Monday, July 6, 2015

உத்தரகோச மங்கை தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள்




1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.

4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.

9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.

12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.

17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.

26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.

27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.

30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்கு அன்னதானம் கொடுக்கலாம்.

33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.

34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால் இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் ஆகும்.

41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம்.

44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.

45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.

47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. 49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா.

56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.

59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

ஒம் நம சிவாய!!!
ஒம் நம சிவாய!!!
ஆன்மீக பயணம்!!!
ஆன்மீக பயணம்!!!
என்றென்றும்அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரேஅன்புடன்!!!!
என்றென்றும் சிவன் திருவடியின் கீழ் மீளா அன்பு சிவஅடிமையாக!!!என்றென்றும் சிவனடியார் திருவடிக்கு மிதியடியாய்!!!காலணியாய்!!!

இலக்கியம் காட்டும் சிவன்


சிவன் தாழ்ந்த நீண்ட சடையுடையவன்...கொன்றை மாலையைச் சூடியவன்...பிறைச்சந்திரனை அணிந்தவன்...கங்கையைத் தாங்கியவன்...வேதத்தை விளக்கியவன்...மலுப்படைக் கொண்டவன்...எட்டுக்கைகலை உடையவன்...புலித்தோலைப் போர்த்தியவன்...உமாதேவிக்கு ஒரு பாதியைப் பகிர்ந்தளித்தவன்...ஆனேற்றைக்(ரிஷபம்)கொடியாகவும் வாகனமாகவும் பெற்றவன்... என்பன போன்ற செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன... ஆனால் அவற்றுள் "சிவன்" எனும் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... 

திருமூலரின் திருமந்திரத்தில்தான் முதன் முதலில் சிவன் எனும் சொல் இடம் பெற்றுள்ளது...இந்நூலுக்கு முந்தியவையான.. மணிமேகலையிலும்...காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியிலும் "ஈசன்" என்ற சொல்லே ஆளப்பட்டது..

சைவத்தின் வகைகளில் மூலாகமம் பற்றிய விளக்கம்


மூலாகமத்தில் 4 பகுதிகள் உள்ளன....அவை....
ஞானபாதம்
யோகபாதம்
கிரியைபாதம்
சரியைபாதம்


இவற்றைப்பற்றி விளக்கம்...... 


ஞானபாதம்

இறைவன்...உயிர்....தளை...மூலப்பொருள் இயல்பு......
ஆறு தத்துவங்களின் இயல்பு...
36 படிமூறை வளர்ச்சி....
ஐந் தொழில்கள்.....
வீடுபேற்றின் இயல்பு...போன்றவை விளக்கப்பட்டுள்ளன......


யோகபாதம்

இவை யோகத்தின் எண்படி நிலைகளை விளக்குகின்றன...
நாடி சுத்தியை விளக்கூகிறது...

கிரியாபாதம்

இதில் திருக்கோயில் அமைக்கும் பூமியின் இலக்கணம்........
பூகர்ஷணம்.....
வாஸ்து சுத்தி....
கிராம இலக்கணம்.....
திருக்கோயில் இலக்கணம்....
இலிங்க வகைகள்.....
பீட இலக்கணம்...
சந்திரசேகரர்...நடராசர்..போன்ற மூர்த்திகளின் இலக்கணம்......
நாள்..மாதம்..ஆண்டு..வழிபாடு..பிரதிஷ்டை....
தீக்கை...போன்ற விளக்கங்கள் உள்ளன..


சரியைபாதம்

இதில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய நாட்கடன்.....ஆத்ம வழிபாடு.......
கோயில் பணிகள்....பற்றிய விளக்கங்கள் உள்ளன......

ஓம் சிவாயநம.....
(இவை சுருக்கி உரைக்கபட்டவை)...

யோகிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வதற்கான இரகசியம்..... இன்றைய திருமந்திரத்தில்....


