Friday, May 1, 2015

சிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்!!!(உத்ரட்டாதி நட்சத்திரத்தின் வழிபட வேண்டிய பைரவப்பெருமான்)






கும்பகோணம் அருகே இருக்கும் சேங்கனூரில் உள்ள வெண்கல ஓசை உடைய பைரவர் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பைரவப் பெருமான் ஆவார்.

வெகுகாலத்திற்கு முன்பு வாயுதேவனுக்கும்,ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர்? என்ற பலப்பரீட்சை ஏற்பட்டது.அப்போது ஆதிசேஷன் மேருமலையை தன் உடம்பால் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வாயுதேவன் தனது முழுபலத்தையும் காட்டி மேருமலை மீது பலத்த காற்றுவீசி அதை அசைக்க முயன்றான்;அப்போது மேரு மலையின் ஒன்பது பகுதிகள் பெயர்ந்து ஒன்பது கண்டங்களாக விழுந்தன;அவற்றில் ஒரு சிகரமே கந்தமாதனம் ஆகும்.கந்தமாதனத்தில் இருந்து ஏழு சிறிய சிகரங்கள் தனித்தனியாக பெயர்ந்து நமது பாரத தேசத்தில் ஏழு இடங்களில் விழுந்தன;அவற்றில் ஒன்று இந்த சேங்கனூரில் விழுந்தது;அந்த சிகரத்தின் பெயர் சத்தியம் ஆகும்.அதனால்,இந்த தலத்திற்கு சத்தியகிரி என்ற பெயர் உருவானது.குமாரபுரம்,சண்டேசுவரபுரம்,அகமாதகவனம் என்ற வேறு பெயர்களும் சேங்கனூருக்கு உண்டு;இந்தத் தலத்தில் பல முனிவர்களும்,ரிஷிகளும்,துறவிகளூம் விலங்குகள் வடிவிலும்,பறவைகள் வடிவிலும் மரங்கள் வடிவிலும் உருவகமாக பல கோடி ஆண்டுகள் நின்று வழிபாடு செய்து வருகிறார்கள்.

சிபிமகாராசன் என்ற மன்னன் காம்பீலி நகரத்தை ஆண்டு வந்தான்;அவனது ஜாதகப்படி ஏற்பட்ட தோஷத்தை நீக்கிட,அவன் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டான்;திரிவேணி சங்கமம்(இன்றைய பிரயாகை=அல் லஹா பாத்)நர்மதை,கோதாவரி முதலிய தீர்த்தங்களில் நீராடினான்.நீராடிவிட்டுத் திரும்பி வரும் போது சேங்கனூரைக்கடக்கும் போது பக்தி உணர்ச்சிப் பெருகியது.எனவே,இங்கே இருக்கும் ஸ்ரீசத்தியகிரீஸ்வரை வழிபட்டு இங்கேயே சிலகாலம் தங்கினான்.
பிராமணர்களுக்கு பூதானம் செய்ய நினைத்து 360 வீடுகள் கட்டினான்;360 பிராமணர்களை பாரத தேசம் முழுவதும் இருந்து வரவழைத்து அவர்களை இங்கே குடியேற்றினான்.அப்போது அவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எச்சதத்தனின் மனைவியான பவித்திரை ஒரு ஆண்குழந்தையை பெற்றாள்.அதனால்,எச்சதத்தனும் பவித்திரையும் ஊரின் எல்லையில் தங்கும் சூழல் உருவானது.எல்லா குடும்பத்தாரும் சிபிமகாராசனை அடைந்தார்கள்.சிபிமகாராசன் ஒவ்வொரு பிராமணக்குடும்பத்திற்கும் ஒரு வீடும்,ஒரு காராம்பசுவும்,சிறிதளவு நிலமும் தானமாக வழங்கினான்.359 பேர்களுக்கு தானம் வழங்கிட மீதி ஒரு வீடு தானம் செய்ய முடியாத நிலை இருந்தது.எனவே,அரசன் மிகவும் வருத்தமடைந்தான்;ஏனெனில்,குறிப்பிட்ட திதியும்,நட்சத்திரமும் நிறைவடையும் முன்பே 360 பிராமணர்களுக்குத் தானம் வழங்கினால் தான் தானத்தின் பலன் முழுமையாக மன்னனை வந்து சேரும்;இல்லாவிடில் 12 ஆண்டுகள் இதே போல் தானம் செய்யக் காத்திருக்க வேண்டும்;எனவே,அரசனின் வருத்தத்தைப் போக்கிட சிவலோக நாயகியும்,வயோதிக பிராமணருமாக வந்த அந்த 360 வது வீட்டையும்,காராம்பசுவையும்,நிலத்தையும் தானமாகப் பெற்றுக் கொண்டனர்.

மறுநாள் சிபிமகாராசன் ஒவ்வொரு வீடாகச் சென்று பிராமணர்களைக் கண்டு யோக க்ஷேமம் விசாரித்தான்;கடைசியாக வயோதிகப் பிராமணரின் வீட்டிற்கு வந்தான்;வீட்டுக் கதவு உள்புறம் பூட்டியிருந்தது.பலமுறை கதவைத் தட்டியும் குரல் கேட்காததால்,கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தான்;உள்ளே யாரும் இல்லை;ஆக,நேற்று வீட்டை தானமாகப் பெற்றது சிவலோக நாயகியும்,சுவாமியுமே என்பதை உணர்ந்து,ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான்;சேங்கனூரில் அமைந்திருந்த இறைவனையும்,இறைவியையும் வழிபட்டு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துவிட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான்.

