Saturday, September 3, 2016

எனது மருத்துவ அனுபவம்.


சர்வாங்க வாதம். உடலின் எல்லா மூட்டுக்களிலும் வீக்கம். வலி. முப்பது வயது வாலிபர். இரண்டு முறை டைபாய்டு வந்த பிறகு நடக்கவே முடியவில்லை.
ஒரு அரசாங்க மருத்துவமனையின் மருத்துவர் "இதனை குணப்படுத்தவே முடியாது" என்று சொல்லிவிட்டார். நம்பிக்கையிழந்த அவர் ஒரு நண்பர் மூலம் என்னிடம் வந்தார்.
வரும்போது இரண்டு நபர்கள் தாங்கி நடத்தி வந்தார்கள். சிகிச்சை ஆரம்பித்தேன். மறுநாள் கைத்தடியுடன் ஒருவர் துணையுடன் வந்தார். நான்காம் நாள் அவராகவே நடந்து வந்தார்.
பத்தாம் நாள் வேலைக்கு சென்று வர ஆரம்பித்து விட்டார். தற்போது என்பது சதவீதம் குணம். சிகிச்சை தொடர்கிறேன்.
குருவருளும் இறையருளும் துணை நிற்கிறது டாக்டர் யோகா ரவி அவர்களுக்கு!

ஆன்மீக நாடி பார்த்து வழி காட்டுதல்


வந்தவர் நாற்பத்தைந்து வயது பிராமணர். வெளி நாட்டில் பார்த்துக் கொண்டிருந்த வேலை பறிபோய் தற்போது சென்னையில் இருக்கிறார்.
ஆன்மீக நாடி பார்த்தேன். பூணூல் அணிந்த பிறகு பிராமணர்கள் மொட்டை அடிக்கக் கூடாது. ஆனால் என் தெய்வம் கருப்பண்ணசாமி சமயபுரம் சென்று மொட்டையடித்து, அர்ச்சனை செய்து வரச் சொல்லி உத்தரவிட்டார்.
அந்த நண்பரும் தயங்காமல் உடனே செய்து முடித்தார். மொட்டை அடித்து அர்ச்சனை செய்த பிறகு அங்கிருந்த குருக்கள் "அம்பாள் வீதி உலா வரப் போகிறாள். இருந்து வழிபட்டு செல்லுங்கள்" என்று சொல்லியிருக்கிறார்.
நண்பர் அம்பாள் புறப்படும் இடத்திற்கு சென்றவுடன் அங்கிருந்த ஒரு வயதான பெண்மணி "உனக்கு இப்போதுதான் இங்கு வர வழி தெரிந்ததா? இங்கு அமர்ந்திருந்து அம்பாள் வீதி உலா செல்லும்போது கூடவே சென்று வழிபட்டு பிறகு புறப்படு. இனி நல்லதே நடக்கும்" என்று கூறியிருக்கிறார்.
நண்பரும் அவ்வாறே வழிபட்டு முடித்து சென்னை வந்து விட்டார்.
சரியாக நாற்பத்து எட்டு நாட்களுக்குள் அவர் வேலை செய்த வெளிநாட்டு நிறுவனத்தின் மேலாளர் முன்பை விட அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கான விசா அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறார்.
நண்பர் மிக்க மகிழ்ச்சியுடன் என்னுடன் செய்தியை பகிர்ந்து கொண்டார்.
குருவருளும் இறையருளும் துணை நிற்கின்றன. தெய்வம் நல்வழி காட்டுகிறது.
குருநாதருக்கும் தெய்வ சக்திக்கும் நன்றி.