"ஈராறுகால் கொண்டெழுந்த புரவியை
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீராயிரமும்
நிலமாயிரத்தாண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே".....
விளக்கம்
பதினாறு மாத்திரை அளவு ஓடிக்கொண்டிருக்கும் உயிர்சக்தி வீணாகி விரையாகாமல் இருக்கும்படி மூச்சுப்பயிச்சியை விதிப்படி செய்து அடக்கி ஆளும் படைத்த யோகிகள் நீரினுள் மூழ்கியிருந்தாலும் நிலத்தினுள் புதைந்து இருந்தாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உடல் அழியாது இருப்பார்கள்.....இது நந்தியின் வாக்கு....

 பதினாறு மாத்திரை சுவாச ஒட்டத்தில் நான்கு மாத்திரை உள்ளேயும் பாக்கி பணிரெண்டு மாத்திரை வெளியேயும் ஒடிக்கொண்டிருக்குறது.இந்த பனிரென்டு மாத்திரை உள்ளே அடக்கி அங்கே அடங்கும்படி பிராணயாமம் செய்ய வல்லார்கு காயசித்தி ஆகும்....
சுவாசம் வெளியே கழிய ஆயுள் குறைகிறது...சுவாசத்தை உள்ளே பந்தனம் செய்ய ஆயுள் நீடிக்கிறது...


ஓம் சிவாய நம......

இந்தியா ஏன் இன்னும் வல்லரசாகவில்லை? பாகம் 3





பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் கேள்விப்பட்டுள்ளீர்களா? அவரது எழுத்துக்கள் புகழ் பெற்றவை;அவர் இந்தத் தலைப்பில் ஒரு உண்மையை ஜோக்காக எழுதியிருக்கிறார்;

அமெரிக்கா ஏன் வல்லரசு நாடாக இருக்கிறது?

ஏன் எனில்,அது உலகில் உள்ள எல்லா நாடுகளின் உள் நாட்டு விவகாரங்களிலும் தலையிட்டுக் கொண்டே இருக்கிறது.அதனால் தான்!

இந்தியா ஏன் இன்னும் வல்லரசு நாடாக ஆகவில்லை?

ஏன்னா இந்தியா தனது உள்நாட்டு (இருமாநிலம்) விவகாரங்களில் கூட தலையிடுவதே இல்லை;
60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சியில் ஆண்ட லட்சணத்தைத் தான் குஷ்வந்த் சிங் சூசகமாக தெரிவித்திருக்கிறார்;

ஆனால்,இப்போது இந்த ஜோக்கையே பொய்யாக்கும் விதமாக நம்ம பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார்;மந்திரிகள்,மத்திய அரசின் செயலாளர்களை டிரில் எடுத்து வேலை வாங்கிவருகிறார்;

அதுவும் ஒரு மாநில முதலமைச்சராக பணிபுரிந்து பிறகு பிரதமர் ஆனதால்,மாநிலங்களின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்;அதன் விளைவாக மத்திய அரசுக்கும்,மாநில அரசுகளுக்கும் இடையே இணக்கமான நல்லுறவை வளர்த்துக் கொண்டிருக்கிறார்;(காங்கிரஸ் அரசு மாநில அரசுகளிடம் சர்வாதிகார மனப்பான்மையோடும்,மாற்றாந்தாய் மனப்பான்மையோடும் பழகியிருக்கிறது.மாநில காங்கிரஸ் ஆட்சி எனில் அனைத்து உதவிகளையும் செய்வது;எதிர்க் கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த மாநிலத்தையே கண்டு கொள்ளாமல் இருப்பது!)எப்படியாவது நாட்டின் கடைக்கோடி இந்தியனுக்கும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் போய்ச் சேருவதில் முனைப்பாகச் செயல்படுகிறார்;

இதைப் பற்றி பா.ஜ.க.கட்சியினரே மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்களா?

