Friday, March 1, 2013

ஆறு ராசிக்காரர்கள் அவசியம் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.ஏன்? எப்படி?



மைத்ர முகூர்த்தப்பட்டியல்-துண்டறிக்கை வடிவில்!!!


ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறை


உலகின் மூத்த இனம் தமிழ் இனமே என்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டது!!!





நமது ஆன்மீகக்கடலில் ஏற்கனவே எழுதியிருந்தோம்.இலங்கைக்குத் தெற்கே இரண்டாயிரம் கி.மீ.தூரத்திற்கு ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பு கிழக்கே ஆஸ்திரேலியாவிலிருந்து மேற்கே ஆப்ரிக்கக் கண்டம் வரை இருந்தது;அங்கேதான் தமிழினம் தோன்றியது;அங்கே வாழ்ந்த நமது முன்னோர்களுக்கு மரணமே கிடையாது;அவர்களாக விரும்பும் வரை பூமியில் உயிர்வாழலாம்;அதே சமயம்,அங்கே ஐந்து சதுர கி.மீ.பரப்பளவுக்கு சிவாலயங்கள் இருந்திருக்கின்றன.இதை எதிர்கால விஞ்ஞானம் நிரூபிக்கும்.


அங்கே இதுவரை நாம் காணாத,கேள்விப்படாத,உணரமுடியாத ஸ்ரீகாலபைரவ வடிவங்களும் வழிபாட்டுமுறைகளும் நமக்குக்குக் கிட்டும்.இன்றைய இந்து தர்மத்தின் பிறப்பிடமும் இதுவே என்பதும்,இந்து தர்மத்தின் தொப்புள்கொடி தமிழ்ப்பண்பாடுதான் என்பதும் அடுத்துவரும் காலத்தில் நிரூபணமாகும்.(ஏற்கனவே,காஞ்சி சங்கராச்சாரியார் மஹான் அவர்களின் பேச்சுக்களின்  தொகுப்பாகிய தெய்வத்தின்குரல் என்ற புத்தகத்தில் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன!!!)

மொரிஷிஸ் தீவுக்கு அருகே ஆராய்ச்சி செய்து அதன்முடிவுகள் இணையத்தில் வெளிவந்திருக்கின்றன.அதற்கான ஆதாரங்கள் ஆங்கிலத்தில் செய்தியாக வெளிவந்திருக்கின்றன.தமிழ் இனமாகிய நாம் எப்போது இந்த பூமியை ஆளப்போகிறோம்?

ஓம்சிவசிவஓம்
ஓம் ஸ்ரீகால பைரவாய போற்றி!!!

Thursday, February 28, 2013

பன்னிரு திருமுறைகள் இணையத்தில்!!!



சைவ சமயத்தின் தொன்மையையும்,பெருமைகளையும் பறைசாற்றும் இலக்கியங்கள் பன்னிருத் திருமுறைகள் ஆகும்.இவைகளைப் பரப்புவதே ஆதீனங்களின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு பன்னிருத் திருமுறைகளை சைவசமயமக்களிடம் பரப்புவதன் மூலமாக மனித சமுதாயத்திற்கு ஒழுக்கத்தையும்,அதன் மூலம் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதையும்,அவ்வாறு பாதுகாப்பதன் மூலமாக சிவனை அடையும் வழிமுறைகளை யுகம்,யுகமாக உணர்த்துவதையும் புண்ணியம் தரும் கடமையாகவும் செய்துவருகின்றனர்.


எனவே,பன்னிருதிருமுறைகளைவாசித்தும் புரியாதவர்கள் உங்கள் ஊர்களில் செயல்பட்டுவரும் சேக்கிழார் மன்றம் அல்லது பன்னிருதிருமுறை மன்றத்தைத் தொடர்பு கொள்ளவும்.இதில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


ஓம்சிவசிவஓம் 

கோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. 

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. 

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. 

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த 

சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. 

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே! 

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! 

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். 

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. 

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" 

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

இசையின் மகத்துவத்துக்கு இருஎடுத்துக்காட்டுக்கள்!!!



கேள்வி:பழங்காலத்துப் பாடலுக்கும், இந்தக் காலத்துப் பாடலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? அப்படியானால் அந்த மகத்துவம் என்ன?

இசைஞானி இளையராஜாவின் பதில்:எட்டாம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம்:ஒரு ஏரிக்கரையில் ஒரு அம்மா அழுது கொண்டிருந்தாள்.அங்கு வந்த திரு.சுந்தரப் பெருமான் என்ன? என்று அந்த அம்மாவைக் கேட்டார்.அந்த ஏரியின் முதலை ஒன்று தன் குழந்தையை விழுங்கிவிட்டது;நான்கு நாட்களாக நான் அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறேன் என்றும் அழுதவாறே பதிலளித்தாள்.
உடனே,திரு.சுந்தரமூர்த்தி ஒரு பதிகம் பாடினார்.அதே முதலை கரைக்கு வந்து பிள்ளையைக் கக்கிச் சென்றது. தின்று ஜீரணித்த பிள்ளை எந்த காயமும் இல்லாமல் உயிரோடு திரும்பி வரச் செய்த பாடலின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?


அதே போல் இன்றும் ஒரு சம்பவம்
உடுமலைப் பேட்டையில் கேரள மலையை ஒட்டிய ஒரு கிராமம்.ஒரு டூரிங் தியேட்டரில் ஒரு திரைப்படம் ஓடியது.காடுகளில் இருந்த யானைக்கூட்டம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் காட்டை விட்டு கூட்டமாக ஆற்றைக்  கடந்து வந்து,இந்த டூரிங் தியேட்டருக்கு வெளியே அமைதியாக இருந்து ஒரு பாடலை அந்தத் தியேட்டரில் கேட்டுவிட்டு அப்படியே எந்தத் தொந்தரவும் செய்யாமல் தோட்டப்பயிர்களை அழிக்காமல் அமைதியாகச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டன என்று செய்தி அறிந்தேன்.
அந்தப்பாடல் ‘வைதேகிக் காத்திருந்தாள்’ படத்தில் ராசாத்தி உன்னை என்ற பாடலாகும்.


இந்தப்பாடலின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது? மனிதர்களைத் தாண்டி, மிருகங்கள் என்று சொல்லக்கூடிய உயிரினங்களின்  இதயத்தை இழுத்து அவைகளுக்கு ஏதோ ஒன்றைத் தருவது போலல்லவா இருக்கிறது?
இதை மனிதர்களாகிய நாம் எப்படி எந்தக்கணக்கில் புரிந்து கொள்வது? ஆக , பாடலின் மகத்துவம் எந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

நன்றி:குமுதம் வார இதழ்,பக்கம் 86,87;வெளியீடு 20/2/13