Friday, January 1, 2016

மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி 2.1.16 சனி(ஒரு வருடம் பண வரவை அதிகப்படுத்தும் அஷ்டமி இது)


தேய்பிறை அஷ்டமியானது ஒவ்வொரு மாதமும் வருகிறது;இந்தத் தேய்பிறை அஷ்டமியானது சனிக்கிழமை வருவதால் சர்வசக்தி வாய்ந்த தேய்பிறை அஷ்டமியாக அமைந்திருக்கின்றது;


துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,சிம்மம் ராசியினர் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்;


துலாம் ராசியினர் 70% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிக ராசியினர் 100% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
தனுசு ராசியினர் 50% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
மேஷ ராசியினர் 40% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
சிம்ம ராசியினர் 25% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிகச் சனியால கஷ்டப்பட்டுக்கொண்டும்,கண்ணீர்ச் சிந்திக் கொண்டும் இருக்கின்றனர்;இதில் பலர் தினசரி ஒருவேளை சாப்பிடக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்;

இவர்கள் அனைவரும் 2.1.2016 சனிக்கிழமையன்று வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக 2.1.17 வரை சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்;


2.1.16 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 வரையிலான நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுவதன் மூலமாக சனியின் தாக்கம் தீரும்;பண நெருக்கடிகள் உடனே விலகும்;அதே சமயம் 16.12.2017 வரை அசைவம் சாப்பிடாமல் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்பதை மறக்காதீர்கள்;

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்




5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

                                                        26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.


27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

                                                          28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.



30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

Thursday, December 31, 2015

நமது கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்


உங்களுடைய கடன் எவ்வளவு இருந்தாலும்,அது தீர ஜோதிட விஞ்ஞானம் வழிகாட்டுகிறது;ஆமாம்! அடுத்த 16 மாதங்களில் எந்த நாட்களில் மைத்ர முகூர்த்தம் வருகின்றன? என்பதைக் கணித்து கை.வீரமுனி. . .(ஸ்ரீவில்லிபுத்தூர்)யாகிய அடியேன்  8 ஆம் ஆண்டாக வெளியிட்டு வருகிறோம்;(2007 முதல்) தஞ்சை சரஸ்வதி மகால் நூலக வெளியீடான காலப்பிரகாசிகையில் உள்ள  ஒரு ஜோதிடக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு இதை வெளியிட்டு வருகிறோம்;

ஒருவரிடம் நாம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம்;அவரிடம் இங்கே குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் மைய பாகத்தில் அசலில் ஒருபகுதியை (உதாரணமாக ரூ.1000/-) திருப்பிக் கட்டவேண்டும்;அப்படி கட்டினால் வெகுவிரைவில் மீதி ரூ.99,000/-கடன் தீர்ந்துவிடும்;

கடந்த 7 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கானவர்கள் இந்த மைத்ரமுகூர்த்தத்தைப் பின்பற்றி தங்கள் கடன் களை அடைத்துள்ளனர்;

வங்கிக் கடனுக்கும் இது பொருந்தும்;தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா,மாலத்தீவு,லட்சத்தீவு பகுதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்;கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே,அது தீர வேண்டும் என்று முயலுபவர்களுக்காக இந்த ஜோதிட ரகசியத்தை வெளியிடுகிறோம்;

கந்து வட்டிக்கு இது பொருந்தாது;வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இதைப் பயன்படுத்திட விரும்பினால்,இந்திய நேரத்திற்கும் அந்த நாட்டு நேரத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பொறுத்து மாறுபடும்;

6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை
7.1.16 வியாழன் அதிகாலை 4.40 முதல் 6.40 வரை
17.1.16 ஞாயிறு மதியம் 12 முதல் 2 வரை
2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40
6.2.16 சனி காலை 6 முதல் 6.30 வரை
6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
6.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
13.2.16 சனி காலை 10.43 முதல் 12 வரை
20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 1.22 வரை
12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை
24.4.16 ஞாயிறு இரவு 8.40 முதல் 10.40 வரை
6.5.16 வெள்ளி காலை 4.36 முதல் 6.36 வரை
22.5.16 ஞாயிறு மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை
29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை
2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை
2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை
15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
26.11.16 சனி மாலை 4.40 முதல் 6.40 வரை
26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை
6.1.17 வெள்ளி மதியம் 1.14 முதல் 3.14 வரை
3.2.17 வெள்ளி காலை 10.40 முதல் 12.40 வரை
18.2.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை
2.3.17 வியாழன் காலை 8.52 முதல் 10.52 வரை
18.3.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை
25.3.17 சனி காலை 7.44 முதல் 9.44 வரை
25.3.17 சனி மதியம் 1.44 முதல் 3.44 வரை
25.3.17 சனி இரவு 7.44 முதல் 9.44 வரை

