அமெரிக்கா போன்ற பெரும் பணக்காரநாடுகள் என உலகம் முழுவதுமே கவலைப்படுபவர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.அதன் முடிவில்
கவலைகளில் 40% கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை;
30% கவலைகள் கடந்த காலம் பற்றியது;
12% கவலைகள்  பிறர் பற்றியது;
10% கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை;அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமல் இருக்கலாம்;மீதி இறுதியாக இருக்கும்
8% கவலைகள் மட்டுமே உண்மைக் கவலைகள் என கண்டறியப்பட்டுள்ளது.

தடைகளும்,தோல்விகளும் தன்னுள் ஒரு வெற்றியையும்,நல்லதொரு வாய்ப்பையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதே ஞானிகளின் கருத்தாகும்.தோல்வி என்கின்ற பின்னடைவு நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய முன் அறிவிப்பு என்று சொல்லலாம்.பொருட்செல்வத்தை இழப்பது பேரிழப்பு அல்ல;உடல் நலம் சீர்கெடுவதை இழப்பு என்று கருதலாம்.ஆனால்,நம்பிக்கையை இழப்பது மட்டுமே அனைத்தையும் இழந்ததற்குச் சமமாகும். . !
தடைகளை வெற்றிகரமாய் எதிர்கொள்வது எப்படி? என்பதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப்பொருளைச் சுமந்து கொண்டு சென்றது.தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென நின்றுவிட்டது.மேலே செல்ல முடியாமல் தவித்தது.சிறிது நேரம் கழித்து,தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல்(பிளவின் மீது) வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்து பின்பு மீண்டும் அந்த இரையைக் கவ்விக்கொண்டு சென்றது.இதைக் கவனித்த அந்த எறும்பு ஆராய்ச்சி நிபுணர்,எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என்று எழுதியிருக்கிறார்.

துன்பம் ஏற்பட்டால்,அத்துன்பம் ஏற்படுத்துகின்ற பள்ளத்தையே அடித்தளமாக வைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதே எறும்பிடம் இருந்து மனிதர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.
ஒரு மிகச் சிறிய உயிரான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் சமாளித்து அதனை நாம் கடந்து ஆக்கபூர்வமான மாற்றங்களுடன் வெற்றி பெற இயலும். .!பல சிறிய செயல்கள்- முயற்சிகள் ஒன்றிணைகின்ற பொழுதுதான் ஓர் பெரும் மாற்றம் என்பதே நிகழும்.

சிறுவன் ஒருவன் கடல் அலைகளால் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான நட்சத்திரமீன்களை ஒவ்வொன்றாய் பிடித்துக் கடலில் விட்டுக் கொண்டிருந்தான்.அதிலும் சில மீன்கள் அலைகளால் மீண்டும் கரையில் ஒதுங்கின.அவனும் சளைக்காமல் அப்பணியை தொடர்ந்து செய்துகொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் ‘ஏன் இந்த வீண்வேலை? எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் உன்னால் காப்பாற்ற முடியாது.இதனால் ஒரு பயனும் கிடையாது’என்றார்.

“இதன் பயன் என்ன என்பதை  உயிர் தப்பி கடலுக்குள் சென்ற மீன்களைக் கேளுங்கள்”என்று அந்தச் சிறுவன் சொன்னான்.இத்தகைய செம்மையான மனதினைப் பெறுவதற்காகத்  தான் தினந்தோறும் “திருக்கோவில் வழிபாடு அவசியம்” என ரத்தினச் சுருக்கமாய் ஓரு பெரும் மகத்துவத்தை ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர்.

பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி(காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது.இது ஆத்ம பலத்தினை தரவல்லது.இயன்றளவு கோவில்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் வெகுவாய் பல அடைந்து- தற்போது மாசடைந்து வரும் இயற்கைச் சூழலிலிருந்து மிகவும் எளிதாய் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். ALZEIMER என்று சொல்லப்படும் ஞாபக மறதி நோய் பிடியிலிருந்து(அதிகமாய் செல்போன் பயன்படுத்துவதன் மூலமும் ஏற்படும்) வெகு சுலபமாய் தப்பிவிடலாம்.நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கிக் கொள்வதற்கும்,
எதையும் எதிர்கொள்ளும் வல்லமையான எண்ணங்கள் பெறுவதற்கும்,உறுதியான மனம்,உடல் தனை பெறுவதற்கும் திருக்கோவில் வழிபாடே ஒரே தீர்வாகும்.மூலஸ்தானத்தில் தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தகடுகளும் அபரிதமான சக்தியை தந்துகொண்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு கால பூஜையின் போதும் திரை விலக்கி ஆரத்தி நிகழும் தருணத்தில் எல்லையில்லா சக்தி மூலஸ்தானத்திலிருந்து வெளிவரும்.அதனால் தான் மூலஸ்தானத்தில் ஒரு பக்கம் மட்டுமே திறந்தபடி உள்ளது.(அதன் வாயிலாய் அரும்பெரும் சக்தி வெளிப்படுகின்றது).மேலும்-கொடி மரமும் கோபுரக்கலசமும்  அளப்பரிய (ENERGY)காந்த சக்தியை கட்டுக்கோப்பாய் (CIRCULATE)பரிமாறிக்கொண்டிருக்கிறது.எனவே தான் பிரசாதத்தினை உண்பதும் அபரிதமான நன்மைகளைத் தருகிறது.தந்திடும் என்பது திண்ணம்..! அத்தகைய பழமையான திருக்கோவில்களில்/ஜீவசமாதிகளில் அன்னதானம் செய்வதும்,உண்பதும் பெரும் பரிகாரம் என்பதை முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

“நீ சுமக்கின்ற இறைநம்பிக்கை,நீ கீழே விழ நேரிட்டால் உன்னைச் சுமக்கும்” என்பதன் உள்ளார்த்தமும் இதுதான்.இறை சக்தி என்பதும்,பிரபஞ்ச சக்தி என்பதும் ஒன்றே..!!! பிரார்த்தனையே ஒருவகை தியானம் தான்.அத்தகைய தியானமே மனதிற்கு ஓய்வு தரவல்லது.

