Thursday, October 13, 2011

தமிழ் உணர்வாளர்களை குழப்பி வைத்திருக்கும் பிரிவினைவாதிகள்







எனக்குத் தெரிந்து தமிழ் உணர்வாளர்களிடையே தமிழ்மீதான பற்றினைவிட,அவர்களின் சிந்தனை தெளிவாக இல்லை என்றே நினைக்கிறேன்.தேவநேயப்பாவணர் முதலான தமிழறிஞர்களோடு இவர்களின் சிந்தனை நின்றுவிடுகிறது.அதற்கும் முற்காலத்துக்குப்போவதே இல்லை;எனக்குத் தெரிந்து தமிழ் உணர்வுள்ளவர்களில் எத்தனை பேர்கள் திருமூலரின் திருமந்திரம்,அகத்தியரின் அகத்தியம்,திருக்குறள் வாசித்திருப்பார்கள் ? நிச்சயமாக இராது.தமிழ் உணர்வாளர்கள் அரசியல் களத்தில் நின்று செயல்பட்டாலும்,தமிழுக்காக ஒருங்கிணைந்து செயல்படுவதே இல்லை;கருணாநிதி மாதிரி தமிழ் உணர்வாளனாக காட்டிக் கொள்ள மட்டுமே முடிகிறது.

எனது அம்மாவும்,அப்பாவும் தமிழர்கள்.எனக்கு தமிழ் மொழியைத் தவிர,கொஞ்சம் சமஸ்க்ருதம்,கொஞ்சம் ஆங்கிலம் தெரியும்.வேறு எதுவும் தெரியாது.ஆனால்,நான் ஒரு புத்தகப்புழு.புத்தக சமுத்திரத்தில் 1988 முதல் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருக்கிறேன்.அதிலிருந்து கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன்.தமிழ்,தமிழ் உணர்வு என்பதைப் பற்றி உங்களின் கருத்துக்களை எனக்கு மின் அஞ்சல் அனுப்பலாமே!

சிவபெருமானின் உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும்,மறு பக்கத்திலிருந்து சமஸ்க்ருதமும் தோன்றியது.சிவபெருமானே தமிழை தென் நாட்டில் பரப்பிட அகத்தியரையும்,வட நாட்டில் சமஸ்க்ருதத்தை வட நாட்டில் பரப்பிட பாணினியையும் அனுப்பி வைத்தார்.ஆக,தமிழ் தந்தை எனப்படுபவர் அகத்தியர் மட்டுமே!!!

தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அகத்தியரைப் பற்றிப் பேசுவதேயில்லை;ஆனால்,சமஸ்க்ருதத்தை எதிர்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.பிராமணர்கள் பேசும் மொழியாக இருப்பதால்,இவர்களுக்கு பிராமணர் மீதான வெறுப்பு அப்படியே சமஸ்க்ருதம் மீதும் பாய்ந்துவிட்டது.இதனால்,தமிழ்நாட்டில் சமஸ்க்ருதம் தமிழ் மொழிபெயர்ப்பு அடியோடு நின்றுபோய்விட்டது.பல அரிய,அபூர்வமான சமஸ்க்ருத ஜோதிடநூல்கள்,வைத்திய நூல்கள்,யோகாசன நூல்கள்,மனதத்துவநூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்க முடியாமல் போய்விட்டன.

எனது சிற்றறிவுக்கு எட்டியவரையிலும்,தமிழ் மொழிக்கு சமஸ்க்ருதத்தால் ஏற்பட்ட தீங்கை விடவும்,கத்தோலிக்க மொழியான ஆங்கிலத்தால் ஏற்பட்டிருக்கும் அழிவே 10,000% அதிகம்.என்னதான் இருந்தாலும்,சமஸ்க்ருதம் நமது நாட்டின் மொழி! இந்தியாவின் தாய்மொழி சமஸ்க்ருதம் எனில்,இந்தியாவின் தந்தை மொழி நமது & எனது தமிழ்!!!