கருமையான முகத்தை நிறம் மாற்ற வல்ல சித்த மருந்து பஞ்சகல்பம் FORMULA உங்களுக்காக




இரண்டு நாட்களாக நிறைய போன் அழைப்புகள். விலை விபரம், எப்படி பயன் படுத்துவது, SIDE EFFECT உண்டா என்ற கேள்விகள். நிச்சயம் SIDE EFFECT கிடையாது.
விலையும் நியாயமான விலைதான் வைத்திருக்கிறோம். அதன் மருந்துகள் விபரம் பின் வருமாறு :
நெல்லி முள்ளி 300 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
கடுக்காய் தோல் 200 கிராம்
வேப்பம் வித்து 100 கிராம்
வெள்ளை மிளகு 225 கிராம்
இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி சுத்தம் செய்து காய வைத்து மெசினில் கொடுத்து சூரணமாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து சூடான பாலை ஊற்றி கிளறினால் பேஸ்ட் போன்று வரும். இதனை முகத்தில் கண்களில் படாமல் பூசி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். சோப்பு போட வேண்டாம்.
தொடர்ந்து முகத்தில் பூசி வர நிச்சயம் நிறம் மாறும். எந்தக் கெடுதலும் செய்யாது.
ஒரு சிலருக்கு மட்டும் சித்த, ஆயுர்வேத, ஹோமியோ ரத்த சுத்தி மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும்.
இது தயாராக எனது நண்பர் டாக்டர் சத்தியமூர்த்தி, (மயிலாப்பூர்) அவர்களிடம் கிடைக்கிறது. ஒரு பாக்கெட் ருபாய் நூறு ஆகும். கூரியர் செலவுகள் தனி.
9283 155 215 என்ற நம்பரில் தொடர்பு கொண்டு பேசினால் நண்பர் அனுப்புவார்.
இதில் நாங்கள் அதிக லாபம் வைக்க வில்லை. ஆதலால் நண்பர்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
Dr Yoga Ravi,
B3 Annapoorna Apartments,
2 Aalaiyamman Koil Street,
Teynampet, Chennai 600 018.
Phone : 9444 192 892
Time : Week days morning 10 - 12 : evening 5 - 8
Sunday Holiday
(I usually visit temples & Siddhar Samadhis on Sundays)
கூரியரில் அனுப்ப டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களின் போன் நம்பர் : 9283 155 215.
நிற மாற்றம் குறித்த புகைப் பட ஆதாரம் மீண்டும் இத்துடன் இணைத்துள்ளேன். படம் FLASH போட்டு எடுத்ததா, போடாமல் எடுத்ததா என்றெல்லாம் கேள்வி வருகிறது. இது உண்மையான புகைப்படம்தான். கிராபிக்ஸ் இல்லை. பத்து நாளில் ஏற்பட்ட மாற்றம் இது. சிலருக்கு நாள் அதிகமாகலாம். ஏனென்றால் இவர் என்னுடைய சர்வ ரோக நிவாரணி மூலிகை சொட்டு மருந்து பயன்படுத்துகிறார். மூலிகை மருந்து இல்லாமலும் இந்த மருந்து பயன்படும். எல்லோருக்கும் பயன் பட வேண்டும் என்பதற்காக ஆதாரம் இணைத்துள்ளேன்.
நன்றி.

மந்திரம் சொன்னால் தெய்வம் வருமா?