இவ்வூரின் எல்லையில் தங்கிய எச்சதத்தன்,தனது மனைவி,குழந்தைகளுடன் வந்து ஊருக்குள் வந்தான்;வீடுகள் எல்லாம் தானம் செய்து விட்டதால்,சிபிமகாராசனை கண்டு தனது நிலையை முறையிட்டான்.சிபிமகாராசன்,சேங்கனூருக்கு வந்து அங்கே இருக்கும் 359 பிராமணர்களின் பசுக்களை மேயும் பொறுப்பை எச்சதத்தனிடம் ஒப்படைக்கும் படி ஆணையிட்டான்.அதற்கு எச்சதத்தன் ஒப்புக்கொண்டால்,அந்த சேங்கனூரில் வசித்துக் கொள்ளலாம் என்று பிராமணர்களும்,மன்னனும் ஒப்புக்கொண்டனர்;


எச்சதத்தன் தனது மகனை பொறுப்பாகவும்,அன்பாகவும் வளர்த்து வரும் வேளையில்,ஏழு வயது நிரம்பியதும் உபநயனம் செய்தான்;விசாரசருமர் என்று பெயரிட்டு,பசுவை மேய்க்கும் பொறுப்பையும் ஒப்படைத்தான்;தினமும் மண்ணியாற்றங்கரையில் பசுக்களை மேய்த்து வரும் போது,அவைகளின் மீது அளவற்ற பாசம் கொண்டான்.விசாரசருமரை பசுக்கள் தமது கன்றாகவே கருதி பாசம் கொண்டன.அதனால்,அவனைக் கண்டதுமே பாலைப் பொழிந்தன.பால் வீணாவதை நினைத்து,அவைகளைக் கொண்டு சிவ அபிஷேகம் செய்ய விரும்பினான்.எனவே,மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில் மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினான்.பூசைக்காக பூக்களையும்,தளிர்களையும் பறித்து வந்து,தினமும் ஆகமவிதிப்படி சிவபூஜை செய்துவந்தான்;இதை அந்த பாதை வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் ஊருக்குள் இருந்த பிராமணர்களிடம் தெரிவித்துவிட,அவர்கள் சிவாசரசருமரின் அப்பா எச்சதத்தனிடம் முறையிட்டனர்.எச்சதத்தனும் தனது மகனைக் கண்டித்தான்;

மறுநாள் விசாரசருமர் பசுக்களை மேய்ப்பதற்கு ஓட்டிக்கொண்டு போக,எச்சதத்தன் தனது மகன் அறியாதவாறு அவனைப் பின் தொடர்ந்தான்;விசாரசருமரும் வழக்கம் போல அத்திமரநிழலில் மணலால் சிவலிங்கம் உருவாக்கி,ஆகமவிதிப்படி பூஜை செய்ய,அதை மறைந்திருந்து கவனித்த எச்சதத்தன்,தனது மகன் விசாரசருமரை கோலால் அடித்தான்;சிவசிந்தனையிலேயே இருந்தமையால் தந்தை அடித்ததும்,திட்டியதும் உணரவில்லை;

தான் அடித்தும்,திட்டியும் கூட தனது மகன் கண்டுகொள்ளாமல் இருந்ததைக் கண்டு ஆத்திரப்பட்ட எச்சதத்தன்,பால் குடங்களை தனது காலால் இடறிவிட,பால் அனைத்து சிந்தியது;பால் சிந்தியதைக்கண்ட விசாரசருமருக்கு சுயநினைவு வர,பாலைச் சிந்தியது தனது அப்பா என்று அறிந்தும்கூட,அவனுக்கு கோபம் பொங்கியது;தாம் செய்து வரும் சிவபூஜைக்கு இடையூறு வந்துவிட்டதே என்று ஆவேசப்பட்டு,அருகில் இருந்த கோலை எடுத்தான்;அது உடனே மழுவாக உருமாறியது;அந்த மழுவினால் தனது தந்தை எச்சதத்தனின் கால்களை வெட்டினான்;தந்தை கால்களின்றி கீழே விழ,தனது பூஜையைத் தொடர்ந்தான் விசாரசருமர்.
அந்த கணத்தில் சதாசிவனும்,பாலாம்பிகையும் அந்த மணல் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டனர்;விசாரசருமருகுக்கு காட்சியளித்தனர்;

எனக்காக பெற்றத் தந்தையின் கால்களையே வெட்டியெறிந்தாய்;இனி உனக்கு எல்லாமே யாம் தான் என்று விசாரசருமரைப்பாரட்டி, அவனை உச்சிமோந்தார்;தனது கழுத்தில் கிடந்த கொன்றை மாலையை விசாரசருமர் கழுத்தில் அணிவித்தார்;

மேலும், “இனி யாம் உண்டகலமும்,உடுக்கும் ஆடையும்,சூடும் அனைத்தும் உனக்கே சொந்தம்”என்று சண்டீச பதம் கொடுத்தார்;
“சிவாலயம் வந்து எம்மை வழிபடும் ஒவ்வொருவரும்,இறுதியாக உன்னை வழிபட்டால் தான் சிவாலயத்திற்கு வந்து வழிபட்டதற்கான புண்ணியம் அவர்களுக்குக் கிட்டும்” என்று வரம் கொடுத்தார்.
சண்டீசரும் இறைவனைத் தொழுது பிறவாநிலையை அடைந்தார்;திருக்கையிலாயம் சென்றடைந்தார்.
இருப்பிடம்:தஞ்சாவூர்  மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவில், கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் தெற்கே ஒரு கி.மீ.தொலைவில் ஸ்ரீசத்தியகிரீஸ்வரர் ஆலயம் சேங்கனூர் என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் இங்கே தனது பிறந்த நட்சத்திர நாளில் வருகை தர வேண்டும்;முதலில் சிவனுக்கும்,பிறகு அம்பாளுக்கும் முடிவில் இங்கே இருக்கும் வெண்கல ஓசை உடைய பைரவருக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களில் இவ்வாறு வழிபாடு செய்து வர அனனத்து கர்மாக்களிலிருந்தும் மீண்டு வளமோடும் நலமோடும் இப்பிறவியிலேயே வாழலாம்.

இப்பிறவியிலேயே முக்தி கிட்டிட நாம் என்ன செய்ய வேண்டும்?






ஒரு துறவி குளக்கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்;அப்போது மீன்கள் நீரின் மேல் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்;திடீரென அந்த இடத்திற்கு வந்த கழுகு கண் இமைக்கும் நேரத்தில் நீரில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மீனைக் கவ்விக் கொண்டு செல்வதை பார்த்தார்;அப்போது அவருக்கு ஞானம் பிறந்தது.
அந்த மீனைப் போல பக்தி என்னும் கடலில் மேலோட்டமாக இருந்தால் மீனுக்கு ஏற்பட்ட கதிதான் தனக்கும் ஏற்படும்என்பதை உணர்ந்தார்.எனவே, ஆழமான பக்திக்குச் சென்று பைரவப் பெருமானைச் சரணாகதி அடைந்தால் இப்பிறவியிலேயே முக்தி பெற முடியும் என்று நம்பினார்.அந்த நம்பிக்கையை ஒவ்வொரு நிமிடம் தோறும் வளர்த்து எடுத்து,ஒரே பிறவியில் பைரவ தரிசனமும் பெற்றார்;


ஆழமான பக்தியைப் பெற வயிறு நிறையச் சாப்பிடுதல்,தேவையில்லாத பேச்சு பேசுதல்,அடுத்தவரைப்பற்றி புறங்கூறுதல்,வம்பு பேசுதல்,தேவைக்கும் அதிகமாக பணம் சேர்த்தல்,அதை மேலும் மேலும் பெருக்குவதற்காக மட்டுமே சிந்தித்தல்;ஒழுக்கக் கட்டுப்பாடுவிதிகளை அதன் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் போன்ற விஷயங்களைத் தவிர்த்தாலே படிப்படியாக ஆழ்ந்த பக்தி மனதினுள் உருவாகிவிடும்.


