Thursday, May 23, 2013

பைரவப் பெருமானின் ஆசிபெற உதவும் மிதுன குருப்பெயர்ச்சி!!!



ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மனமகிழ்ச்சியைத் தருபவர் குருபகவான் ஆவார்.மனித உடலில் இருதயத்திற்கு அதிபதியான அவர் முழுச் சுபக் கிரகமாகத் திகழ்கிறார்.ஒருராசியைக் கடக்க ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார் குருபகவான்!!! மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களான வீடு/வேலை/தொழில் மாற்றம், திருமணம்,குழந்தைப்பிறப்பு,கடன் தீரல்,வராக்கடன் வசூலாகுதல்,சொந்தமாக வீடு வாங்குதல் அல்லது கட்டிக் குடியேறுதல்,தங்க நகை சேமிப்பு,பணச் சேமிப்பு,கஷ்டங்களிலிருந்து மீள சரியான ஜோதிடரை சந்தித்தல் போன்றவைகளுக்குக் காரகத்துவம் குரு பகவானின் பொறுப்பில் இருக்கிறது.
சனிபகவானும்,குருபகவானும் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை மேஷராசியில் முதல் நட்சத்திரமான அசுபதி/அஸ்வினியின் சந்தித்துக் கொள்கின்றனர்.இந்த சந்திப்பின் அடிப்படையிலேயே தமிழ் வருடங்கள் 60 என்று நமது முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.


28.5.13 செவ்வாய்க்கிழமை அன்று இரவு மணி 9.15க்கு குருபகவான் ரிஷபராசியின் இறுதி முனையான மிருகசீரிடம் 2 ஆம் பாதத்தில் இருந்து மிதுனராசியின் ஆரம்ப முனையான மிருகசீரிடம் 3 ஆம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார்.மிதுனராசியை 12.6.14 வரை கடந்து சென்று 13.6.14 அன்று கடகராசிக்குப் பெயர்ச்சி ஆக இருக்கிறார்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில்,13.6.14 அன்று குருபகவான் உச்சமடைய இருக்கிறார்.இதன் மூலம் பொருளாதாரரீதியான உயர்வுகள் ஒவ்வொரு இந்தியர்களிடமும் ஏற்பட இருக்கின்றன.
28.5.13 செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குருபெயர்ச்சி ஆவதால்,பூமியில் நிலம் சார்ந்த மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.மனதாலும்,ஐம்புலன்களாலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கித் தேடல் உள்ளவர்களுக்கு இந்த ஒரு வருடம் சிக்கல்கள் நிறைந்த வருடமாக அமையும்.
மேலும்,ஜோதிடப்படி இந்த குருப்பெயர்ச்சி ஏழரைச்சனியில் ஜன்மச்சனியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு மகத்தான நிம்மதியையும்,பணரீதியான/மனரீதியான/மணரீதியான/குடும்பம் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு கட்டப் போகிறது.எழுபது சதவீத கஷ்டங்கள் நீங்க இருக்கின்றன.

ரிஷபம்,கடகம்,சிம்மம்,தனுசு,கும்ப ராசிக்காரர்களுக்கு குருவால் கோடி நன்மைகள் கிடைக்க இருக்கின்றன.
மேஷம்,மிதுனம்,கன்னி,விருச்சிகம்,மீனராசியினருக்கு இதுவரை குருபகவானால் கிடைத்துவந்த நற்பலன்கள் குறையத்துவங்கியிருக்கும்.



உலகத்தின் முதல் விநாயகர் ஆலயமான பிள்ளையார் பட்டிக்கு 28.5.13 செவ்வாய்க்கிழமை அன்று செல்ல வேண்டும்.அங்கே முழுமுதற்கடவுளாக வீற்றிருக்கும் கற்பக விநாயகருக்கு அந்த கோவில் சம்பிராதயப்படி பூஜை செய்ய வேண்டும்;பூஜையை முடித்துவிட்டு,அந்த ஆலய வளாகத்தினுள் அமைந்திருகும் குபேர லட்சுமி பைரவப்பெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்க வேண்டும்;பிறகு,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;(ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை அந்தக் கணத்தில் ஜபிக்கலாம்)
பிறகு கோவிலுக்கு வெளியே ஐந்து சாதுக்களுக்கு ஐந்து இட்லி+நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியுடன் தானம் செய்யவேண்டும்.

