Friday, October 7, 2016

விதியை மாற்றும் எட்டாம் தேதியில் பிறந்தவர்கள்!


ஆங்கிலத்தேதி 8 அல்லது 17 அல்லது 26 ஆம் தேதியில் பிறந்தவர்கள் மூலமாகவே சனிபகவான் இந்த பூமியில் முக்கியமான திருப்புமுனைச் சம்பவங்களை நடத்துகின்றார்;


8 ஆம் தேதி பிறந்தவர்கள் மடாதிபதிகளாவார்கள்;அல்லது இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக அமைப்பின் தலைவராக இருப்பார்கள்;


17 ஆம் தேதி பிறந்தவர்கள் சீர்திருத்தக்காரர்கள்;இவர்களது சீர்திருத்தம் சமுதாயத்தின் மீது மகத்தான தாக்கத்தை உருவாக்கும்;அந்தத் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்;

26 ஆம் தேதி பிறந்தவர்கள் மாதச்சம்பளக் காரர்கள்;

மூன்று தேதியிலும் பிறந்தவர்களை சரியாக புரிந்து கொண்டவர்கள் ஓருவர் அல்லது இருவர் மட்டுமே (அவர்களது வாழ்நாளில் )இருப்பார்கள்;

கும்ப லக்னம் அல்லது ராசி;மகர லக்னம் அல்லது ராசியில் பிறந்து 8 அல்லது 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்,குறிப்பிட்ட ஆன்மீகச் சீர்திருத்ததிற்காக இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் என்று ஜோதிட சூட்சுமம் தெரிவிக்கின்றது;


மதம் சார்ந்த விஷயத்தில் இந்த தேதியில் பிறந்தவர்கள் ஈடுபட்டால்,கடும் எதிர்ப்பின் மூலமாக பிரபலம் அடைவார்கள்;


இவர்களது செயல்பாடுகளால் இவர்களின் நண்பர்களின் தினசரி அணுகுமுறையே அடியோடு மாறிவிடும்;

தனிமையை அதிகம் விரும்புவார்கள்;எல்லோராலும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவார்கள்;

8 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு 17 அல்லது 26 ஆம் தேதி பிறந்தவர்களும்,
17 ஆம் தேதியில் பிறந்தவர்களுகு 8 அல்லது 26 ஆம் தேதியில் பிறந்தவர்களும்;
26 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு 17 அல்லது 8 ஆம் தேதியில் பிறந்தவர்களும் மகத்தான உதவி செய்வார்கள்;

தமிழ்நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை பரவலாக்கியவர் எம்.ஜி.ஆர் அவர்கள்:அவர்களது பிறந்த தேதி ஜனவரி 17;இதனால் பல கோடி ஏழைக்குழந்தைகள் பட்டினியால் மரணம் ஆகாமல் காப்பாற்றப்பட்டது;


நான் கோவிலுக்குச் செல்வதில்லை என்று ஒருவர் சொன்னால் நீ என்ன நாத்திகவாதியா? என்று கேட்பது இன்றும் தொடர்கின்றது;1964 வரை வாழ்ந்த ஈ.வே.ரா.வின் நாத்திகப்பிரச்சாரம் இன்றும் சமுதாயத்தின் மீது தாக்கத்தை செலுத்துகின்றது என்பதற்கு இதுவே ஆதாரம்;


ஆர்.எஸ்.எஸ். என்ற பெயரில் ஒரு இயக்கம் 1925 முதல் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றது;எண்கணிதப்படி,ஆர்.எஸ்,எஸ். என்ற வார்த்தைகளின் கூட்டணி 8 ஆக வருவதால் மிகவும் அதிகமான விமரிசனத்தை இந்த இயக்கம் 1925 முதல் இன்று வரையிலும் எதிர்கொண்டு வருகின்றது;இதன் தாக்கம் மக்கள் மத்தியில் மகத்தான மாற்றத்தை கொண்டு வருகின்றது;தெய்வ பக்தியாக மட்டும் வாழ்ந்தால் இனி நமது நாட்டில் நிம்மதியாக வாழ முடியாது;தேசபக்தியும் தெய்வபக்தியும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு இந்துவுக்கும் தேவை என்பதை மக்களின் உணர்வில் ஊட்டிக் கொண்டே இருக்கின்றது;


எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு வேறு ஒரு நாடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தந்தே தீரும்;ஆனால்,யாருடைய ஆதரவையும் ஏற்காமல் தனி ஆளாகப் போராடியவர் இலங்கைத் தமிழ் மக்களுக்காகப் போராடியவர் பிரபாகரன் அவர்கள்;இவர் பிறந்ததும் அக்டோபர் 17