நமது மனமானது இருவகைப்படும்.ஒன்று மேல் மனம்.இன்னொன்று ஆழ்மனம்.(மனதின் செயல்பாடுகளை நாம் அறிந்து கொண்டால்,நமது மனதையே நாம் கட்டுப்படுத்தலாம்;மனதின் செயல்பாடுகளை விவரிக்கும் நூலே ஆழ்மனதின் சக்திகள்!!!.இதை ஒரு வருடத்திற்கு திரும்பத் திரும்ப வாசிக்கும்போது நமது மனம் எப்படிப்பட்டது? அது எப்படி இயங்குகிறது? அதை கட்டுப்படுத்த நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை நாமே உணரமுடியும்)நமது மேல் மனதில் விநாடிக்கு இரண்டாயிரம் எண்ணங்களும்,நம்மையறியாமல் நமது ஆழ்மனதில் ஆழ்மனதில்(அடிமனதில்) விநாடிக்கு(குறைந்த பட்சம்) நான்கு கோடி எண்ணங்களும் பரிசீலிக்கப்படுகிறது என்று மனம் பற்றிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இதன் ‘மதிப்பை’ உணர்ந்து கொள்வது நமது  கடமை.அதனை நமக்குப் புரிய வைத்து உணர வைப்பதே ஆன்மீகப் பெரியவர்களின் நோக்கமும் ஆகும்.(சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்,ஜேம்ஸ் ஆலன் எழுதி தமிழில் வெளி வந்திருக்கும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்,ஷிவ் கெரா எழுதி தமிழில் மெக் க்ரோஹில் வெளியிட்டிருக்கும் உங்களால் வெல்ல முடியும்)

இந்த மனதத்துவக் கட்டுரையை எழுதியவர்:டாக்டர்.பி.எஸ்.பி.விஜய்பாலா அவர்கள்,யுனிவர்சல் ரிசர்ச் அகாடமி,சென்னை.

தகவல் ஆதாரம்:ஜோதிடர்களுக்கான ஜோதிட மாத இதழ்: பி.எஸ்.பி.யின் விடியல்,பக்கங்கள் 5,6.வெளியீடு:ஐப்பசி 2012 & 25.10.12 

ஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை?



பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,நமது பாட்டானார்களுக்கும் பாட்டனார்களுக்கும் பாட்டனார்கள் ஜோதிடத்திலும்,ஆன்மீகத்திலும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து,அவைகளை ஓலைச்சுவடிகளாக எழுதிக் குவித்துள்ளனர்;அந்த முன்னோர்களின் படைப்புகளில் சிலவற்றின் பெயர்களைக் காண்போம்:-ஜோதிட ராமாயணம்,திருக்குறள்,திருமந்திரம்,நெடுநல் வாடை,சீவகசிந்தாமணி,சிலப்பதிகாரம்,தொல்காப்பியம்,புலிப்பாணி300,காகபுஜண்டரின் பாடல்கள்,கோரக்கரின் ஜோதிடத் திரட்டு,தேவாரம்,திருவாசகம்,கருவூரார் பலத்திரட்டு;

இந்த ஓலைச்  சுவடிகளில் சுமார் எண்பது சதவீதம் தற்போது ஜர்மனியிலும்,அமெரிக்காவிலும்,இங்கிலாந்திலும் ஆராய்ச்சி செய்யப்பட்டு அவர்களின் பாடத்திட்டங்களிலும்,ஹாலிவுட் சினிமாக்களிலும் சேர்க்கப்பட்டு வருகின்றன.டாம்ப் ரைடர்,மம்மி ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களே இதற்கு ஆதாரங்கள் ஆகும்.ஆனால்,நமது மதச்சார்பின்மை இந்தியாவிலோ இவைகளை கேலியும் கிண்டலும் செய்யும் போக்கு உருவாகிவிட்டது;


விநாயகப்பெருமானை வழிபாடு செய்ய ஏற்ற நாள்:வாரத்தின் எந்த நாளாக இருந்தாலும் சிறப்பே! ஏற்ற நேரம் எந்த நேரமாக இருந்தாலும் ஓ/கே!!! ஏனெனில்,கடவுள்களில் மிக மிக மிக எளியவர் இவர் மட்டுமே!!! இவரை விடவும் எளியவர் நம்ம ஸ்ரீகால பைரவர்!!! ஸ்ரீகாலபைரவரை வழிபட கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டே ஆக வேண்டும்.வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.




ஸ்ரீபத்திரகாளியை ஒரு வாரத்தில் எந்த நாளில் வழிபட்டால் முழுமையான அருள் கிடைக்கும்? என்பதை பல ஆண்டுகளாக நமது முன்னோர்கள் வழிபட்டு,வழிபட்டு கண்டறிந்ததே ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் இராகு காலம் என்பதை கண்டறிந்தனர்.


ஸ்ரீசொர்ண பைரவரை வழிபட ஏற்ற நாள் எது? என்பதை நமது ஆன்மீகக்குருப் பரம்பரையினர் வனதியானத்தின் மூலமாகவும்,ஒன்பது ஆண்டுகள் தினசரி தியானத்தின் மூலமாகவும் கண்டறிந்தனர்;அந்த நாளே தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலம் ஆகும்.
இதே நாளன்று ஸ்ரீகால பைரவரையும் வழிபடலாம்;அதே சமயம்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி இருப்பவர்கள் ஸ்ரீகால பைரவரை வழிபட ஏற்ற நாள் சனிக்கிழமை;ஏற்ற நேரம் சனிக்கிழமை அன்று வரும் இராகு காலம்!