தெய்வத்தின் குரல் என்ற புத்தகம்,காஞ்சி சங்கராச்சாரியாரின் வாழ்க்கையையும்,பேச்சுக்களையும் விவரிக்கிறது.இந்தபுத்தகத்திலிருந்து கூட,சில பகுதிகளை ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறேன்.தமிழ்ப்பண்பாடுதான் இந்துப் பண்பாடு,தமிழ்ப்பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்ற அர்த்தம் வருமாறு காஞ்சி பரமாச்சாரியார் எழுதியுள்ளார்.இது எப்பேர்ப்பட்ட பெருந்தன்மை.பிராமணர்கள் என்ன இந்த தேசத்தின் சபிக்கப்பட்டவர்களா? அவர்களை சுயநலப்புலிகள் என சொல்லுகிறோமே,நாம் என்ன பொதுவுடைமைவாதிகளா?எல்லோரும் தான் சுயநலவாதிகள் தான்.
பிராமண ஆதிக்கத்தைக் கருவறுப்போம் என கத்துபவர்களுக்கு ஒன்றைச் சொல்லுகிறேன்.ஜாதிகளை ஒழிப்போம் என கத்துபவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.

எல்லோரையும் பிராமணராக்கிட நீங்கள் என்ன செய்தீர்கள்.பிராமணர்களின் புத்திசாலித்தனம்,அவர்கள் தினமும் மூன்றுதடவை காயத்ரி மந்திரம் ஓதுவதன் மூலமாகவும்,இந்து தர்ம சாஸ்திர நெறிகளை அப்படியே பின்பற்றுவதன் மூலமாகவும் 2000 ஆண்டுகளில் புத்திசாலி இனமாக உருவெடுத்திருக்கிறது.நீங்களும் அதேபோல்,பூணூல் அணிந்து,காயத்ரி மந்திரஜப முறையை உங்களின் ஜாதிக்கு,ஜாதி சிறுவர்களுக்கு சொல்லித் தர வேண்டியதுதானே.இந்த நூற்றாண்டில் இல்லாவிட்டாலும்,அடுத்த நூற்றாண்டிலாவது இந்தியா முழுக்க எல்லோரும் பிராமணராகிவிடலாமே!!

சினிமா பிரபலங்கள் பூணூலை அறுப்பதை பெருமையாகக் கருதுகின்றனர்.அதுதான் நாத்திகனுக்கு அடையாளமாம்.ஏன் கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மரபுகளை நக்கலடிக்க வேண்டியதுதானே? அப்படி நக்கல் செய்துவிட்டு,உயிரோடு இருந்துவிடுவாயா?பெற்ற தாய்க்குச் சமமானது நமது இந்து தர்மம்.உன்னைப் பெற்றதாயின் சேலையை நீ இப்படித்தான் உருவுவாயா?
சமஸ்க்ருதம் செத்த மொழி என்று கூப்பாடு போடுவது எனது காதில் கேட்கிறது.இந்த சொல்லாடலை கண்டுபிடித்ததே கத்தோலிக்க கிறிஸ்தவனாகிய ஆங்கிலேயன் தான்.ஏன் வெள்ளைத்தோலுக்கு நாம் மயங்குகிறோம்?அமெரிக்காவிலோ,இந்தியாவிலோ,தமிழ்நாட்டிலோ இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால்,ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என நினைக்கிறோம்.இது அடிமைத்தனமாகத் தெரியவில்லையோ?புதுமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.ஆங்கில மொழி,ஆங்கிலப் பண்பாட்டைப்பின்பற்றுவதில் மட்டும் பகுத்தறிவு எங்கே போயிற்று? கருணாநிதி தமிழறிஞராக இருந்திருந்தால்,இங்கிலீஷ் மீடியம் பள்ளிகளைத் திறக்க அனுமதித்திருப்பாரா?இன்று தமிழ் எழுதத் தெரியாத,தமிழ் படிக்கத் தெரியாத ஒரு தமிழினம் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது.இதை எதிர்த்து எந்த திருமாவளவன்,இராமதாசு,வைகோ போராடினார்கள்?மாற்றம் என்ற பெயரில் தமிழினத்தின் அடையாளங்களை நாசமாக்கிவிடலாமா?

