Wednesday, May 20, 2015

சனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு!!!

விரையச்சனி(ஏழரைச்சனியின் ஆரம்பக் கட்டம்)
          26.6.2012 முதல் 16.12.2014 வரை விருச்சிகராசி
          17.12.2014 முதல் 11.02.2018 வரை தனுசு ராசி
          12.02.2018 முதல் 15.12.2020 வரை மகர ராசி
          16.12.2020 முதல் 16.03.2023 வரை கும்பராசி
          17.03.2023 முதல் 23.02.2026 வரை மீன ராசி

மிகவும் துயரம் தரும் ஜன்மச்சனி(ஏழரைச்சனியின் உச்சகட்டம்)
 26.06.2012 முதல் 16.12.2014 வரை துலாம் ராசி
 17.12.2014 முதல் 11.02.2018 வரை விருச்சிக ராசி
 12.02.2018 முதல் 15.12.2020 வரை தனுசு ராசி
 16.12.2020 முதல் 16.03.2023 வரை மகர ராசி
 17.03.2023 முதல் 23.02.2026 வரை கும்பராசி
 24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகள் வரை மீனராசி


வாக்குச்சனி/பாதச்சனி(ஏழரைச்சனியின் இறுதிக் கட்டம்)
26.6.2012 முதல் 16.12.2014 வரை கன்னி ராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை துலாம் ராசி
12.02.2014 முதல் 15.12.2020 வரை விருச்சிக ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை தனுசு ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை மகர ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு கும்பராசி


ஏழரை ஆண்டுகளில் தரும் சிரமங்களை இரண்டரை ஆண்டுகளிலேயே தரும் அஷ்டமச்சனி:
26.06.2012 முதல் 16.12.2014 வரை மீனராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை மேஷ ராசி
12.02.2018 முதல் 15.12.2020 வரை ரிஷப ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை மிதுன ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை கடக ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிம்ம ராசி

சனிபகவானின் வாதநோயை நீக்கியவர் ஸ்ரீகால பைரவப்பெருமான் ஆவார்.சனிபகவானின் குருவாக ஸ்ரீகால பைரவப்பெருமான் இருக்கிறார்.சனிபகவானுக்கு நவக்கிரகப் பதவியைத் தந்தவரே ஸ்ரீகால பைரவப் பெருமானே! எனவே,யார் தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டு வருகிறார்களோ,அவர்களுக்கு சனிபகவானின் தாக்கம் சிறிதும் இராது;மேலும்,தனது குருவான ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடுவதால்,சனிபகவான் தனது உக்கிரத்தை பெருமளவு குறைத்து நிம்மதியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடரச் செய்வார்.இது பல யுகங்களாகத் தொடரும் உண்மை ஆகும்.சனியின் தாக்கம் தீர நிஜமான பரிகாரம் ஸ்ரீகால பைரவப்பெருமான் வழிபாடு மட்டுமே!



விரையச்சனி இருப்பவர்கள் :தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்;ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை அவரது சன்னதியின் முன்பாக நின்றவாறு சுமாராக பத்துநிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30க்குள் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.இந்த நேரம் முழுவதும் மேற்கூறிய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு கால நேரத்தில் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு அத்தர்,புனுகு,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால்,ஜவ்வாது போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து வர வேண்டும்.அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்கலாம்;இதன் மூலமாக விரையச்சனியின் தாக்கம் தீரும்.ஸ்ரீகால பைரவப் பெருமானின் அருள் கிட்டும்.

ஜன்மச்சனி இருப்பவர்கள் :தினமும் ஸ்ரீகால பைரவப்பெருமானை வழிபட வேண்டும்.அப்போது அவர் சன்னதியின் முன்பாக நின்றவாறு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை சுமார் பத்துநிமிடம் ஜபிக்க வேண்டும்.மேலும்,எலுமிச்சை பழத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்;

ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு கால நேரமான காலை 9 மணி முதல் 10.30 வரையிலான காலத்தில் வீட்டில் அல்லது ஸ்ரீகாலபைரவப் பெருமான் சன்னதியின் முன்பாக மேலே கூறிய மந்திரத்தை ஜபிக்கலாம்;எழுதலாம்;(பெண்கள் அந்த நாட்களில் மட்டும் எழுத/ஜபிக்கக் கூடாது)
மண் அகல்விளக்கில் கறுப்பு வண்ணம் பூச வேண்டும்;அதில் பாதி நெய்,பாதி இலுப்பை எண்ணெய் கலந்து அத்துடன் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் வரும் ராகு காலத்தில் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,பால்,செவ்வரளிமாலை போன்றவைகளைக் கொண்டு ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.அபிஷேகத்தின் முடிவில் நமது பெயருக்கும்,நமது குடும்பத்தார் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.அல்லது அபிசேகம் நடைபெறும் ஸ்ரீகால பைரவப் பெருமான் சன்னதியில் நின்றவாறு/அமர்ந்தவாறு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

