Friday, April 13, 2012

ருத்ராட்சத்தின் மகிமைகள்



ருத்ராட்சம்:இதுவரை நான் அறிந்தவை

சிவபெருமானின் அம்சமாக ருத்ராட்சம் இருக்கிறது.
இவை பெரும்பாலும் நேபாளத்தில் கிடைக்கிறது.
ஒருமுகம் கொண்ட ருத்ராட்சம் உண்டு.இதை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குபவர்கள் உண்டு.
ஒரு முகம் கொண்ட ருத்ராட்சத்தை குருமுகமாக மட்டுமே அணிவது அவசியம்.
நேபாளம் தவிர அடர்ந்த மலைப்பகுதிகள் முழுவதும் (இந்தியாவெங்கும்) விளைகின்றன.இது தன்னைச்சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளைக் கொண்டிருக்கிறது.எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் அதைச் சுற்றி உண்டாகும் ஒளி சக்திவட்டம் தூய்மையடைகிறது.இந்த ஒளி அவரவர் உடல்நிலை மற்றும் மன நிலையைப் பொறுத்து மாறும்.

நீங்கள் புது இடத்திற்குச் செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது.ஆனால்,ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும்.சக்திவட்டம் நம்மை கவசம் போல பாதுகாக்கும்.
32 முக ருத்ராட்சமும் உண்டு.இதுவும் அபூர்வமான ருத்ராட்சமே!
ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும்.ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம்.இது ரத்த அழுத்தத்தை சீராக்கி,மன அமைதியையும்,சுறுசுறுப்பையும் தரும்.

ஆறு முகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம்.
நன்றி:ஆன்மீகமலர்,பக்கம் 2. தினமலர் 25.4.2009

தமிழ்நாட்டில் எப்படி கிறிஸ்தவமதம் மாற்றுகிறார்கள்?