அண்ணாவும்,பெரியாரும் சொன்னது என்ன? எத்தனை நாத்திகவாதிகள் இவர்களின் எழுத்துக்களை கரைத்துக் குடித்திருப்பார்கள்.நாத்திகம் தமிழினத்தின் உணர்வு அல்ல;பக்தியும்,சகிப்புணர்ச்சியுமே தமிழினத்தின் அடையாளங்கள்.

கருணாநிதியின் அரசியல் தந்திரம் புரியாமல்,பல லட்சம் அப்பாவித் தமிழர்கள்,நாத்திகத்தைப்பின்பற்றி,தனது 20,30 வருட சம்பாத்தியத்தை இழந்திருக்கிறார்கள்.இந்தி எதிர்ப்புக்குப் போராடிய கையோடு,தனது உறவினர்களையும்,நெருக்கமானவர்களையும் இந்தி படிக்க வைத்து,அவர்களுக்கு டெல்லி செக்ரட்ரியேட்டில் வேலை வாங்கித் தர வைத்ததும் இந்த கருணாநிதிதான்.திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பெயரில் குமரிப்பதிப்பகம்,8,நீலா தெற்குவீதி,நாகப்பட்டிணம் என்ற பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது.அதில் தமிழர்களையும்,தமிழ் உணர்வாளர்களையும் எப்படியெல்லாம் கருணாநிதி முட்டாளாக்கியிருக்கிறார்  என்பதை விவரித்துள்ளது.

தமிழ் உணர்வாளர்களாக இருப்பவர்களுக்கு,தமிழ்த் தந்தை அகத்தியர்;தமிழ்த்தாயின் பிறந்த நாளாக சித்திரை ஒன்றாம் நாள் இருக்கட்டும்;தமிழ் இனத்தின் தேசிய சொத்தாக அகத்தியம்,தொல்காப்பியம்,திருமந்திரம்,திருப்பாவை,ஐம்பெரும்காப்பியம்,ஐச்சிறுங்காப்பியம் இருக்கட்டும்.
தமிழினத்தின் சகோதர மொழியாக சமஸ்க்ருதம் இருக்கட்டும்.நாத்திகம் தமிழனத்தின் அடையாளம் அல்ல;காணபத்தியமும்,சைவமும்,வைணவமும்,சாக்தமும்,சவுரமும்,கவுமாரமும்(முருகக் கடவுள் வழிபாடு)தமிழினத்தின் வழிபாட்டு முறையாக இருந்து வருகிறது.தமிழன் தனது சுய பலத்தையும்,தனது வரலாற்றுப்பெருமையை உணர்ந்தால்,கருணாநிதி போன்றவர்களால் அரசியல் செய்ய முடியாது.கருணாநிதி தமிழினத்தலைவராக இருந்திருந்தால்,இலங்கையில் நமது தமிழ் உறவுகள் நாசமாகக் காரணமாக இருந்திருப்பாரா?

ஓம்சிவசிவஓம்










யோகாசனத்தை தனியார் சொத்து ஆகாமலிருக்க. . .




பாரத அரசின் கவுன்சில் பார் சயின் டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிஸர்ச்(CSIR)அமைப்பு 500 யோகாசனங்களை காப்புரிமை பெற்றவை ஆக்கும் செயல்முறையைத் துவக்கிவிட்டது.

காரணம்?

சில அமெரிக்க,ஐரோப்பிய நிறுவனங்கள் சில யோகாசனங்களை தங்களின் கண்டுபிடிப்பு(வெள்ளைக்காரனுங்க எப்பவுமே இப்பிடித்தான்) என்று கூறி காப்புரிமை பெற முயற்சி செய்தன.(அட போங்கப்பா,ஜெர்மன் காரன் காப்புரிமையே வாங்கிட்டானாம்.அது எது தெரியுமா? விநாயர் முன்னாடி தோப்புக்கரணம் போடுவோமே,அதுக்கு! இனி நாம் விநாயகர் முன்னாடி தோப்புக்கரணம் போடணும்ணா,ஜர்மனிக்கு பேடன் ட் தொகை கட்டணும்)ஒவ்வொரு யோகாசனத்தின் ஒளிப்படப்பதிவு,மருத்துவ குணம் ஆகியவற்றை சி.எஸ்.ஆர்.ஐ. ஆவணப்படுத்தி வருகிறது.பதஞ்சலி முனிவர் போன்றோர் தவமிருந்து உலகுக்கு அளித்த யோகக் கலையை சில சுயநல கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குழுக்கள் தனியுடமை ஆக்குவதை தடுப்பது பாரத அரசின் நோக்கம் ஆகும்.