வாக்குச்சனி  இருப்பவர்கள் :தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.அப்போது அவர் சன்னதியின் முன்பாக நின்றவாறு(நிற்க முடியாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்;அவருக்கு நேராக அமரக்கூடாது)ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்க வேண்டும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும் ராகு காலமான காலை 9 மணி முதல் 10.30க்குள் சாம்பல்பூசணியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு கால நேரத்தில் ஜவ்வாது,அத்தர்,புனுகு,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால் போன்றவைகளுடன் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.அபிஷேகம் நடைபெறும் போது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

அஷ்டமச்சனி இருப்பவர்கள் :தினமும் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபட வேண்டும்;அப்போது குறைந்தது பத்து நிமிடங்கள் வரையிலாவது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7.30 முதல் 9.30 க்குள் புனுகு பூச வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்;படையலாக கறிவேப்பிலைச் சாதம் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு வைக்க வேண்டும்;அர்ச்சனை செய்தப்பின்னர்,அங்கே வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;நாமும் அதை உண்ணலாம்;ஒவ்வொரு மாதந்திர சனிக்கிழமை தோறும் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு கறுப்புப் பட்டு சாத்த வேண்டும்;
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அல்லது அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.அபிஷேகத்துக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி,சந்தனாதித்தைலம்,பால் போன்றவைகளை வாங்கித் தர வேண்டும்.




பொதுக் கருத்துக்கள்;பழமையான சிவாலயங்களில் இருக்கும் ஸ்ரீகால பைரவப் பெருமானத்தான் வழிபட வேண்டும் என்று இல்லை;பல அம்மன் கோவில்களிலும்,குல தெய்வக் கோவில்களும் இருக்கும் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடலாம்;

தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமான ஆலயங்களில் ஸ்ரீகால பைரவப் பெருமானுக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள்,அபிஷேகங்கள் துவக்கப்படவில்லை;எனவே,உங்கள் ஊரிலும் அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கலாம்;நீங்கள் அதை மாற்றி ஸ்ரீகால பைரவப் பெருமானின் அருளைப் பெறுங்கள்;

இந்த வழிபாடுகள் செய்பவர்கள் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்;அப்படிக் கைவிட்டப் பின்னரே,இந்த வழிபாட்டைத் துவங்கிட வேண்டும்.


நாம் ஸ்ரீகால பைரவப் பெருமானை தொடர்ந்து வழிபட,வழிபட நமது குலதெய்வத்தின் சக்தி அதிகரிக்கும்;நமது கர்மவினைகள் கரையத் துவங்கும்;இதன் மூலமாக நிம்மதியாகவும்,செல்வச் செழிப்புடனும்,நாம் விரும்பும் லட்சியத்தை அடையவும் முடியும்.

தொலைதூர மாநிலங்கள்,நாடுகளில் இருப்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வந்தாலே போதும்.நடக்க முடியாதவர்கள்,கோவிலுக்குச் செல்ல முடியாத சூழலில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

இவைகளைப் பின்பற்றிக் கொண்டே,உங்கள் ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் வழிபாடு செய்வதன் மூலமாக,அடுத்த தேய்பிறை அஷ்டமி வரையிலும் பணம் சார்ந்த பிரச்னைகள் குறையும்;தொல்லைகள் இராது;அவ்வாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் அருகில் இல்லாவிடில்,ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடலாம்;

Tuesday, May 19, 2015

இப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டியது:




இந்த பிறவியிலேயே சித்தராக விரும்புகிறீர்களா? நீங்கள் உங்களது வேலை அல்லது தொழில் செய்துகொண்டே ஞானத்திருவடி என்ற மாத இதழை ஒவ்வொரு மாதமும் வாசியுங்கள்;அதில் சொல்லப்படும் ஞான வழிமுறைகளைப் பின்பற்றிவாருங்கள்;அதிகபட்சம் பத்து ஆண்டுகளுக்குள் நிச்சயமாக உங்களை சித்தராக ஆக்கிடும் குருநாதரை சந்திப்பீர்கள்;அவரும் ஒரு சித்தராகவே இருப்பார் என்பதை அந்த கணத்தில் உங்களால் உணர முடியாது;அவரோடு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும் பழக,பழக அவர் ஒரு சித்தர் என்பதை உணருவீர்கள்;


ஒரு சித்தரால் தான் உங்களை சித்தராக்கிட முடியும்.நீங்கள் இந்தப் பிறவியிலேயே சித்தராகிட சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றிட வேண்டும்:


1.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவேண்டும்.