இவருக்கு பக்கபலமாக இருந்த தமிழ்நாட்டின் அரசியல்வாதி வைகோ அவர்களின் பிறந்த தேதி 8

ஒரு சாதாரண மனிதன்,திடீரென முதல் அமைச்சர் ஆனால்,இந்த மாநிலம் எப்படி அதை எதிர்கொள்ளும் என்பதை திரைப்படமாக இயக்கி வெளியிட்டவர் டைரக்டர் ஷங்கர்;இவரது பிறந்த தேதி 17;இப்படமும்,இவரது பல திரைப்படங்களும் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகின்றன;


அதிகம் பேசாமலும்,அதிகம் விளக்கம் தராமலும் தமது அமைதியான செயல்பாடுகளால் நமது நாட்டிற்கு என்று ஒரு சுயமரியாதையை உருவாக்கி வருபவர் நமது இன்றைய பிரதமர் மோடி அவர்கள் பிறந்ததும் நவம்பர் 17;

இவர் உருவாக்கும் சீர்திருத்தம்,நமது நாடு பற்றி தவறாகப் புரிந்து கொண்டிருந்த உலக நாடுகள்,இனி மரியாதையாகப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன;இந்த மாற்றம் நமது நாட்டை வல்லராசகவும்,நம் ஒவ்வொருடைய வருமானத்தை பல மடங்கு அதிகப்படுத்தும் விதமாகவும் இருக்கப் போகின்றது;


அக்டோபர் 8,2016 ஆம் தேதி சனிக்கிழமை வருவதால்,அதை மனதில் கொண்டு எட்டாம் எண்காரர்களுக்காவே எழுதப்பட்டது இந்த கட்டுரை!

எண்கள் உலகை ஆளுகின்றன என்பது நியூமராலஜிப் பழமொழி!


எண்களில் பிறக்கும் ஆத்மாக்கள் மூலமாக நவக்கிரகங்கள் தமது பணியைத் துல்லியமாகச் செய்கின்றன என்பதே ஆன்மீக மற்றும் ஜோதிடச் சூட்சுமம்!


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ


Thursday, October 6, 2016

120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நட்சத்திர ஆராதனை பவுர்ணமி!


உங்களைப் போலவே குணம்,வயது,அனுபவம்,திறமை,சாதனை போன்றவைகளைக் கொண்ட இன்னொரு மனிதன் பிறக்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

120 ஆண்டுகள்!

நீங்கள் பிறந்த தேதி,கிழமை,திதி,நட்சத்திரம் போலவே மீண்டும் அமைய ஆகும் காலமும் இதே 120 ஆண்டுகள் தான்!
இதுபோன்று ஏராளமான ஜோதிட சூட்சுமங்கள் பல கோடி இருக்கின்றன;சித்தர் பெருமக்கள் தகுந்த சமயத்தில் இதுபற்றி யார் மூலமாவது வெளிப்படுத்துவது வழக்கம்!!


நம்மையறியாமல் நாம் செய்த,செய்து கொண்டிருக்கும் தவறுகளால் தான் நாம் இன்று இவ்வளவு சிரமங்களை அனுபவிக்கின்றோம் என்று கூறினால் நம்புவீர்களா?


இந்தக் கோவிலுக்குச் சென்றாலாவது நமது சிரமம் தீராதா? என்று ஏங்குபவர்களுக்கும்,இந்தப் பரிகாரம் செய்தாலாவது நமக்கு விடிவு வராதா?என்று ஏங்குபவர்களுக்காகவே சித்தர் பெருமக்களின் அருட்கருணையால் இந்த தெய்வீக ரகசியத்தை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;


நமது ஜன்ம நட்சத்திரத்திற்கு என்று ஒரு விருட்சம்(மரம்) உண்டு;அந்த விருட்சத்தை அதன் ஜீவகாந்தம் அளவுக்கதிகமாக வெளிப்படும் போது நட்டால்,இதுவரை நாம் எத்தனை பிறவிகளாக கர்மச்சுமைகளைச் சுமந்துகொண்டு வாழ்ந்தோமோ,அத்தனை சுமைகளும் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடும்;