ஆதாரம்:ஹிந்துஸ்தான் டைம்ஸ் 7.6.11.
விஜயபாரதம்,பக்கம் 11,30.9.11

திருச்செந்தூரில் வழிபாடு செய்யும் முறை






மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆசியோடும், வழிகாட்டுதலோடும் இந்தக் கட்டுரை ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

முதலில் நாழிக்கிணற்றில் குளிக்க வேண்டும்;பிறகு கடலில் குளிக்க வேண்டும்.கடலில் எவ்வளவு நேரமானாலும் குளிக்கலாம்;குளித்தபின்னர்,கடற்கரையில் காசிச்சுவாமிகள்,மவுனம் சாமிகள்,ஆறுமுகச்சாமிகள் என மூன்றுபேர்களின் ஜீவசமாதிக்கு முதலில் செல்ல வேண்டும்.குளித்த ஈர ஆடையோடு சென்று இந்த மூவர் ஜீவசமாதியில் நமது கோரிக்கைகளை மனப்பூர்வமாக வேண்ட வேண்டும்.

அதன் பிறகே,திருச்செந்தூர் முருகக் கடவுளை வழிபடவேண்டும்.வழிபட்ட அன்று முழுவதும் குளிக்கக் கூடாது;வழிபட்ட அன்றே வீட்டுக்குப் புறப்படலாம்.தப்பில்லை;

ஜோதிடத்தை முழு நேரமாக செய்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலமாக,அதுவரையிலும் ஜோதிடருக்கு இருந்த நவக்கிரக சாபங்கள் நீங்கும்.ஏனெனில்,ஜோதிடர்,தன்னை நாடி வருபவர்களின் ஜாதகத்தை கணித்து,நவக்கிரகங்களின் செயல்பாடுகளைக் கண்டறிந்து,பலனாகக் கூறுகிறார்.கிரகங்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கூறி,ஜாதகரை பாதுகாத்துவிடுவதால்,நவக்கிரகங்கள் அந்த ஜோதிடரை சபிக்கும்.இந்த சாபம் ஓரளவுக்கு மேல் அதிகரிக்கும்போது,ஜோதிடரின் உடல் எரிச்சலை எட்டும்.சில மாதங்களிலேயே அந்த எரிச்சலைக் கட்டுப்படுத்தவேமுடியாது.இதைச் சரி செய்ய திருச்செந்தூர் சென்று மேற்கூறிய முறைகளின் படி திருச்செந்தூர் முருகக் கடவுளை வழிபடவேண்டும்.

ஓம்சிவசிவஓம்











ஆன்மீகக்கடல் வாசகர்களின் ஆதரவுடன் ஒரு கோடித் தமிழர்களை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைப்போம்!!!









ஏன் ஒருகோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?

கலியுகத்தில் பிறந்துள்ள நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கத் தான் செய்யும்.1.1.1995 முதல் உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா வந்தது.இதனால்,இந்தியாவில் எஃப் டிவியும்,அமெரிக்கா முதலான உலக நாடுகளில் சன் டிவியும் ஒளிபரப்பத்துவங்கியது.உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய இளைஞர் கூட்டம் நம் இந்தியாவில் இருக்கிறது.இந்த இளைஞர் சக்தியின் எண்ணிக்கை 45 கோடிகள்.(இங்கிலாந்தின் மக்கள் தொகை 13 கோடி மட்டுமே.அமெரிக்காவின் மக்கள் தொகை 30 கோடி மட்டுமே) இந்த இரண்டின் மக்கள் தொகையை விட இந்தியாவில் இளைஞர்கள் கூட்டம் அதிகம்.இருந்தபோதிலும்,இந்து தர்மத்தின் பெருமைகளை இந்த 45 கோடிபேர்களுக்கும் தலா ஓராண்டு கற்பித்தாலே இந்தியாவின் காஷ்மீர் பிரச்னை,நக்ஸலைட் பிரச்னை,இலங்கைத் தமிழர்கள் பிரச்னை,தமிழக மீனவர்கள் பிரச்னை,குடிதண்ணீர் பிரச்னை,சுற்றுச்சூழல் பிரச்னை தீர்ந்துவிடும்.ஆமாம்! இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால்,கோடி கோடியாக நமது அரசியல்வாதிகளால் நம்மையே கொள்ளையடிக்க முடியுமா?