-----------------------
ஆன்மீகத்தின் மிக முக்கியமான பதிவு இது. நிறைய மனிதர்களுக்கு குரு மூலம் உபதேசம் வாங்கி ஞானமடைவதற்கு இன்னும் பத்து சதவீதமே இருக்கும் நிலையில் "நாம் செல்லும் வழி சரிதானா?" என்ற சந்தேகம் தோன்றி விடும்.
மந்திர ஜபத்தின் மூலம் சாதாரண மனிதன் என்ற நிலையை விட உயர்ந்த நிலையை அடையலாம். ஆனால் இதனை அடைவதற்கு சில எதிர் மறை சக்திகள் தடையாக இருக்கும். வைராக்கியத்துடன் போராடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
நம் சொல்லும் மந்திரம் சித்தி அடைகிறது என்பதற்கும், நமக்கு அவநம்பிக்கையை களைந்து நம்பிக்கை ஊட்டுவதற்கும் சில நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடர்ந்து ஜபம் செய்பவரின் வீட்டில் இரவு பன்னிரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை கொலுசு சப்தமும், மணி சப்தமும் கேட்கும். தெய்வம் நம் வீட்டில் நடமாடுகிறது என்பதன் அடையாளம் இது.
நான் கடுமையாக ஜபம் செய்ய ஆரம்பித்தவுடன் எனது வீட்டில் மேற்கண்ட இரண்டு சப்தங்களும் இரவில் ஒலிக்க ஆரம்பித்தன.
எனது மனைவி பயந்து என்னை எழுப்பி "கொலுசு சப்தம் கேட்கிறது. பயமாக இருக்கிறது" என்று கூறுவார்.
நான் "நமது வீட்டில் அம்பாள் நடமாடுகிறாள் என்பதன் அடையாளம் இது. மகிழ்ச்சியாக இரு. அம்பாளுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்தியம் செய். அவள் நமக்கு வேண்டியதைக் கொடுப்பாள்" என்று கூறுவேன்.
இது எனது வீட்டில் உண்மையாக நடந்த விஷயம்.
குரு மூலமாக மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்யும் அன்பர்கள் நம்பிக்கையாக ஜபம் செய்யவும். நிச்சயம் தெய்வம் நம்முடைய வீட்டில் நடமாடும். நீங்கள் உயர் நிலை அடையலாம்.
நன்றி.Dr Yoga Rav

நோயற்ற வாழ்வு எனும் தலைப்பில் சொற்பொழிவு



நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
நான் மேற்கண்ட தலைப்பில் என்னுடைய 25 வருட அனுபவத்திலிருந்து சொற்பொழிவு நிகழ்த்த தயாராக உள்ளேன்.
சென்னையில் அல்லது தமிழ்நாட்டின் எந்த ஊரில் இருக்கும் நண்பர்களும் ஏற்பாடு செய்தால் வந்து பேசத் தயாராக இருக்கிறேன்.
குறைந்த பட்சம் ஐம்பது நண்பர்களாவது இருந்தால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும்.
ஞாயிற்றுக் கிழமை மட்டுமே என்னால் வர முடியும்.
இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு போக்குவரத்து, தங்குமிடம் ஏற்பாடு செய்தால் போதும். எனக்கு FEES எதுவும் வேண்டாம்.
இது என்னிடம் நோயாளிகளை வரவழைக்க விளம்பர நிகழ்ச்சியல்ல. எனக்குத் தெரிந்ததை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவலில் நடத்தும் நிகழ்ச்சி.
நீங்கள் எந்த மருத்துவ முறையை பின்பற்றினால் குணமடையலாம் என்று நான் கூறுவேன். உங்கள் ஊரில் உள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் செல்லுமாறு கூறுவேன்.
பேசும் பொருள் பின்வருமாறு :
நோயற்ற வாழ்வுக்கு :
-------------
வள்ளலார் அருளிய காயகல்பம் "காலை உணவு"
(வெள்ளை கரிசாலை, தூதுவளை, முசுமுக்கை, சீரகம் கலந்த கலவை)
எளிய முறை யோகாசனங்கள். மூன்றே மூன்று ஆசனங்கள், பிராணாயாமம், தியானம்.
நோய் வந்தபின் குணப்படுத்தும் முறைகள் :
---------------------------
சிகிச்சை முறைகளாவன :
அக்குபஞ்சர், சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம், யோகாசனங்கள், வர்ம சிகிச்சை, ஆன்மிகம்.
எந்த நோய்க்கு எந்த மருத்துவ முறை ஏற்றது என்பதை என்னால் கூற முடியும்.
எந்த நோய்க்கும் ஆங்கில மருத்துவ முறைதான் சிறந்தது என்று நம்பும் நம் மக்களுக்கு மாற்று முறை மருத்துவம் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தது என்பதை எடுத்துக் கூறுவேன்.
அவசர வியாதிக்கு ஆங்கில மருத்துவமும், மற்ற நோய்களுக்கு மாற்று முறை மருத்துவமும் சிறந்தது என்பதை அறிவுறுத்துவேன்.
ஆர்வமுள்ள நண்பர்கள் ஏற்பாடு செய்தால் நான் வரத் தயாராக இருக்கிறேன்.
வயதானவர்களுக்கு மட்டுமல்ல பதினைந்து வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கும் வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்த ஆவலாய் இருக்கிறேன்.
நண்பர்கள் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
மற்ற விபரங்கள் தொலைபேசியில் பேசுங்கள். நன்றி.
Dr Yoga Ravi,
Acupuncture & Hereditary Siddha Physician,
B3 Annapoorna Apartments,
2 Aalaiyamman Koil Street,
Teynampet, Chennai 600 018.
Phone : 9444 192 892
Time : Week days
morning 10 - 12 : evening 5 - 8
Sunday Holiday