வங்காள மொழியில் ஒரு பழமொழி உண்டு; நீங்கள் செய்யும் அனைத்து ஆன்மீகச் செயல்களும் மரண நேரத்தில் சோதிக்கப்படும்;மரண நேரத்தில் இறைவனை நினைவு கூர்ந்தால் வெற்றி நம் பக்கம்;
எனவே,நாம் ஒவ்வொருவரும் மரண பயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு ஆன்மீகத் தொண்டில் ஆழமாகச் செல்ல பைரவப் பெருமானைத் தஞ்சமடைவோம்.



Thursday, April 30, 2015

நம் ஒவ்வொருவரையும் ஜீனியஸ் ஆக்கும் புத்தக வாசிப்பு பாகம் 2



அறிவே சக்தி;வலிமையே வாழ்க்கை என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கிறார் ஒருவர்;அது இன்றும் நம் ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் பொருந்திவருகிறதா?

இணையத்தின் பரவல்,செல்போனின் கட்டணக்குறைப்பு போன்றவை புத்தகவாசிப்பை இளைஞர்களிடையே குறைத்துவிட்டாலும்,இணையம் மூலமாக வாசிப்பது அதிகரித்துள்ளது;இங்கேதான் ஒரு சிக்கல்?

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்ற சுதந்திரமான நிலை உருவாகிவிட்டதால்,இணையத்தில் எழுதுபவர்கள் அனுபவத்தைத்தான் எழுதுகிறார்களா? அல்லது சகட்டுமேனிக்கு கண்டதையும் எழுதுகிறார்களா?

எது உண்மை?எது பொய்? எது பாதி உண்மை? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.அதே சமயம் அந்த குழப்பம் பற்றி எதுவும் அறியாமலேயே கண்டதையும் வாசித்துவிட்டு செயலில் இறங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது;இதனாலும் ஆன்மீகத்தின் மீதான நாட்டம் பலருக்கு வெறுப்பாக மாறிவருகிறது;குரு தொட்டுக்காட்டாத வித்தை குருட்டு வித்தை என்ற பழமொழியே நம்மில் பலருக்குத் தெரியாது.
எனவே புத்தங்கள் எழுதி வெளியிடுவதில் 90% உண்மை மட்டுமே இருக்கிறது;ஆன்மீகம்,ஜோதிடம்,சித்தமருத்துவம்,வாஸ்து போன்றவற்றில் புத்தகவாசிப்பு இருப்பது அவசியம்;1980க்கு முன்பு வெளிவந்த வார,மாத இதழ்களில் உண்மை மட்டுமே இருக்கிறது;ஆன்மீகம்,தியானம்.ஜோதிடம் போன்றவைகளில் 1940க்கு முன்பு வெளிவந்த நூல்களிலும்,1915க்கு முன்பு வெளிவந்த நூல்களிலும் ஏராளமான பொக்கிஷங்கள் நிரம்பியிருக்கின்றன;இவைகளைத் தேடி அலையும் கூட்டம் ஒருபுறம் தமிழ்நாட்டில் அதிகரித்தாலும்,அவர்களுக்கு இவைகளை எங்கே தேடுவது? என்று தெரியாமல் தேடுபவர்களே அதிகம் இருக்கிறார்கள்;அனைத்து பழைய புத்தகக்கடைகள்,கன்னிமரா நூலகம்,சென்னை,பென்னிங்க்டன் நூலகம்,ஸ்ரீவில்லிபுத்தூர் போன்றவைகளில் தேடலாம்;


லண்டனில் நூலகராக வாழ்ந்து வந்த ஒரு ஆங்கிலேயர் ,லண்டனின் பழைய புத்தகக்கடையில் ஒரு நூலைக் கண்டெடுத்தார்;அந்த நூல் நமது பாரத நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றை முழுமையாகத் தெரிவிக்கக் காரணமாக இருந்தது;
சீனப் பெருஞ்சுவரைப் போல நமது பாரத நாட்டில் கி.பி.1700களில் உப்பு வேலி ஒன்றை அன்றைய ஆங்கிலேயன் 2500 கி.மீ.தூரத்திற்கு நிறுவினான்;இந்த உப்புவேலி இன்றைய பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே துவங்கி டெல்லி,மத்தியப்பிரதேசம்,ஒரிஸா வரை நீண்டிருந்தது;இந்த உப்புவேலியின் மூலமாக நமது பாரத நாட்டில் பலமுறை செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கினான் ஆங்கிலேயன்;இந்தப் பஞ்சங்களால் நமது தேசம் பல கோடி இந்தியர்களை பலி கொண்டது;இது தொடர்பாக அந்த ஆங்கிலேயர் தொடர்ந்து ஆய்வு செய்து,நமது நாட்டிற்கும் வருகை தந்து அந்த உப்புவேலியின் மிச்ச சொச்சத்தை 18 ஆண்டுகளாகத் தேடி அலைந்தார்;பூலான் தேவி வாழ்ந்து வந்த புந்தேல் கண்டு என்ற வனப்பகுதியில் சில நூறு மீட்டர்கள் தொலைவுக்கு வனத்திற்குள் இருந்ததைக் கண்டுபிடித்தார்;அதைப் படம் பிடித்து உப்புவேலி என்ற புத்தகமாகவும் வெளியிட்டார்;மார்ச் 2015 இல் தமிழிலும் இந்த புத்தகம் வெளிவந்தது;நமது பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த உப்புவேலி என்ற புத்தகத்தை கண்டிப்பாக வாசிப்பது அவசியம்;
வெறும் உப்புக்கு வரிவிதிக்கிறேன் பேர்வழி என்று நமது நாட்டின் அப்பாவி மக்கள் கோடிக்கணக்கானவர்கள் செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கி கொன்றான் ஆங்கிலேயன்.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த தொடர் வந்தார்கள்;வென்றார்கள்;கி.பி.1000 முதல் கி.பி.1992 வரை நமது நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை பல ஆங்கில நூல்களை வாசித்து அதில் இருந்து தொகுக்கப்பட்டு வெளிவந்த தொடர் இது;ஆனந்த விகடனில் கார்டூனிஸ்டாக இருந்த மதன் எழுதிய அற்புதமான வரலாற்றுத் தொடர்;கடந்த ஆயிரம் ஆண்டுகளில் நமது நாட்டின் வரலாற்றை வாசிக்க ஒரளவு இந்த புத்தகம் உதவும்;


பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள் என்ற தலைப்பில் விநாயக தாமோதர சாவர்க்கர் ஐந்து பாகங்களாக எழுதியிருக்கும் இந்த நூல் பழமையான நூலகங்களில் மட்டுமே காணப்படுகிறது.கடந்த 10,000 ஆண்டுகளாக நமது பாரத தேசம் எப்படியெல்லாம் வாழ்ந்தது? என்பதை சாவர்க்கர் எழுதியிருக்கிறார்;இதையே நமது பள்ளியின் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும்;அந்த அளவுக்கு ஆழமாக ஆராய்ந்து நமது பாரத தேசத்தின் பெருமைகளை விவரித்து எழுதியிருக்கிறார்;நமது தேசம் பற்றிய பெருமைகளையும்,சாதனைகளையும் இவரைப் போல வேறு எவரும் எழுதியிருப்பார்களா? என்பது சந்தேகமே!!

கண்சிமிட்டும் விண்மீன் கள் என்ற பெயரில் ஒரு நாவல் மராத்தி மொழியில் இருந்து தமிழில் 1980களில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.சுசீலா கனகதுர்கா என்பவர் மொழி பெயர்த்துள்ளார்;வேற்றுகிரக மனிதர்களை சந்தித்து பிரபஞ்சத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனையை மனிதர்கள் பேசித் தீர்க்கும் விதமாக மராத்திய மொழியில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியிருக்கிறார்;
டீன் ஏஜ் குழந்தைகளிடையே அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டும் நாவல்களில் இதுவும் ஒன்று.

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய நாவல் கூடு;ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு மன்னனின் உடலுக்குள் புகுந்து கொள்கிறார்;நிர்வாகத்தில் நாசமாகிப் போன ஒரு நாட்டை வெறும் 48 மணி நேரத்தில் எப்படி சீரமைக்கிறார் என்பதை அவரது சொந்த ஸ்டைலில் நாவலாக எழுதியிருக்கிறார்;ஒரு நாட்டை ஆளும் மன்னன் கெட்டவனாக இருந்தால்,அந்த நாட்டில் பெண்கள் நிலை என்னவாகும்? அரசு அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டம் போடுவார்கள்? என்பதை அப்பட்டமாகவும்,சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார்;இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்குமே ஆன்மீகத்தின் மீது ஒரு தாகத்தை உருவாக்கும் என்பது எனது அனுபவம்.


இன்னும் தொடரும். . .


இப்படிக்கு

உங்கள் கை.வீரமுனி. . .

மந்திரங்கள் எப்படி இயங்குகின்றன?




நாம் வாழ்ந்து வரும் மனித உலகத்திற்கும்,நம்மைச் சுற்றிலும் இருக்கும் சில சூட்சும உலகங்கள் மற்றும் நமது பூமிக்கு மேலே இருக்கும் ஏழு தெய்வீக உலகங்கள்,கீழே இயங்கும் ஏழு கர்ம உலகங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்த உதவுபவையே மந்திரங்கள்!

சித்தர்களும்,தெய்வீக புருஷர்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக தவம் இருந்து இறைசக்தியிடம் இருந்து வரங்களாகப் பெற்றவையே இந்த மந்திரங்கள் ஆகும்;பூமியில் மனிதர்கள் மத்தியில் 7,00,00,000 கோடி மந்திரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன;

இவைகளில் எச்சில் படாத மந்திரங்கள்,காயத்ரி மந்திரங்கள்,பீஜாட்சர மந்திரங்கள்,அஷ்டகர்ம மந்திரங்கள்,வழிபாட்டு மந்திரங்கள் என்று பலவகைகள் உள்ளன;
தவிர தரையில் ஜபிக்கக் கூடியவை;கடலில் ஜபிக்கக் கூடியவை;காட்டுக்குள் ஜபிக்கக் கூடியவை;குகைக்குள் ஜபிக்கக் கூடியவை;பூமிக்கு அடியில் ஜபிக்கக் கூடியவை;விண்ணில் பறந்துகொண்டே ஜபிக்கக் கூடியவை;என்று பலவிதங்களும் உண்டு;

மேலும் ஆண் மட்டுமே ஜபிக்கக் கூடியவை;பெண் மட்டுமே ஜபிக்கத் தக்கவை;அலி மட்டும் ஜபிக்க வேண்டியவை;துறவி மட்டும் ஜபிக்கக் கூடியவை;இல்லறத்தார் ஜபிக்கக் கூடியவை என்றும் வகைப்படுத்தப்படுள்ளன;

மனதைத் திடப்படுத்துபவை அனைத்துமே மந்திரங்கள் எனப்படும்;
வித்மஹே என்ற வார்த்தையில் முதல் வரியும்,தீமஹி என்ற வார்த்தையில் இரண்டாவது வரியும்,ப்ரசோதயாத் என்ற வார்த்தையில் மூன்றாவது வரியும் நிறைவடைந்தால் அது காயத்ரி மந்திரம் எனப்படும்;ஒவ்வொரு இறைசக்திக்கும் காயத்ரி மந்திரம் உண்டு;தகுந்த ஆன்மீகத் தகுதி வராமல் இவைகளை ஜபித்தால் உடல் நலம்,மன நலம் பாதிக்கக் கூடும்;

ஒரே ஒரு எழுத்து மட்டுமே மந்திரமாக இருக்குமானால் அது பீஜாட்சர மந்திரம் எனப்படும்;இவைகள் உரிய தெய்வீக சக்தியின் ஆத்மாவுக்குச் சமமானவை;