அப்படி இளைஞர்கள்,இளம்பெண்கள் சிந்திக்காமல் இருக்கவும், எப்போதுமே அடிமுட்டாள்களாக இருக்கவுமே டிவிக்கள்,காமத்தை பொழுதுபோக்காக நினைக்க வைப்பது,முட்டாள்த்தனமாக கிரிக்கெட் மீது வெறிபிடிக்க வைப்பது(டிவியில் நேரடி ஒளிபரப்புதான் இத்தனை கோடி கிரிக்கெட் பைத்தியங்களை உருவாக்கியிருக்கிறது) என யுவ சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கிறது எனக்கு வருத்தமளிக்கிறது.

இளைய சமுதாயத்திடம் கொஞ்சூண்டு பக்தியை விதைத்தாலே போதும்;அவர்கள் தடம் மாறிப்போவது நின்றுவிடும்;அதன்மூலம் காம நோய்கள் பரவுவது தடுக்கப்படும்;தவிர,இள மனதில் எது பதிகிறதோ,அதுவே அவர்களின் வாழ்க்கையை வழிநடத்தும்.பக்தி உணர்வு சிறிதளவு உண்டானாலே, இந்தியாவின் எதிர்காலம் சிறிதும் தீயதாக அல்லாமல்,சிறப்பானதாக அமையும்.தவிர,இந்தியாவை மையமாகக் கொண்டு சித்தர்களின் ஆட்சி வெகுவிரைவில் துவங்க இருக்கிறது.அப்படி துவங்கும்போது,ஆன்மீகரீதியான ஒரு மாபெரும் எழுச்சியை உருவாக்கிவிட்டால்,அடுத்து வரும் நூற்றாண்டும் ஆன்மீகசார்ந்த நூற்றாண்டாக இருக்கும்.கலியுகத்தின் தாக்கத்தை தடுத்தும் விட முடியும்.

அரசியல் சாராமல்,எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்திருக்காமல்,ஆன்மீகக் கடல் வாசகர்கள்,வாசகிகள் மட்டுமே சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு கோடிபேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைக்க வேண்டும் என்பது ஆன்மீகக்கடல் வாசகர்களின் நேரடி சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.இதில் லிவிங் எக்ஸ்ட்ரா வாசகர்களும் கலந்து கொண்டனர்.இந்த முடிவு மஹாளயபட்சத்தன்று(27.9.2011 செவ்வாய்க்கிழமை) திரு அண்ணாமலையில் எடுக்கப்பட்டது.

இதை எப்படி செயல்படுத்தலாம் ?

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசுவிடுமுறை நாட்களில் வரும் பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கும் புராதனமான சிவாலயங்களுக்கு ஆன்மீகக்கடல் வாசகர்கள் செல்லுவர்.சென்று அன்று முழுவதும் அந்த கோவிலில் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கும் முறையை நோட்டீஸாகவும்,கையடக்கப் புத்தகமாகவும் விநியோகிப்பர்.இப்படி டிசம்பர் 2012 வரையிலும் தொடர்ந்து செயல்படுத்துவோம்.

சனி , ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பிரதோஷம் மற்றும் அமாவாசை வந்தால்,ஆன்மீகக் கடல் வாசகர்கள் அவரவர் ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் இதே போல ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை பிரபலப்படுத்துவர்.

இதில் பிற ஆன்மீகக்கடல் வாசகர்களின் பங்களிப்பு என்ன?