எந்த ஒரு மந்திரத்தையும்,அது வைஷ்ணவ மந்திரமாக இருந்தாலும் சரி,அம்மன் மந்திரமாக இருந்தாலும் சரி,ஐயப்பனின் மந்திரமாக இருந்தாலும் சரி,
முருகக் கடவுளை வழிபாடு செய்ய ஏற்ற நாள் செவ்வாய்க்கிழமை ஆகும்.ஏற்ற நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள்!

குல தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் வியாழக்கிழமை ஆகும்.நமது வாழ்க்கை வேகத்தினால் நாம் ஞாயிற்றுக்கிழமை வழிபடச் செல்கிறோம்;அல்லது மஹாசிவராத்திரி அன்று மட்டுமே வழிபடச் செல்கிறோம்.


அன்னதானம் செய்வதற்கு ஏற்ற நாள் வியாழன்;விருந்து சாப்பிடுவதற்கு  ஏற்ற நாள் வெள்ளி;ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டகச்சனி உள்ளவர்கள் சனிக்கிழமை உடல் ஊனமுற்ற அனாதைகளுக்கு அன்னதானம்,கருவிகள் தானம்,ஆடைகள் தானம்,கல்வி தானம் செய்யலாம்;

ஒருபோதும் நிர்வாணமாக தூங்கக்கூடாது;குளிக்கவும் கூடாது; மேலே போர்வையைப் போர்த்திக் கொண்டும் நிர்வாணமாகத் தூங்குவது பாவம் மட்டுமல்ல;பல்வேறு சிக்கல்கள் வருவதற்கு இந்த ஒரு செயலைச் செய்தாலே போதும்;


ஒரு போதும் வெட்டவெளியில் உறவு கொள்ளக் கூடாது;அது பகலாக இருந்தாலும் சரி,இரவாக இருந்தாலும் சரி.வனப்பகுதியாக இருந்தாலும் சரி,வாகனமாக இருந்தாலும் சரி.கடல் பகுதியாக இருந்தாலும் சரி;இப்படி ஒரு முறை செய்பவர்களையே துஷ்ட சக்திகள் ஆக்கிரமிக்கின்றன.அப்படி ஆக்கிரமிப்புக்குள் இருப்பதைக் கண்டறியும் ஆன்மீக குரு நாதர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் கூட தற்காலத்தில் இல்லை;

ஒருபோதும் கோவிலுக்குள் சரசக் கலையில் ஈடுபடக்கூடாது;கல்வி நிலையங்களிலும்,பணிபுரியும் இடங்களிலும் சரசக் கலையில் ஈடுபட்டால் அந்த இடத்தின் வளர்ச்சி அதோடு சரி;உம்மா கூட தரக்கூடாது;
நள்ளிரவில் சுடுகாட்டு வழியாக பயணிப்பதை முடிந்தவரையிலும் தவிர்க்க வேண்டும்;மீறி வரும் சூழ்நிலை உண்டானால், புதிய எதிர்பாலினத்தவர்களை(நீங்கள் ஆணாக இருந்தால் பெண்,பெண்ணாக இருந்தால் ஆண்) சுடுகாட்டுக்கு அருகே  சந்தித்துப் பேசும் சூழ்நிலை  ஏற்படலாம்;அப்போது முடிந்தவரையிலும் அங்கே  இராமல் உடனே நகர்ந்துவிடுவது நல்லது.


மேலே கூறிய பத்திகளை ஒருசில நிமிடங்களில் வாசித்துவிட்டீர்கள்;இதில் மறைந்திருக்கும் ஆன்மீக வலிமைகளையும்,சக்தியையும் அறிய நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு ஆண்டுகள் பாடுபட்டிருப்பார்கள் தெரியுமா?


ஞாயிற்றுக்கிழமை அன்று பூமிக்கு சூரியனிடமிருந்து அளவற்ற  கதிர்வீச்சு கிடைத்துக்கொண்டே இருக்கிறது;திங்கட்கிழமையன்று சந்திரனிடமிருந்தும்,செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய்க்கிரகத்திலிருந்தும்,புதன் கிழமைகளில் புதன் கிரகத்திலிருந்தும்,வியாழக்கிழமைகளில் குருகிரகத்திலிருந்தும்,வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரன் கிரகத்திலிருந்தும்,சனிக்கிழமைகளில் சனிக்கிரகத்திலிருந்தும் கதிர்வீச்சுக்கள் நமது பூமியை வந்தடைகின்றன.ஒவ்வொரு நாளும் வரும் இராகு காலத்தில் ராகு பகவானின் கதிர்வீச்சு பூமி முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது;

இராகு பகவானை ஜோதிடப்படி நிழல்கிரகம் என்று நாம் வர்ணித்தாலும்,இராகுவானது பூமியின் சுற்றுப்பாதையும்,சந்திரனின் சுற்றுப்பாதையும் இரண்டு இடங்களில் குறுக்கிடுகின்றன;அந்த இரண்டு இடங்களில் ஒரு மையமே ராகு எனவும்,இன்னொரு இடமே கேது எனவும் மதிப்பிட்டுள்ளார்கள் நமது முன்னோர்கள்;நமது நவீன வானவியல் ஆராய்ச்சிகளும் அதை நிரூபித்துவிட்டன;