சென்ற நட்சத்திர ஆராதனை பௌர்ணமியன்று நட்சத்திர ஜீவகாந்தம் வெளிப்பட்ட இடம் எதுவோ அதற்கு 180 டிகிரி எதிர்ப்புறத்தில் வெளிப்படுகின்றது;ஆமாம்! கி.பி.1896 ஆம் ஆண்டு வந்த புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று இன்றைய தென் அமெரிக்க நாடான பெருவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெளிப்பட்டது;அப்போது,அங்கு வாழ்ந்த பழங்குடியினர் முறையாக கொண்டாடி தமது ஆத்மாவை பரிசுத்தமாக்கிக் கொண்டார்கள்;

இந்த முறை 15.10.2016 சனிக்கிழமை அன்று இந்தியாவில்,தமிழ்நாட்டில்,விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ராஜபாளையம் மாநகரத்திற்கு அருகில் சோழாபுரம் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவில் பகுதியில் விழுவதை சித்தர் பெருமக்கள் தமது தவ ஆற்றலால் கண்டறிந்துள்ளார்கள்;


இந்த அற்புதமான நன்னாளில் யாரெல்லாம் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த ஆலயத்தில் இருக்கின்றார்களோ,அவர்களது ஜன்ம நட்சத்திர மரக் கன்றினை நடும் பாக்கியம் கிட்டும்;அதன் மூலமாக எத்தனை முற்பிறவிகள் எடுத்திருந்தாலும்,அத்தனை பிறவிகளிலும் தொடரும் அனைத்து கர்மச்சுமைகளையும் ஜன்ம நட்சத்திர விருட்சம் பெற்றுக் கொண்டு நம்மை பரிசுத்தமான ஆத்மாவாக உயர்த்தும்;


இதன் மூலமாக ஜன்மாந்திர விமோசனம் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் கிட்டும்;

நீண்டகாலமாக இருந்து வந்த கடன் அல்லது நோய் அல்லது துயரங்கள் அல்லது குடும்ப ஒற்றுமையின்மை விலகிச் சென்றுவிடும்;

தமது குருவாக ஏதாவது ஒரு சித்தரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும்

ஆலயத் திருப்பணியை ஏற்று அதை முழுமைப்படுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கும்

பூர்வீகச் சொத்து இன்னும் கிடைக்காமல் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கும்

சீவனை சிவனோடு ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இருப்பவர்களுக்கும்

முக்திக்காக பல பிறவிகளாகப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கும்

பலவிதமான பரிகாரங்கள் செய்தும் இன்னும் எமது வாழ்க்கையில் ஒரு விடிவு வரவில்லை என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கும்
இந்த நட்சத்திர ஆராதனை பெளர்ணமி வரங்களை அள்ளித் தரப் போகின்றது;

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் தமது பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும் ஊர் போன்றவைகளை 9629439499 என்ற செல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்;
ஒரு குடும்பத்தில் இருந்து எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம்;


இந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை பெளர்ணமியைத் தவறவிடுபவர்கள் கி.பி.2136 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்;


சோழாபுரம் வழி:

வடக்கு தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு:மதுரை டூ ராஜபாளையம்;ராஜபாளையம் டூ சங்கரன் கோவில் சாலையில் 8 வது கி.மீ.தூரத்தில் சோழாபுரம் இருக்கின்றது;

தெற்கு தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு:திருநெல்வேலி டூ சங்கரன் கோவில்;சங்கரன் கோவில் டூ ராஜபாளையம் சாலையில் முறம்பு என்ற கிராமத்து ஸ்டாப்பில் இறங்கி ஆட்டோ பிடித்து வரவேண்டியிருக்கும்;

சென்னை டூ மதுரை மார்க்கம் ரயில் வழியாக வருபவர்கள் ராஜபாளையம் வந்து அங்கிருந்து டவுண் பஸ்ஸில் பயணிக்கலாம்;


ஓம் மகாதேவசித்த குரு துணை

Wednesday, October 5, 2016

ஒரே நிமிடத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மதிப்பிடும் முகாம்!




உணவு,உறக்கம்,(முறையான) உடலுறவு இம்மூன்று “உ”க்களும் சரியான விகிதத்தில் யார் பின்பற்றுகின்றார்களோ,அவர்கள் ஆயுள் முழுவதும்,தமது வாழ்நாளின் இறுதி மூச்சு விடும்வரையிலும் நோய் நொடி இன்றி முழு ஆரோக்கியத்தோடு வாழ்வார்கள் என்று சித்தர்களின் ஆரோக்கிய குறிப்புகள் தெரிவிக்கின்றன;