விருப்பம் இருக்கும் ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் தலா 1000 நோட்டீஸ்களை(ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறை) தமது சொந்தச் செலவில் அச்சடித்து,ஆன்மீகக்கடல் முகவரிக்கு(மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்)அனுப்பி வைக்கலாம்.2012 டிசம்பர் வரையிலும் இவ்வாறு 3,00,00,000 ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறை நோட்டீஸ் விநியோகிக்க முடிவு செய்துள்ளோம்.இந்த கலந்துரையாடலில் மதுரை,பரமக்குடி,வளைகுடா,இராணிப்பேட்டை,திருச்சி,பொள்ளாச்சி ,இராஜபாளையம் மற்றும் சென்னை வாசகர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி! இந்த நோட்டீஸ் விநியோகத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?

குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பாக,எந்த ஊரில் எந்த கோவிலில் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்போகிறோம் என்பது நமது ஆன்மீகக் கடலில் அறிவிக்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் தமது பெயர்,ஊர்,தற்போது இருக்கும் ஊர்,செல் எண்போன்றவைகளை மின் அஞ்சலில் தெரிவித்தால்,அவர்களும் இந்த சிவத் தொண்டில் கலந்து கொள்ளலாம்.








கப்சிப் ஆன காம்ரேட்டுகள்



தமிழக சட்டமன்றத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பேசும்போது, “ தி,மு.க.ஆட்சியில் நியமிக்கப்பட்ட கோவில் அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.புது அறங்காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.சென்ற தி.மு.க.ஆட்சியில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எல்லாம் கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.இந்த ஆட்சி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை மட்டும் தான் அறங்காவலர்களாக நியமிக்கும்” என்று தெரிவித்தார்.

உடனே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எழுந்து,

“தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும்.இறை நம்பிக்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது” என்று (இந்துமத) எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே எழுந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டார்:

“கம்யூனிஸத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை உங்கள் கட்சிப்பணியில் ஊழியர்களாக நியமிப்பீர்களா?’

கம்யூனிஸ்டுகளின் முகம் கறுத்துப் போனது.

நன்றி:விஜயபாரதம் பக்கம் 29,30.9.11

ஓம்சிவசிவஓம்

Monday, October 10, 2011

புரட்டாசி பௌர்ணமி(11.10.11 செவ்வாய் இரவு)யைப் பயன்படுத்துவோம்.








புரட்டாசி மாத பவுர்ணமியானது செவ்வாய்க்கிழமை விடிகாலையிலிருந்து புதன் கிழமை காலை வரை நீண்டிருக்கிறது.இந்த செவ்வாய்க்கிழமையன்று காலை 5-6 அல்லது மதியம் 12-1 அல்லது இரவு 7-8 மணி நேரங்களில் குரு ஓரை வருகிறது.எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் இதே மணித்துளிகளில் மிகமிக சுபமான நேரமான குரு ஹோரை வரும்.இதில் உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு மணி நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.இதே நாள் இரவு 10 மணி முதல் 12 மணி வரையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமிபூஜை நடைபெறப்போகிறது.ஆன்மீகக்கடல் வாசகர்கள் அனைவரையும் அருள்மழை பெற ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் சன்னதிக்கு அழைக்கிறேன்.

ஓம்சிவசிவஓம்








மஹாளயபட்சத்தினுள் ஒளிந்திருக்கும் இந்துதர்ம(ஜோதிட)விஞ்ஞான ரகசியம்








பல ஆண்டுகளாக எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது.இறந்த நமது தாத்தாக்கள்,பாட்டிகள்,முப்பாட்டன்கள்,முப்பாட்டிகள்,பூட்டன்கள்(தாத்தாவின் தாத்தா),பூட்டிகள்(பாட்டியின் பாட்டி) என முன்னோர்களுக்கு திதி கொடுக்க புரட்டாசி மாத அமாவாசையை ஏன் நமது ஆன்மீகப் பெரியவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்? ஆவணி மாத அமாவாசையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?ஏனெனில்,ஆவணி மாதத்தில் ஆத்மாக்காரனாகிய சூரியன் ஆட்சியாக இயங்குகிறார்.இதற்கான விடை நேற்றுதான் எனக்கே தெரிந்தது.அப்படித் தெரிந்த உடனே,எனது ஆன்மீகக்கடல் வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்தே ஆக வேண்டும் என்று துடித்தேன்.விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாட்டுப் பிரிவுகளில் ஒன்று கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை! இந்த அமைப்பிலிருந்து ஒரு மாத இதழ் வெளிவருகிறது.அந்த மாத இதழின் பெயரே பூஜாரி முரசு.இதன் செப்டம்பர் 2011 ஆம் வெளியீட்டில் 4,5ஆம் பக்கங்களில் விரிவான விளக்கம் வந்திருக்கிறது.(இந்து இயக்கங்களை பத்திரிகைகள் பிற்போக்கானவர்கள் என எழுதித் தள்ளிவருகின்றன.ஆனால்,இந்து இயக்கங்கள் இந்து தர்மம் ஒரு விஞ்ஞான பூர்வமானது என்பதை ஆராய்வதோடு,ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுவருகிறது)