அஷ்ட கர்ம மந்திரங்கள் என்றும் இருக்கின்றன;இவையே மாந்திரீகத்திற்கு அடிப்படை ஆகும்;இதில் எட்டு விதமான செயல்களைச் செய்யலாம்;அல்லது எட்டுவிதமான செயல்களை தடுத்து நிறுத்தலாம்;ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்ப இந்த அஷ்ட கர்ம மந்திரங்களை ஜபிக்கும் முறை நம்மை வந்து சேரும்;இவைகளைக் கொண்டு தனிமனித நலனுக்கு செய்வதால் சாபமும் கிடைக்கும்;மனிதர்களின் செயல்களை எட்டுவிதமான வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;அந்த எட்டுவிதமான மந்திரங்களைக் கொண்டே பூமியில் மாந்திரீகம் ஒரு தொழிலாகவே பரவியிருக்கிறது;மாந்திரீகத்தை ஒரு தொழிலாகவே செய்வது தமிழ்நாடு,கேரளாவில் மட்டுமல்ல;பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது;இதில் முழுமையாக அறிந்தவர் என்று எவரும் இல்லை;

இல்லறவாசிகள் தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை 108 முறை ஜபிப்பதை வழக்கமாக வைத்திருப்பது அவசியம்;அதுவும் ஏதாவது ஒரு இறைவனது பெயரை ஜபித்து வந்தாலே போதும்;தமிழ்நாடு முழுவதும் தினமும் 108 முறை அல்லது 1008 முறை ராமஜெயம் எழுதுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்;ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம என தினமும் 108 முறை ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;அதேபோல,தினமும் 108 முறை ஒம் நமச்சிவாய நமஹ என்று ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;சிலர் சிவாய நமஹ என்றும்,சில நமச்சிவாய என்றும்,சிலர் சிவாய சிவ என்றும்,சிலர் சிவசிவ என்றும்,சிலர் ஒம்சிவசிவஒம் என்றும் ஜபிப்பவர்களும் இருக்கிறார்கள்;

எப்படி ஒரு மந்திரத்தை ஜபிப்பது?

ஒரு மஞ்சள் துண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்;அதிகாலையில்(4.30 முதல் 6 க்குள்)காலைக் கடமைகளை நிறைவு செய்துவிட்டு உங்களுக்கு விருப்பமான மந்திரத்தை இந்த மஞ்சள் துண்டு மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பத்மாசனத்தில் தயாராக வேண்டும்;

அப்படி அமரும்முன்பு, வாசமான பத்தியை பொருத்தி வைக்க வேண்டும்;ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;(இதில் ஏதாவது ஒன்று செய்தாலும் போதுமானது)


பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு ஒம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;(குல தெய்வம் தெரியாதவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளலாம்) பிறகு உங்களது விருப்பமான சிவ மந்திரம் அல்லது விஷ்ணு மந்திரத்தை 108 முறை உதடு அசையாமல் மனதுக்குள் ஜபிக்கலாம்;
இப்படி ஒரு ஆண்டுக்குக் குறையாமல் ஜபித்து வந்தால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வரும்;அப்படி உயிர் வந்தப் பின்னர் அந்த மந்திரம் உங்களை பாதுகாக்கும்;வழிநடத்தும்;

நீண்டகாலமாக பிரச்சினைகளுடன் இருப்பவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே அவைகளைத் தீர்க்கமுடியும்;கடந்த காலங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் மந்திர ஜபத்தின் மூலமாகவே தங்களது பிரச்சினைகள் தீர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்;

எப்படி இந்த மந்திர ஜபம் நம் சிக்கல்களைத் தீர்க்கும்?

ஒரு நாளுக்கு 108 முறை வீதம் குறைந்தது ஒராண்டு வரை மந்திர ஜபம் செய்து வருவதால்,உங்களது மந்திர ஜபம் நெய்தீபத்தின் சுடர் மூலமாக ஆவியாகவோ அல்லது பத்திப் புகை மூலமாகவே விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்தைச் சென்றடைகிறது;விண்வெளியில் நமது விதி ஒரு ஏடாகவே இருக்கிறது;அந்த ஏட்டை நமது மந்திர ஜபம் சென்றடைகிறது;பிறகு,அந்த ஏட்டிற்கும் மேலே குறிப்பிட்ட உயரத்தில் ஆகாய ஏடு என்ற ஒன்று இருக்கிறது;அந்த ஆகாய ஏட்டைச் சென்றடைகிறது உங்களின் மந்திர ஜபம்;அங்கே சென்றடைந்ததும் உங்களின் கர்மவினையை உங்களது மந்திரஜபமானது அழித்துவிடுகிறது;அப்படி அழிப்பதற்கு உங்கள் ஜனன ஜாதகத்தில் பூர்வபுண்ணியமும் துணைபுரிகிறது;கடந்த சில ஆண்டுகளாக ஈசனின் அருளால் கண்டறிந்த தெய்வீக உண்மை இது;

ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் உங்களின் கர்மவினைகள் கரையவும் ஒரு சுலபமான மந்திரஜபம் இருக்கிறது;

அமாவாசையன்று மேலே கூறியவிதத்தில் மந்திர ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்;ஒரு மாதம் வரை;அதாவது இரண்டாவது அமாவாசை வரை 10 நிமிடம் வரை மட்டுமே மந்திர ஜபம் செய்ய வேண்டும்;இரண்டாவது அமாவாசை முதல் அந்த மந்திர ஜபத்தை 20 நிமிடமாக அதிகரித்து மூன்றாவது அமாவாசை வரை தினமும் 20 நிமிடம் ஜபிக்க வேண்டும்;மூன்றாவது அமாவாசை முதல் தினமும் 40 நிமிடம் மந்திரத்தை ஜபித்து வரை வேண்டும்;நான்காவது அமாவாசை வரை இப்படிச் செய்ய வேண்டும்;நான்காவது அமாவாசை முதல் உங்கள் சிக்கல்கள் தீரும் வரை தினமும் 80 நிமிடம் மந்திரம் ஜபிக்கக் கூடாது;60 நிமிடம் வரை தினமும் மந்திரம் ஜபித்தால் போதுமானது;
ஏனெனில்,நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ஒரு மனிதனது ஒரு நாள் மந்திர ஜபமானது 60 நிமிடம் வரை ஜபித்தாலே போதும்;அதற்கு மேல் ஜபித்தால் அந்த மந்திரஜப ஆற்றலைத் தாங்க முடியாது;தலைவலியோ அல்லது வேறு ஏதாவது உடல் நலக் குறைவோ உருவாகலாம்;