நமது தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் மதம் மாற்றுகிறார்கள்:நேரில் உணர்ந்தவை
ஒரு கிராமம் அல்லது ஒரு லட்சம்பேர்கள் உள்ள நகரில் ஒரு பகுதி;ஒரே ஜாதிமக்கள் வாழும் பகுதியில் வெகுதூரத்தில் உள்ள மாநகரத்திலிருந்து ஒரு பாதிரியார் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறுகிறார்.தினமும் தனது வாடகை வீட்டில் ஏசுநாதரைப்பற்றி ஒரு மணிநேரம் வீதம் காலை மற்றும் மாலையில் பாடுகிறார்.
பாட்டுச்சப்தத்தால் அருகில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் வேடிக்கைபார்க்க வருகின்றனர்.சில வாரங்களில் தனது இனிமையான சுபாவத்தால் எல்லா சிறுவர் சிறுமிகளுக்கும் தினமும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களது வீடுகளுடன் தொடர்புகொள்கிறார்.
சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்தின் குடும்பரகசியங்களும் அந்த பாதிரிக்கு தெரியவருகிறது.பெரும்பாலும் பணக்கஷ்டம் தான்.
எல்லோருக்கும் பணம் கடன் தருகிறார்.(அட நம்மளும் வாங்கலாமே!)வட்டியை நம்மால் சில மாதங்களே ஒழுங்காக தர முடிகிறது.அடுத்த சில மாதங்கள் தர முடிவதில்லை.ஒரு வருடம் முடியும்நிலையில் திடீரென அதே பாதிரி,”நான் கொடுத்த பணத்தை இந்த தேதிக்குள் நீ தர வேண்டும்.இல்லாவிட்டால் கிறிஸ்தவத்திற்கு மாறு.நீ ஒரு பைசா கூட கடன் தர வேண்டாம்”.ஆனால், குழந்தைகளுக்கு வழக்கம் போல இனிப்புகள் மற்றும் உணவுகள் தருவது தொடர்கின்றது.குழந்தைகள் நமது தெய்வங்களை பிசாசுகள் என சபிக்குமளவிற்கு மாறிவிடுகின்றன.ஏசுவை தனதுஆழ்மனதில் பதித்துவிடுகின்றன.
2.இளம்பாதிரிகள் திட்டம் என்ற திட்டத்தின்படி, பிளஸ் டூ முடிக்கும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவமயமாக வேண்டும் என வெறியூட்டப்படுகிறது.அவர்கள் கல்லூரியில் சேர்ந்த உடனே உடன்படிக்கும் இந்து மாணவியைக் காதலிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.அவளை மயக்கி திருமணம் செய்யுமளவிற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் தூண்டப்படுகின்றனர்.பெண்வீட்டில் பெண்ணை தலைமுழுகிவிடுகின்றனர்.மணம் செய்வதற்காக அந்த கல்லூரி மாணவியை கிறிஸ்துவ மதம் மாறும்படி கிறிஸ்தவக்காதலனே வற்புறுத்துகிறான்.சரி! நம் காதலனுக்காக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? என அப்பெண் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறினாலும்,திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி முடித்துவிட்டு அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு, எங்காவது அந்த கிறிஸ்தவ மாணவன் ஓடிவிடுகிறான்.ஆதாரம்:குமுதம் ஜோதிடம் வார இதழ்கள் 2005,2006,2007,2008,2009 முழுவதும்.
3.எங்கெல்லாம் தி.மு.க., கம்யூனிஸ்டு,காங்கிரஸ் வலுவாக உள்ளதோ அங்கே கிறிஸ்தவப்பாதிரிகளுக்கு கொண்டாட்டம்தான்.ஏனேனில்,அங்கே பி.ஜே.பி.,இந்து முன்னணி பெயருக்குத்தான் உள்ளது.நாகாலந்து மாநிலம் மற்றும் இந்தியா முழுக்க வாழும் ஆதிவாசி மற்றும் பழங்குடி மக்களிடம் கிறிஸ்தவ சகோதரிகள் படுதீவிரமாக மதம் மாற்றுகிறார்கள்.அப்பாவி பழங்குடிமக்களிடம் காய்ச்சல் வந்தால் குரோசின் மத்திரையை வென்னீரில் கலந்து குடிக்கச்சொல்லுகிறார்கள்.ஒரே நாளில் குணமாகிவிட்ட பழங்குடி நோயாளிகளிடம் ஏசுநாதர்தான் குணப்படுத்தினார் என பொய் சொல்லி அவர்களை மதம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.
4.ஒவ்வொரு டிசம்பர் 31 இரவும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என ஒரு பெரிய மைதானத்தில் கிறிஸ்தவர்கள் நிகழ்ச்சி வைக்கிறார்கள்.எல்லா கிறிஸ்தவ இளைஞர்களுக்கும் தனது இந்து மற்றும் இஸ்லாமிய வகுப்புத்தோழர்களை அழைத்துவரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
வரும் இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணுடன் நடனமாட வேண்டும்.ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போமே அதே மாதிரி ஆளுக்கு ஒரு ஜோடி.. எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம் ஹேப்பி நீயூ இயர் என்ற இரைச்சல்
இதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ?
குறிப்பு: இவையெல்லாம் சில உதாரணங்கள் தான்.சில உதாரணங்கள் இங்கே எழுத முடியாத அளவிற்கு கூச்சமான காரியங்களைக்கொண்டும் கிறிஸ்தவ மதமாற்றம் இந்தியா முழுக்கவும் தமிழ்நாட்டிலும் எல்லா இன் ஜினியரிங் மற்றும் தனியார்கல்லூரிகளிலும் நடைபெறுகிறது.

Thursday, April 12, 2012

அதி முக்கியமான அனுபவ அறிவிப்பு


ஒரே மனிதர் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டையும்,ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் மந்திர ஜபத்தையும் செய்யக் கூடாது;இரண்டுமே மிதமிஞ்சிய சக்தி வாய்ந்த வழிபாட்டுமுறைகள்.எனவே, இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் செய்ய வேண்டும்.


தம்பதியாக இருந்தால்,ஒருவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டையும்,மற்றவர் ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் மந்திரஜபத்தையும் பின்பற்றிவருவது நன்று.முதலிலேயே முடிவு செய்து கொள்வது நன்று.இடையில் இதை மாற்றவும் கூடாது.
மணமாகாதவர்கள் எதை பின்பற்ற வேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்துகொள்வது நல்லது.

ஒருவரே இரண்டையும் செய்தால்,முழுமையான பலன்கள் கிடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகிவிடும்.


ஓம்சிவசிவஓம்

தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!


