Saturday, November 3, 2012

ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை!!!






நம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.
பெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.
ஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும்   ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?

பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;

அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:

1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,

2.சென்னை அருகே இருக்கும் வானகரம்

3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும்  திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. 

 4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.              

5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(காஞ்சிபுரத்திலிருந்து ஆட்டோவில் 25 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.அடிக்கடி பேருந்து வசதி இல்லை;குண்டும் குழியுமான சாலை வசதி இருக்கிறது.ஆனால்,பழமையான ஸ்ரீசொர்ண பைரவர் ஆவார்)

6.சிதம்பரம் கோவில்

7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்

8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) 
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)

9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை

10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்

11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)

12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி

13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
   ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
   ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
   நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம்.                   (பூசாரி செல் எண்:92451 69455)

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,     பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில்  இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.


17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.

18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.                    20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம்  பஸ் நிறுத்தம்;            1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்)                                    21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில்,வாலாஜாபேட்டை. 23.சென்னை போரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியான மச்சக்காரக்குப்பம் என்ற பகுதியில் ஒரு முருகன் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி அமைந்திருக்கிறது.
(** தமிழ்நாட்டில் திண்டுக்கல் தாடிக்கொம்புக்கு தெற்கே கன்னியாக்குமரி வரையிலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் கோவில் அல்லது சன்னதி இருப்ப்தாகத் தெரியவில்லை...என்பது வருத்தமான உண்மையாகும்)

இந்த ஐப்பசி மாதத்து தேய்பிறை அஷ்டமியானது 6.11.12 செவ்வாய்க்கிழமை மதியம்1.23க்குத் துவங்கி,7.11.12 புதன் கிழமை மதியம் 1.45 வரை  இருக்கிறது,
செவ்வாய்க்கிழமை இராகு காலம் மதியம் 3.00 மணி முதல் 4.30 வரையிலும்,புதன் கிழமை மதியம் 12 முதல் 1.30 வரையிலும் இரண்டுமுறை வருகிறது.இந்த நேரத்தில் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண  பைரவர் சன்னதிக்கு வந்து மனதார  நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;இந்த ஒன்றரை மணி நேரத்தில்(அந்தக் காலத்தில் இதை முகூர்த்தம் என்பர்) நாம் வேண்டும் நியாயமான எந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.

இந்தக்  கோவில்களில் ஒருசிலவற்றில் இலவச பானங்கள் வழங்குகிறார்கள்.அவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கோவிலுக்குள் செல்லும்போதும்,கோவிலில் வழிபட்டுவிட்டு வெளியேறும்போதும் இந்த இலவச பானங்களை ஒருபோதும் அருந்தக் கூடாது.


இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது 16 மாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டதால் கிடைத்த அனுபவ உண்மைகள்  ஆகும்.
1.நமக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை  உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;
4.சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி) தீரும்;
5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;
6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.அரசியல் சூழ்ச்சிகள் நிர்மூலமாகும்;
7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்;

எம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

தினமும்  ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,இன்று 6.11.12 செவ்வாய்க்கிழமை ஜபிப்பதை நிறுத்திவிட்டு ராகு கால நேரமான மதியம் 3 மணி முதல் 4.30 வரையும், மறுநாள் 7.11.12 புதன்கிழமை மதியம் 12 மணி முதல் 1.30 வரையிலும் மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப்பின்பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.

சனியின் பிடியில் இருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரங்களில் மூலமந்திரத்தை   330 முறை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி,அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு,நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.



$ படத்தில் இருப்பவர் திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த ஊரான காங்கேய நல்லூரில் திரு.காங்கீஸ்வரர் திருக்கோவிலில் அருளாட்சி புரியும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்!!!

ஓம்சிவசிவஓம்

சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை!!!

இந்தியாவின் எதிர்காலம் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவோர்களும்,கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள் தமது நேர்முகத்தேர்வில் சிறப்பாக வெற்றிபெறவும்,தேசபக்தி நிறைந்தவர்களும்,வலைப்பூ எழுத்தாளர்களும்,பொருளாதாரம் பற்றிய சிந்தனை உள்ளவர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது.அனைவரையும் வருக! வருக!! வருக!!! என்று சுதேசி விழிப்புணர்வு இயக்கதின் சார்பாக அழைக்கிறோம்.

அருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி


Friday, November 2, 2012

ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது நமக்குள் நிகழ்வது என்ன?




பஞ்சாட்சரம் எனப்படும் மந்திரமான ஓம்நமச்சிவாய உலகத்தில் மட்டுமல்ல;பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உலகங்களிலுமே உயர்ந்த மந்திரம் ஆகும்.எந்த ஒரு சிவாலயத்துக்குச் சென்றாலும்,ஓம் நமச்சிவாய என்று ஒன்பது முறை ஜபிக்கலாம்;அதற்கும் மேலாக தினமும் ஜபித்து வந்தால்,சில வாரங்களுக்குப் பிறகு அவ்வாறு ஜபித்தவர் துறவுமனப்பான்மையை அடைந்துவிடுவார்;சில மாதங்கள் வரை தொடர்ந்து ஓம்நமச்சிவாய ஜபித்து வந்தால் அவரால் வீட்டில் வாழ முடியாத மனநிலை உருவாகிவிடும்.இது தொடர்பாக யார் வேண்டுமானாலும் ஆன்மீக ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.
குடும்பக் கடமைகளை நிறவேற்றிக்கொண்டே,சிவ அருள் கிடைப்பதற்காக நமது ஆன்மீக குரு,ருத்ராட்சத்துறவி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் நமக்கு கண்டுபிடித்துக்  கொடுத்த சிவ மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும்.எல்லா கோவில்களின் நுழைவு வாயில்களிலும் சிவசிவ என்று எழுதியிருப்பதை பார்த்து வருகிறோம்.ஒருவர் தினமும் 108 முறை சிவசிவ என்று ஜபித்து வந்தாலும்,சில வாரங்களில் அவர் துறவு மனப்பான்மையை எட்டிவிடுவார்;சில மாதங்கள் வரையிலும் ஒரு நாள் விடாமல் தினமும் 108 முறை வீதம் சிவசிவ என்று ஜபித்து வந்தால்,அவர் தனது அனைத்து பந்தபாசங்களில் இருந்தும் விலகிச் சென்று விடுவார்;மனிதர்கள் வாழும் நகர/கிராமப் பகுதியில் இருக்க அவருக்குப் பிடிக்காமல் போய்விடும்;ஒரு வருடத்துக்கும் மேலாக ஒருவர் தினமும் 108 முறை சிவசிவ என்று ஜபித்தால்,அவர் துறவியாகிவிடுவார்.ஆனால்,அவர் துறவியானாலும்,அவரதுபிறந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் நவக்கிரகங்கள் அவரை அவரது கர்மங்களை நோக்கி இழுக்கவே செய்யும்.அப்போது அவர் காமம் சார்ந்த தவறுகள் செய்யத் துவங்கிவிடுவார்;இந்த சூழ்நிலை ஆண்,பெண் என அனைவருக்கும் பொருந்தும்.

ஓம்நமச்சிவாய மந்திரத்திலிருந்து சுமார் 20000 சிவ மந்திரங்களை நமது முன்னோர்களாகிய சித்தர்கள் கண்டறிந்துள்ளார்கள்.அவைகளில் பல சிவ மந்திரங்களை ஜபிக்கும் தகுதி நமக்கு கிடையாது;சில சிவ மந்திரங்கள் தொடர்ந்து மூன்று பிறவிகளாக பிரம்மச்சாரியாக இருந்தால் மட்டுமே ஜபிக்க வேண்டும்.அந்த மந்திரத்தில் இருக்கும் வார்த்தைகள் இவைதான் என்று அறியும் ஞானம் கூட (தற்காலத்தில்)நம்மில் பலருக்குக் கிடையாது.

 “ ஓம்நமச்சிவாய மந்திரத்தை தினமும் ஒன்பது முறை யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்;அதற்கும் மேலே ஜபிக்க வேண்டும் எனில்,தகுந்த சிவாச்சாரியாரிடம் சிவ தீட்சை பெற வேண்டும்;சிவ தீட்சை பெற்றப்பின்னர்,அதற்குரிய விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று  நமக்கு அறிவுறுத்தக்கூடிய துறவிகளோ,மகான்களோ,ஆன்மீக வழிகாட்டிகளோ இல்லை!!