இராகு காலத்தில் நல்ல செயல்களை ஆரம்பிக்கக் கூடாது;எம கண்டத்தில் கெட்ட செயல்களை துவங்கிடக் கூடாது என்பது ஜோதிட விதி;இந்த விதியிலும் விதிவிலக்கு உண்டு;அது என்னவெனில்,ராகு மஹாதிசை யாருக்கெல்லாம் நடைபெற்று வருகிறதோ அவர்களுக்கு இராகு காலத்தில் தான் சுபகாரியங்கள் மற்றும்  முக்கிய காரியங்களை ஆரம்பிக்க வேண்டும்;அவ்வாறு துவங்கும் அனைத்துச் செயல்களும் மகத்தான வெற்றி பெறும் என்பது எமது கடந்த பத்தாண்டுகால ஜோதிட ஆராய்ச்சி உண்மை ஆகும்.அதே போல,எமகண்ட நேரத்தில் பிறருக்குத் தீங்கு செய்யும் கெட்ட செயல்களைச் செய்யத் துவங்கினால்,அது செய்ய ஆரம்பிப்பவரையே திருப்பித் தாக்கும்;இவைகளைப் பற்றி புராதன ஜோதிட நூல்கள் விரிவாக எழுதியிருக்கின்றன;நாத்திகமும்,உலகமயமாக்கலும் நம்மை அகங்காரம் பிடித்தவர்களாக மாற்றிவிட்டதால்,இந்த  உண்மைகள் ஜோதிடப் பயிற்சி மையங்களில் மட்டுமே சொல்லித்தரப்படுகின்றன;


ஜோதிடம் ஒரு அறிவியலாக இருப்பதால் தான்,அமெரிக்காவின் சர்வதேச உளவு அமைப்பான சி.ஐ.ஏ.தனது ஒற்றர்களை ஜோதிடத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றது;இந்த தேர்ந்தெடுத்தல் பணியானது கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது;

தமிழ்நாட்டில் இன்றும் கூட ஒரு தினசரி பத்திரிகை தனது அலுவலகப்பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்போது உரிய பட்டப்படிப்புடன் ஜாதக நகலையும் சேர்த்து அனுப்புவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறது;

தமிழ்நாட்டின் பிரதான திராவிடக் கட்சிகளில் ஒன்றில்,ஜோதிடம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது அனைவருமே அறிந்த உண்மை ஆகும். ஆந்திராவில் சினிமாக்களின் மூலமாக தன்னை ராமனாக நிலை நிறுத்தியவர் ஒருவர் இருந்தார்;அவர் ஆரம்பித்த அரசியல் கட்சியானது,துவக்கப்பட்ட ஒன்பதே மாதங்களில் ஆளும் கட்சியானது;உலக வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை என்று இன்றும் கின்னஸ் தெரிவிக்கிறது.

கடவுளையே நம்பாத தாத்தாவின் கோட்பாடுகளை முகமூடியாக அணிந்து,கறுப்புத் துண்டையே தோளில் போர்த்தியிருந்தவர்,இன்று மஞ்சள் துண்டு அணிந்தால் மட்டுமே ஆயுள் அதிகரிக்கும் என ஆஸ்தான ஜோதிடர் தெரிவித்ததால்,மஞ்சளுக்கு மாறியே விட்டார்;ஆக,நாத்திக அறிஞர் என்று சொல்லிக்கொள்பவருக்கும் ஜோதிடமே நல் வழிகாட்டி ஆகும்.(தானும்,தன் குடும்பத்தாரும் மட்டும் ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசனையைப்பின்பற்றி,ஆயுள் முழுக்க சொகுசாக வாழ வேண்டும்;தன்னை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய அப்பாவித் தமிழினம் நாத்திகக் கொள்கையில் உறுதியாக இருந்து சீரழியவேண்டும் என்ற உன்னத நோக்கமே காரணம்!)

நம் கர்மவினைகளைத் தீர்க்கும் சக்தி (கலிகாலத்தில் மட்டும்) அன்னதானத்துக்கு உண்டு; அன்னதானத்தை எப்போதும்,எங்கேயும் செய்யலாம் என்ற பொதுவிதி இருந்தாலும்,நாம் குறைந்த காலத்தில் அதிகமான நற்பலன்களை அடையவே விரும்புகிறோம்;இதற்கு சிவபுராணம் வழிகாட்டுகிறது.


நமது ஊரில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம்பேர்கள் வீதம் ஓராண்டுக்கு தினமும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ அதைவிட அதிகமான புண்ணியம்,காசியில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;

நாம் காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்கள் வீதம் ஒரு வருடம் முழுவதும் தினமும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விடவும் அதிகபுண்ணியம் நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில்  இருக்கும் திரு அண்ணாமலை(திருவண்ணாமலை)யில் ஒரே ஒரு நாள் ஒரே ஒரு நபருக்கு மூன்று வேளைகள் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

அதுவும்,துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் எப்பேர்ப்பட்ட புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?

சுமார் இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த உண்மை இது:நாம்  பிறந்தது முதல் இறக்கும் நாள் வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில் ஒரு கோடி பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விடவும் அதிகப் புண்ணியம் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் ஒரே ஒருவருக்கு காலை,மதியம்,மாலை என்று மூன்று வேளைகளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.

அது சரி! இந்த உண்மையைக் கண்டுபிடிக்க எதற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின?


துவாதசி திதி வரும் நாட்களின்  பட்டியலை ஒரே நாளில் பஞ்சாங்கத்தின் மூலமாக கண்டுபிடித்துவிடலாம்;ஒரு தமிழ் மாதத்தில்  இரண்டு முறை துவாதசி திதி வரும்;வளர்பிறை துவாதசி,தேய்பிறை துவாதசி.எனவே,ஒரு வருடத்துக்கு 24 துவாதசி திதிக்கள் வருகின்றன.

அடுத்து இவைகளில் ஒரு முழுநாளில் துவாதசி திதி என்பது வெறும் 12 முதல் 18 நாட்களே வருகின்றன;ஏன் அப்படி? இந்து தர்ம காலக் கணக்குப்படி, ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான கால கட்டமே ஒரு முழு நாள் ஆகும்.நாம் பின்பற்றும் காலண்டரும்,கணக்கும் கிறுஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டது;நள்ளிரவு மணி 12 ஆனதும் அடுத்த நாள் துவங்குவதாக மேல்நாடுகள் பின்பற்றுகின்றன;இது முழுத் தவறு.