2.ஒருவனுக்கு ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்க வேண்டும்.


வேறு எந்த குறையிருந்தாலும்,ஞானத்திருவடி மாத இதழை தொடர்ந்து வாசிக்க,வாசிக்க அவைகள் நீங்கிவிடும்;நீங்கள் பரிபூரண புண்ணிய ஆத்மாவாகிவிடுவீர்கள்;


ஞானத்திருவடி புத்தகம் ஓராண்டுச் சந்தா:ரூ.120/- மூன்று ஆண்டுச் சந்தா ரூ.350/- வெளிநாடுகளுக்கு எவ்வளவு என்பதை தாங்கள் 04327 255784 என்ற அலுவலக எண்ணிற்கோ அல்லது அதன் பொறுப்பாளரான திரு.கே.ரவிச்சந்திரன் செல் எண்கள்;94883 91565,98420 65708,96551 74078 என்ற எண்களில் ஏதாவது ஒரு எண்ணில் தொடர்பு  கொண்டோ கேட்டறிந்து பணம் அனுப்பலாம்.

காசோலை எனில் Sri Agathiar Sanmaarga Charitable Trust என்ற பெயரிலும்,வரைவோலையை payable at Trichy or Thuraiur என்றும் எடுத்து பதிவு அஞ்சலில் முழு முகவரியை தமிழிலும்,ஆங்கிலத்திலும் தெளிவாக எழுதி அனுப்பி வைக்கவேண்டும்;
ஞானத் திருவடி மாத இதழ்,ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை,ஓங்காரக்குடில்,113,நகர் விரிவாக்கம்,துறையூர்-621010.திருச்சி மாவட்டம்.


இங்கே அகத்தியரின் ஆசிகளோடு தினமும் அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
நாமும் ஞானத்திருவடி மாத இதழ் வாங்குவோம்;இந்த பிறவியிலேயே சித்தராகிட முயற்சி எடுப்போம்;இனி ஒரு மனிதப் பிறப்பு நாம் எடுக்கலாமா?

Tuesday, May 5, 2015

ஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன?