பூமி விண்வெளியில் ரவி எனப்படும் சூரியனை சுற்றி வருகிறது;ஒரு முறை ரவியைச் சுற்றி வர சுமார் ஒரு வருடம் ஆகிறது.அப்படி சுற்றி வருவதோடு,தன்னைத் தானே சுற்றி வருகிறது;தன்னைத் தானே பூமி சுற்றிவருவதால் விண்வெளியில் மிகப் பிரம்மாண்டமாக ஓம் என்ற ஒலி உண்டாகிறது.சிவ சிவ என்ற மந்திரத்தின் முன்னும் பின்னும் ஓம் என்னும் மந்திரத்தை சேர்க்கும் போது அது குடும்பஸ்தர்களுக்கு ஏற்ற மந்திரமாக மாறிவிடுகிறது.பூமியின் இயக்கத்தோடு இணைந்து வாழ்ந்து இறை அனுபவம் பெறக்கூடிய சூழ்நிலையும் உருவாகிவிடுகிறது.எனவே தான் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வலியுறுத்துகிறோம்;


நமது  குடும்பக் கடமைகளை நிறைவேற்றிக்கொண்டே நாம் சிவ சிந்தனையில் ஈடுபடவும்,நாம் இறையருளைப்  பெறவும் ஏற்ற மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும்.ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு முறைப்படி தீட்சை கூட வாங்க வேண்டிய அவசியம் இல்லை;ஆனால்,ஓம்நமச்சிவாய மந்திரத்தை விடவும் விரைவாக உயிரூட்டம் பெறும் மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும்.
நாம் நமது ஜாதகப்படி எந்த யோகத்தில் பிறந்திருந்தாலும் சரி,அல்லது எந்த தோஷத்தில் பிறந்திருந்தாலும் சரி,அவை அனைத்தையும் நீக்கி நம்மை நிம்மதியாகவும் செல்வச் செழிப்போடும் வாழ வைக்கும் மந்திர ஜபம் ஓம்சிவசிவஓம் ஆகும்.
ஒரே இடம்,ஒரே நேரம் என்ற கொள்கை அடிப்படையில் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க நம்மை பழகிக் கொள்ள வேண்டும்.(நமது வீட்டில் எந்த இடத்தில் முதல் நாளன்று ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கிறோமோ,அதே இடத்தில் மட்டும் தினமும் ஜபித்து வர வேண்டும்;தினமும் எந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தோமோ,அந்த நேரத்தில்=முடிந்த  வரையிலும் ஜபித்து வருவதால் அற்புதமான பலன்களை உணரலாம்)

இப்படிப்பழக்கப்படுத்துவதன் மூலமாக ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தில் சக்தியை ஓரிரு மாதங்களில் உணரத் துவங்கலாம்.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்த முதல் 15 நாட்களுக்கு சிலருக்கு ஒரு மாதம் வரையிலும் மனக்குழப்பம் வரத் தான் செய்யும்.ஏனெனில்,நமது விதியை நாமே ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவதன்மூலமாக மாற்றத் துவங்குகிறோம்;அதனால்,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கிய ஒவ்வொரு நாளுமே ஜபிக்கும் நேரத்தில் தேவையில்லாத சிந்தனைகள்,காட்சிகள்,மனக்குழப்பங்கள் வரத் தான் செய்யும்.மன உறுதி உள்ளவர்களுக்கு 16 வது நாளிலிருந்தும், மன உறுதி குறைவாக இருப்பவர்களுக்கு 31 வது நாளிலிருந்து மனக்குழப்பங்கள் முழுமையாக விலகிவிடும்.