அடுத்தபடியாக எப்போது துவாதசி திதி அன்னதானம் செய்வது?


காலையில் ஆறு மணி முதல் எட்டு மணிக்குள்ளும்;மதியம் பனிரெண்டு மணி முதல் இரண்டு மணிக்குள்ளும்;இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணிக்குள்ளும் அன்னதானம் செய்வது சிறப்பு.இதை உணர்ந்து கொள்ள சுமார் ஏழு முதல் ஒன்பது தடவை அண்ணாமலைக்குச் செல்ல வேண்டியிருந்தது;நான் ஒன்றும் செல்வ வளம் மிக்கவன் அல்ல;எனது சம்பளத்திலும்,வருமானத்திலும் சேமித்தேன்;சேமித்தப் பின்பு, துவாதசி வரும் நாளில் விடுமுறை எடுத்து,எதற்காக அண்ணாமலைக்குச் செல்கிறேன்? என்பதை எவரிடமும் சொல்லாமலும்,பயணிப்பதையே ரகசியமாக வைத்துக்கொண்டும் புறப்படுவது வழக்கம்.(காரணம்,கண் திருஷ்டியால் சில முறை அண்ணாமலைப்பயணம் ரத்தாகியிருக்கிறது). அண்ணாமலைக்கு  எனது ஊரிலிருந்து 480 கி.மீ.தூரம் பயணித்து,இரண்டு இரவுகளும்,ஒரு பகலும் அண்ணாமலையில் தங்கியிருந்து அன்னதானம் செய்து கண்டறிந்த உண்மை இது.சும்மா இல்லை;இந்த ஆராய்ச்சி செய்யும் போதெல்லாம் பஞ்சாங்கமும்,அடிப்படை ஜோதிட அறிவும்,ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனின் அருளாசியும் மட்டுமே துணையாக இருந்தன;

சிவமஹாபுராணத்தில் இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால்,காசியில் நம் வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்த புண்ணியத்தை விட அதிக புண்ணியமும்,மறுபிறவியில்லாத முக்தியும் கிடைக்கும் என்ற ஒருவரியே கை.வீரமுனியாகிய எம்மை இந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்யத் தூண்டியது;

இந்த ஆராய்ச்சியின் முடிவை மகாவில்வத்தில் விரிவாக சென்ற வருடங்களில் ஏதோ ஒரு பதிவில் எழுதியிருக்கிறோம்.ஆனால்,இந்த ஆன்மீகமும் ஜோதிடமும் கலந்த ஆராய்ச்சி செய்யும் போது மறுபிறவியில்லாத முக்தி கிடைக்குதோ இல்லையோ,வாழ்க்கையில் இருந்து வந்த அனைத்துச் சிக்கல்களும் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது;ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த பலன்களைத் தொடர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் துவாதசி திதி வரும் நாட்களின் பட்டியலை மகாவில்வத்தில் வெளியிட்டு வருகிறோம்;கூடவே அதற்கான விளக்கத்தையும்!


ஆரம்பத்தில் இன்று மதியம் துவங்கி நாளை மதியம் வரை இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒருவருக்கு இன்று மதியமும்,இரவும் மட்டும் அன்னதானம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பியதுண்டு;ஊருக்குத்  திரும்பிய சில நாட்கள் / வாரங்களில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை;

அடுத்தகட்டமாக,இன்று மதியம் துவங்கி நாளை மதியம் வரை இருந்த துவாதசி திதியன்று அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;இன்று மதியம்,இரவு;நாளை காலை என்று மூன்று வேளைகளுக்கும் ஒரு துறவி வீதம் அன்னதானம் செய்துவிட்டு  ஊருக்குப்புறப்பட்டோம்;பலன்கள் கிடைக்கவில்லை;



மூன்றாவதாக ஒரு நாள் பகல் முழுவதும் துவாதசி திதி இருக்கும் நாளைத் தேர்ந்தெடுத்து அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;மூன்று வேளையும் தலா மூன்று பேர்களுக்கு அன்னதானம் செய்தோம்;காலையில் மூன்று சாதுக்கள்,மதியம் மூன்று சாதுக்கள்;இரவு மூன்று சாதுக்கள் என்று அன்னதானம் செய்துவிட்டு,இரவில் கிரிவலம் சென்றுவிட்டு,ஊருக்குச் சென்றோம்.மறு நாளே சில பலன்களை உணர முடிந்தது.
நான்காவதாக மிகப் பெரிய அளவில் திட்டமிட்டோம்;சுமார் நூறுபேர்களுக்குத் தேவையான பணத்தை சம்பளத்திலும்,ஜோதிட தட்சிணைகளிலும் சேமித்தோம்;முழு துவாதசி திதி வரும் நாளுக்கு முதல் நாள் இரவே இங்கு வந்தோம்;மறு நாள் காலையிலும் இரவிலும் கிழக்குக் கோபுர வாசலில் சுமார் ஒன்பது பேர்களுக்கு(காலையில் ஒன்பது சாதுக்கள்,இரவில் ஒன்பது சாதுக்கள்) அன்னதானம் செய்துவிட்டோம்;காலை ஒன்பது மணிக்கே நூறு பேர்களுக்கு உணவகத்தில் ஆர்டர் கொடுத்தோம்;உணவகங்களில் ஆர்டர் கொடுப்பது,டோக்கன் வாங்கிக் கொண்டு அந்த டோக்கன்களை சாதுக்களுக்கு விநியோகம் செய்வது அண்ணாமலையில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்றன என்பது ஆர்டர் கொடுக்கும் போது புரிந்து கொள்ள முடிந்தது;சரியாக மதியம் பனிரெண்டு மணியளவில் ஒரு டீசல் ஆட்டோவைப் பிடித்து,அதில் நூறு பேர்களுக்குரிய உணவுப் பொட்டலங்களை நிரப்பினோம்;கிரிவலப் பாதை முழுவதும் அன்னதானம் செய்து விட வேண்டும் என்ற பேராசையில் புறப்பட்டோம்;அக்னி லிங்கத்தின் அருகிலேயே அனைத்து உணவுப்பொட்டலங்களையும் தானமாகக்  கொடுத்துவிட்டோம்.அப்போதுதான் ஒரு உண்மை உறைத்தது; அக்னி லிங்கத்தின் அருகில் ஏராளமான அன்னதான மடங்களும்,ஆஸ்ரமங்களும் இருக்கின்றன;எனவே,பெரும்பாலான சாதுக்கள் அக்னி லிங்கத்தின் அருகிலேயே முகாமிட்டிருக்கிறார்கள் என்பது!!!