கடந்த 60 ஆண்டுகளில் நமது நாட்டில் தேச விரோத சக்திகள் செழிப்போடு எந்த எதிர்ப்பும் இன்றியும் வளர்ந்தன;ஒரு மாநகரில் உருவாகி,மாநிலங்கள் தோறும் ஊடுருவி,தேசிய சக்திகளாக வளர்ந்துள்ளன;இதில் அரசியல் கட்சிகள்,தீவிரவாத அமைப்புகள்,என்.ஜி.ஓக்கள்,அரசியல் தரகர்கள்,பன்னாட்டு நிறுவனங்கள்,திரைப்படை நிறுவனங்கள்,விளம்பரம் வடிவமைக்கும் நிறுவனங்கள்,வட்டிக்கடை நிறுவனங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்;அவைகளுக்கு ஆப்பு விழுந்ததால் இப்போது மோடி அணியும் சட்டையின் விலை ரு.10,00,000/-என கூப்பாடு போடுகின்றன;(உண்மையில் அதன் விலை ரூ.7000/-என்பதை பா.ஜ.க.வினரே சொல்வதில்லை;)

எப்படியோ 2016 ஆம் ஆண்டில் இருந்து நமது பாரத நாட்டிற்கு பொற்காலம் துவங்கிவிட்டது;

ஒவ்வொரு பாரத தேசத்துக் குடும்பமும் மாதம் தோறும் குறைந்தது ரூ.50,000/-சம்பாதிக்கத் துவங்கும்;என்பதை பாரத தேசத்தின் சுதந்திர ஜாதகம் தெரிவிக்கிறது;

எனவே,மோடி அரசாங்கத்திற்கு கை கொடுப்போம்;நமது நாட்டை வல்லரசு நாடாக மாற்றிட நமது வேலையில் முழு அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணிபுரிவோம்;

இந்தியா ஏன் இன்னும் வல்லரசாகவில்லை? பாகம் 2




ஏன்னா யாரும் தன்னை,தனது குறைகளைக் கண்டறிந்து தன்னை சீர்திருத்தத் தயாராக இல்லை;அடுத்தவர் மீது பழியைப் போட்டு தன்னை,தனது பதவியைத் தக்க வைக்கவே பார்க்கிறார்கள்;இது மேற்குநாடுகளுக்கு வசதியாகப் போய்விட்டது;

1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பிச்சைக்காரி கூட 5 கிலோவுக்கு தங்க நகைகள் அணிந்திருந்தாள்;எந்தவீட்டிற்கும் கதவே கிடையாது;ஏன்னா இங்கே திருட்டே கிடையாது;என்று மார்க்கோ போலோவும்,யுவான் சுவாங்கும் எழுதியிருப்பதைப் பார்த்து நாம் பெருமைப்படுகிறோம்;இன்று இந்தப் பெருமைகளை ஏன் நம்மால் மீண்டும் நிலைநிறுத்த முடியவில்லை;

பங்களாவில் வசிப்பவர்களும் இலவச மிக்ஸி,கிரைண்டருக்கு ஆசைப்படுவதன் காரணம் என்ன?

கடந்த 6 தலைமுறையாக சுமாராக 300 ஆண்டுகளாக நமது தேசத்தின் பெருமைகளும்,செல்வங்களும் மேற்கு நாடுகளால் சூறையாடப்பட்டுவிட்டன;இப்போது மிஞ்சியிருப்பது சூதுவாது தெரியாத அப்பாவி இந்தியர்களின் அயராத உழைப்பு மட்டுமே!