ஆறு மாதங்கள் வரையில்(சிலருக்கு ஒன்பது மாதங்கள் வரையிலும்) தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,அவர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களே சக்திவாய்ந்த மனிதராக இருப்பார்;அவர் சிடுமூஞ்சியாக இருந்தால்,கலகலப்பானவராக மாறிவிடுவார்;எப்போதும் கவலைப்படுபவராக இருந்தால்,அந்த கவலைகளை ஒழித்துக்கட்டும் வல்லமையை அடைந்துவிடுவார்;நிறைய கடன்களோடு இருந்தால்,அந்த கடன்கள் தீர வழி கிடைக்கத் துவங்கும்;பலவித அல்லது ஓரிரு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால் அத்தனை பழக்கங்களும் அவரை விட்டு விலகிச்செல்லத் துவங்கிவிடும்.

ஒரு வருடம் வரை தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து முடித்திருந்தால்,நமது உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு நாடி மையம் மற்றும் வர்மமையங்களிலும் நமது ஜப எண்ணிக்கை ஒருமுறை பதிவாகியிருக்கும்.நாமே சிவ அம்சமான ருத்ரனாகிவிடுவோம்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு சக்தி மையத்திலும்(நாடிகள் மற்றும் வர்மப் புள்ளிகள்) நூறுமுறை ஓம்சிவசிவஓம் மந்திர ஆற்றல் நிரம்பியிருக்கும்.ஆறு அல்லது ஏழாம் ஆண்டிலிருந்தே நாம் ,நம்மைச் சுற்றியிருப்பவர்களின் எண்ண ஓட்டங்களைத் தாமாகவே அறியும் குணத்தைப் பெற்றுவிடுவோம்;நமக்கு சில சிவ தரிசனங்கள் கிடைத்திருக்கும்;ஜோதிட பலன்கள்,நவக்கிரக பாதிப்புகள்,பஞ்சபூத பாதிப்புகள் என்று எதுவும் நம்மை அண்டாது;நாமே சித்த சக்தியாக உருமாறிவிடுவோம்;அப்படி மாறினாலும்,நாம் நமது  குடும்ப மற்றும் சொந்தக் கடமைகளை கைவிடமாட்டோம்;

ஜாங்கிரி என்று சொன்னால் நாவில் இனிப்புச் சுவையை அறிய முடியாது;இவ்வளவு பதிவுகளை வாசித்தால் மட்டும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் சக்தியை அறிய முடியாது;

ஓம்சிவசிவஓம்

கோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் முறையும்




சிவாலய தெய்வங்களில் தென்முகக் கடவுள், ஆடல்வல்லான் மற்றும் சண்டேசுவரர் ஆகியோர் தெற்கு நோக்கிக் காட்சியளிப்பார்கள்.சண்டேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பார்.சிவ வழிபாட்டின்போது பெறும் பூமாலை,பரிவட்டம் முதலிய சிவபெருமானுக்கு அணிவித்த பொருட்களை சண்டேசுவரர் சன்னதியில் சேர்த்து, “சிவதரிசனப்பலனைத்  தர வேண்டும்” என்று அவரைப் பிரார்த்தித்து, அங்கு தரப்படும் திருநீற்றை அணிய வேண்டும் என்பது சமயநூல்களின் விதி.

இதை அறியாத பலர்,தமது ஆடைகளில் உள்ள நூல் இழைகளையும் நூல் திரியையும் சண்டேசுவரர் சன்னதியில் எடுத்துப் போடுகின்றனர்.இது பெரும் தவறு.
சண்டேசர்,இடையறாத தியானத்தில் இருப்பவர்.அவரிடம் நமது வருகையையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கும் வகையில் அவரது சன்னதியில் நின்று மெள்ள(கை)த் தட்டுதல் வேண்டும்.இதைப் புரிந்து கொள்ளாமல் சண்டேசரைச் ‘செவிட்டுச் சாமி’ என்றும், கைகளைப் பெரிதாகத் தட்டியும்,சொடுக்கவும் செய்தால் அவரது அருள் கிடைக்கும் என்று கூறுவது தவறு.சண்டேசர் சன்னதியை முழுமையாக வலம் வரக்கூடாது.சந்நிதிக்கு வலப்புறமாகச் சென்று சண்டேசரைத் தரிசித்துவிட்டு, வந்த வழியே(அரை வட்டமாக) திரும்ப வேண்டும்.பக்தர்களுக்கு அனுமதி அளித்து,அவர்களை கோவிலுக்குள் அனுப்பும் அதிகாரம் உடையவர் நந்திதேவர்.அது போல,சிவபுண்ணியப் பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் சண்டேசருக்கு உண்டு.