நாம் மெக்காலே கல்விமுறைப்படி படித்தவர்கள்.எந்த ஒரு இந்துதர்ம நடைமுறையையும்,நமது பகுத்தறிவுக்கு உட்பட்டு அது நிஜம் என நம்பினால் மட்டுமே அதைப் பின்பற்றுவோம்;ஆனால்,ஜீன்ஸ் அணிவது,சிறிதும் சத்து இல்லாத கார்ன் பிளக்ஸ் மெல்லுவது,ஈ மொய்த்தாலும் கெண்டகி சிக்கன் சாப்பிடுவது,குடித்த உடனே தாகம் எடுக்கும் கோக்,பெப்ஸியைப் பற்றி நமது பகுத்தறிவு சந்தேகப்படாது!?! இல்லையா?சரி,விஷயத்துக்கு வருவோம்.



புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வதற்குப் பெயர் போனது.மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள்.அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லும் புராணக்கதைகள்,தர்ம சாஸ்திர நீதி நூல்கள் பல இருக்கின்றன.வானவியல் ரீதியில் அதன் விஞ்ஞான ரகசியத்தை இங்கு பார்ப்போம்.



புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார்.கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.நம்மையும் சேர்த்து,சூரிய மண்டலம்,நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது.அந்த மையத்தைப் போல பல சிறு(அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள்;ஒரு ஒளி ஆண்டு என்பது ஒன்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கொண்டது.புரியாதவர்கள் இயற்பியல் பட்டதாரிகளிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளவும்) மையங்கள் ஒருங்கிணைந்து கன்னிராசியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன.இந்த சுழற்சி வரையிலும் நமது வானவியல் விஞ்ஞானிகள் பல கோடி பெறுமானமுள்ள டெலஸ்கோப்கள் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.



பொதுவாகவே மையம் என்பது ஒரு ஆதாரமாக செயல்படுகிறது.பூமிக்கு மையம் சூரியன்! அதுவே பூமிக்கு ஆதாரம்!! எப்படியெனில் பூமி முதலான கிரகங்கள் சூரியனிடமிருந்தே உருவாகின.அந்த சூரியன் தரும் சக்தியால்தான் பூமியில் உயிர்கள் நிலைபெற்று இருக்கின்றன.இந்தக் கருத்து படிப்படியாக ஒவ்வொரு மையத்துக்கும் பொருந்தும்.அப்படிப் பார்க்கும்போது கன்னிராசி என்னும் மண்டலமே நமக்கு ஆதாரமாகிறது.எப்படி பூமியானது சூரியனிலிருந்து உண்டாகி,சூரியனால் வாழ்விக்கப்படுகிறதோ,அப்படியே நாமிருக்கும் மண்டலம் கன்னிராசியிலிருந்து உண்டாகி,அதனால் வாழ்விக்கப்படுகிறது என்று சொல்வது பொருந்தும்.



ஒரு மையத்திலிருந்து உண்டானது,பிரளயகாலத்தின்போது படிப்படியாக அந்த மையத்துக்குள் ஒடுங்கும்.நாமிருக்கும் பூமி சூரியனில் ஒடுங்கும்;சூரிய மண்டலம் அதற்கடுத்த மையத்தில் ஒடுங்கும்;அந்த மையம் கன்னிராசியில் ஒடுங்கும்;



மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்,உடலை விட்டு பிரிந்த உயிர்,இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.எனவேதான் , கன்னிராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம்(பித்ருக்களின் வழி)என்பார்கள்.



இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது.இங்கு ஒரு கேள்வி எழலாம்? பூமியில் தான் தெற்கு வடக்கு என்று திசைகள் இருக்கின்றன.பூமிக்கு வெளியே சென்றுவிட்டால்,ஏது திசை?முடிவே இல்லாத பிரம்ம்ம்ம்மாண்டமான பிரபஞ்சத்திற்கு ஏது திசை?



இதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது.துருவ நட்சத்திரம் தெரியும் வட துருவப் பகுதி வடக்கு ஆகும்.அதற்கு நேர் எதிராக இருக்கும் துருவப் பகுதி தெற்கு ஆகும்.இந்த இரண்டு துருவங்களையும் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு பூமியின் அச்சு எனப்படும்.பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தாலும் இந்த அச்சை அடையாளம் கண்டு,எது வடக்கு, எது தெற்கு என்று சொல்ல முடியும்.இங்குதான் ஒரு அதிசய ஒற்றுமை இருக்கிறது.



கன்னிராசியானது ,பூமியின் தென் துருவத்துக்குக் கீழ் தென்படுகிறது.அதாவது அந்த ராசி தெற்குத் திசையில் இருக்கிறது.அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் உண்டானதற்கு இதுவே காரணம் என்று தெரிகிறது.நாம் உண்டான மையம் தெற்கு திசையில்,கன்னிராசியில் இருக்கவே,இறந்தப் பிறகு அந்தத் திசையில் உள்ள மண்டலத்தில் நமது பித்ருக்கள் வாழ்கிறார்கள்.எனவே,அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்கிறோம்.அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும்போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம்.



இதை அடுத்து ஒரு கேள்வி எழலாம்.இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம்.அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது.அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்,நாம் பித்ருக்களின் காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.



சூரியனது சுழற்சியை வைத்து சூரிய வருடம் என்று இருப்பது போல,சந்திரனது சுழற்சியை வைத்து சந்திரவருடம்(சந்திரமானம்) என்பது உண்டு.அதேபோல்,பித்ருக்களின் பித்ருவருடம் என்று இருக்கிறது.இது சந்திரனை வைத்து உருவாகும் திதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அதன் விளக்கம்:



ஒரு பட்சம் = 15 நாட்கள்(வளர்பிறை அல்லது தேய்பிறை)

2 பட்சம் = ஒரு பித்ரு நாள்(நமக்கு ஒரு சந்திர மாதம்)



30 பித்ரு நாள்(60 பட்சம்)=ஒரு பித்ரு மாதம்



12 பித்ரு மாதம்(720 பட்சம்)=ஒரு பித்ரு வருடம்===இதை திதியாக மாற்றினால்,

ஒரு பித்ரு வருடம் =(720 பட்சம்,15 திதி)=10,800 திதி



ஒரு சந்திர வருடத்தில் 360 திதிகள் இருக்கவே,



10,800 திதி/360 திதி =30 வருடம்



அதாவது நம்முடைய சந்திர வருடக்கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களின் ஒரு வருடம் என்பதாகும்.



ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால்,பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும்.அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம்.அதனால்,பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும்(15 நாட்கள்) பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர் நமது முன்னோர்கள்.



தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால்,அதுதான் பித்ருக்களின் பகல்காலம் ஆகும்.அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம்.



இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடு,சிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது.இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் இந்து முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.



அது மட்டுமல்ல,ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் விஞ்ஞானத்தையும்,மெய்ஞானத்தையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் மக்கள் சமுதாயத்துக்கு உயர்ந்த பலன்களையும் தரும் விதம்,நமது ஹிந்து தர்மத்துக்கு மட்டுமே உண்டு.



இதனால்தான் நமது மிஸ்டிக் செல்வம் ஐயா,ஒருவன் புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால்,12 ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறான் என தெரிவித்துள்ளார்.

பின்குறிப்பு:படத்தில் இருப்பது கன்னி ராசி மண்டலம்.உற்றுப்பாருங்கள் நமது முன்னோர்கள் தெரிகிறார்களா?