இவ்வாறு தானம் செய்துவிட்டு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டிற்கும் செல்லாமலும் நமது இருப்பிடத்தைச் சென்றடைய வேண்டும்.
28.5.13 செவ்வாய்க்கிழமை காலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் அல்லது மதியம் பனிரெண்டு மணி முதல் ஒரு மணிக்குள் அல்லது இரவு ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் மேலே கூறிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

தங்களது தினசரி வாழ்க்கையில் கடுமையான சிக்கல்கள் உள்ளவர்கள்,பலவிதமான எதிர்ப்புகள் உள்ளவர்கள்,தேவையே இல்லாமல் கோர்ட் கேஸ் என்று அலைபவர்கள் இந்த செவ்வாய்க்கிழமை துவங்கி தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளுக்கு பிள்ளையார்பட்டிக்குச் சென்று இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.28.5.13 அன்று மட்டுமே குபேர லட்சுமி பைரவபெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்க வேண்டும்.மற்ற செவ்வாய்க்கிழமைகளில் அதற்குப்பதிலாக வழக்கமான செவ்வரளிமாலையை மட்டுமே அணிவிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளுக்கு செய்து முடித்தால்,முடித்த 90 நாட்களுக்குள் எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகள்,சிக்கல்கள்,பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும்.

அடுத்த ஏழு செவ்வாய்க்கிழமைகள்:
4/6/2013
11/6/2013
18/6/2013
25/6/2013
2/7/2013
9/7/2013

ஓம்சிவசிவஓம்

Sunday, May 12, 2013

அட்சய த்ருதியை(13/5/13 திங்கள்) அன்று நாம் செய்ய வேண்டியது என்னென்ன?







ஒவ்வொரு தமிழ் வருடமும் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திரிதியையே அட்சய த்ருதியை என்று அழைக்கப்படுகிறது.அட்சய என்றால் “முடிவில்லாமல் வளர்ந்து வரும்” என்று அர்த்தம்.இதை இன்றைய வணிகர்கள் வர்த்தகமயமாக்கிவிட்டனர்.இந்த திருதியையை நமது முன்னோர்கள் தமது தபோபலத்தால் கண்டறிந்தது எதற்குத் தெரியுமா? கலியுகத்தில் வாழும் மக்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்பதற்காகத்தான்!


இந்த நன்னாளில் நாம் செய்யும் ஒரு சிறு புண்ணியச் செயலும் நமது தலைவிதியில் பெரும் மாற்றத்தை உருவாக்கிவிடும்.ஆமாம்! நீங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்து,பல சில காரணங்களால் அடிக்கடி பல சில வாரங்கள்/மாதங்கள் ஜபிக்க முடியாமல் போயிருக்கலாம்;அது பற்றி சிறிதும் கவலையில்லை;அவ்வாறு ஜபிக்க முடியாதவர்கள் இந்த நன்னாளில்(13/5/13 திங்கள்) காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது குரு ஓரை காலங்களான காலை எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை அல்லது மதியம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை அல்லது இரவு பத்து மணி முதல் பதினோரு மணி வரையிலான நேரத்தில் =
மேலே கூறிய நேரங்களில் உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டைச் செய்யலாம்;


மிக மிக மிக முக்கியமானது எதுவெனில்,13/5/13 திங்கட்கிழமை காலை ஏழு மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அன்னதானம் அல்லது பழங்களுடன் கொஞ்சம் இனிப்புகளும் வழங்குவதே அட்சய திருதியை அன்று நாம் செய்யும் மகத்தான புண்ணியம் ஆகும்.மாநகரங்கள்,தொலைதூர நாடுகளில் வசிப்பவர்கள் அனாதை இல்லங்களில் அன்னதானம் செய்யலாம்.


செய்வோமா?
ஓம்சிவசிவஓம்

ஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்!!!

நன்றி:நமது ஆன்மீகக்கடல் வாசகர்!!!

Friday, May 10, 2013

பிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங்க வழிபாடு!!!



சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வடக்கு நோக்கியவாறு இருபத்தேழு நட்சத்திரங்களும் சிவலிங்க வடிவில் அமைந்திருக்கின்றன;தெற்கு நோக்கி  அரிய பைரவர் அருள்பாலிக்கிறார்.பல சித்தர்கள்,மகான்கள் ஒவ்வொரு யுகத்திலும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்;சில மகான்கள் இங்கேயே சிவசமாதி(ஜீவ சமாதி) ஆகியிருக்கின்றனர் என்பதும் தெரிகிறது.தற்போதும் பல மகான்கள்,சித்தர்கள் சாதாரண மனித வடிவில் இங்கே வந்து வழிபாடு செய்வதாக இங்கே வசிப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


கர்மவினைகளாலோ,பிறரின் சூழ்ச்சியாலோ பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர  ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்காக ஒரு எளிய சுயபரிகாரத்தை வழங்கியிருக்கிறார்.வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லையே என்று ஏங்குபவர்களுக்கும் இந்த சுயபரிகாரம் கைகொடுக்கும்.


இந்த சுயபரிகாரத்தைச் செய்ய விரும்புவோர்,கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும்;நமது பிறந்த நட்சத்திர நாள் மாதம் ஒரு முறை/இருமுறை வரும்;மாதம் ஒரு நாள் வீதம் ஏழு மாதத்திற்கு விடாமல் செய்து முடிக்க வேண்டும்.இவ்வாறு பின்பற்றினால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும்.


நமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளை நமக்கு அறிமுகமான ஜோதிடரிடம் ஒரு வருடத்திற்கு எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.ஒரு தமிழ் மாதத்திற்கு ஒருமுறை நமது பிறந்த நட்சத்திரம் வரும்;சில மாதங்களில் இரண்டு முறை வரும்.அதற்கு மேல் வராது.நமது நட்சத்திரம் வரும் நாளானது ஒரு முழு நாளில் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது.அதாவது பூராடம் நட்சத்திரம் நமது பிறந்த நட்சத்திரம் எனில்,இன்று காலையில் இருந்து நாளை காலை வரை இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது;இன்று மதியம் ஆரம்பித்து,நாளை மதியம் வரை இருக்கும்;அல்லது இன்று மாலை ஆரம்பித்து நாளை மாலை வரை  இருக்கலாம்.

எப்படி இருந்தாலும்,நமது நட்சத்திரம் இருக்கும் நாளில்,நமக்கு வசதியான நேரத்தில் சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு பால்,ஐந்து முகருத்ராட்சம் ஒன்று(வசதியிருந்தால் ஒன்றுக்கும் மேல்) கொண்டு சென்று நட்சத்திர லிங்கம் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.அங்கே இருக்கும் பூசாரியிடம் பாலைக் கொடுத்து நமது நட்சத்திர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்.பூசாரிக்கு மனதார நம்மால் முடிந்த தட்சிணையைத் தர வேண்டும்;(குறைந்தது ரூ.51/-)அபிஷேகம் செய்யும் போது அந்த லிங்கத்தின் மேல் நாம் கொண்டு வந்திருக்கும் ருத்ராட்சத்தை வைக்க வேண்டும்;(பூசாரியிடம் சொல்லியும் அந்த பாலுடன் சேர்த்து அபிஷேகம் செய்ய வைக்கலாம்)அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்.அபிஷேகம் முடிந்தப் பின்னர்,நமது நட்சத்திர லிங்கத்திற்கு எதிராக அமர்ந்து நூற்றி எட்டு முறை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.பிறகு,நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.(வேறு எந்தக் கோவிலுக்கும் போகக் கூடாது)


இவ்வாறு தொடர்ந்து மாதம் ஒரு ஜன்ம நட்சத்திர நாள் வீதம் ஏழு மாதங்கள் விடாமல்(சகுனத் தடையில் சிக்காமல் இருப்பது மிகவும் அவசியம்!) வழிபாடு செய்ய வேண்டும்.செய்து முடித்த நூறு நாட்களுக்குள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு சந்தர்ப்பம் அமையும்.வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லாதவர்களுக்கும் முன்னேற்றம் கிட்ட ஆரம்பிக்கும்.


நாம் வாழும் கலியுகத்தில் பொறாமை யார் படுவார்கள் என்று எவருக்குமே தெரியாது;எனவே,இந்த வழிபாட்டை தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி,அவர்களையும் அழைத்துச் சென்று அவர்களையும் செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.நீங்கள் மட்டும் செய்யுங்கள்.இவ்வாறு வழிபாடு செய்வதை பரம ரகசியமாக செய்து முடித்துவிடுங்கள்;செய்து முடித்தப் பின்னரும்,எவரிடமும் சொல்லாதீர்கள்;நீங்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேறுங்கள்;
மேலும்,இந்த ஆலயத்தில் புனர்நிர்மாண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;நம்மால் ஆன பொருள் உதவி,பண உதவி,உழவாரப்பணி செய்வது மிகவும் அவசியம்.