சிலர் ‘சண்டேசர் சன்னதி இடுக்கில் உள்ளது;சென்று தரிசிக்கச் சிரமமாக உள்ளது’ என்றும் அவரைத் தரிசிக்காமலேயே கோவிலை வலம் வருவர்;இவரை அவசியம் வலம் வர வேண்டும்;

கோவிலில் முதலில் விநாயகரையும்,நிறைவாக சண்டேசரையும் வழிபட்டால்தான் சிவ வழிபாடு முழுமையடையும்.சிவாலயத் திருவிழாக்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என்னும் திருவீதியுலா நிகழும்.அப்போது,கணபதி,முருகன்,சிவன்,அம்பிகை எனும் வரிசையில் சண்டேசர் இறுதியாக வருவார்.
நன்றி:அஷ்டாஷ்ட மூர்த்தங்களும் 64 சிவ வடிவங்களும் தத்துவ விளக்கங்களும்,பக்கம் 141.
வெளியீடு :நர்மதா பதிப்பகம்,சென்னை.
ஓம்சிவசிவஓம்

நமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு!!!




“அனுபவத்தால் பராமரிக்கப்படும் அறிவே வாழ்க்கைச் சூழலில் வெற்றி பெறுகிறது” என்பது தத்துவ ஞானிகளின் பகிர்தலாகும்.அத்தகைய அறிவு தெளிவான சிந்தனையையும்,தன்னம்பிக்கையையும் தர வல்லது;மற்றும் (நமது)தேவையற்ற அச்சம்,(தினசரி)கவலைகளையும் களைய வல்லது"

மிகவும் அபாயகரமான ‘வலை’ க ‘வலை’யே..!ஏழையாக இருந்தாலும் சரி,செல்வந்தராக இருந்தாலும் சரி. . . அனைவருமே சிக்குகிற வலை க வலையாகும்.வளரும் நாடான இந்தியாவில் மட்டுமல்ல;அமெரிக்கா போன்ற பெரும் பணக்காரநாடுகள் என உலகம் முழுவதுமே கவலைப்படுபவர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.அதன் முடிவில்
கவலைகளில் 40% கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை;
30% கவலைகள் கடந்த காலம் பற்றியது;
12% கவலைகள்  பிறர் பற்றியது;
10% கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை;அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமல் இருக்கலாம்;மீதி இறுதியாக இருக்கும்
8% கவலைகள் மட்டுமே உண்மைக் கவலைகள் என கண்டறியப்பட்டுள்ளது.