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்வியல் சிக்கல்கள் இருக்கும்;அதற்கும் ஒரே ஒரு மந்திரத்தை ஜபித்தாலே போதுமானது;


மந்திரம் ஜபிக்க ஆரம்பிப்பவர்கள் கண்டிப்பாக 18 வயதைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும்;கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக(உங்கள் பிரச்சினைகள்/வாழ்வியல் சிக்கல்கள் தீரும் வரை) நிறுத்தியிருக்க வேண்டும்;இப்படி இதற்காக மந்திரம் ஜபிக்கிறேன் என்று எவரிடம் தெரிவிக்கக்கூடாது;புரோட்டா,முட்டை இரண்டுமே அசைவம் தான்;ஒரு போதும் சைவம் அல்ல;சைவப் புரோட்டாவும் அசைவமே! மது அருந்துவதையும்,போதைப் பொருட்களையும் தவிர்த்தால் மட்டுமே மந்திரஜபம் கைகூடும்;


மந்திர ஜபம் செய்து வரும் நாட்களில் துக்கத்தில் கலந்து கொண்டால் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

ருதுவான வீடுகளுக்குச் சென்று ருது விஷேசத்தில் கலந்து கொண்டாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

குழந்தை பிறப்பை போய் பார்த்தாலும் ஒரு மாதம் வரை ஜபிக்கக் கூடாது;

உக்கிரமான தெய்வ மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது இல்லறவாசிகளுக்கு நல்லது;உதாரணமாக காளி,ஆஞ்சநேயர் மந்திரங்களையும்,நரசிம்மர்,லட்சுமி நரசிம்மர் மந்திரங்களை ஜபிக்காமல் இருப்பது மிகவும் நன்று;மிகவும் கடினமான கட்டுப்பாடுகள் இந்த கடவுள்களின் மந்திர ஜபத்தை ஜபிப்பவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது;அது நடைமுறையில் சிறிதும் சாத்தியமில்லை;

ஏழரைச்சனி(துலாம்,விருச்சிகம்,தனுசு),அஷ்டமச்சனி(மேஷம்),
கண்டச்சனி(ரிஷபம்);அர்த்தாஷ்டமச்சனி(சிம்மம்) இருப்பவர்கள் (அசைவத்தைத் தவிர்த்துவிட்டு)ஒம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்;
மற்றவர்கள் சிவ மந்திரத்தை ஜபிக்கலாம்;

இந்த பதிவு ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே! தமிழ்நாடு சித்தர் பூமி! பல புண்ணிய ஆத்மாக்கள் முற்பிறப்புகளில் செய்த புண்ணியச் செயல்களால் தமிழர்களாகப் பிறந்துள்ளனர்;அப்படிப் பிறந்துள்ளவர்களுக்கு மிகச் சுலபமாக சித்தர் தரிசனமும்,மிகவும் சக்தி வாய்ந்த மந்திர உபதேசமும் கிடைத்து வருகிறது;அப்படி கிடைத்தவர்கள்,கிடைக்க இருப்பவர்களில் பலர் வலைப்பூ/முகனூல் பக்கம் வழியாக ஆன்மீகத்தைப் பரப்புகிறார்கள்;அவர்களுக்கு இந்த பதிவு கத்துக்குட்டியாகவே தோன்றும்;

இந்த மந்திர ஜபமானது பக்தி மார்க்கமே! தைரியமாக 18 வயது நிரம்பிய எவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருப்பதை பின்பற்றலாம்;

இப்படிக்கு உங்கள் கை.வீரமுனி. . .




Wednesday, April 29, 2015

அடுத்த மன்வந்திரம் பற்றி காகபுஜண்டரின் நாடிவாக்கு!!



நமது இந்துக் காலக்கணக்கீடுதான் உலகின் தொன்மையான காலக்கணக்கீடு;இதை அடுத்த நூற்றாண்டில் அறிவியல்பூர்வமான உண்மை என்பதை நவீன வானவியல் கண்டுபிடிக்கும்;அதன் பிறகு தற்போதைய கிரிகேரியன் காலண்டர் வழக்கொழிந்து போகும்;

க்ருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது;
திரோதாயுகம் 12,96,000 ஆண்டுகளை உடையது;
துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது;
நாம் வாழும் கலியுகத்தின் ஆயுள் 4,32,000 ஆண்டுகள் ஆகும்;நாம் கலியுகாதி 5116 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது;

இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும்;நான்கு சதுர்யுகம் சேர்ந்தது ஒரு மஹாயுகம் ஆகும்;24 மஹாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம் ஆகும்;நாம் இப்போது வைவஸ்த மன்வந்திர காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;இந்த வைவஸ்த மன்வந்திரத்தின் காலம் 19,05,06,932 ஆண்டுகள் ஆகும்.

இந்த மன்வந்திரம் நிறைவானப் பின்னர்,ஸீர்ய ஸாவர்ண்ய மன்வந்திரம் ஆரம்பமாகும்;அப்போது பூமியின் அச்சு 23 1 / 2 டிகிரி சாய்ந்து இருக்காது;28 டிகிரி சாய்ந்து இருக்கும்;இதனால் பூமியின் துருவம் மாறிவிடும்;

சூரியனுக்கும் சனிக்கும் இடையே பல புதிய கிரகங்கள் தோன்றும்;சந்திரனின் சலனமும் முற்றிலும் மாறிவிடும்;சில மலைகள் பூமிக்குள் புதைந்துவிடும்;சில புதிய மலைகள் தோன்றும்;நட்சத்திர ஆரம்பம் அசுவினிக்குப் பதிலாக கேட்டையில் இருந்து பின்புறமாக எண்ணப்படும்;ஒரு மாதத்திற்கு 33 நாட்கள் வீதம் 10 மாதங்கள் இருக்கும்.


இந்த ஆச்சரியமான உண்மைகள் காகபுஜண்டர் நாடியில் இருக்கின்றன;

ஆதாரம்:ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம்4, 5;வெளியீடு ஏப்ரல் 2015

Tuesday, April 28, 2015

ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும்?



உலகம் உருவாகி 5 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாக நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன;மனிதன் நாகரீகமடையத்துவங்கி 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன;மனிதன் நாகரீகமடையத்துவங்கியதும் உலகில் தோன்றிய முதல் மொழி நம் தமிழ் மொழியே! உலகில் உருவான முதல் வழிபாடு சிவ வழிபாடே!எல்லாம் அவன் செயல் என்பது திரித்துவிடப்பட்ட பழமொழி! எல்லாம் சிவன் செயல் என்பதே பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழங்கும் நிஜமான பழமொழி!!