30.3.17 வியாழன் காலை 7.04 முதல் 9.04 வரை

Wednesday, December 30, 2015

உணவே மருந்து- 03

நம்முடைய மூளையின் மனதின் சிந்தனைகளை, எண்ணங்களை நாம் வார்த்தைகளால் சொல்கிறோம்.. எழுத்துக்களால் எழுதுகிறோம்.. ஆனால் நம் உடம்போ தன்னுடைய மொழியில் உடம்பில் இருக்கும் அனைத்து உறுப்புகளாலும் பேசுகிறது... தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை தன மீதே அறிகுறிகளாக எழுதுகிறது... கல்லீரலில் ஒரு பிரச்னை இருக்கிறது... சிறுநீரகத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது... இதயத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது.. என்பது போன்ற விஷயங்களை உடல் தனக்கு தெரிந்த மொழியில் அறிகுறிகளாக நமக்கு சொல்கிறது... அது காய்ச்சலாகவோ, தலைவலியாகவோ, கால்வலியாகவோ, கண்நகம் போன்றவற்றின் வற்றின் நிற மாற்றமாகவோ, ஏதேனும் ஒரு இடத்தில் வீக்கமாகவோ இருக்கலாம்... 

உடம்பில் இருக்கும் உறுப்புகள் பாதிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு அறிகுறியை கொடுக்கும்... ஆனால் அதை எல்லாம் கவனிக்க நமக்கு ஏது நேரம்... நமக்குத்தான் உடனடியாக ரிசல்ட் வேண்டுமே... ஆகவே தான் கடைகளுக்கு ஓடிச்சென்று அனாசினோ நோவால்ஜின்னோ வாங்கி சாப்பிட்டு அந்த அறிகுறிகளை மறைத்துவிட்டு மறுபடியும் ஓடத்தொடங்கி விடுகிறோம்.... நமது உடம்போ.. இப்படி சமிக்கை மொழியில் கதறி கதறி நாம் கண்டுகொள்ளாமல் போக... சம்மந்தப்பட்ட பாதிக்கப்பட்ட உறுப்பு வேறு வழியின்றி வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கும்.... அப்புறம் தான் நமக்கு அது உறைக்கும்.... உடனே ஒரு பெரிய மருத்துவமனையை நோக்கி ஓடுவோம்... அங்கே மருத்துவர் இரத்த பரிசோதனை, சிறுநீர்மல பரிசோதனை, எக்ஸ்ரே, ஈ.ஜி.சி, ஸ்கேன் இன்னும் என்னெல்லாம் இயந்திரங்கள் வாங்கி வைத்திருக்கிறார்களோ... அத்தனைக்கும் நம்மை வைத்து வேலை கொடுத்து விடு கடைசியாக சிறுநீரகங்கள் கெட்டுப்போய் விட்டது என்றோ... ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறது என்றோ ஒரு குண்டை தூக்கி நம் தலையில் வீசுவார்கள்...

அப்புறம் சேமிப்பை எல்லாம் கரைத்து மருந்துகளுக்கும் மருத்துவர்களுக்கும் கொடுத்து விட்டு உயிருடன் நடைபினமாகவோ உயிரற்ற முழு பிணமாகவோ தான் நாம் வெளியேற வேண்டும்...
இதற்கெல்லாம் யார் காரணம்...? வேறு யாரையும் குறை சொல்லவே முடியாது.. முழுக்க முழுக்க நாம் மட்டும் தான் காரணம்.. நம்முடைய "அவசர” புத்தி காரணம்.. நம்முடைய அறியாமை காரணம். நம்முடைய விளம்பர மோகம் காரணம்.. நம்முடைய முன்னோர்களை நாம் புறக்கணித்தது காரணம்.. அவர்களின் வாழ்க்கையை நான் ஏளனமாய் நினைத்தது காரணம்...


சரி.. என்னவோ நடந்தது நடந்துவிட்டது... இதிலிருந்து மீள என்ன வழி...?? முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை உணவு முறைக்கு மாறிவிட்டால் போதுமா?


நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை உணவு முறைகளுக்கு மாறினால் நாம் தொலைத்த ஆரோக்கியம் திரும்ப வந்துவிடுமா... என்றால்... நிச்சயம் முழுக்க வரவே வராது... பாதியளவு வேண்டுமானால் ஆரோக்கியம் வரலாம்... அப்படியானால் மீதி ஆரோக்கியம்??