தடைகளும்,தோல்விகளும் தன்னுள் ஒரு வெற்றியையும்,நல்லதொரு வாய்ப்பையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதே ஞானிகளின் கருத்தாகும்.தோல்வி என்கின்ற பின்னடைவு நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய முன் அறிவிப்பு என்று சொல்லலாம்.பொருட்செல்வத்தை இழப்பது பேரிழப்பு அல்ல;உடல் நலம் சீர்கெடுவதை இழப்பு என்று கருதலாம்.ஆனால்,நம்பிக்கையை இழப்பது மட்டுமே அனைத்தையும் இழந்ததற்குச் சமமாகும். . !
தடைகளை வெற்றிகரமாய் எதிர்கொள்வது எப்படி? என்பதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப்பொருளைச் சுமந்து கொண்டு சென்றது.தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென நின்றுவிட்டது.மேலே செல்ல முடியாமல் தவித்தது.சிறிது நேரம் கழித்து,தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல்(பிளவின் மீது) வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்து பின்பு மீண்டும் அந்த இரையைக் கவ்விக்கொண்டு சென்றது.இதைக் கவனித்த அந்த எறும்பு ஆராய்ச்சி நிபுணர்,எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என்று எழுதியிருக்கிறார்.
துன்பம் ஏற்பட்டால்,அத்துன்பம் ஏற்படுத்துகின்ற பள்ளத்தையே அடித்தளமாக வைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதே எறும்பிடம் இருந்து மனிதர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.
ஒரு மிகச் சிறிய உயிரான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் சமாளித்து அதனை நாம் கடந்து ஆக்கபூர்வமான மாற்றங்களுடன் வெற்றி பெற இயலும். .!பல சிறிய செயல்கள்- முயற்சிகள் ஒன்றிணைகின்ற பொழுதுதான் ஓர் பெரும் மாற்றம் என்பதே நிகழும்.
சிறுவன் ஒருவன் கடல் அலைகளால் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான நட்சத்திரமீன்களை ஒவ்வொன்றாய் பிடித்துக் கடலில் விட்டுக் கொண்டிருந்தான்.அதிலும் சில மீன்கள் அலைகளால் மீண்டும் கரையில் ஒதுங்கின.அவனும் சளைக்காமல் அப்பணியை தொடர்ந்து செய்துகொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் ‘ஏன் இந்த வீண்வேலை? எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் உன்னால் காப்பாற்ற முடியாது.இதனால் ஒரு பயனும் கிடையாது’என்றார்.
“இதன் பயன் என்ன என்பதை  உயிர் தப்பி கடலுக்குள் சென்ற மீன்களைக் கேளுங்கள்”என்று அந்தச் சிறுவன் சொன்னான்.இத்தகைய செம்மையான மனதினைப் பெறுவதற்காகத்  தான் தினந்தோறும் “திருக்கோவில் வழிபாடு அவசியம்” என ரத்தினச் சுருக்கமாய் ஓரு பெரும் மகத்துவத்தை ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர்.

பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி(காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது.இது ஆத்ம பலத்தினை தரவல்லது.இயன்றளவு கோவில்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் வெகுவாய் பல அடைந்து- தற்போது மாசடைந்து வரும் இயற்கைச் சூழலிலிருந்து மிகவும் எளிதாய் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். ALZEIMER என்று சொல்லப்படும் ஞாபக மறதி நோய் பிடியிலிருந்து(அதிகமாய் செல்போன் பயன்படுத்துவதன் மூலமும் ஏற்படும்) வெகு சுலபமாய் தப்பிவிடலாம்.நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கிக் கொள்வதற்கும்,
எதையும் எதிர்கொள்ளும் வல்லமையான எண்ணங்கள் பெறுவதற்கும்,உறுதியான மனம்,உடல் தனை பெறுவதற்கும் திருக்கோவில் வழிபாடே ஒரே தீர்வாகும்.மூலஸ்தானத்தில் தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தகடுகளும் அபரிதமான சக்தியை தந்துகொண்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு கால பூஜையின் போதும் திரை விலக்கி ஆரத்தி நிகழும் தருணத்தில் எல்லையில்லா சக்தி மூலஸ்தானத்திலிருந்து வெளிவரும்.அதனால் தான் மூலஸ்தானத்தில் ஒரு பக்கம் மட்டுமே திறந்தபடி உள்ளது.(அதன் வாயிலாய் அரும்பெரும் சக்தி வெளிப்படுகின்றது).மேலும்-கொடி மரமும் கோபுரக்கலசமும்  அளப்பரிய (ENERGY)காந்த சக்தியை கட்டுக்கோப்பாய் (CIRCULATE)பரிமாறிக்கொண்டிருக்கிறது.எனவே தான் பிரசாதத்தினை உண்பதும் அபரிதமான நன்மைகளைத் தருகிறது.தந்திடும் என்பது திண்ணம்..! அத்தகைய பழமையான திருக்கோவில்களில்/ஜீவசமாதிகளில் அன்னதானம் செய்வதும்,உண்பதும் பெரும் பரிகாரம் என்பதை முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
“நீ சுமக்கின்ற இறைநம்பிக்கை,நீ கீழே விழ நேரிட்டால் உன்னைச் சுமக்கும்” என்பதன் உள்ளார்த்தமும் இதுதான்.இறை சக்தி என்பதும்,பிரபஞ்ச சக்தி என்பதும் ஒன்றே..!!! பிரார்த்தனையே ஒருவகை தியானம் தான்.அத்தகைய தியானமே மனதிற்கு ஓய்வு தரவல்லது.