 உலகில் எந்த நாட்டையும் விட ,வானியலில்  முழுமையான தேர்ச்சி பெற்றவர்கள் நமது முன்னோர்கள்.சூரியனை நீள்வட்டப்பாதையில் பூமி சுற்றுகிறது என்பதை கோபர்நிகஸ் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே,நமது முன்னோர்களாகிய ரிஷிகள்,சித்தர்கள்,மகான்களுக்குத் தெரியும்.அது மட்டுமல்ல,உலகத்தை ஆளப்போவது பாரத நாடுதான்.பாரத நாட்டின் சனாதன தர்மம் மட்டுமே!!! இந்த வாழ்க்கை முறையே உலகில் வாழும் அனைத்து மனித இனங்களுக்கும்,அனைத்து மக்களுக்கும் வாழ்வியல் நெறிகளை உருவாக்கித் தந்திருக்கிறது.இந்த நெறிகள் இந்த வருடம் நிறைவடைவதற்குள் உலகமெல்லாம் பரவிவிடும்.

ஒவ்வொரு சித்திரை மாதமும் சூரியனை பூமி நெருங்கிவருகிறது.இந்த வானியல் நடைமுறையின் அடிப்படையிலேயே பல லட்சம் வருடங்களாக பாரதம் எனப்படும் இந்தியா  முழுவதும் (அனைத்து மொழிகளிலும்,அனைத்து மாநிலங்களிலும் சிற்சில நாட்கள் வித்தியாசத்தில்)  புத்தாண்டு கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் முதன்மையானது குலதெய்வ வழிபாடு ஆகும்.அடுத்தபடியாக இஷ்ட தெய்வ வழிபாடும் ஆகும்.மூன்றாவதாக நாம் தினமும் ஜெபிக்கும் மந்திரத்தை,பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4.30 முதல் 6 மணிக்குள்; மற்றும் குரு ஓரைகளில் ஜபிப்பது அல்லது இவற்றில் ஏதாவது ஒரு நேரத்தில் ஜபிப்பது ஆகும்.

மிகவும் திட்டமிட்டு யோசித்துப்பார்த்தால்,ஏதாவது ஒரு கோவிலுக்குள்ளே காலை 4.30 முதல் 6 அல்லது 7 மணிக்குள் ஒரு சில நிமிடங்களாவது ஜபிப்பது மிகவும் அவசியம்;இப்படி ஜபிப்பதன் மூலமாக நாம் ஜபிக்கும் மந்திரம் அளவற்ற தெய்வீக சக்தியை ஈர்த்துத் தரும் என்பது எதிர்காலத்தில் நிரூபிக்கப் போகிற உண்மையாகும்.
எனவே,நந்தன ஆண்டின் முதல் நாளான சித்திரை 1 ஆம் நாளன்று காலை 5 முதல் 6 மணிக்குள் நமது வீட்டில் அல்லது நமது கோவிலில் அல்லது நமது குல தெய்வம் இருக்கும் கோவிலில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;இதனால் நமது வாழ்க்கை இந்த வருடம் நிறைவடைவதற்குள்  பொருளாதாரத் தன்னிறைவு மிக்கதாக உயர்ந்துவிடும்!!!
 ஓம்சிவசிவஓம்

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியைப் பயன்படுத்துவோம்;