நாம் ஒரே ஒரு துவாதசி திதியைத் தேர்ந்தெடுத்து,அண்ணாமலைக்கு வரத் திட்டமிடுகிறோம்;ஜோதிட அறிவினாலும்,சிவபுராணத்தின் வழிகாட்டுதலாலும் அண்ணாமலைக்கு வருகை தந்து அன்னதானம் செய்கிறோம்;ஆனால்,ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகளும் அக்னி லிங்கத்தின் அருகில் இருக்கும் இந்த ஆஸ்ரமங்கள் அன்னதானத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றன;என்று எண்ணும்போது பொறாமை வந்தது;சில நாட்களிலேயே அந்த பொறாமையும் காணாமல் போனது; ஏனெனில்,குடும்பஸ்தராகிய நாம் எவ்வளவோ வேலைகளுக்கு நடுவில்,எத்தனையோ சிரமங்களுக்கும் மத்தியில் விடாப்பிடியாக நமது சொந்தப் பணத்தினை சேமித்து வைத்து,இங்கே வந்து அன்னதானம் செய்வதன் மூலமாக நாம்,நமது குழந்தைகள்,நமது பேரக் குழந்தைகள்,நமது பெற்றோர்கள்,நமது தாத்தா பாட்டிகள் என நமது பரம்பரைக்கே புண்ணியத்தைச் சேர்க்கிறோம் என்று நினைக்கையில் பொறாமை கரைந்து போனது;

ஐந்தாவதாக முழுமையாகவும்,முறையாகவும் திட்டமிட்டு இன்னொரு துவாதசி திதிக்கு அண்ணாமலைக்கு வருகை தந்தோம்;எம்மோடு நான்கு (ஜோதிட)வாடிக்கையாளர்கள் அப்போது வந்தார்கள்;காலையிலும்,மாலையிலும் கிழக்குக்கோபுர வாசலில் அன்னதானம் செய்தோம்;மதிய நேரத்தில் வழக்கம் போல ஒரு டீசல் ஆட்டோவைப் பிடித்து சுமார் 120 பேர்களுக்கான உணவுப்பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கிரிவலம் புறப்பட்டோம்;மன்னிக்கவும்,ஆட்டோவில் அன்னதான வலம் செய்யப் புறப்பட்டோம்;அக்னி லிங்கத்தைக் கடந்ததும்,அரசு கலைக்கல்லூரி இருக்கிறது;அதற்கு கொஞ்சம் முன்பாகவே நிறுத்திக் கொண்டு எண்ணி ஒன்பதே ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்தோம்;பிறகு,ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் தலா ஒன்பது  பேர்களுக்கு அன்னதானம் செய்ய முடிந்தது;குபேர லிங்கத்திலும்,ஈசான லிங்கத்திலும் சுமார் அரை மணி நேரம் வரை காத்திருந்தோம்;எங்கள் ஏக்கம் அண்ணாமலையாருக்குத் தெரிந்தது போலும்! சில சாதுக்களை அரை மணி நேரம் கழித்தே தரிசிக்க முடிந்தது;இந்த பயணத்து முதல் நாள் கோயம்பத்தூருக்கு அருகில் இருந்து ஒரு மகாவில்வம் வாசகர் நீண்ட நேரம் பேசினார்;பேச்சுவாக்கில் ஈசான லிங்கத்தின் அருகில் சுமார் பதினாறு சித்தர்களின் ஜீவசமாதிகள்  இருப்பதாகவும்,அந்த பதினாறு பேர்களில் ஈராறு பேர்கள் பெண் சித்தர்கள் என்பதையும் தெரிவித்தார்;அங்கே அன்னதானம் செய்வது மிகவும் கடினம்.ஏனெனில்,எப்போதாவதுதான் நம்மால் அன்னதானம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.



ஐந்தாவதாக அண்ணாமலையில் துவாதசி திதியன்று அன்னதானம் செய்துவிட்டு,கிரிவலம் அன்று இரவு சென்றோம்;இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்;கிரிவலம் முடித்தப்பின்னரும்,அன்னதானம் செய்யலாம்;அன்னதானம் செய்தப் பின்னரும் கிரிவலம் செல்லலாம்;எந்தக்கட்டுப்பாடும்,விதிமுறைகளும் கிடையாது;துவாதசி திதி இருபத்து நான்கு மணி நேரம் இருக்கும்;அந்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் ஒரு முழு நாளில் மூன்று பொழுதுகள்(காலை,மதியம்,இரவு) வரும் விதமாக அமைய வேண்டும்;அவ்வளவு தான்.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவெனில்,அண்ணாமலையில் அன்னதானம் செய்வதை ஒரு பழக்கமாகவே தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கிறார்கள்;அதனால்,அன்னதானம் செய்வதற்காகவே ரூபாய் ஐந்துக்கும்,பத்துக்கும் உண்டக்கட்டிச் சாதமும் இங்கே கிடைக்கிறது;இதை பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதில்லை;எனவே,மனதார சிறந்த உணவையே அன்னதானமாகச் செய்ய வேண்டும்.