நம் முன்னோர்கள் கம்பு, கேழ்வரகு, சாமை, திணை,குதிரைவாலி போன்ற சிரறுதானியங்களை அதிக அளவில் உட்கொண்டார்கள்.... அதில் கிடைத்த சக்தியால் நாள் முழுதும் உழைத்தார்கள்.. அதனால் உடலில் சேர்ந்த சக்தி (கலோரீஸ்) எரிக்கப்பட்டது... உடல் ஆரோக்கியமாய் திகழ்ந்தது.... ஆரோக்கியமான உடலை தொட்டுப்பார்க்கவே நோய்கள் அஞ்சியது... அதே உணவை நாம் உட்கொண்டால் என்னாகும்?
அவர்கள் வாழ்ந்த காலகட்டத்திற்கு அது சரி... ஏனென்றால் அன்று சொல்போன் இல்லை.. கம்ப்யூட்டர் இல்லை... டெலிவிஷன் இல்லை ரேடியேஷன் இல்லை.. போல்யூஷனும் இல்லை.. ஆனால் நம்முடைய காலகட்டத்திலோ இவைகள் எல்லாம் இருக்கிறது.. ஆரோக்கியமும் நிம்மதியும் இல்லை... என்னதான் நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறைகளை இன்று நாம் பின்பற்றினாலும் அவர்களை போல உழைக்க நாம் தயாராக இல்லை... அல்லது உழைக்கும் தேவை இருக்கவில்லை.... ஆகவே அந்த உணவுகளை உட்கொண்டு உடலால் உழைக்காமலேயே இருந்தாலும் அந்த சக்தி சேமிக்கப்படும்... அது நாளடைவில் நோயாக மாற்றமடையும்... கூடவே நாம் இன்று உபயோகிக்கும் மின்னணுக்கருவிகளின் கதிர் வீச்சும், மாசுபட்ட காற்றும் நிச்சயம் நோயை கொண்டுவரவே செய்யும்..


நமது ஊரில் இயற்கை உணவுகள் விற்பனை செய்வது எப்படி?

நாம் தினமும் எந்த மாதிரியான இயற்கை உணவினை சாப்பிட்டுவந்தால்,நமது குடும்பத்தில் இருக்கும் அனைவரது நோய்களும் சில வாரங்களில் குணமாகும்?

எந்தெந்த இயற்கை உணவினை எப்போது சாப்பிடவேண்டும்? எப்போது சாப்பிடக் கூடாது?

நமது ஊரில் இயற்கை உணவுகள் விற்பனை மையம் நாம் துவங்கியப் பின்னர் அதை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்துவது எப்படி?


இது போன்ற கேள்விகளுக்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 3 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர்;விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்;

உணவே மருந்து- 2; கார்ப்பரேட் கலாசாரம் தந்த வாழ்க்கை முறை...

இயந்திரமயமாகி விட்ட வாழ்க்கை முறை...கார்ப்பரேட் கலாசாரம் உருவாக்கி வைத்திருக்கும் "கௌரவ” உணவுப்பழக்கம்...காற்றில் பரவிக்கிடக்கும் கதிரியக்க வலை....இவற்றின் ஆக்கிரமிப்பில் நம்மிடம், நம் முன்னோர்களிடம் இருந்த விஷயங்கள் எல்லாம் கூட நமக்கு "எங்கேயோ கேட்ட விஷயங்களாய்” ஆகிப்போனதன் பலன் தான் இந்த கட்டுரைத் தொடரின் ஆணிவேர். 

காலைல இருந்து வேலை செஞ்சது உடம்பு அலுப்பா இருக்கு... ஒரு இஞ்சிக் கஷாயம் வச்சு குடிச்சா காலைல உடம்பு கலகலன்னு இருக்கும் என்ற முன்னோர்களின் வழி வந்த நாம்... 

”காலைல இருந்து உட்கார்ந்திருந்தது ரொம்ப டயர்டா இருக்கு.... ஒரு எனர்ஜி டிரிங் சாப்பிட்டா ரெப்ரஷ் ஆயிடலாம்” என்று சொல்லப்பழகி விட்டோம். அதை விட கொடுமையான விஷயம், அதை பெருமை என நம்ப ஆரம்பித்து விட்டோம். அப்படி நம்ப வைக்கப்பட்டோம் என்பதும் உண்மை. 

கரித்தூளையும், உப்பையும் சேர்த்து பல் துலக்குவதை அவமானம் என்று நம்பவைத்தவர்கள், இன்று "உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா... சார்க்கோல் இருக்கிறதா” என்று நம்மிடமே கேள்வி கேட்டு, அதையும் காசு கொடுத்து வாங்க வைத்து விட்டது தான் சோகம். 

"இதை” சாப்பிட்டால் இதய நோய் வராது என்று விளம்பரங்கள். மருத்துவ ஆய்வுகள் சொல்வதாகச் சொல்கிறார்கள். அடுத்த நான்கு வருடத்தில் "அதை”சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று மற்றொரு ஆய்வு சொல்கிறது. இடைப்பட்ட நான்காண்டுகளில் நாலு கோடிக்கு மேற்பட்டவர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி விடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு மருந்தோ-செயற்கை உணவோ வரும் முன்பு அவைகள் சோதனை சாலைகளில் எலிகள்-முயல்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படுமாம். ஆனால், இப்போதெல்லாம் கார்ப்பரேட்கள் அம்மாதிரியான சோதனைகளை ஆய்வகங்களில் செய்வதற்கு பதிலாக இந்தியா போன்ற நடுத்தர மக்கள் நிறைந்த நாடகள் மீதுதான் சோதனை செய்கின்றன. 