ஓம்சிவசிவஓம்

ருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்!!!





ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகத்திலும் லக்னத்துக்கு ஆறாம் இடம் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய ருணம் பற்றி விவரிக்கும்;எட்டாமிடம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய மிகப் பெரிய வீழ்ச்சி அல்லது எழுச்சியைப் பற்றி சொல்லும்;பனிரெண்டாம் இடம் ஒருவரின் வாழ்க்கையில் எதையெல்லாம் விரையம் செய்வார் என்பதைப் பற்றி கூறும்;இந்த மூன்று இடங்களைப் பற்றியும் முழுமையாக ஆராய்ந்தால் ஒருவரின் வாழ்க்கையின் ரிஸ்க்குகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன? என்பதை கண்டுபிடிக்கலாம்.ஆனால்,வேகமான வாழ்க்கையில் அதைப்பற்றியெல்லாம் ஆராய எத்தனை ஜோதிடர்களுக்கு நேரம் இருக்கும்? அல்லது நமக்குத் தான் அதைப் பற்றி அறிந்து அதற்கு ஏற்றாற் போல நமது வாழ்க்கையை ‘வடிவமைத்து’க் கொள்ளத் தான் நேரம் இருக்கிறதா?

எனது உறவினரின் சோகம் வினோதமானது;அவர் விற்ற வாகனம்  மூன்றே ஆண்டுகளில் பலர் கைமாறிச் சென்று விபத்துக்குள்ளானது.விபத்துக்குள்ளான போது அந்த வாகனத்தை விலைக்கு வாங்கியவர்,தனது பெயரில் வாகனத்தை மாற்றியிருக்கவில்லை;எனது உறவினரின் பெயரிலேயே (சுமார் ஏழு பேர்களின் கை மாறியப் பின்னரும்)இருந்திருக்கிறது;விபத்தின் போது வாகனத்துக்குரியவர் எஸ்கேப்!!! வழக்கோ எனது உறவினரின் மீது எங்கிருந்தோ பாய்ந்தது;இதுவும் எடுத்து வைத்தும்,கொடுக்காமல் ‘சிக்க’ வைத்திருக்கிறது என்ற பழமொழிக்கு உதாரணமாகச் சொல்லலாமா?

தனது வருமானத்துக்குள் வாழ்க்கையை நகர்த்தத் தெரியாதவர்கள்,கடன் என்ற புதைகுழியில் சிக்கிக்கொள்கிறார்கள்;அல்லது சிக்கனமான கணவனுக்கு ஊதாரி மனைவியோ அல்லது சிக்கனமான மனைவிக்கு ஊதாரி கணவனோ அமைவதும் தலைவிதி.சிலருக்கு கடனை உருவாக்கிட அல்லது பல ஆண்டுகளாக குருவி போல உழைத்து சேமித்ததை அழிக்க ஒரே ஒரு வாரிசு போதும்;

ஆக,எப்படிப் பார்த்தாலும் நமது வாழ்க்கையில் ஏற்படும் கடன் அல்லது ருணம் அல்லது சிக்கல்கள் நமது முற்பிறவிகளில் செய்தவையே திரும்பவருகின்றன;அதுவும் எப்போது வருகின்றன தெரியுமா?


ஏழரைச் சனி அல்லது அஷ்டமச்சனி காலத்தில் வருகின்றன;பலருக்கு ஏழரைச்சனி ,அஷ்டமச்சனி இல்லாத காலத்திலும் கடன் அல்லது நோய் அல்லது எதிரிகளால் தொல்லை ஏற்படுவதுண்டு;அவர்களுக்கு லக்னத்துக்கு ஆறாமிடத்து/எட்டாமிடத்து/பனிரெண்டாமிடத்து அதிபதியின் திசை வந்து,லக்னாதிபதி பலமிழந்து இருந்தால்,அம்போதான்!
ஆனால்,நாம் ‘ கடவுளே ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு சோதனையைக் கொடுக்கிறாய்?’ என்று அவர் மீது பழிபோடுகிறோம்.நாம் கற்ற கல்வி மட்டும் நமது ஏழு பிறவிகளுக்கு கூட வருகிறது என்று நினைக்கக் கூடாது;நமது பிறவி சுபாவமும்,பூர்வபுண்ணியமும்,பூர்வபாவமும் தான்!
இதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லையா? 