தமிழ்ப்புத்தாண்டு நந்தன,கிறிஸ்தவ தேதியான 13.4.12 வெள்ளியன்று பிறக்கிறது.அதே நாளில்,நந்தன ஆண்டின் முதல் தேய்பிறை அஷ்டமியும் வருகிறது.
13.4.2012  வெள்ளிக்கிழமையன்று காலை 10.34 முதல் 14.4.2012 சனிக்கிழமை 10.34 வரையிலும் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கிறது.இதில் ஆச்சரியமான ஒற்றுமை என்ன வெனில்,வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரையிலும், சனிக்கிழமை காலை 9 முதல் 10.30 வரையிலும் ராகு காலம் அமைந்திருப்பதுதான்!!!
நமக்குச் செல்வ வளத்தை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரின் சன்னதியில் வழிபட்டுக்கொண்டிருப்பார்கள்;அதே நேரத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரை வழிபட்டால்,அவரின் அருளாசியால் நமது பல பிறவிகளின் கர்மவினைகள் குறையத்துவங்கும்;அதே சமயம்,உடனடியாக நமது பொருளாதாரச் சிக்கல்கள் தீரத் துவங்கும்;இது அனுபவ உண்மை.
கடவுளர்களில் மும்மூர்த்திகளுக்கும் மேலாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவர் இருப்பதாலும், ‘பைரவர் வழிபாடு கைமேல் பலன்’என்பது அனுபவ உண்மையாக இருப்பதாலும்,தேய்பிறை அஷ்டமியன்று இவரை குறைந்தது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும்.இதன் மூலமாக நமது தினசரி வாழ்க்கையில்,போதுமான செல்வச் செழிப்பை அடைந்துவிடுவோம் என்பது உறுதி.
தமிழ்நாட்டில் ஒரு சில ஊர்களில் மட்டுமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரின் சன்னதிகள் இருக்கின்றன.அவைகளின் பட்டியல்:
1.சென்னையின் அருகே இருக்கும் படப்பையில் அருள்மிகு ஸ்ரீஜெயதுர்கா பீடம்.
2.சென்னையின் அருகே இருக்கும் வானகரம் என்னும் ஊரில்.
3.சென்னை பள்ளிக்கரணையில் ஒரு அறக்கட்டளையினர் ,திருமண மண்டபத்தினுள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டுவருகின்றனர்.அனைவரும் சென்று வழிபடலாம்.
4.திருஅண்ணாமலை கோவிலின் உட்பிரகாரம்.
5.திருஅண்ணாமலையிலிருந்து காஞ்சி செல்லும்(காஞ்சிபுரம் அல்ல) சாலையில் இருக்கும் காகா ஆஸ்ரமத்தில் சித்தர் முறைப்படி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
6.காஞ்சிபுரம்
7.சிதம்பரம்
8.திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில்.
9.திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் தபசுமலை
10.காரைக்குடிக்கு அருகில் இருக்கும் இலுப்பைக்குடி
11.காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இருக்கும் பிள்ளையார்ப்பட்டி அருகே இருக்கும் வயிரவன்பட்டி
12.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் இருக்கும் தாடிக்கொம்பு.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரை தேய்பிறை அஷ்டமியன்று விரதமிருந்து வழிபடலாம்;சிகப்பு அரளிமாலையினை சாற்றிவிட்டு,ராகு காலம் முழுவதும் அவரது சன்னதியில் அமர்ந்து அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்கலாம்.
(ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபத்துதோராணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ)

கோவிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்கள்,எம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவும்,வீட்டில் வழிபாடு செய்யும் முறையையும் கேட்டு வாங்கலாம்.வழிபடலாம்.
ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்

ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க விரும்வோர் செய்ய வேண்டியது என்னென்ன?


21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திட வேண்டும்.இந்த இரண்டு கட்டுப்பாடுகளை பின்பற்ற முடிந்த எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,எந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்கலாம்.

எந்த ஒரு மந்திரத்தையும் ஜபிக்க முறைப்படி மந்திர தீட்சை எனப்படும் குரு உபதேசம் கண்டிப்பாக தேவை;ஆனால்,ஓம்ஹரிஹரிஓம் ஜபிப்பதற்கு அதுகூடத் தேவையில்லை என்பது மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு ஆகும்.
விரைவான மற்றும் சிறந்த பலன்கள் நமக்குக் கிடைக்க வேறுவிதமான வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால்,நமது கஷ்டங்கள் ,சிரமங்கள்,வேதனைகள் எதுவாக இருந்தாலும் அதை தீர்க்க இறை நாம ஜபம் மட்டுமே கலியுகத்தில் உதவும்;வழிகாட்டும்;நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் தரும் என்பது இந்து தர்ம சாஸ்திர உண்மை.
ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க விரும்புவோர் ஒரு மஞ்சள் துண்டு,இரண்டு ருத்ராட்சங்கள்(ஐந்து முகம் எனில் நன்று;வேறு எந்த முக ருத்ராட்சங்கள் கிடைத்தாலும் சம்மதமே!),அருகிலிருக்கும் பழமையான சிவாலயத்திலிருந்து பெறப்பட்ட விபூதி கொஞ்சம் இவைகளை சேகரித்துக் கொள்ள வேண்டும்.
இந்த மஞ்சள் துண்டினை கணவன் மனைவியாக இருந்தால் மட்டும் இருவருமே ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்;இந்த மஞ்சள் துண்டினை எக்காரணம் கொண்டும் துவைக்கக் கூடாது;வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது;மஞ்சள் துண்டில் பட்டுத்துண்டு எனில் இன்னும் சிறப்பு ஆகும். மஞ்சள் நிறத்துக்கு மந்திரங்களை ஈர்த்து வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு.அதே சமயம்,மஞ்சள் துண்டினை நீரில் நனைத்தால் அதுவரையிலும் நாம் ஜபித்து சேமித்திருந்த ஓம்ஹரிஹரிஓம் மந்திர அதிர்வுகள் நீரில் அழிந்துவிடும்.
ஏதாவது ஒரு அமாவாசையன்று நமது வீட்டுப்பூஜையறையில் ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;நெற்றியில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சம் வைத்து கைகளை மூடிக்கொள்ள வேண்டும்;மனதுக்குள் ஓம் (உங்கள் குல தெய்வம்) நமஹ என்று ஒரு முறையும்,பிறகு ஓம் கணபதியே நமஹ என்று ஒரு முறையும் வேண்டிக்கொள்ள வேண்டும்.அதன் பிறகு,நமது நியாயமான கோரிக்கைகளில் எது அவசியமோ/அவசரமோ/முக்கியமோ அதில் ஒன்றை மட்டும் மனதுக்குள் கேட்க வேண்டும்.யாரிடம்? நமது அப்பா சிவபெருமானிடம் தான்!பிறகு ஓம்ஹரிஹரிஓம் என்று ஜபிக்க வேண்டும்.