இருபது வருடங்களுக்கு முன்பு "மாரடைப்பு” மரணம் எங்கோ நிகழும். "கேன்சர்” என்பது எங்கோ கேள்விப்பட்ட வார்த்தையாக இருக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு, கேன்சர் மரணங்கள் நமது ஊரில், நமது தெருவில், நமது வீட்டிலே கூட நிகழும் பேரபாயம் நிகழ்வதைக் கண்கூடாகக் காண முடிகிறது. யார் சொல்வதை நம்புவது, யார் சொல்வதை நிராகரிப்பது, எது ஆரோக்கியம், எது கெளரவம், எது நல்லது, எது கெட்டது... எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லாவிட்டாலும் சில தெளிவுகளையாவது இனி வரும் கட்டுரை தொடர்கள் நிச்சயம் கொடுக்கும் என நம்பலாம்.


உணவே மருந்து- 1

நொறுங்க தின்றால் நூறு வயது... என்று பழமொழி உருவாக்கிய நம் முன்னோர்களின் வழித் தோன்றலகளாகிய நாம் இன்று நாற்பதை தொடும் போதே "சுகரு ஏறிப்போச்சு... ரெண்டு சப்பாத்திக்கு மேல சாப்பிட கூடாதாம்...” என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம்.... 

"உப்பில்லா பண்டம் குப்பையிலே..”என்று சொன்னவர்களின் வாரிசுகள் "பிரஷரு ஏறிப்போச்சு... உப்பு அதிகம் சேர்க்க கூடாது” என்று சொல்வதை வாடிக்கையாக்கி விட்டோம்... இதற்கெல்லாம் காரணம் என்ன... என்பதை நாம் தேடியலைய வேண்டிய அவசியமே இல்லை... நாம் எதை எல்லாம் மறந்துவிட்டோம்.. எதை எல்லாம் தொலைத்துவிட்டோம் என்று தேடினாலே போதுமானது.. 

கேழ்வரகையும், கம்பையும், தினையையும், குதிரைவாலியையும் உண்டு, வயல் வெளிகளில் நாள் முழுதும் உழைத்து ஆரோக்கியமாய் வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.. இன்று வயல்வெளிகளும் குறைத்து விட்டது... கேழ்வரகு-சாமை-திணை-கம்பு-குதிரைவாலி போன்ற சிறுதானியங்களும் அரிதாகி விட்டது... 

சேற்றில் கால்வைத்தவன் வாழ்க்கை முன்னேறாமல் போனதன் எதிர் விளைவு , அந்த உழைப்பாளிகளின் வாரிசுகள் அழுக்குப் படாமல் சம்பாதிக்கும் வித்தை கற்க ஆர்வமாகி விட்டார்கள்.. எல்லோருமே வெளிநாட்டு வேலைக்கோ - பெரிய நிறுவன வேலைக்கோ போகத்தொடங்கி விட்டார்கள்.. பொருளாதார அடிப்படையில் பார்த்தால் விவசாய வேலைகளை விட, ஒயிட் காலர் வேலை மிக மிக லாபகரமானதாகவே இருக்கிறது... ஆனால்.. இந்த லாபத்திற்காக நாம் கொடுத்த விலையின் மதிப்போ.... அதில் கிடைத்த லாபத்தை விட கோடி மடங்கு உயர்வானது.... ஆம்.. அதற்காக நாம் கொடுத்த விலை... நம் ஆரோக்கியமும், உழைப்பும், நிம்மதியும், ஆயுளும்... 

சிறுதானியங்களால் செய்யப்பட கூழ், கஞ்சி போன்ற எளிதில் ஜீரணமாகக்கூடிய சத்து நிறைந்த உணவுகள் , அவர்களுக்கு உழைக்க தேவையான சக்தியை கொடுத்தது... அந்த உணவுகளில் கிடைத்த சக்தி.. அவர்களின் உழைப்பால் கரைக்கப்பட்டது....சக்தி கிடைத்தாலும், சக்தி செலவழித்தாலும் ஒரு சீரான சுழற்சி முறையில் நடைபெற்றதால் நோய்கள் விலகி நின்றே வேடிக்கை பார்த்தது... ஆனால் இப்போதைய தலைமுறையோ... சக்தி கூடிய (கலோரீஸ்) பீஸா-பார்க்கர், கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிட்டு உடம்பில் கூடுதல் சக்தியை ஏற்றிக்கொண்டு, அதனை எரித்து கரைக்கும் உழைப்பு இல்லாமல் காலை முதல் மாலை வரை அலுவலகத்தின் நாற்காலியிலும், பிறகு வாகனங்களிலும், வீட்டிற்கு வந்து இணையத்தின் முன்போ- தொலைகாட்சியின் முன்போ அமர்ந்தும் பொழுதை கழித்து விடுவதால்... உடம்பில் ஏற்றப்பட்ட சக்தி செலவழிக்க வழியே இல்லாமல் உடம்பிலேயே சேமிப்பில் வைக்கப்படுகிறது... சேமிக்கப்படும் அதிக தேவையில்லாத சக்தியே கொழுப்பு... இந்த கொழுப்பு உடம்பில் சேர சேர அவைகள் இரத்தக்குழாய்களை அடைக்கின்றன... அப்புறம் நெஞ்சு வலி, மூச்சு திணறல், இதய இரத்த நாளங்களில் அடைப்பு, ஆஞ்சியோகிராம் - பைபாஸ் சர்ஜரி என்று ஐம்பது வயதை அடையும் முன்பாகவே முத்திரை குத்தப்பட்ட நோயாளிகளை வளம் வர தொடங்கி விடுகிறோம்... 