பானகம் ஒரு பானம்

முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்
பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.(Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள். வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாக்கம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறுநிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாக்கம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள். நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.
தேவையான பொருட்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானாக்கம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்

ஆங்கில மருந்துகளின் பயனும் எதிர் விளைவுகளும்.


ஆங்கில மருந்துகளை அவசர வியாதிகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். பதினைந்து நாட்களுக்கு மேல் ஆங்கில மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள் (சர்க்கரை வியாதி தவிர. அதையும் தவிர்க்கலாம் நோய் ஆரம்பித்தவுடன் சித்த, ஆயுர்வேத, ஹோமியோ, acupuncture மருத்துவர்களிடம் வந்தால்).
ஆங்கில மருத்துவத்தின் வலி நிவாரணி "COMBIFLAM" பக்க விளைவுகளே இல்லாத மருந்து என்று டாக்டர்களால் சொல்லப்படுகிறது. ஆனால் அதை இரவில் சாப்பிட்டால் காலையில் கழிக்கும் சிறுநீரில் சர்க்கரை வெளியேறும். தொடர்ந்து சாப்பிட்டால் நீங்கள் சர்க்கரை நோயாளி ஆவீர்கள்.
ஆங்கில மருத்துவத்தின் HIGH BP MEDICINE வாழ்நாள் முழுதும் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால் MND (MOTOR NURON DISEASE) மற்றும் பிற வியாதிகள் வரும் என்பது சொல்லாமல் மறைக்கப் படுகிறது. பத்து வருடங்கள் சாப்பிட்டபிறகு மிகப் பெரும் வியாதிகள் வரும். அந்த வியாதிகளுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகளே இல்லை.
அதிக ரத்த அழுத்தத்திற்கு யோகாசனங்கள் மிகச் சிறந்தது. பதினாறாம் நாள் முதல் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள். சித்த, ஆயுர்வேதம், ஹோமியோ மருந்துகள் மூலம் அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.
என்னுடைய ஆலோசனை:
அவசர வியாதிகளுக்கு ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்துங்கள். அவசரம் முடிந்த பிறகு எங்களைப் போன்ற மருத்துவர்களைப் பாருங்கள். எந்தக் காரணம் கொண்டும் ஆரம்பத்திலேயே SPECIALIST DOCTORS களிடம் செல்லாதீர்கள். ஒரு நம்பிக்கையான MBBS மருத்துவரைக் குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்ளுங்கள்.
கடனில்லாமல், கஷ்டங்கள் இல்லாமல், நோயில்லாமல், பகையில்லாமல் தெய்வ நம்பிக்கையுடன் ஆனந்தமாக வாழுங்கள். நன்றி.
Dr Yoga Ravi