காலை,மதியம்,இரவு என்று மூன்று வேளைகளிலும் பசித்தப் பின்னரே சாப்பிடவேண்டும்;வீட்டில் சமைத்ததை மட்டுமே சாப்பிடவேண்டும்;வீட்டில் சமைத்ததை சாப்பிட முடியாத போது,இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள்,பழங்களை மட்டுமே சாப்பிடவேண்டும்;ஒரு போதும் பொறிக்கப்பட்ட உணவுகளையும்,மைதாவில் தயாரான உணவுகளையும் சாப்பிடவே கூடாது;

ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் 8 மணி நேரம் தூங்கவேண்டும்;தூங்கி எழும் நேரம் காலை 6 மணிக்குள் இருக்க வேண்டும்;இரவு தூங்க ஆரம்பிக்கும் நேரம் 9 மணி முதல் 10 மணிக்குள் இருக்க வேண்டும்;(இதைச் சீர்குலைப்பவையாக ஆரம்பத்தில் டிவி சீரியல்கள் இருந்தன;இப்போது அதை ஸ்மார்ட்போனும்,இணையமும் கைப்பற்றிக்கொண்டன)கடினமான தரையில்,மெல்லிய விரிப்பின் மீது தூங்குவது நன்று;ஏ சி அறையில் தூங்குவது ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்;ஜன்னலைத் திறந்து வைத்துத் தூங்குவது நன்று;

15 நாட்களுக்கு ஒருமுறை தம்பதியர் தமக்குள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள வேண்டும்;தாம்பத்தியத்தை நிறுத்தி நிதானமாக ரசித்துச் செய்ய வேண்டும்;இன்றோ அப்படியா இருக்க முடியுது?இதிலும் அவசரப்படுவதால் தான் மன நலமும்,உடல் நலமும் கெடுகின்றன;ஆயுள் குறைகின்றது;

மாதம் ஒரு சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்;(தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமை இதற்கு மிகவும் ஏற்ற நாள்)மறுநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல்(அலையாமல்)! இப்படிச் செய்வதன் மூலமாக,அடுத்த ஒரு மாதத்திற்கு உடல் அதிக வெப்பத்தையோ அல்லது குளிரையோ தாங்கும் திறனுடன் இயங்கும்;ஆனால்,இன்று ஆண்டுக்கு ஒருமுறை கூட எண்ணெய்க் குளியல் செய்ய நேரமில்லை;கிடைக்கும் எண்ணெய்யும் கலப்படம் அல்லது அதிகச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் உயிராற்றலே இல்லை;

இந்த மூன்றுவிதிகளையும் நம் ஒவ்வொருவராலும் பின்பற்ற முடியாத அளவுக்கு உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் கெடுத்துவிட்டது;எனவேதான் வீட்டுக்கு ஒரு நோயாளி என்ற சூழ்நிலையால் இன்று நம் ஒவ்வொருவரும் போதுமான உயிராற்றல்,சத்துக்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்;(உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் பற்றிய விளக்கம் விரைவில்!)

இதைச் சரி செய்ய வரும் 8.10.16 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் மகா நகர்,முடங்கியார் சாலை(அப்பல்லோ மெடிக்கல்ஸ் அருகில் தெற்கு நோக்கி இருக்கும் சாலை)யில் இருக்கும் கமலம் அண்ணாமலை காம்ப்ளக்ஸில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அயல்நாட்டுக் கருவியின் மூலமாக முழு உடல் பரிசோதனை 60 விநாடிகளில் (ஒருவருக்கு) செய்யப்பட இருக்கின்றது;தாங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்;

அடுத்த 3 வது நிமிடத்தில் முழு உடல்பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தாங்கள் எந்தெந்த இயற்கை உணவுப் பொருட்களால் செய்யப்பட்ட மாத்திரைகள்,சாறுகள் எவ்வளவு நாட்கள் சாப்பிடவேண்டும் என்ற மருத்துவ ஆலோசனையும் வழங்கப் படுகின்றது;இயற்கை உணவுப் பொருட்களால் செய்யப்பட்டவைகள் இங்கேயே விலைக்குக் கிடைக்கும்;அடுத்த 4 மாதங்களில் முழு ஆரோக்கியம் பெறுவீர்கள்;(கடந்த நான்கு ஆண்டுகளாக பல ஆயிரம் பேர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு முழு ஆரோக்கியம் பெற்றுள்ளார்கள்)


மிகவும் குறைவான முழு உடல் மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் உண்டு;மேலும் விபரம் அறிய மற்றும் முன்பதிவு செய்ய வாட்ஸ் அப் எண்: 8870832788

Saturday, October 1, 2016

வராகி பரணி என்ற வராகி அந்தாதி என்ற வராகி மாலை!!!