உணவே மருந்து- என்று உலகிற்கே சொல்லிக்கொடுத்த சித்தர்கள் நம் முன்னோர்கள்.. நாமோ... உணவே மாத்திரைகள்- மருந்துகளே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.. எத்தனையோ நூற்றாண்டு-ஆயிரம் ஆண்டுகளாய் தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் தான் இத்தனை மாற்றங்களை அடைந்திருக்கிறது... இது ஒரு குறுகியகால மாற்றம் என்பதால் இதை நிவர்த்தி செய்யவும் குறுகிய காலம் போதும் என்பதே எமது நம்பிக்கை... ஒரு குடும்பத்தின் உணவு முறை என்பது பெரியவர்கள் முடிவு செய்வது... எது ஆரோக்கியம்.. எது விஷம் என்ற விழிபுணர்ச்சியை குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் பெற்று விட்டால்... இனி வரும் தலைமுறையையாவது ஒரு ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்கலாம்....


உலக வல்லரசு அமெரிக்காவின் உண்மை நிலை என்ன?


உலக நாடுகள் அனைத்தும் உலக வங்கியிடம் வாங்கிய கடன் தொகை மொத்தத்தை விடவும்,உலக நாடுகளிடம் அமெரிக்கா வாங்கியிருக்கும் கடன் தொகை மிக அதிகம்;

அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால்,அதற்கு கடன் கொடுத்த நாடுகளுக்கு கடன் தொகை திரும்ப வராது;அதனாலேயே அமெரிக்காவின் பொருளாதாரத்தை இன்று உலக நாடுகள் தாங்கிப் பிடித்துக் கொண்டு வருகின்றன;


1990க்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களில் ஒரு காட்சி கண்டிப்பாக வரும்;இப்போது அம்மாதிரியான காட்சிகளை எந்த இயக்குநரும் வைப்பதில்லை;கடைசியாக அண்ணாமலை என்ற ரஜினிப் படத்தில் அம்மாதிரியான காட்சியை வைத்தார்கள்;
கதாநாயகி குஷ்பூவை ரஜினி ஏடாகூடமாக பார்த்துவிடுவார்;
அதை ரஜினி கடவுளே,கடவுளே என்பார்;
அடுத்த காட்சியில் குஷ்பூ,ரஜினியிடம் “நீதான் என்னை முழுசாப் பார்த்தே! அதனால் நீதான் என் புருஷன்”என்று ஜோடிகளை சேர்க்கும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்;ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்துப் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக இக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும்;

இந்த பண்பாடுதான் கடந்த 20,00,000 ஆண்டுகளாக லெமூரியக் கண்டத்தில் (தமிழ்நாடு) இருந்து உலகம் முழுக்கவும் பரவியிருக்கின்றது;இதைத் தகர்க்கும் விதமாக இணையம் அதன் இணையதளங்கள் செயல்படுவதால்,இன்று சீன நாகரீகம்,இந்து நாகரீகம்,இஸ்லாமிய நாகரீகம்,ஆப்ரிக்க நாகரீகம்,ஜப்பானிய நாகரீகம்,தென் அமெரிக்கா நாகரீகங்கள் என்று அனைத்தும் அமெரிக்காவின் இணைய நாகரீகத்தால் சிதையத் துவங்கிவிட்டன;இதனால் உலகம் முழுவதுமே ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடு அழிய ஆரம்பித்திருக்கின்றது;இதன் விளைவாக இன்னும் 12 மாதங்களில் உலக வல்லரசு அமெரிக்கா பஞ்சபூதங்களின் தாக்குதலுக்கு உள்ளாகும்;தனது வல்லரசு நிலையை இழந்தே தீரும்;


இப்போதே ஒவ்வொரு நாளும் 10,000 கோடி டாலர்கள் கடன் வாங்கித்தான் வெள்ளை மாளிகை நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது;

ஏதாவது ஒரு உலகப் போரை உருவாக்கி அதன் மூலமாக தன்னை,தனது உலக வல்லரசு என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளலாமா? என்று அமெரிக்க வெளியுறவுத்துறையும்,பாதுகாப்புத்துறையும் கடந்த சில ஆண்டுகளாக ஆலோசித்து வருகின்றன;

இரு நாடுகளுக்கு இடையே சண்டையை மூட்டிவிடுவது;
அந்த இரண்டு நாடுகளுக்கும் தனது போர் ஆயுதங்களை விற்பது இப்படியே கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்கா தனது உலக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது;இதைத் தகர்க்க எந்த ஒரு நாட்டாலும் முடியவில்லை;அவ்வளவு வலிமையான உளவுத்துறை அதனிடம் இருந்து வருகிறது;