ஐந்தாவதாக அண்ணாமலையில் துவாதசி திதி அன்னதானம் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய சில வாரங்களில் வழக்கு தொடுத்து என்னை சித்திரவதைப் படுத்திய என் மனைவி சமாதானமாகிவிட்டாள்;வழக்கை வாபஸ் வாங்கினாள்:சுமாராக ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த குடும்பப் பிரச்னை முடிவுக்கு வந்தது;எனக்குத்  திருமணம் ஆனதிலிருந்து மதிக்கவே மதிக்காமலும்,உதவி செய்யாமலும் இருந்த எனது பெற்றோர் என்னைத் தேடி வந்தனர்;எனது முன்கோபமும் காணாமல் போயிருந்தது;என்னைப்பற்றி அவதூறாகப் பேசுவதையே பொழுது போக்காக வைத்திருந்த எனது அப்பா இப்போது என்னை விட்டுக் கொடுக்காமல் பேசத்துவங்கினார்;மாதம் ரூ.இரண்டாயிரம் வருமானம் வந்தது;  துவாதசி திதி அன்னதானத்தை அண்ணாமலையில் முறையாகச் செய்தப் பிறகு, இப்போது வாரம் ஆயிரம் ரூபாய் வருமானம் வரத் துவங்கியது;நான் கடன் வாங்கியவர்களின் பட்டியல் ஒரு கட்டுக்குள் வரத் துவங்கியது;அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான் கடன்களை முழுமையாக அடைத்துவிட்டேன்;எனது நீண்டகால மன உளைச்சல்கள் காணாமல் போயிருந்தன;என்னை விரோதியாக பார்த்து வந்த எனது மனைவியின் குடும்பத்தார் இப்போது என்னிடம் மரியாதையாக பழக ஆரம்பித்தார்கள்;எனது சோக வரலாற்றை அறிந்து என்னைப் பார்த்தாலே ஓடும் சொந்தங்கள்,நான் இல்லாத போது என்னை நையாண்டி செய்து வந்த எனது சொந்தங்கள் அனைத்துமே இப்போது எம்மிடம் ஜோதிட ஆலோசனை கேட்குமளவுக்கு வந்திருக்கின்றனர்;கடும் கருமவினைகள் தீர்ந்துவிட்டன.



வெறுமனே பணம்,பணம் என்று சம்பாதிப்பவர்களே தமிழ்நாட்டில் அதிகம்;கொஞ்சம் புண்ணியத்தையும் சேர்க்க முயலவேண்டும்;முடியாவிட்டால்,முன்னோர்கள் செய்த கர்மாக்களையும்,நாம் முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த தவறுகளையும் ஜோதிடப்படி கண்டறிந்து,அதை இறைவழிபாடு,அன்னதானம்,ஸ்ரீகால பைரவர் வழிபாடு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு,  மந்திர ஜபம் மற்றும் ஆன்மீகப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுதல்;அந்த பயிற்சி வகுப்புக்களில் போதிக்கப்பட்டவைகளை விடாப்பிடியாகப் பின்பற்றுதல் போன்றவைகளையும் செய்து வர வேண்டும்.அப்போதுதான் நமது முதுமைக் காலமும்,நமது குழந்தைகளின் எதிர்காலமும்,அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்.


பணம்,பணம் என்று வெறி பிடித்து அலைபவர்களுக்கு அன்பு,பாசம்,விட்டுக்கொடுத்தல்,குடும்ப ஒற்றுமை,தியாகம் போன்ற மனித உணர்ச்சிகள் சிறிதும் இராது;குடும்பம் என்ற அமைப்பைச் சிதைப்பதே இவர்கள் தான்!எப்படியெல்லாம் பணம் அள்ளலாம் என்ற நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இராது;நிறைய பணம் சம்பாதிப்பவர்களும்,சம்பாதித்துக்  கொண்டிருப்பவர்களும் ஜோதிடம் பார்ப்பது,அதில் சொல்லப்படும் ஆன்மீக & ஜோதிட ஆலோசனைகளைப் புறக்கணிக்கவே பார்ப்பார்கள்;ஏனெனில்,அவர்களைப் பொறுத்த வரையில் இது தண்டச் செலவுதான்;அவர்கள் மீண்டும் மீண்டும் பண வெறி பிடித்த பிசாசுகளாக பிறப்பு  எடுக்கத் தான் செய்வார்கள்;அவர்கள் வாழ்க்கையில் நோய்,கடன்,எதிரி,வழக்கு,மாந்திரீக கோளாறுகள் என்று வந்தாலும் திருந்துபவர்கள் மிக மிகக் குறைவுதான்;

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பரப்பப் பட்ட நாத்திகக் கருத்துக்களின் விளைவாகவும்,கம்யூனிஸத் தத்துவங்களாலும்,மூட நம்பிக்கைகளாலும்,தமிழ்நாட்டின் பூர்வீக மக்கள் நாத்திகத்தை தமது உயிர் மூச்சாகப்பின்பற்றி வருகின்றனர்;இதனால்,பரிகாரங்களை பெரும்பாலானவர்கள் நம்புவதில்லை;நம்பினாலும் பரிகாரங்களைச் செய்வது அபூர்வம்;ஆனால்,தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களும்,சாஸ்திர ஞானத்தை பரம்பரையாக பரப்பியவர்களுமே தங்கள் மற்றும் தங்களின் குழந்தைகளின் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை திறமையான & ஒரிஜினல் ஜோதிடர்கள் மூலமாக கண்டறிந்துவிடுகிறார்கள்.அவ்வாறு கண்டறிந்தப் பின்னர்,பொருத்தமான அல்லது தகுதி நிறைந்த குருநாதர்கள் மூலமாக உரிய நேரத்தில் அல்லது உரிய வயதில் பரிகாரங்களைச் செய்து விடுகிறார்கள்.மற்றவர்களில் இவ்வாறு இருப்பவர்கள் மிகக் குறைவே!