தினமும் மாலை 6 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள் இந்த வராகி பரணியை ஒருமுறை ஜபித்தாலே நமது அனைத்து கஷ்டங்களும்,கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;என்பது எமது வராகி குரு அவர்கள் எமக்கு அளித்த வார்த்தாளி உபதேசம் ஆகும்;


கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பல சிவனடியார்கள் இந்தப் பாடலை தினமும் ஒருமுறை வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயத்தில் மனதுக்குள் பாடி வந்து எந்த விதமான மாந்திரீகப் பாதிப்பும் இன்றி வாழ்ந்து வந்தார்கள்;எந்த விதமான துரோகமும் நெருங்காமல் நிம்மதியாக வாழ்ந்தார்கள்;


குடும்பத்தில் இருக்கும் ஒருவர் தினமும் ஜபித்து வந்தாலே குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அன்னை அரசாலை(மஹாவராகி)யின் அருள் கிட்டுகின்றது;


இந்தப் பாடலை ஒருமுறை உங்கள் கையால் எழுதிக் கொள்ளவும்;அப்படி எழுதியதையே ஜபிக்கவும்;ஒரே நாளில் எழுத சிலருக்குத்தான் நேரம் இருக்கும்;அவ்வளவு வேகமான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;ஏழு நாட்களுக்குள் (தினமும் ஐந்து அல்லது ஏழு பாடல்கள் வீதம்) பார்த்து எழுதி வைத்துக் கொள்வது அவசியம்;


ஜபிக்கும் போது,தலைப்பினை வாசிக்க வேண்டியதில்லை;


அன்னை அரசாலை(மஹா வராகி) பற்றிய பலவிதமான நூல்கள் கிடைக்கின்றன;ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொருவிதமான பாடல் வரிசைகளும்,வார்த்தை வித்தியாசங்களும் இருப்பதைக் காணலாம்;இதுவே முறையான முழுமையான மற்றும் பிழையற்ற பாடல் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்;


ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே


26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

சாரதா நவராத்திரியில் அன்னை அரசாலையின் அருளைப் பெறும் வழிமுறை

பிரபஞ்ச அன்னை அரசாலை(மஹாவராகி)யின் அருளைப் பெற விரும்புவோர் இந்த நவராத்திரி நாட்களில்(2.10.16 ஞாயிற்றுக்கிழமை முதல் 11.10.16 செவ்வாய்க்கிழமை வரை) தினமும் இரவு நேரத்தில் பின் வரும் பாடலை மனதுக்குள் ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;

இங்கே தரப்பட்டிருக்கும் அன்னையின்படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்;12 இன்ச் நீளம், 8 இன்ச் அகலத்திற்கு படமாக எடுத்து,பிரேம் அல்லது லேமினேஷன் செய்து கொள்ளவும்;

அன்னையின் படத்துக்கு அருகில் மாதுளம் பழம் அல்லது செவ்வாழைப்பழம் ஒன்றை தினமும் படையலாக வைக்கவும்;மறு நாள் காலையில் இதை எடுத்து சாப்பிடலாம்;வீட்டில் உள்ளவர்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்;

அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு,பச்சைத் துண்டின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஒரு நெய் தீபம் வடக்கு நோக்கி ஏற்றி வைக்க வேண்டும்;இன்னொரு தீபத்தை இலுப்பை எண்ணெயால் ஏற்றி வைக்க வேண்டும்; இரு கைகளிலும் ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக் கொள்ள வேண்டும்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா என்று 9 முறை ஜபிக்க வேண்டும்;

பிறகு,பஞ்சமி,தண்டநாதா,சங்கேதா, சமேஸ்வரி,சமய சங்கேதா,வராகி,போத்ரிணி,சிவை,வார்த்தாளி, மஹாசேனா,ஆக்ஞாசக்ரேஸ்வரி,அரிக்நி என்ற 12 பெயர்களை முதல் 30 நிமிடங்கள் ஜபிக்க வேண்டும்;அதன் பிறகு,பின்வரும் பாடலை அடுத்த 30 நிமிடம் ஜபிக்க வேண்டும்;

ஐயும் கிலியும் எனத் தொண்டர்போற்ற அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

குறிப்பு:இந்த பக்கத்தில் வரும் அன்னை வராகி பற்றிய பதிவுகளை தொடர்ந்து வாசித்து அதன் படி பின்பற்றி வருபவர்கள் இந்த 10 நாட்கள் மட்டும் இந்தபதிவின் படி மட்டும் பின்பற்றலாம்;11 ஆம் நாளில் இருந்து மீண்டும் பழைய படி ஜபத்தினைத் தொடரலாம்;