அணுவுக்குள்ளே நிலையான சக்தி,அசையும் சக்தி என்று இரண்டு சக்திகள் இருக்கின்றன;அதே போல சிவன் மட்டுமே நிலையான சக்தி;சிவனைத் தவிர அனைத்து கடவுள்களுமே ஒரு குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அசையும் சக்திகள்;திருமூலரின் திருமந்திரத்தில் இது தொடர்பாக விரிவான விளக்கங்கள் பல பாடல்களில் தெரிவித்துள்ளார்;தேவாரப்பதிகங்களிலும் சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளன;

மருது சகோதரர்கள் ஒரு குறிப்பிட்ட தேவாரப்பதிகம் தினமும் பாடி வந்தனர்;அந்த தேவாரப்பதிகம் பாடியதால் தான் சராசரி மனிதர்களாக இருந்த அவர்களால் மன்னராக முடிந்தது;
ராவணன் சிவவழிபாட்டை ருத்ராட்சம் அணிந்து தொடர்ந்ததால் தான் மரணமில்லாதப் பெருவாழ்வைப் பெற்றான்;மேலும் நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் இயக்கும் நவக்கிரகங்களையும் அடிமைப்படுத்த முடிந்தது;பிற்காலத்தில் பெண் பித்தால் அனைத்து சிவ அருளையும் இழந்தது புராண உண்மை;

முருகக் கடவுளால் வதம் செய்யப்பட்ட சூரபத்மன் சிவவழிபாடு செய்துதான் 1008 அண்டங்களையும் ஆளும் வரம் பெற்றான்;
இந்த உலகில் இதுவரை இருக்கும் அனைத்து மதங்களும் கூறும் உண்மை: “இறைவன் ஒருவனே”.அந்த இறைவனின் பெயர் ஆதிசிவன் என்று இந்துக்களும்,அல்லா என்று இஸ்லாமியர்களும்,பரமபிதா என்று கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர்; பெயர் வெவ்வேறாக இருந்தாலும்,இறைசக்தி ஒன்றே!!சிவனின் தூயத் தமிழ்ப் பெயர்: ஈசன்.(ஈஷா யோகாவை இந்தப் பெயரின் மூலமாகத்தான் வைத்திருப்பார்களோ?)

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் இயக்கும் மூல முதல் சக்தி மனோன்மணி என்ற ஆதி சக்தி! இவள் எட்டு வயது சிறுமி வடிவில் தோற்றமளிப்பவள்;இவளே தலைமைக் கடவுள்! இவளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ஐந்து விதமான ஈசன் கள்!!
இந்த சிறுமிவடிவ தெய்வத்தை வழிபடும் தகுதியை அடைய நாம் சித்தரானால் தான் முடியும்;

சித்தராக வேண்டுமானால் அண்ணாமலையை அடிக்கடி வலம் வர வேண்டும்;அண்ணாமலை கிரிவலத்திற்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு;

பூமியில் 84,00,000 விதமான உயிரினங்கள் வசிக்கின்றன;சில உயிர்களுக்கு ஆயுள் சில மணித்துளிகள்;சிலவற்றிற்கு சில நூறு ஆண்டுகள்;இந்த 84,00,000 பிறப்புகளில் பெரும்பாலானவற்றைக் கடந்தப் பின்னரே மனித ஜன்மம் எடுத்துள்ளோம்;கடந்த ஐந்து மனிதப்பிறவிகளில் நாம் செய்த நற்செயல்கள் மற்றும் தீயச் செயல்களின் தொகுப்பை அனுபவிக்கவே இந்த மனிதப்பிறப்பு எடுத்துள்ளோம்;இன்னும் பல நூறு மனிதப் பிறப்பு எடுக்கப் போகிறோம்;இதைத் தடுத்து அடுத்த சில பிறவிகளுக்குள் முக்தி அடைய நாம் செய்ய வேண்டியது அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்வதுதான்;

வெகுவிரைவில் முக்தி கிடைக்கவே விரும்புகிறோம்;ஆனால்,அது நடைமுறை சாத்தியம் இல்லை;

அதே போல இப்பிறவியோடு எனக்கு மனிதப் பிறவி போதும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்;அந்த அளவிற்கு நம்மில் பெரும்பாலானவர்கள் வேதனைகள்,கஷ்டங்கள்,துயரங்கள்,அவமானங்களை அனுபவித்ததன் விளைவாக இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேள்விப்படுகிறோம்;

எனவே,இனிமேல் பிறக்க இருக்கும் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அண்ணாமலை கிரிவலமே உயர்ந்தது;சிறந்தது;எளியது;

எப்போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்?

தமிழ் வருடப்பிறப்பு அன்று அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

தமிழ் மாதப்பிறப்பு தோறும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;(400 ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் நடைமுறையில் இருந்தது)

அவரவர் பிறந்த நட்சத்திர நாளன்று அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

அண்ணாமலையாரின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

ஈசனின் ஜன்ம நட்சத்திரம் என்று நாம் நம்பும் திருவாதிரை நட்சத்திர தினங்களில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

எப்போதெல்லாம் நமக்கு விடுப்பும்,பணமும் கிடைக்குமோ அப்போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

குபேரலிங்கம் கடந்ததும் அமைந்திருக்கும் இடுக்குப் பிள்ளையார் கோவிலின் இடுக்கு வழியாக ஒருமுறை சென்றால் ஒரு பிறவி குறையும் என்று சித்தர்களின் தலைவர் அகத்தியர் தெரிவித்திருக்கிறார்;அப்படிச் செல்லும் போது அண்ணாமலையை நோக்கி தலையை நுழைத்து இடுக்கினுள்ளே நுழைய வேண்டும்;அதுதான் முறை;

ஒம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை சொன்னால் 3,00,000 தடவை ஒம் நமச்சிவாய நமஹ சொன்னதற்குச் சமம் என்று அண்ணாமலையாரே தெரிவித்துள்ளார்;


அண்ணாமலைக்குப் புறப்படுவோமா?