எனவே,உலகமக்களின் கண்ணீரையும்,உலகமக்களின் காம உணர்ச்சியை வரைமுறையின்றி தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதாலும் உலக வல்லரசு அமெரிக்காவுக்கு பஞ்சபூதங்களே தண்டனை கொடுக்கப் போகின்றன;

நார்ஸ்டர்டாமஸீம்,பால்கன் நார்ஸ்டர்டாமஸீம் அமெரிக்காவும் சுதந்திர ஜாதகமும்,பல சர்வதேச ஜோதிட ஆய்வுக் கட்டுரைகளும் இதை மீண்டும் மீண்டும் உறுதி செய்தவாறு உள்ளன;


வாழ்க பாரதம்;வெல்க பாரதத்தின் பண்பாடு;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!


எமது ஜோதிட அனுபவங்கள் பகுதி 5(ஜோதிடர்களை பிரம்மா ஆக்கும் கலியுகம்)


அந்த நண்பருக்கு வயது 35 ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்றது;ஏற்கனவே இரண்டு குழந்தைகள் அவருக்கு! அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த போது,ஒருமுறை எம்மை சந்தித்தார்;அப்போது நாங்கள் நான்கு ஜோதிடர்கள் ஒன்றாக காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தோம்;

மதுரை,ஈரோடு,வேலூர்,சென்னை போன்ற நகரங்களில் ஜோதிட ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன;அவைகள் அறக்கட்டளைகளின் கீழ் இயங்கிவருவதால்,அங்கே ஜோதிடர்கள் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விடுமுறை நாட்களில் சந்தர்ப்பங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன;


ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற சிறுநகரங்களில் ஜோதிடப் பயிற்சியே கிடைப்பது அரிது;இரண்டு ஜோதிடர்கள் சந்தித்துக் கொண்டால்,ஒருவரை பார்த்து இன்னொருவர் சந்தேகப்படுவது அல்லது பம்முவது(பயப்படுவது)தான் காலம் காலமாக நடந்து வரும் உண்மை;அதையும் மீறி சில ஜோதிடர்களை ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை ஒருங்கிணைப்பது வழக்கம்;அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில் அல்லது சிவகாசி சாலையில் அமைந்திருக்கும் மூவர் ஜீவசமாதியில் ஒரு ஜாதகத்தை வைத்துக் கொண்டு அதை ஆராய்வது வழக்கம்;

இதன் மூலமாக அங்கே வரும் ஜோதிடர்கள்,ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிட ஆர்வலர்களுக்கு ஜோதிட விழிப்புணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன;ஜோதிடர்களின் வறுமையும் குறையத் துவங்கியது;ஒரு நாளில் சுமாராக ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஜோதிட கலந்துரையாடல் செய்வது வழக்கம்;

அப்படி ஒரு நாளில் தான்,35 வயது நண்பர் அங்கே வந்தார்;வந்து,எங்களின் ஜோதிடப் புலமையைக் கவனித்துக் கொண்டே இருந்தார்;மறுநாள் எம்மை தனிமையில் சந்தித்தார்;


யோகமான ஜாதகம் நமக்கு இல்லை எனில் எப்படி வசதியாக வாழ்வது? என்று கேட்டார்;
யோகமான கிரக அமைப்பில் பிறந்திருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் போதும் என்று கூறினோம்;
அது முடியாவிட்டால் என்ன செய்ய?
நீங்கள் கேட்பது புரியவில்லை;என்றோம்;
யோகமான பெண்ணை திருமணம் செய்ய முடியாவிட்டால்,எப்படி வசதியாக வாழ்வது? என்று கேட்டார்;
உங்கள் ஜாதகத்தில் மறைந்திருக்கும் தோஷங்கள்,சாபங்களை நீங்களே நிவர்த்தி செய்தால் போதும்;வசதியான,வளமான வாழ்க்கை அமைந்துவிடும் என்று விளக்கினோம்;
சில நிமிடங்கள் ஸ்தம்பித்துப் போன அவர்,அடுத்த கேள்வியை வீசினார்;
அப்படி நிவர்த்தி செய்ய எவ்வளவு காலமாகும்?
குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும்;அதிகபட்சமாக 10 ஆண்டுகள் கூட ஆகலாம்; என்றதும்,இடைமறித்து,அடுத்த கேள்வியை வீசினார்;
“அதுவரைக்கெல்லாம் என்னால் பொறுக்க முடியாது;சீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆகணும்”அதுக்கு ஏதும் வழி இருக்கா? என்றார்;
எமக்கு சிரிப்புத் தாளவில்லை;வேகமாக பணம் சம்பாதித்தால்,அது வேகமாகப் போய்விடும் என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய அரசியலில் படுவேகமான உயர்ந்து,படுவேகமான வீழ்ந்தவர்களின் வரலாற்றை விவரித்தோம்;