முதல் 30 நாட்களுக்கு 10 நிமிடம் மட்டுமே ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க முடியும்.அடுத்த 30 நாட்களுக்கு இந்த 10 நிமிடத்தை 20 நிமிடமாக உயர்த்திட வேண்டும்.மூன்றாவது 30 நாட்களுக்கு இந்த 20 நிமிடத்தை 40 நிமிடமாக அதிகரிக்க வேண்டும்.நான்காவது மாதமாகும் முன்பே இந்த 40 நிமிடத்தை 60 நிமிடமாக்கிவிட வேண்டும்.
வெளியூர்ப் பயணம்,மாதவிலக்கு, துக்கவீடு,ருதுவீடு,ஜனன வீடுகளுக்கு அன்றைக்கே சென்றால், அதிகபட்சமாக 5 நாட்களுக்கு ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்கக் கூடாது.
இந்த மாதிரி நான் ஓம்ஹரிஹரிஓம் ஜபித்து வருகிறேன்.எனக்கு இம்மாதிரியான அனுபவங்கள் கிடைத்தது என்று நீங்கள் உங்கள் வட்டத்தில் பகிர்ந்து கொண்டால்,அடுத்த சில நாட்களுக்கு ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க முடியாமல் போகலாம்;அல்லது எப்போதுமே ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்கவே முடியாமல் போகலாம்.எனவே, ரகசியம் காக்கவும்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமைந்தால் மட்டும் ருத்ராட்சங்கள் ,விபூதி இல்லாமலும் ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்கலாம்.தப்பில்லை;தோஷமும் இல்லை;
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஆறு மாதம் வரையிலும் தினமும் ஓம்ஹரிஹரிஓம் ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,அதன்பிறகு நமது பிறந்த ஜாதகத்தில் இருக்கும் எந்த ஒரு தோஷமும்,பாவமும் செயல்படுவது பெருமளவு குறைந்துவிடும்;அல்லது அந்த கர்மவினை தீர துல்லியமான சரியான வழி கிடைத்துவிடும்.ஒரு லட்சத்துக்குப் பிறகு,ஒரு நாளுக்கு 10 நிமிடம் மட்டுமே ஓம்ஹரிஹரிஓம் ஜபித்தாலே போதுமானது.
ஓம்ஹரிஹரிஓம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா=எஸ்.ராமச்சந்திராபுரத்தில் அமைந்திருக்கும் சடையாண்டி கோவிலின் சிவவரலாறு


ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சதுரகிரிக்கு(வத்ராப்)ச் செல்லும் வழியில் இருக்கும் கிராமம் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இந்த கிராமத்தில் கண்மாய்க்கு அருகில் அமைந்திருக்கும் சிவாலயமே சடையாண்டி கோவில் ஆகும்.இந்த சடையாண்டி கோவில் ஒரு ஜீவசமாதி ஆகும்.மிகவும் சக்தி வாய்ந்த,மிகவும் சிவ  அருளாற்றல் மிக்க ஜீவசமாதியாக அமைந்திருக்கிறது.
சடையாண்டி என்பவர் ஒரு பழுத்த சிவபக்தர் ஆவார்;இவர் 1700களின் இறுதியில் சதுரகிரியில் முக்தியடைந்தார்;அந்த முக்தியடைந்த இடத்துக்கு அவரது அடியார்கள் அமாவாசை தோறும் சென்று வழிபட்டு வந்தனர்;ஒரு கட்டத்தில் சதுரகிரியின் மலை மீது சென்று வழிபட முடியாத சூழ்நிலையில்,சடையாண்டி சாமிகளிடமே அவரது பக்தர்கள் ஆலோசனை கேட்டனர்;அதன்படி,அவர் சதுரகிரியில் முக்தி அடைந்த இடத்திலிருந்து பிடி மண் எடுத்துக்கொண்டு வந்து,எஸ்.ராமச்சந்திராபுரத்தில் கி.பி.1812 ஆம் ஆண்டில் சடையாண்டி கோவிலைக் கட்டினர்;அதே ஆண்டில் மேலும் விரிவாக இரண்டாவதாகவும் கட்டினர்.
நூறாண்டுகளுக்குப் பின்னர், கி.பி.1912 ஆம் ஆண்டில் கோவிலை புனர்நிர்மாணம் செய்யும் சூழ்நிலையில்,எஸ்.ராமச்சந்திராபுரத்தில் தெருவுக்குள் அவரது பிடிமண்ணைக் கொண்டு வந்து வழிபட்டனர்.இவ்வாறு வழிபட்டவர்கள் புலவர் வீட்டு வகையறாக்கள் ஆவர்.இவர்கள் காலப்போக்கில்,பிழைப்புக்காக சுந்தரபாண்டியம்,சக்கம்பட்டி என சில ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.அவ்வாறு சென்றாலும் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து வழிபட்டனர்.கி.பி.1912 ஆம் ஆண்டில் கோவில் மறுநிர்மாணம் ஆனது;கி.பி.2002 இல் புதுப்பிப்புப் பணி நடைபெற்றது.தற்போது சடையாண்டி சாமிகளை வழிபடும் குடும்பங்கள் சக்கம்பட்டியில் சுமார் 100 குடும்பங்களும்,சுந்தரபாண்டியம் மற்றும் எஸ்.ராமச்சந்திராபுரத்தில் சுமார் 75 குடும்பங்களும், W.புதுப்பட்டியில் சுமார் 45 குடும்பங்களும் இருக்கின்றன.சடையாண்டி சுவாமிகளின் அருளாசி இந்தக் குடும்பங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால்,இவர்களின் குடும்பங்களில் பிறக்கும் முதல் குழந்தைக்கு சடையாண்டி என்ற பெயரையே சூட்டினர்.பெண் எனில்,சடைபாக்கியம் அல்லது சடையம்மாள் என்று சூட்டினர்.
எந்த ஒரு முக்கிய காரியமாக இருந்தாலும்,பூ கட்டி பார்ப்பது இந்த குடும்பங்களின் வழக்கம் ஆகும்.அப்படி பூகட்டிப் பார்த்ததில்,வெள்ளைப் பூ வந்தால்,சடையாண்டி சுவாமிகளின் அருளாசி இருப்பதாக அர்த்தம் ஆகும்.
சிவராத்திரியன்று நான்கு கால பூஜைகளும் ,அன்னதானமும் இங்கு நடைபெற்றுவருகிறது.ஒவ்வொரு மாதாந்திர வெள்ளிக்கிழமை மற்றும் கார்த்திகை நாட்களில் விரதம் இருப்பவர்களும் உண்டு.நாமும் இதே போல விரதம் இருந்து இவரை வழிபட்டால்,சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் அருளாசி கிடைக்க இவர் வழிகாட்டுவார்.
இந்த சடையாண்டி சுவாமிகளை வழிபட்டவர்கள்,மதுரையில் மஹால் வடம்போக்கித் தெருவில் சடையாண்டி டெக்ஸ் என்ற பெயரிலும்,ஜக்கம்பட்டியில் சடையாண்டி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் வர்த்தக நிறுவனங்கள் நடத்தியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி நிறைவடைந்ததும் வரும் கார்த்திகையன்று வருடாந்திரகுருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சதுரகிரிக்குச் செல்லுவோர்,க்ருஷ்ணன் கோவிலில் இறங்கி வத்ராப் செல்லும் பேருந்தில் செல்வர்;அப்படிச் செல்லும்போது வரும் நான்காவது நிறுத்தமே எஸ்.ராமச்சந்திராபுரம் என்னும் பட்டியக்கல் ஆகும்.இந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி,ஊருக்குள் சென்றால் இந்த ஜீவசமாதியை அடையலாம்.
ஓம்சிவசிவஓம்