சமூக தளத்திலும், பணி தளத்திலும், முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பேசி அறிமுகமாவதென்பது பலருக்கும் ஒரு சிரமமான காரியமாக உள்ளது. ஆனால், ஒருவருடன் பேசிப் பழகுதல் என்பது சரியான முறையில் நடைபெற்றால், பழகுதல் என்பது மிகவும் எளிது.
அலுவலகத்தில் பழகுதல்
ஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும்போது, பிறரின் பெயரை சத்தமாகக் கூறிக்கொண்டிருத்தல், தேவையின்றி சத்தம் போடுதல், இங்கேயும் அங்கேயும் காரணமின்றி உலவித் திரிதல், ஒருவரிடம் தேவையற்ற, தனிப்பட்ட முறையிலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருத்தல் போன்றவை, நிச்சயம் வேண்டாத செயல்கள். இதுபோன்ற செயல்கள், உங்களின் பணிக்கே உலைவைக்கக் கூடியவை.
எப்போதுமே, பணிபுரியும் இடத்தில் புரபஷனலாக நடந்துகொள்ளுங்கள். பணியின்போது, பர்சனல் விஷயங்களை தவிர்த்து, பணிக் குறித்த விஷயங்களை மட்டுமே பேசுங்கள். சக ஊழியர், தேவையில்லாமல் உங்களிடம் பேசினாலும், அதை நாசுக்காக தவிர்த்து விடுங்கள்.
பொதுவாக, உடன் பணி செய்வோருடன்(colleagues) பேசிப் பழகுவதற்கு, உணவு நேரத்தையோ அல்லது டீ அருந்தும் நேரத்தையோ சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களின் கடந்தகால பணி அனுபவங்கள், பொழுதுபோக்குகள், உங்களது சக ஊழியர்கள், தங்களது பணியினை எவ்வாறு விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் பணி நிலை ஆகியவைப் பற்றி உரையாடலாம்.
பணி தவிர்த்த வேறு வெளி விஷயங்களைப் பேசும்போது, தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல், விளையாட்டு, புதிய தொழில்முனையும் வாய்ப்புகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகள் உகந்தவை. தேவையில்லாமல் குடும்ப விஷயங்களைப் பேசுவது, உறவுச் சிக்கல்கள் குறித்து பேசுவது மற்றும் இதர ஊழியர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கார்ப்பரேட் உலகில், மிகச்சரியான மற்றும் நுட்பமான பேசும் திறன் மிகவும் முக்கியம். நமது பேச்சில் சிறு தவறுகளை செய்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரியதாக இருக்கலாம்.
கல்லூரியில் நமது வாழ்க்கை
ஒருவர், தான் படிக்கும் கல்லூரியில், நண்பர்களை உருவாக்கிக் கொள்வதென்பது, ஒருவகையில் கடினம் மற்றும் ஒருவகையில் எளிது. ஆனால், பெரும்பாலானோருக்கு, எளிதில் பிறரிடம் பழகுவதென்பது, ஒரு கஷ்டமான காரியமாகவே உள்ளது. ஆனால், அந்த கடினத்தை, நாம் விரைவில் எளிதாக்கலாம். உங்களுடன், பள்ளிப் பருவத்திலிருந்தே படித்து அல்லது உங்கள் பக்கத்து வீட்டில் அல்லது ஊரில் வசித்த நண்பர் யாரேனும், உங்களது கல்லூரியில் சேர்ந்திருந்தால், புதிய சூழலுக்கு பழகிக்கொள்ள அவர் உதவலாம்.
புதிய மாணவர்களுக்கான party மற்றும் அவர்களுக்கான வாரஇறுதி விழா போன்ற நிகழ்வுகளிலும், கல்லூரியில் நடக்கும் வேறுபல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதன் மூலமாக, உங்களது வளாகத்தில், உங்களுடன் இருக்கும் பிற நண்பர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற சூழல்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே, கல்லூரி வளாகத்தில், உங்களுக்கென சிறப்பான நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உங்கள் நண்பர் ஒவ்வொருவருடனும், தேவையான நேரத்தை செலவழியுங்கள். புராஜெக்ட்டை ஒன்றாக அமர்ந்து செய்தல் மற்றும் வெளியில் உணவருந்த செல்லுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக, நட்பு வட்டத்தை பலப்படுத்தலாம்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரத்தில், ஒருவரின் அந்தரங்கத்தில் தேவையில்லாமல் தலையிடுவது மற்றும் எப்போது பார்த்தாலும் அவரின் அருகிலேயோ அல்லது தேவையில்லாமலோ பேசிக்கொண்டேயிருந்து, சலிப்படைய வைத்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
உங்கள் நடவடிக்கைகள், இருவருக்குமே பாதகம் விளைவிக்காதவாறு இருத்தல் வேண்டும். சிறிய உரையாடல் எனும் கலையை, சற்று நேரம் எடுத்தே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. புன்னகை ஒன்றுதான் உடனடி மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம்.
உங்களின் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, எத்தனை பேருடன் நீங்களாக சென்று பேச முடியுமோ, அத்தனை பேருடனும் பேசலாம். ஏனெனில், உங்களைப் போலவே, பலரும், தானாக முன்வந்து பேசுவதற்கு தயக்கத்துடனேயே இருப்பார்கள். எனவே, நாமாக முன்வந்து பேசுதல் என்பது, பல நேரங்களில் நன்மை பயக்கும்.