ஒரு கேவலமான பார்வை எம்மை அவர் பார்த்தார்;அதில் நீ எனக்கு உதவ மாட்டாய்;உதவ முடிந்தாலும் செய்ய மாட்டாய் என்ற அவரது எண்ணம் புலப்பட்டது;பல்லைக் கடித்துக் கொண்டு போய்ட்டு வாரேன் என்று போய்விட்டார்;சில மாதங்கள் கடந்தன;ஒருநாள் மீண்டும் அவர் வந்தார்;


“எனது மனைவிக்கு இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறக்க இருக்கிறது” என்றார்;
அப்படியா! சுகப் பிரசவம் நடைபெற வாழ்த்துக்கள் என்றோம்;
டாக்டர் மேடம்,குறிப்பிட்ட நேரம் குறித்துவிட்டு வாங்க என்று கூறியிருக்கிறார்;என்பதை மெதுவாகவும்,எதிர்ப்பார்ப்போடும் கூறினார்;
அப்போது நிறைய ஓய்வு நேரம் இருந்தபடியால்,அவரிடம்,
“அப்படியா! ரொம்ப நல்லது;இப்போ நீங்க ஃப்ரீதானே?”என்று கேட்டோம்;
அதற்கு என்று காத்திருந்தவர் போல,படுவேகமாக ஆமாம் ஆமாம் என்று கூறினார்;
உங்கள் டாக்டர் மேடம் எனென்ன தேதிகள் கூறியிருக்கிறார்? என்று கேட்டோம்;
இந்த மாதம் 7,8,9 கூறியிருக்கிறார்;என்று அவர் உற்சாகம் கொப்பளிக்க விவரித்தார்;
சுமாராக 30 நிமிடங்கள் கரைந்தன;
“9 ஆம் தேதியில் இரண்டு நேரங்களை குறிப்பிட்டு,இந்த நேரத்தில் உங்கள் குழந்தை பிறந்தால்,சில ஆண்டுகள் வரை நீங்களும்,உங்கள் மனைவியும் கஷ்டப்படவேண்டும்;அல்லது தினமும் சண்டையிட வேண்டும்;அதன் பிறகு,நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்” என்றோம்;
அந்த நேரம் தான் எனக்கு வேண்டும்’ என்றார் படு உற்சாகமாக;
“தம்பீ! உங்களுடைய கஷ்டம் புரியுது;உங்களைப் பற்றியும்,உங்கள் வாழ்க்கை முறையைப் பற்றியும் விசாரிச்சதுல,நீங்கள் சிறு வயசில் இருந்தே பணத்தால் ரொம்ப அவமானப்பட்டு இருக்கீங்கனு கேள்விப் பட்டேன்;. . .”
அடிவயிற்றில் இருந்து கணீர் குரலில்,
“அண்ணே! நான் என்ன கஷ்டம்னாலும் பட்டுக்கறேம்ணே!நான் கோடீஸ்வரன் ஆகணும்;அந்த நேரத்தைக் குடுங்க.டாக்டர் மேடத்திடம் கொடுக்கணும்”என்று அவசரப்படுத்தினார்;நாம் சொல்வதைக் கவனிப்பதாக இல்லை;

(இன்றைய கால கட்டத்தில் இவரைப் போலத்தான் பலர் இருக்கின்றனர்;சிறுவயது முதல் உறவுகள்,நட்புகளின் பணத்திமிரால் பல்வேறுவிதங்களில் அவமானப்படுகின்றனர்;பரிதாபமாக இருக்கின்றது.உலகமயமாக்கல்,ஊழலால் நேர்மையாளர்கள் படும் கஷ்டம்,அரசியலின் சூழ்நிலை போன்றவை அப்பாவிகளையும் பேராசை மிக்கவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றது)

குழந்தை பிறக்க இருக்கும் நேரத்தை எழுதிக் கொடுத்தோம்;பத்து நாட்கள் கடந்தன;
அந்த 35 வயது நண்பர் போன் செய்தார்;
“அண்ணே! நீங்க சொன்ன நேரத்தில் சிசேரியன் செய்து குழந்தை பிறந்துடுச்சு;நான் கோடீஸ்வரன் ஆயிடுவேன்ல”என்று ஒரு தகவலோடு,ஒரு சந்தேகக் கேள்வியையும் எழுப்பினார்;

நாம் பொறுமையாக, “தம்பீ! நீங்க கோடீஸ்வரன் ஆன பிறகு,எம்மை மட்டுமல்ல;யாரையும் மதிக்க மாட்டீங்க;யாரிடமும் பழகவும் மாட்டீங்க”என்று கூறினோம்;அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை;அடுத்த 22 நிமிடத்தில் நேரில் வந்தார்; “அப்போ நீங்களே என் குழந்தைக்கு ஜாதகம் எழுதிடுங்க” என்றவர், ‘ஜாதகம் எழுதறதுக்கு எவ்வளவு தட்சிணை?’என்றார்.நாம் சொன்னதும் முழுத் தொகையையும் கொடுத்துவிட்டு பொறுமையின்றி புறப்பட்டுவிட்டார்;

45 நாட்களில் வந்து தமது குழந்தை ஜாதகத்தை வாங்கிவிட்டுப் போனார்;
குழந்தை பிறந்தது முதல் 1 வருடம் 7 மாதம் வரை வீட்டில் ஒரே சண்டையாக இருக்கும்பா என்றோம்;சரிங்கண்ணே! நான் சமாளிச்சுக்கிறேண்ணே என்றார் எரிச்சலுடன்!