Thursday, April 23, 2015

நமது உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பெற


உலகத்திலேயே மிகப் பெரிய முட்டாள் கூட்டம் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது பாரத தேசத்தில் தான்; ஆமாம்! உலக ஜனத்தொகை 700 கோடி! இதில் பாரத ஜனத்தொகை 130 கோடி!! இந்த 130 கோடிப் பேர்களையும் 300 ஆண்டுகளாக முட்டாளாக்கிவிட்டு,ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பன்னாட்டு நிறுவனங்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றன;இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தோன்றிய நாட்டில் இருந்தே விரட்டப்பட்டாலும்,நம் நாட்டில் நமது நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொஞ்சம் கூட சத்துக்களே இல்லாத உணவுகளை டிவி விளம்பரங்கள் மூலமாக நமது நாட்டில் பிரபலப்படுத்துகின்றன;நாமும் நமது சம்பளத்தை இவைகளுக்குச் செலவிட்டு தினமும் அல்லது அடிக்கடி சாப்பிட்டு, நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கிறோம்;


எப்படியெல்லாம் நாம் முட்டாளாக்கப்பட்டோம்? என்பதை அறிய நாம் ஒவ்வொருவருமே ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களின் அனாடமி தெரபி இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்;அவரது பேச்சுக்கள் அடங்கிய தொகுப்புகள் அவரது இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றன;அதில் உலக அரசியல் என்ற தலைப்பில் 6 மணி நேரம் பேசியதை நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்;பிறகு,அடுத்த 6 மாதங்களில் அதை குறைந்த பட்சம் 3 முறையாவது கேட்க வேண்டும்;


அதன் பிறகுதான் நாம் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்படுகிறோம் என்பது புரியும்;ஹீலர் பாஸ்கர் ஐயா அந்த 6 மணி நேரப் பேச்சில் கூறியிருப்பது வரிக்கு வரி உண்மைதான்;
இதையே வடபாரதத்தில் ராஜீவ் தீக்ஷித் என்பவர் செய்து வந்தார்;அவரது இணையதளமும்,யூ ட்யூப் பேச்சுக்களும் இன்றும் இணையத்தில் இருக்கின்றன;


தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;இந்த பூமியில் எந்த மூலையில் வாழ்பவராக இருந்தாலும் பலர் காலை உணவு சாப்பிடுவதே இல்லை;இது உடல் ஆரோக்கியக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்;40 வயதுக்கு மேல் கண்டிப்பாக பக்கவாதத்தில் கொண்டு போய்விடும்;

சாப்பிடும் போது ஒரு போதும் தண்ணீர்/மது பானம்/குளிர்பானம் அருந்தவே கூடாது;

சாப்பிட்டு முடித்த உடனேயும் தண்ணீர் அருந்தக் கூடாது;

சாப்பிடும் போது பேசக் கூடாது;

சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது;சாப்பிடும் போது கணினி/செல்போன்/டேப்ளாய்டு இயக்கக்கூடாது;செல் போனில் பேசக் கூடாது.

நமது உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை முழுமையாக அறிய வேண்டுமா?

நமது உடலில் இருக்கும் எந்த நோயாக இருந்தாலும் அந்த நோய் ஆங்கில மருந்துகள் இன்றித் தீர வேண்டுமா?

நமது உடல் ஆரோக்கியம் உறுதிப்பட வேண்டுமா?

ஆம் எனில் அரவிந்த் ஹெர்ப் என்ற இணையதளத்திற்குச் செல்லவும்;அதில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணிற்கு போன் செய்யவும்.(+91 4563 233308)இயற்கை நல வாழ்வுப் பயிற்சி முகாம் அடுத்து எப்போது என்று கேட்கவும்;அதில் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும்;

இந்த இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம் மாதம் தோறும் இரண்டு முறை நடைபெறுகிறது;

முதலாவது மூன்று நாட்கள் பயிற்சி முகாம்;

இரண்டாவது ஆறு நாட்கள் பயிற்சி முகாம்;

மூன்று நாட்கள் பயிற்சி முகாமில் முதல் நாளும் மூன்றாம் நாளும் பழச்சாறு மட்டுமே உணவாக வழங்கப்படுகிறது;இரண்டாம் நாளில் குடிநீர் மட்டுமே உணவாக அருந்த வேண்டும்;இரண்டாம் நாள் காலையில் இருந்து மூன்றாம் நாள் காலை வரை எவரிடமும் பேசக் கூடாது;தூங்க வேண்டும்;இதன் மூலமாக உடலுக்கும்,உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் முழு ஓய்வு நாம் தருகிறோம்;இதனால் நோக்குரிய காரணிகள் அழியத் துவங்குகின்றன;

இந்த மூன்று நாட்கள் முகாம் நிறைவு செய்த சில மாதங்களுக்குப் பிறகு ஆறு நாட்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்;இதில் முதல் இரண்டு நாட்களும்,இறுதி இரண்டு நாட்களும் பழச்சாறு உணவாக வழங்கப்படுகிறது;மூன்றாம் நாள் காலையில் இருந்து ஐந்தாம் நாள் காலை வரை தண்ணீர் மட்டும் அருந்தி,பகலிலும் இரவிலும் தூங்க வேண்டும்;எவரிடமும் பேசக் கூடாது.

தவிர,தினசரி 30 நிமிடம் செய்யத்தக்க சிலபல யோகாசனங்களையும்,பிராண பயிற்சிகளையும் பயிற்றுவிக்கிறார்கள்;இந்த முகாம்களை நடத்தும் ஒருங்கிணைப்பாளரின் பெயர் திரு.பாலு அவர்கள்;யோகா மாஸ்டர் திரு.கணேசன் அவர்கள்;

இந்த முகாம்களுக்கு பதிவுக் கட்டணம்;பயிற்சிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது;முற்றிலும் இலவசம்;இந்த முகாம்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாநகரில் முடங்கியார் சாலையில் 4 வது கி.மீ.தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தாரால் முற்றிலும் சமுதாய நலனுக்காக கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது;

பயிற்சிக்குத் தேவையான சில சிறு உபகரணங்கள் வாங்கிட ரூ.300/-தேவைப்படும்;இந்த முகாமில் கலந்து கொள்ள வயதுத் தகுதி 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;இந்த முகாமில் கலந்து கொண்டு முகாமை நிறைவு செய்தால் அவர்களின் எடை கண்டிப்பாக சில கிலோக்கள் குறைந்துவிடும்;


இந்த சம்மரை நமது குழந்தைகளோடு இந்த முகாம்களில் கொண்டாடினால் தான் என்ன? நமக்கும் சரி! நமது குழந்தைகளுக்கும் சரி! ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு கிடைக்குமே!!!