அதேசமயம், ஒருவரிடம் பழகியவுடனேயே, மிகச்சில நாட்களிலேயே, அவரை உற்ற நண்பன்(best friend) என்று கூறிக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாத வேலை. அனைவருமே உற்ற நண்பர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை. ஓரளவு நல்ல நண்பர்களாக இருந்தாலே பெரிய விஷயம்.
சமூகத்தில் பழகுதல்
நாம், நமது சமூகத்துடன் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்து, நமது தனித்தன்மை முடிவு செய்யப்படுகிறது. நேர்மறை எண்ணம் கொண்ட, பிறரிடம் எளிதாக பழகத்தக்க மற்றும் சந்தோஷமான மனிதர்களை, இந்த சமூகம் எப்போதுமே விரும்பும்.
பொதுவாக, நமது சிந்தனையுடன் ஒத்த சிந்தனையுள்ள நபர்களுடன், நாம் பிறரைவிட அதிகம் பேசுவோம். பிறருடன் பேசும்போது, உங்களின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் மட்டும் முக்கியமல்ல, உங்களின் உடல் மொழியிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தகவல்தொடர்பில், 60% முதல் 80% வரையிலானவை, வார்த்தைகளற்றவை என்றே உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயல்பாகவே, தங்களின்பால் கவனத்தை ஈர்க்கக்கூடிய நபர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். அதுபோன்ற நபர்கள், ஒருவார்த்தைக்கூட பேசாமலேயே, தங்களின் செய்தியை பிறருக்கு தெரிவித்து விடுவார்கள்.
நாம், வாயைத் திறந்து வார்த்தைகளை வெளிப்படுத்தும் முன்னதாகவே, நாம் எந்த வார்த்தைகளை, எப்படி பேச வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருப்போம். சிறப்பான தகவல்தொடர்புக்கு, ஒரு மொழியுடன் நல்ல அறிமுகம் இருப்பதும் முக்கியம்.
ஒரு தனிமனிதரைப் பற்றியோ அல்லது ஒரு சமூகத்தைப் பற்றியோ, மோசமான எதிர்மறை கருத்துக்களைத் தெரிவிப்போரையோ அல்லது தொடர்ச்சியான எதிர்மறை கருத்துக்களை தெரிவிப்போரையோ, பொதுவாகவே, இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இதன் அர்த்தம், நீங்கள் எதையுமே விமர்சிக்கவோ அல்லது உங்களின் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது என்பதல்ல. விமர்சிக்கும் விதம்தான் இங்கே கவனிக்கத்தக்கது.
(சமூகத்தைப் பற்றிய உங்களின் மதிப்பீடு சரியானதாகக்கூட இருக்கலாம். ஏனெனில், பொதுவாக, ஒரு சமூகத்தில், சரியானவை 20% இருந்தால், தவறானவை 80% இருக்கின்றன. ஆனால், என்ன செய்வது? எதையும் உடனடியாக மாற்றிவிட முடியாதே?) உங்களின் விமர்சனமோ அல்லது சொந்தக் கருத்தோ, ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒரு தனிப்பட்ட நபரை காயப்படுத்துவதாக இருந்தால், நீங்கள் விமர்சனம் செய்யாமலும், கருத்து சொல்லாமலும் இருப்பதே நல்லது.
வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நட்பு வட்டம், கண்ணியமானதாயும், வாழ்வில் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டதாகவும் இருக்கட்டும்.
வேறு சில ஆலோசனைகள்
நம்பிக்கையுடன் இருத்தல்: பேசும்போது தடுமாறியோ அல்லது தயங்கி தயங்கியோ பேசுவதானது, நீங்கள் போதுமான நம்பிக்கையுடன் இல்லை என்பதை வெளிக்காட்டும். ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டுவிட்டு, நீங்கள் என்ன பேச நினைக்கிறீர்கள் என்பதை ஒருமுறை தெளிவாக யோசித்து, அதன்பிறகு, உங்களுடைய உலகிற்குள் பிரவேசியுங்கள்.
கொஞ்சம் மகிழ்ச்சி: பேசும்போது, சிறுசிறு நயமான நகைச்சுவைகள், உங்களின் உரையாடலை சுவையாக்குவதோடு, தனிப்படுத்தியும் காட்டும். நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ, அந்த நபரை, முடிந்தளவு சிரிக்க வைத்து, மகிழ்ச்சியூட்ட முயற்சிக்கவும்.
தனிப்பட்ட நன்மைக்காக அல்ல: ஒரு நபருடன் பழகத் தொடங்குகையில், அவரால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை கணக்கிட்டு பழகக்கூடாது. மாறாக, ஒரு உண்மையான நட்பை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
மென்மையாக இருக்கவும்: நீங்கள் சந்திக்கும் நபர்களிடம், முடிந்தளவு மென்மையானவராகவும், இனிமையானவராகவும் இருக்க முயலுங்கள். இதன்மூலம், நீங்கள் பலராலும் விரும்பத்தக்கவராகவும், பலரின் ஆதரவைப் பெற்றவராகவும் திகழ்வீர்கள். இதுமட்டுமின்றி, எளிதில் அணுகக்கூடிய நபராகவும் இருப்பீர்கள்.
நல்ல உடை: உங்களின் பழகும் மற்றும் பேசும் விதங்கள், உங்களின் மதிப்பு மற்றும் நட்பு வட்டத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகித்தாலும், உங்களின் உடைக்கும் கணிசமான பங்குண்டு என்பதை மறக்க வேண்டாம். எனவே, முடிந்தளவு நன்றாக உடையணியவும். thanks:dinamalar