செவ்வாய்க்கிழமை அன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் இந்த சுயபரிகாரத்தைச் செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதிக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித் தைலம்,பால்,செவ்வரளிமாலை போன்றவைகளுடன் சென்று ஸ்ரீகால பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

அபிஷேகத்தின் முடிவில் இளநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகளுக்கு அபிஷேகம் செய்யும் போது,இடையில் சகுனத் தடை வரத்தான் செய்யும்.அவ்வாறு வந்தாலும்,விட்டுவிட்டாவது ஒன்பது செவ்வாய்க்கிழமைகளுக்கு மட்டும் இந்த சுயபரிகாரத்தைச் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதை எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும்,எதற்காக இந்த பரிகாரம் செய்கிறோம்? என்பதை மட்டுமல்ல;இந்த பரிகாரம் செய்வதையே பகிர்ந்து கொள்ளாமல் செய்தால் மட்டுமே நமது நீண்டகால ருணம்/நோய் தீரும்.




ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ

Tuesday, May 7, 2013

ஆண்டுக்கு ஒருமுறை வரும் காலபைரவ அஷ்டமியைப்(9/5/13)பயன்படுத்துவோம்! பைரவப் பெருமானின் அருளை அள்ளுவோம்!!!






பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கார்த்திகை மாதமும்,பரணி நட்சத்திரமும்,தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்த நன்னாளில் பிரபஞ்சத்தின் தலைவனாகிய சதாசிவன் என்ற ஆதிசிவனின் நெற்றியில் இருந்து ஸ்ரீகால பைரவப் பெருமான் உதயமானார்; ஆதிசிவனின் பிள்ளைகளாக விநாயகர்,முருகக் கடவுள்,ஐயப்பன் இருக்கிறார்கள்;ஆனால்,ஆதிசிவனின் அவதாரமாக பைரவப் பெருமானும்,வீரபத்திரரும் இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்கள் பைரவரையும்,வீரபத்திரரையும் ஆதிசிவனின் மகனாகவே பேசவும்,எழுதவும் செய்கிறார்கள்.அது பொருத்தமானது அல்ல;

பரணி நட்சத்திரத்தில் பவுர்ணமி தோன்றுவதில்லை;அதனால்,ஒவ்வொரு ஆண்டும் வரும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியை பைரவ ஜன்ம அஷ்டமி என்று கொண்டாடி வருகிறோம்.

அதே போல,சித்திரை மாதத்து அமாவாசையானது பெரும்பாலும் பரணி நட்சத்திரத்திலேயே வரும்;சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பரணி நட்சத்திரத்தில் நமது ஆத்மாக் காரனாகிய சூரியனும்(தமிழில் ரவி என்று பெயர்!),நமது மனக் காரகாகிய சந்திரனும்(தமிழில் சந்திரனுக்கு மதி என்று பெயர்!!) ஒன்று சேருகின்றனர்.அப்போது பைரவசக்தி பூமிக்கு அளவற்ற விதத்தில் வெளிவரும்;
இந்த விஜயவருடத்தின் சித்திரை மாதத்து அமாவாசையானது 9.5.2013 வியாழக்கிழமை வருகிறது.இந்த நன்னாளில் நாம்
அல்லது