ஆறு மாதங்கள் கடந்தன;

ஒரு நாள் ஓடி வந்தார்; இடம் பொருள் பார்க்காமல், “ அண்ணே! உங்கள் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்ணே. . .” என்று இழுத்தார்;

தம்பீ! இப்போ ராஜபாளையத்துக்கு போய்க்கிட்டு இருக்கேன்;நீங்கள் மாலையில் வர்றீங்களா? என்றோம்;
நானும் உங்க கூட வர்றேனே? என்ற வார்த்தைகளில் கெஞ்சல் தெரிந்தது;

சரி வாங்க என்று அடுத்து வந்த தனியார் பேருந்தில் ஏறினோம்;
உட்கார சீட் கிடைத்தது;பேருந்தில் கூட்டம் அதிகம் இல்லை;உட்கார்ந்த உடனே அவர் அழுத அழுகையில் பேருந்தில் இருந்த அனைவருமே திரும்பிப் பார்த்தனர்;இவரோ,அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓவென பெரும் கூச்சல் போட்டு அழ ஆரம்பித்தார்;

கண்டக்டரோ பேருந்தை அவசரமாக நிறுத்திவிட்டு என்னவென்று விசாரிக்க வந்துவிட்டார்;கூடவே டிரைவரும்! எமக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது;இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது?என்று தெரியாமல் அந்த கணத்தில் தடுமாறித்தான் போனோம்;

அழுகையை நிறுத்திய அந்த நண்பர்,கண்டக்டரிடம், “அண்ணே! எனக்கு குடும்பக் கஷ்டம்;நீங்க தப்பா நினைக்காதீங்க” என்று உறுதியான குரலில் சொல்லிவிட,பேருந்து புறப்பட்டது;
அழுகையை நிறுத்தியவர்,எம்மிடம் நீங்கள் சொன்னது மாதிரி தினமும் என்னை ரொம்பக் கேவலமா என் பொண்டாட்டி திட்டுறா;கையில் எது கிடைச்சாலும் எடுத்து என் மேலே வீசுறா; இது எத்தனை நாளில் நிற்கும்? என்றார்;

குழந்தை பிறந்து எவ்வளவு நாள் ஆகுதுபா? என்று கேட்டோம்;
மனதில் கணக்கு போட்டவாறு, 4 மாசம் என்றார்;
“குழந்தைக்கு 1 வயது 7 மாசம் முடியும் வரை இதுதான்பா நடக்கும்” என்றோம்;

உடனே அதையும் மனக்கணக்கு போட்டு,கண்களை அகலமாக விரித்துக் கொண்டு, “இன்னும் ஒரு வருசம்,3 மாசமா? அதுவரைக்கும் என்னால் தாக்குப் பிடிக்க முடியாதுண்ணே!”என்றார்;

நமக்கு முணுக்கென்று கோபம் வந்தது;
அன்னைக்கு நான் பாத்துக்குறேன்னு சொன்னே? என்று பதிலுக்கு நாம் கத்தினோம்;

அந்த நண்பரோ கொஞ்சமும் அசரவில்லை; அதைவிட அதிகமான குரலில் கத்தியவாறு, “ஆமாம்! நான் தான் சொன்னேன்;. . .”என்றவர் சட்டென குரலினை தாழ்த்தியவாறு
“பரிகாரம் ஏதும் இருக்கா?”என்றார்;

“தம்பீ! இதுக்கு பரிகாரம் இல்லை;நீங்கள் உள்ளூரிலேயே லாட்ஜில் தங்கிக்குங்க;இது மட்டும் தான் வழி”என்றோம்;
எமது குரலில் இருந்த தீர்க்கமான பதிலைக் கேட்டு,அடுத்த ஸ்டாப்பில் இறங்கியவர்,(வன்னியம்பட்டி ஸ்டாப் அது=ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்துக்கும் நடுவே இருக்கும் ஸ்டாப் அது) மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போயேவிட்டார்;

பேருந்தில் இருந்தவர்கள் பார்த்த பார்வை இருக்கிறதே? என்னை வட்டிக்கு விடுபவனைப் போல பார்த்தார்கள்;

3 ஆண்டுகள் கடந்தன;அந்த 35 வயது நண்பர் இப்போது கார் வாங்கிவிட்டார்;ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில்(ராஜீவ் காந்தி நகர்) ஒரு பெரிய வீடு கட்டினார்;இப்போது எம்மை எங்கு பார்த்தாலும் கண்டுகொள்வதில்லை;கலியுகத்தின் அடையாளங்களில் ஒன்று இது;இன்று ஏற்றுமதித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!