Monday, May 4, 2015

மன்மத ஆண்டின்(13.4.15 முதல் 14.4.16 வரை) முழுமையான துவாதசி நாட்கள்!


நம் கர்மவினையை நீக்கும் வல்லமை (நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில்) அன்னதானத்திற்கு மட்டுமே உண்டு என்பது ஆன்மீக ஆராய்ச்சியில் கிடைத்த அளப்பறிய உண்மை ஆகும்;
அன்னதானத்தை நாம் வாழ்ந்து வரும் ஊரில் இருக்கும் சிவாலயத்திலேயே செய்யலாம்;ஆனால்,தொடர்ந்து மாதம் தோறும் வரும் அமாவாசையன்று அன்னதானம் செய்து வந்தால் தான்,சிலபல ஆண்டுகளுக்குப் பிறகு அன்னதானத்திற்கான பலன் நம்மை வந்தடைகிறது;

செல்போனும்,கணினியும் நமது தினசரி வாழ்க்கையை படுவேகமாக்கிவிட்டது போலவே,நாமும் சீக்கிரம் நற்பலன் கள் கிட்ட வேண்டும் என்றே ஏங்குகிறோம்;அப்படிப்பட்ட ஏக்கங்கள் தீர அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்தால் போதுமானது;குறைந்த பட்சம் 9 துவாதசி நாட்களும்,அதிகபட்சம் 36 துவாதசி நாட்களும் அன்னதானம் செய்வது அவசியம்.

சிவபுராணத்தில் அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் ஏற்படும் புண்ணியம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது;
நமது சொந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்கள் வீதம் ஒராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகபுண்ணியம் காசியில் ஒரு நாள் மட்டும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;அதுவும் காலையில் ஒரு சாது;மதியம் ஒரு சாது;இரவு ஒரு சாது என மூன்று பேர்களுக்கு அன்னதானம் செய்தாலே கிடைத்துவிடும்;

அன்னதானத்தை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்;அதே சமயம்,விளம்பரப்படுத்தாமல் செய்ய வேண்டும்;

அசைவ அன்னதானம் ஒரு போதும் செய்யக் கூடாது; 

   கட்டாய அன்னதானமும் ஒரு போதும் செய்யக் கூடாது;

நள்ளிரவு அன்னதானம் ஒருபோதும் செய்யக் கூடாது;

தரமான உணவுப் பொருட்கள் மூலம் செய்யப்பட்ட உணவையே தானமாகத் தர வேண்டும்;

சந்தர்ப்பம் இருந்தால் அஷ்டலிங்கங்களின் வாசலிலும் அன்னதானம் செய்யலாம்;

அண்ணாமலை ஆலயத்தில் இருந்து ஐந்து சதுர கி.மீ.க்குள் அன்னதானம் செய்யலாம்;

பவுர்ணமி தினங்களில் செய்யப்படும் அன்னதானத்தைவிடவும் பல கோடி மடங்கு உயர்ந்தது துவாதசி திதி அன்று செய்யப்படும் அன்னதானம்.!!!


30.4.15 வியாழன்

30.5.15 சனி

13.6.15 சனி

28.7.15 செவ்வாய்

11.8.15 செவ்வாய்

9.9.15 புதன்

9.10.15 வெள்ளி

24.10.15 சனி

22.12.15 செவ்வாய்

6.1.16 புதன்

5.2.16 வெள்ளி

19.2.16 வெள்ளி

4.4.16 திங்கள்


ஒம் அருணாச்சலாய நமஹ

Sunday, May 3, 2015

சுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்டை) பைரவர்!!!






புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் 6 கி.மீ.தூரத்தில் திருவரங்குளம் அமைந்திருக்கிறது.இந்த ஊரின் பழைய பெயரே பொற்பனைக்கோட்டை! பொற்பனை இருந்த இடத்தில் சிவலிங்கத்தைக்கண்ட அரசன் கோவிலையும் கோட்டையையும் கட்டியதாக செவிவழிச்செய்திகள் தெரிவிக்கின்றன.


சுவாதியில் பிறந்தவர்கள் தனது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் இராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில்  இங்கே இருக்கும் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.ராகு காலம் துவங்கும்போது இங்குள்ள பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அப்போது பைரவ சஷ்டிக்கவசம் பாட வேண்டும்;

இப்படி குறைந்தது ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்களுக்கு வழிபாடு செய்துவிட்டால்,அனைத்துக் கர்மாக்களும் நீங்கி வளமோடு வாழ்வர் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்!!!

திருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்!!!