திட்டமிட்டும்,ஒருங்கிணைந்தும் நமது பாரதப் பண்பாட்டின் வேர்களில் வெந்நீரும்,ஆசிட்டும் ஊற்றப்பட்டு வருகின்றன;இதை நாம் உணருவதில்லை;

இங்கிலீஷ் மீடியம் படித்தவர்களுக்கு அவர்களின் குலதெய்வத்தின் பெருமை,மகிமை,வழிபடுவதன் அவசியம் இன்று தெரிகிறதா? எனக்குத் தெரிந்த 9 வயது சிறுமி தனது அன்னையிடம் கூறுகிறாள்; “நான் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறேன்;நான் ஏன் நீ சாப்பிட்ட எச்சில் தட்டை கழுவ வேண்டும்?” என்று.

தனது குறைகளைத் தானே கண்டறிந்து தன்னை சீர்திருத்துபவர்கள் வெகு வேகமாக இல்லாவிட்டாலும்,நிதானமாகவும்,உறுதியாகவும் உயர்ந்த பதவிகளுக்கு வந்துவிடுகின்றனர்;நிர்வாக அடுக்கில் தனது அதிகாரத்தின் மூலமாகவே அவர்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

திரைப்படங்களும் விதிகளை மீறுபவர்களை ஹீரோவாக சித்தரிக்கின்றன;அப்படி சித்தரிக்கத் துவங்கி 100 ஆண்டுகள் ஓடிவிட்டன;சுமாராக 10000 திரைப்படங்கள் பொதுமக்கள் மனதில் க்ரிமினல்களை ஹீரோ என நம்ப வைக்கின்றன;பிறகு எப்படி தர்மம்,நீதி,நியாயப்படி வாழ்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்?

எலிஸெபத் டெய்லர் என்று ஒரு பெயரை 1980க்கு முன்பு பிறந்தவர்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பர்;இதற்கு விளக்கம் என்ன தெரியுமா?

எலிஸெபத் இப்போது டெய்லர் என்பவரின் மனைவியாக இருக்கிறார் என்று அர்த்தம்;(அப்போ இதற்கு முன்பு எலிஸெபத் ஜேம்ஸ் ஆக இருந்திருக்கலாம்;இன்னும் சில காலம் கழித்து எலிஸெபத் மார்ட்டினாகவும் மாறலாம் என்றும் அர்த்தம்)

இதை அப்படியே ஈயடிச்சான் காப்பியாகி நம்ம நாட்டில் நிர்மலா பெரியசாமி,சந்தியா ராஜகோபால் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதுதான் இந்துப் பண்பாடா?



இந்தியா ஏன் இன்னும் வல்லரசாகவில்லை?






ஏன்னா, இங்கே யாரும் அவங்கவங்க வேலையை மட்டும் பார்ப்பதில்லை;

ஒரு உதாரணம் பார்ப்போமே! நமது தெருவில் இருக்கும் பங்கீட்டு கடை(ஓ! ரேஷன் கடைன்னு சொன்னாத்தான் புரியும்)க்கு அரிசியோ,மண்ணெண்ணெயோ வாங்கப் போறோம்னு வெச்சுக்குவோம்;அங்கே என்ன நடக்குது?

தாமதமாக வரும் நம்மத் தெருக்காரர் ஒருத்தர்,அங்கேயும் அரசியல் செல்வாக்கைக் காட்டி முதல் ஆளாக அரிசி வாங்கிட்டுப் போறாரு;

அரசியல் எவ்வளவு பெரிய விஷயம்! கேவலம் அரிசி,சீமெண்ணெய் வாங்குறதுக்குப் பயன்படுத்துனா, எப்படி நாட்டுப் பற்று மிக்க,மக்கள் நலன் கொண்ட அரசியல் தலைவர்களை அதிகாரத்துக்குக் கொண்டு வரமுடியும்?

உங்கள் சிந்தனைக்குத் தான் இதை எழுதுகிறோம்.

ஒரு சாதாரண ரேஷன் கடையிலேயே நாம ஒழுங்கா இருக்குறதில்லை;மக்கள் நாம ஒழுங்கா இருந்தால் தானே பொறுப்புள்ளவர்கள் நம்முடைய தலைவர்களாக வருவார்கள்?