2.நமது நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து வியாழக்கிழமை வரும் இராகு கால நேரமான மதியம் 1.30 முதல் 3 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது அம்மன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகால பைரவருக்கு அபிஷேகம் செய்யலாம்.அபிஷேகப் பொருட்கள்:அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித் தைலம்,செவ்வரளி மாலை மற்றும் உதிரிப்பூக்கள்,பால்.நிவேதனாமாக அவல் பாயாசத்தைப் படைக்கலாம்;
அவ்வாறு அபிசேகம் செய்யும் போது கூட்டாக ஸ்ரீகால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து ஸ்ரீகால பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை பாடலாம்;தனியாளாகச் செல்லும் நிலை வந்தால் மனதுக்குள் ஜபிக்கலாம்;
அல்லது
3.அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை ஸ்ரீகால பைரவர் சன்னதியில் அமர்ந்து எழுதலாம்;(எழுதும் போது என்ன உணர்வு வந்தது என்பதை எமக்கு மின் அஞ்சல் மூலமாகத் தெரிவிக்கவும்)
அல்லது
4.கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே அல்லது தங்குமிடத்திலேயே கால பைரவர் 108 போற்றி அல்லது கால பைரவர் 1008 போற்றியை எழுதலாம்;எழுதிவிட்டு நமது வீட்டு பூஜை அறையில் அல்லது பணப் பெட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது
5.இந்தப் பதிவையும்,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டு சுமாராக 108 ஜெராக்ஸ் எடுத்து உங்கள் நட்பு மற்றும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களிடம் விநியோகம் செய்யலாம்.
மேலும்
உங்கள் குழந்தைகள் என்ன வயதாக இருந்தாலும் சரி! அவர்களை 9.5.2013 வியாழன் மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்க வைத்து ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை வீட்டில் எழுத வைக்கலாம்.
9.5.13க்குப் பிறகு, இதே போல ஏழு பரணி நட்சத்திரம் வரும் நாட்களில் தொடர்ந்து செய்ய வேண்டும்.ஏழாவது பரணி நட்சத்திரம் வரும் நாளில் அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம் சென்று காலபைரவபெருமானுக்கு அவல் பாயாசத்தை படையலாக வைத்து கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்.செய்த பின்னர்,அவல் பாயாசத்தை அங்கே வரும் பக்தர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;நாமும் அதில் ஒருபகுதியைச் சாப்பிடலாம்;
இந்த ஆண்டின் பரணி நட்சத்திரம் வரும் நாட்களும்,அந்த நாளில் ராகு கால நேரமும்(அடைப்புக்குறிக்குள்);அயல்நாடுகளில் இருப்பவர்கள்,இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்குமான வித்தியாசத்தைப் பின்பற்ற வேண்டும்;
பல ஆலயங்களில் நாம் குறிப்பிடும் ராகு கால நேரத்தில் ஸ்ரீகால பைரவருக்கு பூஜை செய்ய அனுமதிப்பதில்லை;அந்த சூழ்நிலை வந்தால் காலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மாலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் பூஜை செய்யலாம்;அல்லது நமது குலதெய்வம் கோவிலில்(கால பைரவர் இருந்தால்!!!) இந்த தேதிகளையும்,நேரங்களையும் முழுமையாகப்பின்பற்றலாம்.

5.6.13 புதன் மதியம் 2.30 முதல் 6.6.13 வியாழன் மாலை 4.12 வரை;(வியாழன் மதியம் 1.30 முதல் 3 வரை)

3.7.13 புதன்(மதியம் 12 முதல் 1.30 வரை)

30.7.13 செவ்வாய்;(மாலை 3 முதல் 4.30 வரை)

26.8.13 திங்கள் மதியம் 1.01 முதல் 27.8.13 செவ்வாய் மதியம் 2.23 வரை;(இராகு காலம் வர வில்லை)
23.9.13 திங்கள்(காலை 7.30 முதல் 9 வரை)

20.10.13 ஞாயிறு(மாலை 4.30 முதல் 6 வரை)

16.11.13 சனி காலை 11.19 முதல் 17.11.13 ஞாயிறு காலை 12.21 வரை(இதில் இராகு காலம் வரவில்லை;ஆனால்,ஞாயிற்றுக்கிழமையன்று கார்த்திகை மாத முதல் நாளும்,பவுர்ணமியும் சேர்ந்து வருகிறது;எனவே,காலை ஐந்து முதல் ஏழுக்குள் வரும் நேரத்தைப் பயன்படுத்துவது உத்தமம்)

14.12.13 சனி(காலை 9 முதல் 10.30 வரை)

10.1.14 வெள்ளி(காலை 10.30 முதல் 12 வரை)

6.2.14 வியாழன்(மதியம் 1.30 முதல் 3 வரை)

6.3.14 வியாழன்(மதியம் 1.30 முதல் 3 வரை)

2.4.14 புதன்(மதியம் 12 முதல் 1.30 வரை)

ஏழு பரணி நட்சத்திரம் வரும் நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்.அதற்கு மேல் செய்யக் கூடாது.இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலமாக நமது வாழ்நாள் முழுவதும் பைரவரின் பாதுகாப்பு கிட்டும்;பைரவரின் அருள் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
தினசரி ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,மாதத்திற்கு ஒரு நாள் வீதம் ஏழு நாட்கள் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு விடுப்பு விட்டு,இந்த வழிபாடு செய்து வரலாம்;


ஓம்சிவசிவஓம்

இவை கருத்துப்படங்கள் அல்ல;நமது வாழ்க்கையின் பிரதிபலிப்புகள்:நன்றி தினமணி