திருப்பத்தூர் டூ புதுக்கோட்டை சாலையில் திருமயம் நகருக்கு வெளியே அமைந்திருக்கும் கோட்டை பைரவரே விசாக நட்சத்திரத்துக்குரிய பைரவப்பெருமான் ஆவார்.
பல சித்தர்களும்,ஞானிகளும்,மகான்களும் விசாகத்தில் பிறந்துள்ளனர்.செவ்வாயின் அதிதேவதை என்று அழைக்கப்படும் முருகக்கடவுளும்,அன்பையும் மனிதத்தன்மையையும் வலியுறுத்தி ஒரு புதியமதத்தைத் தோற்றுவித்த புத்தரும் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!!!


விசாக நட்சத்திரம் வரும் நாட்களில் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால்,மரிக்கொழுந்து போன்றவைகளுடன் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நன்று.தொடர்ந்து  ஒன்பது விசாக நட்சத்திர நாட்களில் இவ்வாறு வழிபட்டால்,பைரவ அருள் விசாகத்தில் பிறந்தவர்களுக்குக்கிட்டும்.

ஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி பாதாள பைரவர்!!!






ஆந்திரமாநிலம்,சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.இங்கே காளத்தியப்பராக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.

இங்கேதான் கண்ணப்ப நாயனாரின் சிவபக்தி நிரூபணமாகியது.1990க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இந்த புராணச் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை;இருப்பினும்,ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய இந்த பாதாள பைரவப் பெருமானின் பெருமைகளை விளக்குவது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் கடமை ஆகும்.யாருக்கெல்லாம் ராகு அல்லது கேதுவால் கடுமையான பாதிப்பு இருக்கிறதோ அவர்களும் இந்த பாதாளபைரவப் பெருமானை தொழுது வழிபடலாம்;ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்குரிய இந்த பாதாள பைரவப் பெருமான் ஸர்ப்ப தோஷங்களையும் நீக்குபவர் ஆவார்.ஆயில்யமே ஒரு பாம்பு நட்சத்திரம் தானே!!

நாம் கலியுகம் 5114 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறோம்.இதற்குச் சமமான கிறிஸ்தவ வருடம் கி.பி.2013 ஆகும்.கலியுகம் செல்லச் செல்ல கடுமையான பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களும்,மிகவும் யோகங்கள் நிறைந்த ஆத்மாக்களுமே அதிகமாகப்பிறப்பார்கள்;அதுவும் பூமியில் வேறு உலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பிறந்து,குடும்ப அமைப்பைச் சிதைக்கும் வேலையை தனதுபிறவி கடனாகச் செய்வார்கள்;அப்படிப்பட்ட லட்சக்கணக்கானவர்களில் ஒவ்வொருவருக்குமே தமது வாழ்நாளில் திருந்தி நல்ல செயல்கள் செய்து இனி பாவ உலகத்திற்குச் செல்லக்கூடாது என்ற எண்ணம் வரும்;அப்படிப்பட்டவர்களும் வழிபட வேண்டிய பைரவர் இந்த பாதாள பைரவப் பெருமான் ஆவார்.ஒருவேளை உலகில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து இந்த ஆன்மீகக்கடல் பதிவினை வாசித்துவிட்டு,இந்தியாவில் ஆந்திரமாநிலம் காளஹஸ்திக்கு வர முடியாதவர்கள் தினமும் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் எழுதி வந்தாலே போதுமானது.ஒரு சில வருடங்களுக்குப்பிறகு,உங்களுக்கு காளஹஸ்திக்குச் செல்லும் வாய்ப்பை பாதாள பைரவப் பெருமானே எற்படுத்தித் தருவார்.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்” என மாணிக்க வாசகரால் போற்றப்பட்ட கண்ணப்ப நாயனார் தொண்டை நாட்டின் உடுப்பூரில் வேடர் குலத்தில் பிறந்தவர்.நாகன் என்னும் வேடர் குலத் தலைவர்க்கு மகனாகத் தோன்றினார்.திண்ணன் எனப் பெயரிடப்பட்டார்.தம் குல வழக்கப்படி வேட்டையாடும் தொழிலில் வல்லவரானார்.உரியகாலத்தில் திண்ணனார் வேடர் குலத் தலைவரானார்.