நமது மனமானது இருவகைப்படும்.ஒன்று மேல் மனம்.இன்னொன்று ஆழ்மனம்.(மனதின் செயல்பாடுகளை நாம் அறிந்து கொண்டால்,நமது மனதையே நாம் கட்டுப்படுத்தலாம்;மனதின் செயல்பாடுகளை விவரிக்கும் நூலே ஆழ்மனதின் சக்திகள்!!!.இதை ஒரு வருடத்திற்கு திரும்பத் திரும்ப வாசிக்கும்போது நமது மனம் எப்படிப்பட்டது? அது எப்படி இயங்குகிறது? அதை கட்டுப்படுத்த நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை நாமே உணரமுடியும்)நமது மேல் மனதில் விநாடிக்கு இரண்டாயிரம் எண்ணங்களும்,நம்மையறியாமல் நமது ஆழ்மனதில் ஆழ்மனதில்(அடிமனதில்) விநாடிக்கு(குறைந்த பட்சம்) நான்கு கோடி எண்ணங்களும் பரிசீலிக்கப்படுகிறது என்று மனம் பற்றிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன் ‘மதிப்பை’ உணர்ந்து கொள்வது நமது  கடமை.அதனை நமக்குப் புரிய வைத்து உணர வைப்பதே ஆன்மீகப் பெரியவர்களின் நோக்கமும் ஆகும்.(சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம்,ஜேம்ஸ் ஆலன் எழுதி தமிழில் வெளி வந்திருக்கும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்,ஷிவ் கெரா எழுதி தமிழில் மெக் க்ரோஹில் வெளியிட்டிருக்கும் உங்களால் வெல்ல முடியும்)

இந்த மனதத்துவக் கட்டுரையை எழுதியவர்:டாக்டர்.பி.எஸ்.பி.விஜய்பாலா அவர்கள்,யுனிவர்சல் ரிசர்ச் அகாடமி,சென்னை.

தகவல் ஆதாரம்:ஜோதிடர்களுக்கான ஜோதிட மாத இதழ்: பி.எஸ்.பி.யின் விடியல்,பக்கங்கள் 5,6.வெளியீடு:ஐப்பசி 2012 & 25.10.12                                               ஓம்சிவசிவஓம்


Thursday, November 1, 2012

அந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு திரும்புகிறது


சுதந்திரப்போராட்ட காலம் அது; அக்காலத்தில் நாடெங்கும் மேடைகள் போட்டு ஆங்கிலேய ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும். அவர்களை இந்திய நாட்டை விட்டு விரட்ட வேண்டும் எனப்பேச்சாளர்கள் வீர முழக்கமிட்டுப் பேசி வந்த காலம்.

ஒரு மேடையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும்,அவரோடு விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவும் அமர்ந்திருக்கிறார்கள்.அப்போது ஒருபேச்சாளர், "வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுகளோடு இந்தநாட்டை விட்டே விரட்ட வேண்டும்"வ.உ.சிதம்பரம் பிள்ளை என ஆவேசமாக தனது பேச்சினூடே தெரிவித்தார்.

அவரது பேச்சை இடைமறித்து சுப்பிரமணிய சிவா எழுந்து, "இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்"என்றார்.இதனால்,மேடையில் இருந்தவர்களும்,பேச்சாளரும் கூட்டத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்கள்.

சுப்பிரமணிய சிவா தொடர்ந்து பேசினார். 'வெள்ளைக்காரர்களை மூட்டைமுடிச்சுக்களோடு இந்த நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று நண்பர் கூறினார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மூட்டை முடிச்சுகள் நம்முடையவை! வெள்ளைக்காரர்களை வெறும் பயல்களாகத் தான் நாட்டை  சுப்பிரமணிய சிவாவிட்டு விரட்ட வேண்டும்' என்று கூறினார்.இதைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் உற்சாக ஆரவாரம் செய்து "வந்தே மாதரம்" என வீரமுழக்கம் இட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகியும்,வரலாறு திரும்புகிறது இல்லையா? இது தான் ஆச்சரியம் நிறைந்த கொடுமை!