நாம் வாழும் காலமோ கலிகாலம்;பணம் அல்லது அதிகாரம் அல்லது காமம் அல்லது அகங்காரம் இவைகளில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவைகளே நம் ஒவ்வொருவரையும் இயக்கி வருகின்றன.இந்த இயக்கத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு,ஆன்மீகமயமான பாதுகாப்புடன் முடிந்தவரையிலும் நியாயமாக சம்பாதிக்கவே இந்த ஆன்மீக ஆராய்ச்சிக் கட்டுரையை தங்களுக்கு வழங்குகிறேன்.

கலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தராக மாறிட அறிந்துகொள்ள வேண்டிய வித்தைகளும்!!!





துறந்திட்டார் உலகரென்று சித்தரெல்லாம்
  தோற்றாமல் உருமாற்றிக் கொண்டு போனார்
கறந்திட்டார் மதியமுர்தம் உண்ணவேண்டிக்
  கயிலையிலும் மலைதோறும் சமாதி சார்ந்தார்
 இறந்திட்டார் லோகத்தைச் சேர்ந்தோரெல்லாம்
  இறவாமல் வரைகோடி ஏறினார்கள்
பறந்திட்டார் இதையறிந்து ஞானம் பார்த்துப்
  பதிநில்லு அட்டகர்மப் பாசைகேளே
கருவூரார் பாடல் எண்;175


விளக்கம்: உலக மக்களின் இந் நிலையைக் கண்ட சித்தர்கள் எல்லாம் சூக்கும உடலை எடுத்துக்கொண்டு மதி அமுர்தம் உண்ணுவதற்குக் கயிலாசம் முதல் மலைகளிலும் சமாதி இருந்தார்கள்.உலக மாய்கையில் மூழ்கினவர்கள் இறந்து போனார்கள்.சித்தர்கள் இறக்காமல் மேல்நிலையை அடைந்தார்கள்.

உண்மை நிலையை அறிந்து ஞானத்தைப் பார்த்து ஓர் நிலையாய் நிற்பாயாக! அப்படி ஓர் நிலையாய் நிற்பதற்கு உதவும் அஷ்ட கர்ம வித்தைகளை நீ கற்றுக்கொள்வாயாக!அவைகளின் பெயர்கள்:வசியம்,மோகனம்,தம்பனம்,வித்வேதனம்,பேதனம்,    உச்சாடனம்,ஆகர்ஷணம்,மாரணம்.
நன்றி: கருவூரார் பலதிரட்டு,பக்கம் 79.


ஆன்மீகக் கடலின் கருத்து: கலியுகத்தில் ஜோதிடப்படி நான்கே நான்கு கிரகங்கள் கடுமையாக உழைத்து நம்மை இறைவனருளில்/ஆன்மீகமுயற்சியில்  ஈடுபடாமல் தடுக்கும்.அவை சனி,செவ்வாய்,இராகு,கேது.இருந்தபோதிலும்,யாருக்கு தகுந்த ஆன்மீக குரு அமைகிறார்களோ,அவர்களால் இந்த நவக்கிரகங்களின் செயல்பாடுகளையும் மீறி தம்மை சித்தராக்கிக்  கொள்ள முடியும்.


மேலே கூறப்பட்டுள்ள அஷ்டகர்மங்களையும் ஒரே பிறவியில்(நாம் வாழும் கலியுகத்தில்) தேர்ச்சி பெற முடியாது.ஏதாவது ஒரு கலையில் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.இந்த  அஷ்ட கர்மங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக நாம் சித்தராகலாம்;பணமும் சம்பாதிக்கலாம்;இன்றைக்கு ஜோதிட மாத இதழ்களை வாங்கி பார்த்தால் இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களே உங்களது பிரச்னைகளைத் தீர்க்கிறேன் என்று விளம்பரம் செய்திருப்பார்கள்.

இந்த அஷ்டகர்மாக்களையும் கற்க நமக்குத் தேவையான முதல் தகுதி:பூர்வ புண்ணியம்ஆகும்.இந்த பூர்வ புண்ணியத்தை ஒருவரது பிறந்த ஜாதகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.


இரண்டாவது தகுதி:மனத்தைக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியம்.(இந்தத் தகுதியைப் பெற தினமும் ஒரு மணி நேரம் வீதம்  குறைந்தது 3 மூன்று ஆண்டுகளுக்கு சிவாய நம ஜபித்து வருவது);


மூன்றாவது தகுதி: நமது பூர்வ கர்மவினைகளை இந்தப் பிறவியிலேயே கரைத்துவிட வேண்டும்.இது கொஞ்சம் சிக்கலான விஷயம் ஆகும்.இதற்கு குறைந்தது 60 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஏதாவது ஒரு ஸ்ரீசொர்ண பைரவர் சன்னதியில் இராகு காலத்தில் அவரை வழிபாடு செய்திருக்க வேண்டும்.அதுவும் பழமையான சன்னதியாக இருக்க வேண்டும்.


நான்காவது தகுதி: இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.ஏனெனில்,தமிழ்நாட்டில்  பிறந்திருக்கும் நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களே!பக்கத்து மாநிலங்கள் அல்லது இந்தியாவில் வேறு மாநிலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட  இப்பேர்ப்பட்ட ஆன்மீகக் கருவூலங்கள் கிடைக்கவில்லை;வெளிநாடுகளில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத் தேடல் மிகக் குறைவே!
நாம் தமிழராகப்பிறந்து,சிந்திக்கும் திறன் நமது பருவ வயதில் உருவாகி,இணையம் என்னும் தொழில் நுட்பத்தை புரிந்து, மகாவில்வத்திற்குள் புகுந்ததால் இவ்வ்வளவு தெய்வீக ரகசியம் நம்மைத் தேடி வந்திருக்கிறது.இல்லையா?