ஒரு நாள் வேட்டைக்குச் சென்றார்.நீண்டநேரம் வேட்டையாடிய பிறகு திருக்காளத்தி மலையைச் சென்றடைந்தார்.அங்கு காளத்தியப்பரைப் பார்த்தவுடன் முன்பிறவிப் பயனால் பக்தி மிகுதியால் கண்ணீர் சிந்தி வழிபட்டார்.நீராட்டி,பூச்சுட்டியிருப்பதைப் பார்த்தார்.தனித்து இருக்கும் காளத்தியாரைப் பிரிய மனமின்றி உருகி நின்றார்.இறைவனுக்கு உணவு படைக்க தரமான இறைச்சியைத் தேடிச் சென்றார்.புதிதாக வேட்டையாடிய பன்றி இறைச்சியை சமைத்து,சரியான நேரத்தில் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொண்டு வந்து,கட்டினார்.பொன்முகலி ஆற்று நீரை வாயில் எடுத்துக்கொண்டு(அந்தக்காலத்தில் மண்பாத்திரம் தான்! காட்டுப்பகுதியில் அதுவும் கிடைக்கவில்லை;),இறைவனுக்குப்படைக்கவேண்டிய பூக்களை தலையில் வைத்துக் கொண்டு காளத்தியப்பர் இருப்பிடம் தேடிச் சென்றார்.சிவலிங்கத்தின் உச்சியில் சூடப்பட்டிருந்த பூக்களை தனது காலால் தள்ளிவிட்டு, தனது வாயில் இருந்த ஆற்றுநீரால் அபிஷேகம் செய்தார்;பிறகு தனது தலையில் சுமந்து வந்த பூக்களை சூடினார்.சமைத்த பன்றி இறைச்சியை படையலிட்டார்.இரவு முழுவதும் இறைவனுக்குக் காவலாக இருந்தார்.சூரியன் உதயமானதும்,புறப்பட்டார்.


சிவாச்சாரியார் வந்து இறைச்சித்துண்டுகள் சிதறிக்கிடப்பதையும்,காலணிச்சுவடுகள் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டுப் போனார்.திருக்கோவிலை தூய்மை செய்து முறைப்படி நீராட்டிப் பூசை செய்தார்.அன்றாடம் திண்ணனார் தம் வழக்கப்படி நீராட்டி,பூச்சூட்டி, ஊண் அமுது படைத்தார்.சில நாள் இவ்வாறு நடக்க சிவகோசரியார் மனம் வருந்தி,இறைவனிடம், “இக்கொடுஞ்செயலை தினமும் செய்வது யார்? என்றுத் தெரியவில்லை; தங்கள் திருவருளால் இவ்வாறு இனி நடக்காமல் தடுக்க அருள வேண்டும்” என்று மனப்பூர்வமாக வேண்டினார்.

அன்று இரவே காளத்தியப்பர் அவர் கனவில் தோன்றி, “அன்புநிறைந்த அவனை கொடியவன் என்று நீ எண்ணுகிறாய்;அது முற்றிலும் தவறு;அவனது செயல்களில் இருக்கும் அன்பை மட்டுமே யாம் கவனிக்கிறோம்;நாளை நீ விரைவாக வந்து எமக்கு அருகே ஒளிந்திருந்து கவனி;அவனது அன்பு எத்தகையது? என்பது உனக்கும் புரியும்”என விளக்கமளித்திவிட்டு மறைந்துவிட்டார்.

அதேபோல சிவகோசரியார் வெகுநேரம் முன்பாகவே வந்து மறைந்துநின்று நடக்க இருப்பதைக் கவனிக்கத் தயாரானார்.திண்ணனார் வழிபடத்துவங்கிய 6 ஆம்நாளாகிய அன்று,வழக்கம் போல ஊனும்,மீனும்,பூவும் கொண்டு வந்தார்.திண்ணனார் காளத்தியப்பரை நெருங்கியதுமே சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;இதைக் கண்ட திண்ணனார் பதறித் துடித்துப் போனார்;உடனே,அருகில் ரத்தம் வழிவது நிற்கும் மூலிகைச் செடியில் இருந்து ஒரு இலையை பறித்து,அதைப் பிழிந்து அந்த கண்ணின் மீது விட்டார்;இருந்தும் இரத்தம் வழிவது நிற்கவில்லை;உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது;தனது கண் ஒன்றை தன்னுடைய அம்பால் தோண்டி எடுத்து அந்த ரத்தம் வழியும் கண்ணில் பொருத்தினார்.உடனே ரத்தம் வழிவது நின்றது;ஆனால்,அடுத்த கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;எனவே,தனது கால் பெருவிரலால் அந்த ரத்தம் வழியும் இன்னொரு கண்ணுக்கு அருகே மிதித்து(அடையாளத்துக்காக) தனது இன்னொரு கண்ணையும் அம்பால் தோண்டி எடுத்துப் பொருத்த முயல,காளத்தியப்பராகிய சதாசிவன் நேரில் தோன்றினார். தோன்றி “கண்ணப்பா நில்” என்றார்.சிவகோசாரியார் திண்ணனாரின் அன்பின் பெருமையை உணர்ந்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நன்று.